Online TestTamil

8th Std Tamil Notes – Part 8

எட்டாம் வகுப்பு தமிழ் - எட்டாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - எட்டாம் பாடம்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன் மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
வில்லிபாரதம், வில்லிபுத்தூரார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
D
 கம்பராமாயணம், கம்பர் 
Question 2
தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
வில்லிபாரதம், வில்லிபுத்தூரார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
D
 கம்பராமாயணம், கம்பர் 
Question 3
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
வில்லிபாரதம், வில்லிபுத்தூரார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
D
 கம்பராமாயணம், கம்பர் 
Question 4
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
வில்லிபாரதம், வில்லிபுத்தூரார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
D
 கம்பராமாயணம், கம்பர் 
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வான்பெற்ற நதி – கங்கையாறு
B
துழாய் அலங்கல் – துளசிமாலை
C
களபம் – மாமரம்
D
புயம் – தோள்
Question 5 Explanation: 
குறிப்பு :- களபம் - சந்தனம்
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
தைவந்து – தொட்டுத்தடவி
B
ஊன் – தசை
C
பகழி – அம்பு
D
நாமம் – ஊர்
Question 6 Explanation: 
குறிப்பு :- நாமம் - பெயர்
Question 7
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
இருநிலம் – பெரிய உலகம்
B
நவ்வி - புலி
C
ஆழி - கடல்
D
சிந்தை - மனம்
Question 7 Explanation: 
குறிப்பு :- நவ்வி – மான்
Question 8
வில்லிபுத்தூரார் அவர்களின் தந்தை பெயர்?
A
முத்தையா
B
வீரராகவர்
C
வெங்கட்ராமன்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 9
வில்லிபுத்தூரார் புலவரை ஆதரித்தவர்?
A
சடையப்ப வள்ளல்
B
நச்சினார்க்கினியர்
C
வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
D
கடிகை முத்துப் புலவர்
Question 10
வில்லிபுத்தூரார் அவர்களின் காலம்?
A
பத்தாம் நூற்றாண்டு
B
பன்னிரண்டாம் நூற்றாண்டு
C
பதிமூன்றாம் நூற்றாண்டு
D
பதினான்காம் நூற்றாண்டு
Question 11
வில்லிபாரதம் நூல் ------------ பருவம் கொண்டது.
A
ஆறு
B
ஏழு
C
எட்டு
D
பத்து
Question 12
வில்லிபாரதம் நூல் ------------ விருத்தப் பாடலால் ஆனது.
A
4350
B
3245
C
2656
D
1098
Question 13
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி; மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை; மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்; - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
முடியரசன்
C
மீ.ராசேந்திரன்
D
தாரா பாரதி
Question 14
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்; தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு; மேல்விழுந்து பாடுப வன் கவிஞன் அல்லன் - - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
முடியரசன்
C
மீ.ராசேந்திரன்
D
தாரா பாரதி
Question 15
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்; ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்; மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
முடியரசன்
C
மீ.ராசேந்திரன்
D
தாரா பாரதி
Question 16
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்; கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்; தலைவனெனப் பாடுபவன் கவிஞன்,வீரன் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
முடியரசன்
C
மீ.ராசேந்திரன்
D
தாரா பாரதி
Question 17
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கைம்மாறு – பயன்
B
தேட்டையிட – செல்வம் திரட்ட
C
மீட்சி – தீமை
D
மாள – நீங்க
Question 17 Explanation: 
குறிப்பு :- மீட்சி – மேன்மை
Question 18
துரைராசு - என்பது யாருடைய இயற்பெயர்?
A
தாராபாரதி
B
பெருஞ்சித்திரனார்
C
முடியரசன்
D
அழ. வள்ளியப்பா
Question 19
முடியரசன் (துரைராசு) அவர்களின் பெற்றோர் பெயர்?
A
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
முத்தையா - ராஜம்மாள்
D
சுப்பராயலு - சீதாலட்சுமி
Question 20
முடியரசன் (துரைராசு) அவர்களின் ஊர்?
A
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி
B
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி
C
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர்
D
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம்
Question 21
பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர்?
A
தாராபாரதி
B
பெருஞ்சித்திரனார்
C
முடியரசன்
D
அழ. வள்ளியப்பா
Question 22
கீழ்க்கண்டவர்களுள், மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் (காரைக்குடி) தமிழாசிரியர் ஆக பணியாற்றியவர் யார்?
A
தாராபாரதி
B
காமராசன்
C
சுஜாதா
D
முடியரசன் (துரைராசு)
Question 23
கீழ்க்கண்டவர்களுள் யாருக்கு, பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது?
A
தாராபாரதி
B
காமராசன்
C
சுஜாதா
D
முடியரசன் (துரைராசு)
Question 24
முடியரசன் (துரைராசு) அவர்களுக்கு, பூங்கொடி என்னும் காவியத்துக்காக ---------------- ஆம் ஆண்டில் தமிழக அரசு,பரிசு வழங்கியது.
A
1956
B
1966
C
1976
D
1986
Question 25
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? இவர், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.
A
தாராபாரதி
B
காமராசன்
C
சுஜாதா
D
முடியரசன் (துரைராசு)
Question 26
முடியரசன் (துரைராசு) அவர்களின் காலம்?
A
07.10.1920 முதல் 03.10.1998 வரை
B
07.10.1930 முதல் 03.12.1998 வரை
C
07.10.1920 முதல் 03.12.1998 வரை
D
07.10.1920 முதல் 03.12.1988 வரை
Question 27
மன்னிப்பு உருதுச்சொல், பொறுத்துக்கொள்க எனத் தமிழில் சொல்லுங்கள் எனக் கூறியவர் யார்?
A
மறைமலையடிகள்
B
தாராபாரதி
C
அயோத்திதாசப் பண்டிதர்
D
தேவநேயப் பாவாணர்
Question 28
தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 29
தமிழைத் தழைக்கச் செய்த செம்மல் ------------- ?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 30
தனித்தமிழுக்கு வித்திட்டவர் ------------------- ?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 31
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் ------------------- ?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 32
மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 33
------------------- என்பவர் தனித்தமிழ் ஊற்று, செந்தமிழ் ஞாயிறு, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானங் காத்தவர், தமிழ், தமிழர் நலம் காப்பதனையே உயிர்மூச்சாகக் கொண்டவர்.
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 34
உலக முதன்மொழி தமிழ். இந்திய மொழிகளுக்கு மூலமும் வேரும் தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் என வாழ்நாள் முழுவதும் ஆய்வுசெய்து நிறுவிய செம்மல் யார்?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 35
உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பழந்தமிழர் நாகரிகமே என்பதும் பாவாணரது ஆய்வுபுலத்தின் இரு கண்களாம். அவர், தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறினார். - இது யாருடைய கூற்று?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 36
தேவநேயப் பாவாணர் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
சாத்தப்பன் - விசாலாட்சி
B
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
C
ஞானமுத்து – பரிபூரணம்
D
சுப்பராயலு – சீதாலட்சுமி
Question 37
தேவநேயப் பாவாணர் அவர்களின் ஊர்?
A
திருச்சி
B
மயிலாடுதுறை
C
மதுரை
D
சங்கரன்கோவில்
Question 38
பண்டிதர், புலவர், வித்துவான், முதுகலைத் தமிழ் பி.ஓ.எல். - இதனுடன் தொடர்புடையவர் யார்?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 39
தேவநேயப் பாவாணர் அவர்களின் காலம்?
A
07.02.1902 – 15.01.1951
B
07.02.1912 – 15.01.1961
C
07.02.1922 – 15.01.1971
D
07.02.1902 – 15.01.1981
Question 40
செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்கள் - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
கால்டுவெல்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 41
கோவில்களில் தமிழில் வழிபாடு நடைபெற வேண்டும் எனவும், பிறப்பு இறப்புத் தொடர்பான சடங்குகள் யாவும் தமிழில் நடைபெறவேண்டும் எனவும் வலியுறுத்தியவர் யார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 42
ஒருமுறை ஆசிரிய நண்பர் சிலருடன் தாரைமங்கலம் (தாரமங்கலம்) என்னும் ஊருக்கு சென்று, அங்கே இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திரும்பினார். அவரை அன்பர் சிலர் சூழ்ந்துகொண்டு, ஊர்சென்று வந்ததனைப்பற்றிக் கேட்டனர். அவருள் ஒருவர், ஐயா பகலுணவும், இராவுணவும் எவ்வாறு இருந்தன? எனக் கேட்டார். பாவாணர் பகலுணவு, பகல் உணவாகவும், இராவுணவு இரா உணவாகவும் இருந்தன என்றார். - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 43
தமிழ் வளர்த்தால் பசியும் பட்னியும் பஞ்சாய்ப் பறந்துவிடும் என எண்ணியவர் யார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 44
உண்ட வீட்டிற்கு எதாவது செய்தல் வேண்டும், உட்கார்ந்துக்கொண்டு உண்டு செல்வது நன்றாகாது - என்று கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 45
தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி,  மண்ணிலே விண், பண்டைத் தமிழர்,  நாகரிகமும் பண்பாடும், உயர்தரக் கட்டுரை இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்,  திருக்குறள் மரபுரை, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம் - முதலான நாற்பத்து மூன்று நூல்களையும், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார் - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 46
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக ----------------- அன்று பணியமர்த்தப்பட்டு, அரசின் உதவியோடு சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுதிகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தார்.
A
08.05.1972
B
08.05.1973
C
08.05.1974
D
08.05.1975
Question 47
தாம் பணியாற்றிய கல்வி நிறுவனமொன்றில் தொடர்ந்து பணியாற்ற இயலாத சூழல் நேர்ந்த போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு என்று வெளியேறியவர் யார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 48
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், வறுமையில் வாடினாலும் பணம் கைக்குக் கிடைத்தால் நூல்களே வாங்குவார். புலமைச் செருக்கில்லாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். அன்பு கசியும் நெஞ்சத்தில் ஆழமான நன்றியுணர்வுமிக்கவர்.
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 49
------------------- என்பவரின் பெயரில் சென்னை அண்ணாசாலையில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இவர் படித்துப் பணியாற்றிய இராசபாளையத்திற்கு அருகிலுள்ள முறம்பு என்னும் இடத்தில் பாவாணர் கோட்டம், அவர்தம் முழு உருவச்சிலை, அவர்  பெயரில் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப் பாவாணர்
Question 50
---------------------- இல், 05.01.1981 அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது, மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.
A
திருச்சி
B
சென்னை
C
மதுரை
D
கோவை
Question 51
மணம் நுகர்ந்ததற்குப் பணம் - என்னும் கதையின் ஆசிரியர் யார்?
A
சுஜாதா
B
ராஜம் கிருஷ்ணன்
C
அழ. வள்ளியப்பா
D
ஸ்ரீமதி எஸ்.இலட்சுமி (பார் புகழும் பரமார்த்தகுரு கதைகள்
Question 52
பலா + சுளை = பலாச்சுளை; பனி + போர் = பனிப்போர்; தினை + துணை = தினைத்துணை - ஆகிய எடுத்துக்காட்டுகள் எதனுடன் தொடர்புடையவை?
A
உயிரீற்றுப் புணர்ச்சி
B
மெய்யீற்றுப் புணர்ச்சி
C
விகாரப் புணர்ச்சி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 52 Explanation: 
குறிப்பு:- உயிரீற்றுப் புணர்ச்சி :- பல, பலா, கனி, தீ இச்சொற்களைப் ஒலித்துப் பாருங்கள். இச்சொற்களில் கடைசி எழுத்து உயிர்மெய் எனினும் உயிர் ஈறாகக் கொள்ளுதல் வேண்டும். பல’ இச்சொல்லில் (ல் + அ = ல) ‘அ’ உயிர் ஈறு. உயிர் ஈற்றுச் சொல்முன் வல்லின எழுத்துக்கள் வந்தால், அதன் மெய்யெழுத்து மிகும். (எ.கா.) பலா + சுளை = பலாச்சுளை பனி + போர் = பனிப்போர் தினை + துணை = தினைத்துணை உடம்படுமெய் : (உயிர் முன் உயிர்):- அணில், ஏணி, ஏற்றம். ஐவர், ஒளவை, இரும்பு, உண்டு, உயிர், ஊர்வலம், ஓடு. ‘மணி’ + அடி . இங்கு மணி என்பது நிலைமொழி. இதன் ஈறு (ண் + இ) உயிர். அடி என்பது வருமொழி. அதன் முதல் எழுத்து அ – உயிர். இவ்விரண்டும் ஒன்றாகச் சேரும்போது மணி + அடி = மணி + ய் + அடி = மணியடி இடையில் ‘ய்’ என்னும் மெய் தோன்றி, மணியடி என்னும் சொல்லாகிறது. பூவழகு என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்? பூ + அழகு – ‘பூவழகு’ என வரும். ஆனால், பூவழகு என்னும் சொல், பூ + அழகு = பூ + வ் + அழகு = பூவழகு. இடையில் இங்கு ‘வ்’ என்னும் மெய் எழுத்துத் தோன்றுகிறது. சேவடி என்பது எவ்வாறு பிரியும்? சே + வ் + அடி – ‘சேவடி’ என வரும். இங்கே ‘வ்’ என்னும் மெய் வந்துள்ளது. சே + அடி = சே + வ் + அடி = சேவடி, மேலும், சே + ய் + அடி = சேயடி எனவும் வரும். இ, ஈ, ஐ ஆகியனமுன் உயிர்வரின் ‘ய்’ தோன்றும் : கிளி + அலகு = கிளி + ய் + அலகு = கிளியலகு. தீ + எரிகிறது = தீ + ய் + எரிகிறது = தீயெறிகிறது. பனை + ஓலை = பனை + ய் + ஓலை = பனையோலை அ, ஆ, உ, ஊ, ஓ முன் ‘வ்’ தோன்றும் : குண + அழகி = குண + வ் + அழகி = குணவழகி பலா + இலை = பலா + வ் + இலை + பலாவிலை திரு + ஆரூர் = திரு + வ் + ஆரூர் = திருவாரூர் பூ + அழகி = பூ + வ் + அழகி = பூவழகி கோ + இல் = கோ + வ் + இல் = கோவில் ஏ முன் உயிர்வரின் ‘வ்’, ‘ய்’ இரண்டும் வரும் : தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம் அவனே + அரசன் = அவனே + ய் + அரசன் = அவனேயரசன் ய், வ், வருவதற்குப் புணர்ச்சியில் ஏதேனும் பெயர் உண்டா? நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழிமுதல் உயிரும் இணையும்போது வ் அல்லது ய் இடையில் தோன்றும். இதற்கு உடம்படுமெய் என்பது பெயர். இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் – நன்னூல், 162 மெய்யீற்றுப் புணர்ச்சி :- ‘நூல் + ஆடை’ என்பதனில் நூல் என்பது நிலைமொழி. ஆடை என்பது, வருமொழி. நூல் என்னும் நிலைமொழியின் ஈறு என்ன? மெய் எழுத்து உள்ளது. அதனால் மெய்யீறு.. மெய்யீற்று நிலைமொழிமுன், உயிர்முதல் வருமொழிச் சொற்கள் வந்தால், எவ்வாறு புணரும் என்பதனைப் பாருங்கள். அணில், ஆடை, இலை… என வரும் சொற்கள்தாமே உயிர்முதல் மொழிகள். பால் + ஆடை என்பதனில், பால் மெய்யீற்று நிலைமொழி முன் ஆடை உயிர்முதல் வருமொழி சேரும்போது, மெய் (ல்) உயிரோடு (ஆ) சேர்ந்து பாலாடை என்றாகிறது. ஏனெனில், மெய் தனித்து இயங்காது, உயிருடன் சேர்ந்துதான் இயங்கும், இதுவே இயல்பு. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – நன்னூல், 204 (உடல் – மெய்) இங்கு உடல் என்பது மெய்யெழுத்தைக் குறித்தது. இதுபோல் சிலவற்றைக் கூறுங்கள். மலர் + அடி = மலரடி. கனல் + எரி = கனலெரி. கடல் + ஓரம் = கடலோரம். கண், கல், பொன், மண், என்பனவும் மெய்யீற்று நிலைமொழிகளே. முன்பு சொன்ன மெய்யீறுகள் நெடிலெடுத்தும், இரண்டு முதலாகப் பல எழுத்துக்கள் சார்ந்தும் வந்தவை. குறிலடுத்து வந்த மெய்யீறுகள், இவற்றின்முன் உயிர்முதல் வருமொழி வந்தால் கண் + அழகு = கண் + ண் + அழகு = கண்ணழகு என்னுமாறு இணையும். தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி விரட்டும் – நன்னூல், 205 கல் + அணை = கல்லணை. கண் + ஆடி = கண்ணாடி. பல் + அழகு = பல்லழகு. விண் + அரசு = விண்ணரசு.
Question 53
பொருந்தாதது எது?
A
இடை + அழகு = உயிர்முன் உயிர்
B
மண் + அகல் = மெய்முன் உயிர்
C
கிளி + மூக்கு = உயிர்முன் மெய்
D
மரம் + கிளை = மெய்முன் உயிர்
Question 53 Explanation: 
குறிப்பு :- மரம் + கிளை = மெய்முன் மெய்
Question 54
பாடும் பாடல் - இத்தொடரில் பாடல் என்பது ------------?
A
நிலைமொழி
B
வருமொழி
C
பொதுமொழி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 55
பலவாண்டு - இச்சொல் பிரியும் முறை ------------- ?
A
பல் + ஆண்டு
B
பல + வாண்டு
C
பல + ஆண்டு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 56
பனை + ஓலை - இரண்டிற்கும் இடையில் ---------------- தோன்றும்.
A
வ்
B
ய்
C
ம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 57
முள் தாளுடன் - என்பதன் பொருள்?
A
முள்ளுடன் உள்ள இலை
B
முள்ளுடன் உள்ள தலை
C
முள் குத்திய காலுடன்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 58
பொருந்தாதது எது? வல்லினம் மிகா இடம்.
A
கதை + சொன்னான் = கதை சொன்னான் (இரண்டாம் வேற்றுமைத்தொகை)
B
அழகனோடு + சென்றான் = அழகனோடு சென்றான் (மூன்றாம் வேற்றுமை விரி)
C
வீட்டிலிருந்து + பார்த்தான் = வீட்டிலிருந்து பார்த்தான் (ஐந்தாம் வேற்றுமை விரி)
D
எனது + புத்தகம் = எனது புத்தகம் (ஏழாம் வேற்றுமை விரி)
Question 58 Explanation: 
குறிப்பு :- எனது + புத்தகம் = எனது புத்தகம் (ஆறாம் வேற்றுமை விரி)
Question 59
பொருந்தாதது எது? வல்லினம் மிகா இடம்.
A
சுடு + சோறு = சுடுசோறு (வினைத்தொகை)
B
கல்வி + கேள்வி = கல்விகேள்வி (உம்மைத்தொகை
C
படித்த + பாடம் = படித்தபாடம் (பெயரெச்சம்)
D
கோழி + கொக்கரித்தது = கோழிகொக்கரித்தது (வினைமுற்று)
Question 59 Explanation: 
குறிப்பு :- கோழி + கொக்கரித்தது = கோழிகொக்கரித்தது (எழுவாய்த்தொடர்)
Question 60
பொருந்தாதது எது? வல்லினம் மிகா இடம்.
A
வாழ்க + செந்தமிழ் = வாழ்க செந்தமிழ் (வியங்கோள் வினைமுற்று)
B
அது, இது, எது என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.டு) அது + தான் = அதுதான். அன்று, இன்று, என்று என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.டு) எத்தனை + பொருள் = எத்தனை பொருள்
C
அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது. (எ.டு) எத்தனை + பொருள் = எத்தனை பொருள்
D
'படி' என முடியும் வினையெச்சம், உகரவீற்று வினையெச்சம், எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (எடு) வரும்படி கூறினாள் ('படி' என்னும் சொல்)
Question 60 Explanation: 
குறிப்பு :- 'படி' என முடியும் வினையெச்சம், உகரவீற்று வினையெச்சம், எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (எடு) வரும்படி கூறினாள் ('படி' என்னும் சொல்)
Question 61
சுவாமி வேதாசலத்தின் மகள் பெயர்?
A
நீலாம்பிகை அம்மையார்
B
காதம்பரி அம்மையார்
C
வளர்மதி அம்மையார்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 62
பெற்ற தாய்தனை மகமறந் தாலும் பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் உயிரை மேவிய உடல்மறந் தாலும் - என்னும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்?
A
திருவருட்பா, இராமலிங்க வள்ளலார்
B
கம்பராமாயணம், கம்பர்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
D
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
Question 63
சுவாமி வேதாசலம் என்னும் தம் வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் ------------- என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
A
பரிதிமாற்கலைஞர்
B
மறைமலையடிகள்
C
நவநீதன்
D
வேங்கட மகாலிங்கம்
Question 64
கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டு வரும்படி சொல்லியிருந்தேன்.அவன் அன்று வாரமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் அவனைச் சினந்தேன். அவன் பேசினான்.. - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
மறைமலையடிகள்
B
திரு.வி.க
C
பாவாணர்
D
கி.ஆ.பெ.விசுவநாதம்
Question 65
'நான் நேற்றே மலைக்கு நடந்தேன்;  பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; பானையில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அத்தேனில் சிறிது குடித்தேன்; களித்தேன்; களைந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் வீட்டில் கொடுத்தேன்'' - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
மறைமலையடிகள்
B
திரு.வி.க
C
பாவாணர்
D
கி.ஆ.பெ.விசுவநாதம்
Question 66
நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதனையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதனைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என இனிக்கும். என்னே தமிழின் இனிமை! - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
மறைமலையடிகள்
B
திரு.வி.க
C
பாவாணர்
D
கி.ஆ.பெ.விசுவநாதம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 66 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!