Online TestTamilTnpsc Exam
9th Tamil Part 1 Online Test – New Book
9th Tamil Questions - Part 1
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 1.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது ?
இலங்கை, மலேசியா | |
இலங்கை, மொரிசியஸ் | |
கனடா, மொரிசியஸ் | |
இலங்கை, கனடா |
Question 2 |
கீழ்க்கண்ட தமிழின் தனித்தன்மைகளில் எது / எவை தவறானவை?
- திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியான தமிழ் பிற திராவிட மொழிகளை விட ஒலியியல் ஆய்வுக்கு பெருந்துணையாக உள்ளது.
- ஒரே பொருளை குறிக்க பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பிய மொழி தமிழ்.
- தமிழ் மொழி, வடமொழிகள் சிலவற்றின் தாய் மொழியாக உள்ளது.
- தென் ஆப்பிரிக்கா, கயானா , ஜப்பான் , மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.
1, 4 தவறு | |
1 , 3, 2 தவறு | |
1 , 3, 4 தவறு | |
1 மட்டும் தவறு |
Question 2 Explanation:
(விளக்கம் :
திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியான தமிழ் பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்கு பெருந்துணையாக உள்ளது.
தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாக உள்ளது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜித்தீவு, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட் ,ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது)
Question 3 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொற்கள் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை.
- திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றை தெளிவாகக் காட்டுகின்றன.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1, 2 தவறு |
Question 4 |
திராவிட மொழிகளில் எந்த மொழியின் வினைச்சொற்களில் திணை, பால், எண் ஆகிய வேறுபாட்டை காட்டும் பாலறி கிளவிகள் இல்லை
மலையாளம் | |
தெலுங்கு | |
கன்னடம் | |
துளு |
Question 5 |
திராவிட மொழிகளில் ______ஐ ஒட்டி பால்பாகுபாடு அமைந்துள்ளது.
பொருள்களின் எண்ணிக்கை | |
பொருள்களின் உறுப்புகள் | |
பொருள்களின் நிறம் | |
பொருள்களின் தன்மை |
Question 6 |
கீழ்க்கண்ட எந்த மொழிகளில் உயிரற்ற பொருள்களும் நுண்பொருள்களும் கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன?
வட மொழி, திராவிட மொழி | |
வட மொழி, தமிழ் | |
தமிழ், ஜெர்மன் | |
வட மொழி, ஜெர்மன் |
Question 7 |
வட மொழியில் ஆண்பால், பெண்பால் என்பவை முறையே எந்த உறுப்புகள் என பாகுபடுத்தப்படுகின்றன.
கால் விரல்கள், கை விரல்கள் | |
கை விரல்கள், கால் விரல்கள் | |
வாய், மூக்கு | |
மூக்கு, வாய் |
Question 8 |
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
கால் விரல்கள், கை விரல்கள், தலை | |
கை விரல்கள், கால் விரல்கள், தலை | |
வாய், மூக்கு, கண் | |
மூக்கு, வாய், கண் |
Question 9 |
திராவிட மொழிகளில் பால் காட்டும் விகுதிகள் எதற்கு இல்லை?
அஃறிணை | |
உயர்திணை | |
ஒன்றன்பால் | |
பலவின்பால் |
Question 10 |
சரியான பொருள் தருக
- கடுவன் , களிறு
சிங்கம், யானை | |
சிங்கம், பிடி | |
யானை, பிடி | |
மந்தி, பிடி |
Question 11 |
"தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி " என்று கூறியவர்
ஹீராஸ் பாதிரியார் | |
குமரில பட்டர் | |
கால்டுவெல் | |
ஜி.யு.போப் |
Question 12 |
சொற்களின் இன்றியமையாப் பகுதி ____ எனப்படும்.
வேர்ச்சொல், அடிச் சொல் | |
அடிச்சொல், வினைச்சொல் | |
வேர்ச்சொல், வினைச்சொல் | |
வேர்ச்சொல், பெயர்ச்சொல் |
Question 13 |
திராவிட மொழிகளின் சொற்கள் பொதுவான _____ஐ கொண்டிருக்கின்றன.
பெயர்ச்சொல் | |
வினைச்சொல் | |
அடிச்சொல் | |
இடைச்சொல் |
Question 14 |
" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
தோடா | |
குருக் | |
பர்ஜி | |
குடகு |
Question 15 |
கீழ்க்கண்ட அடிச்சொற்களை ஆராய்க.
- கொண் -தோடா
- ஃகன் – பர்ஜி
- கெண் – குரூக்
- கன்னு – தெலுங்கு
- கண்ணு – குடகு
4, 5 சரி | |
3,5 சரி | |
1,4 சரி | |
அனைத்தும் சரி |
Question 16 |
திராவிட மொழிகளின் எண்ணிக்கை _____
24 | |
28 | |
27 | |
20 |
Question 17 |
கீழ்க்கண்டவற்றில் நடுத்திராவிட மொழி அல்லாதது எது?
கன்னடம் | |
தெலுங்கு | |
பர்ஜி | |
பெங்கோ |
Question 17 Explanation:
( விளக்கம்: கன்னடம் – தென்திராவிட மொழி )
Question 18 |
கீழ்க்கண்டவற்றுள் அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?
- எருகலா 2. தங்கா 3. கதபா 4. குறும்பா 5 .சோழிகா
அனைத்தும் | |
1, 2, 3, 4 | |
2, 3, 4, 5 | |
1, 2, 4, 5 |
Question 18 Explanation:
(விளக்கம்: கதபா – நடுத்திராவிட மொழி)
Question 19 |
கீழ்க்கண்டவற்றுள் வட திராவிட மொழிகள் எவை?
- குரூக் 2. மால்தோ 3. பிராகுய் 4. தோடா 5. நாய்க்கி
அனைத்தும் | |
1, 2, 4, 5 | |
1,3, 4 | |
1, 2, 4 |
Question 19 Explanation:
(விளக்கம்: தோடா - தென்திராவிட மொழி, நாய்க்கி - நடுத்திராவிட மொழி)
Question 20 |
பொருத்துக
- எண்ணுப் பெயர்கள் திராவிட மொழிகள்
- மூஜி i) மலையாளம்
- மூரு ii) கன்னடம்
- மூன்று iii) தெலுங்கு
- மூணு iv) தமிழ்
- மூடு v) துளு
ii v iv i iii | |
ii v iv iii i | |
v ii iv i iii | |
v ii I iv iii |
Question 21 |
தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி ___.
இலக்கணம் | |
மொழி | |
நூல்கள் | |
கல்வெட்டுகள் |
Question 22 |
மனிதன் தம் எண்ணங்களை கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு வெளிப்டுத்தினான்?
- மெய்ப்பாடுகள் 2. சைகைகள் 3. ஒலிகள் 4. ஓவியங்கள்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2 , 3, 4 | |
1 , 3, 4 |
Question 23 |
வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்க தூண்டியவை எவை?
இட அமைப்பும், இயற்கை அமைப்பும் | |
இட அமைப்பும், காலநிலையும் | |
பருப்பொருள்களும், காலநிலையும் | |
நுண்பொருள்களும், காலநிலையும் |
Question 24 |
உலக மொழிகள் அனைத்தும் எதனடிப்படையில் மொழிக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- பிறப்பு 2 . தொடர்பு 3 .அமைப்பு 4. உறவு
அனைத்தும் | |
1, 2, 3 | |
2 , 3, 4 | |
1 , 3, 4 |
Question 25 |
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _____
1500 | |
1200 | |
1400 | |
1300 |
Question 26 |
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை மொழிக் குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
3 | |
4 | |
5 | |
6 |
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்கள் எவை?
- இந்தோ - ஆசிய மொழிகள்
- திராவிட மொழிகள்
- ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
- சீன - திபெத்திய மொழிகள்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2 , 3, 4 | |
1 , 3, 4 |
Question 28 |
"இந்தியநாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது “ என்றவர்
ஹீராஸ் பாதிரியார் | |
ச. அகத்தியலிங்கம் | |
கால்டுவெல் | |
குமரில்பட்டர் |
Question 29 |
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார் ?
குமரில பட்டர் | |
கால்டுவெல் | |
ஜி.யு.போப் | |
உ.வே.சா |
Question 30 |
திராவிட என்ற சொல்லின் பிறப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த வரிசை சரியானது?
Question 31 |
வட மொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதலில் குறிப்பிட்டவர் யார்?
பாப் | |
ராஸ்க் | |
கிரிம் | |
வில்லியம் ஜோன்ஸ் |
Question 32 |
1816ல் மொழி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?
பாப் , ரஸ்க், கிரிம் | |
போப், ரஸ்க், கிரிம் | |
போப், ரஸ்க், ஜோன்ஸ் | |
போப், ரஸ்க், ஜோன்ஸ் |
Question 33 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தனவ என கூறியவர் வில்லியம் ஜோன்ஸ் .
- வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வட மொழி என்று கூறியவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
- மால்தோ, தோடா, கோண்டி முதலியவற்றையும் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் முதலியவற்றையும் இணைத்து தமிழியன் என பெயரிட்டவர் ஹோக்கன்.
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 33 Explanation:
(விளக்கம் :
தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தனவ என கூறியவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வட மொழி என்று கூறியவர் வில்லியம் ஜோன்ஸ் . )
Question 34 |
" திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல் யாருடையது?
ஜி.யு.போப் | |
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் | |
ஹீராஸ் பாதிரியார் |
Question 35 |
அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளின் எண்ணிக்கை
3 | |
2 | |
5 | |
4 |
Question 36 |
“ தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிக்கும் தொடர்பு இருக்கலாம்" என்றவர்
கமிலசுவலபில் | |
கால்டுவெல் | |
எமினோ | |
வில்லியம் ஜோன்ஸ் |
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி அல்லாதது எது?
இருளா | |
மலையாளம் | |
தெலுங்கு | |
கன்னடம் |
Question 37 Explanation:
(விளக்கம்: தெலுங்கு - நடுத்திராவிட மொழி )
Question 38 |
சங்க இலக்கியங்கள் எந்நூற்றாண்டை சேர்ந்தவை ?
பொ.ஆ.மு 5 - பொ.ஆ.பி 2 | |
பொ. ஆ. மு. 3 | |
பொ.ஆ.பி. 9 | |
பொ.ஆ.பி 11 |
Question 39 |
பொருத்துக
- நூல் நூற்றாண்டு
- தொல்காப்பியம் i) பொ. ஆ மு. 3
- கவிராஜ மார்க்கம் ii) பொ.ஆ. பி 9
- பாரதம் iii) பொ.ஆ.பி 11 .
- லீலா திலகம் iv) பொ.ஆ.பி 15
i ii iii iv | |
ii iii iv i | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 40 |
கீழ்க்கண்ட நூல்கள் எந்நூற்றாண்டை சேர்ந்தவை?
- ஆந்திர பாஷா பூஷணம், ராமசரிதம்
பொ.ஆ.மு 5 - பொ.ஆ.பி 2 | |
பொ. ஆ. மு. 3 | |
பொ.ஆ.பி. 9 | |
பொ.ஆ.பி 12 |
Question 41 |
"கவிராஜ மார்க்கம், பாரதம் " ஆகியவை முறையே எம்மொழி நூல்கள்
தமிழ், வடமொழி | |
தமிழ், வடமொழி | |
கன்னடம், தெலுங்கு | |
தெலுங்கு, கன்னடம் |
Question 42 |
"ஆந்திர பாஷா பூஷணம் ,ராமசரிதம்" ஆகியவை முறையே எம்மொழி நூல்கள்
தமிழ், வடமொழி | |
தமிழ், வடமொழி | |
கன்னடம், தெலுங்கு | |
தெலுங்கு, மலையாளம் |
Question 43 |
"தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூலிற்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?
மு.வ | |
செ.வை. சண்முகம் | |
கல்கி | |
திரு.வி.க |
Question 44 |
"இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம்” என்ற நூல் யாருடையது?
மு.வ | |
செ.வை. சண்முகம் | |
கல்கி | |
திரு.வி.க |
Question 45 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- இலக்கியங்கள் - கவிராஜ மார்க்கம் ,பாரதம், ராமசரிதம்
- இலக்கணங்கள் - கவிராஜ மார்க்கம் , ஆந்திர பாஷா பூஷணம் லீலா திலகம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 46 |
' மரம் ’ என்ற தமிழ்ச் சொல் தெலுங்கு, கூர்க் ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
மர, மானு | |
மானு, மர | |
மானு, மரம் | |
மரம், மர |
Question 47 |
'ஒன்று ‘ என்ற தமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
ஒகடி, ஒந்து | |
ஒந்து, ஒகடி | |
ஒந்து, ஒஞ்சி | |
ஒஞ்சி, ஒந்து |
Question 48 |
‘ நூறு ‘என்ற தமிழ்ச் சொல் கன்னடம், துளு ஆகிய மொழிகளில் முறையே எவ்வாறு அழைக்கப்படுகிறது
நூறு, நூரு | |
நூரு, நூறு | |
நூறு, நூது | |
நூரு , நூது |
Question 49 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
நீ – தமிழ், மலையாளம் | |
நீவு – தெலுங்கு | |
நீன் – கூர்க் | |
ஈ – துளு |
Question 49 Explanation:
(விளக்கம் : நீன் – கன்னடம்)
Question 50 |
தவறான இணையை தேர்ந்தெடு.
இரண்டு – தமிழ் | |
ஈர்ரெண்டு - மலையாளம், தெலுங்கு | |
எரடு – கன்னடம் | |
ரட்டு – கூர்க் |
Question 51 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
நால் – தெலுங்கு | |
நாலுகு – கன்னடம் | |
நாலு – கன்னடம் | |
நாங்கு – தெலுங்கு |
Question 51 Explanation:
(விளக்கம் : நால், நாங்கு – மலையாளம், நாலுகு - தெலுங்கு)
Question 52 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
அஞ்சு – தமிழ் | |
ஐனு – துளு | |
ஐது – கூர்க் | |
ஐந்து – கன்னடம் |
Question 53 |
- “ காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
- காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ”
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
தமிழ் ஒளி | |
ஈரோடு தமிழன்பன் | |
தாராபாரதி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
Question 54 |
- “ மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
- மட்டுமே போதுமே ஓதி, நட... “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
திருவள்ளுவமாலை | |
தமிழோவியம் | |
பிங்கல நிகண்டு | |
நன்னூல் |
Question 54 Explanation:
(விளக்கம்: தமிழோவியம் என்னும் நூலில் ஈரோடு தமிழன்பன் பாடியது)
Question 55 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- எத்தனை எத்தனை, விட்டு விட்டு
இரட்டைக் கிளவிகள் | |
வினைத் தொகைகள் | |
அடுக்குத் தொடர்கள் | |
வினையெச்சம் |
Question 55 Explanation:
(விளக்கம்: சொற்களை பிரித்தால் தனித்து பொருள் தருவதால் அடுக்கு தொடர் )
Question 56 |
இலக்கணக் குறிப்புத் தருக - ஏந்தி
வினைத்தொகை | |
வினையாலணையும் பெயர் | |
வினைமுற்று | |
வினையெச்சம் |
Question 56 Explanation:
(விளக்கம்: ‘ இ ‘ என்னும் உயிரெழுத்தில் முடிவதால் வினையெச்சம் )
Question 57 |
இலக்கணக் குறிப்புத் தருக – காலமும்
எண்ணும்மை | |
முற்றும்மை | |
வினைத்தொகை | |
வினைமுற்று |
Question 58 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வளர்ப்பாய்
வளர்ப்பு + ஆய் | |
வளர் + பு + ஆய் | |
வளர் + ப் + ப் + ஆய் | |
வளர்ப்பு + ப் + ப் + ஆய் |
Question 59 |
" வளர் + ப் + ப் + ஆய் “ இதில் ' ஆய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி | |
ஏவல் ஒருமை வினை முற்று விகுதி | |
ஏவல் பன்மை வினை முற்று விகுதி |
Question 59 Explanation:
(விளக்கம் : ஐ , ஆய் ஆகியவை முன்னிலை ஒருமை வினை முற்று விகுதிகள்)
Question 60 |
" ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை . பாடலும் அப்படித்தான்! " என்ற முன்னுறையை கொண்ட நூல் எது ?
வணக்கம் வள்ளுவ | |
தமிழன்பன் கவிதைகள் | |
தமிழோவியம் | |
தமிழர் வரலாறு |
Question 61 |
ஈரோடு தமிழன்பன் _____ , _____ முதலான பல வடிவங்களில் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
சிறுகவிதை, சிறுகதை | |
புதுக்கவிதை, சிறுகதை | |
நாவல், இலக்கணம் | |
நாவல் , உரைநடை |
Question 62 |
ஈரோடு தமிழன்பன் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார்.
- ஹைக்கூ 2. சென்ரியு 3. லிமரைக்கூ 4. செய்யுள்
அனைத்தும் சரி | |
1,2,3 சரி | |
2, 3, 4 சரி | |
1,3,4 சரி |
Question 63 |
ஈரோடு தமிழன்பன் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
வணக்கம் வள்ளுவ | |
தமிழன்பன் கவிதைகள் | |
தமிழோவியம் | |
தமிழர் வரலாறு |
Question 64 |
ஈரோடு தமிழன்பன் அவர்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ?
2001 | |
2002 | |
2003 | |
2004 |
Question 65 |
ஈரோடு தமிழன்பன் அவர்களின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது?
வணக்கம் வள்ளுவ | |
தமிழன்பன் கவிதைகள் | |
தமிழோவியம் | |
தமிழர் வரலாறு |
Question 66 |
ஈரோடு தமிழன்பன் அவர்களின் நூல்கள் கீழ்க்கண்ட எந்தெந்த மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன?
- இந்தி 2. உருது 3. மலையாளம் 4. பிரஞ்சு 5. ஆங்கிலம்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 2, 3, 4 சரி | |
1, 2, 3 , 5 சரி |
Question 67 |
"இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" எனக் கூறும் நூல் எது?
திருவள்ளுவமாலை | |
தமிழோவியம் | |
பிங்கல நிகண்டு | |
நன்னூல் |
Question 68 |
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் “ என்று கூறியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
வைரமுத்து |
Question 69 |
உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படும் நாள் எது?
பிப்ரவரி 12 | |
பிப்ரவரி 2 | |
பிப்ரவரி 21 | |
பிப்ரவரி 22 |
Question 70 |
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை?
கனடா, இலங்கை | |
கனடா, சிங்கப்பூர் | |
இலங்கை, சிங்கப்பூர் | |
கனடா, மொரீஷியஸ் |
Question 71 |
தமிழ் விடு தூது நூலில் கீழ்க்கண்ட எந்தெந்த சிறப்புகள் விரவியுள்ளன?
- தமிழின் இனிமை 2. இலக்கிய வளம் 3. பாச்சிறப்பு 4 சுவை 5. அழகு
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2 ,3, 4 சரி | |
1, 2, 3 , 5 சரி |
Question 72 |
- "திறம்எல்லாம் வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச்
- சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே"
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தமிழோவியம் | |
தமிழ் விடு தூது | |
தமிழ் வரலாறு | |
தமிழர் வரலாறு |
Question 73 |
சரியான பொருளை தேர்ந்தெடு – திறமெல்லாம் , ஊனரசம்
திறமை, நவரசம் | |
சிறப்பெல்லாம், நவரசம் | |
சிறப்பெல்லாம், குறையுடைய சுவை | |
திறமை, குறையுடைய சுவை |
Question 74 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழ் விடு தூது நூலில் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகள் எவை?
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு | |
சிந்து | |
சத்துவம் ,இராசசம், தாமசம் |
Question 75 |
- "குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
- உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ “
- இதில் கூறப்படும் மூன்று இனங்கள் எவை?
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு , பா | |
செறிவு, சமநிலை , தெளிவு | |
சத்துவம் ,இராசசம், தாமசம் |
Question 76 |
“ திறம் எல்லாம் வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே" இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது ?
- 1.சீவகசிந்தாமணி என்னும் நூல் 2. சிதறாத மணி
- 3) சிதறிய மணி
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1 , 3 சரி |
Question 77 |
“ திறம் எல்லாம் வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே" இதில் குறிப்பிடப்படும் ‘சிந்து‘ என்பது எதைக் குறிக்கிறது?
குணம் | |
இனம் | |
ஒரு வகை இசைப்பாடல் | |
நவரசம் |
Question 78 |
- "அந்தரமேல் முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
- குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்"
- இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மூன்று குணங்கள் எவை?
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு , பா | |
செறிவு, சமநிலை , தெளிவு | |
சத்துவம் ,இராசசம், தாமசம் |
Question 79 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு.
- சத்துவம் - சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்
- இராசசம் - போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்
- தாமசம் - அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 80 |
- "அந்தரமேல் முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
- குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்"
- இவ்வரிகளில் குறிப்பிடப்படும் பத்து குணங்களுள் சில
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு , பா | |
செறிவு, சமநிலை | |
சத்துவம் ,இராசசம், தாமசம் |
Question 81 |
தமிழ் விடு தூது நூலில் குறிப்பிடப்படும் ஐந்து வண்ணங்கள் எவை?
வெள்ளை 2. சிவப்பு 3. கறுப்பு 4. மஞ்சள் 5. பச்சை
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 82 |
தமிழ் விடு தூது நூலில் குறிப்பிடப்படும் தமிழுக்குறிய நூறு வண்ணங்களுள் ஈற்றில் அமைந்துள்ள வண்ணம் எது?
குறில் | |
அகவல் | |
தூங்கிசை | |
இடைமெல்லிசை |
Question 83 |
தமிழ் விடு தூது நூலில் குறிப்பிடப்படும் தமிழுக்குறிய நூறு வண்ணங்களுள் முதலில் அமைந்துள்ள வண்ணங்கள் எவை ?
- குறில் 2. அகவல் 3. தூங்கிசை 4. இடைமெல்லிசை
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 4 |
Question 84 |
கீழ்க்கண்டவைகளுள் நவரசங்களில் இடம்பெறாதது எது / எவை?
- வீரம் 2. இழிப்பு 3. வியப்பு 4. அவலம் 5 . சமநிலை
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
எதுவுமில்லை |
Question 85 |
- " ஒழியா வனப்பு எட்டு உடையாய்... “
- இதில் வனப்பு என குறிப்பிடப்படுபவை எவை?
- அம்மை 2. தொன்மை 3. தோல் 4. இயைபு 5. இழைபு
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
3, 4, 5 |
Question 86 |
- " ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ
- நோக்கிய வண்ணங்கள் நூறு உடையோய் "
- இதில் நூறு வண்ணங்களை உடையதாக கூறப்படுவது எது?
மலர் | |
தேவர்கள் | |
தமிழ் | |
கிளி |
Question 87 |
தமிழ்விடு தூது நூலில் மூன்று குணங்களை பெற்றவர்களாக கூறப்படுவது யாரை?
மலர் | |
தேவர்கள் | |
தமிழ் | |
கிளி |
Question 88 |
கண்ணி என்பது எத்தனை அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?
2 | |
3 | |
4 | |
5 |
Question 89 |
- கூற்று: தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
- காரணம்: இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மலைக்கு கண்ணி என்று பெயர்
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 90 |
இலக்கணக்குறிப்புத் தருக – முத்திக்கனி
உவமைத்தொகை | |
உருவகம் | |
உம்மைத் தொகை | |
எண்ணும்மை |
Question 90 Explanation:
(விளக்கம்: உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது.)
Question 91 |
இலக்கணக்குறிப்புத் தருக – தெள்ளமுது
வினைத் தொகை | |
வினை முற்று | |
பண்புத்தொகை | |
வினையெச்சம் |
Question 91 Explanation:
(விளக்கம்: பண்புத்தொகையில் ‘ஆகிய, ஆன’ என்னும் பண்பு உருபுகளும் ‘மை’ விகுதியும் மறைந்து வரும்.)
Question 92 |
இலக்கணக்குறிப்புத் தருக – குற்றமிலா , சிந்தாமணி
6ம் வேற்றுமைத்தொகை | |
முதல் வேற்றுமைத்தொகை | |
8ம் வேற்றுமைத்தொகை | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
Question 93 |
இலக்கணக்குறிப்புத் தருக – செவிகள் உணவான
6 ம் வேற்றுமைத்தொகை | |
4 ம் வேற்றுமைத்தொகை | |
8 ம் வேற்றுமைத்தொகை | |
2 ம் வேற்றுமைத்தொகை |
Question 93 Explanation:
(விளக்கம்: ' கு ‘ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
Question 94 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொள்வார்
கொள்+ வார் | |
கொள் + வ் +வ் + ஆர் | |
கொள்+வ் + ஆர் | |
கொள்+ஆர் |
Question 95 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உணர்ந்த
உணர்ந்து + அ | |
உணர்+த்(ந்) + அ | |
உணர் + த்(ந்) +த் + அ | |
உணர்+ந்+அ |
Question 96 |
" உணர்ந்த >>உணர் + த்(ந்) + த் + அ “ இதில் 'அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
வினையெச்ச விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
பன்மை வினை முற்று விகுதி | |
ஒருமை வினை முற்று விகுதி |
Question 97 |
கீழ்க்கணவற்றுள் ' தூது ‘ என்பதன் வேறு பெயர்கள் யாவை?
- வாயில் இலக்கியம் 2. சந்து இலக்கியம்
- திண்ணை இலக்கியம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 ,3 சரி | |
1 , 3 சரி |
Question 98 |
தலைவன் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தி தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக ' மாலையை வாங்கி வருமாறு ‘ பாடப்படுவது
பரணி | |
பள்ளு | |
தூது | |
குறவஞ்சி |
Question 99 |
வாயில் இலக்கியத்தில் எத்தனை பொருள்கள் தூது விடுவதாக பாடப்படுகின்றன?
9 | |
10 | |
20 | |
30 |
Question 100 |
சந்து இலக்கியம் எத்தகைய பாவால் இயற்றப்படுகிறது?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
கலிவெண்பா | |
வஞ்சிப்பா |
Question 101 |
தமிழ்விடு தூது நூல் யாருக்கு தூது அனுப்புவதாக பாடப்பட்டுள்ளது ?
திருச்செந்தூர் முருகன் | |
தாயுமானவர் | |
தமிழ் மொழி | |
மதுரை சொக்கநாதர் |
Question 102 |
தமிழ்விடு தூது நூலில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை ____ .
628 | |
268 | |
264 | |
624 |
Question 103 |
தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு ?
ஆறுமுகநாவலர்- 1930 | |
ஆறுமுகநாவலர் – 1931 | |
உ.வே.சா – 1930 | |
உ.வே.சா -1931 |
Question 104 |
தமிழ் விடு தூது நூலின் ஆசிரியர் யார்?
சொக்கநாதர் | |
உ.வே.சா | |
கண்ணதாசன் | |
ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
Question 105 |
- போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச்சூடி
- நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க “
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
பாரதியார் | |
சுத்தானந்த பாரதியார் | |
பாரதிதாசன் | |
சுரதா |
Question 106 |
பொருத்துக
- லேப்டாப் i) செதுக்கி
- சாப்ட்வேர் ii) உலவி
- ப்ரௌசர் iii) மென்பொருள்
- க்ராம் iv) மடிக்கணினி
i ii iii iv | |
ii iii iv i | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 107 |
பொருத்துக
- கர்சர் i) ஏவி
- சைபர் ஸ்பேஸ் ii) இணையவெளி
- சர்வர் iii) வையக விரிவு வலை வழங்கி
- ஃபோல்டர் iv) உறை
i ii iii iv | |
ii iii iv i | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 108 |
கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
- முந்திரி – 1 / 320
- அரைக்காணி முந்திரி – 3 / 320
- அரைக்காணி – 1 / 160
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 109 |
கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
- காணி – 1/80
- அரைக்காணி - 1/16
- முக்காணி - 3/80
- மாகாணி – 1/160
அனைத்தும் சரி | |
1 , 3, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1 , 3 சரி |
Question 109 Explanation:
(விளக்கம்: அரைக்காணி - 1/160, மாகாணி – 1/16)
Question 110 |
பொருத்துக.
- வீசம் i) 1/16
- கால் வீசம் ii) 1/64
- அரைவீசம் iii) 1/32
- முக்கால் வீசம் iv) 3/64
- மூன்று வீசம் v) 3/16
i ii iii iv v | |
iii ii i v iv | |
iv v iii ii i | |
ii iii i iv v |
Question 111 |
பொகுத்துக.
- அரைமா i) 1/20
- ஒருமா ii) 1/40
- இருமா iii) 3/20
- மூன்றுமா iv) 1/10
- நாலுமா v) 1/5
i ii iii iv v | |
ii iii v iv i | |
iii v ii i iv | |
ii i iv iii v |
Question 112 |
கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
- அரைக்கால் - 1/8
- அரை வீசம் – 1/32
- அரைக்காணி - 1/160
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 113 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- சொற்கள் அந்தந்த மொழி பேசுவோரின் பேச்சுறுப்புகளுக்கு ஏற்ப அமைந்தவை .
- அவற்றை நாம் பேசும் போது ஒலித்திரிபு ஏற்பட்டு பொருள் மயக்கம் உண்டாகும்
அனைத்தும் சரி | |
1 சரி | |
1 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 114 |
கீழ்க்கண்டவற்றுள் கடற்கலன்களை குறிக்கும் சொற்கள் எது / எவை?
- நாவாய் 2. வங்கம் 3. தோணி 4. கலம்
அனைத்தும் | |
1, 2 | |
2 , 3 | |
1,4 |
Question 115 |
எந்த தமிழ்ச் சொல்லைத் தழுவி ஆங்கிலத்தில் நேவி என்ற சொல் வழங்கப்படுகிறது?
நாவல் | |
நா | |
நாவாய் | |
நீர் |
Question 116 |
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது ____மொழி
பிரெஞ்சு | |
இலத்தீன் | |
சீனம் | |
கிரேக்கம் |
Question 117 |
" எறுதிரான், கலயுகோய் , நீரியோஸ், , நீரிய , நாயு , தோணீஸ் “ ஆகியவை எம்மொழிச் சொற்கள்
பிரெஞ்சு | |
இலத்தீன் | |
சீனம் | |
கிரேக்கம் |
Question 118 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- எறிதிரை – எறுதிரான்
- கலன் – கலயுகோய்
- நீர் – நாயு
- நாவாய் - நீரிய
- தோணி – தோணிஸ்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 5 சரி |
Question 119 |
தமிழில் ' பா ‘ என்ற சொல் கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியமாகிய ____ல் பாய்யியோனா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
பைபில் | |
கலயுகோய் | |
இலியாத் | |
சாப்போ |
Question 120 |
பா வகைகளுள் ஒன்றான வெண்பாவின் ஓசை ______
துள்ளலோசை | |
அகவலோசை | |
கலித்தாழிசை | |
செப்பலோசை |
Question 121 |
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
சாப்போ | |
வெண்போ | |
சேப்பி | |
செப்போ |
Question 122 |
வெண்பா வடிவ பாடல்கள் கிரேக்கத்திலிருந்து இலத்தீன் மொழிக்கு வந்து பின் ஆங்கிலத்தில் எவ்வாறு வழங்கப்ட்டன?
சாப்போ | |
வெண்போ | |
சேப்பி ஸ்டேன்சா | |
செப்போ |
Question 123 |
தமிழ் இலக்கணங்களில் குறிப்பிடப்படும் பாவின் சுவைகளில் இளிவரல் என்பது ____சுவையினைக் குறிக்கிறது.
இன்பம் | |
துன்பம் | |
கோபம் | |
நகை |
Question 124 |
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன .
பாய்யியோனா | |
இலியாத் | |
இளிகியா | |
கலயுகோய் |
Question 125 |
கிரேக்க மொழி நூலான இலியாத் எந்த நூற்றாண்டை சார்ந்தது?
கி.பி. 7 | |
கி.பி. 8 | |
கி.மு 8 | |
கி.மு. 7 |
Question 126 |
தமிழரும் கிரேக்கரும் ___ வழியாக தொடர்பு கொண்டிருந்தனர் என்று கிரேக்க நூல் குறிப்பிடுகிறது.
தரை | |
கடல் | |
வான் | |
குறிப்பிடவில்லை |
Question 127 |
“ எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ் " என்ற நூலின் பெயரில் அமைந்துள்ள தமிழ்ச்சொல்
ஏசியன் | |
பெரிய | |
புலம் | |
எறிதிரை |
Question 128 |
' எறிதிரை ‘ என்பதன் பொருள் என்ன?
கடலை சார்ந்த பெரிய பறவை | |
கடலை சார்ந்த பெரிய விலங்கு | |
கடலை சார்ந்த பெரிய புலம் | |
பெரிய கடல் |
Question 129 |
உடனுக்குடன் நம் மொழிக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
- 1.மருத்துவம் 2. பொறியியல்
- கணினி 4. விண்வெளி
அனைத்தும் | |
2, 3 | |
3, 4 | |
எதுவுமில்லை |
Question 130 |
சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ______ எனப்படும்.
எழுவாய் | |
பயனிலை | |
செயப்படுபொருள் | |
செய்வினை |
Question 131 |
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தை ______ என்கிறோம்.
எழுவாய் | |
பயனிலை | |
செயப்படுபொருள் | |
செய்வினை |
Question 132 |
" மீனா கனகாம்பரத்தை சூடினாள் " என்ற சொற்றொடரில் உள்ள பெயர்ச்சொல் எது?
மீனா | |
கனகாம்பரம் | |
சூடினாள் | |
சூடு |
Question 133 |
எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் _____ எனப்படும்.
எழுவாய் | |
பயனிலை | |
செயப்படுபொருள் | |
செய்வினை |
Question 134 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
ஒரு தொடரில் எழுவாயும் செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். | |
பயனிலை அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். | |
ஒரு தொடரில் செயப்படுபொருள் கட்டாயம் இருக்க வேண்டும். | |
செயப்படு பொருள் தோன்றும் தொடர் விளக்கமாக இருக்கும் |
Question 135 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
ஒரு தொடரில் எழுவாயும் செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். | |
பயனிலை அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். | |
ஒரு தொடரில் செயப்படுபொருள் கட்டாயம் இருக்க வேண்டும். | |
செயப்படு பொருள் தோன்றும் தொடர் விளக்கமாக இருக்கும் |
Question 136 |
" படித்தாய் “ என்ற தொடரில் மறைமுகமாக வரும் ' நீ ' என்பது எதைக் குறிக்கும் ?.
தோன்றா எழுவாய் | |
தோன்றா பயனிலை | |
தோன்றா செயப்படுபொருள் | |
தோன்றா செய்வினை |
Question 137 |
வினைமுற்று பயனிலையாக வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோன்றா பயனிலை | |
பெயர் பயனிலை | |
வினைப்பயனிலை | |
எழுவாய் பயனிலை |
Question 138 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் வினைப்பயனிலையை குறிக்கும் தொடர் எது?
சொன்னவள் கலா | |
விளையாடுபவன் யார்? | |
நான் வந்தேன் | |
மீனா கனகாம்பரத்தைச் சூடினாள் |
Question 138 Explanation:
(விளக்கம்: இதில் வினைமுற்று பயனிலையாக வந்துள்ளது)
Question 139 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் பெயர்பயனிலையை குறிக்கும் தொடர் எது?
சொன்னவள் கலா | |
விளையாடுபவன் யார்? | |
நான் வந்தேன் | |
மீனா கனகாம்பரத்தைச் சூடினாள் |
Question 139 Explanation:
(விளக்கம் : கலா என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது)
Question 140 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் வினாப்பயனிலையை குறிக்கும் தொடர் எது?
சொன்னவள் கலா | |
விளையாடுபவன் யார்? | |
நான் வந்தேன் | |
மீனா கனகாம்பரத்தைச் சூடினாள் |
Question 140 Explanation:
( விளக்கம் : யார் என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்துள்ளது)
Question 141 |
" பாடத்தை நான் படித்தேன் “ என்ற சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் ஆகியவை முறையே எவை?
பாடத்தை, நான், படித்தேன் | |
நான், பாடத்தை, படித்தேன் | |
நான், படித்தேன், பாடத்தை | |
படித்தேன், பாடத்தை, நான் |
Question 142 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் பெயரடையை குறிக்கும் தொடர் எது?
சொன்னவள் கலா | |
மகிழ்நன் மெல்ல வந்தான். | |
நான் வந்தேன் | |
அன்பரசன் நல்ல பையன் |
Question 143 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களுள் வினையடையை குறிக்கும் தொடர் எது?
சொன்னவள் கலா | |
மகிழ்நன் மெல்ல வந்தான் | |
நான் வந்தேன் | |
அன்பரசன் நல்ல பையன் |
Question 144 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
- பந்து உருண்டது – தன்வினை
- பந்தை உருட்டினான் - காரண வினை
- பந்தை உருட்டவைத்தான் – பிறவினை
2 , 3 | |
1, 2 | |
1, 3 | |
எதுவுமில்லை |
Question 144 Explanation:
(விளக்கம்:
பந்தை உருட்டினான் – பிறவினை
பந்தை உருட்டவைத்தான் – காரண வினை )
Question 145 |
வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது ____ எனப்படும் .
தன் வினை | |
பிறவினை | |
காரணவினை | |
செய்வினை |
Question 146 |
வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் ____ எனப்படும் .
தன் வினை | |
பிறவினை | |
காரணவினை | |
செய்வினை |
Question 147 |
எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல், வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது____ எனப்படும் .
தன் வினை | |
பிறவினை | |
காரணவினை | |
செய்வினை |
Question 148 |
காரண வினைகள் கீழ்க்கண்ட எந்த துணை வினைகளை இணைத்து உருவாக்கப்படுகின்றன.
- செய் 2. வை 3. வி 4. பி 5. பண்ணு
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 5 |
Question 149 |
‘ நடந்தான் ' என்ற தன்வினை தொடரின் காரணவினை என்ன?
நட | |
நடந்து | |
நடத்து | |
நடத்தச் செய்தார் |
Question 149 Explanation:
(விளக்கம்: எழுவாய் வினை நிகழ்வதற்குக் காரணமாக உள்ளது)
Question 150 |
'அடக்கு ‘ என்ற பிறவினை தொடரின் தன்வினை ______.
அடங்கு | |
அடக்கச் செய்தாள் | |
அடக்கி | |
அடக்கு |
Question 150 Explanation:
(விளக்கம் : வினையின் பயன் எழுவாயைச் சேர்கிறது)
Question 151 |
‘ திருத்தினான் ‘ என்பது எவ்வகை வினை
தன்வினை | |
பிறவினை | |
காரணவினை | |
செய்வினை |
Question 152 |
கீழ்க்கண்டவற்றுள் ‘ ஆடினான் ‘ என்பதன் காரணவினை என்ன?
- ஆட்டினான் 2. ஆட்டுவித்தான் 3. ஆடவைத்தான்
அனைத்தும் | |
1, 2 | |
2 , 3 | |
1,3 |
Question 152 Explanation:
( குறிப்பு : ஆட்டினான் - பிறவினை)
Question 153 |
கீழ்க்கண்டவற்றுள் ‘ மாறுவாள் ‘ என்பதன் காரணவினை என்ன?
- மாற்றுவாள் 2. மாற்றுவித்தாள் 3. மாறச்செய்தாள்
அனைத்தும் | |
1, 2 | |
2 , 3 | |
1,3 |
Question 153 Explanation:
(குறிப்பு : மாற்றுவாள் – பிறவினை)
Question 154 |
' காண் ' என்ற தன்வினையின் காரணவினை என்ன?
காட்டு | |
காட்ட | |
காட்டி | |
காட்டுவி |
Question 154 Explanation:
(விளக்கம்: எழுவாய் வினை நிகழ்வதற்குக் காரணமாக உள்ளது)
Question 155 |
' செய்யவைத்தான் ‘ என்ற காரண வினையினை பிறவினையாக மாற்றுக
செய் | |
செய்தான் | |
செய்வித்தான் | |
செய்த |
Question 156 |
' வரவைத்தார் ‘ என்பதனை தன் வினையாக மாற்றுக
வருவி | |
வருவித்தார் | |
வருவார் | |
வா |
Question 157 |
கீழ்க்கண்டவற்றுள் செயப்பாட்டு வினைகளை உருவாக்கும் துணை வினைகள் எவை?
- உண் 2. பெறு 3. ஆயிற்று 4. போயிற்று 5. போனது
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1 , 3, 4 |
Question 158 |
' கோவலன் கொலையுண்டான் ‘ இது எவ்வகை தொடர் ?
செய்வினைத் தொடர் | |
செயப்பாட்டு வினைத் தொடர் | |
தன்வினைத் தொடர் | |
பிறவினைத் தொடர் |
Question 159 |
‘ பாட்டுப் பாடுகிறாள் ‘ என்பது எவ்வகை தொடர்
செய்வினைத் தொடர் | |
செயப்பாட்டு வினைத் தொடர் | |
தன்வினைத் தொடர் | |
பிறவினைத் தொடர் |
Question 160 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை.
- செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 161 |
பொருத்துக.
- தொடர் வகைகள் (எ – கா)
- எழுவாய்த் தொடர் i) அண்ணனோடு வருவான்
- வினைமுற்றுத் தொடர் ii) வந்தான் மகன்
- வேற்றுமைத் தொடர் iii) மன்னன் வந்தான்
- விளித் தொடர் iv) பாம்பு பாம்பு
- அடுக்குத் தொடர் v) நண்பா கேள்
i ii iii iv v | |
ii iii v iv i | |
iii v ii i iv | |
iii ii i v iv |
Question 162 |
பொருத்துக
- தொடர் வகைகள் ( எ – கா )
- தெரிநிலை வினையெச்சத் தொடர் i) உண்ணச் சென்றான்
- குறிப்பு வினையெச்சத் தொடர் ii) நன்கு பேசினான்
- தெரிநிலைப் பெயரெச்சத் தொடர் iii) பாடும் குயில்
- குறிப்புப் பெயரெச்சத் தொடர் iv) இனிய காட்சி
i ii iii iv | |
ii iii iv i | |
iii ii i iv | |
iv iii ii i |
Question 163 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- அப்துல் நேற்று வந்தான் - தன்வினைத் தொடர்
- அப்துல் நேற்று வரவழைத்தான் – பிறவினைத் தொடர்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 164 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- கவிதா உரை படித்தாள் – செய்வினைத் தொடர்
- உரை கவிதாவால் படிக்கப்பட்டது – செயப்பாட்டு வினைத் தொடர்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 165 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- உரை கவிதாவால் படிக்கப்பட்டது – உடன்பாட்டு வினைத் தொடர்
- குமரன் மழையில் நனைந்தான் – செயல்பாட்டு வினைத் தொடர்
- குமரன் மழையில் நனையவில்லை - எதிர்மறை வினைத் தொடர்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 166 |
பொருத்துக.
- என் அண்ணன் நாளை வருவான் i) பெயர்ப் பயனிலைத் தொடர்
- எவ்வளவு உயரமான மரம் ii) கட்டளைத் தொடர்
- உள்ளே பேசிக் கொண்டிருப்பவர் யார்? iii) வினாத் தொடர்
- பூக்களைப் பறிக்காதீர் iv) உணர்ச்சித் தொடர்
- இது நாற்காலி v) செய்தித் தொடர்
i ii iii iv v | |
v iv iii ii i | |
iii v ii i iv | |
iii ii i v iv |
Question 167 |
“ பதவியை விட்டு நீக்கினான் “ - தன்வினைத் தொடராக மாற்றுக
பதவியை விட்டு நீங்கினான் | |
பதவியை விட்டு நீக்குவித்தான் | |
பதவியை விட்டு நீங்கினாலிலன் | |
பதவியை விட்டு நீக்கு |
Question 168 |
"மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்" - பிறவினைத் தொடராக மாற்றுக
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்ய வைத்தனர் | |
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர். | |
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்திலர். | |
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்யாமலில்லை. |
Question 169 |
" திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர்” - செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக.
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்தனர் | |
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பு செய்தனர் | |
திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டது. | |
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பு செய்திலர் |
Question 170 |
"நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் " - காரண வினைத் தொடராக மாற்றுக.
நிலவன் சிறந்த பள்ளியில் படித்திலன் | |
நிலவன் சிறந்த பள்ளியில் படிக்க செய்தார் | |
நிலவன் சிறந்த பள்ளியில் படி. | |
நிலவன் சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான் |
Question 171 |
"பாடினான் “ -எழுவாய்த் தொடராக மாற்றுக
அவன் பாடினான் | |
அவனா பாடினான் | |
பாடினான் அவன | |
நீ பாடு |
Question 172 |
பொருத்துக
- எண்கள் தமிழ் எண்கள்
- பன்னிரண்டு i) கஉ
- பதின்மூன்று ii) க௩
- நாற்பத்து மூன்று iii) ௪௩
- எழுபத்தெட்டு iv) எஅ
- தொண்ணூறு v) ௯o
i ii iii iv v | |
ii iii v iv i | |
iii v ii i iv | |
iii ii i v iv |
Question 173 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
உருபன் – Morpheme | |
ஒளியன் – Phoneme | |
ஒப்பிலக்கணம் – Comparative Grammer | |
பேரகராதி – Lexicon |
Question 173 Explanation:
( விளக்கம்: ஒலியன் – Phoneme)
Question 174 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு
நாவாய் | |
வங்கம் | |
தோணி | |
மானு |
Question 175 |
தமிழ் விடு தூது _____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
தொடர் நிலைச் செய்யுள் | |
புதுக்கவிதை | |
சிற்றிலக்கியம் | |
தனிப்பாடல் |
Question 176 |
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
- ___இனம் 2. வண்ணம் _____.
- _____ குணம் 4. வனப்பு ____
மூன்று , நூறு , பத்து, எட்டு | |
எட்டு, நூறு, பத்து, மூன்று | |
பத்து, நூறு, எட்டு, மூன்று | |
நூறு , பத்து , எட்டு , மூன்று |
Question 177 |
- " காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
- காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! “
- இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
முரண், எதுகை, இரட்டைத் தொடை | |
இயைபு, அளபெடை, செந்தொடை | |
எதுகை, மோனை, இயைபு | |
மோனை, முரண், அந்தாதி |
Question 178 |
" அழியா வனப்பு , ஒழியா வனப்பு , சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
வேற்றுமைத்தொகை | |
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
பண்புத்தொகை | |
வினைத் தொகை |
Question 179 |
- "ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
- கணவாய் வழிவரும் காற்ற!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கண்ணதாசன் | |
வைரமுத்து | |
வாலி | |
சுரதா |
Question 180 |
- " அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
- அகத்திலும் நீ குடியிறிருக்க வேண்டுவேனே!"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கண்ணதாசன் | |
வைரமுத்து | |
வாலி | |
ம. இலெ. தங்கப்பா |
Question 181 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – கால்டுவெல்
- மொழிப்பெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா
- தமிழ்நடைக் கையேடு - என்.சொக்கன்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1 , 3 சரி | |
1 மட்டும் சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 181 questions to complete.
64 th question ans is d
Pl check 30 que
question 64 ans 2004
இதை வாசிக்க வைத்துக் கேட்கலாம்
விருதுகள் வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.
Check Q) 2
***Must***
Questions 19 and 64 wrong answer
168 mark
Nityashree 27 @gamil com