Online TestTamil

9th Tamil Part 2 Online Test – New Book

9th Tamil Questions - Part 2

Congratulations - you have completed 9th Tamil Questions - Part 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்“ என்று பாடியவர் யார்?
A
கம்பர்
B
சீத்தலை சாத்தனார்
C
இளங்கோவடிகள்
D
ஒளவையார்
Question 2
உலக சுற்றுச்சூழல் நாள் ____.
A
ஜூன் 6
B
ஜூன் 5
C
ஜூலை 5
D
ஜூலை 6
Question 3
கூற்று : ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. காரணம் : சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
A
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்.
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் தவறு
D
கூற்று தவறு காரணம் சரி
Question 3 Explanation: 
காரணம் : இயற்கை வழங்கிய தண்ணீரின் இன்றியமையாமை குறித்து எல்லோரும் சிந்திக்கவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது).
Question 4
மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன “ என்று கூறியவர்
A
திருவள்ளுவர்
B
சமண முனிவர்கள்
C
ஒளவையார்
D
மாங்குடி மருதனார்
Question 5
ஏரியை கண்மாய் என்று அழைக்கும் நிலப்பகுதி எது ?
A
பாண்டி மண்டலம்
B
சோழ மண்டலம்
C
சேர மண்டலம்
D
தொண்டை மண்டலம்
Question 5 Explanation: 
குறிப்பு : கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்)
Question 6
மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.
A
கண்மாய்
B
உறைக்கிணறு
C
ஊருணி
D
குளம்
Question 7
மக்கள் பருகும் நீர் உள்ள நீர்நிலை ______ எனப்படும்
A
கண்மாய்
B
உறைக்கிணறு
C
ஊருணி
D
குளம்
Question 8
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. கல்லணையின் நீளம் 1060 அடி ஆகும்.
  2. கல்லணையின் அகலம் 40 முதல் 60 அடி.
  3. இதன் உயரம் 15 முதல் 28 அடி ஆகும்.
  4. தமிழகத்தின் விரிவான பாசனத் திட்டமாக கல்லணை உள்ளது.
A
அனைத்தும் சரி
B
2 , 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2,4 சரி
Question 8 Explanation: 
1. கல்லணையின் நீளம் 1080 அடி ஆகும். 2. இதன் உயரம் 15 முதல் 18 அடி ஆகும்.
Question 9
" உணவெனப்படுவது நிலத்தொடு நீரே " எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் ___
A
அகநானூறு
B
பரிபாடல்
C
புறப்பாட்டு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 10
நாட்டின் சிறந்த அரண்களுள் நீரே முதன்மையானது என்று கூறியவர்
A
ஒளவையார்
B
கம்பர்
C
மாங்குடி மருதனார்
D
திருவள்ளுவர்
Question 11
கல்லணையின் கட்டுமான உத்தியை கொண்டு கட்டப்பட்ட அணை எது?
A
தெளலீஸ்வரம் – கோதாவரி
B
கிராண்ட் அணைக்கட்டு
C
முல்லைப் பெரியாறு அணை
D
தெளலீஸ்வரம் – யமுனை
Question 12
"நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்றவர்
A
மாங்குடி மருதனார்
B
செந்நாப் போதார்
C
தொ. பரமசிவன்
D
முகிலன்
Question 13
தமிழ்நாடு எந்த வகையான மண்டலத்தில் அமைந்துள்ளது?
A
மிதவெப்பமண்டலம்
B
வெப்ப மண்டலம்
C
அயன மண்டலம்
D
குளிர் மண்டலம்
Question 14
"குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்று கூறியவர் யார்?
A
தொ.பரமசிவன்
B
மாங்குடி மருதனார்
C
ஒளவையார்
D
ஆண்டாள்
Question 15
தெய்வச் சிலைகளைக் குளிர்க்க வைப்பதை ___ என்று கூறுவர் .
A
நீராட்டு
B
கடலாடுதல்
C
திருமஞ்சனம் ஆடல்
D
திருமஞ்சன நீராட்டு
Question 16
தொ. பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
    1. குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
    2. குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
    3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறினார்.
A
2 மட்டும் சரி
B
2 , 4 சரி
C
1, 2, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 16 Explanation: 
(விளக்கம் : 1. குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருளல்ல. சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருள். 3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறியவர் ஆண்டாள்)
Question 17
இந்திய நீர்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
ஆர்தர் வெல்லெஸ்லி
B
கரிகாலன்
C
ஆர்தர் காட்டன்
D
டல்ஹௌசி
Question 18
காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்ட ஆண்டு
A
1829
B
1830
C
1928
D
1828
Question 19
கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு
A
1870
B
1829
C
1875
D
1873
Question 20
பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறியவர் யார்?
A
ஆர்தர் காட்டன்
B
டல்ஹௌசி
C
ஆர்தர் வெல்லெஸ்லி
D
கரிகாலன்
Question 21
சனி நீராடு என்பது யாருடைய வாக்கு
A
கணிமேதாவியர்
B
ஆண்டாள்
C
ஒளவையார்
D
கம்பர்
Question 22
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார் ?
A
ஜான் பென்னிகுவிக்
B
ஆர்தர் காட்டன்
C
கரிகாலன்
D
ஜார்ஜ் யுக்ளோபோப்
Question 23
முல்லைப் பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
  1. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
  2. திண்டுக்கல், தேனி, மதுரை
  3. சிவகங்கை, இராமநாதபுரம்
  4. சிவகங்கை, கன்னியாகுமரி
A
1 , 3
B
2 , 3
C
2 , 4
D
1,4
Question 24
சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
கண்மாய்
B
குண்டம்
C
கேணி
D
அருவி
Question 25
கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கட்டுக்கிணறு
B
உறைக்கிணறு
C
ஆழிக்கிணறு
D
பூட்டைக்கிணறு
Question 26
கூவல் என்பது ___
A
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
B
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
C
பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
D
அடியிலிருந்து நீர் ஊறுவது
Question 27
அடி நிலத்து நீர், நீர் மட்டத்திற்குக் கொப்புளித்து வரும் உற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
ஊற்று
B
குண்டு
C
குமிழி ஊற்று
D
இலஞ்சி
Question 28
கீழ்க்கண்டவற்றுள் வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம் எது?
A
குளம்
B
ஏரி
C
கேணி
D
கட்டுக்கிணறு
Question 29
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A
ஆழிக்கிணறு
B
அகழி
C
சிறை
D
புனர்குளம்
Question 30
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
A
அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது.
B
ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
C
குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
D
ஆறு -பெருகி ஓடும் நதி
Question 30 Explanation: 
(விளக்கம் : குண்டு - குளிப்பதற்கேற்ற சிறு குளம்)
Question 31
சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச் சுவர் கட்டிய கிணறு எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
கட்டுக் கிணறு
B
கேணி
C
சிறை
D
பூட்டைக் கிணறு
Question 32
நீர்வரத்து மடையின்றி மழை நீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
கட்டுக் கிணறு
B
புனர் குளம்
C
சிறை
D
பூட்டைக் கிணறு
Question 33
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
A
இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
B
ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது
C
கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங் கிணறு
D
சிறை – சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
Question 33 Explanation: 
(விளக்கம் : சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை)
Question 34
ஆர்தர் காட்டன் கல்லணைக்கு இட்டப்பெயர் _____
A
தௌலீஸ்வரம் அணைக்கட்
B
கிராண்ட் அணைக்கட்
C
பிக் அணைக்கட்
D
காட்டன் அணைக்கட்
Question 35
பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் நீர்நிலைகள் எவை?
A
ஆறு, குளம்
B
ஆறு, கிணறு
C
ஏரி, கிணறு
D
ஏரி, குளம்
Question 36
குமிழித் தூம்பு என்னும் அமைப்பு யாருடைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது .
A
சேரர் காலம்
B
பல்லவர்கள் காலம்
C
சோழர் காலம்
D
நாயக்கர்கள் காலம்
Question 37
  • கூற்று : நம் முன்னோர்கள் பல்வேறு வகையான நீர்நிலை வடிவங்களை உருவாக்கி நீரை பாதுகாத்தனர்-
  • காரணம் : நீரே மனித வாழ்வின் அடித்தளம் .
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று காரணம் இரண்டும் சரி , சரியான விளக்கமல்ல
C
கூற்று காரணம் இரண்டும் சரி , சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 38
பொருத்துக
  • குந்த      i) கவலை
  • கந்தம்    ii) மேல்
  • மிசை     iii) மணம்
  • விசனம் iv) உட்கார
A
i ii iii iv
B
ii iii i ii
C
iv iii ii i
D
iii ii iv i
Question 39
இலக்கணக் குறிப்புத் தருக .
  • வெந்து ,வெம்பி, எய்தி
A
பெயரெச்சங்கள்
B
வினை முற்றுகள்
C
வினையெச்சங்கள்
D
வினைத் தொகைகள்
Question 39 Explanation: 
(விளக்கம் : வினையெச்சம் என்பது ஒரு வினை முற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இச்சொற்கள் உ, இ என முடிவு பெறும்)
Question 40
இலக்கணக் குறிப்புத் தருக .
  • மூடுபனி, ஆடுகிளை
A
பெயரெச்சங்கள்
B
வினை முற்றுகள்
C
வினையெச்சங்கள்
D
வினைத் தொகைகள்
Question 40 Explanation: 
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் . )
Question 41
இலக்கணக் குறிப்புத் தருக – வெறுங்கனவு
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
2 ம் வேற்றுமைத் தொகை
D
7 ம் வேற்றுமைத் தொகை
Question 41 Explanation: 
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 42
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விரித்த
A
விரித்து + அ
B
விரித்து + அ
C
விரி + த்+த்+அ
D
விரி+த்+த
Question 43
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – குமைந்தனை
A
குமைந்து + அனை
B
குமை + த் + அனை
C
குமை + த் + அன் + ஐ
D
குமை + த்(ந்) + த் + அன் + ஐ
Question 44
" விரித்த >> விரி + த்+த்+அ " இதில் 'அ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
வினையெச்சவிகுதி
B
பெயரெச்சவிகுதி
C
ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
D
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
Question 44 Explanation: 
(விளக்கம் : அ, உம் ஆகியவை பெயரெச்ச விகுதிகள் ஆகும்)
Question 45
" குமைந்தனை >> குமை + த்(ந்) + த் + அன் + ஐ " இதில் 'ஐ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
D
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
Question 45 Explanation: 
(விளக்கம் : ஐ, ஆய் ஆகியவை முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகளாகும்)
Question 46
கவிஞர் தமிழ் ஒளி அவர்கள் வாழ்ந்த காலம்
A
1924-1956
B
1924-1965
C
1923- 1956
D
1923- 1965
Question 47
கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் எவை?
  1. நிலைபெற்ற சிலை 2. வீராயி 3. மாதவி காவியம் 4. தமிழர் சமுதாயம் 5 . கண்ணப்பன் கிளிகள்
A
அனைத்தும் சரி
B
1, 2, 5
C
1, 2, 3,5
D
1, 2, 4
Question 48
கவிஞர் தமிழ்ஒளி குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
  1. இவர் புதுவையில் பிறந்தவர்.
  2. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதியாரின் மாணவராகவும் விளங்கியவர்.
  3. மே தினமே வருக, குருவிப் பட்டி, கவிஞனின் காதல் முதலானவை இவரின் படைப்புகள் ஆகும்.
A
1 , 2
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
எதுவுமில்லை
Question 48 Explanation: 
( விளக்கம் : கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர். )
Question 49
  • "காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்
  • ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே! “
  • என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
வீராயி
B
மாதவி காவியம்
C
தமிழர் சமுதாயம்
D
தமிழ்ஒளியின் கவிதைகள்
Question 50
‘’ குந்த நிழல்தரக் கந்த மலர்தரக் கூரை விரித்த இலை! வெந்து கருகிட இந்த நிறம்வரவெம்பிக் குமைந்தனையோ ? “ என்னும் வரிகளை இயற்றியவர் யார் ?
A
சுரதா
B
தமிழ்ஒளி
C
பாரதிதாசன்
D
பாரதி
Question 51
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிப்பது எந்நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
பெரிய புராணம்
D
வளையாபதி
Question 52
சரியான இணையை தேர்ந்தெடு.
  1. மா – வண்டு
  2. மது – தேன்
  3. வாவி – பொய்கை
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1,3 சரி
Question 53
பொருத்துக.
  • வளர் முதல்    i) நெற்பயிர்
  • கழை               ii) கரும்பு
  • குழை              iii) சிறு கிளை
  • கா                             iv) சோலை
A
i ii iii iv
B
ii iii i ii
C
iv iii ii i
D
iii ii iv i
Question 54
பொருத்துக.
  • தரளம்    i) வரப்பு
  • பணிலம்          ii) சங்கு
  • வரம்பு    iii) முத்து
  • அரும்பு iv) மலர் மொட்டு
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
iii ii iv i
Question 55
பொருத்துக.
  • மாடு                i) பக்கம்
  • நெருங்குவளை         ii) நெருங்குகின்ற சங்குகள்
  • கோடு              iii) குளக்கரை
  • ஆடும்              iv) நீராடும்
  • துதைந்து எழும்         v) கலக்கி எழும்
A
i ii iii iv v
B
ii v iii i ii
C
iv iii v ii i
D
iii ii iv v i
Question 56
பொருத்துக.
  • மேதி               i) இளமையான வாளைமீன்
  • கன்னிவாளை ii) எருமை
  •  சுரிவளை                 iii) சங்கு
  • வேரி                iv) தேன்
  • சூடு                  v) நெல் அரிக்கட்டு
A
i ii iii iv v
B
ii v iii i ii
C
ii i iii iv v
D
iii ii iv v i
Question 57
பொருத்துக
  • பகடு                i) மலையுச்சி
  • பாண்டில்                   ii) எருமைக்கடா
  • சிமயம்            iii) வட்டம்
  • நரந்தம்            iv) நாரத்தை
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
ii iii i iv
Question 58
பொருத்துக.
  • நாளிகேரம்      i) தென்னை
  • கோளி             ii) அரசமரம்
  • சாலம்              iii) ஆச்சாமரம்
  • தமாலம்                    iv) பச்சிலை மரங்கள்
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
iii ii iv i
Question 59
பொருத்துக
  • இரும்போந்து   i) பருத்த பனைமரம்
  • சந்து                ii) சந்தன மரம்
  • நாகம்               iii) நாகமரம்
  • காஞ்சி             iv) ஆற்றுப்பூவரசு
A
i ii iii iv
B
iii ii i iv
C
iv iii ii i
D
iii ii iv i
Question 60
  • " காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக் கரும்பு
  • மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை “
  • இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன .
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
பெரிய புராணம்
D
வளையாபதி
Question 61
இலக்கணக் குறிப்புத் தருக .
  • கருங்குவளை , செந்நெல்
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
2 ம் வேற்றுமைத் தொகைகள்
D
7 ம் வேற்றுமைத் தொகைகள்
Question 61 Explanation: 
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 62
இலக்கணக் குறிப்புத் தருக – விரிமலர்
A
பெயரெச்சம்
B
வினை முற்று
C
வினையெச்சம்
D
வினைத் தொகை
Question 62 Explanation: 
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் . )
Question 63
இலக்கணக் குறிப்புத் தருக – தடவரை
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
2 ம் வேற்றுமைத் தொகை
D
உரிச்சொல்தொடர்
Question 63 Explanation: 
(விளக்கம் : ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட போன்ற சொற்கள் உரிச்சொற்களாக வரும்.)
Question 64
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக -பாய்வன
A
பாய்+வ் + அன
B
பாய்+வ் + அன் + அ
C
பாய்ந்து + அன்+அ
D
பாய்நது + அ
Question 65
"பாய்வன >>பாய் + வ்+ அன்+அ " இதில் 'அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
பலவின்பால் வினைமுற்று விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
D
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
Question 65 Explanation: 
(விளக்கம் : ‘ அ, ஆ ‘ ஆகியவை பலவின்பால் வினைமுற்று விகுதிகள்)
Question 66
திருத்தொண்டத் தொகை என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
சேக்கிழார்
B
சுந்தரர்
C
நம்பியாண்டார் நம்பி
D
நாவுக்கரசர்
Question 67
திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
சேக்கிழார்
B
சுந்தரர்
C
நம்பியாண்டார் நம்பி
D
நாவுக்கரசர்
Question 68
திருத்தொண்டர் புராணம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
சேக்கிழார்
B
சுந்தரர்
C
நம்பியாண்டார் நம்பி
D
நாவுக்கரசர்
Question 69
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. திருத்தொண்டத் தொகை  அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
  2. திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
  3. திருத்தொண்டர் புராணம் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 70
பெரிய புராணம் கீழ்க்கண்ட எந்த நூல்களை அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் இயற்றப்பட்டது 1 . திருத்தொண்டத் தொகை                       2 . திருத்தொண்டர் திருவந்தாதி
  1. திருத்தொண்டர் புராணம்
A
அனைத்தும்
B
1 , 2
C
2 , 3
D
1 , 3
Question 71
  • கூற்று : திருத்தொண்டர் புராணம், பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.
  • காரணம்: இந்நூலின்  பெருமை காரணமாக இது பெரியபுராணம் என அழைக்கப்படுகிறது.
A
கூற்று சரி காரணம் தவறு
B
கூற்று தவறு காரணம் இரண்டும் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி , சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 72
பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் எந்நூற்றாண்டை சார்ந்தவர்?
A
கி.பி 11
B
கி.பி 12
C
கி.மு 11
D
கி.மு 12
Question 73
சேக்கிழார் எந்த சோழ அரசரின் அவையில் முதலமைச்சராக இருந்தார்?
A
முதலாம் குலோத்துங்கன்
B
இரண்டாம் குலோத்துங்கன்
C
இராஜராஜ சோழன்
D
இராசேந்திர சோழன்
Question 74
"பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " என்று சேக்கிழாரை பாரட்டியவர் யார் ?
A
கம்பர்
B
பாரதியார்
C
மீனாட்சி சுந்தரனார்
D
திரு.வி.க
Question 75
  • "வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
  • கானலின் நீரோ? -வெறுங்காட்சி பிழைதானோ?"
  • என்று பாடியவர் யார் ?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
தமிழ்ஒளி
D
சுரதா
Question 76
“ உயிரை உருவாக்குபவர்கள் "  என நம் முன்னோர்கள் யாரை போற்றினர்?
A
இயற்கையை உருவாக்குபவர்கள்
B
பறவைகளை பாதுகாப்பவர்கள்
C
விலங்குகளை பாதுகாப்பவர்கள்
D
நீர் நிலைகளை உருவாக்குபவர்கள்
Question 77
  • " வான் உட்கும் வடிநீண் மதில்,
  • மல்லல் மூதூர் வய வேந்தே! "
  • இவ்வரிகள் யாரை குறிக்கின்றன?
A
குட புலவியனார்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
2ம் குலோத்துங்கன்
D
இராஜராஜசோழன்
Question 78
  • "நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! “
  • என்று கூறியவர் யார்?
A
குட புலவியனார்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
கபிலர்
D
திருமூலர்
Question 79
வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது ______ திணை .
A
பாடாண்
B
பொதுவியல்
C
கைக்கிளை
D
பெருந்திணை
Question 80
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது _____ துறை .
A
இயன் மொழித் துறை
B
பொதுவியல் துறை
C
பொருண்மொழிக் காஞ்சித் துறை
D
பாடாண் துறை
Question 81
சரியான பொருளை தேர்ந்தெடு
  • யாக்கை , புன்புலம்
A
நிலம் , புல்லிய நிலம்
B
உடம்பு , புல்லிய நிலம்
C
உடம்பு, உலகம்
D
உலகம், உடம்பு
Question 82
சரியான பொருளை தேர்ந்தெடு
  • புணரியோர் , தாட்கு
A
தந்தவர் , முயற்சி
B
உதவி , ஆளுமை
C
பெற்றவர், ஆளுமை
D
உதவி, முயற்சி
Question 82 Explanation: 
(குறிப்பு : தாட்சி – முயற்சி , ஆளுமை)
Question 83
இலக்கணக்குறிப்புத் தருக .
  • மூதூர், நல்லிசை, புன்புலம்
A
வினைத்தொகைகள்
B
பண்புத்தொகைகள்
C
2 ம் வேற்றுமைத் தொகைகள்
D
7 ம் வேற்றுமைத் தொகைகள்
Question 83 Explanation: 
(விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்)
Question 84
இலக்கணக்குறிப்புத் தருக – நிறுத்தல்
A
அல் ஈற்று வினைமுற்று
B
பண்புப் பெயர்
C
தொழிற்பெயர்
D
வினை முற்று
Question 84 Explanation: 
(விளக்கம்: செயல்பாட்டை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் . செயல், செய்கை, செய்தல், செயற்கை என்றெல்லாம் வருவன் தொழிற்பெயர் ஆகும்)
Question 85
இலக்கணக்குறிப்புத் தருக – அமையா
A
எதிர்மறை வினை வினை முற்று
B
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
C
தொழிற்பெயர்
D
வினைத்தொகை
Question 85 Explanation: 
(விளக்கம் : கடைசி எழுத்து இல்லாமல் அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் எதிர்மறையான பொருளில் வரும் வினைச்சொல் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்)
Question 86
இலக்கணக்குறிப்புத் தருக.
  • நீரும் நிலமும் , உடம்பும் உயிரும்
A
எண்ணும்மைகள்
B
உம்மைத் தொகைகள்
C
முறறும்மைகள்
D
உவமைத்தொகைகள்
Question 86 Explanation: 
(விளக்கம் : கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)
Question 87
இலக்கணக்குறிப்புத் தருக – அடுபோர்
A
பெயரெச்சம்
B
வினை முற்று
C
வினையெச்சம்
D
வினைத் தொகை
Question 87 Explanation: 
(விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் . )
Question 88
இலக்கணக்குறிப்புத் தருக – கொடுத்தோர்
A
வினைமுற்று
B
வினையெச்சம்
C
வினையாலணையும் பெயர்
D
வினைத்தொகை
Question 88 Explanation: 
(விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 89
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நிறுத்தல்
A
நிறுத்து + அல்
B
நிறு+த் + தல்
C
நிறு+த் + த் + அல்
D
நிறு + த்+த்+தல்
Question 90
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொடுத்தோர்
A
கொடுத்து + ஓர்
B
கொடு + த் + ஓர்
C
கொடு + த் + த் + ஓர்
D
கொடுத்த + ஓர்
Question 91
" நிறுத்தல் >>நிறு+த் + தல் “ இதில் 'தல்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
தொழிற் பெயர் விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
ஏவல் பன்மை வினைமுற்று விகுதி
D
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
Question 91 Explanation: 
(விளக்கம் : தொழிற் பெயர் விகுதிகள் - தல், அல் , அம், ஐ, கை )
Question 92
" கொடுத்தோர் >> கொடு + த் + த் + ஓர் " இதில் " ஓர் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஆண்பால் வினைமுற்று விகுதிகள்
B
பெண்பால் வினைமுற்று விகுதிகள்
C
ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள்
D
பலர்பால் வினைமுற்று விகுதிகள்
Question 92 Explanation: 
(விளக்கம் : பலர்பால் வினைமுற்று விகுதிகள் - ஓர், ஆர், அர், ப, மார் )
Question 93
தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூவமாக திகழ்வது எந்நூல்?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 94
எட்டுத்தொகை நூல் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது ?
  1. எட்டுத்தொகை நூல் பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்து கூறுகிறது.
  2. குறுநில மன்னர்கள், புலவர்கள் , சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளை பற்றி கூறுகிறது
  3. அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 95
  • " குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
  • உளம் தொட்டு உழுவயல் ஆக்கி – வளம்தொட்டுப்
  • பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்
  • ஏகும் சொர்க்கத்து இனிது "
  • என்று கூறும் நூல்
A
ஏலாதி
B
திரிகடுகம்
C
சிறுபஞ்சமூலம்
D
புறநானூறு
Question 96
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - புறம் 18
B
உண்பது நாழி உடுப்பவை இரண்டே - புறம் 189
C
யாதும் ஊரே யாவரும் கேளிர் - அகநானூறு 192
D
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே - புறம் 183
Question 96 Explanation: 
(விளக்கம்: யாதும் ஊரே யாவரும் கேளிர் - புறம் 192)
Question 97
  • "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
  • பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே "
  • என்று கூறும் நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 98
நாகலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார் ?
A
முடியரசன்
B
சிற்பி
C
கந்தர்வன்
D
தமிழ்ஒளி
Question 99
கவிஞர் கந்தர்வன் குறித்த கூற்றுகளுள் எது சரியானது?
  1. இவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர்.
  2. தமிழ்நாடு அரசின் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றியவர்.
  3. கவிதை , சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 100
கீழ்க்கண்டவற்றுள் கந்தர்வனின் படைப்புகள்  எது?
  • 1.சாசனம்                     2. ஒவ்வொரு கல்லாய்
  1. கொம்பன் 4. தண்ணீர்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 101
கீழ்க்கண்டவற்றுள் அமைப்பின் அடிப்படையில் வினைச்சொற்களின் வகைகள் எவை?
  • 1 . தனி வினை                                      2. கூட்டு வினை
  1. வினைமுற்று 4. வினையெச்சம்
A
1, 2
B
1 , 3
C
2 , 3
D
3, 4
Question 102
தனி வினையடிகளை அல்லது தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை ____ என்பர்.
A
தனி வினை
B
கூட்டு வினை
C
வினைமுற்று
D
வினையெச்சம்
Question 103
"படி, படியுங்கள், படிக்கிறார்கள் ஆகியவை எந்த வினை வகையை சேர்ந்தவை?
A
தனி வினை
B
கூட்டு வினை
C
வினைமுற்று
D
வினையெச்சம்
Question 103 Explanation: 
(விளக்கம் : படி என்னும் வினையடி பகாப்பதம் ஆகும். அதை மேலும் பொருள் தரக்கூடிய கூறுகளாக பிரிக்க முடியாது.)
Question 104
"ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்" போன்றவை எந்த வினை வகையை சேர்ந்தவை
A
தனி வினை
B
கூட்டு வினை
C
வினைமுற்று
D
வினையெச்சம்
Question 104 Explanation: 
(விளக்கம் : ஆசைப்படு , கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு ஆகிய வினையடிகள் பகுபதங்கள் ஆகும் )
Question 105
கீழ்க்கண்டவற்றுள் கூட்டு வினைகனின் மூன்று வகைகள் யாவை?
  1. பெயர் + வினை = வினை
  2. வினை + வினை = வினை
  3. இடை + வினை = வினை
  4. இடை + இடை = வினை
A
1, 2, 3
B
2, 3, 4
C
1 , 3, 4
D
1, 2,4
Question 106
"தந்தியடி, ஆணையிடு , கேள்விப்படு “ஆகியவை எவ்வகை கூட்டு வினைகள்
A
பெயர்+ வினை = வினை
B
வினை + வினை = வினை
C
இடை + வினை = வினை
D
இடை + இடை = வினை
Question 107
" கண்டுபிடி, சுட்டிக்காட்டு, சொல்லிக்கொடு” ஆகியவை எவ்வகை கூட்டு வினைகள்
A
பெயர்+ வினை = வினை
B
வினை + வினை = வினை
C
இடை + வினை = வினை
D
இடை + இடை = வினை
Question 108
" முன்னேறு, பின்பற்று, கீழிறங்கு “ஆகியவை எவ்வகை கூட்டு வினைகள்
A
பெயர்+ வினை = வினை
B
வினை + வினை = வினை
C
இடை + வினை = வினை
D
இடை + இடை = வினை
Question 109
ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை _____ எனப்படும்.
A
முதல் வினை
B
துணைவினை
C
தனிவினை
D
வினைமுற்று
Question 110
ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டு விட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை ____ எனப்படும்.
A
முதல் வினை
B
துணைவினை
C
தனிவினை
D
வினைமுற்று
Question 111
தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன ?
A
40
B
50
C
60
D
70
Question 112
கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது ?
A
கூட்டு வினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்சவடிவில் இருக்கும்.
B
துணைவினை , வினையடி வடிவில் இருக்கும்
C
துணைவினையே திணை , பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெறும்.
D
தமிழிலுள்ள துணைவினைகளில் பெரும்பாலானவை முதல் வினையாகவும் செயல்படுகின்றன.
Question 112 Explanation: 
(விளக்கம் : முதல்வினையே திணை , பால், இடம், காலம் காட்டும் விகுதிகளை பெறும்.)
Question 113
கீழ்க்கண்டவற்றுள் முதல் வினை மற்றும் துணைவினை ஆகிய இரு வகை வினைகளாகவும் செயல்படும் சொற்கள் எவை?
  1. பார்         2. இரு         3. வை        4. கொள்      5. போ
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1 , 3, 4
D
1,5
Question 114
கீழ்க்கண்ட துணைவினைகளின் பண்புகளை ஆராய்க.
  1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றை புலப்படுத்துகின்றன.
  2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப் பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
  3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 115
கீழ்க்கண்டவற்றுள் தற்கால தமிழில் உள்ள துணைவினை சொற்கள் எவை?
  1. தொலை          2. படு                    3. பார்          4. பொறு      5) இயலும்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
3, 4, 5
D
2, 3, 4
Question 116
" நான் மதுரைக்கு போயிருக்கிறேன்" என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
மதுரை
B
போ
C
இரு
D
நான்
Question 117
" அவன் வானொலியில் பாட்டு வைத்தான் " என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 118
"நோயாளியைப் பார்த்துக் கொள்கிறேன் “ என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 119
"நீ என்னை அழவைக்காதே" என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
வைக்காதே
B
வை
C
அழ
D
என்னை
Question 120
"நான் சொன்னதை நீ கருத்தில் கொள்ளவில்லை “என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 121
"நீ சொன்னால் அவன் கேட்டுக் கொள்வான்" என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
கேள்
B
கேட்டு
C
கொள்வான்
D
கொள்
Question 122
" மழைப் பெய்ய போகிறது " என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
பெய்ய
B
போ
C
போகிறது
D
மழை
Question 123
"அவன் எங்கே போகிறான்? “ என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 124
"அந்நியர் நம்மை ஆண்டு வந்தனர்” என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
வந்தனர்
B
வா
C
ஆண்டனர்
D
ஆண்ட
Question 125
"வானம் இருண்டு வருகிறது " என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 126
" அப்பா இனி வந்து விடுவார்” என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
வா
B
வந்து
C
விடு
D
விடுவார்
Question 127
"மழைவிட்டதும் போகலாம்" என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 128
" அவன் அனைத்தையும் வாசித்து தள்ளுகிறான்" என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
வாசி
B
வாசித்து
C
தள்ளு
D
தள்ளுகிறான்
Question 129
" அவர் கதை கதையாக எழுதி தள்ளுகிறார் " என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 130
" விழித்தவுடன் பாயைச் சுருட்டி போட வேண்டும்” என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
விழி
B
சுருட்டு
C
பாய்
D
போடு
Question 131
" புத்தகத்தைக் கீழே போடாதே" என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 132
"நான் அவருக்கு பணம் கொடுத்தேன்" என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 133
"பசித்தவனுக்கு சோறு வாங்கிக் கொடுத்தான் " என்ற துணைவினை தொடரில் ______ என்பது வினையடி .
A
வாங்கி
B
கொடு
C
பசி
D
சோறு
Question 134
“ பாடம் சொல்லிக் கொடுப்பேன் “என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 135
"தாய் குழந்தைக்கு நிலவைக் காட்டினாள் " என்ற தொடர் எவ்வகை வினையை சார்ந்தது?
A
முதல் வினை
B
துணைவினை
C
தனி வினை
D
வினையெச்சம்
Question 136
"சான்றோர் காட்டிய பாதையில் செல்" என்ற முதல் வினை தொடரில் ______ என்பது வினையடி .
A
செல்
B
காட்டு
C
பாதை
D
சான்றோர்
Question 137
கீழ்க்கண்ட எந்த மொழிகளில் துணைவினைகள் முதல்வினைகளுக்கு பின்பு இடம்பெறும்
  1. தமிழ்               2. சீனம்       3. பிரெஞ்சு            4. ஜப்பான்
A
1, 2
B
1 , 3
C
1,4
D
2 , 4
Question 138
" கீழே விழப் பார்த்தான் " என்னும் தொடரில் உள்ள துணைவினை எது?
A
விழ
B
பார்த்தான்
C
கீழே
D
பார்
Question 139
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது.
  2. தமிழில் துணைவினையாக வரும் வேர்ச்சொல் சில தொடர்களில் முதல் வினையாகவும் வரும்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 140
" மிசை " என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
A
கீழே
B
மேலே
C
இசை
D
வசை
Question 141
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
A
அகழி
B
ஆறு
C
இலஞ்சி
D
புலரி
Question 142
பொருத்தமான விடையைத் தேர்க.
  1. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
  2. நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
  3. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
A
1 , 3
B
2 , 3
C
2 , 3
D
1, 2, 3
Question 143
  • பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.
  • கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ____.
  • அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ____ .
A
வந்தான் , வருகிறான்
B
வந்துவிட்டான், வரவில்லை
C
வந்தான் , வருவான்
D
வருவான், வரமாட்டான்
Question 144
மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
A
மறுமை
B
பூவரசு மரம்
C
வளம்
D
பெரிய
Question 145
  • "வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்
  • கூடத்துச் சன்னலையும்
  • சமையலறைச் சன்னலையும்
  • விரிந்த கிளைகளால் பார்த்துக் கொண்டிருக்கிறது"
  • இவ்வரிகளை இயற்றியவர். யார் ?
A
தமிழ்ஒளி
B
நாகலிங்கம்
C
கவிமணி
D
யூமா வாசுகி
Question 146
பிழை உள்ள தொடரை கண்டறிக.
A
சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டு தான் தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்
B
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.
C
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழ பெருந்துணை புரிகின்றது.
D
சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.
Question 146 Explanation: 
(விளக்கம் : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.)
Question 147
  • " ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
  • ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
  • என்ற வரிகள் யாருடையது?
A
தமிழ்ஒளி
B
நாகலிங்கம்
C
கவிமணி
D
யூமா வாசுகி
Question 148
பொருத்துக.
  1. குமிழிக்கல்               i) Conical Stone
  2. நீர் மேலாண்மை                 ii) Water Management
  3. பாசனத்தொழில்நுட்பம்      iii) Irrigation Technology
  4. வெப்பமண்டலம்                iv) Tropical Zone
A
i ii iii iv
B
ii iii i iv
C
iv iii ii i
D
i iii ii iv
Question 149
சரியான இணையைத் தேர்ந்தெடு
  • அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  • வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு
  • மழைக்காலமும் குயிலோசையும் – வைரமுத்து
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1 , 3 சரி
D
2 , 3 சரி
Question 149 Explanation: 
(விளக்கம் : மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்)
Question 150
சரியான இணையைத் தேர்ந்தெடு
  1. தண்ணீர் தண்ணீர் – வைரமுத்து
  2. தண்ணீர் தேசம் – கோமல் சுவாமிநாதன்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு.
Question 150 Explanation: 
( விளக்கம் : தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் தண்ணீர் தேசம் – வைரமுத்து )
Question 151
கண்ணுக்குத் தெரியாமல் நாம் எத்தனை வகைகளில் நீரைப் பயன்படுத்துகிறோம்
A
2
B
3
C
4
D
5
Question 151 Explanation: 
(விளக்கம்: முதல் வகை : நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக . இரண்டாவது வகை : உண்ணும் உணவின் வழியாக )
Question 152
உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்ய செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது __ எனப்படும்.
A
புலப்படும் தண்ணீர்
B
புலப்படாத் தண்ணீர்
C
தண்ணீர் பஞ்சம்
D
தண்ணீர் சொற்பொழிவு
Question 153
பொருத்துக
  • உற்பத்திப் பொருள் (1 கிலோ)              தண்ணீரின் அளவு ( லிட்டர்)
  • ஆப்பிள்                               i) 822
  • சர்க்கரை                                       ii) 1780
  • அரிசி                                           iii) 2500
  • காப்பி கொட்டை                           iv) 18, 900
A
i ii iii iv
B
ii iii i iv
C
iv iii ii i
D
i iii ii iv
Question 154
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. நீர் வளத்தை பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர் வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும்.
  2. நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து தேவைக்கேற்ப இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு.
Question 155
"கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
தமிழ்ஒளி
B
நாகலிங்கம்
C
கவிமணி
D
மா.அமரேசன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 155 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!