Online TestTamil

8th Std Tamil Notes – Part 3

எட்டாம் வகுப்பு தமிழ் - மூன்றாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - மூன்றாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தினையளவு போதாச் சிறுபுல்நீர நீண்ட; பனையளவு காட்டும் படித்தால் மனையளகு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 2
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் ; வெள்ளைக் குறட்பா விரி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வள்ளை – நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு
B
அளகு – கோழி
C
நவ்வி - மான்
D
கேழல் - பறவை
Question 3 Explanation: 
குறிப்பு :-கேழல் - பன்றி
Question 4
------------------ என்பவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும், சங்க காலத்திற்குபின் வாழ்ந்தவரென்றும் குறிப்பிடுவர்
A
சீத்தலைச்சாத்தனார்
B
இளங்கோவடிகள்
C
கபிலர்
D
திருவள்ளுவர்
Question 5
திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் ஒன்று இயற்றப்பட்டது. இந்நூலில் ------------------- பாடல்கள் உள்ளன.
A
32
B
43
C
55
D
63
Question 6
திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் ஒன்று இயற்றப்பட்டது. இந்நூலை ---------------- புலவர்கள் பாடியுள்ளார்கள்.
A
23
B
33
C
43
D
53
Question 7
ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் ------------------.
A
ஐசக் நியூட்டன்
B
தாமசு ஆல்வா எடிசன்
C
கலீலியோ கலிலி
D
கிரகாம் பெல்
Question 8
நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாக காட்டும்" என்ற --------------- என்பவரின் சிந்தனை, அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகிறது.
A
சீத்தலைச்சாத்தனார்
B
இளங்கோவடிகள்
C
கபிலர்
D
திருவள்ளுவர்
Question 9
நிடத நாட்டு மன்னன் பெயர் -------------?
A
சுந்தர பாண்டியன்
B
இரும்பொறை
C
அலாவுதீன் கில்ஜி
D
நளன்
Question 10
விதர்ப்ப நாட்டு மன்னன் மகள் பெயர் -----------------?
A
காயசாண்டிகை
B
மணிமேகலை
C
தமயந்தி
D
கயல்விழி
Question 11
நிடத நாட்டு மன்னன் நளன், விதர்ப்ப நாட்டு மன்னன் மகள் தமயந்தி ஆகிய இருவரும் ------------ பறவையின் உதவியால் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து அன்பு கொள்கின்றனர்
A
புறா
B
கிளி
C
அன்னப் பறவை
D
மயில்
Question 12
விதர்ப்ப நாட்டு மன்னன் பெயர்?
A
சுந்தர பாண்டியன்
B
இரும்பொறை
C
வீமன்
D
நளன்
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஆழி – கடல்
B
வடிஅம்பு – வடிக்கப்பட்ட அம்பு
C
விசும்பு – வானம்
D
செற்றான் – இறந்தான்
Question 13 Explanation: 
குறிப்பு :- செற்றான் – வென்றான்
Question 14
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
அரவு – முதலை
B
பிள்ளைக் குருகு – நாரைக்குஞ்சு
C
வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
D
கடா – எருமை
Question 14 Explanation: 
குறிப்பு :- அரவு – பாம்பு
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வெளவி – கவ்வி
B
சங்கின் பிள்ளை – சங்குக் குஞ்சுகள்
C
கொடி – பவளக்கொடி
D
கோடு – வீடு
Question 15 Explanation: 
குறிப்பு :- கோடு – கொம்பு
Question 16
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கழி – உப்பங்கழி
B
திரை – அலை
C
மேதி – பசு
D
கள் – தேன்
Question 16 Explanation: 
குறிப்பு :- மேதி – எருமை
Question 17
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
புள் – அன்னம்
B
சேடி – எதிரி
C
ஈரிருவர் – நால்வர்
D
ஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்
Question 18
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கடிமாலை – மணமாலை
B
சூழ்வவிதி – நல்வினை
C
தார் – காடு
D
செம்மை சேர் – புகழ்மிகு
Question 18 Explanation: 
குறிப்பு :- தார் – மாலை
Question 19
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
காசினி – நீர்
B
நன்னுதல் – அழகிய நெற்றி
C
வெள்கி – நாணி
D
களிகூர – மகிழ்ச்சி பொங்க
Question 19 Explanation: 
குறிப்பு :- காசினி – நிலம்
Question 20
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வயவேந்து – வெற்றி வேந்தன் (நளன்)
B
ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை
C
மல்லல் – சீர்குறைந்த
D
மறுகு – அரசவீதி
Question 20 Explanation: 
குறிப்பு :- மல்லல் – வளம்
Question 21
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
மடநாகு – இளைய பசு
B
மழவிடை – இளங்காளை
C
செம்மாந்து – பெருமிதத்துடன்
D
நவ்வி - பசு
Question 21 Explanation: 
குறிப்பு :- நவ்வி – மான்
Question 22
ஆழிவடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால்; ஏழிசைநூற் சங்கத் (து) இருந்தானும் – நீள்விசும்பின்; நல்தேவர் தூது நடந்தானும் பாரதப்போர்; செற்றானும் கண்டாய் இச்சேய் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 23
தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ; அரவின் பசுந்தலை என் றஞ்சி  - இரவெல்லாம் பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும் ; வள்ளைக் குருநாடர் மன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 24
வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த ; பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணாது ; அருங்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும் ; இருங்கடா யானை இவன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 25
கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக் கோடிடறித்; தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் – வான்கடல்வந்; அந்தோ வெனவெடுக்கு அங்கநாடு ஆளுடையான்;செந்தேன் மொழியாயிச் சேய் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 26
வெள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்; கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு; வண்டு இரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர் கோன்; தண் தெரியல் தேர்வேந்தன் தான் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 27
காவலரைத் தன் சேடி காட்டக்கண்டு ஈரிருவர் ; தேவர் நளன் உருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த; மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணாநின்; றூசலா டுற்றாள் உள்ளம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 28
மின்னும்தார் வீமன்தன் மெய்மரபில் செம்மைசேர்; கன்னியான் ஆகில் கடிமாலை - அன்னம் தான்; சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்; மன்னவனைத் தன்மனத்தே  வைத்து - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 29
கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்; வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி; நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்; அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 30
திண்தோள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்; வெண்தா மரையாய் வெளுத்தவே - ஒண்தாரைக்; கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்; பூமாலை பெற்றிருந்த போது - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 31
மல்லல் மறுகில் மடநாகு உடனாகச்; செல்லும் மழவிடைபோல் செம்மாந்து - மெல்லியலாள்; பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்; நன்மாலை வேலான் நளன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Question 32
நளவெண்பா நூலின் ஆசிரியர் பெயர் என்ன?
A
கபிலர்
B
கம்பர்
C
ஒட்டக்கூத்தர்
D
புகழேந்திப் புலவர்
Question 33
கீழ்கண்டவர்களுள் வரகுண பாண்டியனின் அவைப் புலவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
ஒட்டக்கூத்தர்
D
புகழேந்திப் புலவர்
Question 34
கீழ்கண்டவர்களுள் சந்திரன் சுவர்க்கி என்ற வள்ளலால் ஆதரிக்கப்பெற்றவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
ஒட்டக்கூத்தர்
D
புகழேந்திப் புலவர்
Question 35
நளவெண்பா நூலின் ஆசிரியர் புகழேந்திப் புலவர் அவர்கள் பிறந்த ஊர்?
A
மதுரை
B
திண்டுக்கல்
C
தூத்துக்குடி
D
தொண்டைநாட்டின் பொன்விளைந்த களத்தூர்
Question 36
நளவெண்பா நூலின் ஆசிரியர் புகழேந்திப் புலவர் அவர்களின் காலம்?
A
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
B
கி.பி. பத்தாம் நூற்றாண்டு
C
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு
D
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Question 37
நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும். இந்நூல் ------------- காண்டங்களை உடையது.
A
2
B
3
C
4
D
5
Question 37 Explanation: 
குறிப்பு :- [(1)சுயம்வர காண்டம்; (2)கலித்தொடர் காண்டம்; (3)கலிநீங்கு காண்டம் ]
Question 38
நளவெண்பா நூலில் --------------- வெண்பாக்கள் உள்ளன.
A
63
B
96
C
108
D
431
Question 39
பாரிசு நகரைச் சார்ந்த ------------------ என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார்
A
ஜான் பெஸ்கி
B
ஜஸ்டின் ட்ரூடோ
C
காரல் மார்க்ஸ்
D
பிளேஸ் பாஸ்கல்
Question 40
----------------- இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார்.
A
கி.பி 1823
B
கி.பி 1833
C
கி.பி 1843
D
கி.பி 1853
Question 41
கணினியின் தந்தை - என அழைக்கப்படுபவர் யார்?
A
ஜான் பெஸ்கி
B
சார்லஸ் பாப்பேஜ்
C
காரல் மார்க்ஸ்
D
பிளேஸ் பாஸ்கல்
Question 42
ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் -------------  என்பவர், கணிதச் செயல்பாட்டுக்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், "முதல் செயல்திட்ட வரைவாளர்" எனப்  போற்றப்படுகிறார். 
A
ஏஞ்சலினா
B
விக்ட்டோரியா
C
லேடி லவ்லேஸ்
D
இவர்களில் யாருமில்லை
Question 43
மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் --------------------- என்பாரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறிய தூண்டியது. இதற்கு “ஹார்வார்டு மார்க்- 1 “எனப் பெயரிட்டனர்.
A
ஜான் பாஸ்டல்
B
பிம்பெர்னர் லீ
C
ஹோவார்டு ஜக்கன்
D
இவர்களில் யாருமில்லை
Question 44
இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ------------------ என்னும் அமெரிக்கராவார்.
A
ஜான் பாஸ்டல்
B
பிம்பெர்னர் லீ
C
ஹோவார்டு ஜக்கன்
D
இவர்களில் யாருமில்லை
Question 45
----------------- ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர்.
A
1950
B
1960
C
1970
D
1980
Question 45 Explanation: 
குறிப்பு :- 1960 ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச்செலவை ஏற்படுத்தியது. இதற்கு மாற்றாக, ஒரு கட்டடத்துக்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைகோள் வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின் மீது வலம்வரும் விண்வெளிக்கலன்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது. இணையத்துக்குத் தேவையானவை :- இணையதளச் சேவையைப் பயன்படுத்த தேவையான பொருள்களாவன, 1. கணினி; 2. தொலைபேசி; 3. இணையச்சேவை வழங்குநர்; 4. மாற்றி; 5. தொடர்பு மென்பொருள். இவற்றைக் கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம்.
Question 46
சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த ------------------ என்னும் இயற்பியல் வல்லுநர் 1989 ஆம் ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைபின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். இவ்வலையமைப்பு பல செய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது.
A
ஜான் பாஸ்டல்
B
பிம்பெர்னர் லீ
C
ஹோவார்டு ஜக்கன்
D
இவர்களில் யாருமில்லை
Question 47
வையக விரிவு வலை செயல்படுவதனைக் கொண்டு இணைய இணைப்பு -------------- வகைகள் உள்ளன.
A
2
B
3
C
4
D
5
Question 47 Explanation: 
குறிப்பு :- அவை, 1. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு; 2. கம்பி வட மாற்றி; 3. செயற்கைக்கோள் சேவை; 4. கண்ணறைச் சேவை.
Question 48
----------------- என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
A
தமிழன்டா
B
தமிழச்சி
C
தமிழம்
D
தமிழ் ஈழம்
Question 49
கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன் என்பது கணினி வல்லுநர் ------------------- அவர்களின் கூற்று ஆகும்.
A
பில்கேட்ஸ்
B
லாரி பேஜ்
C
சுந்தர் பிச்சை
D
திம் குக்
Question 50
ஆவணம்" என்னும் துணைப்பாடக் கதைப்பகுதியின் ஆசிரியர் யார்?
A
ந.பழநியப்பன், மரியாதை ராமன் கதைகள்
B
சுஜாதா
C
புதமைப் பித்தன்
D
கல்கி
Question 51
நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு "வழக்கு" என்று பெயர். இஃது --------------- வகைப்படும்
A
1
B
2
C
3
D
4
Question 51 Explanation: 
குறிப்பு:- இஃது இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருவகைப்படும்.
Question 52
ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
A
1
B
2
C
3
D
4
Question 53
தகுதியான சொற்களைப் பேசுவது தகுதி வழக்கு  என்பர். இஃது -------------- வகைப்படும்.
A
1
B
2
C
3
D
4
Question 53 Explanation: 
குறிப்பு :- தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை:- 1.இடக்கரடக்கல், 2.மங்கலம், 3.குழூஉக்குறி 1.இடக்கரடக்கல்:- பலர் முன்னே கூறுவதற்கு இடர்ப்பாடகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால், அப்பொருளைத் தெரிவிப்பது இடக்கரடக்கல் என்பர். சான்றாக, 'வாய் கழுவி வந்தேன்' என்னும் இத்தொடரை நீக்கி, 'வாய் பூசி வந்தேன்' எனக் கூறுவர். 2.மங்கலம்:- அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது 'மங்கலம்' என்பர். சான்றாக, இறந்தாரை இறைவனடி சேர்ந்தார் எனக் கூறுவர். 3.குழூஉக்குறி :- ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில், ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயரைக் குழூஉக்குறி என்பர். சான்றாகப் பொற்கொல்லர் பொன்னைப் 'பறி' என்பர்.
Question 54
வங்காள மொழியில் பக்கிம் என்றால் ----------- என்பது பொருள்.
A
அழகுமிக்க
B
செல்வமிக்க
C
வளைந்த
D
நிமிர்ந்த
Question 55
"ஆனந்த மடம்" - நூலின் ஆசிரியர் யார்?
A
விவேகானந்தர்
B
இராமகிருசுணர்
C
பக்கிம் சந்திரர்
D
இவர்களில் யாருமில்லை
Question 56
கிளையினிற் பாம்பு தொங்க; விழுதென்று குரங்கு தொட்டு; விளக்கினைத் தொட்ட பிள்ளை; வெடுக்கெனக் குதித்த தைப்போல்; - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார் (ஞான ரதம்)
B
பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)
C
வாணிதாசன் (கொடி முல்லை)
D
இவற்றில் ஏதுமில்லை
Question 57
கிளைதொறும் குதித்துத் தாவி; கீழுள்ள விழுதை எல்லாம்; ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி; உச்சிபோய்த் தன்வால் பார்க்கும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார் (ஞான ரதம்)
B
பாரதிதாசன் (அழகின் சிரிப்பு)
C
வாணிதாசன் (கொடி முல்லை)
D
இவற்றில் ஏதுமில்லை
Question 58
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்; கண் அகல் ஞாலம் களிகூர - மண் அரசர் ; வன் மாலை தன் மனத்தே சூட வய வேந்தைப்; பொன்மாலை சூட்டினாள் பொன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருவள்ளுவமாலை, கபிலர்
B
நளவெண்பா, புகழேந்திப் புலவர்
C
புறநானூறு, கண்ணகனார்
D
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 58 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!