Online TestTamil
10th Std Tamil Notes Part 9 Online Test
10 ஆம் வகுப்பு - ஒன்பதாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)
Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - ஒன்பதாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை; பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்; அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலித்தொகை, நல்லந்துவனார் |
Question 2 |
அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்; செறிவெனப் படுவது கூறியது மறாஅமை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலித்தொகை, நல்லந்துவனார் |
Question 3 |
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை; முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்; பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலித்தொகை, நல்லந்துவனார் |
Question 4 |
இல்வாழ்வென்பது ---------------------?
வருந்தி வந்தோர்க்கு உதவுதல் | |
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் | |
சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல் | |
சுற்றம் தழுவி வாழ்தல் |
Question 5 |
பாதுகாப்பதென்பது ---------------------?
வருந்தி வந்தோர்க்கு உதவுதல் | |
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் | |
சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல் | |
சுற்றம் தழுவி வாழ்தல் |
Question 6 |
பண்பெனப்படுவது ------------------------?
வருந்தி வந்தோர்க்கு உதவுதல் | |
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் | |
சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல் | |
சுற்றம் தழுவி வாழ்தல் |
Question 7 |
அன்பெனப்படுவது ---------------------?
வருந்தி வந்தோர்க்கு உதவுதல் | |
அன்புடையோரைப் பிரியாது வாழ்தல் | |
சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல் | |
சுற்றம் தழுவி வாழ்தல் |
Question 8 |
அறிவெனப்படுவது -----------------------?
அறிவிலார் சொல் பொறுத்தல் | |
கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல் | |
பிறர் அறியாது மறைபொருள் காத்தல் | |
ஒருபால் கோடாது ஒறுத்தல் |
Question 9 |
நெருக்கம் எனப்படுவது --------------------?
அறிவிலார் சொல் பொறுத்தல் | |
கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல் | |
பிறர் அறியாது மறைபொருள் காத்தல் | |
ஒருபால் கோடாது ஒறுத்தல் |
Question 10 |
நிறைவு எனப்படுவது ----------------------?
அறிவிலார் சொல் பொறுத்தல் | |
கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல் | |
பிறர் அறியாது மறைபொருள் காத்தல் | |
ஒருபால் கோடாது ஒறுத்தல் |
Question 11 |
நீதிமுறைமை எனப்படுவது -------------------?
அறிவிலார் சொல் பொறுத்தல் | |
கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல் | |
பிறர் அறியாது மறைபொருள் காத்தல் | |
ஒருபால் கோடாது ஒறுத்தல் |
Question 12 |
பொறுமை எனப்படுவது --------------------?
அறிவிலார் சொல் பொறுத்தல் | |
இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளல் | |
பிறர் அறியாது மறைபொருள் காத்தல் | |
ஒருபால் கோடாது ஒறுத்தல் |
Question 13 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
கேழல் - பன்றி | |
நவ்வி - புலி | |
கிளை – சுற்றம் | |
நோன்றல் – பொறுத்தல் |
Question 13 Explanation:
குறிப்பு :- நவ்வி - மான்
Question 14 |
ஒழுகுதல், நோன்றல், பொறுத்தல் - இலக்கணக்குறிப்பு தருக.
வினைத்தொகை | |
பண்புப்பெயர் | |
பெயரெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 15 |
நல்லந்துவனார் சங்க காலத்தவர். இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இவர், நெய்தல் கலியில் ---------------------- பாடல்களைப் பாடியுள்ளார். கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.
13 | |
23 | |
33 | |
43 |
Question 16 |
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது. இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது. இசையோடு பாடுவதற்கேற்றது. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து ------------------ பாடல்கள் உள்ளன.
123 | |
143 | |
150 | |
180 |
Question 17 |
கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது. கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது. நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி, நெய்தற்கலியாகும். இதனை இயற்றியவர் --------------------.
கண்ணகனார் | |
ஒளவையார் | |
நல்லந்துவனார் | |
மாணிக்கவாசகர் |
Question 18 |
“கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனச் சிறப்பித்துக் கூறப்படும் நூல்?
நற்றிணை | |
கலித்தொகை | |
பரிபாடல் | |
புறநானூறு |
Question 19 |
நெய்தல் கலியைப் பாடியவர்?
ஓரம்போகியார் | |
கபிலர் | |
பேயனார் | |
நல்லந்துவனார் |
Question 20 |
கலித்தொகை -------------- நூல்களில் ஒன்று
பத்துப்பாட்டு | |
எட்டுத்தொகை | |
பதினெண்கீழ்க்கணக்கு | |
ஐம்பெருங்காப்பியம் |
Question 21 |
'போற்றாரைப் பொறுத்தல்' என்பது --------------?
குறை | |
பொறை | |
முறை | |
நிறை |
Question 22 |
பொருந்தாதது எது?
பண்பு - பாடுஅறிந்து ஒழுகுதல் | |
அன்பு - தன்கிளை செறாஅமை | |
அறிவு - பேதையார் சொல்நோன்றல் | |
செறிவு - கண்ணோடாது உயிர்வெளவல் |
Question 22 Explanation:
குறிப்பு :- செறிவு - கூறியது மறாஅமை
Question 23 |
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெற் கதிர்தொரு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
நந்திக்கலம்பகம், ஆசிரியர் பெயர் தெரியவில்லை | |
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் |
Question 24 |
நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையினை யுடைநந்தி மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
நந்திக்கலம்பகம், ஆசிரியர் பெயர் தெரியவில்லை | |
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் |
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
புயல் – மேகம் | |
பணை – இலை | |
பகரா – கொடுத்து | |
பொருது – மோதி |
Question 25 Explanation:
குறிப்பு :- பணை – மூங்கில்
Question 26 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
நிதி – செல்வம் | |
புனல் – காற்று | |
கவிகை – குடை | |
வானகம் – தேவருலகம் |
Question 26 Explanation:
குறிப்பு :- புனல் – நீர்
Question 27 |
பொழிதருமணி, பணைதருபருமணி, வருபுனல், நிதிதருகவிகை - இலக்கணக்குறிப்பு தருக.
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
தொழிற்பெயர் |
Question 28 |
இவை இவை - இலக்கணக்குறிப்பு தருக.
வினைத்தொகை | |
அடுக்குத்தொடர் | |
இரட்டைக்கிளவி | |
தொழிற்பெயர் |
Question 29 |
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெற் கதிர்தொரு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா - இப்பாடல் எந்த திணையைச் சார்ந்தது?
நொச்சித் திணை | |
தும்பைத் திணை | |
வாகைத் திணை | |
பாடாண் திணை |
Question 30 |
நிதிதரு கவிகையும் நிலமகள் உரிமையும் இவையினை யுடைநந்தி மதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர் வானகம் ஆள்வாரே - இப்பாடல் எந்த திணையைச் சார்ந்தது?
நொச்சித் திணை | |
தும்பைத் திணை | |
வாகைத் திணை | |
பாடாண் திணை |
Question 31 |
நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது. பல்லவ மன்னன் ----------------- நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திகலம்பகம் எனப் பெயர் பெற்றது.
முதலாம் | |
இரண்டாம் | |
மூன்றாம் | |
நான்காம் |
Question 32 |
நந்திகலம்பகம் - நூலின் காலம்?
கி.பி. ஆறாம் நூற்றாண்டு | |
கி.பி. ஏழாம் நூற்றாண்டு | |
கி.பி. எட்டாம் நூற்றாண்டு | |
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு |
Question 33 |
கலம்பக நூல்களில் ----------------- நூலே, முதல் நூல் என்பர்.
நந்திக் கலம்பகம் | |
காசிக் கலம்பகம் | |
திருவரங்கக் கலம்பகம் | |
மதுரைக் கலம்பகம் |
Question 34 |
கலம்பகம் என்பது ---------------- வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
66 | |
76 | |
86 | |
96 |
Question 35 |
பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் -------------------- எனப்படும்.
கலம்பகம் | |
தூது | |
குறவஞ்சி | |
பள்ளு |
Question 36 |
கலம் + பகம் = கலம்பகம். கலம் – ----------------. பகம் – ---------------. பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்) கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
பன்னிரண்டு, ஆறு | |
ஆறு, பன்னிரண்டு | |
பத்து, எட்டு | |
எட்டு, பத்து |
Question 37 |
பணை என்னும் சொல்லின் பொருள்?
அரசு | |
ஆல் | |
மூங்கில் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 38 |
மீன்நோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், குலசேகர ஆழ்வார் |
Question 39 |
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
புறநானூறு, கண்ணகனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், குலசேகர ஆழ்வார் |
Question 40 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மீன்நோக்கும் – மீன்கள் வாழும் | |
என்பால் – அவரிடம் | |
தார்வேந்தன் – மாலையணிந்த அரசன் | |
கோல்நோக்கி – செங்கோல் செய்யும் அரசனை நோக்கி |
Question 40 Explanation:
குறிப்பு :- என்பால் – என்னிடம்
Question 41 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
நோக்காய் – முன்னிலை ஒருமை வினைமுற்று | |
கோல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை. | |
தார்வேந்தன் (தாரை அணிந்த அரசன்) – இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்கதொகை.
| |
வாழும்குடி – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் |
Question 41 Explanation:
குறிப்பு :- வாழும்குடி – பெயரெச்சம்
Question 42 |
குலசேகர ஆழ்வார், ------------------------ மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு | |
கேரளா | |
குஜராத் | |
கருநாடகம் |
Question 43 |
குலசேகர ஆழ்வார், --------------------- பக்தி மிகுதியாக வாய்க்கப்பெற்ற காரணத்தால், இவர், குலசேகரப் பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார்.
ராமபிரானிடம் | |
சிவனிடம் | |
பிரம்மனிடம் | |
காளியிடம் |
Question 44 |
குலசேகர ஆழ்வார், ---------------------- ஆழ்வார்களுள் ஒருவர்.
12 | |
63 | |
75 | |
96 |
Question 45 |
--------------------- என்பவர், அருளிய பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று.
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் | |
குலசேகர ஆழ்வார் | |
அடியார்க்கு நல்லார் |
Question 46 |
குலசேகர ஆழ்வார், அருளிய பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஒன்று. இதில் -------------------- பாசுரங்கள் உள்ளன.
100 | |
105 | |
110 | |
115 |
Question 47 |
இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர். இவர் தமிழில் பெருமாள் திருமொழியையும், வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலையும் இயற்றியுள்ளார். இவர், திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால், அதற்குக் இவர் பெயரில் அமைந்த வீதி எனும் பெயர் இன்றும் வழுங்கி வருகிறது. - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் | |
குலசேகர ஆழ்வார் | |
அடியார்க்கு நல்லார் |
Question 48 |
குலசேகர ஆழ்வார் அவர்களின் காலம் ----------------------------.
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு | |
கி.பி பத்தாம் நூற்றாண்டு | |
கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு | |
கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு |
Question 49 |
தமிழகத்தின் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று வைணவம். வைணவம் திருமாலை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு போற்றும், பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளிய தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல் ----------------------. நம் பாடப்பகுதி குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழியின் முதலாயிரத்தில் உள்ளது.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் | |
திருவாசிரியம் | |
நாச்சியார் திருமொழி | |
திருப்பாவை |
Question 50 |
குலசேகர ஆழ்வார் பாடல் ------------------- தொகுப்பில் உள்ளது.
திருவியற்பா | |
முதலாயிரம் | |
பெரிய திருமொழி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 51 |
'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
பெரியபுராணம் | |
திருவருட்பா |
Question 52 |
சமரச சுத்த சன்மார்க்கப்பாதை அமைத்தவர்?
சேக்கிழார் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
ஒளவையார் | |
அயோத்திதாசப் பண்டிதர் |
Question 53 |
------------------- ஆம் நூற்றாண்டைத் தமிழரின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்
18 | |
19 | |
20 | |
21 |
Question 54 |
--------------------- மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பிறந்தார்.
கடலூர் | |
திருச்சி | |
திருவாரூர் | |
தஞ்சாவூர் |
Question 55 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பிறந்த ஆண்டு?
05.10.1823 | |
15.10.1823 | |
05.10.1833 | |
05.01.1823 |
Question 56 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் அவர்களின் பெற்றோர் பெயர்?
முத்தையா - விசாலட்சுமி | |
மருதநாயகம் - ராஜம்மாள் | |
இராமையா – சின்னம்மை | |
வெங்கட்ராமன் - அம்மணியம்மாள் |
Question 57 |
இராமையா – சின்னம்மை இணையர்க்கு ---------------- மகவாக வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பிறந்தார்.
இரண்டாவது | |
மூன்றாவது | |
நான்காவது | |
ஐந்தாவது |
Question 58 |
தில்லையில் இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்து சிரித்ததைக் கண்ட ஆலய அந்தணர். இக்குழந்தை இறையருள் பெற்ற திருக்குழந்தை என்று பாராட்டினார். அந்த 'இறையருள் பெற்ற திருக்குழந்தை' யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 59 |
'அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த' என்று இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 60 |
இராமலிங்கர் பிறந்த ஆறாவது திங்களில் தந்தையார் மறைந்தார். குடும்பத்தினர் -------------------- நகருக்கு குடிபெயர்ந்தனர்.
மதுரை | |
திருச்சி | |
சென்னை | |
சேலம் |
Question 61 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் அவர்களுக்கு 5 வயது ஆன உடன், கல்வி கற்க அவரைத் தம் ஆசிரியர் ----------------- அவர்களிடம், அண்ணன் அனுப்பி வைத்தார். வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் அவர்களுக்கு படிப்பில் நாட்டமில்லாமல் இருந்தாலும் 9 வயதிலே பாடல் புனையும் திறன் பெற்றிருந்தார்.
இராமன் | |
சபாபதி | |
சுடர்மதி | |
ராஜன் |
Question 62 |
திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த திகம்பர சாமியார், அவ்வழிச் செல்லும் மனிதர்களைக் கண்டு, "அதோ மாடு போகிறது; அதோ ஆடு போகிறது, நாய், நரி போகிறது என்று, அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப ஏற்ப விலங்குகளின் பெயர்களால் கூறுவார். ஆனால், ------------------- அவ்வழியே சென்ற போது 'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்' என்று கூறினார்.
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 63 |
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
தருமமிகு சென்னையிலுள்ள கந்தகோட்டத்து இறைவனை இவர் வணங்கி மனமுருகப் பாடி மகிழ்வார். இப்பாடல்களின் தொகுப்பே தெய்வமணிமாலை. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - என்பன போன்ற அற்புதமான பாடல்கள் கற்போரை மனமுருகச் செய்யும். வடிவுடை மாணிக்கமாலை என்னும் நூலையும் திருவொற்றியூர்ச் சிவபெருமான் மீது, எழுத்தறியும் பெருமான் மாலை என்னும் நூலையும் பாடினார்.
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 64 |
மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேறுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் பதைத்த வள்ளற்பெருமான், "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" எனப் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 65 |
ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பிய இவர், “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்” என பாடினார் ? இவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 66 |
“சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” என்றும், இவையெல்லாம் சிறுபிள்ளை விளையட்டு என்றும் இகழ்ந்தவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 67 |
“பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி” - என ஆணும் பெண்ணும் சமமென்று அன்றே உரைத்தவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 68 |
சங்ககாலத்தில் ஒரு முல்லைக்கொடியின் துயர் நீங்க, பாரிவள்ளல் தன் தேரையே ஈந்தார். பல நூற்றாண்டுகள் கழித்துப் பாரி வள்ளலைப்போல ------------------------------ என்பவர், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பயிர்வாடத் தாம் வாடினார்.
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 69 |
கீழ்க்கண்டவர்களுள் பசிப்பிணி மருத்துவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 70 |
வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும், நீடியபிணியால் வருந்துவோரையும், ஈடில் மானிகளாய், ஏழைகளாய் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 71 |
ஆனும் பெண்ணும் சமம் என்பதனையும், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மை கொண்டு, மனித நேயத்துடன் வாழவேண்டுமென்றும் மன்பதைக்கு உணர்த்தினார். இவர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 72 |
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்; தம்முயிர்போல் எண்ணி உள்ளே; ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்; யாவர்அவர் உளந்தான் சுத்த" - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 73 |
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்; இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்குஏவல் புரிந்திடஎன் சிந்தைமிக விழைந்த தாலோ.” - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 74 |
“உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” - என்று கூறியவர்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 75 |
கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வதனை அறவே வெறுத்தார். பலிகொள்ளும் சிறுதெய்வக் கோவிலைக் கண்டு நடுங்கினார். போரினால் உண்டாகும் கொடுமைகளை அறிந்து வருந்தினார். போரில்லா உலகைப் படைக்க விழைந்தார்.- இந்த கூற்று கீழ்க்கண்டவர்களுள் யாருடன் தொடர்புடையது?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 76 |
அழுது அடியடைந்த அன்பர்" யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 77 |
கீழ்க்கண்டவர்களுள் "தம்பிரான் தோழர்" யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 78 |
“… … … ….உலகரசு ஆள்வோர்; உறைமுடி வாள்கொண்டு ஒருவரை ஒருவர்; உயிர்அறச் செய்தனர் எனவே; தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம்; தளர்ந்துஉளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் ” - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 79 |
----------------- என்பவர், அன்பின் ஊற்று. அன்பே அவர் உயிர். அன்பே அவர் வடிவம், மண்ணுலகத்திலே உயிர்கள்படும் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் அவர் பொறுத்திட மாட்டாமல், “அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்” - என்று உளமுருக வேண்டினார். அவ்வுயிர்களின் வருத்தத்தை நீக்கிடவே துடித்தார்.
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 80 |
--------------- என்பவர், இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவினன் என்பதனையும் அருட்பெருஞ்ஜோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை வடலூரில் நிறுவினார்.
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 81 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் ------------------- என்னும் இடத்தில் சத்திய தருமச்சாலையை நிறுவிச் சாதி, மத வேறுபாடின்றிப் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார். அங்கு அவர் ஏற்றி வைத்த அடுப்பின் கனல், இன்றும் பல்லோர் பசிப்பிணியை போக்கி வருகின்றது.
கூடலூர் | |
கடலூர் | |
வடலூர் | |
வண்டலூர் |
Question 82 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் அருளிய பாடல்கள் அருட்கருணை நிறைந்தவை. ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களைத் --------------------- என மக்கள் போற்றுகின்றனர்.
திருக்கயிலாய நூல் | |
பராபர நூல் | |
இறைவனின் ஆசி பெற்ற நூல் | |
திருவருட்பா |
Question 83 |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். அதற்காகவே வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். மேலும், மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார். இதனால்தான் ---------------------- இவரைப் “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றினார்.
திரு.வி.க | |
பாரதிதாசன் | |
மறைமலையடிகள் | |
பாரதியார் |
Question 84 |
தமிழ்மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். பயில்வதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய், திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம்பற்றச் செய்து, அத்தென்மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர். என்று உண்மை உரைத்தவர் ?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 85 |
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், திருவருட்பா (ஆறு திருமுறைகள் ) ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் | |
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் | |
இராமானுஜர் |
Question 86 |
உலகெலாம் உய்ய உயரிய நெறிகண்ட அருட்பிரகாச வள்ளலார் ----------------- ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளன்று இறவாநிலை எய்தினார்.
1844 | |
1854 | |
1864 | |
1874 |
Question 87 |
பொருந்தாதது எது? வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:-
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே | |
குருவை வணங்கக் கூசி நிற்காதே | |
உறவினரிடம் வாதம் செய்யாதே | |
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே |
Question 88 |
பொருந்தாதது எது? வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:-
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே | |
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே | |
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே | |
கடவுளுக்கு காணிக்கை செய்யாதே |
Question 89 |
பொருந்தாதது எது? வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:-
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே, பசித்தோர் முகத்தைப் பாராதிராதே | |
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே | |
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே | |
சாதி, மதங்களை பாராதிராதே |
Question 90 |
பொருந்தாதது எது? வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பதிப்பித்த நூல்கள்.
சின்மய தீபிகை | |
ஒழிவிலொடுக்கம் | |
தொண்டமண்டல சதகம் | |
நளவெண்பா |
Question 91 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனித நேயம் மலரும் | |
வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனித நேயம் மலரும் | |
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனித நேயம் மலரும் | |
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனித நேயம் மலரும் |
Question 92 |
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
அறிவு ஒளிபெற அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தினார் | |
அறிவு ஒளிபெற அங்கே சோதித் தரிசன புதுமையைப் புகுத்தினார் | |
அறிவு ஒளிப்பெற அங்கே சோதித் தரிசன புதுமையைப் புகுத்தினார் | |
அறிவு ஒளிப்பெற அங்கே சோதித் தரிசன புதுமையைப் புகுத்தினார் |
Question 93 |
தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 94 |
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, மக்கிமா நகரில் ------------------ ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் பிறந்தார்
20.05.1845 | |
20.05.1844 | |
20.05.1843 | |
20.05.1843 |
Question 95 |
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதரின் தந்தையார் பெயர் ----------------------?
ராமசாமி | |
குப்புசாமி | |
கந்தசாமி | |
மாடசாமி |
Question 96 |
அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயர்?
ராமராஜன் | |
தனஞ்செயன் | |
காத்தவராயன் | |
வீரமணிகண்டன் |
Question 97 |
------------------------- என்பாரிடம் காத்தவராயன் கல்வி கற்றார். சித்த மருத்துவமும் பயின்றார்.
அயோத்திதாசப் பண்டிதர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
சுத்தானந்த பாரதி | |
இவர்களில் யாருமில்லை |
Question 98 |
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய இதழின் பெயர்?
அயோத்தியா | |
கேசரி | |
ஒரு பைசாத் தமிழன் | |
தினமலர் |
Question 99 |
------------------------ என்பவர், நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்புத்திருமணம் செய்துகொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார். அக்காலத்தில் தேயிலை பறிப்போர், விவசாயக் கூலிவேலை செய்வோர், மரம் அறுப்போர் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டார்.
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 100 |
----------------------- இந்து மதக் கருத்துகளை ஆழ்ந்து கற்றவர். புத்தநெறியால் கவரப் பெற்றார். அதனால் புத்தமதக் கருத்துகளை எல்லாருக்கும் எடுத்துரைத்தார். தமக்குப் பிறந்த மகன்களுக்குப் பட்டாபிராமன், மாதவராம், சானகிராமன், இராசாராம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். புத்தரை விரும்பிச் சார்ந்த இவர், தம் மகள்களுக்கு அம்பிகாவதி என்றும் மாயாவதி என்றும் பெயரினைச் சூட்டினார்.
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 101 |
சித்த மருத்துவத்தில் கைதேர்ந்ததால், மருத்துவர் என்றும் பண்டிதர் என்றும் அழைக்கப் பெற்றவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 102 |
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில் பிரம்ம ஞானசபை ஆல்காட் (1832 – 1907) தொடர்பால், சென்னையில் முக்கியமான ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் எனத் தலித்துகளுக்கு இலவசப் பள்ளிகளை நிறுவியவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 103 |
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வசதியோடு கல்வி உதவித்தொகை அளிக்கவும், கல்வியில் தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும், பொது இடங்களில் நுழைய உரிமையும், கிராம அலுவலராய்ப் பணியமர்த்த ஆணைகளும் வேண்டுமென்று துணிவோடு வலியுறுத்தி வெற்றி பெற்றார். - இந்த கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடன் தொடர்புடையது?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 104 |
தீபங்களின் வரிசை தீபாவளி. கண்ணன் நரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்ற நாளே இத்திருநாள் என்றும், மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி என்றும் இன்றுவரை பேசப்படுகிறது. ஆனால், பெளத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவரான ----------------------------, தமது மருத்துவ ஆராய்ச்சியின்படி, எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தார். அதற்கு ஆதாரமாக சப்பான் நாட்டில் இன்றும் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சான்று காட்டியவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 105 |
புத்தரது ஆதிவேதம் என்னும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதினார். இதற்குச் சான்றாக பெருங்குறவஞ்சி, வீரசோழியம், நன்னூல் விளக்கம், நாயனார் திரிகுறள், சித்தர் பாடல்கள், வைராக்கிய சதகம், மச்சமுனிவர் ஞானம் முதலிய நூல்களைத் துணை நூல்களாகக் கொண்டார். ஆதிவேதத்தைப் பாலி, ஆங்கிலம் முதலிய மொழிகளின் துணையுடன் எழுதினார். - இவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 106 |
இந்திரதேச சரித்திரம் - என்ற நூலின் ஆசிரியர் பெயர்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 107 |
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டார். வீரமாமுனிவரைப் போல் எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். இவர் திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார். - இவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 108 |
நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே. அதாவது, உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய், நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர் யார்?
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் | |
பெரியார் | |
மபொ. சிவஞானம் | |
பாம்பன் சுவாமிகள் |
Question 109 |
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் இயற்கை எய்திய தினம்?
05.05.1914 | |
08.07.1915 | |
09.06.1915 | |
15.05.1913 |
Question 110 |
காத்தவராயன் என்னும் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள், அன்றைய காலணா விலையில் ஒருபைசாத் தமிழன் என்ற இதழை வெளியிட்டார். அது, -------------------- முதல் சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன்தோறும் நான்கு பக்கங்களுடன் வெளிவந்தது.
19.06.1904 | |
19.06.1905 | |
19.06.1906 | |
19.06.1907 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 110 questions to complete.