HistoryOnline Test

ஒன்பதாம் வகுப்பு – பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2

ஒன்பதாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2

Congratulations - you have completed ஒன்பதாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கண்வனப்புக்  கண்ணோட்டம்,  கால்வனப்புச் செல்லாமை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
திருக்குறள், திருவள்ளுவர்
B
நாலடியார், சமணமுனிவர்
C
சிறுபஞ்சமூலம், காரியாசன்
D
பாஞ்சாலி சபதம், பாரதியார்
Question 2
வாட்டான்நன் றென்றால் வனப்பு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் யாது?
A
திருக்குறள்
B
நாலடியார்
C
சிறுபஞ்சமூலம்
D
பாஞ்சாலி சபதம்
Question 3
பொருத்தமற்றதை தேர்வு செய்க
A
கண்ணுக்கு அழகு - இரக்கம் கொள்ளல்
B
காலுக்கு அழகு - பிறரிடம் இறந்து செல்லாமை
C
இசைக்கு அழகு - கேட்போர் நன்றெனப் புகழ்தல்
D
அரசனுக்கு அழகு - செல்வம் சேர்ப்பது
Question 3 Explanation: 
குறிப்பு :- அரசனுக்கு அழகு - குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று, பிறர் அவனைப் புகழ்ந்து உரைத்தல்.
Question 4
பொருத்தமற்றதை தேர்வு செய்க.
A
கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
B
எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
C
வேந்தன் - அரசன்
D
வனப்பு - காடு
Question 5
கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் - இலக்கணக்குறிப்பு தருக.
A
வினைத்தொகை
B
தொழிற்பெயர்
C
வினையாலணையும் பெயர்
D
பண்புத்தொகை
Question 6
கேட்டார், வாட்டான் - இலக்கணக்குறிப்பு தருக.
A
வினைத்தொகை
B
தொழிற்பெயர்
C
வினையாலணையும் பெயர்
D
பண்புத்தொகை
Question 7
கேட்டார் - கேள் (ட்) + ட் + ஆர். இதில் கேள் - பகுதி; ள் - ட் ஆனது விகாரம்; ட் - இறந்தகால இடைநிலை; ஆர் - என்பது என்ன?
A
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
தொழிற்பெயர் விகுதி
D
ஆண்பால் வினைமுற்று விகுதி
Question 8
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன்  றென்றல் வனப்பு இந்த பாடலில் பயின்று வரும் அணி யாது?
A
சொல் பின்வருநிலை அணி
B
பொருள் பின்வருநிலை அணி
C
சொற்பொருள் பின்வருநிலை அணி
D
ஏகதேச உருவக அணி
Question 9
------------- என்பவர், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் ---------------- கூறுகிறது.
A
ஒளவையார், நன்னூல்
B
காரியாசான், சிறப்புப்பாயிரம்
C
முன்றுறை அரையனார், பழமொழி நானூறு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 10
காரியாசான் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
A
புத்த சமயம்
B
சமண சமயம்
C
ஜொராஸ்டிரம்
D
சீக்கியம்
Question 11
காரியாசனும் --------------- என்பவரும் ஒருசாலை மாணாக்கராவர்.
A
ஒளவையார்
B
புகழேந்திப்புலவர்
C
கம்பர்
D
கணிமேதாவியார்
Question 12
சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?
A
ஒளவையார்
B
காரியாசான்
C
முன்றுறை அரையனார்
D
விளம்பிநாகனார்
Question 13
சிறுபஞ்சமூலம் நூலில் கடவுள் வாழ்த்துடன் ------------------ வெண்பாக்கள் உள்ளன.
A
90
B
100
C
97
D
107
Question 14
சிறுபஞ்சமூலம் நூலில் கூறப்பட்டுள்ள ஐந்து மூலிகையின் பெயர்கள் என்ன?
A
கண்டங்கத்திரி, மஞ்சள், சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
B
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, ஏலக்காய், பெருமல்லி, நெருஞ்சி
C
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
D
கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, கீழாநெல்லி, பெருமல்லி, நெருஞ்சி
Question 15
சிறுபஞ்சமூலம் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் கூறப்பட்டுள்ளன?
A
3
B
4
C
5
D
6
Question 16
பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 16 Explanation: 
விளக்கம் :- ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப் பலவிடத்தும்வரின் அது பின்வருநிலையணி ஆகும். இது, சொல்பின்வருநிலையணி, பொருள்பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி, உவமைப் பின்வருநிலையணி என நால்வகைப்படும்.
Question 17
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பலவிடத்தும்வரின், அது ------------------------- ஆகும்?
A
சொல்பின்வருநிலையணி
B
உவமைப் பின்வருநிலையணி
C
சொற்பொருள் பின்வருநிலையணி
D
பொருள்பின்வருநிலையணி
Question 18
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய முப்பெரும் படைப்புகளின் ஆசிரியர் யார்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 19
மாநகர் - இலக்கணக்குறிப்பு தருக?
A
வினையெச்சம்
B
வினையாலணையும் பெயர்
C
உரிச்சொற்றொடர்
D
தொழிற்பெயர்
Question 20
"நாமும் ஒரு மண்டபம் அமைத்து, அதனைக் காண்பதற்குப் பாண்டவரை அழைப்போம்தருமனைச் சூதாடச் செய்து, நாம் நினைத்ததனை முடிப்போம்" - என்று கூறியவர் யார்?
A
துரியோதனன்
B
திருதராட்டிரன்
C
விதுரன்
D
சகுனி
Question 21
இவற்றில் பொருந்தாதது எது?
A
அழைத்தனன் - முற்றெச்சம்
B
சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
C
நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
D
அடவி மலையாறு - எண்ணும்மை
Question 21 Explanation: 
விளக்கம் :- அடவி மலையாறு - என்பதன் இலக்கணக்குறிப்பு உம்மைத்தொகை.
Question 22
இவற்றில் பொருந்தாதது எது? 1] கடந்து - வினையெச்சம் 2] தடந்தோள் - உரிச்சொற்றொடர் 3] செறிந்து, பாய்ந்து - வினையெச்சம் 4] பாலாடையும் நறுநெய்யும் தேனும் - உம்மைத்தொகை
A
1
B
2
C
3
D
4
Question 22 Explanation: 
விளக்கம் :- பாலாடையும் நறுநெய்யும் தேனும் - என்பதன் இலக்கணக்குறிப்பு எண்ணும்மை.
Question 23
இவற்றில் பொருந்தாதது எது? 1] நீளமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகை 2] காத்தல் - தொழிற்பெயர் 3] தொல்லுலகு - வினைத்தொகை 4] தாளமும் வேளமும் - எண்ணும்மை
A
1
B
2
C
3
D
4
Question 24
பதமலர் - உருவகம்
A
1
B
2
C
3
D
4
Question 24 Explanation: 
விளக்கம் :- தொல்லுலகு - என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புத்தொகை. காரணம் - தொல்லுலகு = தொன்மை + உலகு. "மை" - விகுதி வந்துள்ளதால் பண்புத்தொகை.
Question 25
இவற்றில் பொருந்தாதது எது? 1] பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள் 2] ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் எனபதன் தொகுத்தல் விகாரம். 3] காத்தல் - வினைத்தொகை 4] தாளமும் மேளமும் - எண்ணும்மை
A
1
B
2
C
3
D
4
Question 25 Explanation: 
விளக்கம் :- காத்தல் - என்பதன் இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 26
இவற்றில் பொருந்தாதது எது?
A
அடவி - காடு
B
தடந்தோள் - வலியதோள்
C
மருங்கு - தூரம்
D
குலவு - விளங்கும்
E
பண்ணவர் - தேவர்
Question 26 Explanation: 
குறிப்பு :- மருங்கு - பக்கம்
Question 27
இவற்றில் பொருந்தாதது எது?
A
அரம்பையர் - தேவமகிளிர்
B
வீறு - மலை
C
கா - காடு
D
சதுரங்கச் சேனை - நால்வகைப் படைகள்
E
ஞாலம் - உலகம்
Question 27 Explanation: 
குறிப்பு :- வீறு - வலிமை.
Question 28
சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் -------------- ஆண்டு பிறந்தார்.
A
11/11/1892
B
12/12/1882
C
21/11/1892
D
11/12/1882
Question 29
நாடு, மொழி, இறை, பெண்மை முதலிய பாடுபொருள்களில் எண்ணற்ற பாடல் இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதியார்
C
இராமலிங்கனார்
D
முடியரசன்
Question 30
ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இராமலிங்கனார்
D
முடியரசன்
Question 31
"பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவிஎனப் புகழப் பெற்றவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இராமலிங்கனார்
D
முடியரசன்
Question 32
சுதேசமித்திரன், இந்தியா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இராமலிங்கனார்
D
முடியரசன்
Question 33
தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை - இது யாருடைய கூற்று?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இராமலிங்கனார்
D
முடியரசன்
Question 34
இருபதாம் நூற்றாண்டின் உரைநடைவளத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது இக்காலத்தை -------------- காலம் எனலாம்?
A
செய்யுள்
B
இலக்கணம்
C
உரைநடை
D
மறுமலர்ச்சி
Question 35
---------------- என்பவரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன.
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 36
மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை -------------- என்பவரைச் சாரும்
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 37
முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள். இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் -------------- என்பவரின் கவிதை இது?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 38
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு வழிசொல்லும் ------------------ என்பவரின் கவிதை இது?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 39
தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்விடுதலை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியனவற்றைப் --------------- என்பவரின்  கவிதைகள் வெளிப்படுத்தின?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 40
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என வீழ்ச்சியுற்ற தமிழர் எழுச்சிபெற விழையும் -------------- என்பவரின்  கவிதை இது?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
இராமலிங்கனார்
Question 41
எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம் இல்லானும் அங்கில்லை பிறர்நலத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
A
கல்யாணசுந்தரம்
B
பாரதிதாசன்
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 42
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ எனத் தாலாட்டுப் பாடியவர் யார்?
A
கல்யாணசுந்தரம்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
D
தமிழ்ஒளி
Question 43
மங்கை யராகப் பிறப்பதற்கேநல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா எனப் பாடிப் பெண்ணின் பெருமையை பேசியவர் யார்?
A
கல்யாணசுந்தரம்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 44
சாலைகளில் பலதொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் எனத் தொழிலும் தமிழும் வளம்பெருதல் வேண்டுமென விரும்பியவர் யார்?
A
கல்யாணசுந்தரம்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
முடியரசன்
Question 45
விடுதலை இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் -----------------. இவர்தம் கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மிளிர்கின்றன.
A
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 46
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும். என்று தமிழரின் சிறப்பையும் தமிழ்மொழியின் இனிமையையும் சேர்த்துப் பாடியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 47
] "பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்று சமுதாயத்தின்மீது அக்கறையாக  பாடியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 48
 "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்று வாழ்க்கை சிறக்க ஒவ்வொருவரும் ஒரு தொழிலையாவது கற்றுக்கொள்வது நல்லது என வலியுறுத்தியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
B
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
C
முடியரசன்
D
தமிழ்ஒளி
Question 49
ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடைய மனப்போக்கர் வாழும்நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி ? இவ்வடிகள் ------------ என்பவரின் தணியாத தண்டமிழ்க் காதலை வலியுறுத்தும்.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
முடியரசன்
D
தாராபாரதி
Question 50
----------------- என்பவரின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம். அதனால், அவர் உவமைக் கவிஞர் என்னும் சிறப்பைப் பெற்றார்.
A
பாரதியார்
B
சுரதா
C
முடியரசன்
D
தாராபாரதி
Question 51
வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் இவர்தம் பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன. அவை எளிமையும் இனிமையும் ஒன்று கலந்து பொருட்செறிவையும் புத்துணர்ச்சியையும் உண்டாக்குகின்றன.
A
பாரதியார்
B
சுரதா
C
முடியரசன்
D
தாராபாரதி
Question 52
முல்லைக்கோர் காடு போலும் முத்துக்கோர் கடலே போலும் சொல்லுக்கோர் கீரன் போலும் தூதுக்கோர் தென்றல் போலும் கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்                                                      வில்லுக்கோர் ஒரி போலும் விளங்கினார், வென்றார், நின்றார். இவ்வாறு சுரதா, -------------- என்பவரை  உவமைகளால் பாராட்டியுள்ளார்.
A
சுத்தானந்த பாரதியார்
B
கவிஞர் கண்ணதாசன்
C
மறைமலையடிகளார்.
D
பாரதிதாசன்
Question 53
பாரதிதாசனைத் தொடர்ந்து, இயற்கையின் அழகை எழிலுறப் படம்பிடித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து விளங்குகின்றன?
A
சுரதா
B
கவிஞர் கண்ணதாசன்
C
வாணிதாசன்
D
தமிழ்ஒளி
Question 54
அமெரிக்கக்கவிஞர் வால்ட்விட்மனின் சாயலில் வசன கவிதை எழுதியவர் யார்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
சுரதா
Question 55
 ------------ என்பவரின் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
சுரதா
Question 56
யாப்பு நெறிகளை மீறவேண்டும் என இவ்விரு கவிஞரும் ஒருபோதும் எண்ணியதில்லை. யாப்பினை ஒரு தடையாகவும் இவர்கள் நினைத்ததில்லை. அந்த இரு கவிஞர்களின் பெயர்கள் என்ன?
A
வாணிதாசன், சுரதா
B
தமிழ்ஒளி, கண்ணதாசன்
C
பாரதியார், பாரதிதாசன்
D
முடியரசன், கல்யாணசுந்தரம்
Question 57
புதுக்கவிதை வளர்ச்சியில் --------------- என்பவரின் பங்கு போற்றத்தக்கது.
A
சக்திக்கனல்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 58
ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன இந்த வரியின் ஆசிரியர் யார்?
A
சக்திக்கனல்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 59
உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில்  கலக்குது, ஒற்றுமை யில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளர்க்குது - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 60
'தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது - ஆனாலும்  மக்கள் வயிறு காயுது'  - என்னும் பாடல்வரிகளைக் கேட்ட தோழர் ஜீவானந்தம், " நீ மீண்டும் தோன்றிய பாரதியடா" என -------------- என்பவரை பாராட்டினார்.
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 61
எளிய சொற்களைக் கொண்டு உள்ளத்தை மகிழ்விக்கும் பாடல்களை இயற்றிய பெருமை ------------------ என்பவருக்கு உண்டு.
A
கண்ணதாசன்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 62
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம்தொடுப்பேன் எனத் தமிழ் கவிதை எழுதத் தொடங்கியவர் யார்?
A
கண்ணதாசன்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 63
கதிர்வெடித்துப் பிழம்புவிழக், கடல்கொதித்துச் சூடேற்ற முதுமைமிகு நிலப்பரப்பில், முதற்பரப்பு தோன்றிவிட நதிவருமுன் மணல்வருமுன், நலம்வளர்த்த தமிழணங்கே ! என நெக்குருகித் தமிழ்த்தாயின் பழைமையைப் பறைசாற்றியவர் யார்?
A
கண்ணதாசன்
B
புவியரசு
C
சிற்பி
D
வல்லிக்கண்ணன்
Question 64
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென் றாலும், வாடி நின்றால் ஒடுவ தில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 65
பசுமை நிறைந்த நினைவுகளே !, பாடித் திரிந்த பறவைகளே ! பழகிக் களித்த தோழர்களே !, பறந்து செல்கின்றோம்நாம் பறந்து செல்கின்றோம்.. எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 66
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள்தந்த பொருளல்லவோ சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ செம்மாதுளை பிளந்து சிரித்துவரும் சிரிப்பல்லவோ மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ. என்ற கவிதை வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 67
சுரண்டல், வறுமை ஆகியன நீங்கவும், சமத்துவம் ஓங்கவும் பொதுமை உணர்வே ஏற்றது என்று வலியுறுத்தியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 68
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்இங்குஇல்லாமை இல்லாத நிலைவேண்டும்., வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமைநீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை  - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 69
காளை மணியோசை  களத்துமணி நெல்லோசை, வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை, தாழை மடலோசை  தாயர்தயிர் மத்தோசை, கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை . -என்று ஓசை என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்திப் பொருள்நயமும் ஓசை இனிமையும் பொருந்துமாறு பாடிய கவிஞர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 70
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால், உலகம் உன்னிடம் மயங்கும்நிலை, உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 71
இராசதண்டனை என்பது, கம்பர்அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ------------- என்பவர்  படைத்த இனிய நாடகம்.
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
கண்ணதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 72
ஆயிரம்தீவு அங்கயற்கண்ணி, வேலன்குடித் திருவிழா முதலிய பல புதினங்களையும் ---------------- என்பவர்  படைத்திருக்கிறார்.
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
கண்ணதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 73
------------- என்பவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட புதினங்களில்சேரமான் காதலி சிறந்த வரலாற்றுப் புதினமாகும். அதற்குச் சாகித்திய அகாதமியின் பரிசு கிடைத்துள்ளது.
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
கண்ணதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 74
-------------- என்பவர் தென்றல், முல்லை, கண்ணதாசன், தமிழ் மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றுக்கு ஆசிரியராக இருந்து சிறந்த இதழ்ப்பணி ஆற்றியுள்ளார்.
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
கண்ணதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 75
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை.  - இது யாருடைய கூற்று?
A
கல்யாணசுந்தரம்
B
புவியரசு
C
கண்ணதாசன்
D
வல்லிக்கண்ணன்
Question 76
பதம் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 76 Explanation: 
குறிப்பு :- பதம் என்பது பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும்.
Question 77
கீழ்க்கண்டவற்றில் பெயர்ப் பகாப்பதத்தின் சரியான எடுத்துக்காட்டு எது?
A
மரம், நாய், நீர்
B
உண், காண், எடு
C
சால, நனி, கடி, உறு
D
தில், மன், பிற
Question 78
கீழ்க்கண்டவற்றில் வினைப் பகாப்பதத்தின் சரியான எடுத்துக்காட்டு எது?
A
மரம், நாய், நீர்
B
உண், காண், எடு
C
சால, நனி, கடி, உறு
D
தில், மன், பிற
Question 79
கீழ்க்கண்டவற்றில் உரிப் பகாப்பதத்தின் சரியான எடுத்துக்காட்டு எது?
A
மரம், நாய், நீர்
B
உண், காண், எடு
C
சால, நனி, கடி, உறு
D
தில், மன், பிற
Question 80
கீழ்க்கண்டவற்றில் இடைப் பகாப்பதத்தின் சரியான எடுத்துக்காட்டு எது?
A
மரம், நாய், நீர்
B
உண், காண், எடு
C
சால, நனி, கடி, உறு
D
தில், மன், பிற
Question 81
பகுபதத்தில் முதலில் நின்று பொருள் தரும் முதனிலையைப் ---------------- என்பர்.
A
விகுதி
B
பகுதி
C
சந்தி
D
சாரியை
Question 81 Explanation: 
விளக்கம் :- பகுபதத்தில் முதலில் நின்று பொருள் தரும் முதனிலையைப் பகுதி என்பர். பகுதி பெரும்பாலும் ஏவல் வினையாக வரும். (எ. கா.) : படித்தான் – படி என்பது பகுதி. ஓடினான் – ஓடு என்பது பகுதி. வந்தான் – வா என்பது பகுதி.
Question 82
பகுபதத்தில் இறுதியில் நிற்பது ----------------- எனப்படும்.
A
விகுதி
B
பகுதி
C
சந்தி
D
சாரியை
Question 82 Explanation: 
விளக்கம் :- பகுபதத்தில் இறுதியில் நிற்பது விகுதி எனப்படும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும். (எ. கா.) :- நடந்தான் – ஆன் – ஆண்பால் விகுதி. நடந்தாள் – ஆள் – பெண்பால் விகுதி. நடந்தனர் – அர் – பலர்பால் விகுதி. நடந்தது – து – ஒன்றன்பால் விகுதி. நடந்தன – அ – பலவின்பால் விகுதி.
Question 83
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ------------------ எனப்படும்.
A
விகுதி
B
இடைநிலை
C
சந்தி
D
சாரியை
Question 83 Explanation: 
விளக்கம் :- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும். இடைநிலை காலம் காட்டுவதனால் காலங்காட்டும் இடைநிலை எனவும் கூறுவர்
Question 84
-------------------- என்பன நிகழ்கால இடைநிலைகள்.
A
இல், அல், ஆ
B
ப், வ்
C
த், ட், ற், இன்
D
கிறு, கின்று, ஆநின்று
Question 84 Explanation: 
விளக்கம் :- கிறு, கின்று, ஆநின்று என்பன நிகழ்கால இடைநிலைகள். உண்கிறான் – கிறு – உண் + கிறு + ஆன். உண்கின்றான் – கின்று – உண் + கின்று + ஆன். உண்ணாநின்றான் – ஆநின்று – உண் + ஆநின்று + ஆன்.
Question 85
---------------- என்பன இறந்தகால இடைநிலைகள்.
A
இல், அல், ஆ
B
ப், வ்
C
த், ட், ற், இன்
D
கிறு, கின்று, ஆநின்று
Question 85 Explanation: 
விளக்கம் :- த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள். பார்த்தான் – த் – பார் + த் + த் + ஆன். உண்டான் – ட் – உண் + ட் + ஆன். வென்றான் – ற் – வெல் (ன்) + ற் + ஆன். பாடினான் – இன் – பாடு + இன் + ஆன்.
Question 86
----------- என்பன எதிர்கால இடைநிலைகள்.
A
இல், அல், ஆ
B
ப், வ்
C
த், ட், ற், இன்
D
கிறு, கின்று, ஆநின்று
Question 86 Explanation: 
விளக்கம் :- ப், வ் என்பன எதிர்கால இடைநிலைகள். உண்பான் – ப் – உண் + ப் + ஆன். வருவான் – வ் – வா (வரு) + வ் + ஆன்.
Question 87
-------------- என்பன எதிர்மறை இடைநிலைகள்.
A
இல், அல், ஆ
B
ப், வ்
C
த், ட், ற், இன்
D
கிறு, கின்று, ஆநின்று
Question 87 Explanation: 
விளக்கம் :- இல், அல், ஆ முதலியன எதிர்மறை இடைநிலைகள். உண்டிலன் – இல் – உண் + ட் + இல் + அன். காணலன் – அல் – காண் + அல் + அன். பாரான் – ஆ – பார் + ஆ + ஆன்
Question 88
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்க வைப்பது  --------------- எனப்படும்.
A
விகுதி
B
சந்தி
C
சாரியை
D
இடைநிலை
Question 88 Explanation: 
விளக்கம் :- பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்க வைப்பது சந்தி. இது சிலவிடங்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும். (எ. கா.) : பார்க்கிறான் – பார் + க் + கிறு + ஆன். படித்தான் – படி + த் + த் + ஆன். கடையார் - கடை + ய் + ஆர்.
Question 89
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது --------------- எனப்படும்.
A
விகுதி
B
சந்தி
C
சாரியை
D
இடைநிலை
Question 89 Explanation: 
விளக்கம் :- பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது சாரியை எனப்படும். இஃது இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் முதலியன சாரியைகள். (எ. கா.) : உண்டனன் – உண் + ட் + அன் + அன்.
Question 90
பகுதி, இடைநிலை, விகுதி போன்றவை சேரும்போது இடையில் ஏற்படும் மாறுபாடு ------------ எனப்படும்.
A
விகாரம்
B
சந்தி
C
சாரியை
D
இடைநிலை
Question 90 Explanation: 
விளக்கம் :- பகுதி, இடைநிலை, விகுதி போன்றவை சேரும்போது இடையில் ஏற்படும் மாறுபாடு விகாரம் எனப்படும். வந்தான் என்னும் சொல்லில் உள்ள வா என்னும் பகுதி வ எனக் குறைந்து விகாரம் ஆயிற்று.
Question 91
பகுபதத்தில் குறைந்தளவு இருக்கவேண்டிய உறுப்புகள் --------------?
A
பகுதி, சந்தி
B
இடைநிலை, சாரியை
C
பகுதி, விகுதி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 92
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?
A
8
B
10
C
12
D
16
Question 93
ஒன்று பெற்றால் ஒளி மயம் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 93 Explanation: 
விளக்கம் :- ஒன்று பெற்றால் ஒளி மயம். இத்தொடரில் ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்குப் பெயராகி வந்தது. இஃது எண்ணல் அளவை ஆகுபெயர்.
Question 94
ஐந்து கிலோ என்னஎண்ணல் அளவை ஆகுபெயர் விலை? - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 94 Explanation: 
விளக்கம் :- ஐந்து கிலோ என்ன விலை? இத்தொடரில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர், அவ்வளவைக் குறிக்காமல், அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு..) ஆகிவந்தது. எனவே, இஃது எடுத்தல் அளவை ஆகுபெயர்.
Question 95
நான்கு லிட்டர் தேவை - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 95 Explanation: 
விளக்கம் :- நாலு லிட்டர் தேவை. இத்தொடரில் லிட்டர் என்னும் முகத்தல் அளவைப்பெயர், அவ்வளவைக் குறிக்கவில்லை. அவ்வளவுடைய நெய், எண்ணெய், பால் முதலியவற்றுள் ஒன்றுக்கு ஆகிவந்தது. எனவே, இது முகத்தல் அளவை ஆகுபெயர்.
Question 96
மூன்று மீட்டர் கொடு - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
எண்ணல் அளவை ஆகுபெயர்
B
முகத்தல் அளவை ஆகுபெயர்
C
எடுத்தல் அளவை ஆகுபெயர்
D
நீட்டல் அளவை ஆகுபெயர்
Question 96 Explanation: 
விளக்கம் :- மூன்று மீட்டர் கொடு. இத்தொடரில், மூன்று மீட்டர் என்பது, அவ்வளவுடைய அளவுகோலைக் குறிக்காது, அதனால் நீட்டி அளக்கப்பெறும் துணிக்கு ஆகி வந்தது. எனவே, இது நீட்டல் அளவை ஆகுபெயர். குறிப்பு : “ஒன்றுகொடு, நான்கு கிலோ தா, இரண்டு லிட்டர் தேவை, ஐந்து முழம் வேண்டும்” என்பனபோல வரும் அளவுத்தொடர்கள் ஆகுபெயராம். ‘ஒரு மாம்பழம் கொடு, இரண்டு கிலோ நெய் வேண்டும்’என்பன ஆகுபெயராகா.
Question 97
வள்ளுவர்சொல் வாழ்க்கைக்கு இனிது - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருவியாகு பெயர்
Question 97 Explanation: 
விளக்கம் :- வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது. இத்தொடரில் வள்ளுவர்சொல் என்பது, சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்ததால், இது சொல்லாகுபெயர்.
Question 98
பாலை இறக்கு - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருவியாகு பெயர்
Question 98 Explanation: 
விளக்கம் :- நான் சமையல் கற்றேன். இங்குச் சமையல் என்னும் காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் (கருவிக்கு) பெயராகி வருவது காரியவாகு பெயர். காரியவாகு பெயர் : காரியப்பொருள் கருவிப்பொருளுக்கு ஆகிவருவது. (எ-டு) : நன்னூல் கற்றேன்..
Question 99
திருவள்ளுவரைப் படித்துப்பார் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
கருத்தாவாகு பெயர்
Question 99 Explanation: 
விளக்கம் :- திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடரில் திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததனால், கருத்தாவாகு பெயராயிற்று.
Question 100
நாரதர் வருகிறார் - இது எந்த ஆகுபெயருக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A
தானியாகுபெயர்
B
சொல்லாகுபெயர்
C
இடவாகுபெயர்
D
உவமையாகு பெயர்
Question 100 Explanation: 
விளக்கம் :- ஒருவரைப் பார்த்து, நாரதர் வருகிறார் எனல். இத்தொடரில் நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைபோன்ற (கலகமூட்டுபவர்) வேறொருவர்க்கு ஆகிவந்தது. அதனால், இஃது உவமையாகுபெயராயிற்று.
Question 101
நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி - இத்தொடர் ----------------- ஆகும்?
A
முகத்தலளவையாகு பெயர்
B
நீட்டலளவையாகு பெயர்
C
எண்ணலளவையாகு பெயர்
D
எடுத்தலளவையாகு பெயர்
Question 102
தயிரை இறக்கு. இத்தொடர் ----------------- ஆகுபெயர் ஆகும்?
A
இடவாகு பெயர்
B
தானியாகு பெயர்
C
உவமையாகு பெயர்
D
கருவியாகு பெயர்
Question 103
"கம்பரைப் படிக்கிறேன்" என்பது ----------- ஆகுபெயர் ஆகும்?
A
கருத்தாவாகு பெயர்
B
தானியாகு பெயர்
C
உவமையாகு பெயர்
D
கருவியாகு பெயர்
Question 104
வானொலி கேட்டு மகிழ்ந்தேன்" இத்தொடர் ------------- ஆகுபெயர் ஆகும்?
A
கருத்தாவாகு பெயர்
B
தானியாகு பெயர்
C
உவமையாகு பெயர்
D
கருவியாகு பெயர்
Question 105
கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது எது?
A
முகத்தலளவையாகு பெயர் - இரண்டு லிட்டர் தா
B
உவமையாகு பெயர் - காளை வருகிறான்
C
சொல்லாகு பெயர் - பெரியோர் சொல் கேள்
D
எடுத்தலளவையாகு பெயர் - நன்னூல் கற்றேன்
Question 105 Explanation: 
விளக்கம் :- எடுத்தலளவையாகு பெயர் - ஐந்து கிலோ என்ன விலை. (அல்லது) பத்துக் கிராம் கொடு - என்பது சரியான விடை.
Question 106
இருட்பகை இரவி இருளெனத் தம்மையும், கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக். கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி. மெய்யாத் தம்பெயர் வியம்பி வாயசம்  பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
மனோன்மணியம் பெ.சுந்தரனார்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 107
பொருந்தாதது எது?
A
வாயசம் - காகம்
B
இரவி - சூரியன்
C
சிறை - இறக்கை
D
மருங்கு - தொலைவில்
Question 108
இருட்பகை இரவி இருளெனத் தம்மையும். கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக். கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி. மெய்யாத் தம்பெயர் வியம்பி வாயசம்  பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும் …  - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
A
தற்குறிப்பேற்ற அணி
B
ஏகதேச உருவக அணி
C
உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 109
வாரிக்களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டை புகும். போரிற்சிறந்து பொலிவாகும் - சீருற்ற. செக்கோல மேனிற் திருமலை ராயன்வரையில். வைக்கோலும் மல்யானையாம்.  - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
புகழேந்திப் புலவர்
B
குமரகுருபரர்
C
காளமேகப் புலவர்
D
அந்தகக் கவி வீரராகவர்
Question 110
ஒரு தொகுப்பில் உள்ளவற்றைச் சுட்டும்போது முதன்மையானதனை மட்டும் சுட்டி, அதனோடு தொடர்புடைய பிறவற்றைச் சுட்டாதபோது ------------------- (அது தொடங்கி) என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
A
முதலிய
B
முதலான
C
ஆகிய
D
இவற்றில் ஏதுமில்லை
Question 110 Explanation: 
விளக்கம் :- ஒரு தொகுப்பில் உள்ளவற்றைச் சுட்டும்போது முதன்மையானதனை மட்டும் சுட்டி, அதனோடு தொடர்புடைய பிறவற்றைச் சுட்டாதபோது ‘முதலான’ (அது தொடங்கி) என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும். (எ.கா.) நாம் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க திருக்குறள் முதலான அறநூல்களைக் கற்றல் வேண்டும்.
Question 111
ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அனைத்தையும் சுட்டாது, அதனோடு தொடர்புடைய சிலவற்றையோ பலவற்றையோ மட்டும் சுட்டும்போது ------------ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
A
முதலிய
B
முதலான
C
ஆகிய
D
இவற்றில் ஏதுமில்லை
Question 111 Explanation: 
விளக்கம் :- *ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அனைத்தையும் சுட்டாது, அதனோடு தொடர்புடைய சிலவற்றையோ பலவற்றையோ மட்டும் சுட்டும்போது ‘முதலிய’ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும். (எ.கா.) நாம் பண்பாட்டில் சிறந்து விளங்க நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய எட்டுத்தொகை நூல்களைக் கற்றல் வேண்டும்
Question 112
ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச் சுட்டும்போது ---------------- என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்
A
முதலிய
B
முதலான
C
ஆகிய
D
இவற்றில் ஏதுமில்லை
Question 112 Explanation: 
விளக்கம் :- ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச் சுட்டும்போது ‘ஆகிய’ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும். (எ.கா.) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழைப் போற்றி வளர்த்தல் வேண்டும்.
Question 113
ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையை ----------------- என வழங்குவர்.
A
ஆகுபெயர்
B
பொருள்கோள்
C
வழு
D
அணி
Question 113 Explanation: 
விளக்கம் :- ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர்.
Question 114
பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
A
6
B
8
C
10
D
12
Question 114 Explanation: 
விளக்கம் :- 1.ஆற்றுநீர்ப்பொருள்கோள், 2.மொழிமாற்றுப்பொருள்கோள். 3.நிரல்நிறைப்பொருள்கோள், 4.விற்பூட்டுப்பொருள்கோள், 5.தாப்பிசைப்பொருள்கோள், 6.அளைமறிபாப்புப்பொருள்கோள், 7.கொண்டுகூட்டுப்பொருள்கோள், 8.அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Question 115
இடையறாது செல்லும் ஆற்று நீரைப்போலப் பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது ------------------- ஆகும்.
A
ஆற்றுநீர்ப்பொருள்கோள்
B
மொழிமாற்றுப்பொருள்கோள்
C
நிரல்நிறைப்பொருள்கோள்
D
விற்பூட்டுப்பொருள்கோள்
Question 115 Explanation: 
விளக்கம் :- இடையறாது செல்லும் ஆற்று நீரைபோலப் பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது ஆற்றுநீர்ப் பொருள்கோளாகும். (எ.கா.) : பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் பொறிவாயில் ஐந்தவித்தான் – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாகக்கொண்ட ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியில் நின்றவர்; நீடு வாழ்வார் – வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார். இக்குறட்பாவில் பொறிவாயில் எனத் தொடங்கி, நீடுவாழ்வார் என்பது வரையிலுள்ள சொற்கள் முன்பின்னாக மாற்றம் பெறாமல் தொடர்ச்சியாக அமைந்து பொருள்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆதலின் இப்பாடல்,ஆற்றுநீர்ப்பொருள்கோள் ஆயிற்று.
Question 116
ஓரடியில் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் ----------------- என வழங்கப்படும்.
A
ஆற்றுநீர்ப்பொருள்கோள்
B
மொழிமாற்றுப்பொருள்கோள்
C
நிரல்நிறைப்பொருள்கோள்
D
விற்பூட்டுப்பொருள்கோள்
Question 116 Explanation: 
விளக்கம் :- மொழிமாற்றுப்பொருள்கோள் : ஓரடியில் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் மொழிமாற்றுப்பொருள்கோள் என வழங்கப்படும். (எ.கா.) : சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை. இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் தெளிவு இருக்காது. இதனைச் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு (முயல்) நீத்து என அந்தந்த அடியிலுள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.
Question 117
செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாறாமல், வரிசையாக அமைத்துப் பொருள்கொள்வது ----------------- ஆகும்.
A
ஆற்றுநீர்ப்பொருள்கோள்
B
மொழிமாற்றுப்பொருள்கோள்
C
நிரல்நிறைப்பொருள்கோள்
D
விற்பூட்டுப்பொருள்கோள்
Question 117 Explanation: 
விளக்கம் :- நிரல்நிறைப்பொருள்கோள் : செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாறாமல், வரிசையாக அமைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறைப்பொருள்கோள் ஆகும். (எ.கா.) : அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இக்குறட்பாவில் அன்பிற்குப் பண்பும், அறத்துக்குப் பயனும் நிரல்நிறையாக வந்து அமைந்துள்ளதால், இப்பாடல் நிரல்நிறைப்பொருள்கோள் ஆயிற்று.
Question 118
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது  -------------------- ஆகும்.
A
ஆற்றுநீர்ப்பொருள்கோள்
B
மொழிமாற்றுப்பொருள்கோள்
C
நிரல்நிறைப்பொருள்கோள்
D
விற்பூட்டுப்பொருள்கோள்
Question 118 Explanation: 
விளக்கம் :- விற்பூட்டுப்பொருள்கோள் : வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற்பொருள்கோள் எனவும் கூறுவர். (எ.கா.) : நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு இக்குறளில், உலகு என்னும் இறுதிச்சொல் முதல்சொல்லான நெருநல் என்பதோடு சேர்த்துப் பொருள் கொள்வதனால் இது பூட்டுவில் பொருள்கோள்.
Question 119
ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது ------------------- ஆகும்.
A
தாப்பிசைப்பொருள்கோள்
B
அளைமறிபாப்புப்பொருள்கோள்
C
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
D
அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Question 119 Explanation: 
விளக்கம் :- தாப்பிசை பொருள்கோள் : ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள்கோள். தாம்பு + இசை – தாப்பிசை – ஊஞ்சல் கயிறு அசைதல்போல.(தாம்பு – ஊஞ்சல் கயிறு). (எ.கா.) : இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை இப்பாடலில் ‘சினத்தை’ என்னும் நடுநின்ற சொல்லைச், சினத்தை உடையவர் (இறந்தார்) இறந்தார் அனையர் எனவும், சினத்தைத் துறந்தார் (துறந்தார்) ஞானியர் துணை எனவும் அமைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
Question 120
பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது ------------------ ஆகும்.
A
தாப்பிசைப்பொருள்கோள்
B
அளைமறிபாப்புப்பொருள்கோள்
C
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
D
அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Question 120 Explanation: 
விளக்கம் :- அளைமறிபாப்புப் பொருள்கோள் :- பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது, அளைமறிபாப்புப் பொருள்கோள். (அளை – புற்று, பாப்பு – பாம்பு.) (எ.கா.) :- தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே. -இப்பாடலில் ‘வாழ்ந்த மொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே’ என்னும் ஈற்றடியைப் பாடலின் முதலில்கொண்டு பொருள் கொள்ளுதல் வேண்டும்.
Question 121
செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது ----------- ஆகும்.
A
தாப்பிசைப்பொருள்கோள்
B
அளைமறிபாப்புப்பொருள்கோள்
C
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
D
அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Question 121 Explanation: 
விளக்கம் :- கொண்டுகூட்டுப் பொருள்கோள் :- செய்யுள்களின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள். (எ.கா.) :- கட்டிக் கரும்பு கசக்கும் மிகக்கனிந்த எட்டிக் கனியினிக்கும் என்னூரில் – பட்டியுள காளை படிபால் கறக்குமே நல்லபசு வேளை தவிரா துழும் . -இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் விளங்காது. இதில் உள்ள சொற்களைக் கட்டிக் கரும்பு இனிக்கும், மிகக்கனிந்த எட்டிக்கனி கசக்கும், பட்டியிலிருக்கும் காளை மாடு நேரந்தவிராது உழும். நல்ல பசு படி பால் கறக்கும் எனப் பொருள் கொள்வதற்கு ஏற்ப அடிதோறும் மாறிக்கிடக்கின்ற சொற்களைப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். குறிப்பு : மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது. கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்பது பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள்கொள்வது.
Question 122
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது --------------- ஆகும்.
A
தாப்பிசைப்பொருள்கோள்
B
அளைமறிபாப்புப்பொருள்கோள்
C
கொண்டுகூட்டுப்பொருள்கோள்
D
அடிமறிமாற்றுப்பொருள்கோள்
Question 122 Explanation: 
விளக்கம் :- அடிமறிமாற்றுப் பொருள்கோள் :- செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள். (எ.கா.) : மாறாக் காதலர் மலைமறந் தனரே ஆறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்தோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழி யான்வாழு மாறே.. -இப்பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக எப்படி மாற்றிப் பொருள்கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 122 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!