Online Test

Indian National Movement Part 2 Revision Test in Tamil

Indian National Movement Part 2 Revision Test in Tamil

Congratulations - you have completed Indian National Movement Part 2 Revision Test in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி" என்று கூறியவர் யார்?
A
அன்னிபெசண்ட்
B
தயானந்த சரஸ்வதி
C
கோகலே
D
ராஜாராம் மோகன்ராய்
Question 1 Explanation: 
விளக்கம்: இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்ட அன்னிபெசண்ட் அம்மையார் தனது கருத்துகளைப் பின்வருமாறு குறிப்பிட்டார்: “பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும். இது கடந்த காலப் பெருமையுடன், ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேச/நாட்டுப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டைப் புனரமைப்பதற்கானத் தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும்”
Question 2
இந்து மதத்தின் உயரியத்தன்மைகளை உறுதியுடன் முன்வைத்த அமைப்பு எது?
A
பிரம்ம சமாஜ்
B
ஆரிய சமாஜ்
C
பிரார்த்தன சமாஜ்
D
ஆத்மீய சபா
Question 2 Explanation: 
விளக்கம்: ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்று நம்பினர். சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது.
Question 3
கீழ்க்கண்டவற்றுள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்த நிகழ்வு எது?
A
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்புக் கழகங்கள
B
ஐக்கிய மாகாணங்கள், பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலகங்கள்
C
பசுவதைத் தொடர்பான கலகங்கள
D
இவை அனைத்தும்
Question 3 Explanation: 
விளக்கம்: ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்புக் கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன. ஆரிய சமாஜம் போன்ற நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னிபெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் வலுப்பெற்றன.
Question 4
இந்து-முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்திய இயக்கம் எது?
A
அலிகார் இயக்கம்
B
கிலாபத் இயக்கம்
C
வாஹாபி இயக்கம்
D
இவை அனைத்தும்
Question 4 Explanation: 
விளக்கம்: சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக்கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது. வாஹாபி இயக்கம் இந்து-முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. வாஹாபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும், அதன் உயிரை உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்பினர்.
Question 5
கீழ்க்கண்டவற்றுள் முஸ்லிம் உணர்வு மேலோங்கத்தொடங்கியதற்கான காரணங்கள் எவை?
A
1870களில் வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியது.
B
பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்ததது.
C
வாஹாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு
D
இவை அனைத்தும்.
Question 5 Explanation: 
விளக்கம்: வாஹாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப் பங்காற்றியது. வேறுபல காரணங்களாலும் முஸ்லிம் உணர்வு மேலோங்கத் தொடங்கியது. 1870களில் வங்காள அரசாங்கம், நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்குப் பதில் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியதும், பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்குப் பதில் நாகரி எழுத்து வடிவத்தைக் கொண்டு வந்தது, முஸ்லிம் தொழில்வல்லுநர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
Question 6
பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதிய  பம்பாய் ஆளுநர் யார்?
A
ஸ்டெர்லிங்
B
எல்பின்ஸ்டோன்
C
ஹேஸ்டிங்ஸ்
D
கிளைவ்
Question 6 Explanation: 
விளக்கம்: கூட்டு இந்திய அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது. பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார். வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம், வகுப்புவாதக் கருத்தியல் சார்ந்த அரசியலுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.
Question 7
1882 ஜூலை-ஆகஸ்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற பெருங்கலகம் எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A
சேலம்
B
மதுரை
C
தஞ்சாவூர்
D
சிவகங்கை
Question 7 Explanation: 
விளக்கம்: வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச்சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஷ் அரசாங்கம், வகுப்புவாதக் கருத்தியல் சார்ந்த அரசியலுக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது. அனைத்துக் கட்சிகளும் இத்தகைய குறுங்குழுவாத அணுகுமுறையைப் பின்பற்றியதால் வடஇந்தியாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையேப் பகைமை வளர்ந்தது. இதன் தாக்கம் நாட்டின் பிறபகுதிகளிலும் காணப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் கடைசி பதிற்றாண்டுகளில் ஏராளமான இந்து-முஸ்லிம்கலவரங்கள் வெடித்தன. 1882 ஜூலை-ஆகஸ்டில் தென்னிந்தியாவில் கூட ஒரு பெருங்கலகம் சேலத்தில் நடைபெற்றது.
Question 8
கௌராக் ஷினி சபைகள் என்றழைக்கப்பட்ட சபை எது?
A
பசு பாதுகாப்பு சங்கங்கள்
B
தேவநாகிரி மொழி பரப்புரையாளர் சங்கம்
C
இந்து மத பரப்புரையாளர் சங்கம்
D
b) மற்றும் c)
Question 8 Explanation: 
விளக்கம்: ஜூலை, 1893இல் வடமேற்கு மாகாணங்களில் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. ஐக்கிய மாகாணங்கள், பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கின. கௌராக் ஷினி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) மிகவும் போர்க்குணம் கொண்டவையாக மாறின என்றும், பசுக்களின் விற்பனை அல்லது பசுவதையில் சங்கங்களின்பலவந்தமான தலையீடு இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
Question 9
சங்கதன்  நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது?
A
பிரம்ம சமாஜ்
B
ஆரிய சமாஜ்
C
பிரார்த்தன சமாஜ்
D
ஆத்மீய சபா
Question 9 Explanation: 
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாதம் மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக இருந்தபோதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. இதுவே, முஸ்லிம்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழப்பதற்கு முக்கியக் காரணமானது. ஆரிய சமாஜத்தின் ’சுத்தி’ மற்றும் ’சங்கதன்’ நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிரிவுபடுத்தியது. ஜூலை, 1893இல் வடமேற்கு மாகாணங்களில் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. ஐக்கிய மாகாணங்கள், பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கின. கௌராக் ஷினி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) மிகவும் போர்க்குணம் கொண்டவையாக மாறின என்றும், பசுக்களின் விற்பனை அல்லது பசுவதையில் சங்கங்களின் பலவந்தமான தலையீடு இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
Question 10
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.
A
வதைத் தொடர்பான கலகங்கள் 1883க்குப் பின் அடிக்கடி நடைபெற்றன.
B
1883 மற்றும் 1891க்கிடையே பஞ்சாபில் மட்டும் இத்தகைய 15 பெரும் கலகங்கள் வெடித்தன.
C
பஞ்சாபைச் சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள், மத்திய மாகாணத்தின் கௌராக் ஷினி சபா செயல்பாட்டாளர்கள், தேவநாகரி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கவேண்டும் என்று பரப்புரை செய்தோர், ஐக்கிய மாகாணத்தின் அரசு அலுவலர்கள் ஆகியோர் இந்த கூட்டமைப்பில் இணைந்தனர்.
D
இவை அனைத்தும்.
Question 10 Explanation: 
விளக்கம்: ஜூலை, 1893இல் வடமேற்கு மாகாணங்களில் ஆசாம்கர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. ஐக்கிய மாகாணங்கள், பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கின. கௌராக் ஷினி சபைகள் (பசு பாதுகாப்பு சங்கங்கள்) மிகவும் போர்க்குணம் கொண்டவையாக மாறின என்றும், பசுக்களின் விற்பனை அல்லது பசுவதையில் சங்கங்களின் பலவந்தமான தலையீடு இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
Question 11
முஸ்லிம்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழப்பதற்கு முக்கியக் காரணம் எது?
A
இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாதம் மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக இருந்தபோதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை.
B
இந்துக்களால் ஆளப்படும் நாட்டில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது.
C
காங்கிரஸ் தலைமை சமயச்சார்புடையதாகவே இருந்தது.
D
இவற்றில் எதுவுமில்லை.
Question 11 Explanation: 
விளக்கம்: அரசாங்கமும் கண்ட தோல்வி இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாதம் மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக இருந்தபோதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. இதுவே, முஸ்லிம்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழப்பதற்கு முக்கியக் காரணமானது. ஆரிய சமாஜத்தின் ’சுத்தி’ மற்றும் ’சங்கதன்’ நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிரிவுபடுத்தியது. பிரிட்டிஷ் அரசாங்கம் பசு பாதுகாப்புச் சங்கங்களை சட்டத்திற்குப் புறம்பானவை என்ற அறிவிக்கத் தவறியதும், வகுப்புவாதத்திற்கு காரணமானவர்களை கைது செய்யத் தவறியதும் மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தின. ஆனால், பிரிட்டிஷார் வேண்டுமென்றே இந்தப் பிரச்சனையில் காங்கிரஸ்காரர்களை இந்து வகுப்புவாதம் மற்றும் மறுமலர்ச்சியாளர்களோடு அடையாளப்படுத்தியதன் காரணமாக வடஇந்தியாவில் முஸ்லிம்களிடையே காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வுகள் மேலோங்கின.
Question 12
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்க.
A
இந்து-முஸ்லிம் விரிசலைக் குறைத்து அனைத்து வகுப்பினரின் உண்மையான குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாகவே 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
B
ஆனால், சர் சையது அகமது கான் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று வாதிட்டனர்.
C
காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள்.
D
இவை அனைத்தும்.
Question 12 Explanation: 
விளக்கம்: இந்து-முஸ்லிம் விரிசலைக் குறைத்து அனைத்து வகுப்பினரின் உண்மையான குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாகவே 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. ஆனால், சர் சையது அகமது கான் இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ், இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்று வாதிட்டனர். காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற 72 பிரதிநிதிகளில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். மேலும், முஸ்லிம் தலைவர்கள் காங்கிரசில் முஸ்லிம்கள் பங்கேற்றால் அது ஆட்சியாளர்களிடையே அவர்கள் இனத்திற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் காங்கிரசை முழுமையாக எதிர்த்தனர்.
Question 13
பஞ்சாப் இந்துசபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளராகவும் , பின்னர் ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவருமாக இருந்தவர் யார்?
A
லால் சந்த்
B
லாலா லஜபதிராய்
C
சந்திரசேகர்
D
சூரியசென்
Question 13 Explanation: 
விளக்கம்: பஞ்சாப் இந்துசபையின் முதன்மைத் தகவல் தொடர்பாளராகவும் , பின்னர் ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவருமாக இருந்த லால் சந்த் சில நகராட்சிகள் வகுப்புவாத அடிப்படையில் அமைக்கப்பட்டதை விளக்கியுள்ளார். “நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவரது நாற்காலியின் வலது மற்றும் இடது புறங்களில் இரு வரிசைகளாக அமர்ந்திருந்தனர். வலதுபுற வரிசையில் ஆரியவர்கத்தைச் சார்ந்த பழைய ரிஷிகளின் வம்சாவளியினரும், இடதுபுற வரிசையில் இஸ்லாமின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்தனர். இவ்வாறு அமர்ந்திருந்ததன் மூலம் அவர்கள் நகராட்சியின் உறுப்பினர்களாக மட்டுமின்றி முகமதியர்களாகவும், இந்துக்களாகவும் இருப்பதையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர்.
Question 14
“இந்து-முஸ்லிம் வகுப்புவாதம், நடுத்தர வகுப்புகளுக்கிடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும்."  என்று கூறியவர் யார்?
A
கோகலே
B
இரவீந்திரநாத் தாகூர்
C
காந்தியடிகள்
D
ஜவஹர்லால் நேரு
Question 14 Explanation: 
விளக்கம்: இந்து-முஸ்லிம் வகுப்புவாதம், நடுத்தர வகுப்புகளுக்கிடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும். மனசாட்சியுள்ள இந்து மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் இத்தகைய வகுப்புவாதத்திலிருந்து முற்றிலும் விலகியே இருந்தனர்.” – ஜவஹர்லால் நேரு
Question 15
கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டவர் யார்?
A
அரவிந்த கோஷ்
B
லாலா லஜபதி ராய்
C
திலகர்
D
காந்தியடிகள்
Question 15 Explanation: 
விளக்கம்: இருபதாம் நூற்றாண்டின் முதல் பதிற்றாண்டில் அரசியல் தீவிரவாதம் சமய பழமைவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டபோது மோசமான நிலைக்கு மாறத்தொடங்கியது. திலகர், அரவிந்த கோஷ் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோர் சமய அடையாளங்கள், திருவிழாக்கள் ஆகிய தளங்களை பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வை ஊட்டினர். கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்டுவதற்கு திலகர் மேற்கொண்ட முயற்சி மேலும் தீவிரப்படுத்திய மற்றொரு காரணியாகும். 1909ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பஞ்சாப் இந்து சபை, இந்து இனவாத கருத்தியல் மற்றும் அரசியலுக்கான அடித்தளத்தை அமைத்தது. முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் கொள்கையை, இந்திய தேசிய காங்கிரஸ் பின்பற்றியதற்கு லால் சந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.
Question 16
1906 அக்டோபர் 1இல் முஸ்லிம்கள் யாருடைய தலைமையின் கீழ் ஒன்று திரண்டனர்?
A
சர் சையது அகமது கான்
B
ஆகாகான்
C
ஆசப் அலி
D
அசிர்கான்
Question 16 Explanation: 
விளக்கம்: 1906 அக்டோபர் 1இல் முஸ்லிம் பிரபுக்கள், ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஆகிய 35 பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரச பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
Question 17
முஸ்லிம் லீக் குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
முஸ்லிம்களின் நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை 1907ஆம் ஆண்டில் வழங்கியது.
B
இவ்வியக்கத்தில் பெரும் ஜமீன்தார்களும், முன்னாள் நவாப்புகளும் மற்றும் முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர்.
C
இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை மற்றும் அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது.
D
இவை அனைத்தும்
Question 17 Explanation: 
விளக்கம்: முஸ்லிம்களின் நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை 1907ஆம் ஆண்டில் வழங்கியது. இவ்வியக்கத்தில் பெரும் ஜமீன்தார்களும், முன்னாள் நவாப்புகளும் மற்றும் முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர். இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை மற்றும் அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது.
Question 18
அனைத்து இந்திய முஸ்லிம்லீக்கின் நோக்கங்கள் எவை?
A
இந்திய முஸ்லிம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல், மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்.
B
இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மேலும் தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்குத் தெரிவித்தல்.
C
இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்
D
இவை அனைத்தும்
Question 18 Explanation: 
விளக்கம்: தொடக்கத்தில் நகர்ப்புற மேல்தட்டு மக்களுக்கான ஒரு அமைப்பாகவே அனைத்து இந்திய முஸ்லிம் லீக் இருந்தது. இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்பைப் பெற்று இந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட பிரதிநிதித்துவ உறுப்பாக இது மாறியது. உருவாக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி பெறுவதை வெற்றிகரமாக சாதித்தது எனலாம். இது முஸ்லிம்களுக்கு அரசமைப்பு சார்ந்த அடையாளத்தை வழங்கியது. லக்னோ ஒப்பந்தம் (1916), முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.
Question 19
தனித்தொகுதி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
இந்த வகையான முறையில் முஸ்லிம் அல்லாதோரும் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
B
1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் பத்து இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது.
C
மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5 என்று ஒதுக்கியிருந்தது.
D
இவை அனைத்தும்.
Question 19 Explanation: 
விளக்கம்: தனித் தொகுதி அல்லது வகுப்புவாரித் தொகுதி: இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது. மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பின்வருமாறு ஒதுக்கியிருந்தது. அவையாவன: மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5.
Question 20
இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு எங்கு கூட்டப்பெற்றது?
A
பம்பாய்
B
பீகார்
C
ஹரித்துவார்
D
அலகாபாத்
Question 20 Explanation: 
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அம்பாலாவில் நடைபெற்ற ஐந்தாவது பஞ்சாப் இந்து மாநாட்டிலும், பெரோஷ்பூரில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக 1915இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது. அங்குதான் டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை தொடங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாகாண இந்துசபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப்பெற்றன. பம்பாயிலும், பீகாரிலும் இவ்வமைப்புகள் திறம்பட செயல்படவில்லை. சென்னையிலும் வங்காளத்திலும் ஓரளவிலான ஆதரவேயிருந்தது.
Question 21
மலபார் கிளர்ச்சியைப்பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்க.
A
1921இல் நடைபெற்ற குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சியின்போது அங்கு முஸ்லிம் இந்து விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் முஸ்லிம் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் களமிறங்கினர்.
B
அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின
C
இதன் விளைவாக நேருவே இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார்.
D
இவை அனைத்தும்.
Question 21 Explanation: 
விளக்கம்: 1921இல் நடைபெற்ற குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சியின் போது அங்கு முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது இந்து மகா சபை தன்னுடையப் பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று. அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின. இதன் விளைவாக காந்தியடிகளே இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார். மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென காந்தியடிகள் கோரிக்கை விடுத்தார்.
Question 22
அகண்ட இந்துஸ்தான்’ என்னும் முழக்கத்தை முன் வைத்த அமைப்பு எது?
A
பாரத மாதா சங்கம்
B
ஆரிய சமாஜ்
C
இந்து மகா சபா
D
கௌராக் ஷினி சபை
Question 22 Explanation: 
விளக்கம்: வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது. 1924இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார். அரசியல் களத்தில் இந்துமத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்துமகாசபை ‘அகண்ட இந்துஸ்தான்’ என்னும் முழக்கத்தை முன் வைத்தது. இது முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதிக் கோரிக்கைக்கு எதிராக வைக்கப்பட்டதாகும். இந்து மகாசபை நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு முரண்பட்டதாகவே இருந்தது. ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்காத இந்து மகாசபை, அதே நேரத்தில் தேசிய இயக்கத்திற்கும் தனது முழுமையான ஆதரவை நல்கவில்லை.
Question 23
1927 மார்ச் 20இல் டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்?
A
பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது.
B
பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.
C
பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்
D
இவை அனைத்தும்
Question 23 Explanation: 
விளக்கம்: 1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நிகழ்வுகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உன்னத வெளிப்பாடாய் அமைந்தது. மாநாடு முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தனித்தொகுதிக்கோரிக்கையை தாங்கள் கைவிடுவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர். அந்நான்கு கோரிக்கைகள் வருமாறு 1. பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது 2. பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது 3. பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் 4. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு. டெல்லி முஸ்லிம் மாநாடு வடிவமைத்த புதிய கருத்துக்களை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும் எஸ். ஸ்ரீனிவாசனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர். ஆனால் வகுப்புவாத உணர்வுகள் மிகவும் ஆழமாக வேர்விட்டிருந்ததால் இம்முன் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்து முஸ்லிம் பிரச்சனை மனிதர்களின் கைகளைத் தாண்டிச் சென்றுவிட்டதாகக் அரச பிரதிநிதிகருத்துக் கூறினார்.
Question 24
இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவர் யார்?
A
ஜின்னா
B
நேரு
C
எஸ். ஸ்ரீனிவாசன்
D
காந்தியடிகள்
Question 24 Explanation: 
விளக்கம்: இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்டிருந்த விரிசலைச் சுருக்குவதற்கான முயற்சிகளை ஜின்னா மேற்கொண்டிருந்தார். அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவராவார். ஆனால் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்து மகாசபையின் உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்து,ஒற்றுமைக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அழித்தபோது ஜின்னா, தான் கைவிடப்பட்டதாக வேதனையுற்றார். இதன் பின்னர் பெரும் ஆற்றாமைக்கு உள்ளான ஜின்னா நாட்டை விட்டு வெளியேறினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு முதல்தரமான வகுப்புவாதியாக நாடு திரும்பினார்.
Question 25
ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A
1923
B
1925
C
1927
D
1930
Question 25 Explanation: 
விளக்கம்: 1925இல் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் (R.S.S.) விரிவடைந்து கொண்டிருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1,00,000 மாக உயர்ந்தது. K.B. ஹெட்கேவர் , V.D. சவார்க்கர், M.S. கோல்வாகர் ஆகியோர் இந்து ராஷ்டிரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர். “இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” அவர்கள் அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர்.
Question 26
“இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்” எனக்கூறியவர் யார்?
A
M.S. கோல்வாகர்
B
K.B. ஹெட்கேவர்
C
ஸ்ரீனிவாசன்
D
V.D. சவார்க்கர்
Question 26 Explanation: 
விளக்கம்: என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர். “இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்” என V.D. சவார்க்கர் உறுதிபடக்கூறினார். 1934 முதலாகவே தனது உறுப்பினர்கள் இந்து மகாசபையிலோ ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலோ இணைவதைக் காங்கிரஸ் தடைசெய்தது. ஆனால் டிசம்பர் 1938இல் தான் காங்கிரஸ் செயற்குழு இந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்தது.
Question 27
1937இல்  நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை மாகாணங்களில் வெற்றி பெற்றது?
A
7
B
11
C
9
D
3
Question 27 Explanation: 
விளக்கம்: 1937இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சி பெற்றது. ஆனால் அரசு அதற்கு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது. முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. முஸ்லிம் லீக்கை காங்கிரசிற்கு சமமான சக்தியாகவே நடத்தியது.
Question 28
1939இல் இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்?
A
லின்லித்கோ
B
வேல்ஸ்
C
தார்ன்
D
இராபர்ட்
Question 28 Explanation: 
விளக்கம்: 1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார். காங்கிரசைக் கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டதால் காங்கிரஸ் மிகவும் ஆத்திரமடைந்தது. காங்கிரஸ் செயற்குழு மாகாணங்களைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமாச் செய்ய அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்த பின்னர் மாகாண நிர்வாகப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொண்டனர்.
Question 29
முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றிய ஆண்டு?
A
1940
B
1938
C
1939
D
1941
Question 29 Explanation: 
விளக்கம்: காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு நாளாக 1939 டிசம்பர் 22இல் முஸ்லிம் லீக் கொண்டாடியது. அன்று பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட செயல்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசியவாத முஸ்லிம்களின் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரானதென பெயரிடப்பட்டு சிறுமைபடுத்தப்பட்டன. இவ்வாறான சூழலில் 1940 மார்ச் 26இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.
A
1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது.
B
1946இல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட 33 இடங்களிலும் வென்றதோடு, மற்ற மாகாணங்களில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களையும் வென்றது.
C
காங்கிரஸ் கட்சி பொது தொகுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக கைப்பற்றியது.
D
a) மற்றும் c)
Question 31
கீழ்க்கண்டவற்றுள்  பெதிக் லாரன்ஸ் தலைமையிலான  மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு முன் வைத்த அம்சங்கள் எவை?
A
இத்திட்டமானது இந்தியாவிற்கு இரண்டடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையைப் பரிந்துரைத்தது.
B
இந்த கூட்டாட்சி முறையில் டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கம் ஒருங்கிணைக்கப்பாளராகவும் வெளியுறவு விவகாரங்கள், தகவல்தொடர்பு, பாதுகாப்பு மற்றும் ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதி வழங்குதல் ஆகிய குறைந்தபட்ச, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும்
C
இத்துணைக் கண்டத்தின் மாகாணங்கள் இரண்டு பெரும் குழுக்களாக வகைப்படுத்தப்படும்.
D
அனைத்தும்
Question 31 Explanation: 
விளக்கம்: இத்திட்டமானது இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையைப் பரிந்துரைத்தது, இந்த கூட்டாட்சி முறையில் டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கம் ஒருங்கிணைக்கப்பாளராகவும் வெளியுறவு விவகாரங்கள், தகவல்தொடர்பு, பாதுகாப்பு மற்றும் ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதி வழங்குதல் ஆகிய குறைந்தபட்ச, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இத்துணைக் கண்டத்தின் மாகாணங்கள் மூன்று பெரும் குழுக்களாக வகைப்படுத்தப்படும்: இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான, பம்பாய் மாகாணம், மதராஸ் மாகாணம், ஐக்கிய மாகாணம், பீகார், ஒரிசா மற்றும் மத்திய மாகாணம் ஆகியன குழு - அ - வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுச்சிஸ்தான் ஆகியன குழு - ஆ - வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட வங்காளமும் இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அசாமும் குழு - இ - யில் அடங்கும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் இந்த மாகாண அரசாங்கங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டு விளங்கும்.
Question 32
முஸ்லிம்களுக்கு நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுபட முஸ்லிம் லீக் அழைப்பு விடுத்த தினம்?
A
ஆகஸ்ட் 16
B
ஆகஸ்ட் 15
C
ஆகஸ்ட் 17
D
ஆகஸ்ட் 19
Question 32 Explanation: 
விளக்கம்: காங்கிரஸ் தலைவர்களும் ஜின்னாவும் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப்பின் 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்ததோடு, இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று ‘நேரடி நடவடிக்கை நாளில்’ ஈடுபடவும் அழைப்பு விடுத்தது. கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின. இது கடுமையான வன்முறைத் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றதோடு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதுவரை நாட்டைப் பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காந்தியடிகள் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.
Question 33
இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சி உருவாக்கப்பட்ட இடங்கள்?
A
தாஷ்கண்ட்
B
சோவியத் யூனியன்
C
a) மற்றும் c)
D
மீரட்
Question 33 Explanation: 
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின் செல்வாக்கும் படிப்படியாகச் சுதந்திரப்போராட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கமும் 1920 களின் பிற்பகுதியில் கணிசமான அளவில் உணரப்பட்டது. இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது எம்.என். ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா,முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால் உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒரு புதிய புரட்சிகர தேசியவாத சகாப்தம் தோன்ற வழிவகுத்தது.
Question 34
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் எங்கு  தொடங்கப்பட்டது?
A
கான்பூர்
B
பெஷாவர்
C
பம்பாய்
D
மீரட்
Question 34 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் பல புரட்சிகர தேசியவாதக் குழுக்கள் செயல்பட்டுவந்தன.முன்னதாக சோவியத் ரஷ்யாவின் வடிவில் ஒரு கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது இந்தியாவில் ஆங்கிலேயருக்குப் பெரிதும் அச்சமூட்டியது. 1921 ஜூன் 3இல் முதல் புரட்சிகர தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வந்தனர். கலகம் விளைவிப்பதற்காக இந்தியாவுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் வந்துள்ளனர் என்று குற்றம் சாட்டி, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். 1922-1927ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஐந்து சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றுள் முதலாவதுபெஷாவர் சதி வழக்கு ஆகும். இதனைத் தொடர்ந்து கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு 1924ஆம் ஆண்டிலும் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் பம்பாயில் முறைப்படி தொடங்கப்பட்டது.
Question 35
1925இல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் குழுக்களின் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர் யார்?
A
திரு. வி. க
B
முத்துராமலிங்கர்
C
சிங்கார வேலர்
D
காமராசர்
Question 35 Explanation: 
விளக்கம்: டிசம்பர் 1925இல் இந்தியாவெங்கிலும் இருந்து வந்திருந்த பல்வேறு கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து சிங்காரவேலர் சென்று கலந்துகொண்டார். அங்கிருந்துதான் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டது.
Question 36
திரு. வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை தோற்றுவித்தவர் யார்?
A
வ.உ.சி
B
முத்துராமலிங்கர்
C
சிங்கார வேலர்
D
காமராசர்
Question 36 Explanation: 
விளக்கம்: எம். சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 – 11 பிப்ரவரி 1946) மதராசில் பிறந்தார். இவர் இளமைக் காலத்தில் புத்தமதத்தைத் தழுவியவர். பிற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் பலரைப் போன்று இவரும் ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயல்பட்டவர். எனினும், சில காலத்திற்குப் பிறகு அவர் புரட்சிகர தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். திரு. வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார். 1923ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார். 1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அதற்காகத் தண்டனை பெற்றார்.
Question 37
சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவர் யார்?
A
கல்பனா தத்
B
கவஸ்ஜீ நானாபாய் தவர்
C
துவாரகநாத் தாகூர்
D
சூரியா சென்
Question 37 Explanation: 
விளக்கம்: சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவரான சூரியா சென் “தனிப்பட்ட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஏற்பாடு செய்வது என்னும் பாதையை ஓர் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் பட்டாளம் காட்டித்தர வேண்டும். அதன் போக்கில் நம்மில் பலர் இறக்க நேரிடும். ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்கான நமது தியாகம் வீண் போகாது“ என்று ஆனந்த குப்தாவிடம் கூறினார். 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கமடைந்துவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும். அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன், கதரையும் அணிந்துவந்தவர். அவருடைய குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது.
Question 38
சிட்டகாங் படைத்தளம் எந்த ஆண்டு தாக்கித் தகர்க்கப்பட்டது?
A
1928
B
1933
C
1930
D
1932
Question 38 Explanation: 
விளக்கம்: சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்குப் பின் அதுபோன்று பெயர் சூட்டிக்கொண்டது . சிட்டகாங்கைக் கைப்பற்றுவதற்காக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது. மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே உட்பட அனைத்துத் தகவல்தொடர்பு வலைப்பின்னல்களையும் துண்டிக்கும் பொருட்டு தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் ஆகியவற்றின் மீது அது போன்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாகச் சவால் விடுக்கும் நோக்குடன் அது நடந்தேறியது.
Question 39
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன?
A
3
B
4
C
5
D
6
Question 39 Explanation: 
விளக்கம்: புரட்சியாளர்கள் தேசியக்கொடியை ஏற்றி ’வந்தே மாதரம்’, ’புரட்சி ஓங்குக’ போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்த்தினர். இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன. பெரிதும் அவர்கள் கிராமங்களிலிருந்து செயல்பட்டனர். கிராமத்தினர் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்தனர். அதற்காக அவர்கள் காவலர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். தொடர்ந்த நடவடிக்கைகளின் காரணமாக ஆயுதப்படைத் தாக்குதல் தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. சூரியா சென்னைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் பிடித்தன. பிப்ரவரி 1933இல் அவர் கைதானார். பதினொரு மாதங்கள் கழித்து 1934 ஜனவரி 12இல் அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சிட்டகாங் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கல்பனா தத்தும் ஒருவர் ஆவார்.
Question 40
கீழ்க்கண்டவற்றுள் சரியான  கூற்றை தேர்க.
A
புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் கல்பனா தத் கைது செய்யப்பட்டார்.
B
தண்டனையாக சூர்யா சென்னும் கல்பனா தத்தும் வாழ்நாள் முழுதும் நாடுகடத்தப்பட்டனர்.
C
சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில் "பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது."
D
இவை அனைத்தும்
Question 40 Explanation: 
விளக்கம்: புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றதினால் கல்பனா தத் கைது செய்யப்பட்டார். தண்டனையாக சூர்யா சென்னும் கல்பனா தத்தும் வாழ்நாள் முழுதும் நாடுகடத்தப்பட்டனர். சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில் "பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது." சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் தொடங்கி அவர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்கு விசாரணையும் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு வழக்கு என அறியப்படுகிறது. Chittagong Armoury Raiders’ Reminiscences என்னும் தனது நூலில் சிட்டகாங்கின் புரட்சிகர இளைஞர்கள் நம்பிக்கையுடன் போரிட்டால் வெளியாட்களின் உதவியின்றி கூட அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடியும் என்று நிரூபித்துள்ளதை நினைவூட்டுகிறார்.
Question 41
மார்ச் 1931இல் நடந்த கராச்சி அமர்வுக்கு தலைமை வகித்தவர் யார்?
A
சர்தார் வல்லபாய் படேல்
B
நேரு
C
காந்தியடிகள்
D
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
Question 41 Explanation: 
விளக்கம்: மார்ச் 1931இல் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது. பின் இதுவே சுதந்திர இந்தியாவிற்கான இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது. இந்த உரிமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதிசெய்வது யாதெனில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் என்பது பிரித்துப் பார்க்கமுடியாத ஒன்றாகும்.
Question 42
1906இல் இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டவர் யார்?
A
மிண்டோ
B
வேவல்
C
கர்சன்
D
லிட்டன்
Question 42 Explanation: 
விளக்கம்: 1906இல் மிண்டோ பிரபு இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது. வேற்றுமைகள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் 1906இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
Question 43
தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட  இடம் எது?
A
பூனா
B
பஞ்சாப்
C
வங்காளம்
D
சூரத்
Question 43 Explanation: 
விளக்கம்: காங்கிரசின் 1907 ஆம் ஆண்டு மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர். காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர். இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார்.
Question 44
சூரத் பிளவுக்கு பின் உருவான காங்கிரஸ் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
காந்தியின் காங்கிரஸ்
B
கோகலே காங்கிரஸ்
C
பிகாரி காங்கிரஸ்
D
மேத்தா காங்கிரஸ்
Question 44 Explanation: 
விளக்கம்: டிசம்பர் 1885இல் உருவான காங்கிரஸ் இப்போது மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது. சூரத் பிளவுக்குப் பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன் நடந்துகொண்டது. தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் "மேத்தா காங்கிரஸ்" என அழைக்கப்பட்டது. 1908இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் ஆங்கில அரசின் மீதான தங்கள் விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்தினர். ஆங்கில ஆட்சிக்கு சவாலாக இருக்கும் எண்ணமில்லாத காங்கிரஸ் ஓர் வலுவற்ற அரசியல் சார்ந்த அமைப்பாயிற்று. தீவிர தேசியவாதிகளினால் அதுபோன்ற அரசியல் சார்ந்த அமைப்பை உருவாக்க இயலவில்லை. முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு முறையே அதற்கான முக்கியக் காரணமாகும்.
Question 45
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் அக்காரா எனப்பட்டவை எவை?
A
அறநிலையங்கள்
B
பிராமணர் வாழுமிடம்
C
பள்ளிகள்
D
உடற்பயிற்சி நிலையங்கள்
Question 45 Explanation: 
விளக்கம்: வங்காளத்தில் புரட்சிகர பயங்கரவாதமானது முன்னதாகவே வளர்ந்துவிட்டது. 1870களில் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாவல் வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது. அந்நாவலின் ஒருபகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
Question 46
சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு பங்களிப்புச்செய்த காரணிகள் எவை?
A
அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.
B
இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வியடைந்தது தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று
C
புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகாண்மையை (வீரத்தை) மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிகர தேசியவாதிகள் நம்பினர்.
D
இவை அனைத்தும்.
Question 46 Explanation: 
விளக்கம்: இவ்வாறான நடவடிக்கைகள் ரஷ்யாவில் நடந்ததைப் போல திட்டமிடப்பட்ட ஒரு புரட்சிக்கு செல்லவில்லை. பெரும்பாலுமான புரட்சிகர நடவடிக்கைகள் சில குறிப்பிட்ட அடக்கியாளும் ஆங்கில அதிகாரிகளைக் கொலைசெய்யும் முயற்சிகளாகவே அமைந்தன.
Question 47
கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அனுசீலன் சமிதி யாரால் தொடங்கப்பட்டது?
A
ஜதிந்தரநாத் பானர்ஜி
B
அரவிந்த கோஷ்
C
பரீந்தர்குமார் கோஷ்
D
a) மற்றும் c)
Question 47 Explanation: 
விளக்கம்: வங்காளத்தில் 1902இல் பல ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்தே புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது. அவைகளுள் ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அனுசீலன் சமிதி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதைப்போலவே புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி 1906இல் உருவானது. இதன் தொடர்ச்சியாக புரட்சிகர வார இதழான யுகாந்தர் தொடங்கப்பெற்றது. கல்கத்தா அனுசீலன் சமிதி விரைவில் தன்னுடைய செயல்பாடுகளைத் துவங்கியது. இது நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906இல் சங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை நடத்தியது.
Question 48
அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டமும் அங்கு தீட்டப்பட்டது.
B
கொலை செய்யும் பொறுப்பு இளம் புரட்சிவாதிகளான 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
C
1908 ஏப்ரல் 30இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ் போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கிலப் பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
D
இவை அனைத்தும்
Question 48 Explanation: 
விளக்கம்: பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொள்ள, குதிரம் போஸ் கைது செய்யப்பட்டு பின்னர் கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார்.அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் முப்பந்தைந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். சித்தரஞ்சன் தாஸ் இவ்வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடினார். இது அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு எனப்படுகிறது.
Question 49
அரவிந்த கோஷ் விடுதலைக்குப் பின்னர்  தேர்ந்தெடுத்த பாதை எது?
A
கல்வி
B
ஆன்மிகம்
C
அறிவியல்
D
இராணுவம்
Question 49 Explanation: 
விளக்கம்: அரவிந்த கோஷ் விடுதலைக்குப் பின்னர் ஒரு ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து தனது இடத்தைப் பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொண்டு 1950இல் தான் இயற்கை எய்தும் வரை அங்கேயே தங்கியிருந்தார். ஒரு ஆயுதமேந்தியப் புரட்சியை முன்னெடுப்பது எனும் அரவிந்தரின் கருத்து நிறைவேறவேயில்லை. அரசு அடக்குமுறை மக்களின் மறுப்பு ஆகிய இரு காரணங்களும் இணைந்து வங்காளத்தில் புரட்சிகர இயக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையக் காரணமாயிற்று. புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் பிராமணர், காயஸ்தர், வைசியர் ஆகிய மூன்று உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் புரட்சிகர பயங்கரவாதம் சில சமூகம் தொடர்பான பாதிப்புக்குள்ளானது.
Question 50
பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர் யார்?
A
அன்னி பெசண் ட்
B
ராஜாராம் மோகன்ராய்
C
மதன்மோகன் மாளவியா
D
இந்துலால் யக்னிக்
Question 50 Explanation: 
விளக்கம்: A.O. ஹுயூம் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் நமது விடுதலைப் போரின் தொடக்க காலத்தில் முக்கியப்பங்கினை ஆற்றினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் இதேபோன்றதொரு முக்கியப்பணியை ஆற்றினார். அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசண்ட், பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக்கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார். பிரம்மஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசண்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893இல் வந்தார். பனாரஸில் (வாரணாசியில்) மத்திய இந்துக் கல்லூரியை அவர் நிறுவினார்.
Question 51
தி காமன்வீல் என்ற வாரந்தியை தொடங்கியவர் யார்?
A
அன்னி பெசண் ட்
B
ராஜாராம் மோகன்ராய்
C
மதன்மோகன் மாளவியா
D
இந்துலால் யக்னிக்
Question 51 Explanation: 
விளக்கம்: 1914இல் தி காமன்வீல் என்ற வாரந்திரியை அவர் தொடங்கினார். சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்த வாராந்திரி கவனம் செலுத்தியது. 1915இல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார். கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்றிய தேசிய விழிப்புணர்வின் தொடக்கங்களை அவர் இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.
Question 52
தன்னாட்சி இயக்கத்தின்  குறிக்கோள்கள் எவை?
A
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது
B
தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது
C
நாட்டுப்பற்றை வளர்ப்பது
D
a) மற்றும் b)
Question 52 Explanation: 
விளக்கம்: ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசண்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்: பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும் தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.
Question 53
தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1917
B
1918
C
1919
D
1916
Question 53 Explanation: 
விளக்கம்: ஏப்ரல் 1916இல் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும். திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், ஏப்ரல் 1917இல் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது. தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23இல் தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.
Question 54
1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கியவர் யார்?
A
அன்னி பெசண் ட்
B
ராஜாராம் மோகன்ராய்
C
மதன்மோகன் மாளவியா
D
காந்தியடிகள்
Question 54 Explanation: 
விளக்கம்: இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட அவர் இந்திய விடுதலை குறித்து பல உரைகளை நிகழ்த்தினார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியக் கட்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வி கண்டார். எனினும் அவரது பயணம் மூலம் இந்தியா குறித்த அனுதாபம் ஏற்பட்டது. இந்தியா திரும்பிய அவர், 1915 ஜூலை 14இல் நியூ இந்தியா என்ற தினசரியைத் தொடங்கினார். பம்பாயில் நிகழ்த்திய உரையில் தன்னாட்சி குறித்த தனது கொள்கையை அவர் செப்டம்பர் மாதத்தில் வெளிப்படுத்தினார். “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்.” ஆங்கிலேயக் காலனிகளைப் போன்று போருக்குப் பிறகு இந்தியாவுக்கு தன்னாட்சி கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பரப்பவும் கோரிக்கையை வலியுறுத்தவும் அன்னிபெசண்ட் அம்மையார் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.
Question 55
பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக தனது அரசப் பட்டத்தை (knighthood) துறந்தவர் யார்?
A
எஸ். சுப்ரமணியம்
B
கலிக்குஸ்மான்
C
ஜார்ஜ் அருண்டேல்
D
சுரேந்திரநாத் பானர்ஜி
Question 55 Explanation: 
விளக்கம்: ஜூன் 1917இல் பெசண்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் பி.பி.வாடியா, ஜார்ஜ் அருண்டேல் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக ஊட்டியில் சிறைபிடிக்கப்பட்டனர். அரசின் இந்த அடக்குமுறை தன்னாட்சி கோரிய ஆதரவாளர்களை வலுப்படுத்தியது; மேலும் அதிக உறுதியுடன் போராடத் தூண்டியது. பெசண்ட் அம்மையாருக்கு ஆதரவாக சர். எஸ். சுப்ரமணியம் அரசப் பட்டத்தை (knighthood) துறந்தார். முன்னர் இந்த இயக்கத்தில் இருந்து தனித்து இருந்த மதன் மோகன் மாளவியா, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்கள் தங்களை தன்னாட்சி இயக்கத்தில் தீவிரமாக இணைத்துக்கொண்டனர்.
Question 56
யாருடைய உத்தரவின்பேரில் பெசண்ட் மற்றும் இதர தலைவர்களை சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் பேரணியாகச் சென்றனர்?
A
கோகலே
B
திலகர்
C
நேரு
D
காந்தியடிகள்
Question 56 Explanation: 
விளக்கம்: தலைவர்கள் விடுதலையாகாவிட்டால் சட்டமறுப்பு இயக்கத்தை அரசுக்கு எதிராகப் பயன்படுத்துவது குறித்து 1917 ஜூலை 28இல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் திலகர் வலியுறுத்தினார். காந்தியடிகளின் உத்தரவின்பேரில் ஜம்னாதாஸ், துவாரகாதாஸ் மற்றும் ஷங்கர்லால் பன்கர் ஆகியோர் பெசண்ட் மற்றும் இதர தலைவர்களை சிறைபிடித்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஓராயிரம் நபர்களிடம் கையெழுத்து வாங்கி பெசண்ட் அம்மையார் சிறைபிடிக்கப்பட்ட இடத்துக்கு பேரணியாகச் சென்றனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து சிறைபிடிக்கப்பட்டத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Question 57
தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று அறிவித்தவர் யார்?
A
மார்லி
B
மாண்டேகு
C
மிண்டோ
D
செம்ஸ்போர்டு
Question 57 Explanation: 
விளக்கம்: தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என்று புதிய வெளியுறவு அமைச்சர் மாண்டேகு 1917 ஆகஸ்டு 20இல் அறிவித்தார். இந்த அறிக்கை ஒரே இரவில் பெசண்ட் அம்மையாரை விசுவாசிக்கு நிகராக மாற்றியது. செப்டம்பர் 1917இல் அவர் விடுதலையானபோது அவர் 1917இல் இந்திய தேசிய காங்கிரஸ் கல்கத்தா மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Question 58
கீழ்க்கண்டவற்றுள் தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் எது?
A
காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்றுதிரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன.
B
காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன்முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்
C
இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர்.
D
இவை அனைத்தும்
Question 58 Explanation: 
விளக்கம்: காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்றுதிரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன. காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முதன்முதலில் ஈடுபட்டோரில் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள். இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்தியடிகளின் போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர். அனைத்துவிதப் பிரிவுகளைத் தாண்டி காங்கிரஸ், முஸ்லிம் லீக், பிரம்மஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.
Question 59
கீழ்க்கண்டவற்றுள்  தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எவை?
A
வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது
B
உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
C
a) மற்றும் b)
D
இவற்றில் எதுவுமில்லை.
Question 59 Explanation: 
விளக்கம்: 'Indian unrest' என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை நடத்துவதற்காக செப்டம்பர் 1918இல் திலகர் பிரிட்டனுக்குச் சென்றது மற்றும் உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்ட் ஏற்றுக்கொண்ட பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.
Question 60
கீழ்க்கண்டவற்றுள் லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள் எவை?
A
மாகாணசபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது.
B
இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
C
கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
D
இவை அனைத்தும்.
Question 60 Explanation: 
விளக்கம்: இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பியான ஜின்னாவை "இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்" என்று சரோஜினி அம்மையார் அழைத்தார். லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது. இந்த ஒற்றுமை கிலாஃபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது அதன் உச்சத்தை அடைந்தது.
Question 61
தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கியவர்?
A
லிட்டன்
B
கர்சன்
C
ரிப்பன்
D
கானிங்
Question 61 Explanation: 
விளக்கம்: தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார். பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908), வெடிபொருட்கள் சட்டம் (1908), அதன்பிறகு இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910), தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் தொடர்பில் சில இந்திய தேசியவாதிகள் இருந்ததாக பிரிட்டிஷார் சந்தேகப்பட்டனர். வெளிநாட்டினரின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது. புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டங்கள் இயற்றப்பட்டன.
Question 62
தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு வழங்கப்பட்ட பட்டம்?
A
சர்
B
அரசப்பட்டம்
C
கெய்சர்-இ ஹிந்த்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 62 Explanation: 
விளக்கம்: தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இஹிந்த் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1906இல் ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட அவரது சேவைகளைப் பாராட்டி ஜுலு போர் வெள்ளிப்பதக்கம் காந்தியடிகளுக்கு வழங்கப்பட்டது. 1899-1900களில் போயர் போரின்போது தூக்குபடுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப்பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
Question 63
காந்தியடிகள் எந்தப்போராட்டத்தை தொடங்கியபோது, அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்தார்?
A
சுதேசி இயக்கம்
B
ஒத்துழையாமை இயக்கம்
C
தனி நபர் சத்தியாகிரகம்
D
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
Question 63 Explanation: 
விளக்கம்: கிலாபத் இயக்கத்தின் தொடர்பில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கியபோது, அனைத்துப் பதக்கங்களையும் திரும்ப ஒப்படைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த ஒரு மாத காலமாக நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதிபத்திய அரசு நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்துகொண்டதுடன், தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன. இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை.
Question 64
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு  தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தவர்?
A
சுரேந்திரநாத் பானர்ஜி
B
சந்திர சாட்டர்ஜி
C
தேவேந்திரநாத்தாகூர்
D
இரவீந்திரநாத்தாகூர்
Question 64 Explanation: 
விளக்கம்: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தார். 1919 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) அனுப்பிய எதிர்ப்புக் கடிதத்தில் தாகூர் இவ்வாறு எழுதினார். “இணக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்புக்குரிய பட்டம் திகழ்கிறது. மனிதர்களாகக் கூடக் கருத முடியாத நிலையில் மதிப்பிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக, எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்புப் பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்.”
Question 65
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற நாள்?
A
ஏப்ரல் 15
B
ஏப்ரல் 31
C
ஏப்ரல் 28
D
ஏப்ரல் 13
Question 65 Explanation: 
விளக்கம்: நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது. 1919 ஏப்ரல் 13இல், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக் களத்தில் குழுமியிருந்தனர். பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாடம் புகட்விரும்பினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்துக்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக்கொண்ட மக்களைக் குறிவைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார். அரசு தகவல்களின் படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்தபோதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும். ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்லமுடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.
Question 66
ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30இல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை படுகொலை செய்தவர் யார்?
A
உதய்சிங்
B
உதம்சிங்
C
முகமது அலி
D
குருதேவ்
Question 66 Explanation: 
விளக்கம்: கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின்பருவ இளைஞரான உதம் சிங் இந்த நிகழ்வை தனது கண்களால் கண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30இல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம் சிங் படுகொலை செய்தார். லண்டனின் பெண்டோன்வில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்.
Question 67
கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கியவர்கள் யார்?
A
சௌகத் அலி
B
முகமது அலி
C
அபுல் கலாம் ஆசாத்
D
இவர்கள் அனைவரும்
Question 67 Explanation: 
விளக்கம்: இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து அக்கறை கொண்ட காந்தியடிகளும் காங்கிரசும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட முஸ்லிம் தோழர்களுக்குத் துணையாக நின்றனர். மௌலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி என்ற சகோதரர்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.
Question 68
எங்கு நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
A
பம்பாய்
B
லக்னோ
C
கல்கத்தா
D
சீராம்பூர்
Question 68 Explanation: 
விளக்கம்: கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்தது. 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
Question 69
மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் எந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
A
நாக்பூர்
B
பெல்காம்
C
கல்கத்தா
D
சீராம்பூர்
Question 69 Explanation: 
விளக்கம்: மொழிசார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். காங்கிரஸின் அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாகப் பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று 4 அணா (25 பைசா) என்கிற குறைவான கட்டணத்தில் கிராமத்தினரைக் காங்கிரஸில் சேர்க்கவேண்டும். இதனால் காங்கிரஸின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மாற்றம் பெற்றன. நாட்டின் பெயரில் ஒன்றுசேர்ந்த மக்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Question 70
ஒத்துழையாமை இயக்கம் கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
A
பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல்
B
அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது
C
தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
D
இவை அனைத்தும்.
Question 70 Explanation: 
விளக்கம்: பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன. மாற்றாக, தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப் பின்னர் இந்தப் போராட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
Question 71
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை  தேர்க.
A
ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கவேண்டிய வரிகளை நிறுத்திவைத்தனர்.
B
சி. இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது.
C
கேரளாவில் ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.
D
இவை அனைத்தும்.
Question 71 Explanation: 
விளக்கம்: ஒத்துழையாமை இயக்கப்போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் தென்னிந்தியா முன்னேறிச் சென்றது. ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கவேண்டிய வரிகளை நிறுத்திவைத்தனர். சிராலா-பெராலாப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்துக் கூட்டம் கூட்டமாக நகரங்களைக் காலி செய்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும் ஷான்போக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி. இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது. கேரளாவில் ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.
Question 72
ஒத்துழையாமை இயக்கத்தின்போது நடைபெற்ற கலவரங்கள் எவை?
A
ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்.
B
மலபாரில் முஸ்லிம் (மாப்பிள்ளை) விவசாயிகள் ஆயுதமேந்தி உயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
C
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
D
இவை அனைத்தும்
Question 72 Explanation: 
விளக்கம்: உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 1922 பிப்ரவரி 5இல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அைத எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
Question 73
சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று  அழைக்கப்பட்ட குழுவில் இணைந்த தமிழர் யார்?
A
இராஜாஜி
B
காமராசர்
C
சத்திய மூர்த்தி
D
பெரியார்
Question 73 Explanation: 
விளக்கம்: ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர். தீவிர அரசியலுக்குத் திரும்பவேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள். சீர்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர். சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார்.
Question 74
கீழ்க்கண்டவர்களுள்  மாற்றம் விரும்பாதோர் குழுவை சேர்ந்தவர்கள் யார்?
A
இராஜாஜி
B
வல்லபாய் பட்டேல்
C
இராஜேந்திர பிரசாத்
D
இவை அனைத்தும்
Question 74 Explanation: 
விளக்கம்: சட்டப்பே ர வை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்தியடிகளி ன் வழியைப் பின்பற்றி மக்களை ஒன்றுதிரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது. இந்தக் குழுவுக்கு இராஜாஜி, வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர். எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணி வலியுறுத்தியது. இவர்கள் மாற்றம் விரும்பாதோர் (No-changers) என்று அழைக்கப்பட்டனர். தேர்தல் அரசியல் தேசியவாதிகளின் கவனத்தைத் திசை திருப்பும் என்றும் மக்களை ஒன்றுதிரட்டும் பணிகளில் இருந்து அவர்கள் விலகிச்செல்ல வைத்துவிடும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
Question 75
புரட்சியாளர்களுக்கு எதிராக அரசு சதித்திட்ட வழக்குகளைத் தொடர்ச்சியாக எந்தெந்த  இடங்களில் பதிவு செய்தது?
A
கான்பூர்
B
மீரட்
C
காக்கோரி
D
இவை அனைத்தும்
Question 75 Explanation: 
விளக்கம்: இடதுசாரி சித்தாந்தத்தைப் பரப்புவதில் ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடதுசாரி சித்தாந்தங்களையும் பரப்புவதற்கு தங்கள் பங்களிப்பை நல்கினார்கள். காலனி ஆதிக்க சுரண்டல் மற்றும் உள்நாட்டில் முதலாளிகள் நடத்திய சுரண்டல் இரண்டுக்கும் எதிராகச் சண்டையிடவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். எஸ். ஏ. டாங்கே, எம். என். ராய், முஜாஃபர் அகமது ஆகியோர் கட்சியின் மூத்தத் தலைவரான தமிழ்நாட்டின் சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளைத் தொடங்கி வைத்தனர். கம்யூனிச சோஷலிசவாதிகள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு அவர்கள் மீது சதித்திட்ட வழக்குகளைத் தொடர்ச்சியாக கான்பூர்,மீரட், காக்கோரி ஆகிய இடங்களில் பதிவு செய்தது. நூல் நூற்பது, மது அருந்தாமை, இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமையை ஒழிப்பது, ஊரகப்பகுதி மக்களை ஒன்று திரட்டி மக்கள் இயக்கங்களில் பங்கேற்கச் செய்வது ஆகிய காந்தியடிகளின் ஆக்கப்பணிகளைத் தொடர அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
Question 76
1927இல்  காங்கிரஸ் வருடாந்திர மாநாடு எங்கு நடைபெற்றது?
A
சென்னை
B
பெல்காம்
C
கல்கத்தா
D
சீராம்பூர்
Question 76 Explanation: 
விளக்கம்: 1929-30ஆம் ஆண்டில் அரசியல்சாசன சீர்திருத்தங்களின் முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. இதன் ஆயத்தத்தில் சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக் குழு அமைந்தது. வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அது இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது. 1927இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இந்து மகா சபையும் முஸ்லிம் லீக் அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன.
Question 77
முழுமையான சுதந்திரம் அடைவது என்பதை காங்கிரஸ் கட்சி எந்த மாநாட்டில் அறிவித்தது?
A
சென்னை
B
பெல்காம்
C
கல்கத்தா
D
லாகூர்
Question 77 Explanation: 
விளக்கம்: இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும். முழுமையான சுதந்திரம் அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் அறிவித்தது. 1929 டிசம்பர் 31இல் லாகூரில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Question 78
கீழ்க்கண்டவற்றுள் தண்டி யாத்திரை குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
காந்தியடிகளின்சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ளதண்டி வரை 375 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது.
B
அனைத்துப் பகுதிகளின் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25 ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6இல் சென்று அடைந்தார்.
C
ஒரு பிடி உப்பைக் கையில் அள்ளி உப்புக்கு வரி செலுத்தும் சட்டத்தைத் தவிடுபொடியாக்கினார்.
D
இவை அனைத்தும்.
Question 78 Explanation: 
விளக்கம்: இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தண்டி யாத்திரையை அறிவித்தார். அனைவருக்கும் அவசியமான பொருளான உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும். காலனி ஆதிக்க அரசு உப்பு மீது வரி விதித்ததோடு அதன் மீது ஆளுமை செலுத்திவந்தது. காந்தியடிகளின்சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத் கடற்கரையோரம் உள்ளதண்டி வரை 375 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது. அனைத்துப் பகுதிகளின் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25 ஆவது நாளில் அதாவது 1930 ஏப்ரல் 6இல் சென்று அடைந்தார். இந்த நடைபயணத்தின் முழுமையான காலத்திலும் முழு உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிக்கைகள் இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு பிடி உப்பைக் கையில் அள்ளி உப்புக்கு வரி செலுத்தும் சட்டத்தைத் தவிடுபொடியாக்கினார். அடக்குமுறைச்சார்ந்த காலனி ஆதிக்க அரசு மற்றும் அதன் அநியாய சட்டங்களுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்றுதிரண்டு அவற்றை ஏற்க மறுப்பதன் அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்தது.
Question 79
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற காலம்?
A
1930 ஏப்ரல் 13 முதல் 1930 ஏப்ரல் 28 வரை
B
1930 ஏப்ரல் 18 முதல் 1930 ஏப்ரல் 28 வரை
C
1930 ஏப்ரல் 15 முதல் 1930 ஏப்ரல் 23 வரை
D
1930 ஏப்ரல் 13 முதல் 1930 ஏப்ரல் 26 வரை
Question 79 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது. திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது தான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1930 ஏப்ரல் 13இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28இல் முடிவடைந்தது. நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெ.ஏ. தார்ன் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உண்ண உணவும் இளைப்பாற இடமும் கொடுத்தனர். யாரெல்லாம் உணவும் உறைவிடமும் கொடுக்க தைரியத்துடன் முனைந்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய இடங்கள் வழியாக சென்ற சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
Question 80
கீழ்க்கண்டவற்றுள் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அம்சங்கள் எவை?
A
சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார்.
B
இந்த இயக்கத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
C
காங்கிரஸின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்ட மேசைமாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.
D
இவை அனைத்தும்
Question 80 Explanation: 
விளக்கம்: காங்கிரஸின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்ட மேசைமாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். உப்பைச் சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நியத்துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத் சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) மறுத்துவிட்டார்.
Question 81
தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துக் கட்சி மாநாடுகள், சைமன் குழு, வட்டமேசை மாநாடு என அனைத்து இடங்களிலும் தனித் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியவர் யார்?
A
பெரியார்
B
அயோத்திதாச பண்டிதர்
C
அம்பேத்கார்
D
a) மற்றும் c)
Question 81 Explanation: 
விளக்கம்: தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும் காந்தியடிகளும் கவலைப்பட்டனர். முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனித்தொகுதிகள் மற்றும் இதர சிறப்பு நலன்கள் ஆகியன பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழியமைக்கும் என்று அவர்கள் வருத்தப்பட்டனர். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை இந்துகளில் இருந்து அரசியல் ரீதியாகப் பிரிப்பது சமூகப் பாதிப்புகளை உருவாக்கும் என்று காந்தியடிகள் அச்சப்பட்டார்.
Question 82
வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு எந்த ஆண்டு அறிவித்தது?
A
1933
B
1931
C
1932
D
1930
Question 82 Explanation: 
விளக்கம்: லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுகள் தோல்வி அடைந்தன. வட்டமேசை மாநாட்டின்போது இருதலைவர்கள் இடையே இதே கருத்துக் குறித்து விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்கவேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 1932இல் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இவ்வாறாக இடஒதுக்கீட்டுடன் கூடியதனித்தொகுதிகள் பற்றிய அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
Question 83
காந்தியடிகள் எரவாடா சிறையில்  சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றதன் காரணம்?
A
தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து.
B
சைமன் குழுவை எதிர்த்து
C
ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து
D
இவை அனைத்தும்
Question 83 Explanation: 
விளக்கம்: தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் அறிவித்தார். தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. ஆலோசனைகள், கூட்டங்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதன் விளைவாகக் காந்தியடிகளுடன் சிறைச்சாலையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளைப் பறித்துக்கொண்டாலும் இடங்களின் ஒதுக்கீடு குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு பெற்ற தொகுதிகள் என்ற சட்ட அம்சம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்திலும் இது இடம்பெற்றது.
Question 84
அம்பேத்கர்  பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை எந்த ஆண்டு தொடங்கினார்?
A
1937
B
1942
C
1945
D
1934
Question 84 Explanation: 
விளக்கம்: அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937-லும் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை 1942-லும் அவர் தொடங்கினார். அவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்கரின் சேவைகளைப் பயன்படுத்தியது. 1942ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அரசப்பிரதிநிதியின் (வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம்பிடித்தார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுதந்திர இந்தியாவின் அரசியல்சாசன வரைவுக் குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.
Question 85
கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற இடம்?
A
பீகார்
B
அகமதாபாத்
C
கல்கத்தா
D
டெல்லி
Question 85 Explanation: 
விளக்கம்: பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக் கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது. ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.
Question 86
கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற இடம்?
A
பீகார்
B
அகமதாபாத்
C
கல்கத்தா
D
டெல்லி
Question 86 Explanation: 
விளக்கம்: பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக் கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது. ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார். உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க போவதாகவும் கூறினார். காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை. அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.
Question 87
அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக எத்தனை சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர்?
A
25%
B
20%
C
30%
D
50%
Question 87 Explanation: 
விளக்கம்: கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர். 1918இல் நில வருவாய் வசூலை ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர். அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர். ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர். பிளேக் நோயாலும் அதிக விலையேற்றத்தாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) உதவி கோரி அணுகினர். ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
Question 88
சௌரி சௌரா என்ற கிராமம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
மத்தியப்பிரதேசம்
B
மேற்கு வங்காளம்
C
உத்திரப்பிரதேசம்
D
பஞ்சாப்
Question 88 Explanation: 
விளக்கம்: உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 1922 பிப்ரவரி 5இல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அைத எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
Question 89
சுயராஜ்ய கட்சி பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்க.
A
மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ய கட்சி சிறப்பாகப் பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது.
B
மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க முடிந்தது.
C
1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் குறைபாடுகள் குறித்து தெரிவிப்பதிலும் வெற்றி அடைந்தனர்.
D
இவை அனைத்தும்.
Question 89 Explanation: 
விளக்கம்: மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில் சுயராஜ்ய கட்சி சிறப்பாகப் பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது. மற்ற உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்க முடிந்தது. 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் குறைபாடுகள் குறித்து தெரிவிப்பதிலும் வெற்றி அடைந்தனர். காலம் செல்லச்செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்து சுயநினைவுடனோ அல்லது சுயநினைவின்றியோ அரசு நியமித்த பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதை ஏற்றனர். தேசிய அளவில் மக்கள் போராட்டம் நடைபெறாத நிலையில் பிரிவினைவாத சிந்தனைப்போக்கு அவர்களை ஆட்டிப்படைத்தது. அடிப்படைவாத சக்திகள் இடத்தை ஆக்ரமிக்கத் தொடர்ச்சியாகப் பல வகுப்புக்கலவரங்கள் நடந்தன. சுயராஜ்ய கட்சியும் பிரிவினைவாதத்தால் பாதிப்படைந்தது.
Question 90
காக்கோரி சதித்திட்ட வழக்கில் யாருக்கு மரண தண்டனை  வழங்கப்பட்டது?
A
ராம்பிரசாத் பிஸ்மில்
B
அஷ்ஃபக்குல்லா
C
சந்திரசேகர் ஆசாத்
D
a) மற்றும் b)
Question 90 Explanation: 
விளக்கம்: இந்தியா முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதனிடையே ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபக்குல்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், வேறு 17 பேருக்கு நீண்டகால சிறைத் தண்டனையும் காக்கோரி சதித்திட்ட வழக்கில் வழங்கப்பட்டன.
Question 91
தலித் பகுஜன் இயக்கம் யார் தலைமையில் உருவானது?
A
பெரியார்
B
அயோத்திதாச பண்டிதர்
C
அம்பேத்கார்
D
a) மற்றும் b)
Question 91 Explanation: 
விளக்கம்: இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் பிராமணரல்லாதோரின் உண்மையான குறைகளைப் பயன்படுத்திக் கொள்ள காலனி ஆதிக்க அரசு முயன்றது. பம்பாய் மாகாண பிராமணேதரா பரிஷத், மதராஸ் மாகாண நீதிக்கட்சி ஆகியவைகளுக்கு இது குறைந்தபட்சம் 1930 வரை பொருந்தியது. தீவிரமான தலித் பகுஜன் இயக்கம் அம்பேத்கர் தலைமையிலும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி தலைமையிலும் உருவாகி சமூக நீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள் இந்த இரண்டு பகுதிகளிலும் செயல்பட்டன.
Question 92
கீழ்க்கண்டவற்றுள் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு காரணம்?
A
அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களில் 72 சதவீதம் பட்டாதாரிகளாய் இருந்தனர்.
B
சாதிகளுக்கு இடையேயான மோதல்கள்
C
நாமசூத்ரா இயக்கம்
D
a) மற்றும் b)
Question 92 Explanation: 
விளக்கம்: பிராமணர்கள் ஆதிக்கத்திற்கு அதிகக் காரணம் அவர்கள் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே மக்கள் தொகையில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களில் 72 சதவீதம் பட்டாதாரிகளாய் இருந்தனர். பிராமணரல்லாதார் சாதிகளைச் சேர்ந்தக் கல்வி கற்ற மற்றும் வர்த்தக சமூக உறுப்பினர்களின் சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தொடக்கத்தில் மேல்குடி மக்களாக இருந்ததோடு அவர்களது சவால் 1916 இறுதியில் பிராமணரல்லாதார் உருவாக்கிய அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது. வரி செலுத்துவோரில் பெரும் பகுதியாகவும், பெரும்பான்மையாக ஜமீன்தாரர்களாகவும், நிலப்பிரபுக்களாகவும், வேளாண் விவசாயிகளாகவும் தாங்கள் இருந்தபோதிலும் அரசிடமிருந்து எந்த பலன்களையும் பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
Question 93
பிராமணரல்லாதோருக்கு இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட இயக்கம் எது?
A
சத்யசோதக் இயக்கம்
B
திராவிட இயக்கங்கள்
C
நாமசூத்ரா இயக்கம்
D
ஆதிதர்மா இயக்கம்
Question 93 Explanation: 
விளக்கம்: வங்காளத்திலும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் தொடங்கப்பட்ட நாமசூத்ரா இயக்கம், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தொடங்கப்பட்ட ஆதிதர்மா இயக்கம், மேற்கு இந்தியாவில் சத்யசோதக் இயக்கம் மற்றும் தென்னிந்தியாவின் திராவிட இயக்கங்கள் இந்த நூற்றாண்டின் திருப்பத்தில் தங்கள் குரல்களை எழுப்பின. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கங்கள் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.
Question 94
பிராமணரல்லாதார் இயக்கங்களில் இருந்து  வெளியான போக்குகள் எவை?
A
கீழ்நிலை சாதிகளுக்குச் சமஸ்கிருதத்தைச் சொல்லிக் கொடுப்பது
B
மற்றொன்று அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு ஆதரவாகவோ அல்லது முற்போக்குத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான இயக்கங்கள்
C
a) மற்றும் b)
D
இவற்றில் எதுவுமில்லை.
Question 94 Explanation: 
விளக்கம்: பிராமணரல்லாதார் இயக்கங்களில் இருந்து இரண்டு போக்குகள் வெளியாகின. கீழ்நிலை சாதிகளுக்குச் சமஸ்கிருதத்தைச் சொல்லிக் கொடுப்பது, மற்றொன்று அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக இருந்த ஏழைகளுக்கு ஆதரவாகவோ அல்லது முற்போக்குத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான இயக்கங்கள் ஆகியன செயல்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு சாதி இயக்கங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதம் சார்ந்தும் மேற்கத்திய மற்றும் தெற்கத்திய இயக்கங்கள் பிளவுபட்டு அப்போது வளர்ந்துவந்த தேசியவாத மற்றும் திராவிட-இடதுசாரி இயக்கங்களைச் சேர்த்துக்கொண்டன. ஆனால், அனைத்து இயக்கங்களுமே பிராமண ஆதிக்கம் என்று குறிப்பிட்டு அதனை எதிர்த்துக் கடுமையாக விமர்சனம் செய்தன. தங்கள் அமைப்புகள் மூலம் நீதிவேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தன.
Question 95
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
மிதவாத தேசியவாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்துவதும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது.
B
இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியன ஒரே ஆண்டில் இயற்றப்பட்டன.
C
உலகப் போர் நடந்த கால கட்டத்தில் தீவிரத்தன்மையுடையோர் மற்றும் தேசபக்த பு ர ட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
D
இவை அனைத்தும்.
Question 95 Explanation: 
விளக்கம்: மிதவாத தேசியவாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்துவதும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது. 1919இல் இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியன ஒரே ஆண்டில் இயற்றப்பட்டன. உலகப் போர் நடந்த கால கட்டத்தில் தீவிரத்தன்மையுடையோர் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன. பலர் தூக்கில் தொங்கவிடப்பட்டனர் அல்லது நீண்ட காலத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Question 96
கவஸ்ஜீ நானாபாய் தவர் கீழ்க்கண்டவற்றுள் எதனோடு தொடர்புடையவர்?
A
காக்கோரி வழக்கு
B
பயணிகள் ரயில்
C
லாகூர் சதி
D
பருத்தி ஆலை
Question 96 Explanation: 
விளக்கம்: 1854இல் பம்பாயில் கவஸ்ஜீ நானாபாய் தவர் (1815-73) என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார். இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது. நகரத்தின் முன்னணி வர்த்த க ர்கள் , பெரும்பாலும் பார்சிக்கள், இந்த முயற்சிக்குப் பங்களிப்புச் செய்தனர். அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861-65) பருத்தி விவசாயம் செய்தோருக்கு ஒரு வரம். ஆனால் உள்நாட்டுப் போருக்குப்பின் பிரிட்டன் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து பருத்தி இறக்குமதி செய்ததால் இந்தியப் பருத்தி விவசாயிகள் துயரத்திற்குள்ளாயினர்.ஆனால், ஐரோப்பியர்கள் பருத்தியின் மலிவான, தொழிற்சாலைகளைத் துவக்கினர், இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டதும், அகமதாபாத் மற்றும் பம்பாய் ஆகியவை பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக மாறின.
Question 97
முதல் பயணிகள் ரயில் 1853இல் எந்த இரு நகரங்களுக்குமிடையே இயங்கியது?
A
சென்னை - அரக்கோணம்
B
மும்பை - தானே
C
மும்பை - புனே
D
சென்னை - தாம்பரம்
Question 97 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல் கல் இந்தியாவின் இருப்புப்பாதை விரிவாக்கமும் புகைவண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும். முதல் பயணிகள் ரயில் 1853இல் பம்பாய்க்கும் தானேவுக்குமிடையே இயங்கியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும். பிரிட்டிஷாரால் நிர்வகித்து, ரயில்வே நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தில் 1911இல் 98,723 நபர்கள் பணியில் இருந்தனர். இரயில்வே, இதரப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளின் வருகை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவியது.
Question 98
முதல் சணல் உற்பத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
A
கொல்கத்தா
B
மும்பை
C
புனே
D
காரக்பூர்
Question 98 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும். முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855இல் நிறுவப்பட்டது. சணல் தொழில் வளர்ச்சி மிகவும் விரைவாக இருந்ததால் 1914ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் 64 ஆலைகள் இருந்தன. இருப்பினும், பாம்பே துணி ஆலைகள் போலன்றி, இந்த ஆலைகள் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமானவை.
Question 99
பெங்கால் நிலக்கரி நிறுவனம்  யாரால் நிறுவப்பட்டது?
A
துவாரகநாத் தாகூர்
B
தேவேந்திரநாத் தாகூர்
C
இரவீந்திரநாத் தாகூர்
D
கலிக்குஸ்தான்
Question 99 Explanation: 
விளக்கம்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழில்துறை வளர்ச்சி முக்கியமாகப் பருத்தி, சணல் போன்ற பல துறைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும். இதனை மடைமாற்றப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, 1843இல் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் (1794-1847) என்பவரால் ராய்கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் நிறுவப்பட்டது. 1892க்குப் பிறகு நிலக்கரிஉற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து முதல் உலகப்போரின் போது உச்சத்தையெட்டியது.
Question 100
இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
துவாரகநாத் தாகூர்
B
தோரப்ஜி டாடா
C
ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா
D
கலிக்குஸ்தான்
Question 100 Explanation: 
விளக்கம்: ஜே.என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட ஜாம்ஷெட்ஜி நுஸர்வஞ்சி டாடா (1839 - 1904), பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர். இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். தனது தந்தையின் வியாபாரத்திற்கு உதவும் பொருட்டு, அவர் உலகம் முழுவதிலும் பயணம் மேற்கொண்டார். மேலும் அவருடைய அனுபவம் எதிர்கால முயற்சிகளுக்கு இது உதவியது. 1868இல் நிறுவப்பட்ட அவருடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் என்றானது. ஒரு தேசியவாதியாய், குர்லா, பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு "சுதேசி" எனப் பெயரிட்டார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!