Online TestTamil

8th Std Tamil Notes – Part 6

எட்டாம் வகுப்பு தமிழ் - ஆறாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - ஆறாம் பாடம்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
கம்பராமாயணம், கம்பர்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 2
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
கம்பராமாயணம், கம்பர்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
Question 3
--------------------- ஆறு மகரந்தப்பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருக்கின்ற குளங்களை நிரப்பியும், புதுமணல்மிக்க நீர்நிலைகள் வழியாகவும், குருக்கத்தி வேலியிட்ட கமுகத்தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களைச் செழிக்கத் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர்புகுந்து பரவுதனைப் போன்று விளங்குகிறது.
A
மகாநதி
B
காவிரி
C
சரயு
D
கங்கை
Question 4
கம்பர் பிறந்த ஊர்?
A
நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்
B
திருவாரூர் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்
C
தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்
D
மதுரை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்
Question 5
சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது,  சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் - இந்த நூல்களின் ஆசிரியர் யார்?
A
சீத்தலைச்சாத்தனார்
B
கம்பர்
C
சேக்கிழார்
D
மாணிக்கவாசகர்
Question 6
கம்பர், வடமொழியில் ---------------- எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார். கம்பர் தாம் இயற்றிய அந்நூலுக்கு, இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
A
வால்மீகி
B
அகத்தியர்
C
போகர்
D
யுவான் சுவாங்
Question 7
கம்பராமாயணம் ------------------ காண்டங்களைக் கொண்டது.
A
3
B
4
C
5
D
6
Question 7 Explanation: 
விளக்கம்:- கம்பராமாயணம் ஆறு காண்டங்களையுடையது. அவை, 1. பால காண்டம், 2. அயோத்திய காண்டம், 3. ஆரணிய காண்டம், 4. கிட்கிந்தா காண்டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம் என்பன. குறிப்பு :- காண்டம் என்பது பெரும்பிரிவு எனவும், படலம் என்பது உட்பிரிவு எனவும் வழங்கப்படுகிறது.
Question 8
தூலம்போல் வளர்கி ளைக்கு; விழுதுகள் தூண்கள்! தூண்கள்; ஆலினைச் சுற்றி நிற்கும்; அருந்திறல் மறவர்! வேரோ - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
அழகின் சிரிப்பு, பாரதிதாசன்
B
குயில், பாரதியார்
C
தொடுவானம், வாணிதாசன்
D
கவிதாஞ்சலி, கண்ணதாசன்
Question 8 Explanation: 
குறிப்பு :- இங்கு இடம்பெற்றுள்ள பாடல் “அழகின் சிரிப்பு” என்னும் நூலில் “விழுதும் வேரும்” என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
Question 9
வாலினைத் தரையில் வீழ்த்தி; மண்டிய பாம்பின் கூட்டம் !; நீலவான் மறைக்கும் ஆல்தான்; ஒற்றைக்கால் நெடிய பந்தல் ! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
அழகின் சிரிப்பு, பாரதிதாசன்
B
குயில், பாரதியார்
C
தொடுவானம், வாணிதாசன்
D
கவிதாஞ்சலி, கண்ணதாசன்
Question 9 Explanation: 
குறிப்பு :- இங்கு இடம்பெற்றுள்ள பாடல் “அழகின் சிரிப்பு” என்னும் நூலில் “விழுதும் வேரும்” என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
Question 10
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
திறல் – வலிமை
B
மறவர் – வீரர்
C
தாது - மகரந்தம்
D
போது - காடு
Question 10 Explanation: 
குறிப்பு :- போது - மலர்
Question 11
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
பொய்கை - குளம்
B
பூகம் - கமுகம் (பாக்கு மரம்
C
நவ்வி - மான்
D
கேண்மை - பகை
Question 11 Explanation: 
குறிப்பு :- கேண்மை - நட்பு
Question 12
பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் என்ன?
A
சுப்பிரமணி
B
சுப்பிரக்கவி
C
சுப்புரத்தினம்
D
சுப்புராஜ்
Question 13
பாரதிதாசன் அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
A
சாத்தப்பன் - விசாலாட்சி
B
சேதுராஜ் - பொன்னம்மாள்
C
முத்தையா - கண்ணகி
D
கனகசபை - இலக்குமி
Question 14
பாரதிதாசன் அவர்கள் பிறந்த ஊர்?
A
திருச்சி
B
மதுரை
C
புதுச்சேரி
D
ஈரோடு
Question 15
பாரதிதாசன் அவர்களின் காலம்?
A
29.04.1861 முதல் 21.04.1934 வரை
B
29.04.1871 முதல் 21.04.1944 வரை
C
29.04.1881 முதல் 21.04.1954 வரை
D
29.04.1891 முதல் 21.04.1964 வரை
Question 16
பாவேந்தர், புரட்சிக்கவிஞர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
Question 17
பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
Question 18
அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம்,  குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம் - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
Question 19
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது? பாரதியாருடன் கொண்ட நெருங்கிய தொடர்பினால் பாரதிதாசன் எனத் தன்பெயரை அமைத்துக்கொண்டார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
Question 20
மெய்யினால் அறியும் உயிர் ----------- உடையது. இதற்குச் சான்றாக புல், மரம் முதலிய தாவரங்களைக் கூறலாம்.
A
ஓரறிவு
B
ஈரறிவு
C
மூவறிவு
D
நாலறிவு
Question 21
மெய், வாய் ஆகியவை -------------- அறிவு. (நத்தை, சங்கு முதலியன.)
A
ஓரறிவு
B
ஈரறிவு
C
மூவறிவு
D
நாலறிவு
Question 22
எறும்பு, கரையான், அட்டை முதலியன -------- அறிவு.
A
ஓரறிவு
B
ஈரறிவு
C
மூவறிவு
D
நாலறிவு
Question 22 Explanation: 
குறிப்பு :- மெய், வாய், மூக்கு
Question 23
நண்டு, தும்பி, வண்டு முதலியன -------------- அறிவு.
A
ஓரறிவு
B
ஈரறிவு
C
மூவறிவு
D
நாலறிவு
Question 23 Explanation: 
குறிப்பு :- மெய், வாய், மூக்கு
Question 24
விலங்கு, பறவை முதலியன -------------- அறிவு.
A
ஐயறிவு
B
ஈரறிவு
C
மூவறிவு
D
நாலறிவு
Question 24 Explanation: 
குறிப்பு :- மெய், வாய், மூக்கு,கண், செவி
Question 25
மனிதர் -------- அறிவு.
A
மூவறிவு
B
நாலறிவு
C
ஐயறிவு
D
ஆறறிவு
Question 25 Explanation: 
குறிப்பு :- மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம்
Question 26
---------------------- மரங்கள் அடர்ந்துள்ள சிரபுஞ்சிதான் உலகிலேயே அதிக அளவு மழைபெறும் இடம்.
A
தமிழ்நாட்டில்
B
டெல்லியில்
C
அசாமில்
D
பஞ்சாப்பில்
Question 27
இந்தியாவில் ----------------- இல் ஒரு பங்கு அளவே காடுகள் உள்ளன. இவை மழைவரக் காரணமாக இருப்பதனோடு மட்டுமில்லாமல் வனவிலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளன.
A
ஆறு
B
ஏழு
C
எட்டு
D
ஒன்பது
Question 28
--------------- மாதம் முதல் வாரத்தை அரசு வன விலங்கு வாரமாக கொண்டாடி வருகிறது
A
ஜனவரி
B
மார்ச்சு
C
ஜூன்
D
அக்டோபர்
Question 29
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ------------ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
A
1952
B
1962
C
1972
D
1982
Question 30
நமது நாட்டில் ----------------- வனவிலங்குப் பாதுகாப்பு இடங்களும், அறுபத்தாறு தேசிய வனவிலங்குப் பூங்காக்களும் முந்நூற்று அறுபத்தெட்டுப் புகலிடங்களும் அமைந்துள்ளன.
A
பதினைந்து
B
பதினாறு
C
பதினேழு
D
பதினெட்டு
Question 31
ஒவ்வோராண்டும் அக்டோபர் திங்கள் -------------- நாள் உலக வனவிலங்கு நாளாக கொண்டாடப்படுகிறது.
A
முதல்
B
இரண்டாம்
C
மூன்றாம்
D
நான்காம்
Question 32
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம் எப்போது தொடங்கப்பட்டது?
A
கி.பி 1851
B
கி.பி 1852
C
கி.பி 1853
D
கி.பி 1854
Question 33
‘முகிலன் வந்தான் என்பது ஒரு தொடர். இத்தொடரில் முகிலன் என்பது எழுவாய். இந்த எழுவாய், வந்தான் என்னும் பயனிலையை ஏற்று இயல்பாக வருகிறது. இந்த எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றனைப் பயனிலையாகக்கொண்டு முடியும். இவ்வாறு வருவது ---------------------- எனப்படும்.
A
எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 33 Explanation: 
குறிப்பு :- எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை. இதற்கு உருபு இல்லை.
Question 34
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது -------------------- எனப்படும். இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை எனவும்
A
எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 34 Explanation: 
குறிப்பு :- இரண்டாம் வேற்றுமை:- இதன் உருபு ‘ஐ’ அஃது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும். (எ. கா.)- வளவன் பள்ளியைக் கட்டினான் – ஆக்கல்
Question 35
-------------------- வேற்றுமை, தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். இவற்றுள் ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
A
எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 35 Explanation: 
குறிப்பு :- மூன்றாம் வேற்றுமை :- உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன. (எ.கா.) நாரால் கயிறு திரித்தான். முதற் கருவி (காரியமாக மாறி அஃதாகவே இருப்பது). கையால் கயிறு திரித்தான். துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது.) இதேபோல் கருத்தாவும் இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும். (எ.கா.) தச்சனால் நாற்காலி செய்யப்பட்டது. இயற்றுதல் கருத்தா. (தானே செய்வது) கோவில் அரசனால் கட்டப்பட்டது. – ஏவுதல் கருத்தா. (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது.) உடனிகழ்ச்சி என்றால் என்ன? ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும். (எ.கா.) தாயோடு குழந்தை சென்றது. நாயோடு குட்டியும் சென்றது. கருவிப்பொருளில் கொண்டு என்னும் சொல்லும் உடனிகழ்ச்சிப் பொருளில் உடன் என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும். (எ.கா.)நூல்கொண்டு தைத்தான் ஆறுமுகனுடன் வள்ளி சென்றாள்.
Question 36
கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருளில் வரும் வேற்றுமை ----------------?
A
எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 36 Explanation: 
குறிப்பு :- (எ. கா.) - உருபு ‘கு’. புலவர்க்குப் பரிசு கொடுத்தார் – கொடை நோய்க்குப் பகை மருந்து – பகை பாரிக்கு நண்பர் கபிலர் – நட்பு வீட்டுக்கு ஒரு பிள்ளை – தகுதி வளையளுக்குப் பொன் – அதுவாதல் கூலிக்கு வேலை – பொருட்டு கோவலனுக்கு மனைவி கண்ணகி – முறை திருத்தணிக்கு வடக்கே வேங்கடம் – எல்லை ‘கு’ வுக்குப் பதிலாகப் பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகளாக வரும். (எ.கா.) கூலியின்பொருட்டு வேலை செய்தான். வேலையின் நிமித்தம்அயலூர் சென்றான். கு உடன் ஆக என்பதும் சேர்ந்து வரும். (எ.கா.) கூலிக்காக வேலை செய்தான்.
Question 37
இல், இன் - எந்த வேற்றுமைக்கான உருபு?
A
ஐந்தாம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 37 Explanation: 
குறிப்பு :- ஐந்தாம் வேற்றுமை :- உருபுகள் இல், இன் என்பன. இவை தம்மை ஏற்ற பெயர்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை ஏதுப்பொருள்களாக வேறுபடுத்தும். (எ.கா.) - தலையின் இழிந்த மயிர் – நீங்கல் பாலின் நிறம் கொக்கு – ஒப்பு சென்னையின் மேற்கு வேலூர் – எல்லை அறிவில் மிக்கவர் ஒளவை – ஏது இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும். (எ.கா.) - வேலன் ஊரிலிருந்து வந்தான். – இருந்து அரசன் தேரினின்று இறங்கினான் – நின்று கயல்விழி என்னைவிடப் பெரியவள் – விட தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? – காட்டிலும்
Question 38
அது, அது, அ - எந்த வேற்றுமைக்கான உருபு?
A
ஐந்தாம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 38 Explanation: 
குறிப்பு :- ஆறாம் வேற்றுமை : உருபுகள் அது, ஆது, அ என்பன. அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும். (எ.கா.) - எனது வீடு எனாது நூல் தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. ஆறாம் வேற்றுமைக்கு ‘உடைய’ என்பது சொல்லுருபாக வரும். (எ.கா.) - என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.
Question 39
கண், கால், மேல், கீழே, இடம், இல் - எந்த வேற்றுமைக்கான உருபு?
A
ஐந்தாம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
ஏழாம் வேற்றுமை
Question 39 Explanation: 
குறிப்பு :- ஏழாம் வேற்றுமை :- உருபுகள் கண், கால், மேல், கீழே, இடம், இல் முதலியன. (எ.கா.) - மணியில் ஒலி – இல் வீட்டின்கண் பூனை – கண் அவனுக்கு என்மேல் வெறுப்பு – மேல் பெட்டியில் பணம் உள்ளது – இல் குறிப்பு : ‘இல்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும். (எ.கா.) - மாலையில் மலர்கள். இல் ஏழாம் வேற்றுமை உருபு இடப்பொருளில் வந்தது. மாலையிலிருந்து மலரைப் பரித்தான். இல் ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்கல் பொருளில் வந்தது.
Question 40
விளிவேற்றுமை - என்று எதனை அழைப்பர்?
A
எட்டாம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
ஏழாம் வேற்றுமை
Question 40 Explanation: 
குறிப்பு :- எட்டாம் வேற்றுமை :- விளிவேற்றுமை. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளிவேற்றுமை என வழங்குவர். (எ.கா.) - கண்ணா வா!, கிளியே பேசு!
Question 41
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
A
நான்காம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
முதல் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 42
பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது ?
A
நான்காம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
முதல் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 43
கிழமைப்பொருளில் வருவது?
A
நான்காம் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
முதல் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 44
இராமனுக்குத் தம்பி  இலக்குவன். இதிலுள்ள வேற்றுமை உருபு ------------ பொருளில் வந்துள்ளது.
A
கொடை
B
பகை
C
நட்பு
D
முறை
Question 45
செயப்படுபொருள் வேற்றுமை  ---------------- எனவும் அழைக்கப்பெறும்
A
இரண்டாம் வேற்றுமை உருபு
B
மூன்றாம் வேற்றுமை உருபு
C
ஐந்தாம் வேற்றுமை உருபு
D
நான்காம் வேற்றுமை உருபு
Question 46
கருவி, கருத்தா ஆகிய பொருள்களில் -------------- உருபு வரும்.
A
ஆல், ஆன்
B
ஒடு, ஓடு
C
கண், இடம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 47
விளி வேற்றுமை என்று அழைக்கப்படுவது?
A
இரண்டாம் வேற்றுமை
B
மூன்றாம் வேற்றுமை
C
எட்டாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 48
பொருந்தாதது எது?
A
காட்டை அழித்தான் - அழித்தல்
B
புலியைப் போன்றவன் - ஒத்தல்
C
கூலியின் பொருட்டு வேலை - பொருட்டு
D
என்னுடைய வீடு - ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு
E
ஏழாம் வேற்றுமை - அவன் யார்
Question 48 Explanation: 
குறிப்பு :- ஏழாம் வேற்றுமை - கிளையின்கண் காக்கை
Question 49
பொருந்தாது எது?
A
முதல் வேற்றுமை - அவன் யார்?
B
மூன்றாம் வேற்றுமை - மரத்தால் செய்தது
C
ஐந்தாம் வேற்றுமை - கல்வியில் பெரியவர் கம்பர்
D
ஆறாம் வேற்றுமை - ஐ
Question 49 Explanation: 
குறிப்பு :- ஆறாம் வேற்றுமை - அது, ஆது, அ
Question 50
நன்னூலுக்குக் காண்டிகையுரை கண்டவர்?
A
இராமானுசக் கவிராயர்
B
மறைமலையடிகள்
C
வேங்கட மகாலிங்கம்
D
மீனாட்சி சுந்தரம்
Question 51
தெரியாது - இது கீழ்க்கண்ட எதனுடைய எடுத்துக்காட்டு?
A
குற்றியலுகரம்
B
குற்றியலிகரம்
C
முற்றியலுகரம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 52
தமிழ்நாட்டின் தேசியப்பறவை?
A
கிளி
B
மயில்
C
மரகதப் புறா
D
இவற்றில் ஏதுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 52 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button