Online TestTamil

10th Std Tamil Notes Part 6 Online Test

10 ஆம் வகுப்பு - ஆறாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)

Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - ஆறாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரியா சனமுனக்கே யானால் உனக்குச்; சரியாரும் உண்டோ தமிழே – விரிவார்; திகழ்பா ஒருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்; புகழ்பா வினங்கள்மடைப் போக்கா – நிகழவே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 2
நல்லேரி னால்செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டிச் ; சொல்லேர் உழவர் தொகுத்தீண்டி – நல்லநெறி ; நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும் ; மேலே பலன்பெறச்செய் விக்குநாள் மேலோரில் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?  
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 3
பாத்தனதாக் கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லி ஒட்டக்; கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் – சீத்தையரைக்; குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம் வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் – கட்டி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 4
வளர்ந்தனை பால்முந்திரிகை வாழைக் கனியாய்க் ; கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து – இளங்கனியாய்த் ; தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான; முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 5
உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந்துரைக்கும்; விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 6
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களும் வயலின் ------------- ஆக கூறப்பட்டுள்ளன.
A
வரப்புகள்
B
மடைகள்
C
ஏர்கள்
D
விதைகள்
Question 7
துறை, தாழிசை, விருத்தம் என்னும் பாவினங்கள் ------------- ஆக கூறப்பட்டுள்ளன.
A
வரப்புகள்
B
வரப்புகள்
C
ஏர்கள்
D
விதைகள்
Question 8
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நாற்கரணங்கள் ------------- ஆக கூறப்பட்டுள்ளன.
A
வரப்புகள்
B
மடைகள்
C
ஏர்கள்
D
விதைகள்
Question 9
வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம் ஆகிய செய்யுள் நன்னெறிகள் ------------- ஆக கூறப்பட்டுள்ளன.
A
வரப்புகள்
B
மடைகள்
C
ஏர்கள்
D
விதைகள்
Question 10
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன ------------- ஆக கூறப்பட்டுள்ளன.
A
வரப்புகள்
B
மடைகள்
C
விளைபொருள்கள்
D
விதைகள்
Question 11
பயிர்களின் இடையே வளரும் களைகளாகிய போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியனும், செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தூரனும் தலையை வெட்டுவதற்கு ----------------- என்பவரும் இருந்தமையால், தமிழே நீ கிளைத்துச் செழித்து வளர்ந்தாய்.
A
கம்பர்
B
புகழேந்திப் புலவர்
C
புகழேந்திப் புலவர்
D
ஒட்டக்கூத்தர்
Question 12
தமிழே! பால், முந்திரி, வாழை, கரும்பு, இளநீர்போல் பல்வகையான சுவைகளையும் தருகின்றாய். தெளிந்த அமுதமாகவும், மேன்மையான வீடு பேற்றை அளிக்கும் கனியாகவும், அறிவினால் உண்ணப்படும் தேனாகவும் விளங்கும் தமிழே! உம்மிடத்து மகிழ்ந்து உரைக்கும் ஒரு விண்ணப்பம் உண்டு; கேட்பாயாக. - என்று கூறும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், குமர குருபரர்
B
திருவானைக்கா உலா, காளமேகப்புலவர்
C
முதுமொழிக் காஞ்சி, மதுரை கூடலூர் கிழார்
D
தமிழ்விடு தூது, ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
அரியாசனம் - சிங்காதனம்
B
பா ஒரு நான்கு - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
C
வரம்பு - வயல்
D
ஏர் - அழகு
Question 13 Explanation: 
குறிப்பு :- வரம்பு என்பதன் சரியான சொற்பொருள் வரப்பு.
Question 14
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நாற்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
B
நெறிநாலு - வைதருப்பம் (ஆசுகவி), கௌடம் (மதுரகவி), பாஞ்சாலம் (சித்திரகவி, மாகதம் (வித்தாரகவி) ஆகிய செய்யுள் நெறிகள். இவை விதையாய் உருவகம் செய்யப்பட்டன.
C
நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு; இவை வயலின் விளைவாக உருவகம் செய்யப்பட்டுள்ளன
D
கேழல் - யானை
Question 14 Explanation: 
குறிப்பு :- கேழல் என்பதன் சரியான சொற்பொருள் பன்றி.
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கோட்டிகொளும் - கூட்டமாகக் கூடும்
B
சீத்தையர் - கீழானவர் (போலிப்புலவர்
C
தூர்கட்டி - பயிர் அடி பருத்து வளர்தல்
D
நாளிகேரம் - வாழை
Question 15 Explanation: 
குறிப்பு :- நாளிகேரம் என்பதன் சரியான சொற்பொருள் தென்னை.
Question 16
பொருந்தாதது எது? பிரித்தறிதல்
A
நாற்கரணம் - நான்கு + கரணம்
B
கரணத்தேர் - கரணத்து + ஏர்
C
நாற்பொருள்- நான்கு + பொருள்
D
செவியறுத்து - செவி + யறுத்து
Question 16 Explanation: 
குறிப்பு :- செவியறுத்து - செவி + அறுத்து
Question 17
பொருந்தாதது எது? பிரித்தறிதல்
A
இளங்கனி - இளமை + கனி
B
விண்ணப்பமுண்டு - விண்ணப்பம் + உண்டு
C
பைந்தமிழ் - பசுமை + தமிழ்
D
கண்ணிரண்டு = கண்ணி + ரண்டு
Question 17 Explanation: 
குறிப்பு :- கண்ணிரண்டு = கண் + இரண்டு.
Question 18
-------------------- வகைச் சிற்றிலக்கியங்களுள் தூதும் ஒன்று.
A
அறுபத்து நான்கு
B
நூற்றி ஆறு
C
தொண்ணூற்றாறு
D
இருபத்தி மூன்று
Question 19
------------------- இல் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
A
ஆசிரியப்பா
B
வஞ்சிப்பா
C
கலிவெண்பா
D
இவற்றில் ஏதுமில்லை
Question 20
---------------- இல் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது தமிழ்விடு தூது.
A
சிதம்பரம்
B
சதுரகிரி
C
மதுரை
D
திருவண்ணாமலை
Question 21
தமிழ் விடு தூது என்ற நூலின் ஆசிரியர் ?
A
ஒட்டக்கூத்தர்
B
காளமேகப் புலவர்
C
கூடலூர் கிழார்
D
இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை
Question 22
இலக்கணக்குறிப்பு தருக. - செவியறுத்து (செவியை அறுத்து)
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
இரண்டாம் வேற்றுமைத்தொகை
Question 23
முதல் மாந்தன் தோன்றிய இலெமுரியாவை ------------------ என்பர்.
A
தமிழன் பிறப்பிடம்
B
உயிரின பிறப்பிடம்
C
உலக பிறப்பிடம்
D
மனித நாகரிகத் தொட்டில்
Question 24
தமிழகம் இன்று போல்  இல்லாது, குமரி முனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து,  குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் பின்வரும் --------------------- பாடல் வரிகள் தெளிவாக உணர்த்தும். "பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள.”
A
மணிமேகலை
B
கம்பராமாயணம்
C
சிலப்பதிகாரம்
D
குறுந்தொகை
Question 25
---------------------------------- என்பவர், தமிழின் பழஞ்சிறப்பினைப் பெருமிதம் பொங்கப் பின் வருமாறு பாடுகிறார். “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
A
தமிழ் நாட்டின் வோர்ட்ஸ் வொர்த் வாணிதாசன்
B
தமிழ் நாட்டின் வோர்ட்ஸ் வொர்த் வாணிதாசன்
C
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
D
உவமைக் கவிஞர் சுரதா
Question 26
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
கடல் வாணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்
B
பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்தனர்
C
பண்டைத் தமிழகத்தில் துறைமுகப் பட்டினங்கள் இல்லை
D
பூம்புகார் முதலான பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன
Question 27
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன
B
கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன
C
தமிழர்களுக்குச் சாவக நாட்டுடனும் கடல் வாணிகத்தொடர்பு இருந்தது
D
கடல் வாணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்
Question 27 Explanation: 
குறிப்பு :- கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.
Question 28
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
வரலாற்றாசிரியர் பலரும் கிறித்துவ ஊழித் தொடக்கத்துக்கு முன்பே மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்திருக்க வேண்டும் என்று நவில்கின்றனர்
B
தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்ற பாரதியார் அவர்களின் கூற்று, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே
C
உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி அளித்திருக்கிறது.
D
உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ் மொழி விளங்குகிறது.
Question 28 Explanation: 
குறிப்பு:- தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய மரபுச் செய்தி வேறெங்குமில்லை என்ற தனிநாயகம் அடிகளின் கூற்று, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
Question 29
தமிழ்கெழு கூடல் என்று புறநானூறும், தமிழ்வேலி என்று ------------------ நூலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தனையே குறிக்கின்றன.
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
பரிபாடல்
D
திருவாசகம்
Question 30
'கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்' என்று ------------------ நூலும் பழந்தமிழ்ச் சங்கத்தனையும் சங்கமிருந்து தமிழாய்ந்ததனையும்  குறிப்பிடுகிறது.
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
பரிபாடல்
D
மணிவாசகம் ( திருவாசகம் )
Question 31
பண்டைக் காலத்து வாணிகப் பொருள்கள் துறைமுக நகரங்களிலிருந்து ஏற்றுமதியாயின.  -------------------, ------------------ நூல்கள் அவற்றை அழகுறக் கூறும்.
A
சிலப்பதிகாரம், மணிமேகலை
B
கம்பராமாயணம், திருக்குறள்
C
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 32
காவிரிப் பூம்பட்டினத் துறைமுகத்தில் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததனைப் பின்வரும் ---------------------- நூலின்  வரிகள் விளக்கும். " நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்; காலின் வந்த கருங்கறி மூடையும்; வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்; குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்; மயங்கிய நனந்தலை மறுகு"
A
பரிபாடல்
B
புறநானூறு
C
பட்டினப்பாலை
D
கலித்தொகை
Question 33
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
உலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று
B
பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன
C
தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன
D
'நரம்பின் மறை' என்று பாரதியார் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது
Question 34
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று பல மன்னர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது
B
தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது
C
தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடுவது
D
ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைப் பற்றிப்பாடுவது
Question 34 Explanation: 
குறிப்பு :- பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.
Question 35
இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே. “பண்ணொடு தமிழொப்பாய் என்னும் ------------------- நூல், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும்.
A
திருவாசகம்
B
தேவாரம்
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 36
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்
B
தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்
C
குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை புறநானூறு குறிக்கின்றது
D
இதன் மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்
Question 36 Explanation: 
குறிப்பு :- குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது.
Question 37
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது குறுந்தொகை
B
தமிழர், உழுது பயிர் செய்து உலகைக் காக்கும் இத்தொழிலைப் பெரிதும் போற்றினர்
C
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் அன்றைய புகழ்மொழி இன்றும் தமிழரால் போற்றப்படுகிறது
D
உழவுக்குச் சிறப்புப்பெற்ற மருதநிலம் வயலும் வயல் சார்ந்த இடமாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. மருதநிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்
Question 37 Explanation: 
குறிப்பு :- பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தோராக மதிக்கப்பட்டனர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது திருக்குறள்
Question 38
அக்காலத்தே அறம், பொருள், இன்ப வாழ்வைத் தமிழர் பெற்றிருந்தனர். அறத்தினைக்கைக் கொண்டதனால் ------------ என ஒன்று வேண்டாததாயிற்று.
A
காடு
B
வீடு
C
உறவு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 39
“களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என்னும் ---------------- பாடல், வீரத்தினை முதற் கடமையாக்குகிறது.
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Question 40
வீரமற்ற ஆடவரை அக்காலப் பெண்டிர் மணந்துகொள்ள விழையார். ------------------ என்ற பெண்பாற்புலவர், பெண்களின் பெருவீரத்தினைப் பாடுகிறார். முதல் நாள் போரில் தந்தையைப் பறிகொடுத்தாள். இரண்டாம் நாள் போரில் கணவனை இழந்தாள். மூன்றாம் நாளும் போர் தொடர்கிறது. மறக்குடியில் பிறந்த மாண்புடையவள் அப்பெண். நெஞ்சம் துடித்த அவள், பால்மணம் மாறாச் சிறுமகன் தன்னைச் செருக்களம் நோக்கிப் பகைத்திறம் மாய்க்க விடுத்தாள். என்னே, அவள்துணிவு!
A
நக்கண்ணையார்
B
ஒளவையார்
C
ஒக்கூர் மாசாத்தியார்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 41
சந்திப்பிழை நீக்கி எழுதுக. சரியானது எது?
A
மனித இனத்தின் மரபுச் செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகிறது
B
மனித இனத்தின் மரபு செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகிறது
C
மனித இனத்தின் மரபுச் செல்வமாக தமிழ்மொழி விளங்குகிறது
D
மனித இனத்தின் மரபு செல்வமாக தமிழ்மொழி விளங்குகிறது
Question 42
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக :  சரியானது எது?
A
காவிரிபூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடக்கின்றன
B
காவிரிபூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடக்கும்
C
காவிரிபூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடந்தன
D
காவிரிபூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடந்தது
Question 43
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக :  சரியானது எது?
A
தமிழர்கள் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன
B
தமிழர்கள் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது
C
தமிழர்கள் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருக்கும்
D
தமிழர்கள் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றது
Question 44
திருவண்ணாமலையில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற கல்வெட்டு வரிகள், சங்ககால மன்னன் நன்னனையும், பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய ---------------------- நூலைப் பற்றியும் கூறுகிறது.
A
பட்டினப்பாலை
B
மலைபடுகடாம்
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 44 Explanation: 
குறிப்பு :- "நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் ; வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்; வாகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்
Question 45
தொல்பழங்காலத்தைப் பற்றி ஆய்வு செய்தலையே தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்கிறோம். தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலைகள் முதலியவை பற்றி அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களான கல்வெட்டுகள், கட்டடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியவற்றின் அடிப்படையில் ஆய்ந்தறிதலே தொல்லியலின் முதன்மையான நோக்கம். தொல்லியலை ஆங்கிலத்தில் -------------------- எனக் குறிப்பிடுவர்.
A
கிலேஸியாலஜி
B
இன்ரேடியாலஜி
C
கார்டியாலஜி
D
ஆர்க்கியாலஜி
Question 46
---------------------- ஆய்வு இன்றேல், மனிதன் கடந்துவந்த பாதையையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது.
A
உயிரியல்
B
புவியியல்
C
வணிகவியல்
D
தொல்லியல்
Question 47
மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் ஒரு துறைமுக நகரம். அது சோழர்களின் கடற்கரை நகரம். இந்நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.  இந்தியத் தொல்லியல் துறையினர் --------------- ஆம் ஆண்டு -------------------- அருகில் உள்ள கீழார்வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத் துறை, அரைவட்ட வடிவ நீர்த்தேக்கம், புத்தவிஹாரம் (புத்தபிக்குகள் தங்குமிடம்), வெண்கலத்தாலான புத்தர் பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன.
A
1953, ஆதிச்சநல்லூர்
B
1972, அரியலூர்
C
1983, திருநெல்வேலி
D
1963, பூம்புகார்
Question 48
தருமபுரி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில், ----------------------- நூற்றாண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு உலோகங்களினால் செய்யப்பட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலோ  முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகளில் சூரியன் மலைமுகடு, ஆறு, காளை, ஸ்வஸ்திகம்,  கும்பம் முதலிய சின்னங்கள் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
A
கி.மு. இரண்டாம்
B
கி.மு. மூன்றாம்
C
கி.மு. நான்காம்
D
கி.மு. ஐந்தாம்
Question 49
பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே முதுமக்கள் தாழிகள் என்கிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்----------------, ---------------- ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன. கி.மு.300 முதல் கி.பி. 300 வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த இத்தாழிகளில் இறந்தோரின் எலும்புகளுடன் தங்கத்தினாலான நெற்றிப் பட்டம், செம்பினாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், மற்றும் இரும்பினாலாள கத்திகள், விளக்குத் தாங்கிகள் முதலிய பொருள்களும் கிடைத்துள்ளன.
A
1873, 2001
B
1876, 2003
C
1896, 2009
D
1886, 2005
Question 50
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது ---------------------- எனப்படும்.
A
ஆகுபெயர்
B
பொருள்கோள்
C
வழுவமைதி
D
புணர்ச்சி
Question 51
பொன் + வளையல் = பொன்வளையல் - இது எந்த புணர்ச்சியின் சரியான எடுத்துக்காட்டு?
A
இயல்புப் புணர்ச்சி
B
விகாரப் புணர்ச்சி
C
திசைப்பெயர்ப் புணர்ச்சி
D
பண்புப்பெயர்ப் புணர்ச்சி
Question 51 Explanation: 
விளக்கம்:- இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப் புணர்ச்சி. (எ.கா) : பொன் + வளையல் = பொன்வளையல்.
Question 52
இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை -------------------- என்பர்.
A
இயல்புப் புணர்ச்சி
B
விகாரப் புணர்ச்சி
C
திசைப்பெயர்ப் புணர்ச்சி
D
பண்புப்பெயர்ப் புணர்ச்சி
Question 52 Explanation: 
விளக்கம் :- விகாரப்புணர்ச்சி :- (எ.கா.) : 1 . வாழை + பழம் = வாழைப்பழம் – தோன்றல். 2. மரம் + வேர் = மரவேர் – கெடுதல். 3 . பொன் + குடம் = பொற்குடம் – திரிதல்.
Question 53
முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியன. திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது ---------------------- எனப்படும்.
A
இயல்புப் புணர்ச்சி
B
விகாரப் புணர்ச்சி
C
திசைப்பெயர்ப் புணர்ச்சி
D
பண்புப்பெயர்ப் புணர்ச்சி
Question 53 Explanation: 
விளக்கம் :- திசைப்பெயர்ப் புணர்ச்சி : முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியன. திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும்.
Question 54
கருவிழி = கருமை + விழி = கரு + விழி = கருவிழி. --------------------- என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து மை நீங்கிப் புணர்ந்தது.
A
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
B
ஈறுபோதல்
C
இடைஉகரம் இஆதல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 54 Explanation: 
விளக்கம் :- பண்புப்பெயர்ப் புணர்ச்சி :- நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப் பெயர்களாம். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல்வனவும் இவற்றுக்குரிய எதிர்ச்சொற்களும் இவைபோன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும். (எ.கா.) : 1 . கருவிழி = கருமை + விழி = கரு + விழி = கருவிழி. ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து மை நீங்கிப் புணர்ந்தது. 2 . பெரியன் = பெருமை + அன் - பெரு + அன்; பெரி + அன்; பெரி + ய் + அன் = பெரியன். ஈறுபோதல் என்னும் விதிப்படி நிலைமொழியின் இறுதி எழுத்து, மை நீங்கிப் பின் பெரு என்பதன் இறுதி உகரம் இடைஉகரம் இஆதல் எனும் விதிப்படி பெரி யாகிப் பின் யகர உடும்படுமெய் பெற்றுப் பெரி + ய் + அன் என்பது 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி, ய் + அ = ய என்றாகிப் பெரியன் எனப் புணர்ந்தது.
Question 55
பாசிலை = பசுமை + இலை - பசு + இலை; பாசு + இலை; பாச் + இலை = பாசிலை. நிலைமொழி ஈறுகெட்டு ------------------- என்னும் விதிப்படி, பாசு + இலை என்றாகியது. "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்", என்னும் விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது
A
ஆதி நீடல்
B
ஈறுபோதல்
C
இடைஉகரம் இஆதல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 56
பைங்கூழ் = பசுமை + கூழ் - பசு + கூழ், பைசு + கூழ், பை + கூழ்; பைங் + கூழ் = பைங்கூழ். 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு + கூழ்) 'அடிஅகரம்' ஐ ஆதல் எனும் விதிப்படி ப – பை ஆனது. 'இனையவும்' என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது. '-------------------' என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான  க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
இடைஉகரம் இஆதல்
Question 57
சிற்றோடை = சிறுமை + ஓடை - சிறு + ஓடை; சிற்று + ஓடை; சிற்ற் + ஓடை = சிற்றோடை. 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை கெட்டது. ----------------------- என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது. பின் 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் 'உடல்மேல் உயர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 58
சேதாம்பல் = செம்மை + ஆம்பல் - செம் + ஆம்பல்; சேம் + ஆம்பல்; சேத் + ஆம்பல் = சேதாம்பல். 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி, மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று. பின்னர் '---------------------' விதிப்படி - சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் முன்னின்ற மெய் திரிதல் என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 59
கருங்குயில் = கருமை + குயில் - கரு + குயில் = கருங்குயில். ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது. ---------------- என்னும் விதிப்படி வருமொழி ககரத்திற்கு (கு) இனமான மெல்லெழுத்து ங் மிகுந்து, கருங்குயில் எனப் புணர்ந்தது.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 60
வட்டம் + கல் = வட்டக்கல் எனப் புணரும் - இது எந்த புணர்ச்சியின் சரியான எடுத்துக்காட்டு?
A
பண்புப்பெயர் புணர்ச்சி
B
திசைபெயர் புணர்ச்சி
C
மகரஈற்றுப் புணர்ச்சி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 61
வடக்கு என்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது ----------------?
A
நிலைமொழி ஈறு நீங்கும்
B
நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்
C
வருமொழி முதல் கெடும்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 62
மேற்கு + நாடு என்பது --------------- எனச் சேரும்.
A
மேற்கு நாடு
B
மேநாடு
C
மேனாடு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 63
கருமை + குழி என்பது ------------ எனும் விதிகளின் படி புணர்ந்தது
A
ஆதி நீடல், இனமிகல்
B
தன்னொற்றிரட்டல், இடையுகரம் இ ஆதல்
C
ஈறு போதல், இனமிகல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 64
பொருந்தாதது எது? புணர்ச்சி விதிகள்.
A
அடி அகரம் ஐ ஆதல் - பைங்கூழ்
B
ஆதி நீடல் - மூதூர்
C
தன்னொற்றிரட்டல் - மேநாடு
D
இனமிகல் - கரும்பலகை
Question 64 Explanation: 
குறிப்பு :- தன்னொற்றிரட்டல் – வெற்றிலை
Question 65
வலி - என்பதன் பொருள் ?
A
காற்று
B
பாதை
C
வல்லினம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 65 Explanation: 
குறிப்பு :- நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள் வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்).
Question 66
பொருந்தாதது எது? வல்லினம் மிகுமிடங்கள்.
A
நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க், ச், த், ப்) மிகும் கறி + குழம்பு = கறிக்குழம்பு பலா + சுளை = பலாச்சுளை வழி + தடம் = வழித்தடம் பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
B
அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வல்லினம் மிகும் அ + கடை = அக்கடை இ + சட்டை = இச்சட்டை உ + பக்கம் = உப்பக்கம் (செய்யுள் வழக்கு) எ + பாடம் = எப்பாடம்
C
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும் அந்த + கோவில் = அந்தக்கோவில் இந்த + சட்டி = இந்தச் சட்டி எந்த + தோட்டம் = எந்தத் தோட்டம்
D
உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகும். காய் + கனி = காய்க்கனி. தாய் + தந்தை = தாய்த்தந்தை. முத்து + பவளம் = முத்துப்பவளம்.
Question 66 Explanation: 
குறிப்பு :- உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது. காய் + கனி = காய்கனி. தாய் + தந்தை = தாய்தந்தை. முத்து + பவளம் = முத்துபவளம்.
Question 67
பொருந்தாதது எது? வல்லினம் மிகுமிடங்கள்.
A
அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும் அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான் இப்படி + தாவினான் = இப்படித் தாவினான் எப்படி + சொன்னான் = எப்படிச் சொன்னான்
B
இரண்டாம் வேற்றுமை (ஐ) விரியின் பின் வரும் வல்லினம் மிகும் பாரியை + கண்டான் = பாரியைக் கண்டான் பொருளை + சேர்த்தான் = பொருளைச் சேர்த்தான் அவனை + தடுத்தான் = அவனைத் தடுத்தான் நிலவை + பார்த்தான் = நிலவைப் பார்த்தான்
C
நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும் எனக்கு + கொடு = எனக்குக் கொடு குழந்தைக்கு + சோறு = குழந்தைக்குச் சோறு அவளுக்கு + தா = அவளுக்குத் தா பாப்பாவுக்கு + பட்டு = பாப்பாவுக்குப் பாட்டு
D
வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகும் விடு + கணை = விடுக்கணை விரி + சுடர் = விரிச்சுடர் தோய் + தயிர் = தோய்த்தயிர் பாய் + புலி = பாய்ப்புலி
Question 67 Explanation: 
குறிப்பு :- வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது. விடு + கணை = விடுகணை விரி + சுடர் = விரிசுடர் தோய் + தயிர் = தோய்தயிர் பாய் + புலி = பாய்புலி
Question 68
பொருந்தாதது எது? வல்லினம் மிகுமிடங்கள்.
A
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும் கதை + சொன்னார் = கதைச் சொன்னார் கடல் + தாவினான் = கடல்த் தாவினான் புகழ் + பெற்றார் = புகழ்ப் பெற்றார்
B
ஒரெழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த, ப் மிகும் ஈ + கால் = ஈக்கால் தீ + சட்டி = தீச் சட்டி கை + தடி = கைத் தடி தை + பொங்கல் = தைப் பொங்கல்
C
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும் கொக்கு + கால் = கொக்குக் கால்
D
இகர ஈற்றுச் “செய்து” என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும் ஓடி + போனான் = ஓடிப் போனான்
Question 68 Explanation: 
குறிப்பு :- இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. கதை + சொன்னார் = கதை சொன்னார். கடல் + தாவினான் = கடல் தாவினான். புகழ் + பெற்றார் = புகழ் பெற்றார்
Question 69
பொருந்தாதது எது? வல்லினம் மிகுமிடங்கள்.
A
அகரஈற்றுச் செய என்னும் எச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகும் பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன் தேட + சென்றான் = தேடச் சென்றான் பாட + தெரியுமா? = பாடத் தெரியுமா ? ஓட + பார்த்தான் = ஓடப் பார்த்தான்
B
சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும் சால + பசித்தது = சாலப் பசித்தது தவ + சிறிது = தவச் சிறிது
C
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகும் காணா + கண்கள் = காணாக் கண்கள் கேளா + செவி = கேளாச் செவி ஓடா + தேர் = ஓடாத் தேர் நாறா + பூ = நாறாப்பூ
D
வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகும். கற்க + கசடற = கற்கக்கசடற. வளர்க + சிந்தனை = வளர்கச்சிந்தனை. வாழ்க + தமிழ் = வாழ்கத்தமிழ். காண்க + படம் = காண்கப்படம்.
Question 69 Explanation: 
குறிப்பு :- வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது. கற்க + கசடற = கற்க கசடற வளர்க + சிந்தனை = வளர்க சிந்தனை வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ் காண்க + படம் = காண்க படம்
Question 70
பொருந்தாதது எது? வல்லினம் மிகா இடங்கள்.
A
வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகாது கொக்கு + கால் = கொக்கு கால்
B
இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது கடகட, தடதட, சடசட, படபட
C
அவை, இவை என்னும் சுட்டுச்சொற்கள், எவை என்னும் வினாச்சொல் ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது அவை + பறவைகள் = அவை பறவைகள் இவை + சட்டைகள் = இவை சட்டைகள் அவை + தடங்கள் = அவை தடங்கள் எவை + படங்கள் = எவை படங்கள்
D
அது, எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகாது அது + கடை = அது கடை இது + சட்டி = இது சட்டி அது + தோணி = அது தோணி இது + பாடம் = இது பாடம்
Question 70 Explanation: 
குறிப்பு :- வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும். கொக்கு + கால் = கொக்குக் கால்
Question 71
பொருந்தாதது எது? வல்லினம் மிகா இடங்கள்.  
A
பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் (படித்து என்பதுபோல் வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் அல்லாதவை) ஆகியவற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது வந்த + கயல்விழி = வந்த கயல்விழி தைத்த + சட்டை = தைத்த சட்டை வந்து + தந்தான் = வந்து தந்தான் செய்து + பார்த்தான் = செய்து பார்த்தான்
B
எழுவாய்த்தொடரில் வரும் வல்லினம் மிகாது கண்ணகி + பார்த்தாள் = கண்ணகி பார்த்தாள் தங்கை + கேட்டாள் = தங்கை கேட்டாள் பூவிழி + தந்தாள் = பூவிழி தந்தாள்
C
வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது விடு + கணை = விடுகணை விரி + சுடர் = விரிசுடர் தோய் + தயிர் = தோய்தயிர் பாய் + புலி = பாய்புலி
D
] ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது காணா + கண்கள் = காணா கண்கள் கேளா + செவி = கேளா செவி ஓடா + தேர் = ஓடா தேர் நாறா + பூ = நாறாபூ
Question 71 Explanation: 
குறிப்பு :- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும். காணா + கண்கள் = காணாக் கண்கள். கேளா + செவி = கேளாச் செவி. ஓடா + தேர் = ஓடாத் தேர். நாறா + பூ = நாறாப்பூ.
Question 72
தமிழில் அக்கலை இல்லையே; இக்கலை இல்லையே; சிறப்பாக விஞ்ஞானம் என்னும் அறிவுக்கலை இல்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். ஆங்கிலத்தில் முதல் நூல்களாகவா எல்லாக் கலைகளும் பிறந்தன என்பதனை அந்த அன்பர்கள் நினைப்பார்களாக. - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
பெரியார்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 73
வேறு மொழிகளிலிருந்தும் ஆங்கில அறிஞர் தம் மொழியில் பல கலைகளைப் பெயர்த்தெழுதியுள்ளனர். இதுகாறும் உலகில் காணப்பட்டுள்ள புதுமைகள் எல்லாவற்றையும் ஆங்கிலேயர் மட்டுமா சுண்டனர் ? இல்லை, இல்லை. சில பிரெஞ்சுக்காரர்களால் காணப்பட்டன, சில ஜெர்மனியர்களால் காணப்பட்டன. மற்றுஞ்சில வெவ்வேறு நாட்டினரால் காணப்பட்டன. - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
பெரியார்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 74
அவ்வம் மொழிகளுக்கே சிறப்பாக விளங்கும் நூல்களும் உண்டு. அவற்றை மொழிபெயர்ப்பதனால் பயன் விளையாது. அவை யாவை? அவையே காவியங்கள் என்பன. காவியங்கள் போக, மற்றக் கலைகளெல்லாம் உலகிலுள்ள அனைவருக்கும் பொது உடைமை. - இந்த கூற்று யாருடையது?
A
மு.வரதராசனார்
B
பெரியார்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 75
Man proposes; god disposes - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
B
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
C
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
D
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Question 76
Strike the road while it is hot - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
B
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
C
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
D
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Question 77
Familiarity breeds contempt - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
B
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
C
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
D
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Question 78
The mills of god grind slow but sure - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
B
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
C
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
D
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Question 79
The Face is the index of the mind - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
B
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
C
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
D
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
Question 80
பாசிலை = பசுமை + இலை - பசு + இலை; பாசு + இலை; பாச் + இலை = பாசிலை. நிலைமொழி ஈறுகெட்டு ஆதி நீடல் என்னும் விதிப்படி, பாசு + இலை என்றாகியது. "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்", என்னும் விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், "-------------------------------" என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது.
A
ஆதி நீடல்
B
ஈறுபோதல்
C
ஈறுபோதல்
D
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Question 81
பாசிலை = பசுமை + இலை - பசு + இலை; பாசு + இலை; பாச் + இலை = பாசிலை. நிலைமொழி ஈறுகெட்டு ஆதி நீடல் என்னும் விதிப்படி, பாசு + இலை என்றாகியது. "------------------------------", என்னும் விதிப்படி, பாச் + இலை என்றாகிப் பின், "உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி பாசிலை எனப் புணர்ந்தது
A
ஆதி நீடல்
B
ஈறுபோதல்
C
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
D
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Question 82
பைங்கூழ் = பசுமை + கூழ் - பசு + கூழ், பைசு + கூழ், பை + கூழ்; பைங் + கூழ் = பைங்கூழ். '-----------------------' என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு + கூழ்) 'அடிஅகரம்' ஐ ஆதல் எனும் விதிப்படி ப – பை ஆனது. 'இனையவும்' என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது. 'இனமிகல்' என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான  க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
இடைஉகரம் இஆதல்
Question 83
பைங்கூழ் = பசுமை + கூழ் - பசு + கூழ், பைசு + கூழ், பை + கூழ்; பைங் + கூழ் = பைங்கூழ். 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை நீங்கியது. (பசு + கூழ்) '-----------------------' எனும் விதிப்படி ப – பை ஆனது. 'இனையவும்' என்னும் விதிப்படி உயிர்மெய் (சு) கெட்டது. 'இனமிகல்' என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்தான  க் எழுத்துக்கு இனமான ங் மிகுந்து பைங்கூழ் எனப் புணர்ந்தது.
A
இனமிகல்
B
அடிஅகரம் ஐ ஆதல்
C
ஈறுபோதல்
D
இடைஉகரம் இஆதல்
Question 84
சிற்றோடை = சிறுமை + ஓடை - சிறு + ஓடை; சிற்று + ஓடை; சிற்ற் + ஓடை = சிற்றோடை. '------------------' என்னும் விதிப்படி மை கெட்டது. தன்னொற்று இரட்டல் என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது. பின் 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் 'உடல்மேல் உயர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 85
சிற்றோடை = சிறுமை + ஓடை - சிறு + ஓடை; சிற்று + ஓடை; சிற்ற் + ஓடை = சிற்றோடை. 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை கெட்டது. தன்னொற்று இரட்டல் என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது. பின் '-------------------------' என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் 'உடல்மேல் உயர் வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.
A
இனமிகல்
B
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
C
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
D
தன்னொற்று இரட்டல்
Question 86
சிற்றோடை = சிறுமை + ஓடை - சிறு + ஓடை; சிற்று + ஓடை; சிற்ற் + ஓடை = சிற்றோடை. 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி மை கெட்டது. தன்னொற்று இரட்டல் என்னும் விதிப்படி பகுதியாகிய சிறு என்பதன் றகரம் இரட்டித்துச் சிற்று என ஆகியது. பின் 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்' என்னும் விதிப்படி, உகரம் கெட்டு, சிற்ற் என்றாகியது. பின்னர் '----------------------' என்னும் விதிப்படி வருமொழி உயிர் ஏறிப் புணர்ந்து சிற்றோடை என்றாயிற்று.
A
இனமிகல்
B
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
C
உடல்மேல் உயர் வந்து ஒன்றுவது இயல்பே
D
தன்னொற்று இரட்டல்
Question 87
சேதாம்பல் = செம்மை + ஆம்பல் - செம் + ஆம்பல்; சேம் + ஆம்பல்; சேத் + ஆம்பல் = சேதாம்பல். '-------------------------' என்னும் விதிப்படி, மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று. பின்னர் 'ஆதி நீடல்' விதிப்படி - சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் “முன்னின்ற மெய் திரிதல் என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 88
சேதாம்பல் = செம்மை + ஆம்பல் - செம் + ஆம்பல்; சேம் + ஆம்பல்; சேத் + ஆம்பல் = சேதாம்பல். 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி, மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று. பின்னர் 'ஆதி நீடல்' விதிப்படி - சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் “---------------------------” என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
முன்னின்ற மெய் திரிதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 89
சேதாம்பல் = செம்மை + ஆம்பல் - செம் + ஆம்பல்; சேம் + ஆம்பல்; சேத் + ஆம்பல் = சேதாம்பல். 'ஈறுபோதல்' என்னும் விதிப்படி, மை கெட்டு, செம் + ஆம்பல் ஆயிற்று. பின்னர் 'ஆதி நீடல்' விதிப்படி - சேம் + ஆம்பல் ஆயிற்று, பின் “முன்னின்ற மெய் திரிதல் என்னும் விதிப்படி மகரமெய் தகரமெய் ஆகத் திரிந்து சேத் + ஆம்பல் என்றாகி, '----------------------' என்னும் விதிப்படி சேதாம்பல் என்றாயிற்று.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
D
தன்னொற்று இரட்டல்
Question 90
கருங்குயில் = கருமை + குயில் - கரு + குயில் = கருங்குயில். --------------------- விதிப்படி மை கெட்டது. இனமிகல் என்னும் விதிப்படி வருமொழி ககரத்திற்கு (கு) இனமான மெல்லெழுத்து ங் மிகுந்து, கருங்குயில் எனப் புணர்ந்தது.
A
இனமிகல்
B
ஆதி நீடல்
C
ஈறுபோதல்
D
தன்னொற்று இரட்டல்
Question 91
இருசொற்களைச் சேர்த்து எழுதும் போது இடையில் சில இடங்களில் எந்த வல்லின மெய் எழுத்துக்கள் ----------------- மிக்கு வரும்.
A
( க், ச், ட், ப் )
B
( க், ச், ட், த் )
C
( க், ச், த், ப் )
D
( க், ச், த், ற் )
Question 92
பொருந்தாதது எது?
A
அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்
B
அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, என்னும் சுட்டு வினாச்சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
C
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
D
ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
Question 92 Explanation: 
விளக்கம் :- நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
Question 93
பொருந்தாதது எது?
A
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்
B
பண்புத்தொகையில் வல்லினம் மிகும். மற்றும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
C
உவமைத்தொகை மற்றும் ஒரேழுத்து ஒரு மொழி, ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
D
மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
Question 93 Explanation: 
குறிப்பு :- வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
Question 94
பொருந்தாதது எது?
A
ட, ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்
B
குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்
C
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்
D
ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
Question 95
பொருந்தாதது எது?
A
அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும் எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது
B
ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துகள் மற்றும் எழுவாய்த்தொடரில் வல்லினம் மிகாது
C
அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் மற்றும் வினைத்தொகை, உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
D
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்
Question 95 Explanation: 
விளக்கம் :- இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
Question 96
பொருந்தாதது எது?
A
மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது
B
எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப்பின் வல்லினம் மிகாது
C
வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் மற்றும் இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகாது
D
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
Question 96 Explanation: 
விளக்கம் :- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.
Question 97
'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் ?
A
ஆசுகவி
B
மதுரகவி
C
சித்திரகவி
D
வித்தாரக்கவி
Question 98
செவிக்கினிய ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் யார்?
A
ஆசுகவி
B
மதுரகவி
C
சித்திரகவி
D
வித்தாரக்கவி
Question 99
சொல்லணி அமைத்துச் சுவைவளம் செழிக்கப் பாடுபவர்?
A
ஆசுகவி
B
மதுரகவி
C
சித்திரகவி
D
வித்தாரக்கவி
Question 100
தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர் ?
A
ஆசுகவி
B
மதுரகவி
C
சித்திரகவி
D
வித்தாரக்கவி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!