Online TestTamil

10th Std Tamil Notes Part 10 Online Test

10 ஆம் வகுப்பு - பத்தாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)

Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - பத்தாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சீக்கிரம் செல்லுக நேர்வழியில் – அதைச்; செத்தைகள் கூடியே தூர்க்கு முன்னே நோக்கிய அத்திசை நேர்த்திசையில் – துளிச்; சோம்பலு மின்றி நடைஎடுநீ - இந்த கவிதை வரி இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பூத்தது மானுடம் (நிற்க நேரமில்லை), சாலை இளந்திரையன்
B
ஒரு பைசா தமிழன், அயோத்திதாச பண்டிதர்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
குழந்தைகள் பாடல்கள், வாணிதாசன்
Question 2
கால்கள் இரண்டு படைத்தவன்நீ – பெருங்; கல்லும் மலையும் கடப்பதற்கே; மேலிரு கைகள் அவைகளுண்டே – அங்கு; விம்மும் புதர்கள் அறுப்பதற்கே - இந்த கவிதை வரி இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பூத்தது மானுடம் (நிற்க நேரமில்லை), சாலை இளந்திரையன்
B
ஒரு பைசா தமிழன், அயோத்திதாச பண்டிதர்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
குழந்தைகள் பாடல்கள், வாணிதாசன்
Question 3
கண்ணிரண் டுள்ளன முன்னடக்க – இரு; காதுகள் உண்டு துணை வரவே; விண்களைக் கீறிவழி சமைக்க – உன்றன்; வீர மனமுண்டு செல்லுகவே ! - இந்த கவிதை வரி இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பூத்தது மானுடம் (நிற்க நேரமில்லை), சாலை இளந்திரையன்
B
ஒரு பைசா தமிழன், அயோத்திதாச பண்டிதர்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
குழந்தைகள் பாடல்கள், வாணிதாசன்
Question 4
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி; என்னென்ன வாகுமோ ஓரிரவில்; சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி; தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே! - இந்த கவிதை வரி இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பூத்தது மானுடம் (நிற்க நேரமில்லை), சாலை இளந்திரையன்
B
ஒரு பைசா தமிழன், அயோத்திதாச பண்டிதர்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
குழந்தைகள் பாடல்கள், வாணிதாசன்
Question 5
சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு; நல்லசெடி இளைப் பாறிடுமே?; வேதனை யாவும் மறந்ததுபார் – செடி; வெற்றி கொண்டேந்திய பூவினிலே - இந்த கவிதை வரி இடம்பெற்றுள்ள கவிதை தொகுப்பு மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பூத்தது மானுடம் (நிற்க நேரமில்லை), சாலை இளந்திரையன்
B
ஒரு பைசா தமிழன், அயோத்திதாச பண்டிதர்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
குழந்தைகள் பாடல்கள், வாணிதாசன்
Question 6
சாலை. இளந்திரையன் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
சாத்தப்பன் , விசாலாட்சி
B
முருகேசன், கண்ணகி
C
வெங்கட்ராமன், அம்மணி அம்மாள்
D
இராமையா, அன்னலட்சுமி
Question 7
சாலை. இளந்திரையன் அவர்கள் பிறந்த ஊர்?
A
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு
B
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி
C
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர்
D
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல்
Question 8
கீழ்க்கண்டவர்களுள் யார், தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகித் தமிழ்த்துறைத் தலைவரானார்?
A
வாணிதாசன்
B
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C
ராசேந்திரன்
D
சாலை. இளந்திரையன்
Question 9
உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் யார்? 
A
வாணிதாசன்
B
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C
ராசேந்திரன்
D
சாலை. இளந்திரையன்
Question 10
1991 இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர் யார்?
A
வாணிதாசன்
B
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C
ராசேந்திரன்
D
சாலை. இளந்திரையன்
Question 11
“புரட்சி முழக்கம் “உரை வீச்சு ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன. ஆகிய நூல்களின் ஆசிரியர்?
A
வாணிதாசன்
B
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C
ராசேந்திரன்
D
சாலை. இளந்திரையன்
Question 12
சாலை. இளந்திரையன் அவர்கள் வாழ்ந்த காலம்?
A
06.10.1930 – 04.10.1995
B
06.08.1930 – 04.10.1996
C
06.07.1930 – 04.10.1997
D
06.09.1930 – 04.10.1998
Question 13
வினையே ஆடவர்க்குயிர் என்கிறது ------------------?
A
பரிபாடல்
B
புறநானூறு
C
கலித்தொகை
D
குறுந்தொகை
Question 14
“முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை என்கிறது -------------------?
A
தொல்காப்பியம்
B
புறநானூறு
C
கலித்தொகை
D
குறுந்தொகை
Question 15
தற்போது ------------------கல்வியில் தேர்ச்சி என்பதுதான் பெரும்பாலான பணிகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
A
இடைநிலை
B
தொழில்துறை
C
மேல்நிலை
D
பட்டப்படிப்பு
Question 16
தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் -------------- விழுக்காடு ஒதுக்கித் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
A
இருபது
B
பதினைந்து
C
முப்பது
D
பத்து
Question 17
---------------------- வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கும் வாய்ப்புண்டு.
A
பத்தாம்
B
பன்னிரண்டாம்
C
எட்டாம்
D
தொழிற்கல்வி
Question 18
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே - என்பது யாருடைய கூற்று?
A
திருமூலர்
B
மாணிக்கவாசகர்
C
திருவள்ளுவர்
D
சேக்கிழார்
Question 19
வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
தாரா பாரதி
B
வாணிதாசன்
C
மறைமலையடிகள்
D
பூங்குன்றனார்
Question 20
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக :
A
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உளது
B
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளது
C
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் இருக்கின்றன
D
தமிழகத்தில் எண்ணற்ற தொழில்நுட்பப் பயிலகங்கள் உள்ளன
Question 21
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக :
A
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகிறாள்
B
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
C
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிவாள்
D
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
Question 22
சந்திப்பிழை நீக்கி எழுதுக
A
கை தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
B
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
C
கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்
D
கைத்தொழில் ஒன்றைக் கற்று கொள்
Question 23
சந்திப்பிழை நீக்கி எழுதுக
A
பெண்கள் குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்த வேண்டுமெனவும், கடல் கடந்து செல்லக் கூடாதெனவும் கூறி வந்தனர்
B
பெண்கள் குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டுமெனவும் கடல் கடந்து செல்லக் கூடாதெனவும் கூறி வந்தார்கள்
C
பெண்கள் குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டுமெனவும் கடல் கடந்து செல்ல கூடாதெனவும் கூறி வந்துள்ளனர்
D
பெண்கள் குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்த வேண்டுமெனவும் கடல் கடந்து செல்லக் கூடாதெனவும் கூறி வந்தவர்கள்
Question 24
உலக இலக்கியத் துறையில் நிகழ்ந்த ஒரு மாபெரும் புரட்சி ------------------- கண்டுபிடிக்கப்பட்டது.
A
எழுதுகோல்
B
அழிப்பான்
C
காகிதம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 25
ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளை அறிந்த மனிதனாகக் (informative man) கருதப்படுவான் என -------------------- கூறியுள்ளது
A
சென்னை பல்கலைக்கழகம்
B
ஐநா சபை
C
யுனெஸ்கோ
D
உலக நூலகக் கழகம்
Question 26
-------------------- நகர அரசுகளே முதன்முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
A
எகிப்து
B
கிரீஸ்
C
ஐரோப்பிய
D
இந்தியா
Question 27
புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசக சாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘லைப்ரரி என்னும் சொல் வழங்குகிறது. ------------------------ மொழியில் ‘லிப்ரா என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
A
கிரேக்க
B
ஆங்கில
C
இலத்தீன்
D
இந்தி
Question 28
இந்தியாவில் உள்ள நூலகங்களில் ------------------ தேசிய நூலகம் முதன்மையானது. இதில், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
A
ராஜஸ்தான்
B
டெல்லி
C
கல்கத்தா
D
தமிழ்நாடு
Question 29
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழக அரசுதான் -------------------- ஆம் ஆண்டு சென்னைப் பொதுநூலகச் சட்டத்தை இயற்றி, நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது.
A
1948
B
1950
C
1945
D
1963
Question 30
---------------------- என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம்.
A
சமுதாயம்
B
பள்ளி
C
நூலகம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 31
பள்ளியில் மாணவர்கள் ஓரிடம், நூலகம் வேறிடம் என்ற நிலையை மாற்ற, நம் பள்ளிக்கல்வித்துறை ---------------------- என்னும் வகுப்பறை நூலகத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
A
பள்ளிநூலகம்
B
பள்ளிப்பறவைகள்
C
புத்தகப் பூங்கொத்து
D
நூலகப் பறவைகள்
Question 32
--------------------------- இல் உள்ள நிப்பூர் என்ற ஊரில் கி.மு. 2000 ஆண்டிற்கு  முந்தைய சுமார் 2500 களிமண் பலகைளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டது.
A
சிங்கப்பூர்
B
மலேசியா
C
பாபிலோனியா
D
கத்தார்
Question 33
நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கித் தந்த -------------------------  இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
A
ராஜம் கிருஷ்ணன்
B
சீர்காழி சீ.இரா. அரங்கநாதன்
C
கல்கி
D
இவர்களில் யாருமில்லை
Question 34
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது
A
வஞ்சப்புகழ்ச்சி அணி
B
இரட்டுறமொழிதல் அணி
C
பிறிதுமொழிதலணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 34 Explanation: 
விளக்கம் :- தற்குறிப்பேற்ற அணி :- இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி. தற்குறிப்பேற்ற அணி – (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி) தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள்வாய், – வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம். விடியற்காலையில் கோழிகள் கூவுதல் இயல்பான நிகழ்ச்சி. ஆனால் கவிஞர், காட்டில் நள்ளிரவில் கணவனைப் பிரிந்து வருத்தமுற்ற தமயந்தியின், துயரைப் போக்க, இருளை நீக்குவதற்குத் தேரேறி விரைந்து வருமாறு ஞாயிற்றைக் கோழிக் கூட்டங்கள் கூவி அழைப்பதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி.
Question 35
புகழ்வதுப்போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும் ---------------------- அணி எனப்படும்.
A
வஞ்சப்புகழ்ச்சி அணி
B
இரட்டுறமொழிதல் அணி
C
பிறிதுமொழிதலணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 36
ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது --------------------------- எனப்படும்.
A
செம்மொழிச் சிலேடை
B
பிரிமொழிச் சிலேடை
C
பிறிதுமொழிதலணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 36 Explanation: 
விளக்கம் :- இரட்டுறமொழிதல் அணி :- ஒருசொல் இருபொருள்பட அமைந்து வருதல் இரட்டுறமொழிதல் எனப்படும். இதனைச் சிலேடை எனவும் வழங்குவர். இது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். அ) செம்மொழிச்சிலேடை :- ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும். ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரில்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெளளெனவே ஓது. - இப்பாடலில் பாம்பு, எள் ஆகிய இரண்டிற்கும் சிலேடை கூறப்பட்டுள்ளது. ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் எனும் முதலடி, படமெடுத்து ஆடியபின் குடத்துள் சென்றடையும், படமெடுத்தாடும்போது, இரைச்சலிடும் எனப் பாம்பிற்கும், செக்காடியபின் எடுத்த எண்ணெயைக் குடத்தில் ஊற்றுவர். செக்காட்டும்போது இரைச்சல் உண்டாகும் என எள்ளிற்கும் சிலேடையாக வந்துள்ளது. இப்பாடலில் சொற்கள் பிரிவில்லாமல் இருபொருள்கள் தந்தன. எனவே, இது செம்மொழிச்சிலேடை ஆயிற்று.
Question 37
ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அதுவே பிரித்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது, ---------------------- ஆகும்.
A
செம்மொழிச் சிலேடை
B
பிரிமொழிச் சிலேடை
C
பிறிதுமொழிதலணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 37 Explanation: 
விளக்கம் :- பிரிமொழிச்சிலேடை :- ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அதுவே பிரித்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது, பிரிமொழிச்சிலேடை ஆகும். (எ.கா.) : செய்யுள் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டுமுட்டும் ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில் ஆடும் கதவுநிக ராம். பொருள் :- செய் – வயல், வீடு; பலகை – பல கைகள், பலகை; தாள் – முயற்சி, தாழ்ப்பாள்; துய்ய – தங்க, அழகான. இப்பாடலில், ஆடும்கதவும் ஒன்றற்கொன்று சமம். எங்ஙனமெனில், 1 . ஆடு : செய்யுள் கிடைமறிக்கும் – வயலில் கிடையாக மறிக்கப்படும். சேர் பல கை யிட்டுமுட்டும் – பொருந்திய பல கைகளைக் கொம்பினால் முட்டும். ஐயமற மேல் தாள் அடர்க்கும் – ஐயமின்றி முயற்சியோடு போராடும். துய்ய நிலை தேடும் – தங்குதற்குத் தூய்மையான இடம் தேடும். 2 . கதவு செய் உட்கிடை மறிக்கும் – வீட்டின் உள்ளிடத்தைத் தடுத்து மூடி இருக்கும். சேர் பலகை இட்டு முட்டும் – பலகைகளைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும். ஐயமற மேற்றாள் அடர்க்கும் – திண்ணமாக மூடப்படுவதோடன்றித் தாழ்ப்பாளிட்டும் இருக்கும். துய்யநிலை தேடும் – அழகானவேலைப்பாடு (நனைல) உடையதாய் இருக்கும். எனவே, இது பிரிமொழிச் சிலேடை
Question 38
செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது, --------------------------------------?
A
சொல்பின்வருநிலையணி
B
பொருள் பின்வருநிலையணி
C
சொற்பொருள் பின்வருநிலையணி
D
பிறிதுமொழிதலணி
Question 38 Explanation: 
விளக்கம் :- பின்வருநிலையணி:-செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும். அவை, சொல்பின்வருநிலையணி, பொருள்பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி என மூவகைப்படும். அ) சொல்பின்வருநிலையணி:- செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது, சொல்பின்வருநிலையணி. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. - இக்குறள்பாவில் துப்பு என்னும் ஒரேசொல் உண்பவர், உணவு, உண்ணும் பொருள் எனப் பல்வேறு பொருள்களில் வந்துள்ளது. எனவே, இது சொல்பின்வருநிலையணி.
Question 39
செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது, ---------------------------------------------------?
A
சொல்பின்வருநிலையணி
B
பொருள் பின்வருநிலையணி
C
சொற்பொருள் பின்வருநிலையணி
D
பிறிதுமொழிதலணி
Question 39 Explanation: 
விளக்கம் :- செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது, பொருள் பின்வருநிலையணி. “அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன – காயா, நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை.” - இப்பாடலில் மலர்தல் என்னும் ஒரு பொருளில் அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் வந்துள்ளன. எனவே, இது பொருள் பின்வருநிலையணி
Question 40
செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது, ------------------------------------?
A
சொல்பின்வருநிலையணி
B
பொருள் பின்வருநிலையணி
C
சொற்பொருள் பின்வருநிலையணி
D
பிறிதுமொழிதலணி
Question 40 Explanation: 
விளக்கம் :- சொற்பொருள் பின்வருநிலையணி :- செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது, சொற்பொருள் பின்வருநிலையணி. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும். இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி.
Question 41
உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது ------------------------------ அணி ஆகும்.
A
சொல்பின்வருநிலையணி
B
பொருள் பின்வருநிலையணி
C
சொற்பொருள் பின்வருநிலையணி
D
பிறிதுமொழிதலணி
Question 41 Explanation: 
விளக்கம்:- உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணி ஆகும். பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - மென்மையான மயில்தோகையே ஆயினும், அதனை அளவுக்கு விஞ்சி வண்டியிலேற்றின் அச்சு ஒடிந்துவிடும் என்பது உவமை. பகைவர்கள் தனித்தனியே நோக்கும்போது மிக எளியோராயினும் ஒன்றுகூடின், தனிப்பட்ட பகை மன்னன் எவ்வளவு வலிமை உடையவனாயினும் அவனை எளிதில் வென்றுவிடுவர் என்பது, இதனால் பெறப்படும் பொருள். எனவே, இது பிறிதுமொழிதலணி.
Question 42
Small rudders guide great ships - இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக
A
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
B
சிந்தித்துச் செயல்படு
C
இக்கரைக்கு அக்கரை பச்சை
D
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
Question 43
You must walk before run - இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக
A
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
B
சிந்தித்துச் செயல்படு
C
இக்கரைக்கு அக்கரை பச்சை
D
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
Question 44
Distance lends enchantment to the view - இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக
A
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
B
சிந்தித்துச் செயல்படு
C
இக்கரைக்கு அக்கரை பச்சை
D
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
Question 45
Measure is a treasure - இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக
A
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
B
சிந்தித்துச் செயல்படு
C
இக்கரைக்கு அக்கரை பச்சை
D
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
Question 46
Make hay while the sun shines - இணையான தமிழ்ப்பழமொழிகளை அறிக
A
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
B
சிந்தித்துச் செயல்படு
C
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
D
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 46 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!