Online TestTnpsc Exam

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil

Congratulations - you have completed வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Online Test 8th Social Science Lesson 2 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
__________ நூற்றாண்டில் நிலவழியாகவும், கடல் வழியாகவும் புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக ஐரோப்பா விளங்கியது.
A
13
B
14
C
15
D
16
Question 1 Explanation: 
(குறிப்பு: புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தின் மூலம் அதிக லாபம் பெறுவதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.)
Question 2
  • கூற்று 1: 1498 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார்.
  • கூற்று 2: வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 2 Explanation: 
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும்.)
Question 3
வங்காள நவாப் அலிவர்திகான் இறந்த பின்பு ___________ என்பவர் வங்காளத்தின் அரியணை ஏறினார்.
A
மீர்காசிம்
B
சிராஜ்-உத்-தெளலா
C
மீர்ஜாபர்
D
நிஜாம்-உத்-தெளலா
Question 3 Explanation: 
(குறிப்பு: வங்காள நவாப் அலிவர்திகான் 1756ல் இறந்தார். அதன் பின்பு அவரது பேரன் சிராஜ்-உத்-தெளலா அரியணை ஏறினார்.)
Question 4
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. இருட்டறை துயரச் சம்பவம் 1756 ஆம் நடைபெற்றது.
  2. சிராஜ்-உத்-தௌலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறை ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
  3. மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 23 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர்.
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1, 2 சரி
D
2, 3 சரி
Question 4 Explanation: 
(குறிப்பு: இருட்டறை துயரச் சம்பவத்தில் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர்.)
Question 5
__________ ஆண்டு ஆங்கிலேயரின் வில்லியம்கோட்டை வங்காள நவாப் சிராஜ்-உத்-தெளலாவிடம் சரணடைந்தது.
A
1756 ஜூன் 20
B
1756 ஜூலை 20
C
1757 ஜூன் 20
D
1757 ஜூலை 20
Question 5 Explanation: 
(குறிப்பு: சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவிலுள்ள ஆங்கிலேயரின் குடியேற்ற பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வங்காளத்தின் காசிம் பஜாரில் அமைந்துள்ள வணிக மையத்தையும் கைப்பற்றினார்.)
Question 6
சிராஜ்-உத்-தெளலா, இராபர்ட் கிளைவ் ஆகியோரிடையே _________ அன்று அலிநகர் உடன்படிக்கை ஏற்பட்டது.
A
1757 ஜனவரி 19
B
1757 பிப்ரவரி 9
C
1757 மார்ச் 9
D
1757 மே 9
Question 6 Explanation: 
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின் படி சிராஜ்-உத்-தெளலா, இராபர்ட் கிளைவின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றார்.)
Question 7
பிரெஞ்சு குடியேற்றமான சந்திர நாகூரை ஆங்கிலேயர் கைப்பற்றிய நாள்
A
1757 பிப்ரவரி
B
1757 மார்ச்
C
1757 ஏப்ரல்
D
1757 மே
Question 8
பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலா, பிரஞ்சுக் கூட்டணிக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே __________நாள் நடைபெற்றது.
A
1757 மார்ச் 17
B
1757 ஏப்ரல் 28
C
1757 ஜூன் 23
D
1757 ஜூலை 24
Question 8 Explanation: 
(குறிப்பு: இப்போரில் சிராஜ்-உத்-தௌலாவின் படைகளை இராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் படைகள் தோற்கடித்தன.)
Question 9
1757ஆம் ஆண்டு பிளாசிப் போருக்கு பின் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தடையில்லா வணிக உரிமை பெற்றனர்?
  1. வங்காளம்   2. ஆக்ரா                  3. ஒரிசா                   4. பீகார்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
2, 3, 4
Question 9 Explanation: 
(குறிப்பு: வங்காளத்தின் '24 பர்கானா’ எனும் பகுதியை ஆங்கிலேயர் பெற்றனர்.)
Question 10
பிளாசிப் போருக்கு பின் வங்காளத்தின் அரியணை ஏறியவர்
A
மீர்காசிம்
B
இராபர்ட் கிளைவ்
C
மீர்ஜாபர்
D
நிஜாம்-உத்-தெளலா
Question 10 Explanation: 
(குறிப்பு: மீர்ஜாபர் (1757-1760) ஆங்கிலேயரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால் அவரை கட்டாயப்படுத்தி பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவரது மருமகன் மீர் காசிம் என்பவரை வங்காள நவாம் ஆக்கினர்.)
Question 11
மீர்காசிம் வங்காளத்தின் தலைநகரை மூர்ஷிதாபாத்திலிருந்து _________க்கு மாற்றினார்.
A
மிட்னாபூர்
B
சிட்டகாங்
C
மாங்கீர்
D
பாட்னா
Question 12
தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது கலகத்தில் ஈடுபட்ட மீர்காசிம் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டு __________க்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
A
ஆக்ரா
B
அயோத்தி
C
பாட்னா
D
ஹைதராபாத்
Question 12 Explanation: 
(குறிப்பு: அயோத்தியில், சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்.)
Question 13
வங்காள நவாப்பாக அரியணை ஏறிய பின்னர் மீர்காசிம் ஆங்கிலேயருக்கு கீழ்க்கண்ட எந்த பகுதிகளை வழங்கினார்?
  1. புர்த்வான்
  2. மிட்னாபூர்
  3. சிட்டகாங்
  4. மாங்கீர்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 14
சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர் காசிம் மற்றும் ஆங்கிலப் படைக்கு இடையேயான  பக்சார் போர் நடைபெற்ற நாள்
A
1757 அக்டோபர் 20
B
1762 நவம்பர் 19
C
1764 அக்டோபர் 22
D
1768 ஆகஸ்ட் 21
Question 14 Explanation: 
(குறிப்பு: பீகார் பகுதியின் பாட்னாவிற்கு மேற்கே 130 கி.மீ தொலைவில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட ஒரு சிறிய நகரமே பக்சார் ஆகும்.)
Question 15
பக்சார் போரில், சுஜா-உத்-தெளலா இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோர் ஆங்கிலப்படைத் தளபதி _________ என்பவரால் தோற்கடிக்கப்பட்டனர்.
A
இராபர்ட் கிளைவ்
B
டியுப்ளே
C
ஹெக்டர் மன்றோ
D
கவுண்டிலாலி
Question 15 Explanation: 
(குறிப்பு: இப்போரின் முடிவில் மீண்டும் மீர்ஜாபர் வங்காள அரியணையில் அமர்த்தப்பட்டார். மீர்ஜாபரின் இறப்புக்கு பின் அவரது மகன் நிஜாம் உத்-தெளலா வங்காள நவாப் ஆனார்.)
Question 16
___________ல் நடந்த அலகாபாத் உடன்படிக்கையின் படி பச்சார் போர் முடிவுக்கு வந்தது.
A
1764 ஜனவரி 18
B
1765 பிப்ரவரி 20
C
1764 பிப்ரவரி 18
D
1765 ஜனவரி 18
Question 16 Explanation: 
(குறிப்பு: அலகாபாத் உடன்படிக்கையின் படி வங்காள நவாப் தன்னுடைய இராணுவத்தின் பெரும்பகுதியை கலைத்துவிட வேண்டும் எனவும், கம்பெனியால் நியமிக்கப்பட்ட துணை சுபேதார் மூலம் இனி வங்காளம் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.)
Question 17
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் யார்?
A
இராபர்ட் கிளைவ்
B
டியுப்ளே
C
ஹெக்டர் மன்றோ
D
கவுண்டிலாலி
Question 17 Explanation: 
(குறிப்பு: பச்சார் போரின் முடிவில், இராபர் கிளைவ் அயோத்தி நவாப் சுஜா-உத்-தெளலாவுடனும், முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலத்துடனும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.)
Question 18
  • கூற்று 1: 18 ஆம் நூற்றாண்டில் மூன்று கர்நாடகப் போர்கள் பல்வேறு இந்திய ஆட்சியாளர்களிடையே நடைபெற்றது.
  • கூற்று 2: கர்நாடகப் போர்களில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் எதிர் எதிர் அணியில் இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 18 Explanation: 
(குறிப்பு: பாரம்பரியமாக, ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் போட்டி நாடுகள் ஆகும். அந்நிலை இந்தியாவிலும் வணிகம் செய்வதிலும், ஆட்சி செய்வதிலும் தொடர்ந்தது. இதன் விளைவாக தொடர் இராணுவப் போட்டி தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் நடைபெற்றது. அவை கர்நாடக போர்கள் எனப்படுகின்றன.)
Question 19
கர்நாடகப் போர்கள் எந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்றன?
A
1736-1764
B
1746-1768
C
1746-1763
D
1746-1784
Question 19 Explanation: 
(குறிப்பு: இப்போரின் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுப்பெற்றது.)
Question 20
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. முதல் கர்நாடகப் போர் : 1746-1748
  2. இரண்டாம் கர்நாடகப் போர்: 1749-1756
  3. மூன்றாம் கர்நாடகப் போர்: 1756-1763
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 21
சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்ற அடையாறு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
A
அன்வாருதீன், போர்ச்சுக்கீசியர்கள்
B
ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள்
C
அன்வாருதீன், பிரெஞ்சுக்காரர்கள்
D
முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்கள்
Question 21 Explanation: 
(குறிப்பு: சென்னையின் அடையாறு நதிக்கரையில் சாந்தோம் அமைந்துள்ளது.)
Question 22
நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய படை இந்திய படையை வெற்றி பெற்று தங்கள் மேலாண்மையை நிலைநாட்டி முதல் நிகழ்வு
A
ஆற்காட்டுப் போர்
B
வந்தவாசி போர்
C
அடையாறு போர்
D
மைசூர் போர்
Question 22 Explanation: 
(குறிப்பு: கேப்டன் பாரடைஸ் தலைமையிலான மிகச்சிறிய பிரெஞ்சுப் படை மாபூஸ்கான் தலைமையிலான மிக வலிமைவாய்ந்த நவாப் படையை அடையாறு போரில் (1746) தோற்கடித்தது.)
Question 23
____________ உடன்படிக்கையின் மூலம் முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது.
A
பாண்டிச்சேரி உடன்படிக்கை
B
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை
C
மதராஸ் உடன்படிக்கை
D
மங்களூர் உடன்படிக்கை
Question 23 Explanation: 
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின்படி மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மாறாக வட அமெரிக்காவின் சில பகுதிகளை பிரான்சு பெற்றது.)
Question 24
கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை ____________ போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
A
முதலாம் கர்நாடகப் போர்
B
இரண்டாம் கர்நாடகப் போர்
C
மூன்றாம் கர்நாடகப் போர்
D
அடையாறுப் போர்
Question 24 Explanation: 
(குறிப்பு: கர்நாடக நவாப் பதவிக்கு அன்வாருதீனும், சந்தாசாகிப்பும் உரிமை கோரினர். அதேபோல் ஹைதராபாத் நிசாம் பதவிக்கு நாசிர் ஜங்கும் முசாபர் ஜங்-ம் உரிமை கோரினர்.)
Question 25
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. இரண்டாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும், முசாபர் ஜங்-க்கும் உதவி செய்தனர்.
  2. ஆங்கிலேயர்கள் அன்வாருதீனுக்கும், நாசிர்ஜங் - கும் உதவினர்.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் கர்நாடகப் போர் மூலம் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எண்ணினர்.)
Question 26
_________ ஆண்டு ஆம்பூரில் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தாசாகிப், முசாபர் ஜங் ஆகியோரின் கூட்டுப் படைகளால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
A
1746 ஆகஸ்ட் 13
B
1747 அக்டோபர் 3
C
1748 ஆகஸ்ட் 3
D
1749 ஆகஸ்ட் 3
Question 26 Explanation: 
(குறிப்பு: அன்வாருதீனின் மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு தப்பி ஓடினார்.)
Question 27
சந்தாசாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கியதற்கு ஈடாக அவர் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள _________ கிராமங்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு வெகுமதியாக வழங்கினார்.
A
50
B
60
C
70
D
80
Question 28
  • கூற்று 1: இரண்டாம் கர்நாடகப் போரின்போது தக்காணத்தில் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு, கொல்லப்பபட்டார்.
  • கூற்று 2: முசாபர் ஜங் ஐதராபாத்தின் நிசாம் ஆனார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 28 Explanation: 
(குறிப்பு: புதிய நிசாம் முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்களுக்கு போதிய வெகுமதி வழங்கினார்.)
Question 29
முசாபர் ஜங் கிருஷ்ணா நதியின் தென்பகுதிகள் அனைத்திற்கும் _________யை ஆளுநராக நியமித்தார்.
A
இராபர்ட் கிளைவ்
B
டியூப்ளே
C
ஹெக்டர் மன்றோ
D
கவுண்டிலாலி
Question 30
_________ ஆண்டு, முசாபர் ஜங் தன் மக்களால் படுகொலை செய்யப்பட்டார்.
A
1746
B
1749
C
1751
D
1753
Question 30 Explanation: 
(குறிப்பு: முசாபர் ஜங் இறப்பிற்கு பின் நாசிர் ஜங்-ன் சகோதரர் சலபத் ஜங் பிரெஞ்சுப் படைத் தளபதி புஸ்ஸியின் உதவியுடன் ஹைதராபாத் நிசாம் ஆனார்.)
Question 31
சலபத் ஜங் ___________ மாவட்டத்தை தவிர வட சர்க்கார் முழுவதும் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கினார்.
A
ரேணிகுண்டா
B
குண்டூர்
C
நெல்லூர்
D
மெட்ராஸ்
Question 31 Explanation: 
(குறிப்பு: இதன் மூலம் டியூப்ளே-ன் அதிகாரம் உச்சநிலையை அடைந்தது.)
Question 32
இரண்டாம் கர்நாடகப் போரின் போது, ஆற்காட்டை தாக்கும் இராபர்ட் கிளைவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய கவர்னர்
A
கவுண்-டி-லாலி
B
சாண்டர்ஸ்
C
லாரன்ஸ்
D
புஸ்ஸி
Question 32 Explanation: 
(குறிப்பு: 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.)
Question 33
சரியான கூற்றை தேர்ந்தெடு. (இரண்டாம் கர்நாடகப் போர்)
  1. லாரன்ஸ் உதவியுடன் இராபர்ட் கிளைவ் ஆரணி, காவேரிபாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார்.
  2. சந்தாசாகிப் திருச்சியில் கொல்லப்பட்டார்.
  3. அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார்.
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
2, 3 சரி
D
1, 2 சரி
Question 33 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் கர்நாடகப் போரின் தோல்வியால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் டியூப்ளே-வை பாரிசுக்கு திரும்ப அழைத்தது.)
Question 34
டியூப்ளேவை தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்றவர்
A
புஸ்ஸி
B
கவுண்-டி-லாலி
C
கோதேயூ
D
பிரிகேடியர் மேத்யூஸ்
Question 34 Explanation: 
(குறிப்பு: கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையினை செய்துகொண்டார்.)
Question 35
இரண்டாம் கர்நாடகப் போர் ________ ஆண்டு ஏற்பட்ட பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி முடிவுற்றது.
A
1754
B
1755
C
1756
D
1757
Question 35 Explanation: 
(குறிப்பு: பாண்டிச்சேரி உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும், போருக்கு முன்னர் இருந்த பகுதிகள் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் புதிய கோட்டைகளை கட்டக் கூடாது எனவும் கூறப்பட்டது.)
Question 36
  • கூற்று 1: ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டு போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு இட்டுச்சென்றது.
  • கூற்று 2: இச்சமயத்தில் ஆங்கில படைத் தளபதி இராபர்ட் கிளைவ் பிளாசிப் போரின் மூலம் வங்காளத்தில் ஆங்கில ஆதிக்கத்தை நிறுவியதுடன் மூன்றாம் கர்நாடகப் போருக்கு தேவையான நிதியையும் வழங்கினார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 37
மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு படைகளை வழிநடத்த __________ என்பவரை பிரெஞ்சு அரசாங்கம் நியமித்தது.
A
இராபர்ட் கிளைவ்
B
டியூப்ளே
C
புஸ்ஸி
D
கவுண்டிலாலி
Question 37 Explanation: 
(குறிப்பு: கவுண்டிலாலி கடலூரில் உள்ள செயின்ட் டேவிட் கோட்டையை எளிதாக கைப்பற்றினார்.)
Question 38
  • கூற்று 1: மூன்றாம் கர்நாடகப் போரின் போது, கர்நாடகப் பகுதியிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட தன்னுடன் இணையுமாறு புஸ்ஸிக்கு, கவுண்டிலாலி உத்தரவிட்டார்.
  • கூற்று 2: புஸ்ஸி ஐதராபாத்திலிருந்து புறப்பட்ட தருணத்தை பயன்படுத்தி வட சர்க்கார் பகுதிகளை கைப்பற்ற கர்னல் போர்டை வங்கத்திலிருந்து இராபர்ட் கிளைவ் அனுப்பினார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 38 Explanation: 
(குறிப்பு: வட சர்க்கார் என்பது ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய பகுதிகளை குறிக்கும்.)
Question 39
____________ ஆண்டு நடைபெற்ற வந்தவாசிப் போரில் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படை கவுண்டிலாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தது.
A
1756 ஜனவரி 20
B
1760 ஜனவரி 22
C
1763 ஜனவரி 30
D
1764 ஜனவரி 24
Question 39 Explanation: 
(குறிப்பு: வந்தவாசிப் போருக்கு பின்னர் ஓர் ஆண்டுகள் இந்தியாவிலிருந்த அனைத்துக் குடியேற்றங்களையும் பிரெஞ்சுக்காரர்கள் இழந்தனர். கவுண்டிலாலி பிரான்சு நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு சிறையிலிடப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.)
Question 40
ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் ____________ உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது.
A
அய்லாசாப்பேல் உடன்படிக்கை
B
பாரிசு உடன்படிக்கை
C
மைசூர் உடன்படிக்கை
D
பாண்டிச்சேரி உடன்படிக்கை
Question 40 Explanation: 
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின் படி பாண்டிச்சேரி உட்பட இந்தியாவிலிருந்த பிரெஞ்சு குடியேற்றங்கள் அனைத்தும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் திரும்ப கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் பகுதிகளை பலப்படுத்தவும், படைகளை பெருக்கவும் தடை விதிக்கப்பட்டது.)
Question 41
_________ ஆண்டு ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளரானார்.
A
1758
B
1761
C
1764
D
1768
Question 41 Explanation: 
(குறிப்பு: ஹைதர் அலியின் தலைமையில் மைசூர் சமஸ்தானம் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றது.)
Question 42
முதல் ஆங்கிலேய-மைசூர் போருக்கான காரணங்களில் சரியானதை தேர்ந்தெடு.
  1. ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
  2. ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 43
தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன் ஹைதராபாத் நிசாம் __________ ஆண்டு மைசூர் மீது படையெடுத்தார்.
A
1758
B
1762
C
1765
D
1767
Question 43 Explanation: 
(குறிப்பு: ஆங்கிலப் படையை ஹைதர் அலி தோற்கடித்து மங்களூரை கைப்பற்றினார்.)
Question 44
முதல் ஆங்கிலேய-மைசூர் போரின் போது ___________ ஆண்டு ஹைதர் அலி மதராஸ் மீது படையெடுத்தார்.
A
1767
B
1768
C
1769
D
1770
Question 44 Explanation: 
(குறிப்பு: இதனால் ஆங்கிலேயர்கள் 1769 ஏப்ரல் 4 ல் அவரிடம் மதராஸ் உடன்படிக்கை செய்து கொண்டனர்.)
Question 45
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்களில் சரியானதை தேர்ந்தெடு.
  1. 1769ல் செய்துகொள்ளப்பட்ட மதராஸ் உடன்படிக்கையை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றத் தவறினர். 2. 1771ல் மராத்தியர்கள் ஹைதர் அலி மீது படையெடுத்த போது மதராஸ் உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் ஹைதர் அலிக்கு உதவவில்லை.
  2. ஹைதர் அலியின் ஆட்சிக்குட்பட்ட பிரெஞ்சு குடியேற்ற பகுதியான மாஹியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிசாம், மராத்தியர்களின் முக்கூட்டணியை உருவாக்கியது.
A
அனைத்தும் சரி
B
2, 3 சரி
C
2, 3 சரி
D
1, 2 சரி
Question 46
_____________ ஆண்டு ஆங்கிலேய படைத் தளபதி சர் அயர்கூட் ஹைதர் அலியை பரங்கிப்பேட்டை என்ற இடத்தில் தோற்கடித்தார்.
A
1780
B
1781
C
1782
D
1783
Question 46 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது, மைசூர் படைகள் சோளிங்கர் என்ற பகுதியிலும் தோல்வியை தழுவியது.)
Question 47
புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஹைதர் அலி ___________ ஆண்டு இறந்தார்.
A
1781
B
1782
C
1783
D
1784
Question 47 Explanation: 
(குறிப்பு: ஹைதர் அலியின் இறப்புக்குப் பின் அவரது மகன் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரினைத் தொடர்ந்தார்.)
Question 48
திப்பு, ஆங்கிலேய படைத்தளபதியான பிரிகேடியர் மேத்யூஸ் மற்றும் அவரது படைவீரர்களை கைது செய்த ஆண்டு
A
1781
B
1782
C
1783
D
1784
Question 49
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
முதல் ஆங்கிலேய மைசூர் போர் : 1767 - 1769
B
இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் : 1780 – 1784
C
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் : 1790 – 1792
D
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் : 1798
Question 49 Explanation: 
(குறிப்பு: நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் : 1799)
Question 50
ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே மங்களூர் உடன்படிக்கை __________ ஆண்டு கையெழுத்தானது.
A
1783 மே 8
B
1783 மார்ச் 7
C
1783 மார்ச் 7
D
1784 மே 8
Question 50 Explanation: 
(குறிப்பு: இவ்வுடன்படிக்கை மூலம் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் புதிதாக உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை வலிமைமிக்க எதிரிகளான மராத்தியர்கள் மற்றும் ஹைதர் அலியிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார்.)
Question 51
பின்வருவனவற்றுள் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் எவை?
  1. மங்களூர் உடன்படிக்கைக்கு பின் ஆங்கிலேயருக்கு எதிராக வெளிநாடுகளுடன் கூட்டணி அமைக்கும் பொருட்டு பிரான்சு, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு திப்புசுல்தான் தன்னுடைய தூதுவர்களை அனுப்பினார்.
  2. ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்புசுல்தான் 1789ல் தாக்கினார்.
  3. இச்சமயத்தில் திப்புசுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிசாம் மற்றும் மராத்தியர்களுடன் இணைந்து மூவர் கூட்டணியை உருவாக்கினர்.
A
2, 3
B
1, 3
C
1, 2
D
அனைத்தும்
Question 52
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்து போராடினார்.
B
1788ல் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ் தானாகவே படையை வழிநடத்தினார்.
C
இப்போர் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
D
போரின் முடிவில் காரன்வாலிஸ் 1792ல் ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கையை திப்புசுல்தானுடன் செய்து கொண்டார்.
Question 52 Explanation: 
(குறிப்பு: இப்போரில் தளபதி மேடோஸ் தலைமையிலான தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் 1790ல் காரன்வாலிஸ் தானாகவே படையை வழி நடத்தினார்.)
Question 53
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி, ஆங்கிலேயர்கள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளை பெற்றனர்?
  1. மலபார்
  2. குடகு மலை
  3. திண்டுக்கல்
  4. பாரமஹால்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 4
D
அனைத்தும்
Question 53 Explanation: 
(குறிப்பு: பாரமஹால் என்பது சேலம், கோயம்புத்தூர் பகுதிகளை குறிக்கும்.)
Question 54
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி, போர் இழப்பீட்டு தொகையாக ___________ ரூபாய் செலுத்த வேண்டும் என்று திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.
A
1.2 கோடி
B
2.4 கோடி
C
3.6 கோடி
D
4.8 கோடி
Question 54 Explanation: 
(குறிப்பு: தன்னுடைய இரண்டு மகன்களை ஆங்கிலேயரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டும் வும் திப்பு சுல்தான் கட்டாயப்படுத்தப்பட்டார்.)
Question 55
பின்வருவனவற்றுள் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கான காரணங்கள் எவை?
  1. திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு தன்னுடைய தூதர்களை அனுப்பினார்.
  2. அச்சமயத்தில் எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
  3. பிரெஞ்சு அலுவலர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு வருகை புரிந்து அவர்கள் ஜாக்கோபியன் கழகத்தை நிறுவினார்கள், மேலும் அங்கு சுதந்திர மரம் ஒன்றும் நடப்பட்டது.
A
2, 3
B
1, 3
C
1, 2
D
அனைத்தும்
Question 56
1799 நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் போது __________திப்புவின் மீது போர் தொடுத்தார்.
A
இராபர்ட் கிளைவ்
B
புஸ்ஸி
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
வெல்லெஸ்லி
Question 56 Explanation: 
(குறிப்பு: இது குறுகிய காலத்தில் நடந்த, கடுமையான போராக இருந்தது.)
Question 57
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் நிகழ்வுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. மைசூரின் மேற்கே பம்பாய் இராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் படையெடுத்தது.
  2. இச்சமயத்தில் மெட்ராஸ் இராணுவம் தலைமை ஆளுநரின் சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.
  3. 1799 மே  14 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.
  4. போரின் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்.
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 2, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 57 Explanation: 
(குறிப்பு: 1799 மே 4 ஆம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.)
Question 58
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின் முடிவில் திப்புவின் குடும்பத்தினர் _________கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.
A
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
B
வில்லியம் கோட்டை
C
வேலூர் கோட்டை
D
திண்டுக்கல் கோட்டை
Question 58 Explanation: 
(குறிப்பு: நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கு பின் மீண்டும் இந்து உயர் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.)
Question 59
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போருக்கு பின் கீழ்க்கண்டஎந்த பகுதிகளை ஆங்கிலேயர்கள் இணைத்து கொண்டனர்?
  1. கனரா   2. வயநாடு   3. கோயம்புத்தூர்   4. தாராபுரம்
A
2, 3, 4
B
2, 3
C
2, 4
D
அனைத்தும்
Question 60
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. புனா – பேஷ்வா
  2. பரோடா – கெய்க்வாட்
  3. நாக்பூர் – போன்ஸ்லே
  4. இந்தூர் – ஹோல்கர்
  5. குவாலியர் – சிந்தியா
A
அனைத்தும் சரி
B
2, 3, 4, 5 சரி
C
1, 3, 4 சரி
D
1, 4, 5 சரி
Question 60 Explanation: 
(குறிப்பு: மூன்றாம் பானிபட் போர் தோல்விக்கு பிறகு, மராத்தியர்கள் தங்கள் மீதான டெல்லி முகலாயர்களின் கட்டுப்பாட்டை பத்தாண்டுகளுக்கு பிறகு மீட்டனர். எனினும் பேஷ்வா கட்டுப்பாட்டில் இருந்த பழைய மராத்தாஸ் கூட்டமைப்பு கிட்டத்தட்ட ஐந்து சுதந்திரமான மாநிலங்களுக்கு வழிவகுத்தது.)
Question 61
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. முதல் ஆங்கிலேய மராத்திய போர் : 1775-1782
  2. இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் : 1801-1803
  3. மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போர் : 1815-1817
A
1, 2 தவறு
B
1, 3 தவறு
C
2, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 62
மராத்தியர்களின் பேஷ்வா நாராயண ராவின் இறப்புக்குப் பிறகு ________அடுத்த பேஷ்வா ஆனார்.
A
நானா பட்னாவிஸ்
B
ரகுநாதராவ்
C
மாதவராவ்
D
கங்காபாய்
Question 62 Explanation: 
(குறிப்பு: ரகுநாதராவ்விற்கு (ரகோபா) எதிராக பூனாவிலிருந்த ஒரு குழு நானா பட்னாவிஸ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தது. அக்குழு நாராயணராவின் மனைவியான கங்காபாய்க்கு பிறந்த குழந்தையை (இரண்டாம் மாதவராவ்) பேஷ்வாவாக அங்கீகரித்தது.)
Question 63
__________ ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாத ராவுக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது.
A
1773
B
1774
C
1775
D
1776
Question 63 Explanation: 
(குறிப்பு: கல்கத்தா பிரிட்டிஷ் கவுன்சில் சூரத் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் தலைமை ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.)
Question 64
கர்னல் அப்டன் __________ ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்து கொண்டார்.
A
1775
B
1776
C
1777
D
1778
Question 64 Explanation: 
(குறிப்பு: பம்பாயில் ஆங்கில அரசாங்கத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.)
Question 65
___________ ஆண்டு வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தானது.
A
1781 ஏப்ரல் 17
B
1781 மே 17
C
1782 ஏப்ரல் 17
D
1782 மே 17
Question 66
முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் விளைவுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. போரின் முடிவில் இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
  2. பிரிட்டிஷ் அரசுக்கு சால்செட் பகுதி வழங்கப்பட்டது.
  3. இந்திய அரசியலில் சால்பை ஒப்பந்தம் பிரிட்டிஷாருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.
  4. பிரிட்டிஷாருக்கும் மராத்தியர்களுக்கும் இடையே அடுத்த இருபது ஆண்டுகளுக்கு சமாதான உறவு நீடித்தது.
A
1, 2, 3 சரி
B
2, 3, 4 சரி
C
1, 3, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 67
மகாதாஜி சிந்தியா __________ ஆண்டு இறந்தார்.
A
1792
B
1793
C
1794
D
1795
Question 67 Explanation: 
(குறிப்பு: மகாதாஜி சிந்தியா இறந்தபின் அவருடைய மருமகன் தௌலத் ராவ் சிந்தியா பதவியேற்றார்.)
Question 68
பேஷ்வா இரண்டாம் மாதவராவ் _________ ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
A
1794
B
1795
C
1796
D
1797
Question 68 Explanation: 
(குறிப்பு: இரண்டாம் மாதவராவ் இறந்த பிறகு ரகுநாதராவின் வலிமையற்ற மகனான இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா ஆனார்.)
Question 69
பேஷ்வா, வெல்லெஸ்லி பிரபு இடையே__________ ஆண்டு பஸ்ஸீன் உடன்படிக்கை ஏற்பட்டது.
A
1800
B
1801
C
1802
D
1803
Question 69 Explanation: 
(குறிப்பு: இவ்வுடன்படிக்கையின்படி பேஷ்வா துணைப்படைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.)
Question 70
சிந்தியாவுடன் சுர்ஜீ-அர்ஜுகான் ஒப்பந்தத்தையும், போன்ஸ்லேவுடன் தியோகான் ஒப்பந்தத்தையும் __________ ஆண்டு ஆங்கிலேயர்கள் செய்து கொண்டனர்.
A
1802
B
1803
C
1805
D
1807
Question 70 Explanation: 
(குறிப்பு: ஆங்கிலேயரின் இராணுவம் வெல்லெஸ்லியின் தலைமையில், அஸ்ஸே மற்றும் அரகான் பகுதியில் சிந்தியா, போன்ஸ்லே ஆகியோரின் கூட்டுப் படைகளை தோற்கடித்தது. இவ்வெற்றிக்கு பிறகு மேற்கண்ட ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.)
Question 71
பின்வருவனவற்றுள் இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய போரின் விளைவுகள் எவை?
  1. இப்போருக்கு பின் மராத்தியர்களின் வலிமை காலப்போக்கில் பலவீனமடைந்தது.
  2. இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறத்தொடங்கியது.
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 72
  • கூற்று 1: மூன்றாவது ஆங்கிலேய மராத்தியப் போர், ஆங்கில படைவீரர்கள் மராத்திய பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது தொடங்கியது.
  • கூற்று 2: இந்த ஆக்கிரமிப்பில் தலைமை ஆளுநர் ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு, ஜெனரல் ஹிஸ்லாப் தலைமையின் கீழ் ஒரு படைப்பிரிவு உதவியது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 72 Explanation: 
(குறிப்பு: மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போரின் போது, சித்தாபால்டி போரில் போன்ஸ்லேவும், மகித்பூர் போரில் ஹோல்கரும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.)
Question 73
பின்வருவனவற்றுள் மூன்றாவது ஆங்கிலேய மராத்திய போரின் விளைவுகள் எவை?
  1. இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
  2. பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
  3. தோற்கடிக்கப்பட்ட போன்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
  4. மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
A
1, 2, 4 சரி
B
2, 3, 4 சரி
C
1, 2, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 73 Explanation: 
(குறிப்பு: மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.)
Question 74
ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு _________ முதன்மை நிறுவனங்களாக இயங்கியது.
A
2
B
3
C
4
D
5
Question 74 Explanation: 
(குறிப்பு: 4 முதன்மை நிறுவனங்கள் 1. குடிமைப் பணிகள் 2. இராணுவம் 3. காவல் 4. நீதித்துறை)
Question 75
‘சிவில் சர்வீஸ்' என்ற வார்த்தை முதன் முதலில் _________ ஆல் பயன்படுத்தப்பட்டது.
A
போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனி
B
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
C
டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி
D
டேனியக் கிழக்கிந்திய கம்பெனி
Question 75 Explanation: 
(குறிப்பு: சட்டங்களை முறையாக செயல்படுத்துதல், வரி வசூலித்தல் ஆகியன குடிமைப் பணியின் முதன்மைப் பணியாக இருந்தது.)
Question 76
  1. கூற்று 1: ஆரம்பத்தில் வியாபார ரீதியாக இருந்த குடிமைப் பணிகள் பின்னர் பொதுப்பணியாக மாறியது.
  2. கூற்று 2: முதலில் பொதுப்பணியின் நியமனங்கள் அனைத்தும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் அவையின் தனியுரிமையாக இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 76 Explanation: 
(குறிப்பு: நியமனம் செய்யப்பட்ட பொது பணியாளர்கள் லஞ்சம், ஊழல், சட்ட விரோத வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.)
Question 77
தலைமை ஆளுநராக காரன் வாலிசு பதவியேற்ற ஆண்டு
A
1782
B
1784
C
1786
D
1788
Question 77 Explanation: 
(குறிப்பு: காரன்வாலிசு தனியார் வணிகத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றினார். கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி, உலகின் மிக உயர்ந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களாக அவர்களை மாற்றினார்.)
Question 78
இந்திய கவர்னர் ஜெனரலாக வெல்லெஸ்லி பிரபு பதவியேற்ற ஆண்டு
A
1792
B
1794
C
1797
D
1798
Question 78 Explanation: 
(குறிப்பு: வெல்லெஸ்லி பிரபு அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்தினார்.)
Question 79
வெல்லெஸ்லி பிரபு ___________ ஆண்டு கல்கத்தாவில் வில்லியம் கோட்டையில் மொழி, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.
A
1797
B
1798
C
1799
D
1800
Question 79 Explanation: 
(குறிப்பு: கம்பெனியின் இயக்குநர்கள் இதனை ஏற்க மறுத்து, 1806 ல் இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்திய கல்லூரியை நிறுவினர்.)
Question 80
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன்முதலில் __________ ஆண்டு பட்டயச் சட்டம் அறிமுகப்படுத்தியது.
A
1793
B
1813
C
1833
D
1853
Question 80 Explanation: 
(குறிப்பு: கம்பெனியின் இயக்குநர் அவையால் நியமனம் செய்யப்படாதவர்கள் போட்டித் தேர்வினை எழுத தகுதியற்றவர்கள் எனப்பட்டது. எனவே இந்த முறை நியமனம் மற்றும் போட்டித் தேர்வு முறை என்றழைக்கப்பட்டது.)
Question 81
திறந்த முறையிலான போட்டித் தேர்வுமுறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது ___________ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A
1843
B
1848
C
1853
D
1858
Question 81 Explanation: 
(குறிப்பு: இம்முறை 1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டது.)
Question 82
1858 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டப்படி போட்டித் தேர்வுக்கான அதிகபட்ச வயது __________ ஆக நிர்ணயிக்கப்பட்டது.
A
20
B
21
C
22
D
23
Question 82 Explanation: 
(குறிப்பு: இச்சட்டத்தை தொடர்ந்து 1858 ஆம் ஆண்டு ஹெய்லிபரியில் இருந்த கிழக்கிந்திய கல்லூரி அகற்றப்பட்டது. மேலும் குடிமை பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வசமானது.)
Question 83
___________ ஆண்டின் ஒழுங்குமுறை ஆணையின் மூலம் குடிமைப் பணி தேர்வெழுத அதிகபட்ச வயது 22 ஆக குறைக்கப்பட்டது.
A
1859
B
1860
C
1862
D
1863
Question 83 Explanation: 
(குறிப்பு: குடிமைப் பணி தேர்வெழுதும் வயது 1866ல் 21 ஆகவும் 1876ல் 19 ஆகவும் குறைக்கப்பட்டது.)
Question 84
___________ ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய ஆட்சி பணி சட்டம் இயற்றப்பட்டது.
A
1858
B
1859
C
1860
D
1861
Question 84 Explanation: 
(குறிப்பு: இச்சட்டம் சில உயர் நிர்வாக பதவிகள் மற்றும் நீதித்துறை பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய ஒதுக்கீடு செய்திருந்தது. பின்னர் இப்பதவிகள் இந்திய ஆட்சிப் பணிகளாக மாற்றப்பட்டன.)
Question 85
கீழ்க்கண்டவர்களுள் 1869ல் ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற இந்தியர்கள் யார்?
  1. சுரேந்திரநாத் பானர்ஜி
  2. ரமேஷ் சந்திர தத்
  3. பிகாரி லால் குப்தா
  4. இரபீந்திரநாத் தாகூர்
A
1, 2
B
2, 3
C
1, 2, 4
D
1, 2, 3
Question 85 Explanation: 
(குறிப்பு: வயது வரம்பு குறைப்பு மற்றும் இலண்டனுக்கு சென்று தேர்வு எழுதுதல் ஆகிய காரணங்களால் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வை எழுதக் கூடிய சூழ்நிலை நிலவியது.)
Question 86
1863ல் ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் __________.
A
ரமேஷ் சந்திர தத்
B
பிகாரி லால் குப்தா
C
இரபீந்திரநாத் தாகூர்
D
சத்தியேந்திரநாத் தாகூர்
Question 86 Explanation: 
(குறிப்பு: இவர் கவிஞர் ரபீந்தரநாத் தாகூரின் மூத்த சகோரர் ஆவார்.)
Question 87
ஐசிஎஸ் தேர்விற்கான வயது வரம்பு 21 இல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு
A
1881
B
1883
C
1891
D
1892
Question 88
அரசு பணியைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்லிங்டன் பிரபு என்பவரின் தலைமையில் அரச ஆணையம் (ராயல் கமிஷன்) நிறுவப்பட்ட ஆண்டு
A
1909
B
1911
C
1912
D
1913
Question 88 Explanation: 
(குறிப்பு: இதன் உறுப்பினர்களாக இந்தியர்களான கோபால கிருஷ்ண கோகலே, சர் அப்துர்ரஹீம் மற்றும் நான்கு ஆங்கிலேயர்களும் இடம்பெற்றிருந்தனர்.)
Question 89
இஸ்லிங்டன் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட அரச ஆணையம் எப்போது தனது பரிந்துரையை வெளியிட்டது?
A
1912
B
1914
C
1916
D
1917
Question 89 Explanation: 
(குறிப்பு: இதன் பரிந்துரைகள் இந்தியர்களின் கோரிக்கையை ஓரளவிற்கு பூர்த்தி செய்வதாக இருந்தது மட்டுமல்லாமல் குடிமை பணி தேர்வை இந்திய மயமாக்கியது.)
Question 90
மாண்டேகு மற்றும் செம்ஸ்போர்டு ஆகியோர், 1918ல் இந்திய ஆட்சிப் பணியில ___________ சதவீத இந்தியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
A
25%
B
28%
C
33%
D
50%
Question 90 Explanation: 
(குறிப்பு: படிப்படியாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் இவர்கள் பரிந்துரைத்தனர்.)
Question 91
லீ பிரபு தலைமையிலான அரச ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
A
1918
B
1921
C
1923
D
1925
Question 91 Explanation: 
(குறிப்பு: இந்த ஆணையம் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய காடுகள் பணி ஆகிய அனைத்து நியமனங்களும் இந்தியாவுக்கான அரசுச் செயலரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.)
Question 92
__________ சட்டம் மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும், மாகாணங்களில்-மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒன்றும் உருவாக வழிவகை செய்தது.
A
1793 பட்டயச் சட்டம்
B
1858 இந்திய அரசுச் சட்டம்
C
1935 இந்திய அரசுச் சட்டம்
D
1833 பட்டயச் சட்டம்
Question 92 Explanation: 
(குறிப்பு: ஒரு சில மாகாணங்கள் ஒன்றிணைந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கவும் இச்சட்டம் வழிவகை செய்தது.)
Question 93
  • கூற்று 1: பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் இரண்டாவது முக்கிய தூணாக இராணுவம் விளங்கியது.
  • கூற்று 2: ஆங்கிலேயர்கள் ஆரம்ப காலத்தில் வங்காளம், பம்பாய், மதராஸ் ஆகிய மூன்று மாகாணங்களிலும் தனித்தனியாக மூன்று படைப்பிரிவை ஏற்படுத்தியிருந்தனர்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 93 Explanation: 
(குறிப்பு: கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்தது, அதற்கு சிப்பாய் இராணுவம் என்று பெயர்.)
Question 94
1857 ஆம் ஆண்டு கம்பெனி இராணுவம் ___________ சதவீத இந்தியர்களை கொண்டதாக இருந்தது.
A
50%
B
65%
C
75%
D
86%
Question 94 Explanation: 
(குறிப்பு: இராணுவத்தில் இந்தியர்களுக்கான உயர் பதவி சுபேதார் மட்டுமே ஆகும்.)
Question 95
1857ல் இந்திய இராணுவத்தில் 3, 11,400 வீரர்களில் __________ வீரர்கள் இந்தியர்களாக இருந்தனர்.
A
1,50,000
B
1,75,900
C
2,65,900
D
2,50,000
Question 95 Explanation: 
(குறிப்பு: பிளாசிப் போரில் (1757) ஐரோப்பிய காலாட்படை-1950, ஐரோப்பிய பீரங்கி படை-100, ஆங்கிலேய மாலுமிகள்-50, இந்திய சிப்பாய்கள்-2100, வங்காளத்தில் இருந்த ஆங்கில இராணுவம்- 6000 ஆகியவை ஆங்கில இராணுவத்தின் வலிமையாக இருந்தன.)
Question 96
__________ ஆண்டு வங்காளத்தில் திவானி (வரிவசூல்) உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
A
1755
B
1758
C
1765
D
1768
Question 96 Explanation: 
(குறிப்பு: இந்த சமயத்தில் சர்க்கார் (கிராம மாவட்டங்கள்) என்ற ஆட்சி பிரிவுக்கு பொறுப்பு பெளஜ்தார் வசம் முகலாய காவல்துறை சென்றது.)
Question 97
கொத்வால் என்பவர் ___________ ஆவார்.
A
மாவட்ட ஆட்சியர்
B
நகரங்களை நிர்வகிக்கும் காவல் அலுவலர்
C
கிராம அளவிலான காவலாளி
D
ஜமீன்தார்கள்
Question 97 Explanation: 
(குறிப்பு: கிராமங்கள் கிராம காவலாளிகளால் பாதுகாக்கப்பட்டது அவர்களை ஜமீன்தார்கள் சம்பளம் வழங்கி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.)
Question 98
இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் யார்?
A
வாரன்ஹேஸ்டிங்ஸ்
B
இராபர்ட் கிளைவ்
C
காரன்வாலிஸ்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 98 Explanation: 
(குறிப்பு: காரன்வாலிஸ் ‘தரோகா’ என்பவரை தலைவராக கொண்ட சரகங்கள் அல்லது 'தானாக்கள்' என்ற காவல் பகுதிகளை உருவாக்கினார்.)
Question 99
ஜமீன்தார்களை காவல் பணிகளிலிருந்து விடுவித்த காரன்வாலிஸ் ___________ ல் முறையான காவல் துறையை உருவாக்கினார்.
A
1782
B
1785
C
1789
D
1791
Question 100
கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் ___________ என்றழைக்கப்பட்டனர்.
A
ஜமீன்தார்கள்
B
கொத்வால்
C
செளகிதார்கள்
D
தரோகா
Question 100 Explanation: 
(குறிப்பு: காவல்துறை உருவாக்கப்பட்டப் பிறகு பெருநகரங்களில் பழைய முறையான கொத்வால் காவல் பணியே தொடர்ந்தது.)
Question 101
தரோகா முறை__________ ஆண்டு மதராஸ் மாகாணத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
A
1799
B
1800
C
1801
D
1802
Question 101 Explanation: 
(குறிப்பு: ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு தரோகா நியமிக்கப்பட்டார்.)
Question 102
  1. கூற்று 1: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்குவதற்கு முன்னர், அனைத்து தானாக்களும் மாவட்ட நீதிபதியின் பொது மேற்பார்வையில் இருந்தது,
  2. கூற்று 2: 1806ல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 102 Explanation: 
(குறிப்பு: 1808 ல் ஒவ்வொரு தானாவிற்கும் ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.)
Question 103
___________ ஆண்டு இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்டது.
A
1762
B
1768
C
1770
D
1772
Question 103 Explanation: 
(குறிப்பு: இதன் விளைவாக சிவில் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் என்றழைக்கப்பட்ட பெளஜ்தாரி அதாலத் ஆகியன ஏற்படுத்தப்பட்டன.)
Question 104
__________ சட்டத்தின்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.
A
1793 பட்டயச் சட்டம்
B
1858 இந்திய அரசுச் சட்டம்
C
1935 இந்திய அரசுச் சட்டம்
D
1773 ஒழுங்குமுறைச் சட்டம்
Question 104 Explanation: 
(குறிப்பு: இந்நீதிமன்றத்திற்கு ஒரு முதன்மை நீதிபதியையும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷ் மன்னர் நியமித்தார்.)
Question 105
கல்கத்தாவில் உள்ள உச்சநீதிமன்றத்தின் மாதிரியில் __________ ஆண்டு முறையே மதராசிலும் பம்பாயிலும் உச்சநீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
A
1783, 1823
B
1823, 1824
C
1828, 1829
D
1828, 1829
Question 105 Explanation: 
(குறிப்பு: 1861 ஆம் ஆண்டு இந்திய உயர்நீதிமன்றச் சட்டத்தின்படி கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் பழைய உச்சநீதிமன்றங்களுக்கு பதிலாக மூன்று உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.)
Question 106
__________ ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு ஜூரி முறையை வங்காளத்தில் கொண்டுவந்தார்.
A
1823
B
1828
C
1832
D
1837
Question 106 Explanation: 
(குறிப்பு: சட்டங்களை தொகுக்க இந்திய சட்ட ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டது.)
Question 107
  • கூற்று 1: வாங்காளத்தின், வில்லியம் கோட்டையில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
  • கூற்று 2: மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி சர் திருவாரூர் முத்துசாமி ஆவார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 108
இந்தியாவில் இருந்த சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ___________ ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே துணைப்படைத் திட்டமாகும்.
A
வாரன்ஹேஸ்டிங்ஸ்
B
இராபர்ட் கிளைவ்
C
காரன்வாலிஸ்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 108 Explanation: 
(குறிப்பு: இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இத்திட்டம் மிகச்சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.)
Question 109
துணைப்படைத் திட்டத்தின்  அம்சங்களில் தவறானதை தேர்ந்தெடு.
  1. இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்து விட்டு ஆங்கிலேயரின் படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  2. சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கிலேயரின் பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
  3. ஆங்கிலேயரின் படையை பராமரிக்கவும், படை வீரர்களின் ஆண்டுச் சம்பளம் வழங்குவதற்காகவும், நிரந்தரமாக சில பகுதிகளை அந்நாட்டு அரசர் ஆங்கிலேயருக்கு வழங்க வேண்டும்.
  4. ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பிய அலுவலர்கள் அனைவரும் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.
 
A
4 மட்டும் தவறு
B
3, 4 தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 109 Explanation: 
(குறிப்பு: சுதேச நாட்டு அரசர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதி பெற்ற பின்னரே அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.)
Question 110
'இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு’ என்பதை 'இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு’ என்று மாற்றியவர் _________.
A
வாரன்ஹேஸ்டிங்ஸ்
B
டல்ஹெளசி
C
காரன்வாலிஸ்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 110 Explanation: 
(குறிப்பு: வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத்திட்டம் என்ற இராஜதந்திர முயற்சி ஆங்கிலேயரை இந்தியாவில் தலையாய சக்தியாக மாற்றியது.)
Question 111
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு எது?
A
அயோத்தி
B
ஹைதராபாத்
C
ஜெய்பூர்
D
ஜோத்பூர்
Question 111 Explanation: 
(குறிப்பு: 1798 ஆம் ஆண்டு ஹைதராபாத் துணைப்படைத் திட்டத்தில் இணைந்தது.)
Question 112
தவறான இணையைத் தேர்ந்தெடு. (துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் - ஆண்டு)
  1. தஞ்சாவூர்-1799
  2. அயோத்தி-1801
  3. பேஷ்வா-1802
  4. போன்ஸ்லே-1804
  5. இந்தூர்-1818
A
2, 3 தவறு
B
3 மட்டும் தவறு
C
4, 5 தவறு
D
எதுவுமில்லை
Question 112 Explanation: 
(குறிப்பு: போன்ஸ்லே - 1803, குவாலியர் - 1804, இந்தூர் - 1817, ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர்-1818.)
Question 113
டல்ஹெளசி பிரபு வாரிசு இழப்புக் கொள்கையை அறிவித்த ஆண்டு
A
1828
B
1832
C
1837
D
1848
Question 113 Explanation: 
(குறிப்பு: இக்கொள்கையின்படி, சுதேச மன்னர்கள் ஆங்கிலேயரின் அனுமதி இன்றி வாரிசுகளை தத்தெடுக்க நேரிடும்போது, மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும், மன்னரின் ஆட்சிப்பகுதி ஆங்கிலேயரின் தலையாய சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது.)
Question 114
தவறான இணையைத் தேர்ந்தெடு. (வாரிசு இழப்புக் கொள்கை மூலம் இணைக்கப்பட்ட நாடு - இணைக்கப்பட்ட ஆண்டு)
  1. சதாரா – 1848
  2. ஜெய்த்பூர், சம்பல்பூர் – 1849
  3. பகத் -1850
  4. உதய்பூர்-1852
  5. ஜான்சி – 1853
  6. நாக்பூர்-1854
A
2, 3, 4 தவறு
B
2 மட்டும் தவறு
C
4 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 114 Explanation: 
(குறிப்பு: வாரிசு இழப்புக்கொள்கை, 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.)
Question 115
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா __________.
A
பாலாஜி விஸ்வநாத்
B
இரண்டாம் பாஜிராவ்
C
பாலாஜி பாஜிராவ்
D
பாஜிராவ்
Question 116
பொருத்துக.
  1. அய்-லா-சப்பேல் உடன்படிக்கை   i) முதல் ஆங்கிலேய மைசூர் போர்
  2. சால்பை உடன்படிக்கை            ii) முதல் கர்நாடகப் போர்
  3. பாரிசு உடன்படிக்கை                      iii) மூன்றாம் கர்நாடகப் போர்
  4. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை   iv) முதல் மராத்திய போர்
  5. மெட்ராஸ் உடன்படிக்கை               v) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
A
ii i v iv iii
B
iii iv i ii v
C
ii iv iii v i
D
iii v ii i iv
Question 117
பொருத்துக.
  1. அடையாறு போர்      i) 1746
  2. ஆம்பூர் போர்            ii) 1749
  3. வந்தவாசி போர்        iii) 1760
  4. ஆற்காட்டு போர்        iv) 1751
A
ii i iii iv
B
v ii i iii
C
i ii iii iv
D
i iii iv ii
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 117 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!