GeographyOnline Test

நாம் வாழும் பூமி

நாம் வாழும் பூமி

Congratulations - you have completed நாம் வாழும் பூமி. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலகின் உயரமான மலை தொடர் எது?
A
ஆல்ப்ஸ் மலை
B
இமயமலைத் தொடர்
C
ஆண்டிஸ் மலை
D
ராக்கி மலை
Question 2
இமயமலை ஒரு
A
இடைமுறிவு மலை
B
உறைபனி உடைப்பு
C
கீழ்முகப் பள்ளத்தாக்கு
D
மடிப்பு மலை
Question 3
ஆப்பிரிக்க ஐரோப்பிய கண்டப்பலகைகளின் மோதலினால் உருவான மலை எது?
A
ஆல்ப்ஸ் மலை
B
இமயமலை
C
ராக்கி மலை
D
ஆண்டிஸ் மலை
Question 4
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. நிலவியல் விசைகளால் பாறைகள் தங்கள் வலுவினை இழந்து இடைமுறிவுகள் ஏற்பட்டு விரிசல் அடைகின்றன. இதில் ஏற்படும் துண்டுகள் கீழ்நோக்கி சரிந்து பள்ளம் ஏற்படுகின்றன. இப்பள்ளம் கிராபின் எனப்படும். மேலெழுந்து நிற்கும் பாறைகள் ஹார்ஸ்ட் எனப்படும்.
  2. ஹார்ஸ்ட் எனப்படும் பாறைதுண்டுகள் நீள் மலைத்தொடர்களாக உருவாகின்றன. இத்தகைய மலைத்தொடர்கள் இடைமுறிவு மலை எனப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 5
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. கண்டங்கள் மீது அமைத்துள்ள மலைத்தொடர்களை ஈர்க்கின்ற பள்ளத்தாக்குகள் கீழ்முகப்பள்ளத்தாக்குகள் எனப்படும்.
  2. கீழ்முக மடிப்புகள் பள்ளத்தாக்குகளாகவும்,மேல்முக மடிப்புகள் மலைகளாகவும் உள்ளன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 6
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. உயரமான முகடுகளுடன் கூடிய நில அமைப்பே மலை. பல மலைகள் தொடர்ச்சியாக அமையும்போது அது மலைத்தொடர் என வழங்கப்படுகிறது.
  2. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நிலவியல் பலகைகளின் மோதல் காரணமாக இரண்டு கண்டப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பாறைகளில் மடிப்புகள் ஏற்பட்டு மேலே உந்தப்படுவது மடிப்பு மலையாகும்.
  3. சுற்றயுள்ள நிலப்பகுதிகளைவிடச் சற்றே உயரமாகவும் அதன் மேற்பகுதி  தட்டையாகவும் உள்ள நில அமைப்பு சமவெளி எனப்படுகிறது.
  4. திபெத் பீடபூமிதான் உலகின் மிக உயரமான பீடபூமி ஆகும்.
A
1,2,மற்றும் 3
B
1,மற்றும் 4
C
1,2,மற்றும் 4
D
2,3,மற்றும் 4
Question 7
உலகின் கூரை எனப்படுவது எது?
A
சமவெளிகள்
B
திபெத் பீடபூமி
C
சகாரா
D
இவை அனைத்தும்
Question 8
அதிகம் மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் எது?
A
மலைகள்
B
பீடபூமி
C
கண்டங்கள்
D
சமவெளிகள்
Question 9
கடலுக்கு அடியில் மிக ஆழமான பகுதிகள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
பீடபூமி
B
கண்டங்கள்
C
சமவெளிகள்
D
அகழிகள்
Question 10
கோபி குளிர்ப்பாலைவனம் இமயமலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 11
உலகின் உயரமான பீடபூமி எது?
A
கொலோரேடோ
B
அண்டார்டிக்
C
தக்கான
D
திபெத்
Question 12
பரப்பளவில் இரண்டாவது பெரிய கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 13
அடர்ந்த காடுகள் மற்றும் கனிம வளங்களின் செறிவுமிக்க கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 14
கீழ்கண்ட வாக்கியங்களில் தென் அமெரிக்கா கண்டம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. இக்கண்டம் பெரும் அளவு தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  2. ராக்கி மலைத்தொடர் இந்தக் கண்டத்தில் உள்ளது.
  3. உலகின் மிக அகன்ற அமேசான் ஆறு இக்கண்டத்தில் உள்ளது.
  4. ஆல்ப்ஸ் மலைத்தொடர் இக்கண்டத்தில் உள்ளது.
A
1,2,மற்றும் 3
B
1,மற்றும் 4
C
1,மற்றும் 3
D
1,2,மற்றும் 4
Question 15
நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட தீவுக்கண்டம் எது?
A
நியூசிலாந்து
B
நியூசிலாந்து
C
பிஜித் தீவுகள்
D
நியூகினியா
Question 16
கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது
A
நியூகினியா
B
பிஜித் தீவுகள்
C
நீர்ச்சந்தி
D
ஆஸ்திரேலியாக் கடற்கரை
Question 17
கீழ்கண்ட வாக்கியங்கள் எக்கண்டத்துடன் தொடர்பானது?
  1. இந்தக் கண்டம் வட அரைக்கொளதிலும்,தென் அரைக்கோளத்திலும் பரவியுள்ளது
  2. நிலநடுக்கோடு இந்தக் கண்டதை இரண்டாகப் பிரிக்கிறது.
  3. நிலநடுக்கோடு இந்தக் கண்டதை இரண்டாகப் பிரிக்கிறது.
  4. உலகின் மிக நீளமான நைல் நதி, மிகப்பெரிய பாலைவனமான சகாராவும் இக்கண்டத்தில் உள்ளது.
 
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 18
அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 19
உலகின் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் எது?
A
ஆப்பிரிக்கா
B
ஆசியா
C
வட அமெரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 20
நியூசிலாந்து, பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா முதலிய தீவுகள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A
கண்டங்கள்
B
ஆஸ்திரேலியா
C
சமவெளிகள்
D
ஓசியானியத் தீவுகள்
Question 21
தட்சின் கங்கோத்ரி மற்றும் மைத்ரேயி எனும் ஆய்வுக் குடியிருப்புகள் அமைந்துள்ள கண்டம் எது?
A
ஆர்டிக்
B
அன்டார்டிகா
C
ஆப்பிரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 22
நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நீர்ச்சந்தி
B
தீவு
C
நிலச்சந்தி
D
தீபகற்பம்
Question 23
மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நீர்ச்சந்தி
B
தீவு
C
நிலச்சந்தி
D
தீபகற்பம்
Question 24
இரண்டு நீர்ப்பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நீர்ச்சந்தி
B
தீவு
C
நிலச்சந்தி
D
நிலச்சந்தி
Question 25
விரிந்த இரண்டு நிலப்பரப்புகளை இணைக்கும் மிகக் குறுகிய நிலப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நீர்ச்சந்தி
B
தீவு
C
நிலச்சந்தி
D
தீபகற்பம்
Question 26
இந்தியாவையும்,இலங்கையையும் பிரிப்பது எது?
A
பேரிங் நிலச்சந்தி
B
பனாமா நிலச்சந்தி
C
பேரிங் நீர்ச்சந்தி
D
பாக் நீர்ச்சந்தி
Question 27
இந்தியா ஒரு
A
நீர்ச்சந்தி
B
தீவு
C
நிலச்சந்தி
D
தீபகற்பம்
Question 28
தீபகற்பம்
A
ஆர்டிக்
B
அன்டார்டிகா
C
ஆப்பிரிக்கா
D
தென் அமெரிக்கா
Question 29
கடல்கள் இன்றித் தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
நிலச்சந்தி
B
கண்டங்கள்
C
தீவு
D
இவற்றுள் எதுவும் இல்லை
Question 30
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. மூன்று பக்கங்களும் நிலமாகவும், ஒரு பக்கம் கடலாகவும் அமைந்த நீர்ப்பரப்புக்கு வளைகுடா என்று பெயர்.
  2. அளவில் சற்றே சிறியதாக இருந்தால் விரிகுடா என்று பெயர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 31
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. பூமியின் மொத்தப்பரப்பில் 71% மற்றும் பூமியின் மொத்த நீரில் 97% கொண்டிருகின்றது.
  2. புவிப்பரப்பில் சுமார் 36௦ மி.ச.கி.மீ. பரப்பு பெருங்கடல் பரப்புகளாக உள்ளன .
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 32
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. வாட அரைக்கோளத்தில் நிலம் மற்றும் பெருங்கடல் விகிதம் 1:4 என உள்ளது
  2. தென் அரைக்கோளத்தில் நிலம் மற்றும் பெருங்கடல் விகிதம் 1:1,5 என உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 33
தமிழகத்தின் கிழக்கே உள்ள கடல் எது?
A
வங்காள விரிகுடா
B
அரபிக்கடல்
C
இந்திய பெருங்கடல்
D
அட்லாண்டிக் பெருங்கடல்
Question 34
பேராழி என்ற ஒகேனஸ் எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது
A
அரபி
B
லத்தீன்
C
ஆங்கிலம்
D
கிரேக்கம்
Question 35
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. பூமியானது நீர்கோளம் எனவும் அழைக்கப்படுகிறது.
  2. புவியில் உயிரினமானது முதன் முதலில் கடலில் தோன்றிருக்க கூடும் என நம்பப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 36
கீழ்கண்ட வாக்கியங்களில் பசிபிக் பேராழி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. புவியின் மொத்த மேற்பரப்பில் 33 சதவீதம் (புவிபரப்பில் 1/3 பங்கு) தன்னகத்தே கொண்டுள்ளது
  2. இது அட்லாண்டிக் கடலைக் காட்டிலும் 4 மடங்கு பெரிது.
  3. பசிபிக் பேராழியானது பெருங்கடல்களுள் மிகப் பெரியதும் மற்றும் ஆழமான பேராழியும் ஆகும்.
  4. பசிபிக் பேராழியில் உள்ள பெரும்பான்மையான தீவுகளில் செயல்படும் எரிமலைகள் நெருப்புக் குழம்பைக் கக்குவதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் (PACIFIC RING OF FIRE) என்று அழைக்கப்படுகிறது
  5. வாட பசிபிக்கில் உள்ள சேலஞ்சர் ஆழிக்குழியே (மரியானா ஆழிக்குழி (mariana trench) உலகின் ஆழமான பகுதி ஆகும்
A
1,2, மற்றும் 5
B
1,3,மற்றும் 4
C
1,3,மற்றும் 5
D
2,3,மற்றும் 4
Question 37
மரியானா ஆழிக்குழியின் ஆழம் என்ன?
A
11,033 மீட்டர்கள்
B
10,033 மீட்டர்கள்
C
9,033 மீட்டர்கள்
D
21,033 மீட்டர்கள்
Question 38
இரண்டாவது பெரிய பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 39
கீழ்கண்ட பேராழிகளை ஆழத்தின் அடிப்படையில் ஏறு வரிசை காண்க
A
இந்திய பேராழி- அட்லாண்டிக் பேராழி-பசிபிக் பேராழி- அண்டார்டிகா பேராழி
B
பசிபிக் பேராழி-அட்லாண்டிக் பேராழி- இந்திய பேராழி- அண்டார்டிகா பேராழி
C
அண்டார்டிகா பேராழி-இந்திய பேராழி-அட்லாண்டிக் பேராழி- பசிபிக் பேராழி
D
பசிபிக் பேராழி- இந்திய பேராழி-அட்லாண்டிக் பேராழி-அண்டார்டிகா பேராழி
Question 40
மிக வலிமை கொண்ட சூறாவளிகள் அதிகமாகத் தோன்றுகின்ற பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 41
கீரின்லாந்து, பிரிட்டிஷ் தீவுகள், நியூபவுண்ட்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வெர்டிமுனை மற்றும் கான்ரீஸ் ஆகிய தீவுகள் உள்ள பெருங்கடல் எது ?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 42
அமேசான், மிஸிஸிப்பி, செயின்ட் லாரன்ஸ் காங்கோ முதலான ஆறுகள் கலக்கும் பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 43
புவியின் மொத்த பரப்பில் 16.5% வரை பரவிக் காணப்படுகிற பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 44
உலகில் உள்ள அணைத்து பேராழிகளின் மொத்த பரப்பில் 2௦ சதவீதம் கொண்டுள்ள பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 45
தென் முனையில் அண்டார்டிகா கண்டத்தினை சுற்றி அமைந்துள்ள பேராழி எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 46
தென் அரைக்கோளத்தில் 55° தென் அட்சத்தில் அமைந்துள்ள அணைத்து நீர்பரப்பினை எவ்வாறு அழைக்கிறோம்.
A
பசிபிக் பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
ஆர்டிக் பேராழி
D
தென் பெருங்கடல்கள்
Question 47
அந்தமான், நிக்கோபர், மாலத்தீவு, மடகாஸ்கர், இலங்கை, சுமத்ரா,மற்றும் ஜாவா ஆகிய உள்ள பெருங்கடல் எது ?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 48
இந்திய பேராழியின் சராசரி ஆழம் என்ன?
A
2,000 மீட்டர்
B
4,000 மீட்டர்
C
6,000 மீட்டர்
D
8,000 மீட்டர்
Question 49
இந்திய வளம் பெறும் பருவக்காற்று மழை எந்தப் பெருங்கடலில் உருவாகிறது
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 50
விக்டோரியா தீவுகள், எலிசபத் தீவுகள், ஐஸ்லாந்து ஸ்பிட்பெர்ஜென் மற்றும் நோவாக சோம்லியா ஆகிய தீவுகள் உள்ள பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
ஆர்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 51
அலெக்ஸாண்டர் தீவுகள், பாலினி தீவுகள், மற்றும் ரோஸ் தீவுகள் உள்ள பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
ஆர்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 52
இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஹவாய் உள்ள பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 53
ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் பசிபிக் பேராழியுடனும் இணையும் பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 54
மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா, கிழக்கில் வட அமெரிக்கா, தெற்கில் அண்டார்டிகாவையும் எல்லைகளாக கொண்டுள்ள பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
அட்லாண்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 55
கீழ்கண்ட வாக்கியங்களில் இந்திய பேராழி தொடர்பனவற்றுள் எவை சரியானவை அல்ல?
  1. இது உலகின் முன்றாவது பெரிய பெருங்கடல்
  2. இக்கடல் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களினால் சூழப்பட்டுள்ளது
  3. நிலநடுகோட்டிற்கு அருகாமையில் உள்ளதால் இதன் மேற்பரப்பு வெப்பநிலை குறைவாக உள்ளது.
  4. வரலாற்று காலந்தொட்டே வணிகர்களின் பரிச்சயமான வணிக வழியாக இருந்து வருகின்றது.
  5. ஏறக்குறைய வட்டவடிவில் அமைந்துள்ளது.
A
1,2, மற்றும் 3
B
1 மற்றும் 4
C
2,4 மற்றும் 5
D
3 மற்றும் 5
Question 56
ஆர்டிக் பேராழியின் சராசரி ஆழம் என்ன?
A
2,000 மீட்டர்
B
4,000 மீட்டர்
C
6,000 மீட்டர்
D
8,000 மீட்டர்
Question 57
வடதுருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய பெருங்கடல் எது?
A
இந்திய பேராழி
B
ஆர்டிக் பேராழி
C
பசிபிக் பேராழி
D
அண்டார்டிகா பேராழி
Question 58
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியை பெருங்கடல்கள் என்கின்றோம்.
  2. பெரும்பரப்பிலான நீரினால் சூழப்பட்டிருக்கும் பகுதியை கடல் என அழைக்கின்றோம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 59
கீழ்கண்ட வாக்கியங்களில் பேராழிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. புவியின் பல்வேறு இயக்கங்களுக்கு பேராழிகள் காரணமாகின்றன.
  2. வானிலை மற்றும் வெப்பநிலையினை பாதிக்கின்றன.
  3. சூரியக் கதிர்களை உட்கவருதன் மூலம் புவியின் வெப்பநிலையினை இவை மாற்றியமைக்கின்றன.
  4. உட்கவரப்பட்ட வெப்ப ஆற்றலை கடல் நீரோட்டங்கள் உலகம் முழுவதும் கடத்துகின்றன.
A
1, 2, மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
2, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 60
ஆர்டிக் பேராழியின் மொத்த பரப்பு எவ்வளவு?
A
1௦ மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்
B
4 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்
C
14 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்
D
24 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள்
Question 61
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. உலகில் உள்ள பேராழிகள் அனைத்தும் கடல்கள், வளைகுடாக்கள், நீர் சந்திப்புகள் மற்றும் கால்வாய்கள் மூலம் ஒன்றுடன் ஓன்று இணைக்கப்பட்டுள்ளது.
  2. பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்டிக் ஆகிய நான்கு பேராழிகள் மட்டும் உள்ளன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 62
கடற்கரை ஓரத்தின் ஆழம் குறைந்த பகுதி எது?
A
கண்ட விளிம்பு
B
கண்டத்திட்டு
C
ஆழ்கடல் சமவெளிகள்
D
கண்டச்சரிவு
Question 63
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) அகண்ட கண்டத்திட்டு பகுதியானது மிகச்சிறந்த மீன்பிடித்தளமாக விளங்குகின்றது.
  • காரணம் (R) இங்கு மீன்களின் உணவாக கடல்வாழ் நுண்ணுயிரிகள் (PLANKTON) அதிக அளவு கண்டத்திட்டு பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 64
கண்டத் திட்டையும் ஆழத்திலுள்ள கடல் தரையையும் இணைப்பது எது?
A
கண்ட விளிம்பு
B
கண்டத்திட்டு
C
ஆழ்கடல் சமவெளிகள்
D
கண்டச்சரிவு
Question 65
குறிகிய பள்ளத்தாக்கு, ஓங்கல் மற்றும் சேறு வழிதல் ஆகியன காணப்படும் பகுதி?
A
கண்ட விளிம்பு
B
கண்டத்திட்டு
C
ஆழ்கடல் சமவெளிகள்
D
கண்டச்சரிவு
Question 66
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று A) கொச்சின் மற்றும் மும்பை ஆகியன இயற்கை துறைமுகங்கள்
  • காரணம் (R) : ஒழுங்கற்ற கடற்கரை மற்றும் ஆழமான சரிவுகள் ஆகியன இயற்கை துறைமுகம் அமைய அவசியமாகின்றது.
A
(A) மற்றும (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி அனால் (R) தவறு
D
(A) தவறு அனால் (R) சரி
Question 67
கடற்கரையிலிருந்து காணப்படும் நிலத்தோற்றங்களை வரிசைபடுத்துக
  1. கண்டச்சரிவு
  2. கண்டத்திட்டு
  3. ஆழ்கடல் சமவெளி
  4. ஆழ்கடல் அகழி
A
2,1,4 மற்றும் 3
B
1,2,4 மற்றும் 3
C
2,1,3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 68
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, ஐரோப்பாவின் வடமேற்கு கடற்கரை, ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதிகள் சிறந்த மீன்பிடி தளங்களாக உள்ளன.
  2. கண்டத்திட்டு பகுதிகளில் பெட்ரோலிய ஆழ்குழாய் கிணறுகள் காணப்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 69
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. பசிபிக் பெருங்கடலைக் காட்டிலும் அட்லாண்டிக் பெருங்கடலில் மிகப் பரந்த ஆழ்கடல் சமவெளிகள் பல உள்ளன.
  2. கடலடிக் குன்றுகளைச் சுற்றி கீழ் மட்டத்தில் ஆழ்கடல் சமவெளி (ABYSSAL PLAIN) உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 70
பெருங்கடல் பரப்பின் மொத்தப்பரப்பில் பெருங்கடல் தாழ்ச்சி எத்தனை சதவீதம் உள்ளது?
A
3௦
B
40
C
5௦
D
5௦
Question 71
பெருங்கடல் தாழ்ச்சியில் உள்ள குறுகிய குழிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
அகழிகள்
B
கடல் மலைகள்
C
கண்டச்சரிவு
D
கண்டத்திட்டு
Question 72
கடலின் அடிப்பகுதியில் உள்ள எரிமலையின் ஒவ்வொரு சீற்றத்தின் போது வளர்ந்து உருவாகிறது. இக்கடல் மலைகள் கடல் நீரின் மேற்பரப்பிற்கு மேல் தெரிவது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
தீவு
B
நீர் சுழற்சி
C
கண்டத்திட்டு
D
அகழிகள்
Question 73
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. அட்லாண்டிக் பேராழியின் வர்த்தக வழியானது உலகின் மிகவும் போக்குவரத்து நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது.
  2. வட அரைக்கோளத்தில் அதிகப்படியான நீர்ப்பரப்பு உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 74
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. அண்டார்டிகா பேராழியின் சராசரி ஆழம் 4,500 மீட்டர்களாகும்.
  2. வெப்பநிலையானது 1௦°செல்சியலஸ் முதல் -2° செல்சியஸ் வரை வேறுபடுகிறது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 75
கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தீவுகள் அலை மற்றும் வானிலை செயல்களால் அரிக்கப்பட்டு கீழ்பகுதிக்கு சென்றிருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
அகழிகள்
B
கயாட்
C
தீவு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 76
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. இரு கண்டத்திட்டுகள் ஒன்றோடு ஓன்று மோதும் போது அடர்த்தி அதிகமான தட்டின் அழுத்தத்தால் அடர்த்தி குறைவான தட்டிற்கு கீழ் அடர்த்தி அதிகமான தட்டு செல்வதால் அகழிகள் உருவாகிறது.
  2. பேராழியின் அகழிகள் என்பனவை பேராழியின் ஆழமான பகுதியாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 77
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. கடல் நீரில் சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைட், மெக்னீசியம் சல்பேட், கால்சியம் சல்பேட், பொட்டாசியம் சல்பேட், கால்சியம் கார்பனேட் மற்றும் மெக்னீசியம் புரோமைட் ஆகிய உப்புகள் பெருமளவு கலந்துள்ளன.
  2. உவர்ப்பியம் என்பது கடல் / பேராழியில் ஒரு லிட்டர் நீரில் எத்தனை கிராம் அளவு உப்பு கலந்துள்ளது என்பதை குறிப்பிடுவதாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) புவியில் உள்ள பாறை மற்றும் ஆற்று படுகையின் மண்களில் உள்ள உப்பானது மலைநீரினால் கரைக்கப்பட்டு ஆறுகளில் பாய்கின்றது.
  • காரணம் (R) ஆவியாதலின் செயலினால் கடல் நீர் ஆவியாவதுடன் உப்பு ஆவியாகாமல் தங்கி விடுகிறது. எனவேதான் கடல் நீர் உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
D) (A) தவறு ஆனால் (R) சரி
Question 79
உலகில் உள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் எவ்வளவு?
A
25 கிராம்
B
35 கிராம்
C
55 கிராம்
D
75 கிராம்
Question 80
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) சாக்கடல், செங்கடல் மற்றும் பெரிசியன் வளைகுடாவின் உப்பளவு மிக அதிகமாகும், இங்கு உவர்ப்பியத்தின் அளவு 40 கிராம் ஆகும்
  • காரணம் (R) மிக அதிகமாக நீராவியதாலும் மற்றும் குறைந்த அளவு நன்னீர் சேர்க்கையும் நடைபெறுகிறது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 81
கடல்களிலேயே மிக அதிக அளவு உவர்ப்பியம் உள்ள கடல் எது?
A
சாக்கடல்
B
செங்கடல்
C
மஞ்சள் கடல்
D
கருங்கடல்
Question 82
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A)  துருவ பிரதேசங்களில் உள்ள கடல்களில் உவர்ப்பியம் மிக குறைவாக காணப்படுகிறது.
  • காரணம் (R) பனி உருகுதலும் மற்றும் அதிக மலைப்பொழிவும் இங்கு நடைபெறுகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 83
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. கடல் நீரில் கரைக்கப்படும் வாயுக்களின் அளவுகளை அந்நீரின் வெப்ப நிலையும் உப்பளவும் நிர்ணயிக்கின்றன.
  2. கடல் நீரின் வெப்பம் மற்றும் வெப்பநிலை அதிகரித்தால் அந்நீரின் கரைக்கப்படும் வாயுக்களின் அளவு அதிகமாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 84
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. 99% கடல் உப்புகள் ஆறு வகை தனிமங்களாலும், சேர்மங்களாலும் ஆனவை, குளோரின், சோடியம், சல்பர், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ஆகும்.
  2. கடல் நீரில் காணப்படும் 5௦% உப்பளவில் அதிகம் இருப்பது குளோரின் அயனிகள் ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 85
பேராழியில் உள்ள உயிரினங்களின் பண்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது.
A
நீரோட்டங்கள்
B
வெப்பநிலை
C
அட்சரேகைகள்
D
ஆழம்
Question 86
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) பேராழிகள் சூரிய ஆற்றலைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டுள்ளதால் புவியின் வெப்பச் சமநிலையினை சீர்செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
  • காரணம் (R) நிலத்தின் மேற்ப்பரப்பானது மிக விரைவாக வெப்பமடைந்து மிக விரைவாக குளிர்ச்சி அடைகிறது ஆனால் நீர்ப்பரப்பானது மெதுவாக வெப்பமடைந்து மெதுவாகவே குளிர்ச்சி அடைகிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 87
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. அலைகள் உருவாவதற்கு முக்கியக்காரணம் காற்றோட்டம் ஆகும். இயற்கையான அலைகள் காற்றோட்டதால் தோற்றுவிக்கப்படுகின்றன.
  2. நீரானது அலைகளோடு பயணிப்பது இல்லை
  3. பேராழிகளில் நீரின் மேலும் கீழுமாக அசைவே அலைகள் என அழைக்கப்படுகிறது.
A
1,2 மட்டும் சரி
B
3 மட்டும் சரி
C
1,2 மட்டும் 3 சரி
D
1,2, தவறு
Question 88
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. பேராழி நீரோட்டங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட திசையில் பெரிய பரப்பில் நகரும் நீரினை குறிக்கும்.
  2. பேராழி நீரோட்டங்கள் இரண்டு வகைப்படும் அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும்
  3. வெப்ப நீரோட்டங்கள் உயர் அட்ச்சரேகை பகுதிகளில் உருவாகி பூமத்தியரேகையை நோக்கி ஓடுகின்றன.
  4. குளிர் நீரோட்டங்கள் தாழ் அட்ச்சரேகையிலிருந்து உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன.
A
1 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 89
வட்டவடிவில் உருவாகிற மேற்பரப்பு நீரோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
சுழல்
B
நீரோட்டம்
C
கொரியோலிஸ்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 90
கீழ்கண்ட வாக்கியங்களில் மேற்கு எல்லை நீரோட்டம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. நிலநடுகோட்டிலிருந்து உயர் அட்சங்களை நோக்கி பாய்கிற நீரோட்டங்கள் மேற்கு எல்லை நீரோட்டங்களாகும்.
  2. மேற்கு எல்லை நீரோட்டங்கள் மிக ஆழத்தில் செல்லக்கூடிய நீரோட்டங்களாகும்
  3. நாளொன்றுக்கு 40-120 கி.மீ. வரை பாய்கின்றன.
A
1,2, மற்றும் 3
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 3
D
3 மட்டும்
Question 91
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. புவிப்பரப்பின் மீது வீசும் கோள்க்காற்றுகள் பெருங்கடல் பரப்புகளின் மீது நிலையான நீரோட்டங்களை உருவாக்கின்றன.
  2. கொரியோலிஸ் ( CORIOLIS) விசையினால் மேற்ப்பரப்பு நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடல் நீர் காற்று வீசும் திசைக்கு வலதுபுறம் திருப்பப்படுகிறது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 92
உயர் அட்சத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி பாய்கின்ற நீரோட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மேற்கு எல்லை நீரோட்டம்
B
கிழக்கு எல்லை நீரோட்டம்
C
கிழக்கு-மேற்கு நீரோட்டம்
D
ஓதங்கள்
Question 93
துருவ தாழ் அழுத்த மையத்தினால் உருவாகிற காற்று சுழற்சியினால் ஏற்படுகிற நீரோட்டங்கள் எது?
A
மேற்கு எல்லை நீரோட்டம்
B
கிழக்கு எல்லை நீரோட்டம்
C
கிழக்கு-மேற்கு நீரோட்டம்
D
ஓதங்கள்
Question 94
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் 5௦° வடக்கில் சிறிய சுழல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சுழற்சி தென் அரைக்கோளத்தில் நிகழ்வதில்லை.
  • காரணம் (R) இந்நீரோட்டங்களை தடுத்து அவற்றின் திசையை திருப்பும் அளவிற்கு நிலப்பரப்புகள் பெரிதாக இல்லை.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 95
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. ஆழ்கடல் நீரோட்டங்கள் கடல் நீரின் அடர்த்தி வேறுபாடுகளினால் இயக்கப்படுகின்றன.
  2. பெருங்கடல்களில் வெப்பநிலையும் உப்பளவும் மாறுபடுவதால் அந்நீரின் அடர்த்தி வேறுபடுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 96
கீழ்கண்ட வாக்கியங்களில் ஆழ்கடல் நீரோட்டங்கள் தொடர்பானவற்றுள் சரியானவை எவை?
  1. உயர் அட்சக் கோடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் அங்கு கடல்நீரின் அடர்த்தி குறைவாக இருக்கும் இதனால் கடல்நீர் மிகவும் குளிர்ந்து ஆழ்கடல் அகழிகளை நோக்கி கீழிறங்குகிறது.
  2. பெருங்கடல்களிலுள்ள நீரில் 9௦% நீரை ஆக்கிரமித்துள்ள ஆழ்கடல் நீரோட்டங்கள் கொரியோலிஸ் (CORIOLIS) விசையினால் பாதிப்படைவதில்லை.
  3. ஆழ்கடல் நீரோட்டங்கள் மிக வேகமாக ஓடுகின்றன
  4. பெருங்கடல் தரையில் காணப்படும் நிலத் தோற்றங்களான தொடர்களும் பள்ளங்களும் ஆழ்கடல் நீரோட்டத்தை வேகப்படுத்துகின்றன
A
1 மற்றும் 2
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
1,2,3மற்றும் 4
Question 97
பேராழிகளில் உருவாகும் நீரோட்டங்களை பாதிக்கும் காரணிகள் அல்லாதது எது?
  1. பேராழி நீரின் அடர்த்தி
  2. காற்று மற்றும் வளிமண்டல அழுத்தம்
  3. கொரியாலிசிஸ் விசை
  4. புவியிர்ப்பு விசை
A
1 ,2 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1,2,3 மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 98
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் ஒவ்வெரு நாளும் கடல்நீரின் மட்டம் உயர்ந்து தாழ்வதை ஓதம் என அழைக்கிறோம்
  2. கடல் மட்டம் உயர்வதை உயர் ஓதம் (high tide) என்றும் தாழ்வதை தாழ் ஓதம் (Low Tide) என்றும் அளக்கப்படுகிறது.
  3. மிதவை ஓதமானது (Spring Tide) அமாவாசை நாட்களில் மட்டும் ஏற்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
மற்றும் 3 சரி
D
3 தவறு
Question 99
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நாட்களில் சந்திரன் மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசையால் ஓதங்கள் ஈர்க்கப்படுகின்றன. இக்காலங்களில் உயர் ஓதம் மிக உயர்ந்தும் மற்றும் தாழ் ஓதம் மிக தாழ்ந்தும் காணப்படும்.
  2. சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகியன செங்கோணத்தில் இருப்பதன் விளைவாக நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து ஒன்றுகொன்று செங்கோணத்தில் அமைகின்றன, இந்நேரங்களில் உயர் ஓதம் மிகத் தாழ்ந்தும் மற்றும் தாழ் ஓதம் மிக உயர்ந்தும் காணப்படும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 100
கடற்க்கரையோரப் பகுதிகளில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்க்கை வாயு வளங்கள் உலக பெட்ரோலிய உற்பத்தியில் எத்தனை சதவீதத்தை அளிக்கின்றன.
A
15
B
16
C
17
D
18
Question 101
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) கடல் சூரிய வெப்பத்தினை உட்கவருவதால் பேராழிகள் வெப்பப்படுதப்பட்டு நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.
  • காரணம் (R) இதை வெப்ப ஆற்றலாக மாற்ற இயலாது
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 102
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று (A) கடல் நீரில் மெக்னீசியம், புரோமின் மற்றும் சோடியம் குளோரைடு (அல்லது) சாதாரண உப்பு ஆகிய தாது உப்புகளும் உள்ளன.
  • காரணம் (R) பேராழிகள் மாற்று சக்தி வள ஆதாரமாக பயன்படுத்துவதற்காண வாய்ப்பினையும் கொண்டிருக்கின்றன
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 103
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. தனித்துக் காணப்படும் பவள உயிரினங்கள் பாலிப்புகள் எனப்படும். இந்த பாலிப்புகளின் கூட்டமே பவளம் எனப்படுகிறது
  2. பாலிப்புகள் அதிக இரும்பு சத்து உள்ளவை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 104
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. தாவரங்கள் மற்றும் விலங்கினத்தின் ஒருங்கிணைந்த செயலால் பவளங்கள் உருவாகின்றன.
  2. பவளங்களை உருவாக்கும் பாலிப்பு எனப்படும் பவளப் பாலிப்புகள் ஒரு முதுகெலும்பில்லா உயிரினம் ஆகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 105
பின்வருவனவற்றுள் தவறான இணை எது / எவை?
  1. கண்ட திட்டுகளில் விளிம்புகளில் வளரும் பவளத் தொடர்கள்-நாடாத்தொடர்.
  2.  கண்ட சரிவுகளில் வளரும் பவளத்தொடர்கள்- மேடைத்தொடர்கள்
  3. கண்ட தீவுகள் அல்லது முதன்மை கண்ட பகுதிகளில் வளரும் பவளத்தொடர்கள்- விளிம்புத்தொடர்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 106
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டல பெருங்கடலின் நீர்ப்பரப்பில் பவளத்தொடர்கள் செரிந்து அதிகமாக காணப்படும்
  2. 21° முதல் 3௦° செ வரை வெப்பநிலை உள்ள நன்னீரில் மட்டும் பவளியினங்கள் வளரும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 107
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. 3௦° வட மற்றும் 3௦° தென் அட்சக்கோடுகளுக்கிடையே பவளங்கள் காணப்படுகின்றன.
  2. வளிமண்டலத்தில் காணப்படுகிற கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அளவை நிர்னயிப்பதில் பவள தொடர்கள் பங்கு வகிக்கின்றன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 108
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சூசான்தோலி (ZOOZANTHALE) என்னும் கடற்பாசி பவளங்களுக்கு தேவையான 98% சக்தியினை வழங்குகின்றன.
  2. பவளங்களிலிருந்து சூதான்தொலி பாசி வெளியேற்றப்படும் போது அப்பவளம் வெளிறி போகிறது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 109
பெரிய பவள அரண் தொடர்கள் எங்கு உள்ளது
A
ஆஸ்திரேலியா
B
ராமேஸ்வரம்
C
அந்தமான்
D
இவை அனைத்தும்
Question 110
இந்தியாவில் பவளப்பாறைகள் எங்கு உள்ளன
A
ராமேஸ்வரம்
B
மன்னார் வளைகுடா
C
அந்தமான் நிக்கோபர் தீவு
D
இவை அனைத்தும்
Question 111
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சூசான்தோலி என்ற கடற்பாசி காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை ஒளிச்சேர்கையின் மூலமாக அகற்றி விடுகிறது.
  2. 5௦௦௦ முதல் 1௦௦௦௦ வரை வயது கொண்ட பவளப்பாறைகள் நன்கு வளர்ச்சி பெற்றவை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 112
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. வெப்ப மண்டலத்திலிருந்து துருவ மண்டலம் வரை உலகிலுள்ள பெருங்கடல்களில் பவளங்கள் காணப்படுகின்றன.
  2. மேற்கு அட்லாண்டிக் மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் வெப்ப துணை வெப்பப் பகுதிகளில் பவளங்கள் சிதறி காணப்படுகின்றன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 113
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. ஜெல்லி மீன், கடற்பஜ்சு போன்றவைகளுக்கு இருப்பிடங்கள் பவளப்பாறைகள் ஆகும்.
  2. பவளங்கள் வெண்மையாக இருக்கும் பவளக் கூட்டினுள் வாழும் கடற்பாசியின் நிறம் பவளக்கூடுகளுடன் படிந்து பவளங்களுக்கு நிறத்தை தருகின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 114
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. ஆழம் குறைந்த கடலடித் தளத்திலிருந்து நீர்மட்டத்திற்கு மேல் வெளியே காணப்படும் பவளப்பாறைகள் பவளத்தொடர்கள் (CORAL REEFS) எனப்படுகின்றன.
  2. ஆயிரகணக்கான பவளங்கள் கூட்டுகள் சேர்ந்து குழுமி இருப்பதை பவளக்காலனிகள் என்கிறோம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 115
பேராழியில் நீரோட்டங்கள் உருவாக காரணமாய் அமைவது எது?
A
உயிரினங்களின் பண்புகள்
B
பவள தொடர்கள்
C
வெப்பநிலை மாறுபாடு
D
உவர்ப்பியம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 115 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!