Online Test

TN History Culture Part 1 Revision Test in Tamil

TN History Culture Part 1 Revision Test in Tamil

Congratulations - you have completed TN History Culture Part 1 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று 1: பண்படு என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும்.
  • கூற்று 2: பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் வ.உ.சிதம்பரனார்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 1 Explanation: 
(குறிப்பு: பண்படு என்பதற்குச் சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல் என்பது பொருள். பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் டி.கே.சிதம்பரநாதனார்.)
Question 2
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
  1. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே - தொல்காப்பியம்
  2. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
  3. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் – திருக்குறள்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 2 Explanation: 
(குறிப்பு: நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்ற வரி கூறுகிறது. இவ்வுலகம் பண்புடையவர்களால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை 'பண்பு உடையார்ப் பட்டுஉண்டு உலகம்’ என்ற வரி உணர்த்துகிறது.)
Question 3
தமிழர் தோற்றம் பற்றிய நான்கு கருதுகோள்களில் எது தவறானது?
A
தமிழர் குமரிக் கண்டத்தில் வாழ்ந்து வந்தார்கள்
B
தென் இந்தியாவின் பழங்குடிகள்
C
ஆதியில் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபிய கடல் வழியாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்கள்.
D
மத்திய ஐரோப்பாவிலிருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர்.
Question 3 Explanation: 
(குறிப்பு: மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென்இந்தியா வந்தனர்.)
Question 4
  • கூற்று 1: பண்பாடு என்பது மாந்தனது அகவுணர்வு வளர்ச்சியையும் சீர்மையையும் குறிப்பது.
  • கூற்று 2: நாகரிகம் என்பது மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 5
பாண்டியர்களின் தலைநகரமாகிய மதுரையின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும், திருமால், முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட முறைகளையும் பாடும் நூல்
A
மதுரைக் காஞ்சி
B
பட்டினப்பாலை
C
பரிபாடல்
D
நற்றிணை
Question 5 Explanation: 
(குறிப்பு: தமிழகப் பண்பாட்டின் தொன்மையை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைபுரிபவை இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களுமாகும்.)
Question 6
சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச் சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் முதலானவற்றைப் பற்றி ______ விரிவாக விளக்குகிறது.
A
மதுரைக் காஞ்சி
B
பட்டினப்பாலை
C
பரிபாடல்
D
பதிற்றுப்பத்து
Question 6 Explanation: 
(குறிப்பு: சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அக்கால மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டுகின்றன. இவை அகவாழ்க்கையை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அன்பின் ஐந்திணையாக பகுத்துள்ளன)
Question 7
தவறான தொடரை தேர்ந்தெடு.
A
எட்டுத்தொகையில் நான்கு நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.
B
குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் நிலவளம், காதலின் சிறப்பு ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன.
C
நெடுநெல்வாடை காதலையும், வீரத்தையும் ஒரு சேரப் பேசுகிறது.
D
மதுரைக் காஞ்சி பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறுகிறது.
Question 7 Explanation: 
( குறிப்பு: பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாகும்.)
Question 8
  • ஆற்றுப்படை நூல்களுக்கு இலக்கணமான,
  • 'ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
  • பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
  • சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்’
  • என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நற்றிணை
B
பதிற்றுப்பத்து
C
தொல்காப்பியம்
D
நன்னூல்
Question 8 Explanation: 
(குறிப்பு: தொல்காப்பியம் புறத்திணையியலில் இப்பாடல் அமைந்துள்ளது. இதன் மூலம் தம்மை போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளை கூறுகின்ற பெருமனம் படைத்தவர்களாக புலவர்கள் திகழ்ந்தனர் என ஆற்றுப்படை நூல்கள் புலப்படுத்துகின்றன.)
Question 9
கீழ்க்கண்டவற்றுள் மணிமேகலையின் மையக் கருத்து எது?
A
கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும்
B
வரிகளை குறைப்பதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும்
C
பசிப்பிணியை போக்குவதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும்
D
பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும்.
Question 9 Explanation: 
(குறிப்பு: பசியைப் பிணியாக உருவகம் செய்து, அதைப் போக்க வேண்டிய அவசியத்தையும் கூறுகின்ற புரட்சிக் காப்பியம் மணிமேகலை ஆகும்.)
Question 10
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
மரக்காணம் – சோபட்மா
B
புதுச்சேரி – பொதுகே
C
மசூலிப்பட்டினம் – மசோலியா
D
கொச்சி – கொல்சாய்
Question 10 Explanation: 
(குறிப்பு: சேரநாட்டு துறைமுகப் பட்டினங்களான தொன்டியை திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும், பொற்காட்டைப் பகரி என்றும் குமரியை கொமாரி என்றும் ரோமர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கொற்கையை கொல்சாய் என்றும் நாகப்பட்டினத்தை நிகாமா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.)
Question 11
மிளகை ‘இந்திய மருந்து' என்று குறிப்பிட்டவர் யார்?
A
அகஸ்டஸ்
B
பிளினி
C
ஹிப்பாகிரேட்டஸ்
D
ஸ்டிராபோ
Question 11 Explanation: 
(குறிப்பு: ஹிப்பாகிரேட்டஸ் என்ற கிரேக்க மருத்துவர் பொ.ஆ.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பண்டைய தமிழகத்திலிருந்து மஸ்லின் துணியும், ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பொருள்களும் ஏற்றுமதியாயின.)
Question 12
மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, திருச்சி, பல்லாவரம், மாமல்லபுரம், தளவானூர் போன்ற இடங்களில் யாருடைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன?
A
சோழர்கள்
B
சேரர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லர்கள்
Question 12 Explanation: 
(குறிப்பு: காஞ்சிக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில், பல்லவர் கால வரலாற்றை அறிய முடிகிறது.)
Question 13
தஞ்சை, திருவொற்றியூர், மேலப்பழுவூர், சிதம்பரம், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் காணப்படும் கோயில்களில் யாருடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன?
A
சோழர்கள்
B
சேரர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லர்கள்
Question 13 Explanation: 
(குறிப்பு: பராந்தகச் சோழனின் உத்திரமேரூர்க் கல்வெட்டு, சோழர் கால கிராம ஆட்சி முறையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களின் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.)
Question 14
பொன், செம்பு ஆகிய உலோகத் தகடுகளின் மீது எழுத்துகள் பொறிக்கப்பட்ட பட்டயங்கள் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் காணப்படுகின்றன?
  1. பிராகிருதமொழி
  2. வடமொழி
  3. தமிழ்
  4. பாலி மொழி
A
1, 2, 4
B
2, 3, 4
C
1, 2, 3
D
1 , 3, 4
Question 14 Explanation: 
(குறிப்பு: வேள்விக்குடிப் பட்டயம், தளவாய்புரச்செப்பேடு, சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடுகள் முதலிய பாண்டியர் காலப் பட்டயங்களும், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், கரந்தைச் செப்பேடுகள், அன்பில் பட்டயங்கள், லெய்டன் பட்டயங்கள் போன்ற சோழர் காலப் பட்டயங்கள் குறிப்பிடத்தக்கவை.)
Question 15
தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
சங்க காலத்தில் செப்பு நாணயங்கள் வழக்கில் இருந்தன.
B
நாணயத்தின் ஒரு புறத்தில் யானையும், மறுபுறத்தில் இரட்டை மீன்களும் காணப்பட்டன.
C
நாணயத்தின் ஒரு புறத்தில் யானையும், மறுபுறத்தில் இரட்டை மீன்களும் காணப்பட்டன.
D
யவனர்கள் தமிழகத்தில் மதுரை, புகார் ஆகிய இடங்களிலிருந்து, தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
Question 15 Explanation: 
(குறிப்பு: செப்பு நாணயங்கள் சதுர வடிவில் அமைந்திருந்தன. பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இரட்டை மீன், கப்பல், நந்தி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன.)
Question 16
யாருடைய காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில், புலியும் அதனருகில் இரட்டை மீன் கொண்ட வடிவங்களும் காணப்படுகின்றன?
A
முதலாம் இராஜேந்திரன்
B
முதலாம் இராஜராஜன்
C
முதலாம் வரகுணன்
D
இரண்டாம் வரகுணன்
Question 16 Explanation: 
(குறிப்பு: இதன் மூலம் முதலாம் இராஜராஜன் பாண்டியர்களை அடக்கி வலிமை பெற்றவனாக வாழ்ந்தான் என வெளிப்படுகிறது. இரண்டாம் வரகுணனின் தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகிறது.)
Question 17
யாருடைய கல்வெட்டில் அழியக்கூடிய பொருள்களான மரம், செங்கல், மண், சுண்ணாம்பு கொண்டு பல கோயில்கள்,சங்க காலத்திலும் அதனைத் தொடர்ந்து களப்பிரர் காலத்திலும் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ?
A
முதலாம் இராஜேந்திரன்
B
முதலாம் இராஜராஜன்
C
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
D
மகேந்திரவர்மன்
Question 17 Explanation: 
(குறிப்பு: பல்லவரது காலம் முதற்கொண்டு கோயில்கள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் அவை இன்றும் நிலைத்து நின்று, தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.)
Question 18
மூன்று தமிழ்ச் சங்கங்களை வளர்த்தவர்களில் தவறான இணையைத் தேர்ந்தேடு.
  1. முதற்சங்கம் – காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை
  2. இடைச்சங்கம் – வேண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை
  3. கடைச்சங்கம் - முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 3 சரி
D
2, 3 சரி
Question 18 Explanation: 
(குறிப்பு: முதற் சங்கம் – தென்மதுரை இடைச்சங்கம் – கபாடபுரம் கடைச்சங்கம் - இன்றைய மதுரை)
Question 19
தவறான இணையைத் தேர்ந்தெடு
  1. பெருந்திணை - பொருந்தாக் காதல்
  2. கைக்கிளை - ஒரு தலைக்காதல்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 19 Explanation: 
(குறிப்பு: அகத்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைப்படும். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து புற ஒழுக்கத்தை ஏழு திணைகளாக கூறுவர். அகத்திணை புறத்தினை சார்ந்த செய்திகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது.)
Question 20
கூதிர், முன்பனி ஆகியவற்றை பெரும்பொழுதுகளாக கொண்ட திணையின் உரிப்பொருள்
A
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
B
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
C
ஊடலும் ஊடல் நிமித்தமும்
D
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
Question 20 Explanation: 
(குறிப்பு: குறிஞ்சித்.திணை நிலம் - மலையும் மலை சார்ந்த இடமும் சிறுபொழுது – யாமம்)
Question 21
புறத்திணைகளை தொல்காப்பியம் _______ எனவும்,புறப்பொருள் வெண்பாமாலை _______ என பகுத்துள்ளது.
A
5, 7
B
7, 10
C
10, 12
D
7, 12
Question 21 Explanation: 
(குறிப்பு: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை ஆகிய எட்டுப் புறத்திணைகள் போருக்கான காரணங்களையும் போர் நடைபெறும் முறைகளையும் கூறுகின்றன. மன்னனின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைச் சிறப்பித்து பாடுவது பாடாண் திணை, மேற்கண்ட ஒன்பது திணைகளில் கூறாதனவற்றை பொதுவியல் திணையில் அடக்கி கூறுவர்)
Question 22
‘விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்ற தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றுள்ள 'விருந்து’ என்னும் சொல் _______ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
A
விருந்தினர்
B
உபசரிப்பு
C
புதியது
D
சுற்றத்தார்
Question 22 Explanation: 
(குறிப்பு: இதன் அடிப்படையில் தோன்றிய ‘விருந்தினர்’ என்ற சொல்லும் அறிந்தவர், தெரிந்தவராகிய சுற்றத்தார் அல்லது முன்பின் அறியாதவர்கள், வீடு தேடி வருவோரையும் குறிப்பதாகும். இவர்களை வரவேற்று உணவளித்து உபசரிக்கும் பண்பே விந்தோம்பலாகும்.)(குறிப்பு: இதன் அடிப்படையில் தோன்றிய ‘விருந்தினர்’ என்ற சொல்லும் அறிந்தவர், தெரிந்தவராகிய சுற்றத்தார் அல்லது முன்பின் அறியாதவர்கள், வீடு தேடி வருவோரையும் குறிப்பதாகும். இவர்களை வரவேற்று உணவளித்து உபசரிக்கும் பண்பே விந்தோம்பலாகும்.)
Question 23
‘தொல்லோர் சிறப்பின்’ என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியவர் யார்?
A
தொல்காப்பியர்
B
திருவள்ளுவர்
C
இளங்கோவடிகள்
D
பரஞ்சோதி முனிவர்
Question 23 Explanation: 
(குறிப்பு: தமிழரின் தொன்மையான பழக்கம் விருந்தோம்பல் என்பதை இக்கூற்று விளக்குகிறது)
Question 24
  • " - - - - - - - - - - - - - - - - - - - - கோவலர்
  • மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளிச்
  • செவிஅடைதீரத் தேக்கிலைப் பகுக்கும்
  • புல்லி நல்நாட்டு”
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 24 Explanation: 
(குறிப்பு: சங்க காலத் தமிழர்கள் பசியென்று வருபவர்களை வரவேற்க, வீட்டு வாயிலில் காத்திருப்பர். இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என்று பார்ப்பர், அவ்வாறு இருப்பின் வரவேற்று உணவளிப்பர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.)
Question 25
  • கூற்று 1: பழந்தமிழர் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை 'மடைநூல் ‘ குறிப்பிடுகிறது.
  • கூற்று 2: உணவு பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, பெருங்கதை, மணிமேகலை போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 25 Explanation: 
(குறிப்பு: ஒரு நாள் சென்றாலும், இரு நாள் சென்றாலும் பலநாள் பலரோடு சென்றாலும் முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர் என்பதை ஒளவையார் பாடல் மூலம் அறியலாம்.)
Question 26
தவறான இணையைத் தேர்ந்தெடு (குறுநில மன்னர்கள் - ஆட்சி செய்த பகுதி)
A
திருமுடிக்காரி – மலையமா நாடு
B
திருமுடிக்காரி – மலையமா நாடு
C
நள்ளி – கொல்லிமலை
D
அதியமான் – தகடூர்
Question 26 Explanation: 
(குறிப்பு: பேகன் - பழனி மலை, பாரி - பரம்பு மலை, நள்ளி - கண்டீரமலை, வல்வில் ஓரி - கொல்லிமலை)
Question 27
தவறான தொடரைத் தேர்ந்தெடு (குறுநில மன்னர்கள் - வள்ளல் தன்மை)
A
திருமுடிக்காரி - குதிரைகளை பரிசாக வழங்கியவர்
B
ஆய் அண்டிரன் – நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்தவர்
C
நள்ளி - யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர்
D
பாரி - முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரையே தந்தவர்
Question 27 Explanation: 
(குறிப்பு: பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவர், அதியமான் – அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு தந்தவர், நள்ளி - மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர், வல்வில் ஓரி – யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியவர்)
Question 28
  • “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
  • உருவு நிறுத்த காம வாயில்
  • நிறையே அருளே உணர்வொடு திருவென
  • முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
  • என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
குறுந்தொகை
D
கலித்தொகை
Question 28 Explanation: 
(குறிப்பு: மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல், நிலைபேறு உடையதாக அமையும் என இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
Question 29
  • "நின்ற சொல்லர் நீடு தொன்று இனியர்
  • என்றும் என்தோள் பிரிவு அறியலரே
  • தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
  • சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப்
  • புரைய மன்ற, புரையோர் கேண்மை”
  • என்ற நற்றிணை பாடல் உணர்த்துவது
A
விருந்தோம்பல்
B
வாய்மை நிறைந்த நட்பு
C
தமிழர்களின் வணிகம்
D
உயர்ந்த அன்பின் தூய்மையும் மேன்மையும்
Question 29 Explanation: 
(குறிப்பு: மருத நிலத்தில் வாழும் தலைவியின் காதலை குறிஞ்சி நிலத் தலைவன் பாதுகாத்து வைக்கும் நெறியை இப்பாடல் கூறுகிறது)
Question 30
  • " - - - - - - - - - யாக்கைக்கு
  • உயிர் இயைந்து அன்ன நட்பின்” என்று கூறும் நூல்
A
திருக்குறள்
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 30 Explanation: 
(குறிப்பு: உள்ளத்தால் ஒன்றியவர்களுக்கிடையில் தோன்றும் அன்பின் உறவே நட்பாகும். அத்தகைய நட்பின் இயல்பு குறித்து இப்பாடல் குறிப்பிடுகிறது.)
Question 31
  • "புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத்
  • துரனுடையாளர் கேண்மை யோடு
  • இயைந்த வைகல் உளவாகி யரோ” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 31 Explanation: 
(குறிப்பு: எலியைப் போல் சிறிய முயற்சி உடையவரோடு நட்புக் கொள்வதினும் புலியைப் போன்ற வலிமையும் முயற்சியும் உடையவருடன் நட்புக் கொள்வதே சாலச் சிறந்தது என இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றன.)
Question 32
  • "உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
  • பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே” என்ற பாடலடியில் வாய்மை நிறைந்த நட்பே சிறந்தது என்று கூறியவர்
A
பாண்டியன் நெடுஞ்செழியன்
B
மாங்குடி மருதனார்
C
ஒளவையார்
D
கணிமேதாவியார்
Question 32 Explanation: 
(குறிப்பு: இப்பாடலடிகள் மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளது.)
Question 33
  • "பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறன்அறிதல்
  • சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நற்றிணை
B
திருக்குறள்
C
கலித்தொகை
D
புறநானூறு
Question 33 Explanation: 
(குறிப்பு: இப்பாடலடி, பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி உதவுதல் பற்றி நல்லந்துவனார் கலித்தொகையில் பாடியது.)
Question 34
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் என்பதுவே என்று கூறும் நூல்
A
கலித்தொகை
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
நற்றிணை
Question 34 Explanation: 
(குறிப்பு: உண்மையான செல்வம் என்பது, பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறார் நல்வேட்டனார்)
Question 35
தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
பொய்யாச் செந்நா – புறநானூறு
B
பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின் – பதிற்றுப்பத்து
C
நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே – நற்றிணை
D
நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே – கலித்தொகை
Question 35 Explanation: 
(குறிப்பு: நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே – பதிற்றுப்பத்து நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் - புறநானூறு மேற்கண்ட பாடல் வரிகள் அனைத்தும் வாய்மையைச் சிறந்த அறமாக பேசுகின்றன.)
Question 36
விருந்தினருக்கு உணவளிக்க ஏதுமில்லா நிலையில் விதைத்தினையை உரலில் இட்டு,, இடித்து உணவளித்த செய்தி எந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
A
அகநானூறு
B
பதிற்றுப்பத்து
C
கலித்தொகை
D
புறநானூறு
Question 36 Explanation: 
(குறிப்பு: விருந்தினருக்கு உணவளிக்க, வரகினைக் கடனாகப் பெற்று வருவதையும், உணவிடுவதற்காக ஒருவன் தன் வீரவாளையும் ஈடுவைத்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)
Question 37
  • "அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
  • முல்லை சான்ற கற்பின்
  • மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 37 Explanation: 
(குறிப்பு: வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் கோணாது வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் உயரிய பண்பாகும் என்று இப்பாடல் உணர்த்துகிறது.)
Question 38
"விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை'’ என்ற புறநானூற்று அடிகளை இயற்றியவர்
A
பாண்டியன் நெடுஞ்செழியன்
B
மாங்குடி மருதனார்
C
ஒளவையார்
D
பெருங்குன்றூர்க்கிழார்
Question 39
  • "மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
  • பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே” என்ற புறநானூற்று பாடல் உணர்த்துவது
A
கல்வி
B
விருந்தோம்பல்
C
மக்கட்பேறு
D
நட்பின் சிறப்பு
Question 39 Explanation: 
(குறிப்பு: மக்கட் பேற்றையும் சமூக கடமையாகவே சங்க கால மகளிர் கருதினர். ஒளவையார், நச்செள்ளையார், நன்முல்லையார், ஆதிமந்தியார், நப்பசலையார், முடத்தாமக்கண்ணியார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார் முதலானோரின் பாடல்கள் மூலம் சங்க கால மகளிர் கல்வி நிலையில் மேம்பட்டு விளங்கியது தெரிகிறது.)
Question 40
  • " ஆவும் ஆனியிற் பார்ப்பன மாக்களும்
  • பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
  • தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
  • பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
  • எம்மம்புக் கடிவிடுதும் நும்மரண் சேர்மின் " என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 40 Explanation: 
(குறிப்பு: இப்பாடலின் மூலம் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், நோயுற்றவர்களும், மக்கட்பேறு இல்லாதவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு போர் தொடங்குவதற்கு முன்னர் அறிவுறுத்தினர் என்ற செய்தி புலப்படுகிறது.)
Question 41
ஆய் அண்டிரன் என்னும் குறுநில மன்னன், தன்னை நாடி வந்த புலவர்களுக்கு வாரி வழங்கிய யானைகளின் எண்ணிக்கை ‘வான்மீன் பல பூப்பினும் ஆனாது மன்னே’ என்று புகழ்ந்த புலவர்
A
நப்பசலையார்
B
ஒளவையார்
C
பெருங்குன்றூர் கிழார்
D
முடமோசியார்
Question 41 Explanation: 
(குறிப்பு: வீரத்தில் சிறந்து விளங்கிய மன்னர்கள், கொடை வள்ளல்களாகவும் திகழ்ந்தனர்.இவ்வள்ளல் தன்மையைப் பாடாண்தினைப் பாடாண்திணைப் பாடல்கள் விளக்குகின்றன.)
Question 42
  • " - - - - - - - மாசுஇல்
  • காம்புசொலித் தன்ன அறுவை உடீஇப்
  • பாம்பு வெகுண் டன்ன தேறல் நல்கிக்
  • - - - - - - - - - - - - - - - -
  • பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
  • - - - - - - - - - - - - - - - -
  • இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து
  • விளங்குபொற்கலத்தில் விரும்புவன பேணி
  • ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”
  • என்று மன்னர்களின் விருந்தோம்பலை கூறும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
மலைபடுகடாம்
C
சிறுபாணாற்றுப்படை
D
பெரும்பாணாற்றுப்படை
Question 42 Explanation: 
(குறிப்பு: அரசர்கள் தம்மை நாடி வந்த புலவர், பாணன், பாடினி, கூத்தர், விறலி போன்றோருக்குப் பொருள் கொடுப்பதோடு நின்றுவிடாமல், உடுக்க உடையும் உண்ண உணவும் கொடுத்து மகிழ்ந்தனர்.)
Question 43
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் அற நூல்களின் எண்ணிக்கை
A
6
B
1
C
8
D
11
Question 43 Explanation: 
(குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆறு நூல்கள் அகப்பொருள் சார்ந்தும், ஒரு நூல் மட்டும் புறப்பொருள் சார்ந்தும் அமைந்துள்ளன.)
Question 44
பொறாமை, பேராசை, சினம், இன்னாச்சொல் ஆகிய நான்கனையும் தீயதெனக் கருதி புறந்தள்ளி வாழ்வதே __________ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
A
இல்வாழ்க்கை
B
இன்பம்
C
ஒழுக்கம்
D
அறம்
Question 44 Explanation: 
(குறிப்பு: “அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்னும் குறள் இதனை விளக்குகிறது)
Question 45
  • ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா ______
  • நோற்பாரின் நோன்மை உடைத்து
A
அழுக்காறு
B
இன்னாச்சொல்
C
இல்வாழ்க்கைஇல்வாழ்க்கை
D
சாந்துணையும்
Question 45 Explanation: 
(குறிப்பு: இல்லறத்தில் வாழ்பவர்கள் அறநெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் அவ்வாழ்க்கை துறவறத்தினும் சிறந்தது என இக்குறள் விளக்குறது.)
Question 46
திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படும் நீதிநூல் ________.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
நாலடியார்
D
நற்றிணை
Question 46 Explanation: 
(குறிப்பு: 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்ற பழமொழி, நாலடியார் திருக்குறளோடு ஒத்த பெருமையுடைய நூல் என்பதை விளக்கும். இந்நூல் சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டுப் 'பதுமனார்’ என்பவரால் தொகுக்கப்பட்டது.)
Question 47
  • “களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
  • விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
  • கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரை
  • தலைநிலத்து வைக்கப் படும்”
  • என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
நற்றிணை
B
நாலடியார்
C
பதிற்றுப்பத்து
D
மணிமேகலை
Question 47 Explanation: 
(குறிப்பு: இப்பாடலின் பொருள் களர் நிலத்திலே விளைந்தாலும் உப்பை, நல்ல விளைநிலத்தில் பிறந்த நெல்லுக்கு இணையாகவே கருதுவர். பிறப்பைக் கொண்டு மட்டும் ஒருவரை உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ கருதிவிடக் கூடாது. எங்குப் பிறந்தவராயினும் கற்றறிந்தவரே சிறந்தவர்.)
Question 48
  • கூற்று 1: தொல்காப்பியத்தின் வழி நூலாக விளங்கும் இலக்கண நூல், பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட நன்னூல்.
  • கூற்று 2: நன்னூலில் எழுத்து, சொல் என இரு அதிகாரங்கள் உள்ளன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 48 Explanation: 
(குறிப்பு: இந்நூலின் பொதுப்பாயிரம், நூலைப்பற்றியும் நல்லாசிரியர், நல்லாசிரியர் ஆகாதவர், நல்ல மாணாக்கர் ஆகாதவர் இயல்புகள் பற்றியும் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர், நூலை மாணாக்கர்க்குக் கற்பித்தல், மாணாக்கர் கற்றுக் கொள்ளல் ஆகியன குறித்தும் விளக்கியுள்ளது.)
Question 49
  • ''ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  • எய்துவர் எய்தாப்பழி"
  • என்ற குறளுக்கு இலக்கணமாக திகழும் இரு காப்பியங்கள்
A
வளையாபதி, குண்டலகேசி
B
வளையாபதி, சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம், வளையாபதி
D
சிலப்பதிகாரம், மணிமேகலை
Question 49 Explanation: 
(குறிப்பு: தனிமனித ஒழுக்கக்கேடு சமுதாயத்தை சீர்குலைக்கும் என கோவலனின் பாத்திரம் உணர்த்துகிறது. மணிமேகலை ஒழுக்கத்தின் உயர்வினால் தன்னையும் வென்று, நாட்டையும் நல்வழிப்படுத்திச் சான்றோர் போற்றும் காப்பியத் தலைவி என்னும் உயர் நிலையை அடைகிறாள்.)
Question 50
'கணிகைமகள்’ எனச் சோழ மன்னனால் குறிக்கப்பெற்றவர் _______.
A
கண்ணகி
B
மாதவி
C
மணிமேகலை
D
கண்ணுக்கினியாள்
Question 50 Explanation: 
(குறிப்பு: மணிமேகலை காப்பியம் அரசன் நீதி வழங்கும் முறையைப் பற்றி பேசுகிறது.)
Question 51
‘கோவலன் செய்ந்நன்றி மறவாப் பண்பினன்’ என்பதை எக்கூற்று புலப்படுத்துகிறது ?
A
யானையிடமிருந்து முதியவரைக் காத்த கருணை மறவன்
B
கணவனுக்கும் மனைவிக்கும் பெரும் பொருள் கொடுத்து இல்லற வாழ்வில் இணைத்து வைத்த செல்லாச் செல்வன்
C
‘மணிமேகலா’ என்ற தெய்வத்தின் நினைவாகத் தன் மகளுக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினான்
D
தலைவனை இழந்து தடுமாறும் குடும்பத்தாரையும் அவர்தம் சுற்றத்தாரையும் ஆறுதல் கூறி அரவணைத்த இல்லோர் செம்மல்
Question 51 Explanation: 
(குறிப்பு: கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் சூட்டும் போது ‘ஒரு சமயம் என் மூதாதையர் ஒருவர் நடுக்கடலில் சென்றபோது மரக்கலம் உடைந்து அலை கடலில் தவிக்க, மணிப் பல்லவத்தீவில் வாழும் பெண் தெய்வம் கரை சேர்த்தது.ஆதலால், என் முன்னோரைக் காப்பாற்றிய ‘ மணிமேகலா’ என்ற தெய்வத்தின் நினைவாக மணிமேகலை என்னும் பெயரை சூட்டுக’ என கோவலன் கூறினான்.)
Question 52
“ ஆய கலைகள் அறுபத்து நான்கனையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” என்று தமிழகத்தில் அறுபத்து நான்கு கலைகள் இருந்தன என்பதை யாருடைய கூற்று தெரிவிக்கின்றது?
A
இளங்கோவடிகள்
B
சீத்தலை சாத்தனார்
C
கம்பர்
D
வில்லிப்புத்தூரார்
Question 52 Explanation: 
(குறிப்பு: கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. மக்களின் பழக்க வழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பெருளாதார நிலையை வெளிப்படுத்தும் விதமாக கலைகள் அமைகின்றன)
Question 53
கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என அழகுக் கலைகளை ஐந்தாக வகைப்படுத்திக் கூறியவர்
A
பெருஞ்சித்திரனார்
B
மயிலை சீனி. வேங்கடசாமி
C
கதிரேசனார்
D
டி.கே.சிதம்பரனார்
Question 53 Explanation: 
(குறிப்பு: கலைகள் பொதுக் கலைகள், அழகுக் கலைகள் என இரண்டு வகைப்படும். காட்சி இன்பம், கேள்வி இன்பம் தருவன அழகுக் கலைகள்.)
Question 54
  • கூற்று 1: சங்ககாலம் தொட்டே முறையாகக் கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான ‘மனை நூல்கள்' இருந்தன.
  • கூற்று 2: ‘நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம்’ என்று இளங்கோவடிகள் கூறுகின்றார்
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
Question 54 Explanation: 
(குறிப்பு: கோயில்களே காலத்தைக் கடந்து தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன)
Question 55
  • கூற்று 1: பழங்காலத்தில் கோயில்கள் மரத்தினால் கட்டப்பட்டன.
  • கூற்று 2: இதற்கு சான்றாக சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள சபாநாயகர் மண்டபம் உள்ளது.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 55 Explanation: 
(குறிப்பு: மரக்கட்டடங்கள் இயற்கையினால் அழிந்துவிடும் தன்மை உடையன. அதனால் இதன் மேற்பகுதி செம்பு, வெள்ளி, பொன் தகடுகளால் வேயப்பட்டன.)
Question 56
________ என்பவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னுமிடத்தில் முதல் குடைவரைக் கோயிலை அமைத்தார்.
A
முதலாம் இராஜராஜன்
B
நரசிம்மவர்மன்
C
முதலாம் இராஜேந்திரன்
D
மகேந்திரவர்ம பல்லவன்
Question 56 Explanation: 
(குறிப்பு: முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரைக்கோயில் பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில் ஆகும்.)
Question 57
கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு ________ என்று பெயர்.
A
குடைவரைக் கோயில்கள்
B
செங்கல் கட்டடங்கள்
C
பாறைக் கோயில்கள்
D
கற்றளிகள்
Question 57 Explanation: 
(குறிப்பு: கி.பி ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனமலை ஆகிய ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை.)
Question 58
இந்தியக் கோயில் கட்டிடக்கலை எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 58 Explanation: 
(குறிப்பு: நாகரம், வேசரம், திராவிடம் ஆகியவை மூன்று வகையான இந்திய கோயில் கட்டிடக்கலை ஆகும்.)
Question 59
தவறான இணையைத் தேர்ந்தெடு (ஷடங்க விமானத்தின் ஆறு உறுப்புகள் - உடலின் உறுப்புகள்)
A
அதிட்டானம் – பாதம்
B
பித்தி – கால்
C
பித்தி – கால்
D
பிஸ்தரம் – தலை
Question 59 Explanation: 
(குறிப்பு: பிஸ்தரம் - தோள், கண்டம் - கழுத்து, சிகரம் - தலை)
Question 60
________ ஆட்சிக் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கத் தொடங்கினர்.
A
இராஜசிம்மன்
B
இரண்டாம் நரசிம்மவர்மன்
C
கிருஷ்ணதேவராயர்
D
இராஜராஜன்
Question 60 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ண தேவராயர் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்ற இடங்களில் பெரிய கோபுரங்களை அமைத்தார். பிற்காலத்தில் இவை ‘இராஜகோபுரம்’ என்று அழைக்கப்பட்டன.)
Question 61
கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் _______ உடைய ஒற்றைக் கற்றளிக்கு சான்றாகும்.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 61 Explanation: 
(குறிப்பு: இது மலையின் மேலிருந்து கீழ்நோக்கிக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.இது ‘தென்னகத்து எல்லோரா’ என்று அழைக்கப்படுகிறது.)
Question 62
கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால குடைவரை கோயில் காணப்படும் இடங்களில் தவறானது எது?
A
திருமயம்
B
குன்றக்குடி
C
பிரான்மலை
D
சீயமங்கலம்
Question 62 Explanation: 
(குறிப்பு: பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, திருமயம், குடிமியான்மலை, சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை, அழகிய பாண்டியபுரம், மூவரை வென்றான் போன்ற ஊர்களில் பாண்டியர்கள் காலக் குடைவரைக் கோயில்கள் உள்ளன)
Question 63
கீழ்க்கண்ட எந்த கோயிலின் வெளிச்சுவர் சதுர வடிவிலும் உட்சுவர் வட்ட வடிவிலும் அமைந்துள்ளது?
A
பிள்ளையார்பட்டி கோயில்
B
தஞ்சைப் பெரிய கோயில்
C
நார்த்தாமலை
D
கங்கை கொண்ட சோழபுரம்
Question 63 Explanation: 
(குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலைக் கோயில் விஜயாலய சோழனால் கட்டப்பட்டது.)
Question 64
________ என்பவர் காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயில்களைக் கட்டினார்.
A
விஜயாலய சோழன்
B
சோழன்
C
முதலாம் இராஜேந்திரன்
D
ஆதித்த சோழன்
Question 64 Explanation: 
(குறிப்பு: சோழர் காலக் கட்டடக் கலையில் ‘செம்பியன்மாதேவியின்’ பங்கு குறிப்பிடத்தக்கது.)
Question 65
தவறான தொடரைத் தேர்ந்தெடு (கோயில்கள் - விமானத்தின் உயரம்)
  1. தஞ்சைப் பெரிய கோயில் – 216 அடி உயரம்
  2. கங்கைகொண்ட சோழபுரம் - 170 அடி உயரம்
  3. திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயில் - 126 அடி உயரம்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
2, 3 சரி
Question 65 Explanation: 
(குறிப்பு: தஞ்சைப் பெரிய கோயில் - முதலாம் இராஜராஜ சோழன் கங்கை கொண்ட சோழபுரம் - முதலாம் இராஜேந்திர சோழன் திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயில் - மூன்றாம் குலோத்துங்க சோழன்)
Question 66
தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலையைப் பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
A
திருச்சி
B
தஞ்சாவூர்
C
மாமல்லபுரம்
D
கன்னியாகுமரி
Question 66 Explanation: 
(குறிப்பு: சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச் சாறு, நெல்லிக்காய் சாறு முதலியவற்றை கலந்து அரைத்து வச்சிரம் போல் செய்து அதைக் கொண்டு உருவங்கள் செய்வது என அ.தட்சிணாமூர்த்தி குறிப்பிடுகிறார்.)
Question 67
  • கூற்று 1: ஒவ்வு என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியதே ஓவியம்.
  • கூற்று 2: ஒவ்வு என்பதற்கு ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போலவே இருத்தல் என்று பொருள்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 67 Explanation: 
(குறிப்பு: ஓவியத்தை வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி என்று இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பழங்காலத்தில் சுவர் ஓவியங்களே பெரிதும் காணப்பட்டன.)
Question 68
  • கூற்று 1: மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஒவியங்கள் படிமை எனப்படுகின்றன.
  • கூற்று 2: தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் பிரதிமை எனப்படுகின்றன
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 68 Explanation: 
(குறிப்பு : மக்கள் கூட்டத்தைக் காட்டும் ஒவியங்கள் பிரதிமை எனப்படுகின்றன. தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் படிமை எனப்படுகின்றன.)
Question 69
திருப்பரங்குன்ற கோயில் மண்டபத்தில் "எழு தொழில் அம்பலம்” என்ற பெயரில் ஒவியச் சாலை இருந்த செய்தியினை எந்த நூல் மூலம் அறியலாம்?
A
தட்சினச்சித்திரம்
B
நாலடியார்
C
புறநானூறு
D
பரிபாடல்
Question 69 Explanation: 
(குறிப்பு: உதயனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சியைப் பெருங்கதையில் காணலாம்.)
Question 70
ஆநிரைகளை மேய்க்கும் ஒருவன் குமிழமரக் கொம்புகளை வில்லாக வளைத்து அதில் மரல் நாரினை நரம்பாகக் கட்டி வில்யாழ் அமைத்து குறிஞ்சி பண்ணை வாசித்தான் என்று கூறும் நூல்
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
பெரும்பாணாற்றுப்படை
D
சிறும்பாணாற்றுப்படை
Question 70 Explanation: 
(குறிப்பு: இந்த வில்யாழை அடிப்படையாக கொண்டு பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவையும் பெருங்கலம் என்னும் ஆதியாழும் அமைக்கப்பெற்றன.)
Question 71
‘பஞ்சமரபு’ என்னும் நூலின் ஆசிரியர் ______.
A
பெருஞ்சித்திரனார்
B
பெருஞ்சித்திரனார்
C
அறிவனார்
D
அறிவழ்கனார்
Question 71 Explanation: 
(குறிப்பு: ப.சுந்தரேசனார் என்பவர் இந்நூலை உரையோடு வெளியிட்டுள்ளார்.)
Question 72
தேவாரங்களுக்கு பண் வகுக்கப்பட்ட காலத்தில் நிலவிய இசையும் சேக்கிழார் காலத்தில் நிலவிய இசையும் 'சாரங்கதேவர்' குறிக்கும் தேவாரப் பண்களின் இசையும் இடைக்காலத்தில் தோன்றிய இசைமரபு என்று கூறியவர்
A
மயிலை.சீனி.வேங்கடசாமி
B
பரிமேலழகர்
C
வெள்ளைவாரணர்
D
அருணாச்சலக் கவிராயர்
Question 72 Explanation: 
(குறிப்பு: கீர்த்தனைகள் என்ற இசைப் பாடல் வடிவம் பிற்காலத்தில் தோன்றின. கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோரால் எழுதப்பட்ட கீர்த்தனைகள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.)
Question 73
அடியார்க்கு நல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 73 Explanation: 
(குறிப்பு: சொக்கம், மெய்க்கூத்து, அபிநயம், நாடகம் என்பன நான்கு வகை கூத்து. சொக்கம் - இசையுடன் கூடிய நடனம் மெய்க்கூத்து - இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம், அபிநயம் - இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம், நாடகம் - இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம்)
Question 74
தவறான இணையைத் தேர்ந்தெடு.(ஆடல் வகை)
A
அல்லியம் – கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் ஆடல்
B
குடைக்கூத்து - கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்து கொண்டு ஆடிய ஆடல்
C
மல்லியம் – கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து.
D
பாவை - அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல்
Question 74 Explanation: 
(குறிப்பு: குடைக்கூத்து - முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல், கொடிகொட்டி - சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கை கொட்டி ஆடிய ஆடல், குடக் கூத்து - கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்து கொண்டு ஆடிய ஆடல், பாண்டரங்கம் - சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல், துடி -சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து, மரக்கால் - கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரை கொல்ல ஆடிய ஆடல், கடையம் - இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது)
Question 75
இந்தியாவில் ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய நந்தியின் சிற்பம் அமைந்துள்ள இடம்
A
கங்கைகொண்டசோழபுரம்
B
திருவதிகை
C
லெபாக்ஷி
D
தஞ்சைப்பெரிய கோவில்
Question 75 Explanation: 
(குறிப்பு: ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் லெபாஷி அமைந்துள்ளது.)
Question 76
முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்ப மரத்தைத் தாய்த் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை எந்த நூல் கூறுகிறது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
பரிபாடல்
D
நாலடியார்
Question 76 Explanation: 
(குறிப்பு: காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும் முல்லை நிலம் ஆகும். முல்லை நிலக்கடவுள் 'மாயோன்’ ஆவார்)
Question 77
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?
A
சிவராத்திரி – சைவசமயத் திருவிழா
B
திருவோணம் – சைவசமயத் திருவிழா
C
ஆருத்ராதரிசனம் – சைவசமயத் திருவிழா
D
காமன் பண்டிகை - சைவ சமயத் திருவிழா
Question 77 Explanation: 
(குறிப்பு: திருமாலின் பிறந்தநாளான ஆவணி மாதம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழா திருவோணம். இது ஒரு வைணவத் திருவிழா ஆகும்.)
Question 78
தவறான தொடரைத் தேர்ந்தெடு.
  1. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்.
  2. கல்வியில் கரையிலாத காஞ்சி என்று திருநாவுக்கரசர் புகழ்ந்துள்ளார்.
  3. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 78 Explanation: 
(குறிப்பு: தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் காஞ்சியாகும். தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.)
Question 79
கீழ்க்கண்டவற்றுள் பாண்டிய நாடு அல்லாதது எது?
A
தூத்துக்குடி
B
திருநெல்வேலி
C
சிவகங்கை
D
கன்னியாகுமரி
Question 79 Explanation: 
(குறிப்பு: மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் பாண்டிய நாடு ஆகும்)
Question 80
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
கீழடி - சிவகங்கை
B
ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி
C
பொருந்தல் – கரூர்
D
பையம்பள்ளி – வேலூர்
Question 80 Explanation: 
(குறிப்பு: பொருந்தல் - திண்டுக்கல், கொடுமணல்- ஈரோடு. மேற்கண்ட இடங்கள் யாவும் பெருங்கற்கால/இரும்புக்கால தொல்வியல் ஆய்வு நடைபெறும் இடங்கள்)
Question 81
நில வரியானது ‘காணிக்கடன்’ என யாருடைய காலத்தில் அழைக்கப்பட்டது
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 81 Explanation: 
(குறிப்பு: மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது. இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.)
Question 82
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு
A
தொன்மையான பாலி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் மற்றும் தென்னிந்திய பகுதிகளை திராமிளா மற்றும் திராவிட என்ற சொற்களால் குறிப்பிட்டன.
B
மாமூலனார் போன்ற சங்ககாலப் புலவர்கள் கி.மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தர்கள் மற்றும் மௌரியர்களின் சமகாலத்தவர்கள்.
C
கி.மு.500 முதல் கி.பி 1300 வரை தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
D
மலை சார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் வேளிர் எனப்பட்டனர்.
Question 82 Explanation: 
(குறிப்பு: கி.மு.500 முதல் கி.பி 1300 வரை தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சங்ககாலம், களப்பிரர் காலம், தமிழ்ப் பேரரசுகளின் காலம்.)
Question 83
தவறான  தொடரைத் தேர்ந்தெடு
A
பல்லவர் காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தைப் பிடித்தது.
B
சோழர் ஆட்சியின் இறுதியில் முருக வழிபாடு புகழ் பெற்றது.
C
கணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியலில் வல்லவராவார்.
D
பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தை கற்பிக்கும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டு வரி வசூலிக்கப்பட்டன.
Question 83 Explanation: 
(குறிப்பு: பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தை கற்பிக்கும் பிராமணர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டன.)
Question 84
புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி எந்நூல் குறிப்பிடுகிறது?
A
மதுரைக்காஞ்சி
B
பதிற்றுப்பத்து
C
பட்டினப்பாலை
D
பரிபாடல்
Question 84 Explanation: 
(குறிப்பு: சங்ககால ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள் என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.)
Question 85
தவறான தொடரைத் தேர்ந்தெடு
A
நான்கு வகை சாதிகளான அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் குறித்து தொல்காப்பியம் கூறுகிறது.
B
சங்க கால சமுதாயத்தின் மேல்மட்டத்தில் சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கம் காணப்படவில்லை
C
பலா, மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும்.
D
உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது.
Question 85 Explanation: 
(குறிப்பு: சங்க கால சமுதாயத்தின் மேல்மட்டத்தில் சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கம் பின்பற்றப்பட்டது)
Question 86
________க்கு எதிராக மேற்கொண்ட கடற்படையெடுப்பே முதலாம் ராஜராஜனின் இறுதி படையெடுப்பாகும்.
A
இலங்கை
B
ஸ்ரீவிஜயம்
C
மாலத்தீவுகள்
D
கடாரம்
Question 86 Explanation: 
(குறிப்பு: இந்தப் போரில் மாலத்தீவு கைப்பற்றப்பட்டது. இராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் கட்டுவதற்கும் உதவி வழங்கினார்.)
Question 87
சோழர் ஆட்சியில் கிராமசபை உறுப்பினராவதற்கான தகுதிகளில் தவறானது எது?
A
குறைந்த பட்சம் கால்வேலி நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும்.
B
முப்பது வயதுக்கு மேலும் எழுபது வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்
C
வேதங்கள் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டும்
D
கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கிராமசபையில் உறுப்பினராக பணியாற்றி இருக்க வேண்டும்
Question 88
நாயன்மார்கள் இயற்றிய தேவாரமும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தமும் _______ கால பக்தி இலக்கியங்கள்.
A
சேரர்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 88 Explanation: 
(குறிப்பு: காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும்.கடம்ப குலத்தின் நிறுவனரான மயூரசர்மன் காஞ்சிக்கு வந்து வேதங்களைக் கற்றான்.)
Question 89
சங்க காலத்திய கட்டி வடிவிலான தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் _______ என்று அழைக்கப்பட்டன.
A
அணி புடைப்பு மணிகள
B
கேமியோ
C
புல்லியன்
D
பெரேனிகே
Question 89 Explanation: 
(குறிப்பு: தொடக்க காலத்தில் இந்தியாவில் முத்திரை பொறித்த நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்பட்ட அவற்றில் எண்ணற்ற குறியீடுகள் முத்திரைகளாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.)
Question 90
தவறான இணையை தேர்ந்தெடு (கூரிய அறிவும் முதுமையும் உடைய பெண்களுக்கான அடைமொழிகள் )
A
செம்முது பெண்டிர் - நற்றிணை
B
முதுவாய் பெண்டிர் – அகநானூறு
C
பேரில் பெண்டு – புறநானூறு
D
தொன்முது பெண்டிர் – அகநானூறு
Question 90 Explanation: 
(குறிப்பு: செம்முது பெண்டு – புறநானூறு செம்முது செவிலியர் – அகநானூறு, செம்முகச் செவிலியர் - நெடுநல்வாடை, முதுசெம்பெண்டிர் -அகநானூறு, பெருமுது பெண்டிர் - முல்லைப்பாட்டு, தொன்முது பெண்டிர் - மதுரைக் காஞ்சி)
Question 91
பரிசில் வாழ்வை விடவும் தன்மானம் பெரிது என்று அதியனிடம் ஒளவை முழங்குவதை ______ காட்டுகிறது.
A
புறநானூறு
B
பரிபாடல்
C
மதுரைக்காஞ்சி
D
பட்டினப்பாலை
Question 92
  • "நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
  • சிறுவர் தாயே பேரிற் பெண்டே” என்ற புறநானூற்றுப் பாடல் உணர்த்துவது
A
தந்தை வழி சமூகத்தின் சிறப்பு
B
தாய் வழி சமூகத்தின் சிறப்பு
C
ஆண்களின் வீரம்
D
பெண்களின் கொடைத் தன்மை
Question 92 Explanation: 
(குறிப்பு: தாய் வழி நிற்றல் என்பதே தொல்குடிச் சமூக அமைப்பின் நியதியாக இருந்ததை புறநானூறு குறிப்பிடுகிறது)
Question 93
நடுகல் வழிபாட்டில் எத்தனை நிலைகளை பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன?
A
2
B
3
C
4
D
4
Question 93 Explanation: 
(குறிப்பு: இரண்டு நிலைகள் -1. நடுகல் எடுத்தல், 2. நடுகல் வழிபாடு. நடுகல் எடுக்கும் முறைகளை பற்றியும் நடுகல் வழிபாடு பற்றியும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன பேசுகின்றன.)
Question 94
  • ‘இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும்
  • இனிதெனத் தமியர் உண்டலும் இலரே ‘ - இப்புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் கருத்து
A
அமிழ்தம் மிகவும் இனிது
B
அமிழ்தம் மிகவும் இனிது
C
அமிழ்தமாயினும் பகிர்ந்துண்ணும் பண்பு
D
அமிழ்தத்தைத் தனித்துண்ணும் பண்பு
Question 95
‘ மூங்கிலின் உரசலிலும் கற்களின் உராய்விலும் நெருப்பு மூட்டக் கற்றனர்' - இக் கூற்றால் தொல்குடியினரின் _______வெளிப்படுகிறது.
A
பகுத்தறியும் திறன்
B
அச்சவுணர்வு
C
பண்பாட்டுச் சிறப்பு
D
இயற்கை வழிபாடு
Question 95 Explanation: 
(குறிப்பு: தொல்குடி அறிவு என்பது, நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி கண்ணால் கண்ட பொருள்களையும் செயல்களையும் பகுத்தாராய்வதன் விளைவால் உருவானதாகும்.)
Question 96
புல்லால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்த எளிய மக்களின் விருந்தோம்பலை _______ வியந்து பேசுகிறது.
A
புறநானூறு
B
பெரும்பாணாற்றுப்படை
C
மலைபடுகடாம்
D
நாலடியார்
Question 96 Explanation: 
(குறிப்பு: விருந்தோம்பல் என்பதன் அடிப்படையே பசி போக்கல் என்பதாகத்தான் உள்ளது. அனைத்தையும் அனைவருக்குமானதாகப் பகிர்ந்தளிக்கும் பொது பண்பையே விருந்தோம்பலாக சங்கப்பாடல்கள் சிறப்பிக்கின்றன.)
Question 97
சிறுவனான கரிகால் வளவன், முதியவேடம் பூண்டு தீர்ப்பு வழங்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம்
A
சிறுவனாக இருந்தாலும் கரிகால் வளவன் நாட்டின் அரசன்
B
அரசணுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அக்கால வழக்கம்
C
கரிகால் வளவனைத் தவிர வேறு யாரும் தீர்ப்பு வழங்க முன்வரவில்லை.
D
முதியவர்கள் கூறும் தீர்ப்பு, எப்போதும் சரியானதாகவே இருக்கும்
Question 97 Explanation: 
(குறிப்பு: தொல்குடி சமூகத்தில் மூத்தோர், செல்வமாகக் கருதப்பட்டனர். அவர்களின் அறிவும் அனுபவமும் அச்சமூகத்திற்குப் பயன்பட்டன.)
Question 98
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து, இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு_________
A
பொருந்தல்
B
பையம்பள்ளி
C
கீழடி
D
கொடுமணல்
Question 98 Explanation: 
(குறிப்பு: தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது.)
Question 99
கங்காதேவி எழுதிய நூலின் பெயர் _______.
A
மதுரா விஜயம்
B
அர்த்தசாத்திரம்
C
சாகுந்தலம்
D
இண்டிகா
Question 99 Explanation: 
(குறிப்பு: கங்காதேவி தம் நூலில் தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும், தமிழ் மன்னர்களை ‘திரமிள ராஜாக்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.)
Question 100
பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சிறுபறை, பெரும் பறை, நாழிகைப்பறை என தோல் கருவிகள் முப்பது உள்ளதாக யாருடைய உரை கூறுகிறது?
A
கதிரேசனார்
B
அடியார்க்கு நல்லார்
C
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
D
மறைமலை அடிகளார்
Question 100 Explanation: 
(குறிப்பு: அதிகமாக பயன்படுத்தப்பட்ட தோல் கருவி மத்தளம் ஆகும்.தொல்காப்பியர் கூறும் தோல் இசைக்கருவிகளில் ஒன்று பறை. இது தோல் இசைக்கருவிகளின் தாயாக கருதப்படுகிறது.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

2 Comments

Leave a Reply to Arockia John Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!