Online Test

TN Administration Part 2 Revision Test in Tamil

TN Administration Part 2 Revision Test in Tamil

Congratulations - you have completed TN Administration Part 2 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையானது யாருக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது?
  1. பெண்கள்
  2. குழந்தைகள்,
  3. முதியோர்கள்
  4. மூன்றாம் பாலினர்
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3, 4 மட்டும்.
Question 1 Explanation: 
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையானது பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மூன்றாம் பாலினர் நலன்களுக்கான திட்டங்களை சமூக நல ஆணையரகம், சமூக பாதுகாப்பு ஆணையரகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநரகம் மூலமாக செயல்படுத்தி வருகின்றது. மேலும், வருவாய் நிருவாக ஆணையரால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்ðதியத் திட்டங்களுக்கு இத்துறை ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது.
Question 2
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் வகுப்பு எந்த முதல் எந்த வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கலவை சாத உணவு வகைகள் வழங்கப்படுகின்றன?
A
1 இருந்து 8.
B
1 இருந்து 12.
C
1 இருந்து 10.
D
5 இருந்து 10.
Question 2 Explanation: 
குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் திட்டங்களை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயல்படுத்துகின்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 51.96 இலட்சம் மாணவ, மாணவியருக்கு அனுதினமும் சூடான, சுவையான கலவை சாத உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
Question 3
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை நடைமுறைப்படுத்தும் சட்டங்கள் என்ன?
  1. ஒழுக்கநெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம்,1956.
  2. வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961.
  3. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்,2006.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 3 Explanation: 
ஒழுக்கநெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம்,1956. வரதட்சணை தடுப்புச் சட்டம்,1961 குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்,2005. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்,2006. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்,2007. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்,2012. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்,2013. தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்கு முறைப்படுத்தும்) சட்டம்,2014. இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்,2015.
Question 4
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் யாருக்கு வழங்கப்படும்
  1. ஒரு பெண் குழந்தை மட்டும்
  2. இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை.
Question 4 Explanation: 
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் திட்டம் -1: ஒரு பெண் குழந்தை மட்டும் திட்டம்-2: இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்.
Question 5
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் நோக்கம் என்ன?
  1. பெண் கல்வியை மேம்படுத்துதல்
  2. பெண் சிசுக் கொலையை ஒழித்தல்
  3. பெண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்துதல்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 5 Explanation: 
பெண் கல்வியை மேம்படுத்துதல் பெண் சிசுக் கொலையை ஒழித்தல் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்துதல் சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல் குழந்தை பாலின விகிதத்தை உயர்த்துதல்.
Question 6
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எவ்வாறு உதவி வழங்கப்படும்?
A
பணமாக
B
அங்சல் வைப்பீடாக.
C
வங்கியில் வைப்பீடாக
D
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடாக.
Question 6 Explanation: 
குழந்தையின் பெயரில் வைப்பீடாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. 18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை அப்பெண்குழந்தைக்கு வழங்கப்படும்.
Question 7
திட்டம்-1 ன் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படும் உதவி என்ன?
A
50000
B
40000
C
25000
D
20000
Question 7 Explanation: 
திட்டம்-1 - இத்திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக ‘50,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இத்தொகையானது, 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இந்த வைப்பீட்டுத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
Question 8
திட்டம்-2 ன் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வழங்கப்படும் உதவி என்ன?
A
50000.
B
40000
C
25000
D
20000
Question 8 Explanation: 
திட்டம்-2 - குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ஆரம்ப வைப்பீடாக தலா ‘25,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படுகிறது. இத்தொகையானது 01.08.2011 அன்றோ அதற்கு பிறகோ பிறக்கும் இரண்டாவது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இந்த வைப்பீட்டுத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
Question 9
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதிகள்/நிபந்தனைகள்?
  1. ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. ஓரு ஆண் குழந்தை இருக்கலாம்.
  3. 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 9 Explanation: 
ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள் பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது. விண்ணப்பிக்கும் போது பெற்றோர்/ அவர்களின் பெற்றோர்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும். இத்திட்டம் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் பெண் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Question 10
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு என்ன?
A
குழந்தை பிறந்த 1 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
B
குழந்தை பிறந்த 2 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
C
குழந்தை பிறந்த 2 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
D
குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Question 10 Explanation: 
திட்டம் 1 : (ஒரு பெண் குழந்தை மட்டும்) ஒரு பெண் குழந்தையாக இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். திட்டம் 2 : (இரண்டு பெண்குழந்தைகள் மட்டும்) இரண்டு பெண் குழந்தைகள் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Question 11
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இறுதி முதிர்வுத் தொகை எப்பொது வழங்கப்படும்?
A
8 வகுப்புத் பொதுத் தேர்வு எழுதியிருந்தால்.
B
10 வகுப்புத் பொதுத் தேர்வு எழுதியிருந்தால்.
C
11 வகுப்புத் பொதுத் தேர்வு எழுதியிருந்தால்.
D
12 வகுப்புத் பொதுத் தேர்வு எழுதியிருந்தால்.
Question 11 Explanation: 
பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். அவ்வாறு இல்லை எனில், வட்டியுடன் சேர்ந்த வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.
Question 12
குழந்தைத் திருமண தடைச் சட்டம் எந்தாண்டு இயற்றப்பட்டது?
A
2005.
B
2006
C
2007
D
2008
Question 13
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் நோக்கம் என்ன?
  1. 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு திருமணம் செய்வதை தடை செய்வதாகும்.
  2. 21 வயது நிறைவடையாத ஆணுக்கு திருமணம் செய்வதை தடை செய்வதாகும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை.
Question 13 Explanation: 
இச்சட்டம் 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வதை தடை செய்வதாகும். குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும், குழந்தைத் திருமணத்தை நடத்துவோருக்கு சட்ட ரீதியான தண்டனையும் வழங்குதல்.
Question 14
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ்
  1. ஏற்கெனவே நடைபெற்ற குழந்தைத் திருமணத்தை செல்லாததாக்கலாம்.
  2. பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பராமரிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்கிறது.
  3. குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 14 Explanation: 
ஏற்கெனவே நடைபெற்ற குழந்தைத் திருமணத்தை செல்லாததாக்கலாம். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் நிறை வயது எய்திய இரண்டாண்டிற்குள் நடைபெற்ற திருமணத்தினை செல்லாததாக்கும் தீர்வைக் காணவேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பராமரிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்கிறது. குழந்தைத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்குதல். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ வசதி, சட்ட உதவி, ஆலோசனை வழங்குதல் மற்றும் மறுவாழ்விற்கு உறுதுணை செய்கிறது.
Question 15
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்படும் தண்டனை என்ன?
A
2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் 50000 ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
B
3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
C
2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
D
3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் 50000 ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
Question 15 Explanation: 
குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோருக்கும், நடத்தி வைப்போருக்கும், ஆதரிப்போருக்கும் மற்றும் மறைப்பவருக்கும், நடைபெற்ற திருமணம் குழந்தைத் திருமணம் இல்லை என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத பட்சத்தில் 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
Question 16
குழந்தைத் திருமணத்தில் ஈடுபடும் செயலானது என்ன குற்றமாகும்?
A
பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத.
B
பிடியாணை பெற்று கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க கூடிய.
C
பிடியாணை பெற்று கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத.
D
பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க கூடிய.
Question 16 Explanation: 
குழந்தைத் திருமணத்தில் ஈடுபடும் செயலானது பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய (ஊடிபnணையடெந) மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத (சூடிn-யெடையடெந) குற்றமாகும். குழந்தைத் திருமணத்தை நடத்தும், ஊக்குவிக்கும் அல்லது அனுமதிக்கும் அல்லது தடுக்கத் தவறும் பெற்றோர் / பாதுகாவலர் மற்றும் அத்திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதமும் நீட்டித்து வழங்கப்படும்.
Question 17
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு
A
அபராதம் மட்டும் விதிக்கலாம்.
B
சிறைவாசம் மட்டும் விதிக்கலாம்
C
அபராதம் மற்றும் சிறைவாசம் விதிக்கலாம்
D
தண்டனை விதிக்க இயலாது.
Question 17 Explanation: 
இச்சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கலாம். சிறைவாசம் விதிக்க இயலாது. ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்
Question 18
யார் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
சமூக நல அலுவலர்.
B
ஆட்சியர்
C
வட்டாட்சியர்
D
காவல் துணைக் கண்காணிப்பாளர்.
Question 18 Explanation: 
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாநில விதிகளில், மாவட்ட சமூக நல அலுவலரே அந்தந்த மாவட்டத்தின் குழந்தைத் திருமண தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கூடுதல் பொறுப்பாகும்.
Question 19
யாரின் கீழ்  குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களுக்கு உதவ கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது?
A
கிராம நிர்வாக அலுவலர்.
B
ஊராட்சி தலைவர்.
C
தலைமை ஆசிரியர்.
D
ஊராட்சி உறுப்பினர்.
Question 19 Explanation: 
குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களுக்கு உதவ ஊராட்சி தலைவரின் கீழ் 6 நபர்கள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சமூக நல அலுவலருக்கு தகவல் கொடுப்பார்கள்.
Question 20
குழந்தைகள் வழிமம், இலவச தொலைபேசி எண் என்ன?
A
1011
B
1099
C
1098
D
1026
Question 20 Explanation: 
குழந்தைகள் வழிமம், இலவச தொலைபேசி எண். 1098. ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் பற்றி தகவல் கொடுக்க முடியும். குழந்தைத் திருமணம் நடைபெறுவதை தெரிவிக்க முடியும்.
Question 21
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம் எது தொடர்பானது?
A
திருமண நிதி உதவித் திட்டம்.
B
விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
C
ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
D
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
Question 21 Explanation: 
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம். இது ஓரு பொதுவான திட்டம் ஆகும் மற்ற திட்டங்கள் சிறப்பு திட்டங்கள் ஆகும்.
Question 22
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் நோக்கங்கள் என்ன?
  1. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதல்.
  2. கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த.
  3. பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 22 Explanation: 
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்குதல். பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல். கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்ததுவது நோக்கம் அல்ல. அனைத்து திருமணத்திற்கும் பொருந்தும்.
Question 23
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி என்ன?
  1. திட்டம் 1 – 25000 + 1/2 சவரன்
  2. திட்டம் 1 – 25000 + 1 சவரன்
  3. திட்டம் 2 – 50000 + 1 சவரன்
  4. திட்டம் 3  - 50000 + 1 /2 சவரன்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 23 Explanation: 
திட்டம் 1 - ‘25,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலம் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ‘50,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலம் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.
Question 24
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர் யார்?
A
மணமகள்
B
மணமகன்
C
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை.
D
மணமகன் தாய் அல்லது தந்தை.
Question 24 Explanation: 
ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். மணமகன் தாய் அல்லது தந்தைக்கு வழங்கப்படாது.
Question 25
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் 1 கீழ் உதவி பெற தகுதிகள் / நிபந்தனைகள் என்ன?
  1. மணப் பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து இருக்க வேண்டும்.
  2. தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
  3. பழங்குடியினராக இருந்தால் 8-வது படித்திருத்தல் வேண்டும்.
  4. குடும்ப ஆண்டு வருமானம் 96,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
எதுவுமில்லை
Question 25 Explanation: 
மணப் பெண் 10-ஆம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். தனியார் தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். பழங்குடியினராக இருந்தால் 5-வது படித்திருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Question 26
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் 2 கீழ் உதவி பெற தகுதிகள் / நிபந்தனைகள் என்ன?
  1. பட்டதாரிகள் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
  2. தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் கூடாது.
  3. பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 26 Explanation: 
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Question 27
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி திட்டத்தின்  கீழ் உதவி பெற தகுதிகள் / நிபந்தனைகள் என்ன?
  1. திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  2. உச்ச வயது வரம்பு 45.
  3. ஒரு குடும்பத்தில் இரு பெண்ணுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 27 Explanation: 
திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். திருமணத் தேதியன்றோ அல்லது திருமணத்திற்குப் பிறகோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Question 28
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு நிதி உதவித் திட்டம் எது தொடர்பானது?
A
திருமண நிதி உதவித் திட்டம்.
B
விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
C
ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
D
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
Question 28 Explanation: 
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம். இது விதவைக்கான சிறப்பு திட்டம் ஆகும்.
Question 29
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் நோக்கங்கள் என்ன?
  1. விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்துதல்.
  2. விதவைகளுக்கு வாழ்வு அளித்தல்.
  3. கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 2 மட்டும்.
C
1, 3 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 29 Explanation: 
திட்டத்தின் நோக்கங்கள் விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்துதல். விதவைகளுக்கு வாழ்வு அளித்தல் கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்ததுவது நோக்கம் அல்ல.
Question 30
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி என்ன?
  1. திட்டம் 1 – 25000 + 1/2 சவரன்
  2. திட்டம் 1 – 25000 + 1 சவரன்
  3. திட்டம் 2 – 50000 + 1 சவரன்
  4. திட்டம் 2  - 50000 + 1 /2 சவரன்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 30 Explanation: 
திட்டம்-1 - ‘25,000 வழங்கப்படுகிறது. (இதில் ‘15,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ‘10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும். திட்டம்- 2 - ‘50,000 வழங்கப்படுகிறது. (இதில் ‘30,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ‘20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
Question 31
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற  கல்வித் தகுதி என்ன?
  1. திட்டம் 1 – 10 ஆம் வகுப்பு.
  2. திட்டம் 2 -  பட்டதாரி / பட்டயப் படிப்பு.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை
Question 31 Explanation: 
திட்டம்- 1 - கல்வித் தகுதி தேவையில்லை திட்டம்- 2 பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
Question 32
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற  தகுதி என்ன?
  1.  குடும்ப ஆண்டு வருமானம் 96,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. மணமகனின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகளின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை
Question 32 Explanation: 
வருமான வரம்பு - வருமான வரம்பு இல்லை. மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு : மறுமணம் செய்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள்.
Question 33
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு நிதி உதவித் திட்டம் எது தொடர்பானது?
A
திருமண நிதி உதவித் திட்டம்.
B
விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
C
ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
D
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
Question 33 Explanation: 
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம். திட்டத்தின் நோக்கங்கள் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்.
Question 34
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி  உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி என்ன?
  1. திட்டம் 1 – 25000 + 1/2 சவரன்
  2. திட்டம் 1 – 25000 + 1 சவரன்
  3. திட்டம் 2 – 50000 + 1 சவரன்
  4. திட்டம் 2  - 50000 + 1 /2 சவரன்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 34 Explanation: 
திட்டம் 1 - ‘25,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும். திட்டம் 2– ‘50,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.
Question 35
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற  கல்வித் தகுதி என்ன?
  1. திட்டம் 1 – 5 ஆம் வகுப்பு.
  2. திட்டம் 2 -  12 ஆம் வகுப்பு.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை
Question 35 Explanation: 
திட்டம் - 1 - கல்வித் தகுதி தேவை இல்லை திட்டம்- 2 பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூ ரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
Question 36
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி என்ன?
  1. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. திருமணத் தேதியன்று மணமகள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  3. உச்ச வயது வரம்பு 40.
  4. விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 ,4 மட்டும்.
Question 36 Explanation: 
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ‘72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திருமணத் தேதியன்று மணமகள் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.
Question 37
அன்னை தெரசா நினைவு திருமண நிதி எது தொடர்பானது?
A
திருமண நிதி உதவித் திட்டம்.
B
விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
C
ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
D
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
Question 37 Explanation: 
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம். திட்டத்தின் நோக்கம் - ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுதல். பெற்றோர் இருவரும் இறந்து இருக்க வேண்டும்.
Question 38
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி என்ன?
  1. திட்டம் 1 – 25000 + 1/2 சவரன்
  2. திட்டம் 1 – 25000 + 1 சவரன்
  3. திட்டம் 2 – 50000 + 1 சவரன்
  4. திட்டம் 2  - 50000 + 1 /2 சவரன்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 38 Explanation: 
திட்டம்-1 - ‘25,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. திட்டம்-2 - ‘50,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது .
Question 39
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற  கல்வித் தகுதி என்ன?
  1. திட்டம் 1 – 8 ஆம் வகுப்பு.
  2. திட்டம் 2 -  10 ஆம் வகுப்பு.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை.
Question 39 Explanation: 
திட்டம் -1 கல்வித் தகுதி தேவை இல்லை. திட்டம்- 2 பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூ ரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
Question 40
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி என்ன?
  1. வருமான வரம்பு இல்லை.
  2. திருமணத் தேதியன்று மணப்பெண் 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  3. இதர நிபந்தனைகள் இல்லை.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1 மட்டும்.
C
2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 40 Explanation: 
வருமான வரம்பு இல்லை. திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் . உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. இதர நிபந்தனைகள் : இல்லை. சட்டமன்ற உறுப்பினர் / பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம். அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
Question 41
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண நிதி உதவித் திட்டம் எது தொடர்பானது?
A
திருமண நிதி உதவித் திட்டம்.
B
விதவை மறுமண நிதி உதவித் திட்டம்.
C
கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.
D
ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்.
Question 41 Explanation: 
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம். திட்டத்தின் நோக்கங்கள் - கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமை எனும் கொடுமையை ஒழித்தல்.
Question 42
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவி என்ன?
  1. திட்டம் 1 – 25000 + 1/2 சவரன்
  2. திட்டம் 1 – 25000 + 1 சவரன்
  3. திட்டம் 2 – 50000 + 1 சவரன்
  4. திட்டம் 2  - 50000 + 1 /2 சவரன்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 3 மட்டும்.
C
1, 2, 4 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 42 Explanation: 
திட்டம் 1 - ‘25,000 வழங்கப்படுகிறது (‘15,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ‘10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும். திட்டம் 2 - ‘50,000 வழங்கப்படுகிறது (‘30,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும், ‘20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும்.
Question 43
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தில் எது சரியானது?
  1. தம்பதியரில் ஓருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும்.
  2. தம்பதியரில் ஓருவர் முற்பட்ட வகுப்பினராக இருந்து மற்றவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1 மட்டும்.
C
2 மட்டும்.
D
எதுவுமில்லை.
Question 43 Explanation: 
கீழ்க்கண்ட இரண்டு வகையான கலப்புத் திருமணங்கள் செய்த தம்பதியர் நிதியுதவி பெற தகுதியானவர் : பிரிவு-1 புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி வழங்கப்படும். பிரிவு-2 புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் நிதியுதவி வழங்கப்படும். தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Question 44
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி என்ன?
  1. வருமான வரம்பு இல்லை
  2. கல்வி தகுதி தேவை இல்லை.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
1 மட்டும்.
B
2 மட்டும்.
C
1 மற்றும் 2.
D
எதுவுமில்லை
Question 44 Explanation: 
வருமான வரம்பு இல்லை. திட்டம் -1 கல்வித் தகுதி தேவை இல்லை. திட்டம்- 2 பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
Question 45
சரியான விடையை தேர்ந்து எடு
  1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
  2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்
  3. ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்
  4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்
  5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.
சரியான விடையை தேர்ந்து எடு
A
அனைத்தும்.
B
1, 2, 5 மட்டும்.
C
2, 4, 5 மட்டும்.
D
1, 3, 4 மட்டும்.
Question 45 Explanation: 
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம். டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம். ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம். அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!