Online Test

TN Administration Part 1 Revision Test in Tamil

TN Administration Part 1 Revision Test in Tamil

Congratulations - you have completed TN Administration Part 1 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசு எந்த புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறது?
A
ஜெருசலேம்.
B
ஹஜ்
C
அனைத்தும்
D
எதுவும் இல்லை.
Question 1 Explanation: 
அரசு ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறது. ஹஜ் புனித பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஹஜ் புனித பயணிகளுக்கு நிதி உதவி வழங்குதல் மற்றும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
Question 2
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் எத்ற்காக செயல்பட்டு வருகிறது
  1. வக்ஃப்புகளை சரியான முறையில் நிர்வாகிப்பதற்கு.
  2. வக்ஃப் சொத்துக்களை பராமரிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும்.
  3. கல்வி நிருவனம் நடத்த.
சரியான விடையை தேரந்து எடு?
A
அனைத்தும்
B
1 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 2 Explanation: 
வக்ஃப்புகளை சரியான முறையில் நிர்வாகிப்பதற்காகவும், வக்ஃப் சொத்துக்களை பராமரிப்பதற்காகவும் மற்றும் பாதுகாப்பதற்காகவும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் செயல்பட்டு வருகிறது. கல்வி நிருவனங்களை வக்ஃப் வாரியம் நடத்தப்படவில்லை.
Question 3
பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் எந்த கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது?
  1. சிறப்புக் கட்டணம்.
  2. கற்பிப்புக் கட்டணம்.
  3. தேர்வுக் கட்டணம்.
சரியான விடையை தேர்ந்தெடு?
A
அனைத்தும்
B
1 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 3 Explanation: 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசு உத்தரவிட்டுள்ளதால், இவர்கள் எவ்விதச் சிறப்புக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Question 4
பள்ளி விடுதிகள் சேர்க்கைக்கான தகுதிகள் என்ன?
  1. மாணவ, மாணவியர் 3 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயில வேண்டும்.
  2. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  3. மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 4 Explanation: 
மாணவ, மாணவியர் 4 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயில வேண்டும். பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். மாணவியருக்கு இறுதி விதி பொருந்தாது.
Question 5
பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டம் யாருக்கு வழங்கப்படுகின்றது?
  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் மாணவ, மாணவியர்.
  2. அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பயிலும் மாணவ, மாணவியர்.
  3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பயிலும் மாணவ, மாணவியர்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 5 Explanation: 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்புக் கட்டணம், கற்பிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்கள் கற்பிப்பு மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துகிறார்கள். எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு மட்டும் கல்வி உதவித் தொகைகள் பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
Question 6
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் யாருக்கு வழங்கப்படுகின்றன?
  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
  2. அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
  3. சுயநிதி கல்லுரி.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
2, 3 மட்டும்.
Question 6 Explanation: 
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பி.ஏ.,பி.எஸ்.ஸி., பி.காம்., போன்ற படிப்புகள்). அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
Question 7
தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்
  1. அரசு கல்லூரி.
  2. அரசு உதவிபெறும் கல்லூரி.
  3. சுயநிதி தொழில் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீடு.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
1, 2 மட்டும்.
D
1, 3 மட்டும்.
Question 7 Explanation: 
மூன்றாண்டு பட்டப்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் (பி.ஏ.,பி.எஸ்.ஸி., பி.காம்., போன்ற படிப்புகள்). அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
Question 8
பள்ளிக் கல்வித் துறை தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டதாக அறிவித்துள்ளது?
  1.  செலவைக் குறைக்க.
  2. அதீத மனஅழுத்தங்களை குறைக்க.
  3. ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களை தவிர்க்க.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 3 மட்டும்.
Question 8 Explanation: 
பள்ளிக் கல்வித் துறை, தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தமக்குள் போட்டியினை வளர்த்து கொள்ளும்நிலை உருவெடுத்ததால் மாணவ, மாணவியர் உளவியல் ரீதியிலான இறுக்கத்திற்கு உள்ளானார்கள் என்று தெரிவித்து, இதனால் ஏற்படும் அதீத மனஅழுத்தங்களை குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களை தவிர்க்கும் வகையிலும் 2016-2017 ஆம் கல்வியாண்டு முதல் தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.
Question 9
கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை தகுதி என்ன?
  1. பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
  2. அனைத்து பிரிவினரும் பெறலாம்.
  3. ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 3 மட்டும்.
Question 9 Explanation: 
பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில வேண்டும். மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும். ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Question 10
விலையில்லா மிதிவண்டி பெற தகுதி என்ன?
  1. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் வேண்டும்.
  2. இலவச பேருந்து பயண அட்டை பெறும் மாணவ / மாணவியருக்கும் இச்சலுகை பொருந்தாது.
  3. இச்சலுகை பெற எவ்வித நிபந்தனையும் இல்லை.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
3 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 3 மட்டும்.
Question 10 Explanation: 
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் +1 பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை பெறும் மாணவ / மாணவியருக்கும் இச்சலுகை பொருந்தும். இச்சலுகை பெற எவ்வித நிபந்தனையும் இல்லை.
Question 11
விலையில்லா சலவைப்பெட்டி
  1. அனைத்து பிரிவினரும் பெறலாம்.
  2. சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்
  3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.48,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
2 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 3 மட்டும்.
Question 11 Explanation: 
பிவ, மிபிவ, சீம வகுப்பைச் சார்ந்து, சலவைத் தொழிலை மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Question 12
தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம் எப்பொது இயற்றப்பட்டது?
A
2017
B
2016
C
2018
D
2019
Question 12 Explanation: 
மாநிலத்திலுள்ள வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தினைச் சேர்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகளையும் நிலைக்கொடைகளையும் பாதுகாப்பதற்கும், பேணி வருவதற்கும் என தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம் 2018 (தமிழ்நாடு சட்டம் 44/2018) இயற்றப்பட்டது. இச்சட்டம் 4.2.2019 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் நிருவாகக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.
Question 13
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு என்ன?
A
3.5%
B
2.5%
C
1.5%
D
5%
Question 13 Explanation: 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு 3.5 %.
Question 14
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வழங்கப்படும் இடஒதுக்கீடு விழுக்காடு எவ்வளவு?
A
18.
B
19
C
20
D
22
Question 14 Explanation: 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. 19 % இடஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் – 18 %. பழங்குடியினர் – 1%.
Question 15
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் எங்கு நடத்தப்பட்டு வருகின்றன?
A
ஆனைத்து மாவட்டங்களிளும்.
B
தென் மாவட்டங்களில்.
C
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்.
D
மதுரை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்.
Question 15 Explanation: 
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரமலை கள்ளர் இன மாணவ / மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்காக கள்ளர் சீரமைப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகின்றன. கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் 295 அரசுக் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 2011-2012 ஆம் கல்வியாண்டில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 5 பள்ளிகள் வீதம், 15 அரசு கள்ளர் சீரமைப்பு ஆரம்பப்பள்ளிகளில் புதிதாக ஆங்கில வழியிலான டுமுழு வகுப்புகள் துவக்கப்பட்டன.
Question 16
கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு என்ன?
A
2 இலட்சம்.
B
3 இலட்சம்.
C
1.5 இலட்சம்.
D
2.5 இலட்சம்.
Question 16 Explanation: 
ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர் தங்களது கல்வியினை தொடர ஏதுவாக இவ்வரசு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் இலவசக் கல்வி ஆகிய மூன்று வகையான கல்வி உதவித்தொகைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2 இலட்சம் ஆகும்.
Question 17
3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் ஒருவருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு?
A
மாதத்திற்கு 500
B
வருடத்திற்கு 500
C
மாதத்திற்கு 250
D
வருடத்திற்கு 1000
Question 17 Explanation: 
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கல்வியே முதல்படியாகும். கிராமப்புற பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், ஆரம்பக்கல்வி நிலையில் பெண் குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்துவதை குறைக்கவும், 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ.500 என்ற வீதத்திலும், 6 ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ.1000 என்ற வீதத்திலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Question 18
6 ஆம் வகுப்பில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் ஒருவருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு?
A
மாதத்திற்கு 500
B
வருடத்திற்கு 500
C
மாதத்திற்கு 250
D
வருடத்திற்கு 1000
Question 18 Explanation: 
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கல்வியே முதல்படியாகும். கிராமப்புற பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், ஆரம்பக்கல்வி நிலையில் பெண் குழந்தைகள் படிப்பை இடையில் நிறுத்துவதை குறைக்கவும், 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ.500 என்ற வீதத்திலும், 6 ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ.1000 என்ற வீதத்திலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Question 19
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி என்ன?
A
7,21,38,958.
B
7,23,78,987.
C
6,98,75,198.
D
7,89,45,627.
Question 19 Explanation: 
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு முஸ்லிம் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
Question 20
இடஒதுக்கீடு எங்கு வழங்கப்படுகிறது?
A
மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற.
B
கல்வி.
C
A மற்றும் B.
D
A மட்டும்.
Question 20 Explanation: 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. இதனால் வாழ்க்கைத் தரம் உயர்கிறது.
Question 21
தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு எவ்வள்வு?
A
71
B
49
C
69
D
75
Question 21 Explanation: 
தமிழ்நாடு மட்டுமே 65 % மேல் இடஓதுக்கிடு அளிக்கும் மாநிலம் ஆகும். 9 ம் அட்டவணையில் சட்டம் செர்க்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Question 22
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு என்ன?
A
26.5.
B
20
C
27.5
D
40
Question 22 Explanation: 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு – 26.5 %. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. இதனால் வாழ்க்கைத் தரம் உயர்கிறது.
Question 23
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு என்ன?
A
26.5.
B
20
C
27.5
D
40
Question 23 Explanation: 
மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் அளவு – 20 %. மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. இதனால் வாழ்க்கைத் தரம் உயர்கிறது.
Question 24
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களின் சாதிச் சான்றிதழ்கள் யாரால் வழங்கப்படுகின்றது?
A
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்.
B
துணை வட்டாட்சியர்.
C
வட்டாட்சியர்.
D
துணை ஆட்சியர்.
Question 24 Explanation: 
சம்மந்தப்பட்ட தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களால் கீழ்கண்ட வகுப்பு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு. சீர்மரபினர் வகுப்பு.
Question 25
ஒவ்வொரு விடுதியிலும் எத்தனை சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன?
A
5.
B
4.
C
6.
D
10.
Question 25 Explanation: 
மாற்றுத் திறனாளிகளுக்கான சேர்க்கை – ஒவ்வொரு விடுதியிலும் 4 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Question 26
பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்ட சலுகைகள் பெற நிபந்தனைகள் என்ன?
  1. பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  2. குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1 மட்டும்.
C
2 மட்டும்.
D
எதுவுமில்லை
Question 26 Explanation: 
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
Question 27
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் யாருக்கு வழங்கப்படுகின்றன?
A
11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை.
B
12 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை.
C
11 ஆம் வகுப்பு.
D
11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை.
Question 27 Explanation: 
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான பல்வேறு படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்தவாறு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. ரூ.500/-. மற்றவை- அரசு கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளவாறு சிறப்புக் கட்டணம் மற்றும் கற்பிப்பு கட்டணமும், தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது.
Question 28
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை அமைச்சர் யார் (நவம்பர் 2019)?
A
வளர்மதி
B
ராசாலட்சுமி.
C
நிலோபர் கபில்.
D
பெங்சமின்.
Question 29
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக விடுதியின் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதலாக எவ்வளவு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன?
A
5 %.
B
5.
C
10.
D
4 %.
Question 29 Explanation: 
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான சேர்க்கை - ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக விடுதியின் ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Question 30
கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறது?
A
அனைத்து மாவட்டங்கள்.
B
சென்னை மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்கள்.
C
தென் மாவட்டங்கள்.
D
சென்னை, கோவை மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்கள்.
Question 30 Explanation: 
கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் சென்னை மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் கிராமப்புறம் என்பது இல்லை.
Question 31
விலையில்லா மிதிவண்டிகள் யாருக்கு வழங்கப்படுகிறது?
A
+1 பயிலும் மாணவ, மாணவியர்.
B
+2 பயிலும் மாணவ, மாணவியர்.
C
+1, +2 பயிலும் மாணவ, மாணவியர்.
D
10, +1, +2 பயிலும் மாணவ, மாணவியர்.
Question 31 Explanation: 
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருமானம் மற்றும் சாதி பாகுபாடின்றி மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது
Question 32
விலையில்லா தையல் இயந்தி யாருக்கு வழங்கப்படுகிறது?
  1. பிவ/மிபிவ/சீம வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.48,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  3. துணி தைக்கத் தெரிந்திருக் .
  4. வயது வரம்பு இல்லை.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1 மட்டும்.
C
1, 3, 4 மட்டும்.
D
2, 3, 4 மட்டும்.
Question 32 Explanation: 
பிவ/மிபிவ/சீம வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். துணி தைக்கத் தெரிந்திருக்கவேண்டும். வயது : 20 - 45 வரை.
Question 33
விலையில்லா வீட்டுமனைப்பட்டா பெற தகுதி என்ன?
  1. வீடற்றவராக  இருக்க வேண்டும்
  2. நிலமற்றவராக இருக்க வேண்டும்
  3. பிவ/ மிபிவ/சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  4. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1 மட்டும்.
C
1, 3, 4 மட்டும்.
D
2, 3, 4 மட்டும்.
Question 33 Explanation: 
நிலமற்ற, வீடற்ற ஏழை, பிவ/ மிபிவ/சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
Question 34
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் எப்போது அமைக்கப்பட்டது?
A
1954
B
1956
C
1958
D
1955
Question 34 Explanation: 
வக்ஃப் சட்டம், 1954 தமிழ் நாட்டில் 15.01.1955ல் அமல்படுத்தப்பட்டது. முதல் வாரியம் 18.01.1958ல் அமைக்கப்பட்டது. 1995-ம் ஆண்டு வக்ஃப் சட்டம் (மைய அரசு சட்டம் 43/1995) 2013 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. வாரியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகிறது.
Question 35
முஸ்லிம் பெண்கள் (மண விலக்கில் உரிமை பாதுகாப்பு) சட்டம், 1986 யாரால் நடைமுறைப படுத்தப்படுகிறது?
A
மாநில அரசு.
B
திர்ப்பாயம்
C
வக்ஃப் வாரியம்.
D
மத அமைப்பு.
Question 35 Explanation: 
1986-ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் (மணவிலக்கில் உரிமை பாதுகாப்பு) சட்டத்தின்படி விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகை வழங்குதல் போன்ற பணிகளில் வக்ஃப் வாரியம் ஈடுபட்டு வருகிறது.
Question 36
உலமா ஓய்வூதிய (தமிழ் நாடு) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1980
B
1981
C
1985
D
1986
Question 36 Explanation: 
உலமா ஓய்வூதிய (தமிழ் நாடு) திட்டம் 1981. ஓய்வூதியமாக வழங்கப்படும் தொகை ரூ.1500/-மாதம் ஒன்றுக்கு. ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கான தகுதிகள் உலமாவாக இருக்கவேண்டும் வக்ஃப் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ.1000/-க்குள் இருக்க வேண்டும்
Question 37
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பல்வேறு கடன் திட்டங்களை யாரின் கீழ் வழங்கி வருகிறது?
  1. சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்.
  2. விவசாயம்
  3. போக்குவரத்து
  4. சுயதொழில்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்
B
1, 2 மட்டும்.
C
1, 3, 4 மட்டும்.
D
2, 3, 4 மட்டும்
Question 37 Explanation: 
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக - பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது. நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள் சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள் விவசாயம் போக்குவரத்து கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் இளம் தொழிற் பட்டதாரிகள் சுயதொழில் தொழிற்கல்வி பயிலுதல்
Question 38
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தரும் கடன் பெற தகுதி என்ன?
  1. பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும்.
  2. குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.2,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
  3. பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 3 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 2 மட்டும்
Question 38 Explanation: 
பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
Question 39
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் தொகைகளை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், எந்த நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன.
  1. தாய்கோ வங்கி.
  2. கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/நகர கூட்டுறவு வங்கிகள்.
  3. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்.
சரியான விடையை தேர்ந்து எடு?
A
அனைத்தும்.
B
1, 3 மட்டும்.
C
2, 3 மட்டும்.
D
1, 2 மட்டும்.
Question 39 Explanation: 
பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும், கீழ்க்காணும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாக செயல்படுகின்றன. தாய்கோ வங்கி. தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம். கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/நகர கூட்டுறவு வங்கிகள். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்.
Question 40
சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கஅதிகபட்ச கடன் தொகை எவ்வளவு?
A
ரூ.10.00 இலட்சம்
B
ரூ.12.00 இலட்சம்.
C
ரூ.15.00 இலட்சம்.
D
ரூ.20.00 இலட்சம்.
Question 40 Explanation: 
பொது காலக்கடன் திட்டம். சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம். பயனாளியின் பங்கு : 5 % தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 10%. தேசிய கழகத்தின் பங்கு : 85%. திரும்ப செலுத்தும் காலம் : 3/8 ஆண்டுகள்
Question 41
சிறு கடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) எதனுடன் தொடர்புடையது?
A
மகளிர் சுய உதவிக் குழு.
B
ஆடவர் சுய உதவிக் குழு.
C
மகளிர்
D
விவசாயி.
Question 41 Explanation: 
மகிளா சம்ரிதி யோஜனா - இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ.1,00,000/- அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு ரூ.15.00 இலட்சம்
Question 42
சிறு கடன் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
மகளிர் சுய உதவிக் குழு.
B
ஆடவர் சுய உதவிக் குழு.
C
மகளிர்
D
விவசாயி
Question 42 Explanation: 
ஆடவருக்கான சிறு கடன் திட்டம் சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ.1,00,000/- அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவுக்கு ரூ.15.00 இலட்சம்.
Question 43
கறவை மாட்டுக் கடன் எதனுடன் தொடர்புடையது?
A
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்.
B
விவசாயி
C
மகளிர் சுய உதவிக் குழு.
D
ஆடவர் சுய உதவிக் குழு.
Question 43 Explanation: 
பொதுக் காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் கடன் வழங்க பரிந்துரை செய்யும். இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்படும்.
Question 44
சுய தொழில் துவங்க கடன் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
மகளி சுய உதவிக் குழு.
B
சிறு விவசாயி.
C
இளம் தொழிற்கல்வி பட்டதாரி.
D
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்.
Question 44 Explanation: 
இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு, சுய தொழில் துவங்க கடன் திட்டம். அதிகபட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம். திரும்ப செலுத்தும் காலம் : அதிக பட்சம் 10 ஆண்டுகள்.
Question 45
Shilp Sampadha திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
மகளி சுய உதவிக் குழு.
B
சிறு விவசாயி.
C
இளம் தொழிற்கல்வி பட்டதாரி.
D
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்.
Question 45 Explanation: 
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் துவங்க கடன் திட்டம். அதிகபட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம். திரும்ப செலுத்தும் காலம் : அதிக பட்சம் 10 ஆண்டுகள்.
Question 46
Krishi Sampadha திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
மகளி சுய உதவிக் குழு.
B
சிறு விவசாயி.
C
இளம் தொழிற்கல்வி பட்டதாரி.
D
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்.
Question 46 Explanation: 
சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறு கடன் திட்டம். அதிகபட்ச கடன் தொகை : ரூ.50,000/- திரும்ப செலுத்தும் காலம் : அதிக பட்சம் 4 ஆண்டுகள்.
Question 47
தமிழ் நாடு மாநில ஹஜ் குழு சட்டம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A
2001.
B
2002.
C
2003.
D
2004
Question 47 Explanation: 
ஹஜ் குழுச் சட்டம், 2002-ன் படி, பயணிகள் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக அவை தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, மாநில அரசால் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான ஹஜ் பயணிகளின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு ஹஜ் குழு பயனுள்ள சேவையை வழங்கி வருகிறது. இந்திய ஹஜ் குழு மற்றும் தமிழக அரசு ஆகியோரால் வழங்கப்படும் வழிமுறைகளுக்குட்பட்டு தமிழ் நாடு மாநில ஹஜ் குழு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
Question 48
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A
1989.
B
1990.
C
1991.
D
1992.
Question 48 Explanation: 
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் தமிழ் நாட்டிலுள்ள மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க கடந்த 1989 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக 2010 ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் (Act 21 of 2010 ) ன்படி 01.08.2010 முதல் இயங்கிவருகிறது.
Question 49
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A
1991
B
1992
C
1993
D
1994
Question 49 Explanation: 
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 16(4)ன் கீழ், கூறு 340 உடன் படிக்கப்பட்டு, ஒரு நிலையான அமைப்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு, 15.3.1993 அன்று முதல் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
Question 50
பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் எதனுடன் தொடர்புடையது?
A
சிறுபான்மையினர்
B
மகளிர்
C
பிற்படுத்தப்பட்டோர்.
D
எதுவுமில்லை
Question 50 Explanation: 
பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளின் அடிப்படை வளர்ச்சியில் உள்ள பற்றாக்குறைகளை களையும்பொருட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய மாநில திட்டங்கள் மூலமாகவோ அல்லது புதிய நோக்கில் வடிவமைக்கப்படும் திட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்பிருந்த பல்நோக்கு வளர்ச்சி திட்டத்தினை சீரமைத்து பிரதம மந்திரி ஐன்விகாஸ் காரியக்ரம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடப்பாண்டில் இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் செயல்படுத்தப்படும்.
Question 51
1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் மற்றொறு பெயர் என்ன?
A
தமிழ்நாடு சட்டம் 44/1994.
B
தமிழ்நாடு சட்டம் 45/1994.
C
தமிழ்நாடு சட்டம் 45/1993.
D
தமிழ்நாடு சட்டம் 44/1993.
Question 51 Explanation: 
மண்டல் குழு வழக்குகள் என்று அறியப்பட்ட இந்திராசஹானி எதிர் மைய அரசு வழக்கில் மொத்த இடஒதுக்கீட்டினை 50 விழுக்காட்டிற்குக் கட்டுப்படுத்தி மாண்பமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக கல்வி நிலையங்களில் சேர்க்கை மற்றும் அரசுப் பணிகளுக்கான நியமனங்கள் ஆகியவற்றில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 45/1994) நிறைவேற்றியது.
Question 52
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது எப்பொளுது முதல் வழங்கப்பட்டு வருகிறது?
A
1994.
B
1995.
C
1996.
D
1997
Question 52 Explanation: 
தமிழ்நாட்டில் சமூக நீதிக்காகப் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியவர்களை சிறப்பு செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது 1994 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு சவரன் தங்கப் பதக்கமும், ரூ.1 இலட்சம் பொற்கிழியும் கொண்டதாகும்.
Question 53
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A
1980.
B
1981.
C
1982.
D
1983.
Question 53 Explanation: 
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிதியுதவி வழங்கி வருகிறது. 1982 ஆம் ஆண்டு இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் பதிவுபெற்ற ஒரு அரசுத்துறை நிறுவனமாகும்.
Question 54
புதிய பொற்காலத் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
ஆண்கள்.
B
பெண்கள்
C
தொழிற்கல்வி பட்டதாரி.
D
சுய உதவிக் குழு.
Question 54 Explanation: 
பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம். பெண்களின் சுயசார்பு பண்பினை வளர்க்கும் நோக்குடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ரூ.2,00,000 வரை ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் 3 முதல் 8 ஆண்டுகளாகும்.
Question 55
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
அனைத்து மாணவர்.
B
அனைத்து மாணவியர்.
C
சிறுபான்மையின மாணவ, மாணவியர்.
D
அனைத்தும்.
Question 55 Explanation: 
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைத் திட்டம். தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்று கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இக்கல்வி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!