Online Test

Indian National Movement Part 1 Revision Test in Tamil

Indian National Movement Part 1 Revision Test in Tamil

Congratulations - you have completed Indian National Movement Part 1 Revision Test in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கம்பெனிக்கு எதிராகக் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி எது?
A
சென்னை மகாஜன சங்கம்
B
சென்னைவாசிகள் சங்கம்
C
இந்திய தேசிய காங்கிரஸ்
D
a) அல்லது b)
Question 1 Explanation: 
விளக்கம்: 1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராகக் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் இது ஒன்றாகும். இவ்வமைப்புத் தனது குறைகளை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் முன் வைத்தது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி குறித்து விவாதித்து 1853இல் பட்டயச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இது நடைபெற்றது.
Question 2
சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின் அ மைப்பு எது?
A
சென்னை மகாஜன சங்கம்
B
சென்னைவாசிகள் சங்கம்
C
இந்திய தேசிய காங்கிரஸ்
D
a) அல்லது b)
Question 2 Explanation: 
விளக்கம்: கம்பெனியின் நிர்வாகத்தில் வருவாய், கல்வி, நீதி ஆகியத் துறைகளில் தங்களுக்குள்ள குறைபாடுகளை இவர்கள் இவ்வமைப்பின் மூலம் எடுத்துரைத்தனர் . சென்னையின் மிக முக்கிய வணிகரான கஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்.
Question 3
சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்க விழா எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1884
B
1883
C
1852
D
1854
Question 3 Explanation: 
விளக்கம்: சென்னைவாசிகள் சங்கம் செயலிழந்த பின்னர் சென்னை மாகாணத்தில் அதைப் போன்ற வேறு அமைப்பு இல்லாமல் போனது. கற்றறிந்த பல இந்தியர்கள் இந்நிலையைக் கவலையுடன் நோக்கினர். ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாய் மே, 1884இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப் பெற்றது. 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் G. சுப்ரமணியம், வீரராகவாச்சாரி , அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர்.
Question 4
எந்த ஆண்டு சென்னைவாசிகள் சங்கம் தனது மனுவினை ஆங்கிலப்பாராளுமன்றத்திடம் சமர்ப்பித்தது?
A
1852
B
1853
C
1884
D
1885
Question 4 Explanation: 
விளக்கம்: இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறை மீட்டெடுக்கப்பட வேண்டுமென இவ்வமைப்பு வற்புறுத்தியது. நீதித்துறையானது தாமதமாக செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் குறைபாடுகளுடையதாகவும் இருப்பதாக இம்மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகளின் நியமனத்தின்போது அவர்களின் நீதித்துறைசார் அறிவுத்திறனும் வட்டார மொழிகளில் அவர்களுக்குள்ளத் திறமையும் மதிப்பீடு செய்யப்படாததால் நீதித்துறையின் திறமை பாதிக்கப்படுவதை இம்மனு சுட்டிக்காட்டியது. மானிய உதவித்திட்டத்தின் கீழ் சமயப்பரப்பு நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் இம்மனுவில் எதிர்க்கப்பட்டிருந்தது.
Question 5
கீழ்க்கண்டவற்றுள் சென்னைவாசிகள் சங்கதைப்பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
A
இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டுமென ஒரு போராட்டத்தை நடத்தியது.
B
இவ்வமைப்பு இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
C
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் சென்னைவாசிகள் சங்கம் காங்கிரசோடு இணைக்கப்பட்டது.
D
a) மற்றும் b
Question 5 Explanation: 
விளக்கம்: இவ்வமைப்பு இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இவ்வமைப்பின் ஆயுட்காலம் குறைவானதே. 1866இல் லட்சுமிநரசு இயற்கை எய்தினார். 1881இல் இவ்வமைப்பு இல்லாமல் போயிற்று. சீர்திருத்தங்கள் என்றளவில் இவ்வமைப்புப் பெருமளவில் சாதனைகள் செய்யாவிட்டாலும் இது இந்தியரின் கருத்தினை வெளியே சொல்ல மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கமாகும்.
Question 6
கீழ்க்கண்டவற்றுள் சென்னைவாசி சாங்கத்தின் குறைபாடு/குறைபாடுகள் எது/எவை?
A
தனது வாழ்நாளில் இவ்வமைப்பு சென்னை மாகாண எல்லைகளுக்குள்ளே மட்டும் செயல்பட்டது.
B
இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகாண நிலவுடைமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும்.
C
தேசிய அளவிலான அரசியல் சார்ந்த அமைப்பாக இல்லாமல் போனது
D
a) மற்றும் b)
Question 6 Explanation: 
விளக்கம்: தனது வாழ்நாளில் இவ்வமைப்பு சென்னை மாகாண எல்லைகளுக்குள்ளே மட்டும் செயல்பட்டது. இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகாண நிலவுடைமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும். குறைபாடு யாதெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்களின் குறைகளை ஓங்கி ஒலிக்கச் செய்து, அக்குறைகளை நிவர்த்தி செய்ய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தேசிய அளவிலான அரசியல் சார்ந்த அமைப்பாக இல்லாமல் போனதுதான். அந்த இடைவெளியை இந்திய தேசிய காங்கிரஸ் நிரப்பியது.
Question 7
சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றவர்கள் யார்?
A
G. சுப்ரமணியம்
B
வீரராகவாச்சாரி
C
கஜுலா லட்சுமிநரசு
D
a) மற்றும் b)
Question 7 Explanation: 
விளக்கம்: 1884 இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப் பெற்றது. 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் G. சுப்ரமணியம், வீரராகவாச்சாரி , அனந்தா சார்லு,ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர். இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப் பெற்றது. சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு நடைபெற்று முடிந்த பின்னர் அதன் தலைவர்கள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.
Question 8
அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை எந்த ஆண்டு முன்வைக்கப்பட்டது?
A
1878
B
1883
C
1875
D
1877
Question 8 Explanation: 
விளக்கம்: காலனிய ஆட்சிக்கு எதிராகக் குறைகளையும் பிரச்சனைகளையும் எழுப்பும் ஒரு அரசியல்சார் அமைப்பை நிறுவும் சிந்தனை வெற்றிடத்திலிருந்து உருவானதல்ல. 1875க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1875இல் இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதிவரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர். 1877இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது. 1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
Question 9
1884இல், சென்னையில் நடைபெற்ற பிரம்ம ஞான சபையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் யார்?
A
W.C. பானர்ஜி
B
அன்னிபெசன்ட்
C
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
D
அனந்தச்சார்லு
Question 9 Explanation: 
விளக்கம்: ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service – ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது.
Question 10
இந்திய தேசிய காங்கிரஸ் எங்கு உருவாக்கப்பட்டது?
A
கொல்கத்தா
B
பெங்களூர்
C
சென்னை
D
மும்பை
Question 10 Explanation: 
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது. A.O.ஹுயூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
Question 11
இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது எது?
A
கோரிக்கை மனு கொடுப்பது
B
விண்ணப்பங்கள் அனுப்புவது
C
அகிம்சையை பின்பற்றுவது
D
இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பது.
Question 11 Explanation: 
விளக்கம்: கோரிக்கை மனு கொடுப்பது, விண்ணப்பங்கள் அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் மேற்கொண்ட போதும், தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டது. இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர்.
Question 12
கீழ்க்கண்டவற்றுள்  இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்பான கூற்றுகளில் சரியானவை எவை?
A
பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கெண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது.
B
நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்று கூட இடமளித்தது
C
காங்கிரசின் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் இடமளித்தது.
D
இவை அனைத்தும்
Question 12 Explanation: 
விளக்கம்: நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடவும் காங்கிரசின் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் இடமளித்தது. இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பாக இருந்தபோதிலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இந்தியப் பண்பைப் பெற்றிருந்தது. இதுவே அகில இந்திய அளவில் மக்களைத் திரட்டும் தொடக்கமாய் ஆனது.
Question 13
கீழ்க்கண்டவற்றுள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கோரிக்கைகள்  எது/எவை?
A
இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் நிர்வாகப் பணிகளை இந்தியமயமாக்குவது
B
அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
C
நில வரியை குறைத்தல்
D
இவை அனைத்தும்
Question 13 Explanation: 
விளக்கம்: அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும். அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமெனக் காங்கிரஸ் கோரியது. விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதிக நிலவரியாகும். நிலவரி குறைக்கப்பட வேண்டுமெனவும் ஜமீன்தார்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரியது. சுதேசிப் பொருட்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிகவரி விதிக்கும்படி காங்கிரஸ் பரிந்துரை செய்தது. நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித்தனியே முற்றிலுமாகப் பிரிக்கப்பட வேண்டுமெனக் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.
Question 14
இந்திய தேசிய காங்கிரசின் தொடக்க காலத் தலைவர்கள் எந்த சமூகத்தினர்?
A
உயர்குடி
B
வேளாண் குடி
C
வணிகர்கள்
D
தாழ்த்தப்பட்டோர்
Question 14 Explanation: 
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க காலத் தலைவர்கள் சமூகத்தின் உயர்குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களாயினும் இந்திய தேசிய காங்கிரசை உண்மையாகவே ஒரு தேசிய அரசியல்சார் அமைப்பாக ஆக்கினர்.
Question 15
“மிதவாத தேசியவாதிகள்” என்ற புனை பெயர் கொண்டோர் ஆற்றிய பணிகள்?
A
மனுகொடுப்பது
B
மன்றாடுவது
C
விண்ணப்பம் செய்வது
D
இவை அனைத்தும்
Question 15 Explanation: 
விளக்கம்: காங்கிரசின் இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரைப் பெற்றனர். காலனியம் பற்றிய ஒரு வகையான புரிதல் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த காலமது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவான காலப்பகுதியில் காலனிய எதிர்ப்பு தொடர்பான புரிதல் இருந்ததா என்பது பற்றித் தெரிந்து கொள்ள ஆயத்த நிலைக் குறிப்புகளில்லை. நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் இத் தொடக்ககால தேசியவாதிகளே.
Question 16
“சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று திலகர் முழங்கிய ஆண்டு எது?
A
1897
B
1898
C
1890
D
1893
Question 16 Explanation: 
விளக்கம்: 1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகு முறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர். இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக “தீவிர தேசியவாதிகள்” என்றழைக்கப்பட்டனர்.
Question 17
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப் பொறுப்பு வகித்து, அப்பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியத் தேவையுள்ளது எனும் உண்மையை ஏற்றுக் கொள்வதில் ஒரே கருத்தையேக் கொண்டிருந்தனர்.
B
பத்திரிகைகள் முதலானப் பல்வேறு வழிகளில் தேசிய உணர்வைப் புகட்டும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
C
1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர்.
D
இவை அனைத்தும்.
Question 17 Explanation: 
விளக்கம்: மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே மாபெரும் இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தில் முக்கியக் கூறுகளாவர். உண்மையில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் அவர்களேயாவர். 1905இல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி, சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது. தீவிர தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Question 18
தாதாபாய் நௌரோஜி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கை எது/எவை?
A
இந்தியாவின் குரல்
B
ராஸ்த் கோப்தார்
C
பெங்காலி
D
a) மற்றும் b)
Question 18 Explanation: 
விளக்கம்: தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவ்வழி முறைகளைப் பயன்படுத்தியே அவர்கள் காலனிய அடக்குமுறை குறித்து மக்களுக்கு கற்பித்துத் தேசியக் கருத்துகளையும் பரப்பினர்.
Question 19
1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
கோபாலகிருஷ்ண கோகலே
D
சத்தியானந்த சின்ஹா
Question 19 Explanation: 
விளக்கம்: ‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்கால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Question 20
லண்டனில் இந்திய சங்கத்தை நிறுவியவர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
கோபாலகிருஷ்ண கோகலே
D
சத்தியானந்த சின்ஹா
Question 20 Explanation: 
விளக்கம்: 1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society - 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association - 1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார். அவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எழுதிய ‘வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்’ (Poverty and Un-British Rule in India - 1901) எனும் புத்தகமே இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும். இந்நூலில் அவர் “செல்வச் சுரண்டல்” எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.
Question 21
வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு  செய்த ஆண்டு?
A
1906
B
1906
C
1909
D
1905
Question 21 Explanation: 
விளக்கம்: 1906 இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (Swadeshi Steam Navigation Company - SSNC) எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார். மொத்த முதலீடான `10 லட்சம் 40, 000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு 25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும்விற்பனை செய்யப்பட்டது.
Question 22
கீழ்க்கண்டவற்றுள் வ.உ.சி யின் நீராவிக்கப்பலின் பெயர் எது/எவை?
A
S.S.லாவோ
B
S.S. காலா
C
S.S.கலியா
D
a) மற்றும் c)
Question 22 Explanation: 
விளக்கம்: வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார். நாட்டின் ஏனையப் பகுதிகளில் சுதேசிச் செயல்பாடுகள் என்பது மெழுகுவர்த்தி செய்வது, வளையல்கள் செய்வது போன்ற குறிப்புணர்த்தும் அடையாள நடவடிக்கைகளாக இருந்தபோது, சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைஉருவாக்குவது என்ற எண்ணம் உண்மையில் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்தது. வ.உ.சி. அப்பகுதியின் வளமான வரலாற்றையும் இந்தியாவின் பண்டையகாலக் கடற்பயணப் பெருமைகளையும் துணையாகக் கொண்டார். சுதேச இயக்கத்திற்கு ஆதரவாக மக்களின் கருத்தைத் தூண்டுவதற்கு மீண்டும் மீண்டும் அவற்றைக் குறிப்பிட்டார்.
Question 23
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து பத்திரிகைகளில் எழுதியவர் யார்?
A
ஹாஜி பக்கீர் முகமது
B
லோகமான்ய திலகர்
C
அரவிந்த் கோஷ்
D
b) மற்றும் c)
Question 23 Explanation: 
விளக்கம்: வ.உ.சி.யின் சுதேசி இயக்க முன்னெடுப்பு தேசியத் தலைவர்களால் பாராட்டப் பெற்றது. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார். அரவிந்த கோஷும் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார். பாண்டித்துரையும், ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்களில் இருவராவர். தொடக்கத்தில் ஆங்கில நிர்வாகம் சுதேசிக் கப்பல் கம்பெனியைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியது. நாளடைவில் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கான ஆதரவு பெருகியபோது ஐரோப்பிய அதிகாரிகள் ஒருதலைபட்சமாகவும் இன வேற்றுமை உணர்வுடனும் நடந்து கொண்டனர்.
Question 24
வ.உ.சி. உடன்  இணைந்து மக்களுக்கு சுதேசி குறித்தும் புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தவர் யார்?
A
பாரதியார்
B
சுப்ரமணிய சிவா
C
திருப்பூர் குமரன்
D
வாஞ்சி நாதன்
Question 24 Explanation: 
விளக்கம்: சூரத் மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஊர் திரும்பிய வ.உ.சி. ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்குவதற்கானப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டார். ஒரு நல்ல பேச்சாளரை அவர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த சுப்ரமணிய சிவாவைச் சந்தித்தார். 1907இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருவரும் தூத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினர். மக்களுக்குச் சுதேசி குறித்தும் புறக்கணித்தல் பற்றியும் கற்றுக் கொடுத்தனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர். இப்பொதுக்கூட்டங்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்தது.
Question 25
கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆண்டு?
A
1909
B
1906
C
1908
D
1910
Question 25 Explanation: 
விளக்கம்: 1908இல் கோரல்மில் தொழிலாளர்களின் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் வ.உ.சி., சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சிலநாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினர். அவ்வுரைகளால் தூண்டப்பெற்று கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் மார்ச் 1908 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்ககால வேலை நிறுத்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
Question 26
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
நூற்பாலைத் தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்து தீவிர தேசியவாதிகளிடையே கசப்பை ஏற்படுத்தியது. வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் இவ்வெற்றியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
B
இவ்வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும்.
C
a) மற்றும் b) சரி
D
a) தவறு b) சரி
Question 26 Explanation: 
விளக்கம்: தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்து தீவிர தேசியவாதிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வங்காளத்துச் செய்திப் பத்திரிகைகள் இவ்வெற்றியை வாழ்த்தின. இவ்வெற்றி “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும். இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைத்த வெற்றி…” என அரவிந்த கோஷின் வந்தே மாதரம் புகழாரம் சூட்டியது.
Question 27
கீழ்க்கண்டவற்றுள் தமிழில் வெளியிட்ட முதல் தினசரி எது?
A
சுடர்
B
சுதேசமித்திரன்
C
தி இந்து
D
சக்ரவர்த்தினி
Question 27 Explanation: 
விளக்கம்: ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியான செய்திப்பத்திரி க்கைகளின் வளர்ச்சி தமிழகத்தில் சுதேசி இயக்கத்திற்குத் துணை நின்றது. செய்திப் பத்திரிகைய பயன்படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் G. சுப்ரமணியம். அவர் வேறு ஐந்து நபர்களுடன் இணைந்து தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவினார்.
Question 28
சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியாவர் யார்?
A
சுப்பிரமணிய சிவா
B
பாரதியார்
C
இராஜாஜி
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 28 Explanation: 
விளக்கம்: இந்திய தேசியவாதம் ஒரு புதிய வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் (1904) சுப்ரமணிய பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பாரதி சக்ரவர்த்தினி எனும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அது பெண்களின் மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிகையாகும்.
Question 29
பாரதியின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தவர் யார்?
A
சுப்பிரமணிய சிவா
B
நிவேதிதா
C
திலகர்
D
சரோஜினி
Question 29 Explanation: 
விளக்கம்: இரு நிகழ்வுகள் சுப்ரமணிய பாரதியின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தின. அயர்லாந்து நாட்டுப் பெண்மணியும் விவேகானந்தரின் சீடருமான சகோதரி நிவேதிதாவை அவர் 1905இல் சந்தித்தது முதலாவதாகும். குருமணி (ஆசிரியர்) என அவரால் குறிப்பிடப்பட்ட அப்பெண்மணி அவரின் தேசியவாதச் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தார்.
Question 30
பாரதி தமிழில் மொழியாக்கம் செய்த Tenets of New party எனும் நூலை இயற்றியவர் யார்?
A
லாலா லஜபதிராய்
B
நிவேதிதா
C
திலகர்
D
அரவிந்தகோஷ்
Question 30 Explanation: 
விளக்கம்: காங்கிரசின் சூரத் மாநாட்டிற்குப் (1907) பின்னர் திலகர் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் பற்றும் மேலும் பெருகியது. திலகரின் Tenets of New party எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார். மேலும் 1907இல் 'சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து' எனும் சிறு புத்தகமொன்றை வெளியிட்டார். பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.
Question 31
யாருடைய விடுதலை நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் ‘சுதேசி தினமாக' கொண்டாட முடிவு செய்தனர்?
A
லாலா லஜபதிராய்
B
பிபின் சந்திர பால்
C
திலகர்
D
அரவிந்தகோஷ்
Question 31 Explanation: 
விளக்கம்: ஆறுமாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திர பால் 1907 மார்ச் 9இல் விடுதலை செய்யப்பட்டார். அந்நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் ‘சுதேசி தினமாக’ திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர். அரசு நிர்வாகம் அனுமதி மறுத்ததையும் மீறி வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12இல் தேச துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.
Question 32
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகிய முக்கியமான சுதேசி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தப்பெற்றது.
B
திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும் காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன.
C
மிக முக்கியமாக சுதேசித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நூற்பாலைத் தொழிலாளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் ஆலையை விட்டு வெளியே வந்தனர்.
D
இவை அனைத்தும்
Question 32 Explanation: 
விளக்கம்: 1908 ஜுலை 7இல் வ.உ.சி. யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர். அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சி.க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப் பெற்றது. வ.உ.சி அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் காவல்துறை தண்டனையால் வரியும் வசூலிக்கப்பட்டது.
Question 33
புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றியவர்  யார்?
A
வ.வே.சுப்பிரமணியம்
B
சுப்ரமணிய சிவா
C
திருப்பூர் குமரன்
D
வாஞ்சி நாதன்
Question 33 Explanation: 
விளக்கம்: தூத்துக்குடியில் சுதேசி முயற்சிகள் அடக்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து சுதேசி இயக்கத்தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது ஆகியவை இளைஞர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கின. திருநெல்வேலி நிகழ்வுக்குப் பழி வாங்குவதற்காக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆங்கிலேயரின் அடக்குமுறை குறித்து பத்திரிகைகள் தொடர்ந்து பரப்புரை செய்தது. நிர்வாகத்திற்கு எதிராக மக்களிடையே கோபத்தை உண்டாக்குவதில் தீர்மானகரமானப் பங்கை வகித்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், ஜுன் 1911இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Question 34
ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் இந்தியர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதை குறிக்கோளாக கொண்ட அமைப்பு எது?
A
இந்தியக்கழகம்
B
பாரத நாடு
C
பாரத மாதா
D
பாரத சங்கம்
Question 34 Explanation: 
விளக்கம்: 1880இல் திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றினார். 'பாரத மாதா' என்ற புரட்சிகர தேசியவாதக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராவார். ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் இந்தியர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும். இச்செயல்பாடுகள் சுயராஜ்ஜியத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்பினர்.
Question 35
வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சி எங்கு வழங்கப்பட்டது?
A
கடலூர்
B
பாண்டிச்சேரி
C
விழுப்புரம்
D
திருச்சி
Question 35 Explanation: 
விளக்கம்: வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வ.வே. சுப்ரமணியம் பாண்டிச்சேரியில் வழங்கினார். மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்ட பின்னர் வாஞ்சிநாதன் அதே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டார். அவர் பையில் இருந்த கடிதம் வாஞ்சிநாதன் போன்ற தேசபக்த புரட்சியாளர்களுடைய ஆவேசத்தின் இழைகளைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றது.
Question 36
பின்வருவனவற்றுள் ஆஷ் படுகொலையின் பின்விளைவுகள் எவை?
A
விசாரணையின்போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவாய் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும் ஏனையோரும் நெருக்கமாக இருந்து இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ஆங்கிலஅரசு மெய்ப்பித்தது.
B
தேசியவாதக் கருத்துகளைப் பரப்புரை செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வசதியான நிலையை ஏற்படுத்தியது.
C
கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல்வேகம் குறைந்த, மந்த கதியிலான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது.
D
a) மற்றும் c)
Question 36 Explanation: 
விளக்கம்: விசாரணையின்போது ஆஷ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பாண்டிச்சேரியில் தலைமறைவாய் இருக்கும் வ.வே. சுப்ரமணியரும் ஏனையோரும் நெருக்கமாக இருந்து இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ஆங்கிலஅரசு மெய்ப்பித்தது. பாண்டிச்சேரி குழுவினர் குறித்தும் அவர்களது நடவடிக்கைகள் பற்றியும் காலனிய அரசு பெரும் சந்தேகம் கொண்டது. இத்தகையதோர் சூழ்நிலை தேசியவாதக் கருத்துகளைப் பரப்புரை செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இயலாத நிலையை ஏற்படுத்தியது. கொலையின் பின்விளைவாக காலனியரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் செயல்வேகம் குறைந்த, மந்த கதியிலான ஒரு காலகட்டத்தை எதிர்கொண்டது. 1916 இல் தன்னாட்சி இயக்கத்தையொட்டி அது ஒருவகையான புத்துயிர்ப்பைப் பெற்றது.
Question 37
காந்தியடிகள் யாருடைய அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன்  நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
w.c பானர்ஜி
C
கோகலே
D
மோதிலால் நேரு
Question 37 Explanation: 
விளக்கம்: கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரைத் தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார். இந்தியாவை விட்டு இருபது ஆண்டுகள் வெளியே இருந்த காந்தியடிகள் கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன் நாட்டின் நிலைமையோடுத் தன்னைப் பொருத்திக்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார்.
Question 38
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
B
தன்னாட்சி இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார்.
C
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது மக்களாட்சி அடிப்படையில் செயல்பட்ட அந்நாட்டு அரசுக்கு எதிராக சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறையற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் படிப்படியாக உருவாக்கினார்.
D
இவை அனைத்தும்.
Question 38 Explanation: 
விளக்கம்: அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய அவர், தன்னாட்சி இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இனவாத அடிப்படையில் செயல்பட்ட அந்நாட்டு அரசுக்கு எதிராக சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறையற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் படிப்படியாக உருவாக்கினார்.
Question 39
இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள் எங்கு மேற்கொண்டார்?
A
சம்பரான்
B
கேதா
C
அகமதாபாத்
D
இவை அனைத்தும்
Question 39 Explanation: 
விளக்கம்: சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள் மேற்கொண்டார். அவர் போராட்டத்தைத் துவங்குமுன், நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார்.தார். பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக் கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது.
Question 40
காந்தியுடன் இணைந்து சம்பரான் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள்?
A
ராஜேந்திர பிரசாத்
B
மஜாருல் ஹக்
C
ஆச்சார்ய கிருபாளினி
D
இவை அனைத்தும்
Question 40 Explanation: 
விளக்கம்: ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார். உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க போவதாகவும் கூறினார்.
Question 41
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
A
காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
B
ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை.
C
அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர்.
D
இவை அனைத்தும்.
Question 41 Explanation: 
விளக்கம்: காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை. அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.
Question 42
காந்தி  துணிஆலைப்பணியாளர்களிடம்  எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வேலை   நிறுத்தத்தில் ஈடுபடுமாறு  அறிவுரை கூறினார்?
A
30 சதவீதம்
B
23 சதவீதம்
C
50 சதவீதம்
D
35 சதவீதம்
Question 42 Explanation: 
விளக்கம்: மிகக் குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததை அடுத்து 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் காந்தியடிகளின் உண்ணாவிரதமும் இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது.
Question 43
கீழ்க்கண்டவற்றுள் கேதா போராட்டம்  தொடர்பான கூற்றுகளுள் தவறானது எது?
A
கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர்.
B
1918இல் நில வருவாய் வசூலை ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
C
அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 20 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர்.
D
ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர்.
Question 43 Explanation: 
விளக்கம்: கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர். 1918இல் நில வருவாய் வசூலை ரத்துசெய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர். அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர்சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதிபெறுவர். ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் செலுத்துமாறு துன்புறுத்தினர்.
Question 44
காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த சங்கம் எது?
A
பாரத மாதா
B
இந்தியக்கழகம்
C
இந்தியப்பணியாளர் சங்கம்
D
பாரத சங்கம்
Question 44 Explanation: 
விளக்கம்: பிளேக் நோயாலும் அதிக விலையேற்றத்தாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) உதவி கோரி அணுகினர். ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
Question 45
கேதா போராட்டத்தின்போது காந்தியடிகளுடன் இணைந்து போராடியவர்கள்?
A
ராஜேந்திர பிரசாத்
B
வல்லபாய் பட்டேல்
C
இந்துலால் நாயக்
D
b) மற்றும் c)
Question 45 Explanation: 
விளக்கம்: இளம் வழக்கறிஞரான வல்லபாய்பட்டேலும் இந்துலால் நாயக்கும் காந்தியடிகளுடன் இந்த இயக்கத்தில் இணைந்து விவசாயிகளை உறுதியாக இருக்குமாறு வேண்டினர். பயிர்களை எடுத்துக்கொள்வது, போராட்டம் நடத்தியவர்களின் சொத்துகளையும் கால்நடைகளையும் சொந்தமாக்கிக் கொள்வது, சில நேரங்களில் அவற்றில் சிலவற்றை ஏலம் விடுவது என அரசு அடக்குமுறைகளைக் கையாண்டது.
Question 46
கேதா போராட்டத்தின் விளைவுகள் எவை?
A
எந்த விவசாயியினால் பணம் செலுத்த முடியுமோ அவர்களிடமிருந்து மட்டுமே வருவாயை வசூல் செய்ய வேண்டும் அறிக்கை வெளியிட்டது.
B
இதனை அறிந்த காந்தியடிகள் போராட்டத்தை .விலக்கிக்கொண்டார்.
C
இவை இரண்டும்.
D
இவற்றில் எதுவுமில்லை
Question 46 Explanation: 
விளக்கம்: எந்த விவசாயியினால் பணம் செலுத்த முடியுமோ அவர்களிடமிருந்து மட்டுமே வருவாயை வசூல் செய்ய வேண்டும் அறிக்கை வெளியிட்டது. இதனை அறிந்த காந்தியடிகள் போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.
Question 47
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக போராட்டத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  தலைவராக இருந்தவர் யார்?
A
காமராசர்
B
சத்தியமூர்த்தி
C
பெரியார்
D
இராஜாஜி
Question 47 Explanation: 
விளக்கம்: தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது. திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது தான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1930 ஏப்ரல் 13இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28இல் முடிவடைந்தது.
Question 48
உப்புச் சத்தியாகிரக போராட்டத்தின்போது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தவர் யார்?
A
ஜெ.ஏ. தார்ன்
B
எச் .ஏ. ஆஷ்
C
வி . ஆர். கார்ல்
D
சி.ஆர். வேல்ஸ்
Question 48 Explanation: 
விளக்கம்: நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெ.ஏ. தார்ன் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களை மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உண்ண உணவும் இளைப்பாற இடமும் கொடுத்தனர். யாரெல்லாம் உணவும் உறைவிடமும் கொடுக்க தைரியத்துடன் முனைந்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய இடங்கள் வழியாக சென்ற சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
Question 49
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மாநாடு எங்கு நடந்தது?
A
பூனே
B
கராச்சி
C
லக்னோ
D
டெல்லி
Question 49 Explanation: 
விளக்கம்: காங்கிரஸின் ஒரேயொருப் பிரதிநிதியாக லண்டனில் அந்த ஆண்டு நடந்த இரண்டாவது வட்ட மேசைமாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார். உப்பைச் சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது, வன்முறையில் ஈடுபடாத அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, சாராயம் மற்றும் அந்நியத்துணிகளை விற்கும் கடைகளின் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது ஆகியவற்றுக்கு அரசு இணக்கம் தெரிவித்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைக் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்றுக்கொண்டது. பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க அரசப்பிரதிநிதி (வைசிராய்) மறுத்துவிட்டார்.
Question 50
டாக்டர் அம்பேதகர் அவர்களின் தந்தை ஆற்றிய பணி?
A
ஆசிரியர்
B
இராணுவ வீரர்
C
மருத்துவர்
D
நகராட்சி அலுவலர்
Question 50 Explanation: 
விளக்கம்: 920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். நாட்டின் மையப் பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சாதியாகக் கருதப்பட்ட மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் பிறந்த டாக்டர் அம்பேத்கர் அவரது சாதியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் திகழ்ந்தார்.
Question 51
சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அம்பேத்கார் எங்கு சென்றார்?
A
அமெரிக்கா
B
இலண்டன்
C
ஜப்பான்
D
இத்தாலி
Question 51 Explanation: 
விளக்கம்: எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912இல் பட்டதாரி ஆனார். பரோடா அரசரின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.
Question 52
1916 இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட அம்பேத்கர் சமர்ப்பித்த ஆராய்ச்சி  கட்டுரை எது?
A
இந்தியாவின் சாதிகள்
B
சாதிகளற்ற உலகம்
C
மனிதம்
D
அரசியலும் அகிலமும்
Question 52 Explanation: 
விளக்கம்: அம்பேத்கரின் அறிவாற்றல் பலரது கவனத்தை ஈர்த்தது. 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டு 'இந்தியாவின் சாதிகள்' (Castes in India) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். இந்தக்கட்டுரை பின்னர் ' அரிய இந்தியப் புத்தகம்' (Indian Antiquary) என்ற தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டது.
Question 53
பிரிட்டிஷ் அரசு எந்தக் குழுவுடன் கலந்துரையாட வருமாறு அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தது?
A
சைமன் குழு
B
சவுத்பொரோ குழு
C
பரோடா குழு
D
சாகா குழு
Question 53 Explanation: 
விளக்கம்: இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரிடையே திறமையுடையோரைத் தேடி வந்த பிரிட்டிஷ் அரசு இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது. இந்தக் கலந்துரையாடல்களின்போதுதான் அம்பேத்கர் முதன்முறையாக தனித் தொகுதிகள் பற்றி பேசினார். தீண்டாமைகொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
Question 54
அம்பேத்கர் தனது செயல்பாடுகளுக்காக தொடங்கிய அமைப்பு எது?
A
மூக் நாயக்
B
பஹிஷ்கிரித் ஹிடாகரினி
C
மஹர்
D
திக்தகினி
Question 54 Explanation: 
விளக்கம்: அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார். மூக் நாயக் (வாய்பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும் பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை (தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார். பம்பாய் சட்டப்பேரவையின் உறுப்பினராக அவர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன்குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார்.
Question 55
தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர  அம்பேத்கர்  தொடங்கிய அமைப்பு எது?
A
மூக் நாயக்
B
பஹிஷ்கிரித் ஹிடாகரினி
C
மஹர் சத்தியாகிரகம்
D
மஹத் சத்தியாகிரகம்
Question 55 Explanation: 
விளக்கம்: அவர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன்குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார். ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காலனி ஆதிக்க ஆட்சியின் அதிகாரிகளைக் குறிவைத்து அவரது நேரடித் தாக்குதல்கள் இருந்தன.
Question 56
தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக அறிவித்தவர் யார்?
A
பெரியார்
B
அம்பேத்கர்
C
நேரு
D
காந்தியடிகள்
Question 56 Explanation: 
விளக்கம்: தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் அறிவித்தார். தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. ஆலோசனைகள், கூட்டங்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதன் விளைவாகக் காந்தியடிகளுடன் சிறைச்சாலையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
Question 57
1937 இல் அம்பேத்கர் தொடங்கிய கட்சி எது?
A
பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பு
B
தொழிலாளர் கட்சி
C
சுதந்திர தொழிலாளர் கட்சி
D
சுதந்திர பட்டியல் இனத்தவர் கட்சி
Question 57 Explanation: 
விளக்கம்: அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937-லும் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை 1942-லும் அவர் தொடங்கினார். அவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்கரின் சேவைகளைப் பயன்படுத்தியது.
Question 58
1942ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்தியர்?
A
ஜவஹர்லால் நேரு
B
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
C
வல்லபாய் பட்டேல்
D
அம்பேத்கர்
Question 58 Explanation: 
விளக்கம்: 1942ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப்பிறகு அரசப்பிரதிநிதியின் (வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம்பிடித்தார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுதந்திர இந்தியாவின் அரசியல்சாசன வரைவுக் குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.
Question 59
பகத்சிங் பிறந்த நாள் மற்றும் ஆண்டு எது?
A
1907 செப்டம்பர் 28
B
1907 செப்டம்பர் 26
C
1906 செப்டம்பர் 23
D
1906 செப்டம்பர் 28
Question 59 Explanation: 
விளக்கம்: கிஷன்சிங் (தகப்பனார்), வித்யாவதி கவுர் (தாயார்) ஆகியோரின் மகனாக பகத்சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன்வாலா என்ற இடத்தில் 1907 செப்டம்பர் 28இல் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு தாராளவாதியாக இருந்தார். அவருடைய குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக விளங்கினர்.
Question 60
பகத்சிங் அவரது இளமைக்காலம் முதல்  இணைந்திருந்த அமைப்பு/அமைப்புகள்  எது/எவை?
A
நவ்ஜவான் பாரத் சபா
B
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்
C
பாரத மாதா
D
a) மற்றும் b)
Question 60 Explanation: 
விளக்கம்: பகத்சிங்கின் 14 ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அவர் தனது இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Question 61
சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு எது?
A
நவ்ஜவான் பாரத் சபா
B
ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன்
C
பாரத மாதா
D
மஹத் மூக்
Question 61 Explanation: 
விளக்கம்: செப்டம்பர் 1928இல் அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவ்வமைப்புத் திருத்தியமைக்கப்பட்டது. 1917இல் ரஷ்யாவில் நடந்தேறிய அக்டோபர் புரட்சியும் சோசலிசச் சித்தாந்தங்களும் இந்தப் புரட்சியாளர்களிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. சந்திரசேகர ஆசாத், சிவராம் ராஜகுரு, சுகதேவ் தாபர் ஆகியோருடன் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷனின் தலைவர்களில் ஒருவராக பகத்சிங் விளங்கினார்.
Question 62
பகத்சிங் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நாள் மற்றும் ஆண்டு?
A
1929 ஏப்ரல் 8
B
1928 ஏப்ரல் 8
C
1929 ஏப்ரல் 12
D
1928 ஏப்ரல் 10
Question 62 Explanation: 
விளக்கம்: பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும்போதே நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஏப்ரல் 8இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நிகழ்வுதான். அந்தக் குண்டுகள் எவரையும் கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்ட செயலாகச் செயல்பூர்வமான ஒரு நடவடிக்கையாகப் புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.
Question 63
பகத்சிங் சட்டமன்றத்தில் குண்டு வீசிய அன்று அறிமுகப்படுத்துவதாக இருந்த மசோதா எது தொடர்பானது?
A
வேளாண்மை
B
கல்வி
C
செய்தித்தாள்
D
தொழிற்தகராறுகள்
Question 63 Explanation: 
விளக்கம்: தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு சட்டத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அதற்கான தொழிற்தகராறுகள் மசோதாவை அறிமுகப்படுத்தும் நாளை அவர்கள் இதற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
Question 64
சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணை  எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இரண்டாவது லாகூர் சதி வழக்கு
B
லாகூர் சதி வழக்கு
C
கான்பூர் சதிவழக்கு
D
மீரட் சதி வழக்கு
Question 64 Explanation: 
விளக்கம்: ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர். சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர் (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்றுஅறியப்படுகிறது).
Question 65
சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்ட  புரட்சியாளர்?
A
ராஜகுரு
B
சுகதேவ்
C
பகத்சிங்
D
ஜதீந்திரநாத் தாஸ்
Question 65 Explanation: 
விளக்கம்: சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார். லாகூர் சதி வழக்கின் விசாரணைகள் முடியும் வரை குண்டு வீச்சு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில்தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Question 66
”புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத்துப்பாக்கியால் சுடுவதோ அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும்"  என்று  கூறியவர்?
A
ராஜகுரு
B
சுகதேவ்
C
பகத்சிங்
D
ஜதீந்திரநாத் தாஸ்
Question 66 Explanation: 
விளக்கம்: பகத்சிங்கையும் அவருடன் இருந்த தேசபக்தர்களையும் புரட்சிகர தேசியவாதிகள் எனச் சில குறிப்புகள் விவரிக்கின்றன. அது ஒரு தவறான கருதுகோள் ஆகும். வரலாற்றுப் புகழ்பெற்ற பகத்சிங், பிற புரட்சிகர தேசியவாதிகளிடமிருந்து அவருடைய குழுவினர் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளார். ”புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத்துப்பாக்கியால் சுடுவதோ அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும். சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும். உழைப்பாளிகள், சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள் ஆவர். இந்தப் புரட்சியின் பலிபீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும் எந்தத் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல” என்று விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
Question 67
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட  இடம்?
A
லாகூர்
B
கான்பூர்
C
மீரட்
D
சிட்டகாங்
Question 67 Explanation: 
விளக்கம்: லாகூர் சிறைச்சாலையில் 1931 மார்ச் 23 அன்று அதிகாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். தங்கள் இறுதிமூச்சு அடங்கும் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் ‘புரட்சி ஓங்குக’ என்று முழங்கியவாறு அவர்கள் தூக்குமரக் கொட்டடியை எதிர்கொண்டனர். தேசியத்தின் புரட்சிகரமான அணியினரான இந்தப் புரட்சியாளர்களின் ஆகச் சிறந்த தியாகம் இல்லாமல் விடுதலைப்போராட்டத்தின் வரலாறு முழுமை அடையாது.
Question 68
இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்த  பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
A
இராஜாஜி
B
வினோபா பாவே
C
காந்தியடிகள்
D
இராஜேந்திரப் பிரசாத்
Question 68 Explanation: 
விளக்கம்: காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
Question 69
1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை பலப்படுத்தியவர்?
A
சுபாஷ் சந்திர போஸ்
B
R.H. நிப்ளெட்
C
மோகன் சிங்
D
ஷா நவாஸ்
Question 69 Explanation: 
விளக்கம்: ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க்கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர். ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க்கைதிகள் உருவானதில் மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 45,000 என்ற அளவை எட்டியது. இவர்களில் இருந்து 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை மோகன் சிங் பலப்படுத்தினார்.
Question 70
சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகள் யார்?
A
முத்து லட்சுமி ரெட்டி
B
லட்சுமி
C
உஷா மேத்தா
D
கல்பனா தத்
Question 70 Explanation: 
விளக்கம்: போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்ததோடு பெண்களுக்கான ஒரு படைப்பிரிவையும் ஏற்படுத்தினார். மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார். விளக்கம்: போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய தேசிய ராணுவத்தில் இணைத்ததோடு பெண்களுக்கான ஒரு படைப்பிரிவையும் ஏற்படுத்தினார். மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார்.
Question 71
காந்தியடிகளைத் “தேசத்தின் தந்தையே” என்று அழைத்தவர் யார்?
A
நேரு
B
காமராசர்
C
சுபாஷ் சந்திர போஸ்
D
அம்பேத்கர்
Question 71 Explanation: 
விளக்கம்: சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார். காந்தியடிகளைத் “தேசத்தின் தந்தையே” என்று அழைத்த அவர் இந்தியாவின் கடைசி விடுதலைப் போருக்கு அவர்தம் ஆசியைக் கோரினார்.
Question 72
இம்பாலை நோக்கிய இந்திய தேசிய இராணுவத்தினை வழி நடத்தியவர் யார்?
A
ஷா நவாஸ்
B
மோகன் சிங்
C
மோகன் சிங்
D
R.H. நிப்ளெட்
Question 72 Explanation: 
விளக்கம்: இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது. இது அச்சு நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944 இன் பிற்பகுதியில் நடந்தேறியது. இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து 1945 இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது. கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடிருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக்குற்றம் சுமத்தப்பட்டது.
Question 73
இராஜாஜி திட்டம் எந்த ஆண்டு முன்மொழியப்பட்டது?
A
1944
B
1945
C
1946
D
1943
Question 73 Explanation: 
விளக்கம்: இராஜாஜி திட்டம் (C.R. Formula) 1944 ஏப்ரலில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் பொருட்டு இராஜாஜி ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார்.
Question 74
கீழ்க்கண்டவற்றுள் இராஜாஜி திட்டத்தின் அம்சங்கள் எவை?
A
போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக்கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
B
ஒருவேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
C
எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மைகொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
D
இவை அனைத்தும்
Question 74 Explanation: 
விளக்கம்: இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும். காந்தியடிகள் ஜூலை, 1944 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் ’இராஜாஜி திட்டத்தை’ அடிப்படையாகக் கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
Question 75
வேவல் திட்தத்தின்போது காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவிவகித்தவர் யார்
A
சர்தார் பட்டேல்
B
இராஜாஜி
C
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
D
ஜவஹர்லால் நேரு
Question 75 Explanation: 
விளக்கம்: வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார் . ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், அச்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவிவகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிம்லா மாநாட்டிற்கு முகாந்திரம் அமைக்கும் பொருட்டு மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப் பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லிம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.
Question 76
ஆங்கில அரசு பாரதியின் படைப்புகளுக்கு தடை விதித்த ஆண்டு?
A
1909
B
1919
C
1907
D
1908
Question 76 Explanation: 
விளக்கம்: 1908 ஆம் ஆண்டு வ.உ.சி க்கு எதிராக ஆங்கில அரசு தொடர்ந்த வழக்கில் வ.உ.சிக்கு ஆதரவாக சாட்சி வழங்கினார். இதனால் ஆங்கில அரசு இவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது. எனவே பாரதியார் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த புதுவைக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து தினசரி வார இதழ், மற்றும் மாத இதழ்களில் தனது படைப்பினை தொடர்ந்து வெளியிட்டார். ஆனால் ஆங்கில அரசு பாரதியின் படைப்புகளுக்கு 1909 ஆம் ஆண்டு தடை விதித்தது.
Question 77
1918 ஆம் ஆண்டு பாரதியார் எங்கு கைது செய்யப்பட்டார்?
A
தஞ்சாவூர்
B
கடலூர்
C
திருச்சி
D
நாகப்பட்டினம்
Question 77 Explanation: 
விளக்கம்: முதல் உலகப்போருக்கு பிறகு நவம்பர் 1918 ஆம் ஆண்டு பாரதியார் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் மூன்று வார காவலுக்கு பின்பு விடுவிக்கப்பட்டார். பல்வேறு இன்னல்கள் மற்றும் வறுமையை அனுபவித்த பிறகு பாரதி சென்னையில் இருந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக மீண்டும் பணியாற்றினார். செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு காலமானார்.
Question 78
பெரியார் காங்கிரசில் இணைந்த ஆண்டு எது?
A
1919
B
1917
C
1918
D
1920
Question 78 Explanation: 
விளக்கம்: பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் செல்வ வளமிக்க இந்து குடும்பத்தில் பிறந்தார். தமது 13 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். தமது 19 ஆம் வயதில் இல்லற வாழ்வை துறந்தார். துறவறம் பூண்டு காவி உடை தரித்து பல புனித இடங்களுக்கு சென்று வந்தார். இவர் காசி சென்றிருந்தபோது பார்ப்பனர்கள் மற்ற இனத்தவர்களை இழிவுபடுத்துவதை நேரடியாகக்கண்டு அதனைக் கடுமையாக கண்டித்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு திரும்பி தமது கொள்கைகளை பரப்புவதற்காக 1919 இல் காங்கிரசில் இணைந்தார்.
Question 79
பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
A
1920
B
1921
C
1922
D
1923
Question 79 Explanation: 
விளக்கம்: 1921 ஆம் ஆண்டு பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923 ஆண்டு சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
Question 80
வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
காமராசர்
B
பெரியார்
C
அயோத்தி தாசப்பண்டிதர்
D
அம்பேத்கர்
Question 80 Explanation: 
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடினார். திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச்சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது. இதன் காரணமாக பெரியாருக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
Question 81
பெரியார் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அரசுப்பணியில் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தைக்கொண்டு வந்தார்?
A
கடலூர்
B
காஞ்சிபுரம்
C
சேலம்
D
திருச்சி
Question 81 Explanation: 
விளக்கம்: காங்கிரஸ் நிதி உதவியுடன் சேரன் மாதேவி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட குருகுலப்பள்ளியை பெரியார் பார்வையிட்டார். அப்பள்ளியில் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனித்தனியே உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இதனைக்கண்டு கொதித்தெழுந்த பெரியார் அத்திட்டத்தைக் கண்டித்ததோடு தனது சென்னை மாநில காங்கிரஸ் பதவியையும் துறந்தார்.
Question 82
பெரியார் எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்?
A
1925
B
1927
C
1924
D
1921
Question 82 Explanation: 
விளக்கம்: தனது கொள்கைகளை பரப்பவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
Question 83
அம்பேத்கருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?
A
1990
B
1995
C
1985
D
2000
Question 83 Explanation: 
விளக்கம்: இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றினார். இவரது சீரிய தொண்டினைப்பாராட்டி இவருக்கு 1990 ஆம் ஆண்டு மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மகவு என்னும் ஊரில் பிறந்தார். 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச்சங்கம் என்ற பஹிஷ்கிரித் ஹிதகரினி சபாவை ஏற்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்களுக்கு இணையாக சமுதாயத்திலும் அரசியலிலும் உயர்த்துவதே இச்சங்கத்தின் நோக்கம் ஆகும்.
Question 84
வ.உ.சி யை அரசியலில் ஈடுபட வைத்த நிகழ்வு எது?
A
ஒத்துழையாமை இயக்கம்
B
வங்கப்பிரிவினை
C
சூரத் மாநாடு
D
சைமன் குழு எதிர்ப்பு
Question 84 Explanation: 
விளக்கம்: செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்ட சிதம்பரம்பிள்ளை செப்டம்பர் 5 1872 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார்.திருநெல்வேலியில் வழக்குரைஞராக பணியாற்றினார். வ.உ.சி வியாபார சங்கம் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளை ஊக்குவித்தார். சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம், மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளை தூத்துக்குடியில் தோற்றுவித்தார். பின்னர் சுதேசி கப்பல் நிறுவனத்தை தோற்றுவித்து தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். 1905 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை வ.உ.சி யை அரசியலில் ஈடுபட வைத்தது.
Question 85
வ.உ.சிக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது?
A
45
B
35
C
40
D
10
Question 85 Explanation: 
விளக்கம்: தூத்துக்குடி அருகில் பவள ஆலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டது. 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. வ.உ.சி பாலகங்காதர திலகரை ஆதரித்தார்.
Question 86
1908 - 1922 க்கு இடைப்பட்ட காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டவர் யார்?
A
வ.உ.சி
B
பாரதியார்
C
சுப்ரமணிய சிவா
D
பெரியார்
Question 86 Explanation: 
விளக்கம்: சுப்ரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த விடுதலைப்போராட்ட வீரராகவும் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். ஆங்கிலேயர்க்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 1908 - 1922 க்கு இடைப்பட்ட காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது தொழு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்கில அரசு இவருக்காகவே தொழு நோயாளிகள் இரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று சட்டம் ஒன்றைக்கொண்டு வந்தது.
Question 87
இந்தி மொழியை கட்டாய பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A
குமார சாமி
B
ஓமந்தூர் இராமசாமி
C
இராஜாஜி
D
பனகல் அரசர்
Question 87 Explanation: 
விளக்கம்: 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண முதலமைச்சரானார். தனது ஆட்சிக்காலத்தில் மது விலக்கை அமுல்படுத்தினார். ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்த பல்வேறு சட்டங்களைக்கொண்டு வந்தார். இந்தி மொழியை கட்டாய பாடமாக பள்ளிகளில் அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு தோன்றியது. பெரியார் ஈ.வே. ராமசாமி தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது.
Question 88
இராஜாஜி 1939 ஆம் ஆண்டு தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்யக்காரணம்?
A
இந்தி எதிர்ப்பு
B
குலக்கல்வி எதிர்ப்பு
C
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியது.
D
இவை அனைத்தும்
Question 88 Explanation: 
விளக்கம்: இரண்டாவது உலகப்போரின்போது ஆங்கில அரசு இந்தியத்தலைவர்களை கலந்தாலோசிக்காமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தியதை கண்டித்து 1939 ஆம் ஆண்டு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக பொறுப்பேற்றார். மீண்டும் தமிழக முதலமைச்சராக 1952 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
Question 89
இராஜாஜி இரண்டாவது முறையாக தனது முதலமைச்சர் பதவியை எந்த ஆண்டு இராஜினாமா செய்தார்?
A
1953
B
1954
C
1955
D
1952
Question 89 Explanation: 
விளக்கம்: குலக்கல்வி திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இதற்கு காமராசர் மற்றும் பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இராஜாஜி முதலமைச்சர் பதவியை 1954 ஆம் ஆண்டு இராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறினார். சுதந்திரக்கட்சியை தோற்றுவித்து இளம் இந்தியா என்ற பத்திரிகையை நடத்தினார்.
Question 90
கீழ்க்கண்டவற்றுள் இராஜாஜி எழுதிய உரைநடை நூல்கள் எவை?
A
சக்கரவர்த்தி திருமகன்
B
வியாசர் விருந்து
C
கீதை மற்றும் உபநிடதம்
D
a) மற்றும் b)
Question 90 Explanation: 
விளக்கம்: சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து(மகாபாரதம்) போன்றவை இவர் எழுதிய உரைநடை நூல்களாகும். இவர் கீதை மற்றும் உபநிடதங்களுக்கு உரை எழுதியுள்ளார். 1955 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. இவர் டிசம்பர் 25, 1972 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய அரசியல் தந்திர செயல்களால் சாணக்கியர் எனப்போற்றப்படுகிறார்.
Question 91
காமராசர் கீழ்க்கண்ட எந்த போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் சுதந்திரப்போராட்ட  இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்த்திக்கொண்டார்?
A
ஒத்துழையாமை இயக்கம்
B
வங்கப்பிரிவினை
C
வைக்கம் சத்தியாகிரகம்
D
சைமன் குழு எதிர்ப்பு
Question 91 Explanation: 
விளக்கம்: கர்ம வீரர் என்று போற்றப்பட்ட காமராசர் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருது நகரில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழக விடுதலைப்போராட்ட வீரர்களில் தலை சிறந்தவராக போற்றப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு வைக்கம் சத்தியாகிரகபோராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
Question 92
காமராசர் எந்தப்போராட்டத்தில் பங்கு கொண்டதினால் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்?
A
உப்பு சத்தியாக்கிரகம்
B
வங்கப்பிரிவினை
C
வைக்கம் சத்தியாகிரகம்
D
சைமன் குழு எதிர்ப்பு
Question 92 Explanation: 
விளக்கம்: 1929 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் முழுநேர உறுப்பினர் ஆனார். 1930 ஆம் ஆண்டு காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கியபோது தமிழகத்தில் இராஜாஜியுடன் சேர்ந்து வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் காந்தி இர்வின் ஒப்பந்தப்படி விடுவிக்கப்பட்டார்.
Question 93
காமராசர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
A
கடலூர்
B
அமராவதி
C
அலிப்பூர்
D
வேலூர்
Question 93 Explanation: 
விளக்கம்: 1940 ஆம் ஆண்டு தனது சத்தியாகிரக திட்டங்களுக்கு காந்தியிடம் அனுமதி பெற வார்தா பயணமானார். ஆனால் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தபோது சத்திய மூர்த்தியின் வீட்டில் இந்திய தேசியக்கொடியை இயற்றினார்.
Question 94
காமராசர் தமிழக முதல்வராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார்?
A
9
B
10
C
11
D
13
Question 94 Explanation: 
விளக்கம்: காமராசர் தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். மதிய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளை திறந்தது, இலவச கல்வி வழங்குதல் வேளாண்மையை மேம்படுத்துதல், கால்வாய்களை வெட்டுதல், அணைகளைக்கட்டுதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Question 95
லால் பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமராக பதவி ஏற்ற ஆண்டு?
A
1965
B
1966
C
1964
D
1963
Question 95 Explanation: 
விளக்கம்: காமராசர் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் அரசை உருவாக்குபவர் என போற்றப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரியை 1964 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமராகவும், அவரது மறைவிற்கு பிறகு இந்திரா காந்தியை 1966 ஆம் ஆண்டில் இந்தியப்பிரதமராகவும் உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். காமராசர் திட்டம் என்ற திட்டத்தின்படி கட்சிப்பணிக்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
Question 96
கீழ்க்கண்டவற்றுள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் எவை?
A
சுயமரியாதை இயக்கம் மதம், சாதி, அரசியல், மற்றும் சமுதாயத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தது.
B
மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தையும் ஒழிக்கப்பாடுபட்டது.
C
பெண் கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத்திருமணம் மற்றும் குழந்தைத்திருமண ஒழிப்பு முறை ஆகியவற்றிற்காக குரலெழுப்பியது.
D
இவை அனைத்தும்
Question 96 Explanation: 
விளக்கம்: சுயமரியாதை இயக்கம் மதம், சாதி, அரசியல், மற்றும் சமுதாயத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தது. பெண் கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத்திருமணம் மற்றும் குழந்தைத்திருமண ஒழிப்பு முறை ஆகியவற்றிற்காக குரலெழுப்பியது. மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தையும் ஒழிக்கப்பாடுபட்டது.
Question 97
நீதிக்கட்சி எந்த ஆண்டு திராவிடர்கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
A
1937
B
1942
C
1944
D
1943
Question 97 Explanation: 
விளக்கம்: 1937 ஆண்டு நடை பெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியை தழுவியது. இதனால் நீதிக்கட்சியின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று. 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Question 98
பெரியார் மணியம்மை திருமணம் நடைபெற்ற ஆண்டு?
A
1948
B
1946
C
1947
D
1949
Question 98 Explanation: 
விளக்கம்: 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்ய அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மூலம் பெரியாருக்கு மிகவும் நெருக்கமானார். 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் மணியம்மை திருமணம் திராவிட கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக்கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கினார்.
Question 99
சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தவர்?
A
அண்ணா
B
இராஜாஜி
C
கலைஞர்
D
குமாரசாமி
Question 99 Explanation: 
விளக்கம்: 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் எனப்பெயர் மாற்றம் செய்தார். புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச்செயலகம் எனப்பெயர் மாற்றம் செய்தார். அதே தேதியில் சத்ய மேவ ஜெயதே என்ற அரசு குறிக்கோளை வாய்மையே வெல்லும் என்று மாற்றி அறிவித்தார். இது போன்று ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற வட மொழி வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தினார்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!