Online Test

History Model Test 21 in Tamil

History Model Test Questions 21 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 21 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மௌரிய நிர்வாகத்தில் ‘கண்டக சோதனா’ என்பது எதைக் குறிப்பிடுகிறது?
A
குற்றவியல் நீதிமன்றம்
B
காவல்துறை
C
வருவாய்த்துறை
D
நகர நிர்வாகக்குழு
Question 2
சிறு கற்காலத்தில் மேற்கு கடற்கரை, சென்னை மற்றும் இலங்கை ஆகிய கடற்பகுதிகளில் காணப்பட்ட வளர்ச்சிகள் சுட்டிக் காட்டுவது
A
வணிகத் தொழில்
B
வேளாண்மைத் தொழில்
C
நாடோடி செயல்பாடுகள்
D
மீன்பிடிக்கும் தொழில்
Question 3
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாக பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
  • பட்டியல் 1                                                        பட்டியல் 2
  • அ. சுவாமி தயானந்த சரஸ்வதி     1. பாம்பே அசோஸிஷேன்
  • ஆ. தாதாபாய் நௌரோஜி                 2. யாசகம் அல்ல போராட்டம்
  • இ. எஸ்.என்.பானர்ஜி                          3. வேதங்களுக்குத் திரும்புக
  • ஈ. பாலகங்காதர திலகர்                   4. இந்திய அசோஸியேஷன்
A
3 1 4 2
B
4 3 1 1
C
2 4 1 3
D
4 2 3 1
Question 4
பொருத்துக.
  • அ. Dr.அம்பேத்கர்                     1. பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை
  • ஆ. ஜோதிராவ் பூலே              2. சுயமரியாதை இயக்கம்
  • இ. நாராயண குரு                    3. நாராயண பரிபாலன யோகம்
  • ஈ. ஈ.வே.ரா. பெரியார்             4. சத்ய சோதக் சமாஜம்
A
3 1 4 2
B
4 3 1 1
C
2 4 1 3
D
1 4 3 2
Question 5
பொருத்துக:
  • அ. சுரேந்திரநாத் பானர்ஜி                 1. இந்தியாவின் முதுபெரும் மனிதர்
  • ஆ. ஜி. சுப்பிரமணிய அய்யர்            2. இந்தியாவின் பர்க்
  • இ. தாதாபாய் நௌரோஜி                  3. காந்தியின் அரசியல் குரு
  • ஈ. கோபால கிருஷ்ண கோகலே    4. சென்னை மகாஜன சபை
A
3 1 4 2
B
4 3 1 1
C
2 4 1 3
D
1 4 3 2
Question 6
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
 
  1. அ. தங்க கழுத்துப்பட்டை                             1. நான்காம் நிலைத் தொழில்              நடவடிக்கைகளில் பணியாளர்கள்     ஈடுபட்டுள்ளவர்கள்
  2. ஆ. வெள்ளைக் கழுத்துப்                              2. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் பட்டை பணியாளர்கள்                                  ஈடுபட்டுள்ளவர்கள்
  3. இ. சிவப்புக் கழுத்துப்                                     3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில்  பட்டை பணியாளர்கள்                                  ஈடுபட்டுள்ளவர்கள்
  4. ஈ. நீலக் கழுத்துப்                                            4. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் பட்டை பணியாளர்கள்                            ஈடுபட்டுள்ளவர்கள்
A
3 1 4 2
B
4 3 1 1
C
2 4 1 3
D
1 4 3 2
Question 7
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. நீதிக்கட்சி                1. பெரியார் ஈ.வே.ராமசாமி
  • ஆ. தேவதாசி முறை 2. டாக்டர் எஸ். தருமாம்பாள்
  • இ. வைக்கம் வீரர்                    3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • ஈ. வீரத்தமிழன்னை  4. தியாகராய செட்டியார்
A
4 3 1 2
B
4 3 1 1
C
2 4 1 3
D
1 4 3 2
Question 8
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. சிம்ம விஷ்ணு                                           1. வேள்விக்குடிச் செப்பேடு
  • ஆ. நெடுஞ்ச்சையன் பராந்தகன்                 2. உதயேந்திரப் பட்டயம்
  • இ. இரண்டாம் நந்திவர்மன்             3. உதய சுந்தர மங்கலப் பட்டயம்
  • ஈ. நரசிம்மவர்மன்                                          4. காசக்குடி பட்டயம்
A
4 3 1 2
B
2 1 4 3
C
2 4 1 3
D
1 4 3 2
Question 9
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. சங்கம வம்சம்                   1. திருமலை
  • ஆ. சாளுவ வம்சம்     2. வீரநரசிம்மன்
  • இ. துளுவ வம்சம்                   3. ஹரிஹரன்
  • ஈ. ஆரவீடு வம்சம்                  4. நரசிம்மன்
A
4 3 1 2
B
2 1 4 3
C
3 2 1 4
D
1 4 3 2
Question 10
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
  • அ. அமரசிம்மன்                      1. சீன தூதுவர்
  • ஆ. வராக பட்டர்                      2. ஆயூர் வேதம்
  • இ. தன்வந்திரி              3. அகராதி
  • ஈ. பாகியான்                  4. பூமி, சூரியன்
A
4 3 1 2
B
2 1 4 3
C
3 2 1 4
D
3 4 2 1
Question 11
கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது? காவிய காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டார்கள்
  • அ. தசகிராமி     1. 100 கிராமங்கள்
  • ஆ. லிம்சதிபா   2. 10 கிராமங்கள்
  • இ. சதகிராமி     3. 20 கிராமங்கள்
  • ஈ. அதிபதி                      4. 1000 கிராமங்கள்
A
4 3 1 2
B
2 3 1 4
C
3 2 1 4
D
3 4 2 1
Question 12
பொருத்துக.
  • அ. வங்காள நில குத்தகைச் சட்டம்         1. வெல்லெசுலி பிரபு
  • ஆ. பொதுப் பணிப்படைத் திட்டம்             2. டல்ஹௌசி பிரபு
  • இ. துணைப்படைத் திட்டம்             3. பெண்டிங் பிரபு
  • ஈ. நாடு இழக்கும் கொள்கை                        4. கானிங் பிரபு
A
4 3 1 2
B
2 3 1 4
C
3 2 1 4
D
3 4 1 2
Question 13
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. ஜூனாகான்                        1. ஷெர்ஷா
  • ஆ. காஸிமாலிக்                     2. ஜகாங்கீர்
  • இ. பரீத்கான்                 3. முகமது பின் துக்ளக்
  • ஈ. சலீம்                          4. கியாசுதீன்
A
4 3 1 2
B
2 3 1 4
C
3 2 1 4
D
3 4 1 2
Question 14
பட்டியல் 1 ஐ பட்டியல்2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • அ. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு           1. ஸ்ரீநாராயண குரு
  • ஆ. சுத்தி இயக்கம்                                                      2. இராமலிங்க வள்ளலார்
  • இ. ஜீவ காருண்யம்                                        3. விவேகானந்தர்
  • ஈ. தர்ம பரிபாலன யோகம்                                      4. சுவாமி தயானந்த சரஸ்வதி
A
4 3 1 2
B
2 3 1 4
C
3 4 2 1
D
3 4 1 2
Question 15
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினைப் பயன்படுத்தி உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • அ. வைசாலி                 1. அஜாதசத்ரு
  • ஆ. இராஜகிரஹம்      2. கனிஷ்கர்
  • இ. பாடலிபுத்திரம்       3. காலஅசோகர்
  • ஈ. காஷ்மீர்                    4. அசோகர்
A
4 3 1 2
B
2 3 1 4
C
3 1 4 2
D
3 4 1 2
Question 16
பின்வருவனவற்றைப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • அ. சங்கரலிங்கம்                                1. 26 ஜனவரி 1965
  • ஆ. பக்தவச்சலம்                                2. 27 ஜூலை 1956
  • இ. லால் பகதூர் சாஸ்திரி                3. 15 ஜனவரி 1968
  • ஈ. தமிழ்நாடு                             4. 2 அக்சோபர் 1963
A
4 3 1 2
B
2 3 1 4
C
2 4 1 3
D
3 4 1 2
Question 17
கீழே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையின் பெயர்களையும், ஆசிரியர்களையும் பொருத்தி, கீழே கொடுக்கப்படுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
  • அ. லோகமான்ய திலகர்                   1. வந்தே மாதரம்
  • ஆ. ஸ்ரீ அரவிந்த கோஷ்                     2. காமன்வீல்
  • இ. ஜி.சுப்ரமண்ய அய்யர்                  3. மராத்தா
  • ஈ. டாக்டர் அன்னிபெசண்ட் 4. தி ஹிந்து
A
3 1 4 2
B
2 3 1 4
C
2 4 1 3
D
3 4 1 2
Question 18
வரிசை 1 உடன் வரிசை 2 டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
  • வரிசை 1                                                வரிசை 2
  • அ. நேரு அறிக்கை                  1. மாநில தன்னாட்சி
  • ஆ. மாண்ட்-போர்டு சட்டம்  2. முழு சுதந்திரம்
  • இ, இந்திய அரசு சட்டம் 1935            3. மாநிலங்களில் இரட்டை ஆட்சி
  • ஈ. லாகூர் காங்கிரஸ்                   4. தன்னாட்சியுரிமை குடியேற்ற நிலை நாடு
A
3 1 4 2
B
4 3 1 2
C
2 4 1 3
D
3 4 1 2
Question 19
வரிசை 1 –உடன் வரிசை 2 டினைப் பொருத்தி வரிசைகளுக்கு, கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                                வரிசை 2
  • அ. அன்னிபெசண்ட்                1. இளம் இந்தியா
  • ஆ. ஜி.சுப்பிரமணிய ஐயர்                 2. புது இந்தியா
  • இ. காந்தி                                                3. ஸ்வராஜ்ய
  • ஈ. டி.பிரகாசம்                           4. இந்து
A
3 1 4 2
B
4 3 1 2
C
2 4 1 3
D
3 4 1 2
Question 20
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. ஈ.வே.ரா. பெரியார்                        1. நியூ லேம்பஸ் ஃபார் ஓல்டு
  • ஆ. அரபிந்த கோஷ்                2. ஆன் எக்கோ ப்ரன் அந்தமான்
  • இ. தயானந்த சரஸ்வதி                    3. பேமிலி ப்ளானிங்
  • ஈ. வி.டி. சவார்கர்                                4.  சத்தியார்த்த பிரகாஷ்
A
3 1 4 2
B
4 3 1 2
C
2 4 1 3
D
3 4 1 2
Question 21
பொருத்துக:
  • அ. காருகர்                     1. தையல்காரர்
  • ஆ. காரோடர்     2. அரண்மனைக் காவலர்
  • இ, யவனர்                     3. நெசவுத் தொழிலாளர்
  • ஈ. துன்னக்காரர்           4. சாணை பிடிப்பவர்
A
3 1 4 2
B
4 3 1 2
C
2 4 1 3
D
1 2 3 4
Question 22
வரிசை 1 உடன் வரிசை 2 சினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விசையினைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                                வரிசை 2
  • அ. முதலாம் நரசிம்மவர்மன்         1. குடவரைக் கோவில், மாமல்லபுரம்
  • ஆ. செம்பியன் மகாதேவி                2. அகத்தீஸ்வரர் கோயில், அனங்காபூர்
  • இ. லோகமகாதேவி               3. விருபாக்சி கோயில், பட்டடக்கல்
  • ஈ. முதலாம் குலோத்துங்கன்         4. சிவன் கோயில், சிதம்பரம்
A
2 3 4 1
B
4 1 2 3
C
2 4 1 3
D
1 2 3 4
Question 23
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் எந்த தொகுப்பு முகலாயர் மற்றும் அவர்களின் கல்லறைகளைச் சரியாக பொருத்தி தருகிறது.
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. பாபர்              1. காபூல்
  • ஆ. ஹுமாயூன்            2. டெல்லி
  • இ. அக்பர்                        3. சிக்கந்தரா
  • ஈ. ஜஹாங்கீர்   4. லாகூர்
  • உ. ஷாஜகான்   5. ஆக்ரா
  • ஊ. ஔரங்கசீப்            6. ஔரங்காபாத்
A
1 3 2 5 6 4
B
1 2 3 4 5 6
C
2 3 4 5 6 1
D
2 4 3 1 5 6
Question 24
பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் 2 ல் உள்ள அவர்களுடைய படைப்புகளோடு பொருத்தி சரியான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினை பயன்படுத்தி தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. ஆரியபட்டர்                        1. பிருகத் சம்ஹிதா
  • ஆ. பிரம்மகுப்தர்                     2. ஹஸ்தயயூர்வேதம்
  • இ, வராகமிகிரர்                        3. சூரிய சித்தாந்தம்
  • ஈ. பாஸ்கரா                   4. கண்தகடியகா
  • உ. பல்கப்யா                 5. சித்தாந்த சிரோமணி
A
2 3 4 1 5
B
3 1 5 4 2
C
5 1 3 2 4
D
3 4 1 5 2
Question 25
கால வரிசைப்படுத்துக:
  1. 23-ம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
  2. 1806, ஜூலை 10-ம் நாள் முதல் மற்றும் 23-ம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
  3. அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.
  4. கர்னல் பான்கோர்ட் என்னும் இராணுவ அதிகாரி இக்காலத்துக்கு முதல் பலியானார்.
A
1, 3, 2, 4
B
3, 2, 4, 1
C
2, 4, 1, 3
D
4, 1, 3, 2
Question 26
கி.பி. 1893ல் இவர் கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் கொண்டாடுவதன் மூலம் தேசிய உணர்வை தூண்டினார்.
  • கீழ்க்கண்டவற்றுள் தேசிய உணர்வை தூண்டியவர் யார்?
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
லாலாலஜபதிராவ்
D
தாதாபாய் நவரோஜி
Question 27
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
போர்ச்சுகல் மன்னர் - ஐந்தாம் ஜார்ஜ்
B
போர்ச்சுக்கீசிய மாலுமி - கொலம்பஸ்
C
போர்ச்சுகீசிய ஆளுநர் - இராபர்ட் கிளைவ்
D
போர்ச்சுகீசிய வாணிப தலைமையிடம் – கோவா
Question 28
இன்றைய கர்நாடக இசை தோன்றிய இடம்
A
சேரர் காலம்
B
சோழர் காலம்
C
பாண்டியர் காலம்
D
களப்பிரர் காலம்
Question 29
  • கூற்று(A): ஹரப்பா மக்கள் பருத்தியை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்தனர்.
  • காரணம் (R):      ஹரப்பா மக்கள் முதன்முதலில் பருத்தி பயிரிட்டனர்.
A
(A) மற்றும் (R) சரியானவை
B
(A) சரி மற்றும் (R) தவறு
C
(A) தவறு (R) சரி
D
(A) மற்றும் (R) தவறானவை
Question 30
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தவில்லை?
  1. சாரதா சட்டம் - பெண் குழந்தை குறைந்தபட்ச திருமண வயது
  2. விதவை மறுமணம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  3. காந்தி                           - ஹரிஜன் செய்தி ஏடு
  4. அம்பேத்கார் - ஆத்மிய சபை
A
1
B
2
C
3
D
4
Question 31
பூரண சுதந்திர கிடைக்கும் வரை செய் அல்லது செத்துமடி என்றும் பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் செத்துமடிய வேண்டும். இதை தவிர எதிலும் நான் நிறைவடைய மாட்டேன் என்று கூறியவர்
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
காந்திஜி
C
ஜவஹர்லால் நேரு
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 32
கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியாக பொருந்தவில்லை?
A
1857இந்திய பெருங்கலகம் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினைக்கு இட்டு சென்றது.
B
இந்திய ஆட்சி கிழக்கிந்திய வணிகக் குழுவிடமிருந்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
C
கானிங் பிரபு முதல் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
D
பேரரசின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னா கார்ட்டா’ என்று அழைக்கப்படுகிறது.
Question 33
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A):           அசோகர் கி.மு. 260-ல் கலிங்கப்போர் முடிந்தவுடன் புத்த மதத்துக்கு மாறினார்.
  • காரணம்(R): பாப்ரா கல்வெட்டு செய்தி மூலம் கலிங்கப் போர் முடிந்து 2 ½ வருட காலம் கழித்தே அசோகர் புத்த மதத்துக்கு மாறினார்.
A
(A) மற்றும் (R) தவறானவை
B
(A) தவறு மற்றும் (R) சரி
C
(A) சரி மற்றும் (R) தவறு
D
(A) மற்றும் (R) சரியானவை
Question 34
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை கால வாரியாக முறைப்படுத்துக.
  1. ஆட்டோமன் துருக்கியர், காண்ஸ்டாண்டிநோபின் நகரை கைப்பற்றியது.
  2. பார்த்தலோமிய டயஸ், முதன்முதலாக ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை சென்று திரும்புதல்.
  3. தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்றது.
  4. வாஸ்கோடகாமா, முதன்முதலாக இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தது.
A
1, 2, 3, 4
B
1, 2, 4, 3
C
1, 4, 3, 2
D
2, 1, 3, 4
Question 35
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
  • அ. அபுல்பாசல்                         1. ஷாஜகான் நாமா
  • ஆ. இனியட்கான்                                 2. மகாபாரதம் மொழி பெயர்த்தல்
  • இ.அப்துல் ஷமிட் லகோரி               3. பாதுஷா நாஆ
  • ஈ. அபுல் பாசி                            4.. அக்பர் நாமா
A
B
C
D
Question 36
வரிசைப்படுத்தி பொருத்தமானதை தேர்ந்தெடுத்து எழுதுக.
  • வேதகாலத்துக்கு பிறகு ஜாதி முறை கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
  1. வைசியர்கள்
  2. பிராமணர்கள்
  3. சத்திரியர்கள்
  4. சூத்திரர்கள்
A
4, 1, 2, 3
B
2, 1, 4, 3
C
2, 3, 1, 4
D
3, 2, 1, 4
Question 37
கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்துக.
  1. சிவஸ்கந்தவர்மன்
  2. முதலாம் நரசிம்மவர்மன்
  3. விஜயாலய சோழன்
  4. முதலாம் பராந்தகன்
A
2, 1, 4, 3
B
1, 2, 4, 3
C
2, 3, 4, 1
D
1, 4, 3, 2
Question 38
கீழ்க்கண்டவற்றில் எது சரி?
  • கானிங் பிரபுவின் பொதுப்பணி பாடச் சட்டப்படி வங்கப் படை வீரர்கள் இந்தியாவில் மட்டும் போரில் ஈடுபட வேண்டும்.
  • கானிங் பிரபுவின் பொதுப்பணி படைச் சட்டப்படி வங்கப்படை வீரர்கள் இந்தியாவிலும் தேவை ஏற்படின் கடல் கடந்தும் போரில் ஈடுபட வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1,2 ம் சரி
D
1 ம் இல்லை, 2 ம் இல்லை
Question 39
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்.
  2. பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது.
இவற்றில் எது/.அவை சரி?
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1,2 ம் சரி
D
1 ம் இல்லை, 2 ம் இல்லை
Question 40
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A):           1806-ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
  • காரணம்(R): இந்தியாவை வணிகக் குழுவின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுதலை பெற வைப்பதே அவர்களின் நோக்கமாகும்.
இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 41
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
A
ஆத்மிய சபை - சுவாமி தயானந்த சரஸ்வதி
B
வங்காள முதல் வார இதழ் – சத்யார்த்த பிரகாஷ்
C
இளம் வங்காள இயக்கம் - வித்யாசாகர்
D
பிரார்த்தனை சமாஜம் - ஆத்மாராம் பாண்டுரங்
Question 42
இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
A
லிட்டன் பிரபு
B
கர்சன் பிரபு
C
கானிங் பிரபு
D
ரிப்பன் பிரபு
Question 43
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A):           இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1906ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
  • காரணம்(R):       வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே , கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 44
கால வரிசைப்படி எழுதுக.
  1. சாம வேதம்
  2. ரிக் வேதம்
  3. யஜூர் வேதம்
  4. அதர்வண வேதம்
A
1, 3, 2 மற்றும் 4
B
3, 4, 1 மற்றும் 2
C
4, 1, 2 மற்றும் 3
D
2, 3, 1 மற்றும் 4
Question 45
கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக.
  1. புதிய கற்காலம்
  2. இடைக் கற்காலம்
  3. செப்புக் காலம்
  4. பழைய கற்காலம்
A
1, 3, 2 மற்றும் 4
B
4, 2, 1 மற்றும் 3
C
4, 1, 2 மற்றும் 3
D
2, 3, 1 மற்றும் 4
Question 46
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
சுயராஜ்யக் கட்சி - சி.ஆர்.தாஸ்
B
பார்வர்டு பிளாக் - சுபாஷ் சந்திரபோஸ்
C
முஸ்லீம் லீக் கட்சி – நவாப் சலிமுல்லாகான்
D
நீதிக்கட்சி - பெரியார் ஈ.வே.ரா.
Question 47
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
A
டெல்லி தர்பார் - எஸ்.என்.பானர்ஜி
B
அபிநவ பாரத் சங்கம் - சவார்க்கர் சகோதரர்கள்
C
இந்திய சங்கம் - தாதாபாய் நௌரோஜி
D
இந்திய பணியாளர் சங்கம் - டபுள்யூ.சி. பானர்ஜி
Question 48
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
A
புதிய இராணுவ விதிமுறைகள் -வேலூர் கலகம்
B
சர் ஜான் கிரடாக் - படைத் தளபதி
C
வில்லியம் பெண்டிங் பிரபு - சென்னை ஆளுநர்
D
4ம் படை ப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது – கலோனல் போர்ப்ஸ்
Question 49
எந்த மன்னனால் காஞ்சிக் கலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
A
இராஜசிம்மன்
B
இரண்டாம் மகேந்திரன்
C
முதலாம் நரசிம்மன்
D
மூன்றாம் நந்திவர்மன்
Question 50
‘அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?
A
சிவாஜி
B
கிருஷ்ணதேவராயர்
C
அக்பர்
D
ஹர்ஷர்
Question 51
1917 சம்பரான் சத்தியாகிரகத்திற்கு காந்தியுடன் செல்லாதவர் யார்?
A
சர்தார் படேல்
B
ராஜேந்திர பிரசாத்
C
ஜே.பி. கிருபாளணி
D
மகாதேவ் தேசாய்
Question 52
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A
நியாய தர்ஷனா - கௌதம் ரிஷி
B
சாங்கிய தர்ஷனா - கபிலா
C
யோக தர்ஷனா - பதஞ்சலி
D
உத்தர் மிமான்ச தர்ஷனா - ஜெய்மினி
Question 53
இந்தியாவில் தன்னட்சிக் குழு தொடங்கப்பட்ட நாள்
A
செப்டம்பர் 25, 1915
B
செப்டம்பர் 15, 1916
C
அக்டோபர் 27, 1916
D
டிசம்பர் 30, 1916
Question 54
1938 ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் அமைந்த தேசிய திட்டக்குழுவின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
பி.சி. ஜோஷி
C
ஆச்சார்யா நரேந்திர தேவ்
D
ஜெய்பிரகாஷ் நாராயண்
Question 55
‘தேசபக்தன்’ எனும் தமிழ் பத்திரிக்கையைத் தொடங்கியவர் யார்?
A
U.V. சுவாமிநாதன்
B
திரு.வி. கல்யாண சுந்தரனார்
C
இராமலிங்க அடிகளார்
D
பாரதியார்
Question 56
மெக்காலே பிரபு எதனுடன் தொடர்புடையவர்?
A
இராணுவச் சீர்திருத்தம்
B
சதி ஒழிப்பு
C
சட்டத்தொகுப்பு
D
நிரந்தர நிலவரித் திட்டம்
Question 57
1920 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
மோதிலால் நேரு
C
சுரேந்திரநாத் பானர்ஜி
D
லாலாலஜபதி ராய்
Question 58
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
A
சம்பரான் - பஞ்சாப்
B
கேதா - உத்திரப்பிரதேசம்
C
பர்தோலி - குஜராத்
D
தண்டி - பீகார்
Question 59
1949ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்துக் கொண்டவர் யார்?
A
விஜயலட்சுமி பண்டிட்
B
அம்மு சுவாமிநாதன்
C
சரோஜினி நாயுடு
D
அன்னி பெசண்ட்
Question 60
கீழ்க்கண்டவர்களுள் ‘தமிழ்நாட்டின் தாதாபாய்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
A
பாரதியார்
B
வ.உ. சிதம்பரம்
C
சி. விஜயராகவாச்சாரியார்
D
திருப்பூர் குமரன்
Question 61
கீழ்க்கண்டவற்றுள் அரேபியன் சிந்து படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது?
A
ஜவாமியுல் ஹிகாயத்
B
சாச்சா நாமா
C
தாஜ்-உல்-மஜீர்
D
தாரிக்-இ-தௌதி
Question 62
முதல் தராயின் போர் நடைபெற்ற ஆண்டு
A
1175
B
1179
C
1191
D
1192
Question 63
ஜனதா கட்சியை நிறுவியவர் யார்?
A
கன்ஷிராம்
B
அம்பேத்கார்
C
ஜெயபிரகாஷ் நாராயணன்
D
கோகலே
Question 64
தியோசாபிக்கல் சொசைட்டியை தோற்றுவித்தவர் யார்?
A
டாக்டர் ருக்மணி தேவி
B
டாக்டர் முத்துலட்சுமி
C
டாக்டர் அன்னிபெசண்ட்
D
டாக்டர் ருக்மணி அருண்டேல்
Question 65
கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?
A
கானிங் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும்புரட்சி ஏற்பட்டது
B
ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது
C
லிட்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது
D
கர்சன் பிரபு ஆட்சிக் காலத்தில் முதல் உலகப் போர் ஏற்பட்டது
Question 66
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
A
பஞ்சாபின் சிங்கம் - லோகமான்யர்
B
சுதேசி இயக்கம் - A.O. ஹீயூம்
C
பாரதமாதா சங்கம் - நீலகண்ட பிரமச்சாரி
D
தன்னாட்சி இயக்கம் - W.C. பானர்ஜி
Question 67
1857 கலம் தொடர்பான நிகழ்வுகளில் கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
A
1857 கலகத்தின் போது இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார் – இரண்டாம் பகதூர் ஷா
B
கான்பூரை மீண்டும் கைப்பற்றினார் – பிரிட்டிஷ் தளபதி ஜான்சன்
C
கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார் – இராணி லட்சுமி பாய்
D
அயோத்தி பேகம்களின் படைத் தலைவர்களில் ஒருவர் – தாந்தியா தோபே
Question 68
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மிகச் சரியாக பொருந்துகிறது?
A
சாரநாத் - புத்தர் பிறந்த இடம்
B
லும்பினி - புத்தர் ஞானம் பெற்ற இடம்
C
புத்தகயா - முதல் போதனை
D
குஷிநகர் - புத்தர் இறந்த இடம்
Question 69
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கவும்.
  • கூற்று (A):          லெமூரியா என்ற வார்த்தையை முதலில் உபயோகித்தவர் ஸ்லேட்டர்.
  • காரணம் (R):      வரலாற்றுக்கு முந்தைய கால தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்ட கண்டத்தில் (லெமூரியா) வாழ்ந்தனர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A
கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான காரணமும் சரி
B
கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் தவறு
C
கூற்று சரி – காரணம் தவறு
D
கூற்று தவறு- காரணம் சரி
Question 70
ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன் மூலம் நாம் அறிகிறோம்?
A
ரிக் வேதம்
B
யஜூர் வேதம்
C
சாம வேதம்
D
அதர்வண வேதம்
Question 71
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): சிந்து சமவெளி நாகரீக சுடுமட்பாண்டங்களில் ஆண் உருவத்தை விட பெண் உருவங்கள் அதிகமாக அமைந்துள்ளன.
  • காரணம் (R):      ஹரப்பா காலத்தில் பெண்கள் மேம்பட்ட நிலையில் இருந்தனர்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 72
கீழ்க்கொடுக்கப்படு உள்ளவைகளை படித்து, சரியான விடையை தேர்வு செய்க.
  1. புதிய கற்காலத்திற்கு பிறகு செம்பு காலம் துவங்கியது செம்பும், பித்தளையும் , உபயோகப்படுத்தப்பட்டது.
  2. புதிய தொழில் நுட்பமான “உருக்கும் முறை” ஒரு முக்கிய வளர்ச்சியாக அமைந்தது.
A
1 மற்றும் 2 சரியான கூற்று
B
1சரியான கூற்று மற்றும் 2 தவறான கூற்று
C
1 மற்றும் 2 தவறான கூற்றுகள்
D
1 தவறான கூற்று மற்றும் 2 சரியான கூற்று
Question 73
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
A
ஆத்மிய சபை-ஆல்காட்
B
இனம் வங்காள இயக்கம் – இராஜாராம் மோகன் ராய்
C
நிரங்காரி இயக்கம் – ஹென்றி விவியன் டெரோசா
D
காதர் கட்சி - லாலா ஹர்தயான்
Question 74
பின்வருவனவற்றுள் சரியானது எது/அவை?
  1. சித்தார்தர் என்பது புத்தரின் உண்மை பெயர்
  2. புத்தரின் மனைவியின் பெயர் மகாமாயா
  3. புத்தர் கௌதம கோத்ரம் பிரிவை சார்ந்தவர்
  4. புத்தரின் தாயாரின் பெயர் யசோதா
A
1, 2, 4
B
3, 4
C
1, 3
D
2, 4
Question 75
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A):           வழிபாட்டின் மூன்று வடிவங்களான சங்கரஷானா, பிரதியுமனா மற்றும் அனிருத்தா ஆகியவை குப்தர்கள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்தது.
  • காரணம் (R):      குப்தர்கள் காலத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் பிரபலமடைந்து வைணவம் ஆதிக்கம் செலுத்தியது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 76
இடைக்காலத் தமிழகத்தில் தமது பாதங்களில் சூலக்குறிச் சூடுபோட்டுக் கொள்ளும் வழக்கமுடைய குழுவினர்
A
குறிசொல்வோர்
B
தேவரடியார்
C
பூசாரிகள்
D
கோயிற்காப்போன்
Question 77
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எவை?
  1. வி.டி.சாவக்கர்                                    - அபிநவ் பாரத்சங்கம்
  2. மேடம் காமா                                     - வந்தே மாதரம்
  3. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா                  -  இந்து சுயராஜ்யம்
  4. ஹர்தயாள்                                                   - இந்திய சுயாட்சி சங்கம்
A
1 மற்றும் 3
B
1 மற்றும் 4
C
1 மற்றும் 4
D
1 மற்றும் 2
Question 78
கீழே குறிப்பிட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவர்?
  1. லட்சுமி சுவாமிநாதன்
  2. அருணா ஆசப் அலி
  3. மேடம் காமா
  4. உஷாமேத்தா
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
1 மற்றும் 2
Question 79
பின்வருபவர்களில் 1942-ல் தொடங்கப்பட்ட “சுதந்திரத்தின் ஓசை” என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி நிலையத்தில் பணியாற்றிய முதன்மையானவர்கள் எவர்?
  1. உஷாமேத்தா
  2. ராம்மனோகர் லோகியா
  3. கல்பனா தத்தா
  4. அகுணா ஆசப் அலி
A
1, 2 மற்றும் 4
B
2,3, மற்றும் 4
C
1 மற்றும் 2
D
3 மற்றும் 4
Question 80
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொண்டு உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று (A):          1928- சர்தார் வல்லபாய் பட்டேலின் நேரடி தலைமையில் நடத்தப்பட்ட பர்தோலி சத்தியாகிரகம் பர்தோலி உழவர்களுக்கு ஒரு வெற்றி மற்றும் அரசு அதிகாரத்திற்கு ஒரு அடி.
  • காரணம் (R):      ஆளுநர் வெஸ்லி வில்லியம் ஒரு விசாரணை குழுவை அமைத்தார். அதன் அறிக்கை உழவர்கள் நிலையினை ஆதரித்தது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 81
பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி0இர்வின் உடன்படிக்கையோடு தொடர்பில்லாதது?
  1. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களை திரும்பப் பெற ஒப்புக் கொண்டது.
  2. சிறையிலிருக்கும் சத்தியாகிரகிகளை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது.
  3. காங்கிரஸ் மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் கல்ந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது.
  4. காந்தி சட்டமறுப்பு இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டார்.
A
2 மற்றும் 3
B
1 மட்டும்
C
2 மற்றும் 4
D
3 மட்டும்
Question 82
கீழ்க்காண்பனவற்றிலிருந்து, லாலாலஜபதிராய் தடியடிபட்டு இறப்பதற்கு காரணமாக இருந்த சரியான நிகழ்வைச் சுட்டிக் காட்டவும்.
A
ஒத்துழையாமை இயக்கம்
B
சைமன் தூதுக்குழுவிற்கு எதிரான போராட்டம்
C
சட்டமறுப்பு இயக்கம்
D
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
Question 83
“தனிநபர் சத்தியாகிரகம்” குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அது அக்டோபர் 1940-ம் அண்டு தொடங்கப்பட்டது.
  2. கிரிப்ஸ் குழுவின் தோல்வியே இவ்வியக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடி காரணம்.
  3. இவ்வியக்கத்தை வினோபா பாவே தலைமையேற்று நடத்தினார்.
  4. இவ்வியக்கத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து சத்தியாகிரகிகள் டெல்லி சென்றனர்.
A
1, 2 மற்றும் 3 சரியானவை
B
1, 3 மற்றும் 4 சரியானவை
C
2, 3 மற்றும் 4 சரியானவை
D
2 மற்றும் 3 சரியானவை
Question 84
பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தெர்வு செய்க.
  • கூற்று (A):          விபின் சந்திரப் பால் அவர்களின் விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்ட வாழ்த்துக் கூட்டங்களே வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கைது செய்வதற்கு உடனடி தருணமாக அமைந்தது.
  • காரணம் (R): வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 85
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்ளவும் சரியானது எது/எவை?
  1. சர் சார்லஸ் உட்குழுவின் பரிந்துரைகள் - 1854
  2. ஹண்டர் குழு - 1884
  3. பல்கலைக் கழக சட்டம் - 1904
  4. சென்னை பல்கலைக் கழகம் - 1835
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 4
C
2 மற்றும் 1
D
4 மற்றும் 3
Question 86
பாபரைப் பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அவர் தந்தை வழியில் தைமூரின் நான்காவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் பதினைந்தாவது சந்ததியும் ஆவார்.
  2. அவர் தந்தை வழியில் தைமூரின் ஐந்தாவது சந்ததியும் தாய்வழியில் செங்கிஸ்கானின் பதினான்காவது சந்ததியும் ஆவார்.
  3. அவர் தந்தை வழியில் தைமூரின் பதினைந்தாவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் நான்காவது சந்ததியும் பாபர் ஆவார்.
  4. அவருடைய குடும்பம் துருக்கிய இனத்தின் சகாதி வகுப்பைச் சார்ந்தது.
A
1 மற்றும் 2 சரி
B
2 மற்றும் 4 சரி
C
3 மற்றூ 4 சரி
D
1 மற்றும் 4 சரி
Question 87
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவதை சுட்டிக் காண்பிக்கவும்.
A
முதலாம் தீர்தங்காரின் சின்னம் பாம்பு
B
மகாவீரரின் சின்னம் சிங்கம்
C
முதலாம் தீர்தங்கரர் மகாவீரர்
D
இரண்டாம் ஜைனமத தீர்தங்காரின் சின்னம் கோன்ச்
Question 88
வேலூர் சலகண்டேசுவரர் கோயிலைக் கட்டியவர்
A
சின்ன பொம்மு நாயக்கர்
B
விசுநாத நாயக்கர்
C
கிருஷ்ண தேவராயர்
D
திருமலை நாயக்கரி
Question 89
சோழர் காலத்தில் ‘வளஞ்சியம்’ என்ற சொல் குறிக்கும் பொருள்
A
கிராம சபையினர்
B
வணிகக்குழு
C
வரிவசூல் செய்வோர்
D
கலைஞர்கள்
Question 90
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
A
1950 - இந்தியா குடியரசானது
B
1946 - இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது
C
1945 - ஆட்லியின் அறிவிப்பு
D
1935 - மாநில சுயாட்சி
Question 91
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?
A
1887 கூட்டம்
B
1895 கூட்டம்
C
1898 கூட்டம்
D
1920 கூட்டம்
Question 92
இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
லீ பிரபு
B
ரிப்பன் பிரபு
C
மாக்கலே பிரபு
D
அட்லீ பிரபு
Question 93
இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. இவர் 1736 இல் பிறந்தார்.
  2. இவரது இயற்பெயர் கடாகர் சட்டோபாத்யா.
  3. இவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்தார்.
  4. இவரது சீடர் சுவாமி விவேகானந்தர்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
2 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 94
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
A
மெட்ராஸ் மகாசன சபை - 1881
B
பாம்பே பிரசிடென்சி அசோஷியேசன் – 1771
C
பாம்பே அசோஷியேசன் – 1785
D
பூனா சர்வஜனிக் சபை - 1775
Question 95
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?
  1. பத்மாசனி அம்மாள் - கதர் இயக்கம்
  2. அஞ்சலை அம்மாள் - நீல் சிலை சத்தியா கிரகம்
  3. மஞ்சுபாசினி - ஒத்துழையாமையியக்கம்
  4. ராதாபாய் சுப்பராயன் – இரண்டாவது வட்ட மேசை மாநாடு
A
1, 2, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
1, 2 மற்றும் 4
Question 96
கீழ்க்காண்பனவற்றுள் தாதாபாய் நௌரோஜியுடன் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A
கிழக்கு இந்தியக் கழகம்
B
இந்தியாவின் குரல்
C
இந்தியாவின் முதுபெரும் தலைவர்
D
கேசரி
Question 97
கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
A
பேஷ்வா – பிரதம மந்திரி
B
சர்-ஹ-நூபத்-சேனாதிபதி
C
பண்டிட்ராவ் – சமயதுறை அமைச்சர்
D
நியாய தீட்சகர் – நிதி அமைச்சர்
Question 98
குப்த அரசர்களில் இரண்டாம் சந்திரகுப்தர் முதன்முதலாக வெள்ளி நாணயங்களை ________ அரசர்கள் பாணியில் வெளியிட்டார்.
A
இந்தோ-கிரேக்க அரசர்கள்
B
உஜ்ஜயின் அரசர் விக்ரமன்
C
மேற்கத்திய சாக சத்ரப்பாக்கள்
D
அகஸ்டஸ் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள்
Question 99
பின்வரும் கூற்றை ஆராய்க:
  • காந்தியடிகள்
  1. முதல் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்.
  2. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
  3. முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்
  4. அனைத்து மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
A
1 மட்டும் சரியானது
B
2 மட்டும் சரியானது
C
4 மட்டும் சரியானது
D
3 மட்டும் சரியானது
Question 100
கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக.
  1. தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
  2. கிரிப்ஸ் தூதுக் குழு
  3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  4. வேவல் திட்டம்
A
1, 2, 3, 4
B
2, 1, 3, 4
C
4, 3, 2, 1
D
4, 2, 3, 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!