HistoryOnline Test

History Model Test 5 in Tamil

History Model Test Questions 5 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 5 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சர்.சையத் அகமதுகானின் புகழுக்கு காரணம்
A
அறிவியல் கழகம் அமைத்தது
B
உருதுவியல் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்தது
C
அலிகார் இயக்கம்
D
ஆங்கில கல்வியை ஆதரித்தார்
Question 2
1942 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
A
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B
இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல்
C
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது
D
காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடை விதித்தது
Question 3
1948ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
A
மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை ஆளுநரானது
B
நேருவின் நடுநிசி உரை
C
ராஜாஜி தலைமை ஆளுநர் பதவி ஏற்றது
D
காந்திஜி படுகொலை செய்யப்பட்டது
Question 4
1947ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
A
மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைசியராக நியமனம் செய்யப்பட்டது
B
இந்திய சுதந்திர சட்டம் இயற்றப்பட்டது
C
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது
D
ஜவஹர்லால் நேருவின் நடுநிசி உரை
Question 5
சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படக் காரணம்
A
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றது
B
பர்தோலி இயக்கத்தில் பங்கேற்றது
C
நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்றது
D
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது
Question 6
ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
A
ஒரு ஆங்கிலேயர்
B
ஒரு காபினட் அமைச்சர்
C
தொழிற்கட்சியின் தீவிரவாத உறுப்பினர்
D
இந்திய தேசிய இயக்கத்தின் முழு ஆதரவாளர்
Question 7
திப்பு சுல்தான் ஒரு கண்டுபிடிப்பாளர் என அழைக்கப்படுவதற்கு காரணம்
A
புதிய நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார்
B
புதிய நாணய முறையை புகுத்தினார்
C
புதிய எடை மற்றும் அளவை முறைகளை அறிமுகப்படுத்தினார்
D
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுதந்திர மரம் ஒன்றினை நட்டார்
Question 8
ஹைதர் அலி வரலாற்றில் புகழ் வாய்ந்தவராகக் கருதப்படுவதற்கான காரணம் அவர் ஒரு
A
திறம் வாய்ந்த படைத்தலைவர்
B
சாதுரியமான அரசியல் தந்திரி
C
ஆங்கிலேயர்களின் தீவிர எதிரி
D
சிறந்த ஆட்சியாளர்
Question 9
ரிப்பன் பிரபுவின் மிகப்பெரிய சாதனை
A
தலசுயாட்சி
B
இல்பர்ட் மசோதா
C
ஹண்டர் குழு
D
நிதி சீர்திருத்தங்கள்
Question 10
ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என அழைக்கப்பட காரணம்
A
மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்
B
உருவ வழிபாட்டை எதிர்த்தார்
C
சதிக்கு எதிராக போராடினார்
D
ஆங்கில கல்விக்கு ஆதரவாக போராடினார்
Question 11
டல்ஹௌசி பிரபு வரலாற்றில் குறிப்பிடப்படுவதற்கு காரணம்
A
இராணுவ சீர்திருத்தங்கள்
B
சமுதாய சீர்திருத்தங்கள்
C
கல்வி சீர்திருத்தங்கள்
D
வாரிசு இழப்பு கொள்கை
Question 12
சிப்பாய் கலகம் வெடித்தற்கான உடனடிக் காரணம்
A
ஆங்கிலேயரின் ஆணவ அடக்குமுறை
B
கொழுப்பு தடவப்பட்ட குண்டுகள்
C
பொருளதார அதிருப்தி
D
சமய காரணங்கள்
Question 13
1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலக காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
A
டல்ஹௌசி பிரபு
B
கானிங் பிரபு
C
கர்சன் பிரபு
D
காரன் வாலிஸ் பிரபு
Question 14
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. வாரிசில்லா கொள்கை               1. கர்சன்
  • ஆ. வங்காளப் பிரிவினை                 2. கிளைவ்
  • இ. இரட்டையாட்சி                             3. டல்ஹௌசி
  • ஈ. சமூக சீர்திருத்தம்             4. பெண்ட்டிங்
A
2 3 1 4
B
3 2 1 4
C
3 1 2 4
D
2 1 3 4
Question 15
கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத இணையை தேர்ந்தெடு:
A
தண்டியாத்திரை - 1930
B
சௌரி சௌரா - 1922
C
ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919
D
திலகர் மரணம் - 1922
Question 16
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
A
பாளையங்கோட்டை
B
சிவகாசி
C
கயத்தாறு
D
மதுரை
Question 17
ரௌலட் சட்டம் கறுப்பு மசோதா எனப்பட்டது. ஏனெனில்
A
காங்கிரசை அது திருப்திபடுத்தவில்லை
B
ஆங்கிலேயர்களால் அது நிறைவேற்றப்பெற்றது
C
எவ்வித விசாரணையுமின்றி ஒரு மனிதனை கைது செய்யும் அதிகாரத்தை அது அரசுக்கு வழங்கியது
D
இந்தியர்களுக்கு எதிராக அது நிறைவேற்றப்பட்டது
Question 18
இந்திய வரலாற்றில் கிலாபத் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதன் காரணம்
A
காந்தியின் தலைமை
B
ஒத்துழையாமை இயக்கம்
C
சட்டமறுப்பு இயக்கம்
D
அரசியல் கிளர்ச்சியில் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமை
Question 19
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1 (நிகழ்ச்சி)                                      பட்டியல் 2 (வருடம்)
  • அ. பெருத்த இடைவெளி வருடம்                                     1. 1950
  • ஆ. தொழிற் கொள்கை தீர்மானம்                                     2. 1920
  • இ. திட்டக்குழு ஏற்படுத்துதல்                                            3. 1969
  • ஈ. 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்தல்                  4. 1956
A
1 2 4 3
B
2 4 1 3
C
4 2 3 1
D
4 3 2 1
Question 20
பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்
A
காபூல் படையெடுப்பு
B
முதலாம் பானிப்பட்போர்
C
கண்வாப்போர்
D
காக்ராப் போர்
Question 21
ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்
A
படையெடுப்புகள்
B
இராணுவ சீர்திருத்தங்கள்
C
ஆட்சிமுறை கொள்கை
D
சமயக் கொள்கை
Question 22
மன்சப்தாரி முறை தனிப்பட்ட மற்றும் குறிப்பிட்டதக்க முறையாக கருதப்படுகிறது
A
மன்சப்தார்கள் பணத்தை ஊதியமாகப் பெற்றனர்
B
இந்தியாவைத் தவிர வேறெங்கும் இம்முறை காணப்படவில்லை
C
இம்முறைக்கு பரம்பரை உரிமை கிடையாது
D
இம்முறை ஒரு புதிய இராணுவ முறையாகும்
Question 23
மலை எலி என அழைக்கப்பட்டவர்
A
சிவாஜி
B
பைராம்கான்
C
ஹெமு
D
இல்ட்டுமிஷ்
Question 24
அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கிய விளைவு
A
கிரேக்கப் பேரரசின் விரிவாக்கம்
B
கிரேக்க குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுதல்
C
மௌரியப் பேரரசின் தோற்றம்
D
இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நேரடி தொடர்பு
Question 25
சாதவாகன சமுதாயத்தின் குறிப்பிட்ட அம்சம்
A
கடல் கடந்த வாணிபம்
B
சுட்ட செங்கற்களின் உபயோகம்
C
தந்தை வழி சமுதாயம்
D
தாய்மார்களின் உயர்வான அந்தஸ்து
Question 26
‘ரத்னாவளி’ என்ற நூலை எழுதியவர்
A
இட்சிங்
B
ஹர்ஷர்
C
வியாசா
D
சந்திரகுப்தர்
Question 27
வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர்?
A
இரண்டாம் புலிகேசி
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
இரண்டாம் நரசிம்மவர்மன்
D
முதலாம் நரசிம்மவர்மன்
Question 28
நரசிம்ம வர்ம பல்லவர் நினைவு கூறப்படுவது முக்கியமாக அமைவது அவரது
A
பல்வேறு படையெடுப்புகள்
B
யுவாங் சுவாங்கின் விஜயம்
C
கடல் கடந்த படையெடுப்புகள்
D
மாமல்லபுரநகர் நிர்மானிக்கப்படுதல்
Question 29
கௌதமி புத்திர சதகர்ணி எந்த வம்சத்தை சார்ந்தவர்
A
சாளுக்கிய
B
மௌரிய
C
சாதவாகனா
D
சோழர்
Question 30
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்
A
கல்யாணி
B
உறையூர்
C
திருச்சி
D
வேங்கி
Question 31
ஹரிஹாரும் புக்கரும் வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகின்றனர். ஏனெனில்
A
சங்கம வம்சத்தை தோற்றுவித்தனர்
B
ஹோய்சாளர்களை தோற்கடித்தனர்
C
முஸ்லீம்களை விரட்டியடித்தனர்
D
காவேரி வரை பேரரசை பரப்பினர்
Question 32
விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்
A
வலிமையற்ற மைய அரசு
B
போர்ச்சுக்கீசியரின் வருகை
C
மாநில ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கு
D
தலைக்கோட்டை போர்
Question 33
துக்ளக் கட்டிடக் கலையின் குறிப்பிடத்தக்க அம்சம்
A
அழகிய வளைவுகள்
B
பளிங்கின் உபயோகம்
C
உயரமான கோபுரங்கள்
D
சரிவான சுவர்கள்
Question 34
மொகஞ்சதாரோவின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்
A
நகரமைப்பு திட்டம்
B
பெரிய குளியலறை
C
பெரிய களஞ்சியம்
D
களிமண் முத்திரைகள்
Question 35
ஹரப்பா நாகரீகம் முடியுற காரணம்
A
மொகஞ்சதாரோவில் ஏற்பட்ட வெள்ளம்
B
சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றம்
C
அருகாமையிலிருந்த பாலைவனத்தின் விரிவாக்கம்
D
ஆரியப் படையெடுப்பு
Question 36
விநய பீடகம் முக்கியமாக குறிப்பிடுவது
A
சங்கத்தின் வளர்ச்சியை
B
புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை
C
பண்டைய இந்திய வரலாற்றின் சில அம்சங்களை
D
துறவிகளுக்கான சட்டதிட்டங்களையும் விதி முறைகளையும்
Question 37
அசோகர், மகா அசோகர் என அழைக்கப்படுவதற்கான காரணம்
A
கலிஙப்போர்
B
பரந்தப் பேரரசு
C
அமைதி மற்றும் வளமான ஆட்சி
D
அவரது தரும முறை
Question 38
ஸ்தல ஸ்தாபன அரசாங்கத்தின் வளர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர்
A
ரிப்பன் பிரபு
B
மேயோ பிரபு
C
லிட்டன் பிரபு
D
நார்த் புருக் பிரபு
Question 39
இந்தியாவில் தியோசோஃபிகல் சொசைட்டியை நிறுவியவர்
A
மேடம் ஹெச்.பி. பிலாவட்ஸ்கி
B
கர்னல் எம்.எஸ்.ஆல்காட் & மேடம் பிலாவட்ஸ்கி
C
திருமதி அன்னிபெசண்ட்
D
திலகர்
Question 40
டாக்டர் இராஜேந்திர பிரசாத் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற வருடம்
A
26 ஜனவரி, 1952
B
26 ஜனவரி, 1950
C
26 ஜனவரி, 1951
D
15 ஆகஸ்ட், 1947
Question 41
இந்தியாவுடன் 1965ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்கு பிறகு, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்
A
ஐயூப் கான்
B
சல்ஃபிகார் அலி புட்டோ
C
முஜிபர் ரஹ்மான்
D
யாகியா கான்
Question 42
1940 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் அறிக்கையை வெளியிட்ட வைஸ்ராய்
A
லின்லித்கௌ
B
வேவல்
C
லாரன்ஸ்
D
கர்ஸன்
Question 43
இந்திய விடுதலைக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய தலைவர்
A
ஈ.வே.ராமசாமி
B
சி.எம்.அண்ணாதுரை
C
மு. கருணாநிதி
D
எம்.ஜி.ராமச்சந்திரன்
Question 44
மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய சட்டம்
A
1947
B
1935
C
1919
D
1858
Question 45
வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு
A
1885
B
1905
C
1925
D
1871
Question 46
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் சம்பந்தப்படுத்தப்பட்ட நபர்
A
கலெக்டர் ஜாக்சன்
B
ஜெனரல் டயர்
C
கலெக்டர் லூசிங்க்டன்
D
ஜெனரல் கரியப்பா
Question 47
1932 இல் ஜாதி ஒதுக்கீடு அறிவிப்பு செய்த பிரிட்டிஷ் பிரதம அமைச்சர்
A
பாமர்ஸ்டன்
B
பிட்
C
சர்ச்சில்
D
ராம்சேமேக் டொனால்டு
Question 48
‘பழைய வேதத்திற்கு போங்கன்’ என்ற மந்திரம் உச்சரித்தவர்
A
ராஜாராம் மோகன்ராய்
B
தயானந்த சரஸ்வதி
C
ராமகிருஷ்ண பரமஹம்சர்
D
விவேகானந்தர்
Question 49
இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை
A
ஷோமி பிரகாஷ்
B
சம்பத் கௌமுடி
C
ராஸ்ட கோஃப்டார்
D
பெங்காலி கெஸட்
Question 50
எல்லை காந்தி என அழைக்கப்படும் தலைவர்
A
முகமது அலி ஜின்னா
B
கான் அப்துல் கபார்கான்
C
அப்பாஸ்தயாப்ஜி
D
ஆகாகான்
Question 51
இந்தியாவில் முதன்முதலில் சாதி அடிப்படை பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்டது
A
1885 -வட்டார (தலத்தாபன) சுய ஆட்சி
B
1901 - நிதிக்குழு
C
1909 - மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
D
1915 - இந்திய பாதுகாப்புச் சட்டம்
Question 52
1916 லக்னோ உடன்படிக்கையினால் ஒத்துக் கொள்ளப்பட்டது
A
தனிப்பட்ட வாக்காளர் தொகுதி
B
கூட்டுக் கட்சி அமைக்க
C
டொமினியன் தகுதி (தன்னாட்சி உரிமையுடைய குடியேற்ற நிலை)
D
அரசியல் சீர்திருத்தம்
Question 53
1920ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு
A
உப்பு சத்தியாகிரகம்
B
ஒத்துழையாமை, வன்முறையற்ற இயக்கம்
C
தன்னாட்சி கோட்பாடு
D
காங்கிரஸ் கூட்டுக்குழு திட்டம்
Question 54
கல்கத்தா பல்கலைக்கழகக் குழு யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?
A
மேயோ பிரபு
B
செம்ஸ் போர்டு பிரபு
C
நார்த் புளூக் பிரபு
D
எல்ஜின் பிரபு
Question 55
1919, ஏப்ரல் 6ஆம் நாள் எதனை எதிர்த்து சத்யாகிரஹ நாளாக மேற்கொள்ளப்பட்டது?
A
ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி
B
ரௌலட் சட்டம்
C
1919 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம்
D
ஹண்டர் குழு
Question 56
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
A
தாகூர்
B
விவேகானந்தர்
C
ராமகிருஷ்ணர்
D
ராஜாராம் மோகன்ராய்
Question 57
ஆங்கிலேயரின்  வெற்றிக்கு காரணம்
A
உன்னதமான ஆயுதங்களும் போர்த் திறமை அறிவியலும்
B
உன்னதமான அதிகாரிகளும் அலுவலகமும்
C
உன்னதமான வாணிகமும், அறிவுக் கூர்மையும்
D
உன்னதமான கடல்வழியும், கப்பற்பயணமும்
Question 58
சத்யபால் மற்றும் சய்புதின் கிச்லேவ் கைது கீழ்க்கண்டவற்றில் எதை எழுப்பியது?
A
சௌரி சௌரா நடவடிக்கை
B
ஜாலியன் வாலாபாக் படுகொலை
C
ஒத்துழையாமை இயக்கம்
D
சட்ட மறுப்பு இயக்கம்
Question 59
தனிநபர் சத்யாகிரகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1935
B
1936
C
1940
D
1942
Question 60
எல்லைகாந்தி என அழைக்கப்படுபவர்
A
தாதாபாய் நௌரோஜி
B
கான் அப்துல் கபார்கான்
C
ஷேக் அப்துல்லா
D
அபுல்கலாம் ஆசாத்
Question 61
சுயாட்சி முதல் முறையாக காங்கிரஸ் பேரவையில் கோரப்பட்ட ஆண்டு
A
1905
B
1907
C
1917
D
1920
Question 62
சுராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர்
A
திலகர்
B
கோகலே
C
சி.ஆர்.தாஸ்
D
மோதிலால் நேரு
Question 63
ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
A
கவுண்ட் லாலி
B
டியூப்ளே
C
இராபர்ட் கிளைவ்
D
சர் அயர்கூட்
Question 64
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1785
B
1785
C
1900
D
1905
Question 65
இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்
A
சர்தார் வல்லபாய் படேல்
B
சுபாஷ் சந்திர போஸ்
C
திலகர்
D
எம்.என்.ராய்
Question 66
சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1902
B
1912
C
1922
D
1924
Question 67
கிலாபத் இயக்கத்தினை தொடங்கியவர்
A
அலி சகோதரர்கள்
B
மௌலானா அபுல்கலாமாசாத்
C
கான் அப்துல் கபார் கான்
D
முகமது அலி ஜின்னா
Question 68
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
A
டபிள்யூ. சி. பானர்ஜி
B
எம்.ஜி.ராணடே
C
திலகர்
D
தாதாபாய் நௌரோஜி
Question 69
“வந்தே மாதரம்” என்ற சொல்லை உருவாக்கியவர்
A
பங்கிம் சந்திர சாட்டர்ஜி
B
அரவிந்த் கோஷ்
C
சுபாஷ் சந்திர போஸ்
D
காந்திஜி
Question 70
இரட்டையாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம்
A
1833 பட்டயச் சட்டம்
B
1853 பட்டயச் சட்டம்
C
மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்
D
மிண்டோ மார்லி சட்டம்
Question 71
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
A
தயானந்த சரஸ்வதி
B
இராமகிருஷ்ணர்
C
விவேகானந்தர்
D
இராஜாராம் மோகன் ராய்
Question 72
கோபால கிருஷ்ண கோகலேயின் பெயர் இதனோடு தொடர்புடையது
A
இந்து மகாசபை
B
இந்திய சேவையின் கழகம்
C
பிரம்ம சமாஜம்
D
இவைகளில் ஏதுமில்லை
Question 73
பின்குறிப்பிட்டவர்களுள் மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
A
கோபால கிருஷ்ண கோகலே
B
சுரேந்திர நாத் பானர்ஜி
C
இரவீந்திரநாத் தாகூர்
D
லாலா லஜபதி ராய்
Question 74
சுதேசி கப்பல் கழகம் யாரால் நிறுவப்பட்டது
A
கோபால கிருஷ்ண கோகலே
B
திலகர்
C
வ.உ.சிதம்பரம்
D
சுப்ரமண்ய சிவா
Question 75
இரு தேசக் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
A
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்
B
மௌலானா முகமது அலி
C
முகமது அலி ஜின்னா
D
ஜவஹர்லால் நேரு
Question 76
மூன்று வட்டமேஜை மாநாடுகள் பின்வரும் எந்த வரிசைத் தொடரில் நடந்தேறின?
A
1930, 1935, 1940
B
1929, 1930, 1932
C
1930, 1931, 1932
D
1925, 1930, 1935
Question 77
தீன் இலாஹி ______ அரசால் தோற்றுவிக்கப்பட்டது?
A
பாபர்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
ஷாஜகான்
Question 78
_______ அக்பரின் காப்பாளர்
A
பைரம்கான்
B
தோடர் மால்
C
தான்சென்
D
அபுல்பாஸல்
Question 79
சீக்கியர்களின் புனித நூல்
A
இராமாயணம்
B
பைபிள்
C
குருகிரந்தம்
D
குரான்
Question 80
இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு வழி வகுத்தவர்
A
வாஸ்கோடாகாமா
B
அல்புகர்க்
C
அல்மைடா
D
டயஸ்
Question 81
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்
A
குதுப் உத்தீன் ஐபெக்
B
இல்துத்மிஷ்
C
இரசியா
D
பால்பன்
Question 82
ஔரங்கசீப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்து கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு
A
பீசார்
B
பிஜப்பூர்
C
அகமது நகர்
D
கோல்கொண்டா
Question 83
___________ ஆற்றங்கரையில் விஜய நகரம் அமைந்திருந்தது
A
கிருஷ்ணா
B
ராவி
C
காவேரி
D
துங்கபத்ரா
Question 84
________ மன்னரின் பெயரால் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது
A
முதலாம் மகேந்திர வர்மன்
B
முதலாம் நரசிம்ம வர்மன்
C
இரண்டாம் நரசிம்மவர்மன்
D
இவர்களில் எவருமிலர்
Question 85
பாண்டியர்களது தலைநகரம்
A
புகார்
B
காஞ்சி
C
வஞ்சி
D
மதுரை
Question 86
மதுரை கொண்டான் என்று சிறப்பு பெயர் பெற்றவர்
A
விஜயாலயன்
B
ஆதித்தன்
C
முதலாம் பராந்தகன்
D
முதலாம இராசராசன்
Question 87
‘சுங்கம் தவிர்த்த சோழ அரசர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
முதலாம் இராசராசன்
B
முதலாம் இராசேந்திரன்
C
முதலாம் குலோத்துங்கன்
D
மூன்றாம் இராசேந்திரன்
Question 88
சங்க காலத்தின் புகழ் பெற்ற சோழ அரசர்
A
கரிகாலன்
B
நெடுஞ்செழியன்
C
செங்குட்டுவன்
D
கிள்ளிவளவன்
Question 89
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?
A
மஹ்மூத் கஜினி - தானேஸ்வர் கொள்ளை
B
மொகம்மத் பின்காசிம் - த்ரேய்ன் போர்
C
அலாவுதின் கில்ஜி - தேவகிரி வெற்றி
D
முகம்மது பின் துக்ளக் - நாணயப் பரிசோதனை
Question 90
பானிப்பட்டுப் போர் பாபரின் வெற்றிக்கான காரணங்களில் சில:
  1. ஐக்கியமான ஒருமித்த எதிர்ப்பு இல்லாமை
  2. இப்ராஹீம் லோடியின் வீரனுக்கல்லாத குணையல்பு
  3. பாபரின் நன்கமைக்கப்பட்ட இராணுவம்
  4. சுல்தானுக்கு எதிராக தென்னிந்திய அரசர்களின் கலகங்கள்
சரியான விடையை கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க.
A
1,2 மற்றும் 4
B
1,3 மற்றும் 4
C
1 மற்றும் 3
D
2 மற்றும் 4
Question 91
சாதி முறை தோன்றிய காலம்
A
ரிக் வேதகாலம்
B
பிந்திய வேத காலம்
C
சங்க காலம்
D
மௌரியர் காலம்
Question 92
சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத விலங்கு
A
யானை
B
ஒட்டகம்
C
எருமை
D
குதிரை
Question 93
அலெக்ஸாண்டர் ________ நாட்டில் இருந்து வந்தவர் ஆவார்.
A
ஏதென்ஸ்
B
ஸ்பார்டா
C
மாசிடோனியா
D
ரோம்
Question 94
கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த ஆண்டு
A
1020
B
1023
C
1025
D
1027
Question 95
ஆரியர்கள் வணங்கிய கடவுள்
A
சிவன்
B
சக்தி
C
விஷ்ணு
D
இயற்கை
Question 96
மகத பேரரசின் தலைநகரம்
A
பாடலிபுத்திரம்
B
அயோத்தி
C
வாதாபி
D
உஜ்ஜயின்
Question 97
அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?
A
கி.மு. 298
B
கி.மு.305
C
கி.மு.323
D
கி.மு.327
Question 98
ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
A
புத்தர்
B
மகாவீரர்
C
ரிஷபர்
D
தீர்த்தங்கர்
Question 99
பாடலிபுத்திரத்தின் இயற்பெயர் என்ன?
A
அவந்தி
B
குசிநகர்
C
ராஜகிரிகம்
D
வல்லடி
Question 100
மௌரியர்களுக்கு பின்வந்தவர்கள்
A
நந்தர்கள்
B
சுங்கர்கள்
C
கண்வர்கள்
D
சிசுநாகர்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!