Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 4

Group 4 VAO General Tamil Model Test 4

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக.
 1. a) விளைந்து முதிர்ந்தவிழுமுத்து                                              பட்டினப்பாலை
 2. b) பொன்னுக்கு ஈடாக மிளகுஏற்றுமதி                                       புறநானூறு
 3. c) காற்றின்போக்கைஅறிந்து கலம் செலுத்தினர்   -மதுரைக் காஞ்சி
 4. d) கட்டுத்தறியில் கட்டியயானைஅசைவது போல் நாவாய் அசைந்தது    -அகநானூறு
A
4 3 2 1
B
3 4 2 1
C
1 2 3 4
D
3 4 1 2
Question 2
அம்மானை'பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
 1. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.
 2. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர் .
 3. iii. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்’ ஆகும்.
 4. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்.
A
i மற்றும் iii
B
ii மற்றும் i
C
iii மற்றும் iv
D
iv மற்றும் i
Question 3
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A
சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்.
B
தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்.
C
ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்.
D
பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை.
Question 4
 1. பொருந்தாஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்
A
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ’
B
'சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'
C
ஆடி அடங்கும் வாழ்க்கையடா’
D
'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்'
Question 5
 1. பட்டியல்ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
 • பட்டியல் ஒன்று                                   பட்டியல் இரண்டு
 1. மாணிக்கவாசகர்                   திருத்தொண்டத்தொகை
 2. ஆண்டாள்                               தாண்டகவேந்தர்
 3. சுந்தரர்                                      திருக்கோவை
 4. திருநாவுக்கரசர்                      நாச்சியார் திருமொழி
A
3 4 1 2
B
2 3 4 1
C
1 4 3 2
D
4 3 1 2
Question 6
 1. "மரபுக் கவிதையில்வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?
A
முடியரசன்
B
வாணிதாசன்
C
சுரதா
D
அப்துல் ரகுமான்
Question 7
பட்டியல்I ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
 •                         பட்டியல் I                              பட்டியல் II
 •                        புனைப்பெயர்                         இயற்பெயர்
 1. புதுமைப்பித்தன்                 செகதீசன்
 2. ஈரோடுதமிழன்பன்            எத்திராஜ்
 3. வாணிதாசன்                       முத்தையா
 4. கண்ணதாசன்                     சொ.விருத்தாசலம்
A
2 3 4 1
B
4 1 2 3
C
3 4 1 2
D
4 3 2 1
Question 8
பொருந்தாதஇணையினைக் கண்டறி.
 • திணை                         தொழில்
A
முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல்
B
பாலை – நிரை கவர்தல், சூரையாடல்
C
குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல்
D
மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்
Question 9
அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல் வரிசையைக் குறிப்பிடுக.
A
அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
B
ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
C
கண், கண்டம், கண்டு, கண்ணி
D
தகடு, தகழி, தகவு, தகர்
Question 10
கீழேகாணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க
A
பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
B
நகை,அழுகை,உவகை,பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்.
C
தேர், யானை,குதிரை,காலாள் படைகளின் வலிமை, வீரச்சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடகள்.
D
நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ' காவடிச் சிந்து திகழ்கிறது
Question 11
கீழ்க்காணும் வாக்கியங்களில்எவை சரியானவை?
 1. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
 2. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
 3. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.
 4. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.
A
i மற்றும் iii
B
ii மற்றும் iv
C
iii மற்றும் iv
D
ii மற்றும் iii
Question 12
பிறமொழிச்கு சொல்லற்ற தொடர் எது?
A
அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.
B
அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
C
அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
D
அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
Question 13
சரியான சொற்றொடரைத்தேர்க
A
தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
B
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
C
பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
D
உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
Question 14
பொருந்தாத இணையைக் கண்டறி
A
பொதுவுடைமை - புதுமைப்பித்தன்
B
தனித்தமிழ் - மறைமலை அடிகள்
C
பேச்சுக்கலை - பேரறிஞர் அண்ணா
D
புரட்சி – பாரதிதாசன்
Question 15
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப்பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க:
 • பட்டியல் ஒன்று                            பட்டியல் இரண்டு
 • (a) வாலை                                      1. தயிர்
 • (b) உளை                                       2. சுரபுன்னை மரம்
 • (c) விளை                                        3. இளம்பெண்
 • (d) வழை                                         4. பிடரி மயிர்
A
4 3 2 1
B
2 1 3 4
C
1 2 4 3
D
3 4 1 2
Question 16
திருக்கோட்டியூர்நம்பியால் 'எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
நாதமுனிகள்
B
இராமாநுசர்
C
திருவரங்கத்தமுதனார்
D
மணவாள மாமுனிகள்
Question 17
பொருத்துக
 1. (a) ஆய்தக் குறுக்கம்                   1. வெளவால்
 2. (b) ஐகாரக் குறுக்கம்                   2. மருண்ம்
 3. (c) ஒளகாரக் குறுக்கம்                3. கஃறீது
 4. (d) மகரக் குறுக்கம்                      4. கடலை
A
1 4 3 2
B
2 1 4 3
C
4 3 2 1
D
3 4 1 2
Question 18
கீழேகாண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A
தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.
B
‘திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளது.
C
நீதிநெறி விளக்கம்,கந்தர்கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்.
D
காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு.
Question 19
 1. பொருத்துக.
 • நூல்                                       ஆசிரியர் 
 • (a) சிறுபாணாற்றுப்படை                          1. முடத்தாமக்கண்ணியார்
 • (b) திருமுருகாற்றுப்படை                           2. நல்லூர் நத்தத்தனார்
 • (c) பொருநராற்றுப்படை                            3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 • (d) பெரும்பாணாற்றுப்படை                     4. நக்கீரர்
A
4 3 2 1
B
2 4 1 3
C
3 1 4 2
D
1 2 3 4
Question 20
கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டி காண்பிக்கவும்.
A
மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு.
B
ஆசிரியரை ‘ஐயர்’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு.
C
அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு.
D
திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
Question 21
"தமிழ்வடமொழியின் மகனன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என்று கூறியவர் யார்?
A
ஹீராஸ் பாதிரியார்
B
குமரில பட்டர்
C
கால்டுவெல்
D
ஜி.யு. போப்
Question 22
கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
 1. காணி - 1/80
 2. அரைக் காணி - 1/16
 3. முக்காணி - 3/80
 4. மாகாணி - 1/160
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 3 சரி
Question 23
"காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்கலங்கும் ஒரு மனிதன் ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே!” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
வீராயி
B
மாதவி காவியம்
C
தமிழர் சமுதாயம்
D
தமிழ்ஒளியின் கவிதைகள்
Question 24
பகுபத உறுப்புகளாகபிரித்து எழுதுக – நிறுத்தல்
A
நிறுத்து + அல்
B
நிறு + த் + தல்
C
நிறு + த் + த் + அல்
D
நிறு + த் + த் + தல்
Question 25
கூரிய கொம்புகளும் சிலிர்த்ததிமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?
A
நீலகிரி – கரிக்கையூர்
B
மதுரை -கல்லூத்துப்பட்டி
C
தேனி – சித்திரக்கல் புடவி
D
சேலம் – கரிக்கையூர்
Question 26
" பட்டிமண்டபம்ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 27
 1. பொருத்துக.
 • (a) ஜியோவான்னி காசில்லி                      1.குறியீடுகளை மின்னாற்றவில் அச்சிடுதல்
 • (b) அலெக்சாண்டர் பெயின்                     2. பான்டெலிகிராப்
 • (c) ஹாங்க் மாக்னஸ்கி                               3. காமா ஃபேக்ஸ்
 • (d) செஸ்டர் கார்ல்சன்                               4. ஒளிப்படி இயந்திரம்
A
1 2 3 4
B
2 4 1 3
C
2 1 4 3
D
2 1 3 4
Question 28
SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?
A
software for trajectory analysis
B
software for integrated trajectory analysis with real time application
C
software for instant track with real time application
D
software for instant trajectory with real time application
Question 29
இலக்கணக் குறிப்பு தருக . ஆக்கல் , பொன்னேபோல்
A
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று , உவம உருபு
B
தொழில்பெயர் , உவமைத்தொகை
C
தொழிற்பெயர், உவம உருபு
D
பெயரெச்சம் , உவம உருபு
Question 30
இந்தியாவில்குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
A
சாவித்திரிபாய் பூலே
B
முத்துசுலெட்சுமி
C
பெரியார்
D
ஹண்டர்
Question 31
கீழ்க்கண்டபாடல் வரிகளை ஆராய்க .
 1. சுள்ளியம் பேர்யாற்றுவெண்னுரை கலங்க – அகநானூறு
 2. நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
 3. மாலைத் திங்கள்வழியோன் ஏறினான் – சிலம்பு
 4. பொன்னொடுவந்து கறியொடு பெயரும் – அகநானூறு
A
அனைத்தும் தவறு
B
1 , 3, 4 சரி
C
3, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 32
சரியான பொருளை தேர்ந்தெடு அணங்கு , புழை
A
ஒழுங்கு, சாளரம்
B
தெய்வம், மதில்
C
தெய்வம், சாளரம்
D
மதில், சாளரம்
Question 33
பல்லவர்கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
 1. இக்காலத்தில்சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
 2. மாமல்லபுரச்சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
 3. காஞ்சிவைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
 4. பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன
A
அனைத்தும் சரி
B
1 , 3 தவறு
C
3 தவறு
D
அனைத்தும் தவறு
Question 34
 • " பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
 •  தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
 • இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
 
 1. கொன்றை       2.   மூங்கில்            3. வேம்பு               4. ஆம்பல்
A
1, 2
B
1, 2, 3
C
1, 2, 4
D
2, 3, 4
Question 35
 • இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
 • அசையுடன் இருந்தோர்க்கு
 •    அரும்புணர்வு இன்மென "
 • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
பெரும்பாணாற்றுப்படை
B
சிறுபாணாற்றுப்படை
C
மலைபடுகடாம்
D
நற்றிணை
Question 36
 • காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
 • நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
 • கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
 • நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
 • இப்பாடலில் பயின்று வரும் அணி
A
உவமையணி
B
எடுத்துக்காட்டுவமையணி
C
தற்குறிப்பேற்ற அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 37
தவறான இணையைத் தேர்ந்தெடு.
 1. நேர் நேர் நேர் – தேமாங்காய்
 2. நேர் நிரை நேர் – புளிமாங்காய்
 3. நிரை நிரை நேர் – கருவிளங்காய்
 4. நிரை நேர் நேர்-கூவிளங்காய்
A
1, 2 தவறு
B
1 , 3 தவறு
C
2, 3 தவறு
D
எதுவுமில்லை
Question 38
எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
கோர்டன்
B
தெறன்ஸ்
C
ஆல்பர்ட் சுவைட்சர்
D
செனக்கா
Question 39
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?
A
1995 – தஞ்சாவூர்
B
1966 – கோலாலம்பூர்
C
1968 – சென்னை
D
1987 – மொரீசியசு
Question 40
லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.
A
ஜோயிதா மோண்டல் மாஹி
B
பிரித்திகா யாஷினி
C
தாரிகா பானு
D
நர்த்தகி நடராஜ்
Question 41
சரியான இணையைத் தேர்ந்தெடு.
 • , /     - கால்புள்ளியைச் சேர்க்கவும்
 • ; /    - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
 • : /    - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 42
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A
நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்
B
இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்
C
இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
D
இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
Question 43
கீழ்க்கண்டவற்றுள்பட்டினத்தார்  பாடிய வரிகள் எது?
A
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
B
ஒன்றென்றிரு , தெய்வம் உண்டென்றிரு
C
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
D
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
Question 44
கீழ்க்கண்டவற்றுள்  தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
A
பட்டுப்போன மரக்கிளை, அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்; இலையுதிர் கால மாலை
B
விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது அடடா… வண்ணத்துப்பூச்சி
C
பெட்டிக்கு வந்த பின் எல்லாக் காய்களும் சமம் தான் சதுரங்கக் காய்கள்
D
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
Question 45
 • "முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
 •      மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல்    யாரை குறிக்கிறது?
A
கன்னன்
B
கண்ணன்
C
நான்முகன்
D
மாவலிச்சக்ரவர்த்தி
Question 46
சரியானபுணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்
A
சிறுமை+ஊர்  சிறு+ஊர்  சிற்று + ஊர் சிற்ற் + ஊர்  சிற்றூர்
B
சிறுமை + ஊர்  சிறு + ஊர்  சிற்ற் + ஊர்  சிற்றூர்
C
சிறு + ஊர்  சிற்று + ஊர்  சிற்ற் + ஊர்  சிற்றூர்
D
சிறுமை + ஊர்  சிறு + ஊர்  சிற்று + ஊர்  சிற்றூர்
Question 47
''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் " என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை
A
வெண்பா
B
நேரிசை ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
கலிப்பா
Question 48
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு
A
1890
B
1980
C
1981
D
1891
Question 49
கற்றளிஎன்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
A
இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு
B
இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு
C
இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு
D
இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு
Question 50
கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
 • 1. நைவளம்  2 . தோடி                பியந்தை           4 . சாளரபாணி
 • 5.ஆனந்த பைரவி
A
அனைத்தும்
B
1, 2, 3
C
4, 5
D
1 , 3, 4
Question 51
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?
A
ஆஸ்கர் தமிழர்
B
சிம்பொனித்தமிழர்
C
பியானோ தமிழர்
D
ஆஸ்கர் தமிழன்
Question 52
ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கி சிறப்பித்த நாள்
A
1937 நவம்பர் 13
B
1970 அக்டோபர் 5
C
1938 நவம்பர் 13
D
1970 ஜூன் 27
Question 53
ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
A
06.09.1736 - 06.01.1761
B
06.09.1736 - 06.09.1763
C
06.09.1736 – 11.01.1761
D
06.01.1736 - 11.09.1763
Question 54
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
A
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்.
B
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
C
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்.
D
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்.
Question 55
பொருந்தாததைத் தேர்க.
 1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
 2. ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
 3. ஆனந்தரங்களின் நாட் குறிப்பு18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
 4. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .
A
1, 2 தவறு
B
2 , 3 தவறு
C
1 , 3 தவறு
D
2 , 4
Question 56
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
 •          பிரசம், மதுகை
A
தேன், பெருமிதம்
B
பெருமிதம், தேன்.
C
இனிப்பு, கடுஞ்சொல்
D
கடுஞ்சொல், இனிப்பு
Question 57
பாரதிபெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்
A
சக்ரவர்த்தினி
B
பாலபாரதி
C
விஜயா
D
சூர்யோதயம்
Question 58
மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்
A
கால்டுவெல்
B
ஜி. யு.போப்
C
விவேகானந்தர்
D
திரு.வி.க
Question 59
குருதி, உயிர்வளிஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.
A
1/100 பங்கு
B
1/50 பங்கு
C
1/50 பங்கு
D
1/15 பங்கு
Question 60
நியுரானின்முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு
A
ஆட்டோ டியட்டர்ஸ் – 1856
B
ஆட்டோ டியட்டர்ஸ் – 1865
C
வெர்னிக் – 1856
D
வெர்னிக் – 1865
Question 61
தவறான இணையை தேர்ந்தெடு
A
அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம்
B
அறிவியல் தமிழ் -அப்புசாமி
C
கணியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம்
D
வானக் காட்சி -அப்புசாமி
Question 62
 • "சுடச்சுடரும்பொன்போல் ஒளிவிடும் துன்பம்
 •  சுடச்சுட நோற்கிற் பவர்க்கு "
 • இக்குறளில் பயின்று வரும் அணி
A
இல்பொருள் உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 63
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி 1.மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
 1. வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
 2. மலா - வல்ஸட் (குஜராத்)
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1 , 2 சரி
D
1, 2 தவறு
Question 64
The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru”என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்
A
ஜி.யு.போப்
B
ஜார்ஜ் எல்.ஹார்ட்
C
ஆறுமுக நாவலர்
D
உ.வே.சா
Question 65
 • கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
 • காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும்  பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.
A
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 66
இலக்கணக் குறிப்புத் தருக .
 • அகிற்புகை , கொன்றைசூடு
A
7ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
B
6ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை
C
6ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
D
3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை
Question 67
சரியான இணையைத் தேர்ந்தெடு.
 1. காழ்ப்புணர்ச்சி   -   ஈரொற்று மெய்ம்மயக்கம்
 2. மொத்தம்     - உடனிலை மெய்ம்மயக்கம்
 3. வாழ்பவன்   -   வேற்று நிலை மெய்ம்மயக்கம்
 4. கப்பம்    -   ஈரொற்று மெய்ம்மயக்கம்
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 68
 • "மெய்தான் அரும்பிவிதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
 • கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் "
 • என்னும் பாடல் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் எத்தனையாவது
 • பாடல் ?
A
முதற் பாடல்
B
இரண்டாவது பாடல்
C
பத்தாவது பாடல்
D
மூன்றாவது பாடல்
Question 69
கரந்தைத்தமிழ்ச் சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு
A
1901
B
1918
C
1919
D
1966
Question 70
வளையல்இச்சொல்லில் ஐகாரம் _____ மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
A
1
B
1 ¼
C
¼
D
1 ½
Question 71
ஒருதனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைத்தொடர்களுடன் கலந்து வருவது ____ ஆகும்
A
தொடர்நிலைத் தொடர்
B
கலவைத்தொடர்
C
கட்டளைத் தொடர்
D
தன்வினைத் தொடர்
Question 72
 • "மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
 •            வருத்தத்தை ஒருசிறி தெனினும்
 • கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
 •              கணமும்நான் சகித்திட மாட்டேன்"
 • என்று பாடியவர் யார்?
A
தாயுமானவர்
B
திருமூலர்
C
மாணிக்கவாசகர்
D
வள்ளலார்
Question 73
'நீ' எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது____ என திரியும்.
A
நம்
B
தன்
C
நும்
D
உன்
Question 74
வீரமாமுனிவருக்குத்தமிழ் கற்பித்தவர் யார்?
A
மீனாட்சி சுந்தரனார்
B
ஆறுமுகநாவலர்
C
சுப்பிரதீபக் கவிராயர்
D
தாயுமானவர்
Question 75
பரிதிமாற் கலைஞர்_____ வடிவில் நாடகவியல் என்னும் நூலை இயற்றினார்.
A
நாடக
B
இலக்கண
C
உரைநடை
D
செய்யுள்
Question 76
திரிகடுகத்தின்ஆசிரியரான நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" என குறிப்பிட்டு போர் வீரனாக இருந்திருக்கலாம் என்று கூறுவது எது?
A
துறவறவியல்
B
இல்லறவியல்
C
பாயிறவியல்
D
ஊழியல்
Question 77
கருவி, கருத்தா –இவ்விரண்டையும் உணர்த்தும் வேற்றுமை
A
இரண்டாம் வேற்றுமை
B
மூன்றாம் வேற்றுமை
C
நான்காம் வேற்றுமை
D
ஆறாம் வேற்றுமை
Question 78
பால்பற்றிச் சொல்லாவிடுதலும்“ இவ்வடியில் பால்பற்றி என்பதன் பொருள்
A
பகுப்புப் பற்றி
B
இனம் பற்ற
C
ஒரு பக்கச் சார்பு பற்றி
D
நெல்லைப் பற்றி
Question 79
 • 'நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
 • ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்"
 • இவ்வரிகளை இயற்றிவர் யார்?
A
வள்ளலார்
B
தாயுமானவர்
C
இளங்கோவடிகள்
D
சமண முனிவர்
Question 80
கீழ்க்கண்டவற்றுள்சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் அல்லாதது எது?
A
மஞ்சள் சிட்டு
B
மின்சிட்டு
C
செங்காகம்
D
பனங்காடை
Question 81
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் " இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A
தொல்காப்பியம்
B
சிலப்பதிகாரம்
C
திருவாசகம்
D
தேவாரம்
Question 82
பிரித்துஎழுதுக – பாகற்காய்
A
பாகு + அற்று + காய்
B
பாகு + அறு + காய்
C
பாக + அற்று + காய்
D
பாகு + அல் + காய்
Question 83
நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான்" இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
சீத்தலை சாத்தனார்
B
கம்பர்
C
திருவள்ளுவர்
D
இளங்கோவடிகள்
Question 84
கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A
கொங்குஅலர்
B
கொங்அலர்
C
கொங்கலர்
D
கொங்குலர்
Question 85
மொழி முதல்எழுத்துகள் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
A
க, ச, த, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
B
ங - வரிசையில் எந்த ஒரு எழுத்தும் சொல்லின் முதலில் வராது.
C
ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
D
ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
Question 86
சர்.சி. வி. இராமன் தமது "இராமன் விளைவு" என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு
A
1927 பிப்ரவரி 27
B
1927 ஜனவரி 27
C
1928 பிப்ரவரி 28
D
1928 ஜனவரி 28
Question 87
இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்    ஆவல் உண்டாகிறது " என்று காந்தியடிகளால் குறிப்பிடப்பட்டவர் யார்?
A
மீனாட்சி சுந்தரனார்
B
உ.வே.சா
C
முத்துராமலிங்கர்
D
பாரதியார்
Question 88
வேலுநாச்சியார்சிவகங்கையை மீட்ட ஆண்டு
A
1780
B
1782
C
1784
D
1785
Question 89
 • "அன்பினில்இன்பம் காண்போம்
 •             அறத்தினில் நேர்மை காண்போம்
 •   துன்புறும் உயிர்கள் கண்டால்
 •              துரிசறு கனிவு காண்போம்"
 • என்று பாடியவர் யார்?
A
வைரமுத்து
B
வள்ளலார்
C
அ. முத்தரையனார்
D
தாயுமானவர்
Question 90
புத்தரின்வரலாற்றைக் கூறும் நூல் எது?
A
ஜீவஜோதி
B
ஆசிய ஜோதி
C
நவஜோதி
D
ஜீவன ஜோதி
Question 91
தவறானஇணையைத் தேர்ந்தெடு
A
மாண் - பெருமை
B
மான் – புள்ளிமான்
C
கனம் - பாரம்
D
கணம் – அம்பு
Question 92
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?
 • 1.கலை-கவின் கலைகள்                                         2. களை – அழகு
 • 3. கழை – மூங்கில்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1, 3 சரி
Question 93
 • “பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
 •       பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
 •       வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
 •       விருந்து மன்றி விளைவன யாவையே "
 • என்று பாடியவர் யார்?
A
கபிலர்
B
கம்பர்
C
இளங்கோவடிகள்
D
பாண்டியன் நெடுஞ்செழியன்
Question 94
" என் கடன்பணிசெய்து கிடப்பதே" என்னும் திருவாக்கைத் தந்தவருமஅதன்படியே வாழ்ந்தவரும் யார் ?
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
மாணிக்கவாசகர்
D
திருமூலர்
Question 95
 • "புருவக் கொடியருகே
 • பொன்னிமையின் உள்ளே
 • உருவாகிச் சுழலும்
 • உள்ளத்தின் முத்திரைகள் "
 • என்ற வரிகள் யாருடையது?
A
நா.காமராசன்
B
நா.கருணாநிதி
C
சிற்பி
D
முடியரசன்
Question 96
குலசேகரஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் மொத்தம் எத்தனை பாடலகள் உள்ளன?
A
100
B
101
C
105
D
106
Question 97
 • "பொங்கு சாமரையேந்திப்
 •              புடைபுடை யியக் கர்நின்றிரட்டச்
 •    சிங்க வாசனத் திருந்து
 •              தெளிந்தொளி மண்டில நிழற்றத் ‘’
 • என்ற வரிகளை பாடியவர் யார்?
A
உமறுப் புலவர்
B
நீலகேசி
C
சீத்தலைச் சாத்தனார்
D
இளங்கோவடிகள்
Question 98
கீழ்க்கண்ட மரபுச் சொற்களில் எது/ எவை தவறு?
 1. பலாப்பிஞ்சு-பலா மூசு
 2. வாழைப் பிஞ்சு– வாழைக்கச்சல்
 3. மாம்பிஞ்சு– மாமூசு
 4. அவரைப்பிஞ்சு- அவரைப் பொட்டு
A
1, 3 தவறு
B
3 மட்டும் தவறு
C
1 மட்டும் தவறு
D
1, 4 தவறு
Question 99
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது(வாக்கியப் பிழைகளும் நீக்கமும்)
A
வண்டிகள் ஓடாது - வண்டிகள் ஓடா
B
அது எல்லாம் - அவை எல்லாம்
C
எனது மகன் - எனக்கு மகன்
D
ஏற்கத்தக்கது அல்ல - ஏற்கத்தக்கது அன்று
Question 100
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் ‘ என்று கூறியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
அண்ணா
D
திரு.வி.க
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button