Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 20

Group 4 VAO General Tamil Model Test 20

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 20. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" எனும்  பாடலை  பாடியவர்?
A
சு.அறிவுமதி
B
காசி ஆனந்தன்
C
பாவலரேறு
D
பாரதிதாசன்
Question 2
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
A
தொல்காப்பியம்
B
அப்பர் தேவாரம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 3
மாணிக்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர்?
A
பரிதிமாற்கலைஞர்
B
பெருஞ்சித்திரனார்
C
தேவநேயப்பாவாணர்
D
மறைமலையடிகள்
Question 4
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் நிலைகள் மொத்தம் எத்தனை?
A
எட்டு
B
ஏழு
C
ஆறு
D
ஐந்து
Question 5
ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் சத்தி முத்துப்புலவர்?
A
1500
B
2000
C
1000
D
1200
Question 6
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டுள்ளவர்?
A
சலீம் அலி
B
குலாம் காதர்
C
அபுல்காசிம்
D
ஆலா அப்துல்
Question 7
முப்புள்ளி பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
  1. a) தனித்து இயங்காது
  2. b) தனக்கு முன் ஒரு நெடில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச்சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  3. c) நுட்பமான ஒலிப்பு முறை அற்றது.
  4. d) முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
A
a), c) மட்டும் சரி
B
a) மற்றும் b) சரி
C
a), d) சரி
D
அனைத்தும் சரி
Question 8
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர்?
A
பாரதியார்
B
நெல்லை சு.முத்து
C
வளர்மதி
D
அறிவுமதி
Question 9
அரேபியாவில் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ள அமைப்பு எது?
A
யுனெஸ்கோ
B
ஐ.நா.சபை
C
உலக வங்கி
D
உலக சுகாதார நிறுவனம்
Question 10
அகநானூற்றைத் தொகுத்தவர்?
A
உருத்திரசன்மனார்
B
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
C
பூரிக்கோ
D
தெரியவில்லை
Question 11
கீழ்க்கண்டவற்றுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள்?
A
பெரும்பாணாற்றுப்படை
B
பட்டினப்பாலை
C
நெடுநல்வாடை
D
A) மற்றும் B)
Question 12
நான்மணிக்கடிகை எந்த சமயச்சார்புடைய நூல்?
A
வைணவம்
B
சைவம்
C
பௌத்தம்
D
சமணம்
Question 13
பன்னிரெண்டாம் திருமுறையை பாடியவர்?
A
மாணிக்க வாசகர்
B
திருமூலர்
C
திருஞானசம்பந்தர்
D
சேக்கிழார்
Question 14
மருணீக்கியார் எனும் இயற்பெயர் கொண்டவர்?
A
அப்பர்
B
சுந்தரர்
C
குலசேகராழ்வார்
D
திருஞானசம்பந்தர்
Question 15
வரகுணப்பாண்டியனின் அவைக்களப்புலவர்?
A
வீரராகவர்
B
புகழேந்திப்புலவர்
C
வீராகவியார்
D
காளமேகப்புலவர்
Question 16
புதுமைக்கவி என்று அழைக்கப்படுபவர்?
A
பாரதிதாசன்
B
இராமலிங்கம்பிள்ளை
C
திருமூலர்
D
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
Question 17
14 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண்ணின் பருவம்?
A
மங்கை
B
மடந்தை
C
அரிவை
D
தெரிவை
Question 18
முறை  எனப்படுவது எது?
A
மறைபொருள் பிறர் அறியாமல் காத்தல்
B
அதிகம் கருணை காட்டாது தண்டித்தல்
C
சுற்றத்தாரைக் கோபிக்காமை
D
பெருமை அறிந்து ஒழுகல்
Question 19
தமிழ் உபநிடதம் என்றழைக்கப்படுபவை எது/எவை ?
A
திருக்குறள்
B
தாயுமானவர் பாடல்கள்
C
நம்மாழ்வாரின் திருவாய் மொழி
D
இவை அனைத்தும்
Question 20
உலகில் சாகா வரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!" என்று கூறியவர்?
A
கதே
B
அறிஞர் அண்ணா
C
இரா.அரங்கநாதன்
D
தால்சுதாய்
Question 21
கீழ்க்கண்டவற்றுள் இடைச்சொற்களின் வகைகள் யாவை?
A
வேற்றுமை உருபுகள்
B
கால இடைநிலைகள்
C
வியங்கோள் விகுதிகள்
D
இவை அனைத்தும்
Question 22
சுற்றுச்சுவர்  சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்வது?
A
காஞ்சி கைலாசநாதர் கோவில்
B
தஞ்சை பெரிய கோவில்
C
தாளகிரீஸ்வரர் கோவில்
D
வைகுந்த பெருமாள் கோவில்
Question 23
சிறை என்பதன் பொருள்?
A
சந்தனம்
B
குறிஞ்சிப்பாறை
C
இறகு
D
மலைநெல்
Question 24
  • "பொதுவர்கள் பொலிவுறப் போர் அடித்திடும்
  • அதிர் குரல் கேட்டு உழை அஞ்சி ஓடுமே" எனும் பாடலைப் பாடியவர்?
A
புலவர் குழந்தை
B
சேக்கிழார்
C
கம்பர்
D
மருதநில நாகனார்
Question 25
நாயக்கர்காலச் சிற்பக் கலைநுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு?
A
பேரூர் சிவன் கோவில்
B
மீனாட்சியம்மன் கோவில்
C
இராமேஸ்வரம் பெருங்கோவில்
D
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
Question 26
"இராவணகாவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி.  உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்"  என்று கூறியவர்?
A
திரு.வி.க
B
அறிஞர் அண்ணா
C
பெரியார்
D
மறைமலையடிகள்
Question 27
கோர்வை என்ற சொல்லின் வேர்ச்சொல்?
A
கோர்
B
கோர்வை
C
கோவை
D
கோ
Question 28
சதிர் என்ற சொல்லின் பொருள் யாது?
A
நடனம்
B
மாலை
C
விளக்கு
D
திருமணம்
Question 29
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A
154
B
143
C
134
D
153
Question 30
அப்பாவின் சிநேகிதர் என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலின் ஆசிரியர்?
A
அசோகமித்ரன்
B
ஆதவன்
C
தி.ஜானகிராமன்
D
நாஞ்சில் நாடன்
Question 31
தமிழ்க்கதையுலகம் நவீனமயமானதில் யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது?
A
கு.அழகிரிசாமி
B
ஆதவன்
C
தி.ஜானகிராமன்
D
நாஞ்சில் நாடன்
Question 32
13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னகாரம் என்னும் நூலில் குறிப்பிடப்படாத இசைக்கருவி எது?
A
நாகசுரம்
B
மேளம்
C
புல்லாங்குழல்
D
மிருதங்கம்
Question 33
கூர் + சிறை சேர்த்தெழுதுக.
A
கூர்ஞ்சிறை
B
கூர்ச்சிறை
C
கூர்சிறை
D
கூசிறை
Question 34
சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப்பொறுத்துக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
A
ஆறு
B
ஏழு
C
எட்டு
D
ஐந்து
Question 35
திருக்குறள் கதைகளை எழுதியவர்?
A
அசோகமித்ரன்
B
கிருபானந்தவாரியார்
C
ஜேம்ஸ் லவ்லாக்
D
சா.சுரேஷ்
Question 36
புத்துலகத் தொலைநோக்காளர் என்று அழைக்கப்படுபவர்?
A
அயோத்திதாசப்பண்டிதர்
B
அம்பேத்கர்
C
நேரு
D
பெரியார்
Question 37
நாட்டின் நரம்புகளாக திகழ்பவை எவை?
A
சாலைகள்
B
ஆறுகள்
C
நகரங்கள்
D
பெருங்கடல்கள்
Question 38
ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர்?
A
அறிஞர் அண்ணா
B
பெரியார்
C
முத்து ராமலிங்கர்
D
அம்பேத்கர்
Question 39
  • "முண்டி மோதும் துணிவே இன்பம்
  • உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" என்று பாடியவர்?
A
ந.பிச்சமூர்த்தி
B
சிசு.செல்லப்பா
C
தருமு சிவராமு
D
பசுவய்யா
Question 40
போப் அவர்கள் எங்கு வாழ்ந்தபோது தமிழ் இலக்கிய இலக்கணங்களை தெளிவுற ஆராய்ந்தார்?
A
சாந்தோம்
B
சாயர்புரம்
C
தஞ்சாவூர்
D
கொடைக்கானல்
Question 41
  • "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
  • பேணி வளர்த்திடும் ஈசன்"  பாடியவர்?
A
கவிமணி
B
நாமக்கல் கவிஞர்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 42
சீறா என்பது சீறத் என்னும் எம்மொழிச்சொல்லின் திரிபு ஆகும்?
A
இலத்தீன்
B
அரபு
C
கிரேக்கம்
D
சீனம்
Question 43
சின்னச்சீறா என்ற நூலைப்படைத்தவர்?
A
அபுல்காசிம் மரைக்காயர்
B
பனு அகமது மரைக்காயர்
C
உமறுப்புலவர்
D
கடிகை முத்துப்புலவர்
Question 44
145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?
A
புறநானூறு
B
அகநானூறு
C
குறுந்தொகை
D
ஐங்குறுநூறு
Question 45
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் எனும் உரிப்பொருள் கொண்ட திணை?
A
பாலை
B
முல்லை
C
நெய்தல்
D
மருதம்
Question 46
  • "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
  • கைகொல்லும் காழ்த்த இடத்து." இக்குறட்பாவில் பயின்று அணி?
A
ஏகதேச உருவக அணி
B
சொற்பொருள் பின்வருநிலையணி
C
பிறிது மொழிதல் அணி
D
எடுத்துக்காட்டு உவமை அணி
Question 47
விசித்திர சித்தன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன்?
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
மூன்றாம் நந்திவர்மன்
D
முதலாம் பரமேஸ்வரன்
Question 48
கோலத்து நாடு என்று குறிப்பிடப்படும் நாடு எது?
A
சோழ நாடு
B
சேரநாடு
C
பாண்டியநாடு
D
கலிங்கநாடு
Question 49
நாங்கூழ் என்பதன் பொருள் யாது?
A
பூமாலை
B
மண்புழு
C
சன்மானம்
D
கூந்தல்
Question 50
யாருடைய இசை ஐவகை நிலங்களையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக்கொண்டது?
A
யுவன் ஷங்கர் ராஜா
B
எ. ஆர்.ரகுமான்
C
இளைய ராஜா
D
அவ்வை
Question 51
பதினொரு செம்மொழித் தகுதிக் கோட்பாடுகளை மொழி வல்லுனர்களோடு சேர்ந்து வரையறுத்த  அறிவியல் தமிழறிஞர்?
A
பிரான்சிஸ் எல்லிஸ்
B
ஹோக்கன்
C
பாவலரேறு
D
முஸ்தபா
Question 52
உயர்தனிச்செம்மொழி எனும் ஆங்கில நூல் யாரால் எழுதி வெளியிடப்பட்டது?
A
தேவநேயப்பாவாணர்
B
பரிதிமாற்கலைஞர்
C
பாவலரேறு
D
அறிஞர் அண்ணா
Question 53
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பரிதிமாற்கலைஞரின் நூல் எது?
A
ரூபாவதி
B
கலாவதி
C
சித்திரக்கவி
D
தனிப்பாசுரத்தொகை
Question 54
விடுநனி கடிது எனும் பாடல் கம்பராமாயணத்தின் எந்தப்படலத்தில் அமைந்துள்ளது?
A
எட்டாவது படலம்
B
ஏழாவது படலம்
C
ஒன்பதாவது படலம்
D
பத்தாவது படலம்
Question 55
மா,பலா,வாழை ஆகியன முக்கனிகள் - எவ்வகைத்தொடர்?
A
தனிநிலைத்தொடர்
B
தொடர்நிலைத்தொடர்
C
கலவைத்தொடர்
D
செய்வினைத்தொடர்
Question 56
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாயப்பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது." என்று கூறியவர் யார்?
A
காந்தியடிகள்
B
பெரியார்
C
நேரு
D
காமராசர்
Question 57
"புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" இத்தொடரில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
A
சிபி மன்னன்
B
மனுநீதிச்சோழன்
C
நெடுஞ்செழியன்
D
கிள்ளிவளவன்
Question 58
  • "தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோ மில்லை
  • தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்" என்று பாடியவர்?
A
சச்சிதானந்தன்
B
இராமலிங்கனார்
C
சாலை இளந்திரையன்
D
பாரதிதாசன்
Question 59
படித்துத்தேறினான் எனும் தொடரின் இலக்கணக்குறிப்பு தருக.
A
குறிப்பு வினையெச்சம்
B
தெரிநிலைவினையெச்சம்
C
முற்றெச்சம்
D
குறிப்பு பெயரெச்சம்
Question 60
நன்னுதல் இலக்கணக்குறிப்பு தருக.
A
தொழிற்பெயர்
B
பண்புத்தொகை
C
உருவகம்
D
ஆறாம் வேற்றுமைத்தொகை
Question 61
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வகுக்க எத்தனை பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது?
A
ஏழு
B
எட்டு
C
ஆறு
D
ஒன்பது
Question 62
அம்பேத்கர் மறைந்த ஆண்டு?
A
1962
B
1956
C
1954
D
1966
Question 63
  • "புன்கண் அஞ்சும் பண்பின்
  • மென்கண் செல்வம் செல்வமென்பதுவே" எனும் பாடலை பாடியவர்?
A
மிளைகிழான் நல்வெட்டனார்
B
குடபுலவியனார்
C
மோசிகீரனார்
D
கண்ணகனார்
Question 64
வெம்மை  + கதிர் =  வெங்கதிர் என்பதில் பயின்று வரும் புணர்ச்சிவிதிகள் யாவை?
  1. a) ஈறுபோதல்
  2. b) முன்னின்ற மெய் திரிதல்
  3. c) இனையவும்
  4. d) இனமிகல்
A
a) மட்டும்
B
a) மற்றும் b)
C
a), b), c)
D
இவை அனைத்தும்
Question 65
கீழ்க்கண்டவற்றுள் பாரதி நடத்திய இதழ்/இதழ்கள்  யாவை?
A
சூரியோதயம்
B
கர்மயோகி
C
ஹோம்லேண்ட்
D
A) மற்றும் B)
Question 66
நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?
A
நன்னன் சேய் நன்னன்
B
கரிகாலன்
C
நெடுஞ்செழியன்
D
நல்லியக்கோடன்
Question 67
யாருடைய இலக்கியக்கட்டுரைகள் உயிர்மீட்சி எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது?
A
உ.வே.சா
B
மீனாட்சி சுந்தரனார்
C
திரு.வி.க
D
ஆறுமுகனார்
Question 68
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர்?
A
துரைராசு
B
இராசகோபாலன்
C
கண்ணதாசன்
D
மு.மேத்தா
Question 69
புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப்பயன்படுத்தியவர் யார்?
A
பூமணி
B
சிற்பி பாலசுப்ரமணியம்
C
சி.மணி
D
தேவதேவன்
Question 70
சிறாஅர் - இலக்கணக்குறிப்பு தருக
A
இன்னிசைஅளபெடை
B
இசைநிறை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
ஒற்றளபெடை
Question 71
பதின்மூன்று அடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ள வெண்பா?
A
இன்னிசை வெண்பா
B
நேரிசை வெண்பா
C
கலி வெண்பா
D
இன்னிசை சிந்தியல் வெண்பா
Question 72
திருவருட்பாவிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
A
5618
B
3615
C
3612
D
5818
Question 73
"திங்களை பாம்பு கொண்டற்று" எனும் திருக்குறள் உணர்த்தும் அறிவியல் செய்தி?
A
சூரியகிரகணம்
B
சூரிய மறைப்பு
C
சந்திரகிரகணம்
D
எரிகல்
Question 74
நிலவு தானாக ஒளிவீசவில்லை எனும் உண்மையை வெளிப்படுத்தும் தமிழ் நூல்?
A
சிலப்பதிகாரம்
B
தொல்காப்பியம்
C
திருவாசகம்
D
திருக்குறள்
Question 75
பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டபோது கலீலியோவின் வயது?
A
24
B
25
C
26
D
27
Question 76
வில்லிபாரதத்தில் கன்ன பருவம் எத்தனையாவது பருவம்?
A
எட்டு
B
ஏழு
C
ஒன்பது
D
பத்து
Question 77
தமிழ்ப்பெருங்காவலர் என்று அழைக்கப்படுபவர்?
A
பரிதிமாற்கலைஞர்
B
பாவலரேறு
C
மொழிஞாயிறு
D
அயோத்திதாசப்பண்டிதர்
Question 78
1981 ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
A
பெங்களூர்
B
சிகாகோ
C
தஞ்சாவூர்
D
மதுரை
Question 79
ஜன்னல் என்பது எம்மொழிச்சொல்?
A
கிரேக்கம்
B
போர்ச்சுக்கீசியம்
C
பிரெஞ்சு
D
வடமொழி
Question 80
குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது?
A
முத்தம்
B
வருகை
C
காப்பு
D
செங்கீரை
Question 81
"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்" எனும் நாட்டுப்புறப்பாடல் எத்தகைய உணர்வுமிக்கது?
A
அச்சம்
B
அழுகை
C
மருட்கை
D
நகைப்பு
Question 82
செய்யுள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A
7
B
6
C
8
D
5
Question 83
பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
A
பாரதிதாசன்
B
ந.வேங்கட மகாலிங்கம்
C
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
D
கவிமணி
Question 84
காராளர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
தச்சர்
B
குயவர்
C
உழவர்
D
ஆசிரியர்
Question 85
வலக்கை தருவ து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்?
A
திரு.வி.க
B
மு.வ
C
பாரதியார்
D
மீனாட்சி சுந்தரனார்
Question 86
  • "நனியுண்டு  நனியுண்டு  காதல் - தமிழ்
  • நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்" என்று பாடியவர்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சச்சிதானந்தன்
D
தமிழ்ஒளி
Question 87
மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதைப்போன்று உள்ளது என்று கூறும் நூல்?
A
சிலப்பதிகாரம்
B
பெரியபுராணம்
C
திருவிளையாடற்புராணம்
D
சீவகசிந்தாமணி
Question 88
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த ஓவியங்கள்?
A
புனையா ஓவியங்கள்
B
அழியாவண்ண ஓவியங்கள்
C
கோட்டோவியங்கள்
D
சித்திரங்கள்
Question 89
என்பணிந்த என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
A
என் + பணிந்த
B
என்னிடம் + பணிந்த
C
என்பு + பணிந்த
D
என்பு + அணிந்த
Question 90
கூன் பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தைக்காத்தவர்?
A
மாணிக்கவாசகர்
B
திருஞானசம்பந்தர்
C
சுந்தரர்
D
திருநாவுக்கரசர்
Question 91
கையிற்சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில் எது?
A
செல்லத்தம்மன் கோவில்
B
மாரியம்மன் கோவில்
C
மீனாட்சியம்மன் கோவில்
D
காளியம்மன் கோவில்
Question 92
ஒருவனுக்கு அவன் வருந்தாமலேயே எல்லா நலன்களையும் தருவது எது?
A
பொறுமை
B
கல்வி
C
நன்றி மறவாமை
D
பொய் கூறாமை
Question 93
உலகின் மிகப்பழமையான குமரிக்கண்டத்தில்தான் தமிழ் தோன்றியதெனக்கூறும் நூல்?
A
புறப்பொருள் வெண்பாமாலை
B
தண்டியலங்காரம்
C
மாறனலங்காரம்
D
அகத்தியம்
Question 94
அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
ஆத்தூர்
B
அதர்வணம்
C
ஆர்க்காடு
D
ஆரதனூர்
Question 95
தமிழகத்தின் சிறப்பு மரம் எது?
A
ஆலமரம்
B
அரச மரம்
C
புன்னைமரம்
D
பனைமரம்
Question 96
மீனாட்சி சுந்தரனார் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?
A
எண்பது
B
நாற்பது
C
எழுபது
D
அறுபத்தைந்து
Question 97
கோவூர்க்கிழார் எம்மன்னனின் அரசு அவைக்களப்புலவர்?
A
கிள்ளிவளவன்
B
நலங்கிள்ளி
C
நெடுங்கிள்ளி
D
நெடுஞ்செழியன்
Question 98
தாயுமானவருக்கு ஞானநெறிகாட்டியவர் யார்?
A
வ.வே.சு
B
மௌனகுரு
C
சுந்தரனார்
D
குமரகுரு
Question 99
இராமானுஜம் முதல் தரமான கணித மேதை என்று கூறியவர்?
A
ஈ.தி.பெல்
B
லார்ட்மெண்ட்லண்ட்
C
இந்திராகாந்தி
D
சூலியன் கக்சுலி
Question 100
"கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…."  எனும் அடிகள் இடம்பெற்ற நூல்?
A
களவழிநாற்பது
B
கார்நாற்பது
C
இன்னாநாற்பது
D
இனியவை நாற்பது
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

7 Comments

Leave a Reply to prakash l Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!