Online TestTamil
9th Std Tamil Notes – Part 8
9th Std Tamil Notes - Part 8
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இறை மகனாகிய இயேசுபெருமான் ---------------- இல் மரியன்னைக்கு மகனாகப் பிறந்தார்.
வியட்னாம் | |
மதினா | |
பெத்தலகேம் | |
எகிப்து |
Question 2 |
குழந்தை இயேசுவை, ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து காப்பாற்றும் பொருட்டுத் தந்தையாகிய சோசப்பும் தாய் மரியன்னையும் குழந்தையோடு ------------- சென்றனர்.
இசுரேல் | |
மதினா | |
பெத்தலகேம் | |
எகிப்து |
Question 3 |
ஏரோதுவின் இறப்புக்குப் பின்னர், அவர்கள் ----------------- க்கு பக்கத்திலுள்ள நாசரேத்திற்கு வந்தனர்.
இசுரேல் | |
மதினா | |
பெத்தலகேம் | |
எகிப்து |
Question 4 |
இயேசு, யூதேய காட்டிலிருந்த புனித ---------------- என்பவரிடம் திருமுழுக்குப் பெற்றார்.
சோசப் | |
ஏரோது மன்னன் | |
யோவான் | |
இவர்களில் யாருமில்லை |
Question 5 |
இயேசு ------------- சீடர்களைக் கொண்டிருந்தார்.
9 | |
10 | |
11 | |
12 |
Question 6 |
பொறமை கொண்டவர்களின் சூழ்ச்சியில் சிக்கிய ------------ என்னும் சீடர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்.
ததயு | |
சீமோன் | |
யூதாசு | |
இவர்களில் யாருமில்லை |
Question 7 |
இயேசு, யூதேய மரபுகளை மீறினார் எனப் பொய்க் குற்றஞ் சாட்டி, -------------------- மரணதண்டனை விதித்தான்.
ஏரோது மன்னன் | |
எகிப்து மன்னன் | |
பிலாத்து மன்னன் | |
இவர்களில் யாருமில்லை |
Question 8 |
கொலையாளிகள் இயேசுவின் தோள்களில் சிலுவையினைச் சுமத்தித் துன்புறுத்திக் ------------ க்குக் கொண்டு சேர்த்தனர்.
ஆல்ப்ஸ் மலை | |
இமய மலை | |
கல்வாரி மலை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 9 |
ஈண்டினியான் புகல்வதென்ன? எம்பெருமான் திருமேனி ; தீண்டினார். சிலுவையொடு சேர்த்தினர். செங்கையிலும் ; காண்டகுசே வடியிலும்வெவ் விருப்பாணி கடாவினர், நீண்டசிலு வையையெடுத்து நிறுத்தினார் நிலங்கீண்டு - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 10 |
மற்றிரண்டு திருடரையும் வலப்புறத்தும் இடப்புறத்தும்; செற்றமொடு குருசேற்றிக் கொலைமாக்கள் செயலொழியச்; சொற்றமறைத் திருவசனம் துலக்கமுறச் சுருதிமுதல்; குற்றவா ளிகளோடு நடுநின்றார் குருசுமிசை; - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 11 |
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்; பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய் !; இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை; மன்னியுமென் றெழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல் - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 12 |
இத்தகைய இரும்பொறையும் மனநலமும் இயைந்தவரே; வித்தகனுக் கடித்தொழும்பர் எனத்தகுமெய்க் கிறிஸ்தவர்மற்; றித்தகைய குணமிலரும் கிறிஸ்தவரென் றிசைபெறுதல்; செத்தவரைத் துஞ்சினவர் எனவுரைக்கும் சீர்மைத்தால் - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 13 |
கீண்டிருப்பு முளையுடலைக் கிழித்துருவி வதைப்புண்டு; மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியுமென் றுரைத்தமொழி; ஈன்டிவரே உலகினுக்கோர் இரட்சகரென் றெடுத்துரைக்கும். வேண்டுமோ இனிச்சான்றும் இதைவிடுத்து வேறொன்றே - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 14 |
மன்றாடும் அருட்சீவ வசனத்தை வன்மறவோர்; ஒன்றாகப் பொருள்செய்யார் உடைகளைந்து பங்கிட்டார்; குன்றாத நசரேயன் யூதருக்குக் குலவேந்தன்; என்றாக டியமான எழுத்திட்டார் சிலுவைமிசை - இந்த பாடல் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
தேம்பாவணி, வீரமாமுனிவர் | |
இரட்சணிய யாத்திரிகம், எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை | |
பெத்தலகேம் குறவஞ்சி, தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 15 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
ஈண்டு – உண்பது | |
புகல்வது – சொல்வது | |
கடாவினார் – அடித்தார் | |
கீண்டு – தோண்டி |
Question 15 Explanation:
குறிப்பு :- ஈண்டு என்பதன் சரியான சொற்பொருள் இவ்விடம்.
Question 16 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
செற்றம் – இரத்தம் | |
குருசு – சிலுவை | |
சொற்ற – சொன்ன | |
துளக்கம் – விளக்கம் |
Question 16 Explanation:
குறிப்பு :- செற்றம் என்பதன் சரியான சொற்பொருள் சினம்.
Question 17 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சுருதிமுதல் – மறை முதல்வராகிய இயேசுநாதர் | |
சதைப்புண்டு – நகைச்சுவை | |
பன்னரிய – சொல்லுதற்கரிய | |
இரும்பொறை – பெரும்பொறுமை |
Question 17 Explanation:
குறிப்பு :- சதைப்புண்டு என்பதன் சரியான சொற்பொருள் சிதைக்கப்பட்டு.
Question 18 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வித்தகன் – ஆண்டவன் | |
தொழும்பர் – அடியார் | |
இசைபெறுதல் – கோபப்படுதல் | |
துஞ்சினவர் – உறங்கியவர் |
Question 18 Explanation:
குறிப்பு :- இசைபெறுதல் என்பதன் சரியான சொற்பொருள் புகழ்பெறுதல்.
Question 19 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
கீண்டு – பிளந்து | |
இருப்புமுளை – ஆணையின் நுனி | |
வதைப்புண்டு – துன்பமடைந்து | |
இரட்சகர் – எதிரி |
Question 20 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மன்றாடும் – மிக வேண்டுதல் | |
ஆகடியம் – ஏளனம் | |
மாண்டுப்படும்போது – இறக்கும்நிலையில் | |
மருங்கு - தூரம் |
Question 20 Explanation:
குறிப்பு :- மருங்கு என்பதன் சரியான சொற்பொருள் பக்கம்.
Question 21 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
செங்கை, வன்மறவோர், சேவடி, வெவ்விருப்பு – பண்புத்தொகைகள் | |
இருப்பாணி – வலித்தல் விகாரம் | |
கனிவாய் – உருவகம் | |
நாழி - ஆகுபெயர் |
Question 21 Explanation:
குறிப்பு :- கனிவாய் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு உவமைத்தொகை
Question 22 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான் | |
காண்டகு = காண் + தகு | |
சேவடி = சே + அடி | |
வெவ்விருப்பாணி = வெம்மை + இரும்பு + ஆணி |
Question 22 Explanation:
குறிப்பு :- சேவடி என்பதன் சரியான பிரித்தறிதல் செம்மை + அடி.
Question 23 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
மற்றிரண்டு = மற்று + இரண்டு | |
குருசேற்றி = குருசு + ஏற்றி | |
தன்னரிய = தன்னை + அறிய | |
தவிப்பெய்தி = தவிப்பு + எய்தி |
Question 23 Explanation:
குறிப்பு :- தன்னரிய என்பதன் சரியான பிரித்தறிதல் தன் + அரிய.
Question 24 |
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
இத்தகைய = இத் + தகைய | |
என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன | |
இருப்புமுளை = இரும்பு + முளை | |
ஈண்டிவரே = ஈண்டு + இவரே |
Question 24 Explanation:
குறிப்பு :- இத்தகைய என்பதன் சரியான பிரித்தறிதல் இ + தகைய.
Question 25 |
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலின் ஆசிரியர் பெயர்?
தஞ்சை வேதநாயகம் | |
வீரமாமுனிவர் | |
உமறுப்புலவர் | |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை |
Question 26 |
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலின் ஆசிரியர் எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை ------------------ மாவட்டத்திலுள்ள கரையிருப்பு என்னும் ஊரில் பிறந்தார்.
நாமக்கல் | |
திருச்சி | |
தூத்துக்குடி | |
திருநெல்வேலி |
Question 27 |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை அவர்களின் காலம்?
23.4.1837 முதல் 03.02.1910 வரை | |
23.4.1817 முதல் 03.02.1890 வரை | |
23.4.1847 முதல் 03.02.1920 வரை | |
23.4.1827 முதல் 03.02.1900 வரை |
Question 28 |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை அவர்களின் பெற்றோர் பெயர்?
சாத்தப்பன் - சொர்ணமுகி | |
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் | |
முத்தையா - விசாலட்சுமி | |
சங்கரநாராயணர் – தெய்வநாயகி அம்மாள் |
Question 29 |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை அவர்களின் பெற்றோர் சங்கரநாராயணர் – தெய்வநாயகி அம்மாள் அவர்கள் வாழ்ந்த ஊர் எது?
சடையம்பட்டி | |
ராசிபுரம் | |
ரெட்டியாபட்டி | |
வெங்கடாசலபுரம் |
Question 30 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
இவர், தந்தையிடம் தமிழிலக்கியங்களையும், மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார். சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
தஞ்சை வேதநாயகம் | |
வீரமாமுனிவர் | |
உமறுப்புலவர் | |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை |
Question 31 |
இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம், இரட்சணியக்குறள் - ஆகிய நூல்களின் ஆசிரியர் பெயர் என்ன?
தஞ்சை வேதநாயகம் | |
வீரமாமுனிவர் | |
உமறுப்புலவர் | |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை |
Question 32 |
கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர் யார்?
தஞ்சை வேதநாயகம் | |
வீரமாமுனிவர் | |
உமறுப்புலவர் | |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை |
Question 33 |
இரட்சணியயாத்திரிகம் என்பதன் பொருள் (--------------------------------------) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பது. ஆன்ம ஈடேற்றத்தை விரும்புவர் என்பதும் பொருந்தும்.
உடல், தன்னைக் காக்க வேண்டி | |
மனது, தன்னைக் காக்க வேண்டி | |
உலகம், தன்னைக் காக்க வேண்டி | |
உயிர், தன்னைக் காக்க வேண்டி |
Question 34 |
---------------- என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி, ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார் வழிநூலாகத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரில் இயற்றினார்.
முகமது பைரோசு | |
வில்சன் சைலசு | |
ஜியூ போப் | |
ஜான் பன்யன் |
Question 35 |
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை - இதில் எச்.ஏ. என்பதன் விளக்கம்?
ஹெலன் ஆல்பிரட் | |
ஹெலன் ஆசுதோசு | |
ஹென்றி ஆல்பர்ட்டு | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 36 |
மனிதகுலத்தின் உழைப்பின் மேன்மையைப் பயன்வடிவில் மக்களெல்லாம் ஒன்றுகூடித் துய்த்து இன்புறுகின்ற இணையில்லாத் திருநாள்தான் ---------------.
தீபாவளி | |
ஹோலி | |
பொங்கல் | |
கிறிஸ்துமஸ் |
Question 37 |
பழமைகளை பக்குவமாய் வழியனுப்பிவிட்டு, வளர்ச்சிக்கு வளமை கூட்டும் புதுவரவுகளுக்கு மலர்ச்சியோடு மக்கள் தம் மனத்தால் வரவேற்பு இசைத்திடும் வண்ணத் திருநாள் தான் -----------------.
தீபாவளி | |
ஹோலி | |
பொங்கல் | |
கிறிஸ்துமஸ் |
Question 38 |
உலகின் உயரிய வாழ்வுக்கு அச்சாணியாய், மூல ஒளியாய்த் திகழ்கின்ற எழுகதிரைப் போற்றி வணங்குகின்ற உயிர்ப்புள்ள திருநாள் தான் -------------.
தீபாவளி | |
ஹோலி | |
பொங்கல் | |
கிறிஸ்துமஸ் |
Question 39 |
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே - என்னும் பாடல் எந்த திருநாளை குறிப்பிடுகிறது?
தீபாவளி | |
ஹோலி | |
போ(க்)கித் திருநாள் | |
கிறிஸ்துமஸ் |
Question 40 |
காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்; கட்டி அரிசி அவல் அமைத்து; வாயுடை மறையவர் மந்திரத்தால் .. .. .. .. .. .. .. .. .. வணங்குகின்றேன் - இந்த பாடல் வரியின் ஆசிரியர்?
இராமானுஜர் | |
ஆண்டாள் | |
சுந்தரர் | |
பாரதியார் |
Question 41 |
ஆந்திரா, கருநாடகா ஆகிய மாநிலங்களிலும் மகர சங்கராந்தி எனவும் ஜப்பான், ஜாவா முதலிய நாடுகளில் அறுவடைத் திருவிழா எனவும் கொண்டாடப்படும் விழா எது?
தீபாவளி | |
ஹோலி | |
பொங்கல் | |
கிறிஸ்துமஸ் |
Question 42 |
நேர்மை - என்னும் துணைப் பாடக் கதைப்பகுதி எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
சேதுராமன் கதைகள் | |
விகடகவி கதைகள் | |
ஆழி வே. இராமசாமி, நல்லொழுக்கக் கதைகள் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 43 |
ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவது --------------- எனப்படும்.
அணி | |
வழு | |
பொருள்கோள் | |
ஆகுபெயர் |
Question 44 |
ஆகுபெயர் ------------- வகைப்படும்?
12 | |
14 | |
16 | |
18 |
Question 45 |
"யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இது எந்த ஆகுபெயர்?
கருவியாகு பெயர் | |
காரியவாகு பெயர் | |
கருத்தாவாகு பெயர் | |
உவமையாகு பெயர் |
Question 45 Explanation:
விளக்கம் :- யாழ் கேட்டு மகிழ்ந்தாள். இத்தொடரில், யாழ் என்னும் கருவி இசைக்கு ஆகி வந்ததனால் கருவியாகு பெயர். கருவியாகு பெயர் : கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவரும். (எ.கா.) : வீணை கேட்டு மெய் மறந்தேன்
Question 46 |
நான் சமையல் கற்றேன் - இது எந்த ஆகுபெயர்?
கருவியாகு பெயர் | |
காரியவாகு பெயர் | |
கருத்தாவாகு பெயர் | |
உவமையாகு பெயர் |
Question 47 |
திருவள்ளுவரைப் படித்துப்பார் - இது எந்த ஆகுபெயர்?
கருவியாகு பெயர் | |
காரியவாகு பெயர் | |
கருத்தாவாகு பெயர் | |
உவமையாகு பெயர் |
Question 47 Explanation:
விளக்கம் :- திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடரில் திருவள்ளுவர் என்பது, அவரால் இயற்றப் பெற்ற நூலுக்கு ஆகிவந்ததனால், கருத்தாவாகு பெயராயிற்று.
Question 48 |
ஒருவரைப் பார்த்து, நாரதர் வருகிறார் எனல் - இது எந்த ஆகுபெயர்?
கருவியாகு பெயர் | |
காரியவாகு பெயர் | |
கருத்தாவாகு பெயர் | |
உவமையாகு பெயர் |
Question 48 Explanation:
விளக்கம் :- ஒருவரைப் பார்த்து, நாரதர் வருகிறார் எனல். இத்தொடரில் நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைபோன்ற (கலகமூட்டுபவர்) வேறொருவர்க்கு ஆகிவந்தது. அதனால், இஃது உவமையாகுபெயராயிற்று
Question 49 |
பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி; கருவி காரியம் கருத்தன் ஆதியுள்; ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்; தொன்முறை உரைப்பன ஆகு பெயரே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
இனியவை நாற்பது | |
பழமொழி நானூறு | |
நன்னூல் | |
மதுரைக்காஞ்சி |
Question 50 |
வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது -------------------- ஆகும்.
ஆற்றுநீர்ப்பொருள்கோள் | |
மொழிமாற்றுப்பொருள்கோள் | |
நிரல்நிறைப்பொருள்கோள் | |
விற்பூட்டுப்பொருள்கோள்விற்பூட்டுப்பொருள்கோள் |
Question 50 Explanation:
விளக்கம் :- விற்பூட்டுப்பொருள்கோள் : வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல்போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது விற்பூட்டுப் பொருள்கோள். இதனைப் பூட்டுவிற்பொருள்கோள் எனவும் கூறுவர்.
(எ.கா.) : நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
இக்குறளில், உலகு என்னும் இறுதிச்சொல் முதல்சொல்லான நெருநல் என்பதோடு சேர்த்துப் பொருள் கொள்வதனால் இது பூட்டுவில் பொருள்கோள்.
Question 51 |
ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது ------------------- ஆகும்.
தாப்பிசைப்பொருள்கோள் | |
அளைமறிபாப்புப்பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப்பொருள்கோள் | |
அடிமறிமாற்றுப்பொருள்கோள் |
Question 51 Explanation:
விளக்கம் :- தாப்பிசை பொருள்கோள் : ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள்கோள்.
தாம்பு + இசை – தாப்பிசை – ஊஞ்சல் கயிறு அசைதல்போல.(தாம்பு – ஊஞ்சல் கயிறு).
(எ.கா.) : இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
இப்பாடலில் ‘சினத்தை’ என்னும் நடுநின்ற சொல்லைச், சினத்தை உடையவர் (இறந்தார்) இறந்தார் அனையர் எனவும், சினத்தைத் துறந்தார் (துறந்தார்) ஞானியர் துணை எனவும் அமைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
Question 52 |
பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது ------------------ ஆகும்.
தாப்பிசைப்பொருள்கோள் | |
அளைமறிபாப்புப்பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப்பொருள்கோள் | |
அடிமறிமாற்றுப்பொருள்கோள் |
Question 52 Explanation:
விளக்கம் :- அளைமறிபாப்புப் பொருள்கோள் :- பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது, அளைமறிபாப்புப் பொருள்கோள். (அளை – புற்று, பாப்பு – பாம்பு.)
(எ.கா.) :- தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித் தளர்வார் தாமும்
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து
நாற்கதியிற் சுழல்வார் தாமும்
மூழ்ந்த பிணிநலிய முன்செய்த
வினையென்றே முனிவார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து
நெறிமுன்னி முயலா தாரே.
-இப்பாடலில் ‘வாழ்ந்த மொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே’ என்னும் ஈற்றடியைப் பாடலின் முதலில்கொண்டு பொருள் கொள்ளுதல் வேண்டும்.
Question 53 |
செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது ----------- ஆகும்.
தாப்பிசைப்பொருள்கோள் | |
அளைமறிபாப்புப்பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப்பொருள்கோள் | |
அடிமறிமாற்றுப்பொருள்கோள் |
Question 53 Explanation:
விளக்கம் :- கொண்டுகூட்டுப் பொருள்கோள் :- செய்யுள்களின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோள்.
(எ.கா.) :- கட்டிக் கரும்பு கசக்கும் மிகக்கனிந்த
எட்டிக் கனியினிக்கும் என்னூரில் – பட்டியுள
காளை படிபால் கறக்குமே நல்லபசு
வேளை தவிரா துழும் .
-இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் விளங்காது. இதில் உள்ள சொற்களைக் கட்டிக் கரும்பு இனிக்கும், மிகக்கனிந்த எட்டிக்கனி கசக்கும், பட்டியிலிருக்கும் காளை மாடு நேரந்தவிராது உழும். நல்ல பசு படி பால் கறக்கும் எனப் பொருள் கொள்வதற்கு ஏற்ப அடிதோறும் மாறிக்கிடக்கின்ற சொற்களைப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
குறிப்பு : மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது. கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்பது பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள்கொள்வது.
Question 54 |
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது --------------- ஆகும்.
தாப்பிசைப்பொருள்கோள் | |
அளைமறிபாப்புப்பொருள்கோள் | |
கொண்டுகூட்டுப்பொருள்கோள் | |
அடிமறிமாற்றுப்பொருள்கோள் |
Question 54 Explanation:
விளக்கம் :- அடிமறிமாற்றுப் பொருள்கோள் :- செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.
(எ.கா.) : மாறாக் காதலர் மலைமறந் தனரே
ஆறாக் கட்பனி வரலா னாவே
வேறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழி யான்வாழு மாறே..
-இப்பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக எப்படி மாற்றிப் பொருள்கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாது.
Question 55 |
பொருந்தாதது எது? உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக? கொண்டல்.
வேகம் | |
தாகம் | |
மேகம் | |
சோகம் |
Question 56 |
பொருந்தாதது எது? உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக? ஆகுலம்.
வருத்தம் | |
சோர்வு | |
தளர்வு | |
மகிழ்ச்சி |
Question 57 |
பொருந்தாதது எது? உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக? தாமம்
காலை | |
மாலை | |
ஆடை | |
அணி |
Question 58 |
பொருந்தாதது எது? உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக? புரிசை.
மதில் | |
மாலை | |
ஆடை | |
அணி |
Question 59 |
பொருந்தாதது எது? உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக? மல்லல்.
வளம் | |
மாலை | |
ஆடை | |
அணி |
Question 60 |
தமிழ் அறிஞர்களே ! தமிழ் நாடெங்கும் தமிழ்ச்சங்கம் நிறுவுங்கள்; தமிழ்ப்பாடம் சொல்லுங்கள்; கலைச்செல்வத்தை வாரி வழங்குங்கள்; தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யுங்கள். இவ்விதம் ஒல்லும் வகையால் நாம் ஒவ்வொருவரும் பணி செய்வோமானால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் நாடு புத்துயிர் பெற்றுவிடும். - இந்த கூற்று யாருடையது?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
திரு.வி.க | |
ரா.பி.சேதுப்பிள்ளை (தமிழின்பம்) |
Question 61 |
அக் காலத்தில் நாடு முற்றும் தமிழுணர்ச்சி பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்கும். கல்லூரிகளில் நல்லாசிரியரகள் எல்லோரும் தமிழறிஞராயிருப்பர். பல்கலைக் கழகங்களில் நக்கீரர் போன்ற நற்றமிழ்ப் புலவர் தலைவராக வீற்றிருப்பர்.- இந்த கூற்று யாருடையது?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
திரு.வி.க | |
ரா.பி.சேதுப்பிள்ளை (தமிழின்பம்) |
Question 62 |
'எந்த மொழியும் நமது சொந்த மொழிக்கு இணையாகாது' என்று தமிழ் நாட்டு இளைஞர் செம்மாந்து பேசுவர்; 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்' என்று முரசு கொட்டுவர். எட்டுத் திசையிலும் தமிழ் நாடு ஏற்றமுற்று விளங்கும். அந்த நிலையினை இன்று எண்ணிப் பாரீர் ! அதனை எய்தியே தீர்வோம் ; பணிசெய்ய வாரீர் ! - இந்த கூற்று யாருடையது?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
திரு.வி.க | |
ரா.பி.சேதுப்பிள்ளை (தமிழின்பம்) |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 62 questions to complete.