Online TestTamil

9th Std Tamil Notes – Part 6

9th Std Tamil Notes - Part 6

Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
யாரும் சிறியர் யான்பெரியன், எதிலும் சிறந்தது என்னலமாம்; பாரில் எனக்கீ டில்லை எனப் பயனில் மொழிகள் பகர்வதும் ஏன்? - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 2
சேரும் உலகப் பொருளையெல்லாம் தெரிய நோக்கித் தனைநோக்காச் சீரில் அமைந்த கண்மணியின் செயலை நோக்கித் தெளிவீரே! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 3
பொருந்தாதது எது ? சொற்பொருள் தருக?
A
பகர்வது - சொல்வது
B
தெளிவிரே - தெளியுங்கள்
C
துவ்வா - நோக்கிய
D
அகன்று - விலகி
Question 3 Explanation: 
குறிப்பு :- துவ்வா என்பதன் சொற்பொருள் நுகராத.
Question 4
பொருந்தாதது எது ? இலக்கணக்குறிப்பு தருக?
A
நோக்கி - வினையெச்சம்
B
துவ்வா விடம் - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
C
வாழ்க - வியங்கோள் வினைமுற்று
D
செய்தல் - பண்புப்பெயர்
Question 4 Explanation: 
குறிப்பு :- செய்தல் என்பதன் இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 5
அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்; அன்பு நீங்கின் உறவினரும் அகன்று நிற்கும் அயலவராம்; - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 6
துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும், துன்ப நோயை ஆக்கிடுமேல் தூய அமுதம் விடமாமே - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 7
ஆழி சூழும் உலகாளும் அரச னாக வேண்டுமெனில் வாழும் வாழ்வில் உன்னையும் நீ மறந்து வாழ வேண்டுமடா! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 8
ஏழை யாகி எளியவரின் எளிய னாக வேண்டுமடா! தோழ னாகி யாவர்க்கும் தொண்ட னாக வேண்டுமடா! - இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
பாரதியார் பாடல்கள், பாரதியார்
B
குறிஞ்சித்திட்டு, பாரதிதாசன்
C
குழந்தை இலக்கியம், அழ.வள்ளியப்பா
D
உமர்கய்யாம் பாடல்கள், கவிமணி தேசிக விநாயகனார்
Question 9
கீழ்க்கண்ட கூற்றைப் படித்து இவர் யார் என கூறுக? இவர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார். இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
A
பாரதியார்
B
கவிமணி தேசிக விநாயகனார்
C
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
D
பாரதிதாசன்
Question 10
உமர்கய்யாம் ------------- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். இவரது முழுப் பெயர் --------------------- என்பது. இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
A
9, முகமது பைரோஸ்
B
10, குணங்குடி மஸ்தான்
C
11, கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்
D
12, காபித்தூள் காதிறு
Question 11
உமர்கய்யாம் ---------------, --------------- துறைகளில் புலமைமிக்கவராய் திகழ்ந்தார்.
A
அறிவியல், வானவியல்
B
கணிதம், வானவியல்
C
வானவியல், சோதிடவியல்
D
கணிதம், புவியியல்
Question 12
கீழ்க்கண்ட கூற்றைப் படித்து இவர் யார் என கூறுக? மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச்செல்வம், ஆசிய ஜோதி முதலிய நூல்களின் ஆசிரியர் இவர். இவரது காலம் 1876 முதல் 1954 ஆம் ஆண்டுவரை.
A
பாரதியார்
B
கவிமணி தேசிக விநாயகனார்
C
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
D
பாரதிதாசன்
Question 13
உமர்கய்யாம் பாடல்கள் இம்மை மறுமை பற்றி ----------------------- என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழிபெயர்ப்பு. இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார். இதில், நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
A
தவவாழ்வு
B
சொற்புதினம்
C
ரூபாயத்
D
கலியுகம்
Question 14
ரூபாயத் - என்பதன் பொருள் என்ன?
A
இரண்டடிச் செய்யுள்
B
மூன்றடிச் செய்யுள்
C
நான்கடிச் செய்யுள்
D
ஐந்தடிச் செய்யுள்
Question 15
மணிமேகலையை இயற்றியவர் யார்?
A
சீத்தலைச் சாத்தனார்
B
நாகுத்தனார்
C
இளங்கோவடிகள்
D
சயங்கொண்டர்
Question 16
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் பெயர் என்ன?
A
பல்லவி
B
அரசமாதேவி
C
மணிமேகலை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 17
முற்பிறப்பின் வினைப்பயன் காரணமாக அரசகுமாரனாகிய --------------- என்பவன், மணிமேகலையை மணம்புரிய விரும்பினான்.
A
தனஞ்செயன்
B
உதயகுமரன்
C
விஜயேந்திரன்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 18
மணிமேகலையை, மணிபல்லவத் தீவிற்கு வான்வழியே தூக்கிச் சென்றது யார்?
A
மலைக்கோவில் தெய்வம்
B
மணிமேகலா தெய்வம்
C
பளிக்கரை தெய்வம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 19
மணிமேகலை பசியற்றிருக்கவும் விரும்பும் உருவம் எடுக்கவும் வான்வழிச் செல்லவும் தேவையான மூன்று மந்திரங்களைத் தெரிவித்து மறைந்தது யார்?
A
மலைக்கோவில் தெய்வம்
B
மணிமேகலா தெய்வம்
C
பளிக்கரை தெய்வம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 20
------------------ என்பவரின் உதவியால், மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றுப் புகார் நகரை அடைகிறாள்.
A
மாதவி
B
கண்ணகி
C
தீவதிலகை
D
இவர்களில் யாருமில்லை
Question 21
மணிமேகலை, --------------- என்பவரின்  அறிவுரைப்படி ஆதிரையிடம் முதன் முதலில் பிச்சையேற்றாள். அதன்மூலம் அமுதசுரபியில் அள்ள அள்ளக் குறையாத அன்னம் பெருகியது. அதனைக்கொண்டு பசிப்பிணிநீக்கும் அறப்பணியை மேற்கொள்கிறாள்.
A
தீவதிலகை
B
மணிமேகலை தெய்வம்
C
அறவணவடிகள்
D
இவர்களில் யாருமில்லை
Question 22
அமுதசுரபி, முற்பிறப்பில் ------------- என்பவரிடம் இருந்தது என்பதை அறிந்த மணிமேகலை அவனைக் காணும் பொருட்டு ஆபுத்திரன் நாட்டிற்குச் செல்கிறாள்
A
தீவதிலகை
B
தீவதிலகை
C
ஆபுத்திரன்
D
இவர்களில் யாருமில்லை
Question 23
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஆயம் – தோழியர் கூட்டம்
B
ஆசனம் – இருக்கை
C
நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை
D
யாக்கை – இருப்பிடம்
Question 23 Explanation: 
குறிப்பு :- யாக்கை என்பதன் சரியான பொருள் உடம்பு.
Question 24
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
பேதைமை – அறியாமை
B
செய்கை – இருவினை
C
அரு – உருவமற்றது
D
உரு – உருகுதல்
Question 24 Explanation: 
குறிப்பு :- உரு என்பதன் சரியான பொருள் வடிவம்.
Question 25
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வாயில் – ஐம்பொறிகள்
B
ஊறு – புலன்களின் இயல்பு
C
நுகர்வு – இன்பதுன்ப நுகர்ச்சி
D
வேட்கை – வெறுத்தல்
Question 25 Explanation: 
குறிப்பு :- வேட்கை என்பதன் சரியான பொருள் விருப்பம்.
Question 26
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
பெரும்பேறு – வீடுபேறு
B
கோடு – மலை
C
அலகில – அளவற்ற
D
குறளை – புறம்பேசுதல்
Question 27
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வெஃகல் – கோபம்
B
வெகுளல் – கடுஞ்சினம் கொள்ளுதல்
C
பொல்லாக் காட்சி – மாயத் தோற்றம்
D
சீலம் – ஒழுக்கம்
Question 27 Explanation: 
குறிப்பு :- வெஃகல் என்பதன் சரியான பொருள் பெருவிருப்பம்.
Question 28
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.  
A
புரைதீர் – குற்றம் நீங்கிய
B
கேண்மின் – கூறுங்கள்
C
முத்தேர் நகை – முத்துச் சிரிப்பு
D
உய்ம்மின் – போற்றுங்கள், நற்கதியடையுங்கள்
Question 28 Explanation: 
குறிப்பு :- கேண்மின் என்பதன் சரியான பொருள் கேளுங்கள்.
Question 29
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
உறைதல் – தங்குதல்
B
கூற்று – எமன்
C
மாசில் – குற்றமுள்ள
D
தொழுது – வணங்கி
Question 29 Explanation: 
குறிப்பு :- மாசில் என்பதன் சரியான பொருள் குற்றமற்ற.
Question 30
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
புக்கு – புகுந்து
B
இடர் – இன்னல்
C
மேனி - உடல்
D
மருங்கு - தூரம்
Question 30 Explanation: 
குறிப்பு :- மருங்கு என்பதன் சரியான பொருள் பக்கம்.
Question 31
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
A
தேவியும் ஆயமும் - எண்ணும்மை
B
அருந்தவர், நல்வினை - பண்புத்தொகைகள்
C
வாழ்க - வியங்கோள் வினைமுற்று
D
செய்தவம், வீழ்கதிர் - வினைமுற்று
Question 31 Explanation: 
குறிப்பு :- செய்தவம், வீழ்கதிர் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு வினைத்தொகை.
Question 32
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
A
ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B
ஆழ்நரகு, பயன்தெரி புலவர் - வினைத்தொகை
C
தெளிதல் - பண்புப்பெயர்
D
பல்லுயிர், பெரும்பேறு, நல்வினை, தீவினை, பேரின்பம் - பண்புத்தொகைகள்
Question 32 Explanation: 
குறிப்பு :- தெளிதல் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 33
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக?
A
காமத்தீ - உருவகம்
B
கடுஞ்சொல், நல்லறம் - பண்புத்தொகை
C
பொல்லாக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
D
அரைசன் - வியங்கோள் வினைமுற்று
Question 33 Explanation: 
குறிப்பு :- அரைசன் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு இடைப்போலி.
Question 34
தேவியும் ஆயமும் சித்திரா பதியும், மாதவி மகளும் மாதவர்க் காண்டலும், எழுந்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால், தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க, அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும்,.. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 35
இணைவளை நல்லாள் இராசமா தேவி, அருந்தவர்க் கமைந்த ஆசனம் காட்டித், திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தஎன், காண்டகு நல்வினை நும்மையீங்கு அழைத்தது, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 36
நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து, மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத், தேவி கேளாய் செய்தவ யாக்கையின், மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றோர், இறந்தார் என்கை இயல்பே இதுகேள் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 37
பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன், இற்றென வகுத்த இயல்பீ ராறும், பிறந்தோ ரறியின் பெரும்பேறு அறிகுவர், அறியா ராயின் ஆழ்நரகு அறிகுவர். - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 38
பேதைமை யென்பது யாதென வினவின், ஓதிய இவற்றை உணராது மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து, முயற்கோ டுண்டேனக் கேட்டது தெளிதல், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 39
உலகம் மூன்றினும் உயிராம் உலகம், அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரும் நரகரும், தொக்க விலங்கும் பேயும் என்றே, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 40
தீவினை யென்பது யாதென வினவின், ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய், கொலையே களவே காமத் தீவிழைவு, உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 41
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று, உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப், பத்து வகையால் பயன்தெரி புலவர், இத்திறம் படரார் படர்குவர் ஆயின், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக், கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்,. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 42
நல்வினை யென்பது யாதென வினவின்,  சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச், சீலம் தாங்கித் தானம் தலைநின்று, மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 43
அரைசன் தேவியொ டாயிழை நல்லீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின், மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ, பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்கு, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 44
நன்றறி மாதவன் நல்லடி வணங்கித், தேவியும் ஆயமும் சித்திரா பதியும், மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின், இந்நகர் மருங்கின்யா னுறைவேன் ஆயின், மன்னவன் மகற்கிவள் வருங்கூற்று என்குவர், - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 45
ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள், மாசில் மணிபல் லவம்தொழு தேத்தி, வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்கு, எஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல், எனக்கிடர் உண்டென்று இரங்கல் வேண்டா, மனக்கினி யீர்.. ….- இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 46
நல்வினை தீவினை என்றிரு வகையாற், சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி                                           வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 47
பொருந்தாதது எது ? பிரித்தறிதல்
A
எழுந்தெதிர் = எழுந்தே + எதிர்
B
அறிவுண்டாக = அறிவு + உண்டாக
C
நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை
D
பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர்
Question 47 Explanation: 
குறிப்பு :- எழுந்தெதிர் என்பதன் சரியான பிரித்தறிதல் எழுந்து + எதிர்.
Question 48
பொருந்தாதது எது ? பிரித்தறிதல்
A
இயல்பீராறு = இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
B
எனக்கிடர் = எனக்கி+ இடர்
C
தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
D
உண்டென்று = உண்டு + என்று
Question 48 Explanation: 
குறிப்பு :- எனக்கிடர் என்பதன் சரியான பிரித்தறிதல் எனக்கு + இடர்.
Question 49
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
A
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றியது மணிமேகலை. சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
B
இவர், திருச்சிராப்பள்ளியை சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர். இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர். தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
C
கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர். இக்காரணங்களினால், இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார். இவர், கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
D
இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பர்.
Question 49 Explanation: 
குறிப்பு:- இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
Question 50
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
A
மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெவ்வேறு நூல்களாயினும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்பெறுகின்றன.
B
மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதனால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
C
இந்நூல் சொற்சுவையும் பொருட்சுவையும், இயற்கை வருணனைகளும் நிறைந்தது.
D
இந்நூல் சமண சமயச் சார்புடையது. நாற்பது காதைகளைக் கொண்டது.
Question 50 Explanation: 
குறிப்பு :- பெளத்தமதச் சார்புடையது. முப்பது காதைகளைக் கொண்டது.
Question 51
வஞ்சிமாநகருக்குச் சென்று பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் குறைவற்ற நல்லறத்தைச் செய்துகொண்டிருப்பேன். 'என் மனத்துக்கு இனியவர்களே, எனக்கு இன்னல் உண்டாகுமென்று யாரும் வருந்தேவேண்டா - என்று கூறியவர் யார்?
A
சித்திராபதி
B
ஆயமகளிர்
C
அறவண அடிகள்
D
மணிமேகலை
Question 52
அரசமாதேவியுடன் இருக்கும் நங்கையரே! நான் கூறும், குற்றம் நீங்கிய நல்லறத்தைப் போற்றிக் கேளுங்கள்! எனக் கூறியவர் யார்?
A
சித்திராபதி
B
ஆயமகளிர்
C
அறவண அடிகள்
D
மணிமேகலை
Question 53
“முத்துச்சிரிப்பினையுடைய மணிமேகலையே! நீ உனது முற்பிறப்பினை உணர்ந்திருக்கிறாய். மேலும், பிற்சமயங்கள் கூறும் அறங்களையும் நீ கேட்டறிந்துகொள். அதன் பின்னர், ஒரு நாள் மீண்டும் வந்து உனக்குப் பல்வேறு அறங்களையும் அவற்றின் பகுதிகளையும் கூறுவேன் - எனக் கூறியவர் யார்?
A
சித்திராபதி
B
ஆயமகளிர்
C
அறவண அடிகள்
D
அரசமாதேவி
Question 54
தீவினை என்பது என்னவெனில் --------, ------------, -------------  கொடிய விருப்பம் ஆகிய உடலில் தோன்றும் மூன்றும்.
A
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல்
B
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம்
C
கொலை, களவு, காமம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 55
தீவினை என்பது என்னவெனில் --------------, ----------------, ----------------, --------------- எனச் சொல்லில் தோன்றும் நான்குமாம்.
A
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்றசொல்
B
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம், உதவி செய்யாமை
C
கொலை, களவு, காமம், வறியவர்க்கு உதவாதிருத்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 56
தீவினை என்பது என்னவெனில் --------------, ----------------, ---------------- என உள்ளத்தில் தோன்றும் மூன்றும்.
A
பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல்
B
பெருவிருப்பம், கடுஞ்சினங்கொள்ளுதல், மாயத்தோற்றம்.
C
கொலை, களவு, காமம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 57
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது -----------.
A
உணவு
B
உடை
C
இருப்பிடம்
D
பணம்
Question 58
தமிழர் மருத்துவத்தில் ---------- என்பது அனைத்து நோய்களையும் தீர்க்ககூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது.
A
உணவு
B
காற்று
C
நீர்
D
உடற்பயிற்சி
Question 59
பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது ------------ காப்பியம்
A
சிலப்பதிகாரம்
B
சீவகசிந்தாமணி
C
மணிமேகலை
D
மணிமேகலை
Question 60
பிணிக்கு மருந்து உணவே. ஆதலால்தான், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே என ----------------, --------------- நூல்கள் கூறுகின்றன.
A
கலித்தொகை, திருக்குறள்
B
சிலப்பதிகாரம், சீவசிந்தாமணி
C
புறநானூறு, மணிமேகலை
D
மதுரைக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி
Question 61
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் - என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?
A
இளங்கோவடிகள்
B
முன்றுறை அரையனார்
C
நாகுத்தனார்
D
திருவள்ளுவர்
Question 62
பொருந்தாதது  எது?
A
மஞ்சள் - நெஞ்சிலுள்ள சளியை நீக்கும்
B
கொத்தமல்லி - பித்தத்தைப் போக்கும்
C
சீரகம் - தலை வலியைப் போக்கும்
D
மிளகு - தொண்டைக் கட்டைத் தொலைக்கும்
Question 62 Explanation: 
குறிப்பு :- சீரகம் - வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்.
Question 63
பொருந்தாதது  எது?
A
பூண்டு - வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை மிகுவிக்கும்
B
வெங்காயம் - குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைபடுத்தும்
C
பெருங்காயம் - பித்தத்தைப் போக்கும்
D
இஞ்சி - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்
Question 64
பொருந்தாதது  எது?
A
தேங்காய் - வளியை வெளியேற்றும்
B
கறிவேப்பிலை - மணமூட்டி உணவிருப்பை உண்டாக்கும். உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படவும் பித்தம் போக்கவும் எலுமிச்சை ஊறுகாயை மோர்ச் சோற்றுடன் உண்ணலாம்
C
நல்லெண்ணெய் - கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்
D
சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுவிக்கும். உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் கீரை நல்லது.
Question 64 Explanation: 
குறிப்பு :- தேங்காய் - நீர்க்கோவையை நீக்கும்.
Question 65
நோய்க்கு முதல் காரணம், -------------.
A
காரம்
B
துவர்ப்பு
C
இனிப்பு
D
உப்பு
Question 66
மீதூண் விரும்பேல்" - என்று கூறியவர்?
A
திருவள்ளுவர்
B
ஒளவையார்
C
பாரதியார்
D
காக்கைப் பாடியனார்
Question 67
‘நாள்தோறும் தவிராமல் நடந்தால் நோய் நம்மைவிட்டு நடக்கும், ஓடினால் நோய் நம்மைவிட்டு ஓடும், எப்போதும் படுத்துக் கிடந்தால் நோய் நம்மீது படுத்துக்கொள்ளும். "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்  காலைத்தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே" - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
நாமக்கல் கவிஞர்
D
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Question 68
உடம்பார் அழியின் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே  - என்று கூறியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
நாமக்கல் கவிஞர்
D
திருமூலர்
Question 69
பொருந்தாதது எது ? அறுசுவையின் பயன்கள்.
A
இனிப்பு – வளம்; துவர்ப்பு – ஆற்றல்
B
கைப்பு – மென்மை; கார்ப்பு – உணர்வு
C
உவர்ப்பு – தெளிவு; புளிப்பு – இனிமை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 69 Explanation: 
குறிப்பு :- அனைத்துமே சரியாக பொருந்தியுள்ளது.
Question 70
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? 1] --------------செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். 2] இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும். 3] விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும்.
A
கீழாநெல்லி
B
அகத்திக்கீரை
C
துளசி
D
வேப்பிலை
Question 71
மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வருகிற மூலிகைச் செடி எது?
A
கீழாநெல்லி (கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி )
B
அகத்திக்கீரை
C
துளசி
D
வேப்பிலை
Question 72
----------------- இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்றுகிராம் அளவு காலை மாலை இருவேளை நாலுநாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
A
கீழாநெல்லி (கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி )
B
அகத்திக்கீரை
C
துளசி
D
வேப்பிலை
Question 73
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? 1] ---------------- என்பது செடியில்லை. ஒருவகைக் கொடி. --------------- என்பது இதன் பெயர். 2] தோட்டங்களிலும், வேலியோரங்களிலும் இயல்பாக வளரும். இக்கொடியிலும் இலைகளிலும் கொக்கிபோன்ற சிறு முள்கள் உண்டு.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
வேப்பிலை
Question 74
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களிலும் வழங்கப்படும். இதன் இலைகளை நல்லெண்ணையில் சமைத்து உணவோடு சேர்த்து 21 நாள் உண்டு வந்தால், சுவாசகாசம் அகலும். இளைப்பு இருமல் போகும்.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
வேப்பிலை
Question 75
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? இதனை ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றுவார். இவ்விலை குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீட்டிக்கும்.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
வேப்பிலை
Question 76
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும். மூலிகைச் செடியாகும். இதன் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால், படுக்கைப் புண் குணமாகும்.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
குப்பைமேனி
Question 77
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? குழந்தைகளின் வயதுக்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும். வயிறு தூய்மையாகும். பசியைத் தூண்டும்.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
குப்பைமேனி
Question 78
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? ------------ இலைகளுடன் மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும். மேனி துலங்க ------------- என்பது பழமொழி.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
குப்பைமேனி
Question 79
"குமரி" - என்னும் பெயரால் அழைக்கப்படும் மூலிகை எது?
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
கற்றாழை
Question 80
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? 1] மஞ்சள் சேர்த்துக் காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும். 2] இதனைப் பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும். 3] பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதனால் ‘குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு’ என்னும் வழக்கு ஏற்பட்டது.  
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
துளசி
D
கற்றாழை
Question 81
கீழே உள்ள கூற்று, எந்த மூலிகைச் செடியைக் குறிக்கிறது? -------------- பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும் வீக்கத்தைக் குறைக்கும். கண்பார்வையை ஒழுங்குபடுத்தும். உடலை வலுவாக்கும், இரும்புச்சத்து நிறைந்துள்ளதனால் கூந்தலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு.
A
கீழாநெல்லி
B
தூதுவளை
C
முருங்கைக்கீரை
D
கற்றாழை
Question 82
விடுபட்ட இடத்தை நிரப்புக.. காலை, மாலை என இருவேளையும் ஐந்து கிராம் ---------------- கழுவிச் சிறிது சிறிதாக வாயிலிட்டு மென்று விழுங்கினால், சீதபேதி இருநாளில் குணமாகும். உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும்தன்மை ---------------க்கு உண்டு
A
கறிவேப்பிலை
B
தூதுவளை
C
முருங்கைக்கீரை
D
கற்றாழை
Question 83
வேடு கட்டுதல் - என்பதன் பொருள் யாது?
A
வீட்டின் மேல் கூரை கட்டுதல்
B
சட்டியின் வாயை மெல்லிய துணியால் மூடிக் கட்டுதல்
C
காட்டின் ஓரத்தில் கிணறு கட்டுதல்
D
அடிபட்ட இடத்தில் மருந்து கட்டுதல்
Question 84
இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சட்காமாலை முதலிய நோய்களுக்குக் --------------------- நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது, கண்பார்வையைத் தெளிவாக்கும், நரையைப் போக்கும்.
A
கரிசலாங்கண்ணி
B
தூதுவளை
C
முருங்கைக்கீரை
D
கற்றாழை
Question 85
-------------- என்பதற்கு வழங்கப்படும் வேறுபயர்கள் – கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்.
A
கரிசலாங்கண்ணி
B
தூதுவளை
C
முருங்கைக்கீரை
D
கற்றாழை
Question 86
பொருந்தாதது எது?
A
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்.
B
முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசுவின் பாலில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சருக்கரையுடன் உண்டு வந்தால் இருமல் நீங்கும்.
C
அகத்திக்கீரை, பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும். வல்லாரை நினைவாற்றல் பெருக உதவும்.
D
வேப்பங்கொழுந்தைக் காலையில் உண்டு வந்தால், மார்புச் சளி நீங்கும். முருங்கைக்கீரையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த வெப்பு நோய் அகலும்.
Question 86 Explanation: 
குறிப்பு :- வேப்பிலையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த வெப்பு நோய் அகலும்.
Question 87
நின்றசீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது  ----------------- எனப்படும்.
A
அடி
B
தொடை
C
தளை
D
புணர்ச்சி
Question 87 Explanation: 
விளக்கம் :- (தளை – கட்டுதல்). ஒன்றி வருதலாவது : நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் வருதல். ஒன்றாமல் வருதலாவது : நேர் முன் நிரையும், நிரை முன் நேரும் வருதல். (எ.கா.) : கண் -ணா மன் – னா நேர் நேர் நேர் நேர் – நேர் அசைகள் ஒன்றி வந்தன. உயர் + வற உயர் + நலம் நிரை நிரை நிரை நிரை – நிரை அசைகள் ஒன்றி வந்தன. அக + ர முத + ல நிரை நேர் நிரை நேர் – ஒன்றாமல் வந்தன மலர் + மிசை ஏ + கினான் நிரை நிரை நேர் நிரை – ஒன்றாமல் வந்தன
Question 88
தளை எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
7
D
8
Question 88 Explanation: 
விளக்கம் :- தளை ஏழு வகைப்படும். அவை, நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை கலித்தளை ஒன்றிய வஞ்சித்தளை ஒன்றாத வஞ்சித்தளை
Question 89
மாமுன் நேர் வருவது ------------ ?
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 89 Explanation: 
விளக்கம் :- மாமுன் நேர் வருவது நேரொன்றாசிரியத்தளை. (எ.கா.) :- பா + ரி பா + ரி. நேர் நேர் நேர் நேர். தேமா தேமா மாமுன் நேர்.
Question 90
விளம்முன் நிறை வருவது  ------------?
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 90 Explanation: 
விளக்கம் :- நிரையொன்றாசிரியத்தளை :- விளம்முன் நிறை வருவது நிரையொன்றாசிரியத்தளை (எ.கா.) : பலர் + புகழ் கபி + லர். நிரை நிரை நிரை நேர். கருவிளம் புளிமா. விளமுன் நிரை.
Question 91
மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது ----------------?
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 91 Explanation: 
விளக்கம் :- இயற்சீர் வெண்டளை :- மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. (எ.கா.) : அக + ர முத + ல. நிரை நேர் நிரை நேர். புளிமா புளிமா. மாமுன் நிரை. நில + வரை நீள் + புகழ். நிரை நிரை நேர் நிரை. கருவிளம் கூவிளம். விளமுன் நேர்.
Question 92
காய்முன் நேர் வருவது -------------?
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 92 Explanation: 
விளக்கம் :- வெண்சீர் வெண்டளை :- காய்முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை (எ.கா.) : யா + தா + னும் நா + டா + மால். நேர் நேர் நேர் நேர் நேர் நேர் தேமாங்காய் தேமாங்காய் காய்முன் நேர் வெண்பாவுக்கு உரிய தளைகள் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையுமே. வெண்பாவில் இவ்விரு தளைகள் தவிரப் பிற தளைகள் வாரா.
Question 93
காய்முன் நிரை வருவது -------------?
A
வெண்சீர் வெண்டளை
B
கலித்தளை
C
ஒன்றிய வஞ்சித்தளை
D
ஒன்றாத வஞ்சித்தளை
Question 93 Explanation: 
விளக்கம் :- கலித்தளை :- காய்முன் நிரை வருவது கலித்தளை. (எ.கா.) :- தா+மரைப் + பூ குளத் + தினி + லே. நேர் நிரை நேர் நிரை நிரை நேர். கூவிளங்காய் கருவிளங்காய் காய்முன்நிரை.
Question 94
கனிமுன் நிரை வருவது -------------?
A
வெண்சீர் வெண்டளை
B
கலித்தளை
C
ஒன்றிய வஞ்சித்தளை
D
ஒன்றாத வஞ்சித்தளை
Question 94 Explanation: 
விளக்கம் :- ஒன்றிய வஞ்சித்தளை :- கனிமுன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித்தளை. (எ.கா.) :- செந் + தா + மரைக் குளத் + தினி + லே. நேர் நேர் நிரை நிரை நிரை நேர். தேமாங்கனி கருவிளங்காய். கனி முன் நிரை.
Question 95
கனிமுன் நேர் வருவது -------------?
A
வெண்சீர் வெண்டளை
B
கலித்தளை
C
ஒன்றிய வஞ்சித்தளை
D
ஒன்றாத வஞ்சித்தளை
Question 95 Explanation: 
விளக்கம் :- ஒன்றாத வஞ்சித்தளை :- கனிமுன் நேர் வருவது ஒன்றாத வஞ்சித்தளை. (எ.கா.) : வா + னில் + வளர் திங் + களன் + ன. நேர் நேர் நிரை நேர் நிரை நேர். தேமாங்கனி கூவிளங்காய். கனிமுன் நேர்.
Question 96
செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர், அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ------------------ அணி.
A
ஏகதேச உருவக அணி
B
வேற்றுமையணி
C
வேற்றுப்பொருள் வைப்பணி
D
இல்பொருள் உவமையணி
Question 96 Explanation: 
விளக்கம் :- தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – குறள் 129 தீயினால் சுடுவதும், நாவினால் தீயசொற்களைக்கொண்டு சுடுவதும் என்பது ஒற்றுமை. தீயினால் சுட்டது ஆறும், நாவினால் சொன்னது ஆறாது என்பது வேற்றுமையாகும். எனவே, இப்பாடலில் வேற்றுமையணி இடம்பெற்றுள்ளது.
Question 97
பழனிப் பதிகம், குமரகுரு பதிகம், சிவகிரிப் பதிகம், திருச்செந்தில் பதிகம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
மறைமலையடிகள்
C
விபுலானந்தர்
D
மாம்பழக்கவிச் சிங்க நாவலர் (பழனி)
Question 98
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல், என்றவன் எழுதலும் இளங்கொடி எழுந்து, - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 99
தேவரும் மக்களும் பிரமரு மாகி, மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்,. - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Question 100
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில், சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
சீவகசிந்தாமணி, திருத்தக்கதேவர்
D
கலிங்கத்துப்பரணி, சயங்கொண்டார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply to balu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!