Online TestTamil

8th Std Tamil Notes – Part 9

எட்டாம் வகுப்பு தமிழ் - ஒன்பதாம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - ஒன்பதாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலக குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 2
கலையும் நிறையும் அறிவு முதிர முதிரு மதுர நறவமே கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 3
அலகில் புவனம் முடியும் வெளியில் அளியும் ஒளியின் நிலயமே அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 4
மலையின் மகள்கண் மணியை அனைய முதலை வருக வருகவே வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
மதி – செல்வம்
B
அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
C
உதயம் – கதிரவன்
D
மதுரம் – இனிமை
Question 5 Explanation: 
குறிப்பு :- மதி – அறிவு
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
நறவம் – மான்
B
கழுவு துகளர் – குற்றமற்றவர்
C
சலதி – கடல்
D
அலகு இல் – அளவில்லாத
Question 6 Explanation: 
குறிப்பு :- நறவம் – தேன்
Question 7
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
புவனம் – உலகம்
B
மதலை – குழந்தை
C
பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம் (வைத்தீசுவரன் கோவில்)
D
கேழல் - மான்
Question 8
குமரகுருபரர் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமி சுந்தரியம்மை
B
சிவானந்தம் - முத்துமாடத்தி
C
நவநீதன் - பொற்கொடி
D
இவர்களில் யாருமில்லை
Question 9
குமரகுருபரர் அவர்களின் ஊர்?
A
காசி
B
திருவில்லிப்புத்தூர்
C
திருவைகுண்டம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 10
கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை, நீதிநெறி விளக்கம் - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 11
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? தமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர், திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி உள்ளார்.
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 12
கீழ்க்கண்டவர்களுள் காசியில் இறைவனது திருவடியடைந்தவர் யார்?
A
குமரகுருபரர்
B
திரு.வி.க
C
ஒளவையார்
D
தாயுமானவர்
Question 13
குமரகுருபரர் அவர்களின் காலம்?
A
பதினைந்தாம் நூற்றாண்டு
B
பதினாறாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
பதினெட்டாம் நூற்றாண்டு
Question 14
தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். ---------------- பருவங்கள் அமைத்துப் பருவத்திற்குப் ------------ பாடலென நூறு பாடலால், பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்து இயம்புவது பிள்ளைத்தமிழ்.
A
4, 25
B
5, 20
C
2, 50
D
10, 10
Question 15
பிள்ளைத்தமிழ் ------------- வகைப்படும்.
A
1
B
2
C
3
D
4
Question 15 Explanation: 
குறிப்பு :- பிள்ளைத்தமிழ் இருவகைப்படும் 1. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 2. பெண்பால் பிள்ளைத்தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ் : 1. காப்பு, 2. செங்கீரை, 3. தாலாட்டு, 4. சப்பாணி, 5. முத்தம், 6. வருகை, 7. அம்புலி, 8. சிற்றில், 9. சிறுபறை, 10. சிறுதேர். பெண்பால் பிள்ளைத்தமிழ் : 1. காப்பு, 2. செங்கீரை, 3. தாலாட்டு, 4. சப்பாணி, 5. முத்தம், 6. வருகை, 7. அம்புலி, 8. நீராடல், 9. அம்மானை, 10. ஊசல். இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும், அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.
Question 16
புள்ளிருக்குவேளுரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் பெயர் --------------------------?
A
முத்துக்குமாரசுவாமி
B
கார்த்திகேயன்
C
பாலசுப்ரமணியம்
D
கந்தசாமி
Question 16 Explanation: 
குறிப்பு :- புள்ளிருக்குவேளுரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி, அவர்மீது பாடப்பட்டமையால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப் பெயர் பெற்றது. இப்பகுதியில் உள்ள பாடல் வருகைப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது. இது நூலின் ஆறாவது பருவமாகும். குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது. தளர்நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும் பாடல்களைக் கொண்டதாய் இப்பருவம் அமைந்துள்ளது.
Question 17
--------------------- நூல் எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
A
தொல்காப்பியம்
B
திருக்குறள்
C
பழமொழி நானூறு
D
புறநானூறு
Question 18
நகைச்சுவையுணர்வு இல்லாதவருக்குப் பகலும் இருளாகத் தோன்றும் என்று கூறியவர்?
A
மாணிக்கவாசகர்
B
விளம்பி நாகனார்
C
தொல்காப்பியர்
D
திருவள்ளுவர்
Question 19
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கூறியவர் யார்?
A
அண்ணா
B
நேரு
C
காந்தி
D
காமராசர்
Question 20
அஞ்சலை அரக்க ! பார்விட் டந்தர மடைந்தா னன்றே வெஞ்சின் வாலி , மீளான், வாலும்போய் வீழ்ந்ததன்றே - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
கம்பராமாயணம், கம்பர்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Question 21
காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல நம் கண்முன்னே நடமாடவிட்டு, நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளனர் யார்?
A
சீத்தலைச்சாத்தனார்
B
கண்ணகனார்
C
சயங்கொண்டார்
D
விளம்பி நாகனார்
Question 22
------------------- இருபொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர்.
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
இவர்களில் யாருமில்லை
Question 23
வாலெங்கே ? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே ? நாலு காலெங்கே ? ஊன்வடிந்த கண்ணெங்கே ? – சாலப் புவிராயர் போற்றும் புலவர்காள் ! நீங்கள் கவிராயர் என்றிருந்தக் கால் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
இவர்களில் யாருமில்லை
Question 23 Explanation: 
குறிப்பு :- நாங்கள் கவிராசர்கள் என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி என்பதற்குக் குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு பாடினார், கவி காளமேகம்.
Question 24
அரசர்கள் புகழ்ந்து போற்றும் புலவர்களாகிய நீங்கள் குரங்கரசர்களாக இருந்தால், உங்களுக்கு  இருக்க வேண்டிய நீண்ட வாழும், கூர்மையான நகங்களும் ஊன் வடிந்த கண்களும் உங்களிடம் இல்லையே ! அப்படி இருக்கும் போது, நீங்கள் எப்படிக் கவிராயர்கள் என்று கூறிக்கொள்ள முடியும்? எனக்கேட்டு அவர்களை எள்ளி நகையாடியவர் யார்?
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
இவர்களில் யாருமில்லை
Question 25
----------------- என்பவர், ஒருமுறை ஆய்ச்சியரிடமிருந்து பருகுவதற்காக மோர் வாங்கினார். அவர் கண்ணுக்கு மோர், மோராகத் தெரியவில்லை; வெறும் நீராகத் தெரிந்தது. உடனே, ஒரு பாடலும் அவர் மனத்தில் தோன்றியது. "கார் என்று பேர்படைத்தாய்..." எனத் தொடங்கும் பாடலை அமைத்து, அப்பாடலில் நீ வானவெளியில் மேகமாகத் திரியும் போது கார் என்றும், மழையாகப் பூமியில் பெய்யும் போது நீர் என்றும், ஆய்ச்சியர் கையில் வந்த உடன் மோர் என்றும் முப்பேரும் பெற்றாய் எனக்கூறி நகைக்க வைக்கிறார்.
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
இவர்களில் யாருமில்லை
Question 26
---------------- என்பவரும் நகைச்சுவையாகப் பாடுவதில் வல்லவர். ஒரு பாடலில், ஒருவன் மிருதங்கம் வாசிப்பதனை நகைப்புடன் கூறுகிறார். மிருதங்கத்திலிருந்து எழும் ஓசை இனிமையாக இல்லாமல், எரு தட்டும் ஓசைபோல் இருந்ததாம். அதனைக்கேட்ட பெண்கள் எரு வாங்க, கூடையை எடுத்துக்கொண்டு, ஓசை வந்த திசையை நோக்கி ஓடினார்களாம்.
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 27
ஒரு வீட்டில் பெண் ஒருத்தி பாடிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில் அவள் பாடவில்லை, கத்திக்கொண்டிருந்தாள். அவள் பாட்டைக் கேட்டு, காணாமல் போன தன் கழுதை திரும்ப வந்தது என்று எண்ணிக் 'கண்டேன் கண்டேன்' என்று, அதன் உரிமையாளர் ஓடி வந்தாராம் என நகைச்சுவை தோன்றப் பாடியவர்?
A
குமரகுருபரர்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 28
மயிலின் கழுத்து நீண்டு இருப்பதனை நகைச்சுவையாக விளக்கியவர் இவர். அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தான் உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே ! நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான் - "பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீட்டு அறையிலே நடப்பதனை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம். மயில் அப்படிப் பார்க்காதாம். எனக் கூறிய கவிஞர்?
A
பாரதிதாசன்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 29
ஆலமரத்திலிருந்து தொங்கிய ஒரு பாம்பை விழுது என நினைத்துப் பற்றியது மந்தி; பாம்பென உணர்ந்ததும் விளக்கைத் தொட்ட குழந்தையைப் போல வெடுக்கெனக் குதித்தது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தோன்றுவது போலப் பின்னர் விழுதுகள் எல்லாம் அக்குரங்குக்கு பாம்பாகத் தெரிந்தன. அதனால், தலைகால் புரியாமல் தாவிச் சென்ற குரங்கு மர உச்சிக்குச் சென்று திரும்பிப் பார்த்தது. தனது வாலைக்கண்டதும் பதறி, அதுவும் பாம்போ என நினைத்துத் திடுக்கிட்டதாம். இவ்வாறு நகைச்சுவை உணர்வு தோன்றப் பாடியுள்ளவர் யார்?
A
பாரதிதாசன்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 30
--------------------- என்பவரின், 'மருமக்கள் வழி மான்மியம்' ஒரு நகைச்சுவை களஞ்சியம் என்பர்.
A
பாரதிதாசன்
B
நாஞ்சில் நாட்டுக் கவிஞர் தேசிக விநாயகனார்
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 31
---------------------- என்பவரின் , ‘மருமக்கள்வழி மான்மியம் . ஒரு நகைச்சுவை களஞ்சியம் என்பர். இக்கதையில் மருமகனாக வருகின்றவன், பள்ளியில் பயில்கின்ற முறை நகைப்பூட்டுகின்றது. படிக்கச்சென்றவன் எவற்றையெல்லாம் பணயம் வைக்கிறான் பாருங்கள்!.. ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்; போளிக் காகப் புத்தகம் பணயம்; சீடைக் காகப் சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிரம் பணயம் காப்பிக் காகக் கடுக்கன் பணயம் கூத்துக் காகக் குடையும் பணயம் -இப்படிப் பணயம் வைத்தால், படித்து எங்கே முன்னேற்றமடையப்போகிறான்? என நடைமுறைச் சமுதாயத்தை எள்ளுகின்றவர் யார்?
A
பாரதிதாசன்
B
நாஞ்சில் நாட்டுக் கவிஞர் தேசிக விநாயகனார்
C
கவி காளமேகம்
D
அழகிய சொக்கநாதர்
Question 32
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
A
2
B
4
C
5
D
8
Question 32 Explanation: 
குறிப்பு:- 1] எழுத்திலக்கணம், 2] சொல்லிலக்கணம், 3] பொருள் இலக்கணம், 4] யாப்பிலக்கணம், 5] அணியிலக்கணம்
Question 33
யாப்பு என்றால் என்ன?
A
அசைத்தல்
B
மாற்றுதல்
C
கட்டுதல்
D
கூறுதல்
Question 33 Explanation: 
குறிப்பு :- யாப்பு என்றால் கட்டுதல் என்பது பொருள். யாக்கை – யாத்தல் = யாப்பு. எலும்பு, தசை, நரம்பு முதலியவற்றால் உடல் கட்டப்பட்டு இருப்பது போலச் செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக்கொண்டு பாடலை உருவாக்குதலே யாப்பு எனப்படும்.
Question 34
யாப்பின் உறுப்புகள் எத்தனை?
A
3
B
4
C
5
D
6
Question 34 Explanation: 
குறிப்பு :- எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் யாப்பின் உறுப்புகளாகும்.
Question 35
ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது ---------------?
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 36
அசை எத்தனை வகைப்படும்?
A
1
B
2
C
3
D
4
Question 36 Explanation: 
குறிப்பு :- ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை. அது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
Question 37
அசைகள் பல சேர்ந்து அமைவது, ------------------- எனப்படும்.
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 38
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது ------------- எனப்படும்.
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 39
இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது -------------- எனப்படும்.
A
அசை
B
சீர்
C
தளை
D
அடி
Question 40
அடிகள் இரண்டு முதலியவனாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது, பா எனப்படும். இவ்வண்ணம், செய்யுள் இலக்கணத்தைக் கூறுவது ----------------- எனப்படும். செய்யுள் என்றாலும் பாட்டு என்றாலும் ஒன்று. கவிதை என்றும் தூக்கு என்றும் கூடச் சொல்லலாம்.
A
யாப்பிலக்கணம்
B
அணிஇலக்கணம்
C
பொருள் இலக்கணம்
D
சொல்லிலக்கணம்
Question 41
கண்இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்; வண்ண மலர்மாலை வாடுதலால் – எண்ணி; நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்; அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு - இந்த பாடல் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
குறள் வெண்பா
B
நேரிசை வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 42
நாடா கொன்றோ காடா கொன்றோ; அவலா கொன்றோ மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை வாழிய நிலனே - இந்த பாடல் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
ஆசிரியப்பா
B
நேரிசை வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 43
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்; மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்; அயர்வறும் அமரர்க ளதிபதி யவனவன்; துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே - இந்த பாடல் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
ஆசிரியப்பா
B
நேரிசை வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 44
வளையாடு மலர்ச்சுனை நீரினிடை; வளையாடுகை மங்கிய ரன்னமென; விளையாடுவ ரோடுவர் கூடுவர்பின்; விளையாடுவர் பைங்கிளி மேவுறவே - இந்த பாடல் கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
ஆசிரியப்பா
B
நேரிசை வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 45
தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன ------------------ குறித்த தமிழ் நூல்கள்.
A
அணியிலக்கணம்
B
எழுத்திலக்கணம்
C
பொருள் இலக்கணம்
D
யாப்பிலக்கணம்
Question 46
உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது ---------------------- ஆகும்.
A
உவமையணி
B
பிறிது மொழிதல் அணி
C
உருவக அணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 46 Explanation: 
குறிப்பு :- உவமையணி :- ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்; பேரறி வாளன் திரு . ஊர் நடுவே உள்ள குளம் நிரம்பினாற் போன்றதே உலக உயிர்களையெல்லாம் விரும்பி உதவிசெய்யும் பேரறிவு உடையானிடம் சேர்ந்த செல்வம். இப்பாடலில், ஊருணி நீர்நிறைதல் என்பது உவமை. உலகவாம் பேரறிவாளன் திரு என்பது உவமேயம், அற்று என்பது உவம உருபு. இவ்வாறு உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது உவமையணி ஆகும்.
Question 47
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை; வாய்மையாற் காணப் படும் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?
A
உவமையணி
B
பிறிது மொழிதல் அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 47 Explanation: 
குறிப்பு :- எடுத்துக்காட்டு உவமை அணி :- புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும். ஒருவனது உடல் தூய்மை நீரில் குளிப்பதனால் புலப்படும். உண்மையை பேசுவதனால், உள்ளத்தின் தூய்மை புலப்படும். இப்பாடலில், உடம்பின் தூய்மை நீரால் அமையும் என்பது உவமை. உள்ளத்தின் தூய்மை உண்மை பேசுவதனால் உண்டாகும் என்பது உவமேயம். இவ்விரண்டனையும் இணைக்கும் உவம உருபு இல்லை. இப்பாடலில் உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டு இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி.
Question 48
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக  வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்  பைங்கூழ் சிறுகாலைச் செய் - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி?
A
உருவக அணி
B
பிறிது மொழிதல் அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 48 Explanation: 
குறிப்பு :- உருவக அணி :- “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய் .” இப்பாடலில் இன்சொல் – விளைநிலம். ஈதல் - விதை. வன்சொல் – களை. வாய்மை – உரம் (எரு). அன்பு – நீர். அறம் – கதிர் என உருவகிக்கப் பெற்றுள்ளதனால், இப்பாடல் உருவக அணியாகும். இவ்வாறு உவமானம் வேறு, உவமேயம் வேறு எனத் தோன்றாத வகையில், உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணியாகும். மதிமுகம் – மதிபோன்ற முகம் – உவமை முகமதி – முகம் ஆகிய மதி – உருவகம்
Question 49
செய்யுள் இயற்றும் இலக்கணத்துக்கு --------------- எனப் பெயர்?
A
அணி இலக்கணம்
B
சொல் இலக்கணம்
C
பொருள் இலக்கணம்
D
யாப்பிலக்கணம்
Question 50
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது ---------------- அணி
A
உருவக அணி
B
பிறிது மொழிதல் அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 51
----------------- என்பது தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். இதனைக் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றுவர்.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
வளையாபதி
D
பெரியபுராணம்
Question 52
சேரநாடு வேழமுடைத்து; பாண்டிநாடு முத்துடைத்து; சோழநாடு சோறுடைத்து; தொண்டைநாடு சான்றோருடைத்து என்பது ---------------------- என்பவரின் வாக்கு.
A
திருவள்ளுவர்
B
மாணிக்கவாசகர்
C
சேக்கிழார்
D
ஒளவை
Question 53
பள்ளிக்கு செல்கின்ற தம்பி - நன்கு; பாடங்கள் பயின்றிடு நம்பி; துள்ளி நீ குதித்தாடு தம்பி - இன்பம் துய்க்கின்ற நீ அன்றோ தும்பி - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
அப்துல் ரகுமான்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
கோ.அ. அப்துல் லத்தீப் (என் தமிழ்)
Question 54
ஏழைக்கு நீ அன்பு காட்டு; உனை எதிர்த்தாரை நீ பொங்கி ஓட்டு; கோழைக்கு வீரத்தை ஊட்டு; உயர் கொள்கைக்காய் நீ வாழ்ந்து காட்டு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?  
A
அப்துல் ரகுமான்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
கோ.அ. அப்துல் லத்தீப் (என் தமிழ்)
Question 55
அமிழ்தான பாடல்கள் பாடு - புது; அறிவூட்டும் நூல்களை நாடு; தமிழ்தந்த கலையாவும் தேடு; பகை தனைக்கண்டால்  நீயங்குச் சாடு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
அப்துல் ரகுமான்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
கோ.அ. அப்துல் லத்தீப் (என் தமிழ்)
Question 56
ஒளிமிக்க எதிர்காலம் கண்டு - நீ; உயர்வாய் அந்நம்பிக்கை உண்டு; களி இன்ப நல்வாழ்வு கொண்டு - கன்னித் ; தமிழுக்கு ஆற்றுக தொண்டு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
அப்துல் ரகுமான்
B
தாரா பாரதி
C
வாணிதாசன்
D
கோ.அ. அப்துல் லத்தீப் (என் தமிழ்)
Question 57
அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி - ஆகிய பொருள் தருவது?
A
ஆகாயம்
B
சோறு
C
சோலை
D
இரவு
Question 58
அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மலைபடுகடாம்
Question 59
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மலைபடுகடாம்
Question 60
உப்பிலிப் புழுக்கல் - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மலைபடுகடாம்
Question 61
இறடிப் பொம்மல் பெறுகுவீர் - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மலைபடுகடாம்
Question 62
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர் - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
பெரும்பாணாற்றுப்படை
Question 63
வளைகதிர் வல்சி கொண்டளை மல்க - என்று கூறும் நூல்?
A
நாலடியார்
B
புறநானூறு
C
சீவக சிந்தாமணி
D
மலைபடுகடாம்
Question 64
கூறு, விளம்பு, மொழி, இயம்பு, உரை - இவற்றுடன் தொடர்புடைய பொருள் எது?
A
மிகுதி
B
பேசு
C
உலகம்
D
சூரியன்
Question 65
ஞாயிறு, கதிரவன், பரிதி, பகலவன், வெய்யோன் - இவற்றுடன் தொடர்புடைய பொருள் எது?
A
மிகுதி
B
பேசு
C
உலகம்
D
சூரியன்
Question 66
சால, தவ, நனி, கூர், கழி - இவற்றுடன் தொடர்புடைய பொருள் எது?
A
மிகுதி
B
பேசு
C
உலகம்
D
சூரியன்
Question 67
புவி, தரணி, நானிலம், பார், வையம் - இவற்றுடன் தொடர்புடைய பொருள் எது?
A
மிகுதி
B
பேசு
C
உலகம்
D
சூரியன்
Question 68
பிள்ளை, குழவி, மகவு, சேய் - இவற்றுடன் தொடர்புடைய பொருள் எது?
A
மிகுதி
B
பேசு
C
குழந்தை
D
சூரியன்
Question 69
தாயைப்போலப் பிள்ளை , நூலைப் போலச் சீலை - என்னும் பழமொழியில் உள்ள பொருள் ?
A
அறிவுரை
B
நம்பிக்கை
C
உறவுமுறை
D
நகைச்சுவை
Question 70
ஆடிப்பட்டம் தேடி விதை - என்னும் பழமொழியில் உள்ள பொருள் ?
A
அறிவுரை
B
நம்பிக்கை
C
உழவு
D
நகைச்சுவை
Question 71
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே - என்னும் பழமொழியில் உள்ள பொருள் ?
A
அறிவுரை
B
நம்பிக்கை
C
உறவுமுறை
D
நகைச்சுவை
Question 72
தைபிறந்தால் வழி பிறக்கும் - என்னும் பழமொழியில் உள்ள பொருள் ?
A
அறிவுரை
B
நம்பிக்கை
C
உறவுமுறை
D
நகைச்சுவை
Question 73
பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு - என்னும் பழமொழியில் உள்ள பொருள் ?
A
அறிவுரை
B
நம்பிக்கை
C
உறவுமுறை
D
நகைச்சுவை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

2 Comments

Leave a Reply to sivaranjaniravi@ymail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!