Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 7

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 7)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 7). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நீ தந்த கனி இது; நீ தந்த கரும்பிது; நீ தந்த நெற்கதிர் இது; நீ தந்த நீர் இது;  நீ தந்த சீர் இது நீ தந்த ஒளியும் இஃதே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
மீ.ராசேந்திரன்
C
காமராசன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 1 Explanation: 
குறிப்பு :- இந்த பாடல் வரிகள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
Question 2
நீ தந்த சீரும் நீ தந்த திருவும் நினக்கே நிவேதனம் கதிரவா ! கனகப் புரவிமேல் கடுகியே வந்திடு கதிரவா எங்கள் கோவே ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
மீ.ராசேந்திரன்
C
காமராசன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 2 Explanation: 
குறிப்பு :- இந்த பாடல் வரிகள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
Question 3
நீ தந்த செல்வத்தை நிவேதனம் செய்பிழை யாம் அறிந்தும் வழிவேறு வணங்க யாம் அறியாது கூவுகின்றோம். கதிரவா கடுகி வருவாய் ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
மீ.ராசேந்திரன்
C
காமராசன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 3 Explanation: 
குறிப்பு :- இந்த பாடல் வரிகள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
Question 4
நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ, நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ ? கதிரவா கனிந்து வருவாய் ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
மீ.ராசேந்திரன்
C
காமராசன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 4 Explanation: 
குறிப்பு :- இந்த பாடல் வரிகள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
Question 5
கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் கதிரவா ! ஏற்று மகிழ்வாய் உயர்ந்தவா, உயிரின் முதலே ! - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வல்லிக்கண்ணன்
B
மீ.ராசேந்திரன்
C
காமராசன்
D
ந.பிச்சமூர்த்தி
Question 5 Explanation: 
குறிப்பு :- இந்த பாடல் வரிகள், ந. பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள எண்பத்துமூன்று கவிதைகளில் ஒன்று இப்பொங்கல் வழிபாடு என்னும் கவிதை.
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
திரு – செல்வம்
B
நிவேதனம் – படையலமுது
C
கனகம் – பொன்
D
புரவி – புலி
Question 6 Explanation: 
குறிப்பு :- புரவி – குதிரை
Question 7
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கோ – அரசன்
B
கடுகி – விரைந்து
C
நவ்வி - மான்
D
கேழல் - கரடி
Question 7 Explanation: 
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 8
ந. பிச்சமூர்த்தி அவர்களின் இயற்பெயர் என்ன?
A
சுந்தர மகாலிங்கம்
B
பிச்சை மகாலிங்கம்
C
வேங்கட மகாலிங்கம்
D
சந்தன மகாலிங்கம்
Question 8 Explanation: 
குறிப்பு :- ந. பிச்சமூர்த்தி என்பது புனைபெயர்.
Question 9
ந. பிச்சமூர்த்தி என்ற வேங்கட மகாலிங்கம் அவர்களின் ஊர்?
A
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்
B
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர்
C
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி
D
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி
Question 10
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? 1924 – 1938 வரை வழக்குரைஞர்; 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர். இவரின் எழுத்துப்பணி :  கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
A
கண்ணதாசன்
B
பாரதிதாசன்
C
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்
D
ந.பிச்சமூர்த்தி
Question 11
ந. பிச்சமூர்த்தி என்ற வேங்கட மகாலிங்கம் அவர்களின் காலம்?
A
15.08.1880 – 04.12 1946
B
15.08.1890 – 04.12 1956
C
15.08.1900 – 04.12 1966
D
15.08.1900 – 04.12 1976
Question 12
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? இருபதாம் நூற்றாண்டின் இக்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்
A
கண்ணதாசன்
B
பாரதிதாசன்
C
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்
D
ந.பிச்சமூர்த்தி
Question 13
மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
சயம்கொண்டார்
B
பாரதியார்
C
கம்பர்
D
ஒளவையார்
Question 14
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி காக்கும்கை காராளர் கை - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
சயம்கொண்டார்
B
பாரதியார்
C
கம்பர்
D
ஒளவையார்
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
மேழி – கலப்பை, ஏர்
B
காராளர் – மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
C
ஆழி – வயல்
D
சூழ்வினை – உண்டாகும் வறுமைத் துன்பம்
Question 15 Explanation: 
குறிப்பு :- ஆழி – மோதிரம்
Question 16
கம்பர் பிறந்த ஊர்?
A
மன்னார்குடி, திருவாரூர்க்கு அண்மையில் உள்ளது
B
தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது
C
சாத்தூர், விருதுநகர்க்கு அண்மையில் உள்ளது
D
கோவில்பட்டி, தூத்துக்குடிக்கு அண்மையில் உள்ளது
Question 17
கம்பரை ஆதரித்த வள்ளல்?
A
நச்சினார்க்கினியர்
B
சடையப்ப வள்ளல்
C
போகர்
D
இவர்களில் யாருமில்லை
Question 18
கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் - ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
A
மாணிக்கவாசகர்
B
ஔவையார்
C
கம்பர்
D
ஒட்டக்கூத்தர்
Question 19
கம்பர் அவர்களின் காலம்?
A
10 ஆம் நூற்றாண்டு
B
11 ஆம் நூற்றாண்டு
C
12 ஆம் நூற்றாண்டு
D
13 ஆம் நூற்றாண்டு
Question 20
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்; வேண்டாது சாலப் படும் - என்ற திருக்குறள் எதனைப்  பற்றி விளக்குகிறது?
A
வாழ்தல்
B
வரைதல்
C
உழுதல்
D
காத்திருத்தல்
Question 20 Explanation: 
குறிப்பு :- ஒருபலம் எடையுள்ள மண்ணைக் கால்பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதிடுதல் வேண்டும். இதனைத்தான் வள்ளுவர் குறளில் கூறுகிறார். நன்செய் :- நீர்வளமிக்கது நன்செய் நிலம். இந்நிலத்தில் நெல், கரும்பு, வாழை முதலிய பயிர்கள் விளையும். புன்செய் :- நீர்வளம் குறைந்த பகுதி புன்செய். இதனை வானம் பார்த்த பூமி என நம் வேளாண் மக்கள் கூறுவர். இந்நிலத்தில விளையும் பயிர்கள் பருவமழையை நம்பியே இருக்கும். இந்நிலத்தில் கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்கள் விளையும்.
Question 21
விதை நெல்லை முதலில் நாற்றங்காலில் விதைத்து                -------------------------- நாள்வரை வளர்ப்பர்.
A
10 முதல் 12
B
21 முதல் 25
C
45 முதல் 50
D
50 முதல் 100
Question 22
சரியானது எது? நெல்லுக்கு
A
நண்டோட
B
ஏரோட
C
வண்டியோட
D
தேரோட
Question 23
சரியானது எது? கரும்புக்கு
A
நண்டோட
B
ஏரோட
C
வண்டியோட
D
தேரோட
Question 24
சரியானது எது? வாழைக்கு
A
நண்டோட
B
ஏரோட
C
வண்டியோட
D
தேரோட
Question 25
சரியானது எது? தென்னைக்கு
A
நண்டோட
B
ஏரோட
C
வண்டியோட
D
தேரோட
Question 26
கீழ்க்கண்டவற்றுள் பஞ்சகவ்வியத்துடன் தொடர்புடையது எது?
A
கோமயம், வேப்பிலை, பால், தயிர், நெய்
B
கோமயம், சாணம், விறகுகள், தயிர், நெய்
C
கோமயம், சாணம், பால், மணல், நெய்
D
கோமயம், சாணம், பால், தயிர், நெய்
Question 26 Explanation: 
குறிப்பு :- பஞ்சகவ்வியம் :- பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் அதாவது கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே பஞ்சகவ்வியம். இதனைப் பயிரில் தெளிப்பதனால் புழு, பூச்சிகள் பயிர்களை நெருங்கா. தழையுரம் :- பயிரிடும் முன் சணப்பை, அவுரி, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு முதலியவற்றை வளர்த்து, அவற்றை அப்படியேஉழுது தழையுரமாகப் பயன்படுத்துவர். இதனால், மண்ணின்வளம்கெடாமல்பேணிப்பாதுகாக்கப்படுவதனோடு பயிர்களும் நன்கு வளரும்
Question 27
கீழ்க்கண்ட திருக்குறள் எதனைப்பற்றி விளக்குகிறது? ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்; நீரினும் நன்றதன் காப்பு
A
உரமிடுதல்
B
களையெடுத்தல்
C
அறுவடை செய்தல்
D
நீர் பாய்ச்சுதல்
Question 27 Explanation: 
குறிப்பு :- காப்பு என்றால் காத்தல் என்பது பொருள்.
Question 28
பொருள்பட சீர்களை வரிசையாக அமைத்து எழுதுக?
A
பார்க்காத கடனும் கேட்காத பயிரும் பாழ்
B
கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்
C
கேட்காத பாழ் கடனும் பார்க்காத பயிரும்
D
கேட்காத பயிரும் பார்க்காத கடனும் பாழ்
Question 29
வேளாண் பல்கலைக்கழகம் உள்ள இடம்?
A
சென்னை
B
கோவை
C
மதுரை
D
திருச்சி
Question 30
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்?
A
2
B
4
C
6
D
8
Question 31
பஞ்சகவ்வியம் என்பது ----------------------- பொருள்களால் ஆனது?
A
2
B
3
C
4
D
5
Question 32
தூரத்து ஒளி - என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
ராஜம் கிருஷ்ணன்
B
சி.சு.செல்லப்பா
C
வல்லிக்கண்ணன்
D
க.கௌ. முத்தழகர்
Question 32 Explanation: 
குறிப்பு :- ( தூரத்து ஒளி - க.கௌ. முத்தழகர் - அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள் )
Question 33
பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு வேற்றுமை உருபு எனப்படும். இவ்வேற்றுமை --------------------- வகைப்படும்.
A
2
B
4
C
6
D
8
Question 33 Explanation: 
குறிப்பு :- முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எண்வகைப்படும்.
Question 34
இயல்பான பெயர், (எழுவாய்) பயனிலையைக் கொண்டு முடிவது -------------------- எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும். (இது வினையையும் பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும்)
A
முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 34 Explanation: 
குறிப்பு :- (எ.கா.) : கண்ணன் வந்தான் – வினைப் பயனிலை அவன் கண்ணன் – பெயர்ப் பயனிலை அவன் யார்? – வினாப் பயனிலை எழுவாய் வேற்றுமைக்கு எனத் தனி உருபு இல்லை
Question 35
இரண்டாம் வேற்றுமை உருபு “-------------” என்பதாகும்.
A
B
ஆல்
C
கு
D
இன்
Question 35 Explanation: 
குறிப்பு :- இரண்டாம் வேற்றுமை உருபு “ஐ” என்பதாகும். (எ.கா.) : வளவன் செய்யுளைப் படித்தான். இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் “ஐ” என்னும் உருபையேற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது. இவ்வாறு பெயர்சொல்லினது பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.
Question 36
------------------------- வேற்றுமை உருபுகள் “ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகியன.
A
முதல் வேற்றுமை
B
இரண்டாம் வேற்றுமை
C
மூன்றாம் வேற்றுமை
D
நான்காம் வேற்றுமை
Question 36 Explanation: 
குறிப்பு :- மூன்றாம் வேற்றுமை :- மூன்றாம் வேற்றுமை உருபுகள் “ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்” ஆகியன. (எ.கா.) : நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது. – ஆல் தூங்குகையான் ஓங்குநடை – ஆன்; தாயொடு மகள் வந்தாள் – ஒடு; தந்தையோடு தாய் வந்தாள் – ஓடு; தந்தையுடன் தம்பியும் வந்தான் – உடன்;
Question 37
நான்காம் வேற்றுமை உருபு “-------------”?
A
B
கு
C
இன்
D
அது
Question 37 Explanation: 
குறிப்பு :- நான்காம் வேற்றுமை உருபு “கு”(எ.கா.) : தலைவர் நந்தினிக்குப் பரிசு வழங்கினார்.
Question 38
------------- வேற்றுமை உருபுகள் “இல், இன், என்பன.
A
முதல்
B
மூன்றாம்
C
ஐந்தாம்
D
ஏழாம்
Question 38 Explanation: 
குறிப்பு :- ஐந்தாம் வேற்றுமை :- ஐந்தாம் வேற்றுமை உருபுகள் “இல், இன்”, என்பன. (எ.கா.) : கொடையில் சிறந்தவர் பாரி, இந்தியாவின் தெற்கு எல்லை குமரி. இத்தொடரில் கொடை, இந்தியா, என்னும் சொற்களுடன் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன.
Question 39
----------------- வேற்றுமை உருபு “அது என்பது.
A
முதல்
B
மூன்றாம்
C
ஆறு
D
ஏழாம்
Question 39 Explanation: 
குறிப்பு :- ஆறாம் வேற்றுமை :- ஆறாம் வேற்றுமை உருபு “அது” என்பது. (எ.கா.) : இராமனது வீடு. எனது புத்தகம் இத்தொடரில் இராமன், என் ஆகிய பெயர்ச்சொற்களுடன் “அது”என்னும் வேற்றுமை உருபு சேர்ந்து பொருளை வேறுபடுத்துகிறது.
Question 40
----------------- வேற்றுமைக்குக் “கண், உள், மேல், கீழ், என்பன உருபுகளாகும்.
A
முதல்
B
மூன்றாம்
C
ஆறு
D
ஏழாம்
Question 40 Explanation: 
குறிப்பு :- ஏழாம் வேற்றுமை :- ஏழாம் வேற்றுமைக்குக் “கண், உள், மேல், கீழ்”, என்பன உருபுகளாகும். (எ.கா.) : வீட்டின்கண் குழந்தை விளையாடுகிறது. பெட்டிக்குள் பணம் இருக்கிறது. கூரையின்மேல் சேவல் உள்ளது. கட்டிலின் கீழ் நாய் படுத்துள்ளது. இத்தொடரில் வீடு, பெட்டி, கூரை, கட்டில் ஆகிய சொற்களுடன் கண், உள், மேல், கீழ் ஆகிய உருபுகள் சேர்ந்து இடப்பொருளை உணர்த்துகின்றன.
Question 41
--------------------- வேற்றுமை உண்டு. ஆனால், அதற்கு உருபு இல்லை. இதனை “விளி வேற்றுமை என அழைப்பர்.
A
முதல்
B
மூன்றாம்
C
எட்டாம்
D
ஏழாம்
Question 41 Explanation: 
குறிப்பு :- எட்டாம் வேற்றுமை : எட்டாம் வேற்றுமை உண்டு. ஆனால், அதற்கு உருபு இல்லை. இதனை “விளி வேற்றுமை” என அழைப்பர். (எ.கா.) : கந்தா வா! இத்தொடரில் கந்தன் என்னும் சொல்லில் இறுதி (ன்) எழுத்தானது கெட்டு, அதன் அயல் எழுத்து ( த – தா என) நீண்டு அழைத்தற் பொருளைத் தருகிறது. இவ்வாறு பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்தற் பொருளில் வருவதனை “விளி வேற்றுமை” என்பர்.
Question 42
அமுதா ---------------- எழுதினாள்
A
பாடத்தை
B
பாடத்துக்கு
C
பாடத்தின்
D
பாடத்தினது
Question 43
முருகன் ---------------- உயர்ந்தான்.
A
உழைப்பை
B
உழைப்பால்
C
உழைப்பின்கண்
D
உழைப்புக்கு
Question 44
பண்டைய மன்னர்கள் தமிழ் ---------- பாடுபட்டனர்.
A
வளர்ச்சிக்கு
B
வளர்ச்சியில்
C
வளர்ச்சியை
D
வளர்ச்சியின் கண்
Question 45
பல வகைப்பட்டதாக இருக்கும் ஒரு பொருளை பொதுவாகச் சுட்டும் பொழுது, அதன் வகை குறித்து ஐயம் ஏற்படலாம். எனவே அவற்றை, இனம் பிரித்துக்காட்டுவதற்குத் தனிச்சொல்லைப் பயன்படுத்துவர். அத்தனிச்சொல் ------------------- எனப்படும்.
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
வழு
D
அடைமொழி
Question 45 Explanation: 
குறிப்பு :- இனமுள்ள அடைமொழி:- பாட நூல் எனச் சொல்லும்பொழுது, அதன் வகை குறித்து ஐயம் தோன்றும். அதனைப் போக்க தமிழ்ப் பாடநூல், ஆங்கிலப் பாடநூல், கணக்குப் பாடநூல், என அடைகொடுத்துக் கூறுதல் வேண்டும். இவ்வாறு பொருள்களை இனம்பிரித்தறிய உதவும் அடைமொழிகள் இனமுள்ள அடைமொழி எனப்படும். இனமில்லா அடைமொழிகள்:- வெண்ணிலவு, கருங்காக்கை, செங்கதிரோன் இவற்றுக்கெல்லாம் இனமாகக் கூற வேண்டுமானால், கருநிலவு, வெண்காக்கை, கருங்கதிரோன் எனக் கூறுதல் வேண்டும். அவ்வாறு ஒன்று இல்லாததனால் இவை போன்றவற்றிற்கு இனமில்லா அடைமொழிகள் எனக் கூறுவார்.
Question 46
ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின், அது ---------- எனப்படும்.
A
அடைமொழி
B
வழு
C
வழுவமைதி
D
போலி
Question 47
போலி எத்தனை வகைப்படும்?
A
1
B
2
C
3
D
4
Question 47 Explanation: 
குறிப்பு :- போலி,1. முதற்போலி; 2. இடைப்போலி; 3. இறுதிப்போலி என மூவகைப்படும். இறுதிப்போலியைக் கடைப்போலி எனவும் கூறுவர்.
Question 48
ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது ----------------- போலியாகும்.
A
முதற்போலி
B
இடைப்போலி
C
இறுதிப்போலி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 48 Explanation: 
குறிப்பு :- (எ.கா.) : மஞ்சு – மைஞ்சு; மயல் – மையல்.
Question 49
ஒரு சொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது ------------------ எனப்படும்.
A
முதற்போலி
B
இடைப்போலி
C
இறுதிப்போலி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 49 Explanation: 
குறிப்பு :- (எ.கா.) : முரசு – முரைசு; இலஞ்சி – இலைஞ்சி
Question 50
ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது -------------------------------- எனப்படும்.
A
முதற்போலி
B
இடைப்போலி
C
இறுதிப்போலி (கடைப்போலி)
D
இவற்றில் ஏதுமில்லை
Question 50 Explanation: 
குறிப்பு :- (எ.கா.) : அறம் – அறன்; பந்தல் – பந்தர்.
Question 51
ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்கள் மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது --------------------  எனப்படும்.
A
முதற்போலி
B
இடைப்போலி
C
இறுதிப்போலி (கடைப்போலி)
D
இவற்றில் ஏதுமில்லை
Question 51 Explanation: 
குறிப்பு :- (எ.கா.) : ஐந்து – அஞ்சு என்னும் சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியுள்ளன. இருப்பினும் பொருள் மாறவில்லை. எனவே, இது முற்றுப்போலி எனப்படும்.
Question 52
பொருந்தாதது எது? பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிவோம்..
A
அனுமதி - இசைவு
B
ஆதவன் - ஞாயிறு
C
ஆரம்பம்- தொடக்கம்
D
ஆஸ்தி - உயில்
Question 52 Explanation: 
குறிப்பு :- ஆஸ்தி என்னும் பிறமொழிச் சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் சொத்து.
Question 53
பொருந்தாதது எது? பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிவோம்..
A
இம்சை - துன்பம்
B
இருதயம் - உயிர்
C
ஈசன் - இறைவன்
D
உபசரித்தல் - விருந்தோம்பல்
Question 53 Explanation: 
குறிப்பு :- இருதயம் என்னும் பிறமொழிச் சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் நெஞ்சகம்.
Question 54
பொருந்தாதது எது? பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிவோம்..
A
ஐதீகம் - உலக வழக்கு
B
எதார்த்தம் - இயல்பு
C
உஷார் - விழிப்பு
D
உபயம் - உண்டியல்
Question 54 Explanation: 
குறிப்பு :- உபயம் என்னும் பிறமொழிச் சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் திருப்பணியாளர் கொடை.
Question 55
பொருந்தாதது எது? பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிவோம்..
A
கிரீடம் - மணிமுடி
B
காகிதம் - பேப்பர்
C
உஷார் - விழிப்பு
D
குபேரன் - பெருஞ்செல்வன்
Question 55 Explanation: 
குறிப்பு :- காகிதம் என்னும் பிறமொழிச் சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தாள்.
Question 56
பொங்கல் விழா நடைபெறும் காலம் இனிய காலம். கால் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம். இயற்கையன்னை பசுமையான புடவை உடுத்துப் பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும் கனியும் கரும்பும் அணிந்து இன்பக்காட்சி தருங்காலம். - இந்த கூற்று யாருடையது?
A
திரு.வி.க
B
கண்ணதாசன்
C
மறைமலையடிகள்
D
ரா.பி.சேதுப்பிள்ளை
Question 57
பொங்கலுக்குத் தலைநாள் போகி. போகியை அடுத்து வருவது பொங்கல் புதுநாள். அந்நாளில் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' நிகழும்; வீட்டிலுள்ள பழம்பானைகள் விடைபெறும்; புதுப் பானைகளில் பொங்கல் நடைபெறும்; பால் பொங்கும் பொழுது, "பொங்கலோ பொங்கல்" என்னும் மங்கள ஒலி எங்கும் கிளம்பும்; அப்பொழுது, பெண்கள் குரவை ஆடுவர்; பிறகு, "பூவும் புகையும் பொங்கலும்" கொண்டு இல்லுறை தெய்வத்தை வணங்குவர்; அனைவரும் வயிறார உண்டு மகிழ்வர்; - இந்த கூற்று யாருடையது?
A
திரு.வி.க
B
கண்ணதாசன்
C
மறைமலையடிகள்
D
ரா.பி.சேதுப்பிள்ளை
Question 58
ஏழைக்குப் பரிசு கிடைக்க பீர்பால் செய்த செயல் என்ன?
A
வேட்டை
B
சமையல்
C
வீதியுலா
D
நடனம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 58 questions to complete.

4 Comments

Leave a Reply to Abarna Balu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!