Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

11th Tamil Part 8 Online Test – New Book

11th Tamil Iyal 8 Online Test - New Book Unit 8

11th Tamil Iyal 8 Online Test – New Book Unit 8

11th Tamil Questions - Part 8

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மனித சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன் " என்பது யாருடைய பிரார்த்தனையாக இருந்தது
A
மீரா
B
அண்ணா
C
ஜீவானந்தம்
D
சுந்தர ராமசாமி
Question 2
கீழ்க்கண்டவற்றுள் ப.ஜீவானந்தம் குறித்தவற்றுள் எது சரியானது ?
  1. காந்தியவாதி
  2. சுயமரியாதை இயக்கப் போராளி
  3. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
  4. தமிழ் பற்றாளர்
A
அனைத்தும் சரி
B
3, 4 சரி
C
1, 3, 4 சரி
D
2, 3, 4 சரி
Question 3
" என் வாழ்வு என் கைகளில் “ என்று நம்பியவர் யார்?
A
பசுவைய்யா
B
ஜீவா
C
ஈரோடு தமிழன்பன்
D
அண்ணா
Question 4
ப.ஜீவானந்தம் அவர்கள் மறைந்த ஆண்டு
A
1962 ஜனவரி 18
B
1962 ஜனவரி 19
C
1963 ஜனவரி 18
D
1963 ஜனவரி 19
Question 5
"பசுவய்யா” என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் யார் ?
A
ஜீவா
B
சுந்தர ராமசாமி
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 6
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகள் எவை?
  1. ரத்னா பாயின் ஆங்கிலம்
  2. ஒரு புளியமரத்தின் கதை
  3. செம்மீன்
  4. காகங்கள்
A
அனைத்தும் சரி
B
1, 2,4
C
2, 3, 4
D
1, 3, 4
Question 7
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் , மலையாளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்த புதினங்கள் எவை?
    1. செம்மீன்
    2. ஒரு புளியமரத்தின் கதை
    3. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
    4. தோட்டியின் மகன்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 4
D
1, 4
Question 8
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய புதினங்கள் எவை?
    1. ரத்னா பாயின் ஆங்கிலம்
    2. ஒரு புளியமரத்தின் கதை
    3. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
    4. ஜே.ஜே. சில குறிப்புகள்
A
அனைத்தும்
B
1, 2,4
C
2, 3, 4
D
1, 3, 4
Question 9
எந்த இதழில் "காற்றில் கலந்த பேரோசை " என்னும் கட்டுரை 1963 இல் வெளிவந்தது ?
A
தமிழ் நிலம்
B
தென்றல்
C
தாமரை
D
முல்லை
Question 10
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் எவை?
  1. சுதந்திரம் 2. சமத்துவம் 3. சகோதரத்துவம்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 11
  • "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
  •               தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
  •   நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
  •                 நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
  • இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம்
D
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Question 12
  • "கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
  •       கருவியெலாம்  செய்துதந்த கைதான் யார் கை?"
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை?
A
பாண்டியன் பரிசு
B
புரட்சிக் கவி
C
இருண்ட வீடு
D
சேர தாண்டவம்
Question 13
  • "வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
  •         வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே
  •    வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
  •           வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி !"
  • இவ்வரிகளை இயற்றியவர் யார்?
A
கனக சுப்புரத்தினம்
B
சுப்பிரமணியம்
C
பசுவைய்யா
D
சுரதா
Question 14
  • சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  •       ஒதுக, முழக்கம்
A
கேட்டல், சத்தம்
B
சொல்க, ஓங்கி உரைத்தல்
C
கேட்டல், ஒலி
D
ஒலி, ஒளி
Question 15
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • கனிகள், மணி
A
உலோகங்கள், கல்
B
மாணிக்கம், உலகம்
C
உலோகங்கள், மாணிக்கம்
D
மாணிக்கம், கல்
Question 16
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • படிகம், படி
A
உலகம், நாழிகை
B
பளபளப்பான கல், உலகம்
C
நாழிகை, மாணவர்
D
பளபளப்பான கல், மாணவர்
Question 17
இலக்கணக் குறிப்புத் தருக .
  • ஒதுக, பேசிடுக , ஆழ்க, வாழிய
A
பெயரெச்சங்கள்
B
வினையெச்சங்கள்
C
வியங்கோளை வினைமுற்றுகள்
D
வினைத்தொகைகள்
Question 18
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • மீட்சி, நவை
A
குற்றம், விடுதலை
B
விடுதலை, தண்டனை
C
விடுதலை, குற்றம்
D
விடுதலை, உலகம்
Question 19
இலக்கணக் குறிப்புத் தருக .
  • அலைகடல், நெடுங்குன்று
A
வினைத்தொகை, வினைத்தொகை
B
வினைத்தொகை, பெயரெச்சம்
C
பெயரெச்சம், பண்புத்தொகை
D
வினைத்தொகை, பண்புத்தொகை
Question 20
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பேரன்பு, தமிழ்கவிஞர்
A
வினைத்தொகை, வினையாலனையும் பெயர்
B
பண்புத்தொகை, வினையாலனையும் பெயர்
C
பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
D
வினைத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Question 21
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நின்றார்
A
நின்று + ஆர்
B
நில் + ஆர்
C
நில்(ன்) + ற் + ஆர்
D
நின்று + ற் + ஆர்
Question 22
இலக்கணக் குறிப்புத் தருக .
  • உழுதுழுது, ஒழிதல்
A
இரட்டைக்கிளவி, வியங்கோள் வினைமுற்று
B
அடுக்குத் தொடர், வியங்கோள் வினைமுற்று
C
இரட்டைக் கிளவி, தொழிற்பெயர்
D
அடுக்குத் தொடர், தொழிற்பெயர்
Question 23
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்வான்
A
செய்து + ஆன்
B
செய் + வான்
C
செய்+வ் + ஆன்
D
செய்து + வான்
Question 24
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அழைத்தான்
A
அழை + த் + த் + ஆன்
B
அழை+த் + ஆன்
C
அழைத்து + ஆன்
D
அழை+ து + ஆன்
Question 25
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டுகின்றேன்
A
வேண்டு+கின்றேன்
B
வேண்டு+கி + இன்றேன்
C
வேண்டு + கின்று + ஏன்
D
வேண்டு+க் +கின்று + ஏன்
Question 26
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பறித்தார்
A
பறித்து + ஆர்
B
பறி+த் + ஆர்
C
பறி+த்+த் + ஆர்
D
பறித்த + ஆர்
Question 27
"உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே " என்னும் விதிப்படி புணர்ந்து வரும் சொல்
A
கற்பிளந்து
B
சிற்றூர்
C
மணிக்குளம்
D
நீரோடை
Question 28
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்
Question 29
கீழ்க்கண்டவற்றுள் ' ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்’ என்னும் விதிப்படி வரும் சொல் எது?
A
கற்பிளந்து
B
மணிக்குளம்
C
சிற்றூர்
D
நீரோடை
Question 30
கீழ்க்கண்டவற்றுள் 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் ‘ என்னும் விதிப்படி வரும் சொல் எது?
A
கற்பிளந்து
B
சிற்றூர்
C
மணிக்குளம்
D
நீரோடை
Question 31
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் , உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் புணர்ச்சி விதிகளின்படி வரும் சொல் ___.
A
கற்பிளந்து
B
சிற்றூர்
C
அமுதென்று
D
நீரோடை
Question 32
இ ஈ ஐ வழி யவ்வும் , உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் புணர்ச்சி விதிகளின்படி வரும் சொல் ___.
A
கற்பிளந்து
B
சிற்றூர்
C
அமுதென்று
D
புவியாட்சி
Question 33
ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்தலே _______ ஆகும்.
A
சுருக்கம்
B
மொழியாக்கம்
C
மொழிபெயர்ப்பு
D
நேர் மொழிபெயர்ப்பு
Question 34
கீழ்க்கண்டவற்றுள் மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை?
  • 1. தழுவல்                    2. சுருக்கம்           3 . மொழியாக்கம்
  • 4. நேர்மொழிபெயர்ப்பு
A
அனைத்தும் சரி
B
1, 2, 3
C
2 , 3, 4
D
1 , 3, 4
Question 35
“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
A
ம.லெ.தங்கப்பா
B
ஏ.கே.ராமானுஜம்
C
ஆல்பர்காம்யு
D
பிரம்மராஜன்
Question 36
"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
A
ம.லெ.தங்கப்பா
B
ஏ.கே.ராமானுஜம்
C
ஆல்பர்காம்யு
D
பிரம்மராஜன்
Question 37
பொருத்துக
  1. அந்நியன்                            i) ஆல்பர்காம்யு
  2. உருமாற்றம்              ii) காப்கா
  3. சொற்கள்                            iii) ழாக் பிரவர்
  4. குட்டி இளவரன்                  iv) பிரம்மராஜன்
  5. உலகக் கவிதைகள்   v) எக்சு பெரி
A
i ii iii iv v
B
i iii ii v iv
C
i ii iii v iv
D
i iv v iii ii
Question 38
“  'அந்நியன் ,  உருமாற்றம்  “ஆகியவை எம்மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டவை
A
பிரெஞ்சு
B
ஜெர்மனி
C
ஆங்கிலம்
D
வடமொழி
Question 39
"  ‘ சொற்கள் ‘ , ‘ குட்டி இளவரசன் ‘ ஆகியவை எம்மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டவை
A
பிரெஞ்சு
B
ஜெர்மனி
C
ஆங்கிலம்
D
வடமொழி
Question 40
பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி எந்நூலை தழுவி எழுதப்பட்டது
A
சாகுந்தலம்
B
பிசிராந்தையார்
C
பில்கணீயம்
D
இருண்டவீடு
Question 41
பில்கணீயம் என்பது எம்மொழியில் எழுதப்பட்ட நூல் ?
A
தமிழ்
B
ஆங்கிலம்
C
பிரஞ்சு
D
வடமொழி
Question 42
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
A
பாரதி
B
கனக சுப்புரத்தினம்
C
வாணிதாசன்
D
சுரதா
Question 43
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் எவை?
  • 1. சேர தாண்டவம்                  2. இருண்ட வீடு
  1. பாண்டியன் பரிசு 4 . பில்கணீயம்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
2, 3, 4 சரி
D
1 , 3, 4 சரி
Question 44
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம் ______.
A
சாகுந்தலம்
B
பிசிராந்தையார்
C
பில்கணீயம்
D
இருண்டவீடு
Question 45
'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்  யார்?
A
பாரதி
B
கனக சுப்புரத்தினம்
C
வாணிதாசன்
D
சுரதா
Question 46
'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்னும் பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக கொண்டுள்ளது.
A
மேற்கு வங்கம்
B
ஒடிஸா
C
புதுவை
D
கேரளம்
Question 47
பாரதிதாசன் பெயரில் தமிழக அரசு நிறுவியுள்ள பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது.
A
கோவை
B
திருச்சி
C
திருப்பூர்
D
சென்னை
Question 48
மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றி தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
A
பாரதி
B
சுரதா
C
வாணிதாசன்
D
கனக சுப்புரத்தினம்
Question 49
" உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு " என்று கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
குமட்டூர்க் கண்ணனார்
C
திருவள்ளுவர்
D
ஒளவையார்
Question 50
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யாவர்?
A
உதியன் சேரலாதன் – வேண்மாள்
B
உதாரன் -வேண்மாள்
C
உதாரன் – அமுதவள்ளி
D
உதியன் சேரலாதன் – அமுதவள்ளி
Question 51
நெடுஞ்சேரலாதன் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
A
வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன் .
B
தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.
C
கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன்
D
இவரைப் புகழ்ந்து குமட்டூர்க் கண்ணனார் புறநானூற்றில் பாடியுள்ளார்.
Question 52
சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் கூறும் பாடல் பதிற்றுப்பத்தின் எத்தனையாவது பத்தில் அமைந்துள்ளது
A
1
B
2
C
3
D
4
Question 53
  • ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
  • நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
  • மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
  • -இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
ஐங்குறுநூறு
C
பதிற்றுப்பத்து
D
அகநானூறு
Question 54
  • “ மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
  • ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின் "
  • -இவ்வரிகள் யாருடைய பெருமையை கூறுகின்றன
A
உதியன் சேரலாதன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
இளங்கோவடிகள்
D
குமட்டூர்க் கண்ணனார்
Question 55
பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவதை நோக்கமாக கொண்ட திணை______.
A
கைக்கிளை
B
பெருந்திணை
C
பாடாண் திணை
D
வெட்சித் திணை
Question 56
  • ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
  • நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
  • மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
  • இப்பாடல் அமைந்துள்ள திணை
A
கைக்கிளை
B
பெருந்திணை
C
பாடாண் திணை
D
வெட்சித் திணை
Question 57
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்.
  2. இது செந்தறைப் பாடாண் பாட்டு எனப்படும்.
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 58
" வண்ணந் தாமே நாலைந் தென்ப" என்று கூறும் நூல்
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
திருவாசகம்
D
திருக்குறள்
Question 59
வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி அடி போன்றோ அமைவது ____ எனப்படும்.
A
செந்துறைப் பாடாண் பாட்டு
B
ஒழுகு வண்ணம்
C
செந்தூக்கு
D
நேரிசை ஆசிரியப்பா
Question 60
  • ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
  • நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
  • மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
  • என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை
A
வெண்பா
B
நேரிசை ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
கலிப்பா
Question 61
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
  1. வண்ணம் என்பது சந்த வேறுபாடு.
  2. ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்.
  3. தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 2 தவறு
D
2, 3 சரி
Question 62
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • மருண்டெனன், நயந்து
A
கோபமடைந்தேன், வியப்பு
B
வியப்படைந்தேன், கோபம்
C
வியப்படைந்தேன், விரும்பிய
D
கோபமடைந்தேன், விரும்பிய
Question 63
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • ஒடியா, தண்டா
A
ஓயாத, குறையா
B
குறையா, ஓயாத
C
பாதுகாப்பு, ஓயாத
D
குறையா, மிகுதி
Question 64
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • ஏமம், கடுந்துப்பு
A
வலிமை, மிகுவலிமை
B
பாதுகாப்பு , மிகுந்த பாதுகாப்பு
C
பாதுகாப்பு , மிகுந்த பாதுகாப்பு
D
மிகு வலிமை, வலிமை
Question 65
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • புரையோர், யாணர்
A
சான்றோர், அறிவாளி
B
சான்றோர், புதுவருவாய்
C
அறிவாளி, பனையோலை
D
அறிவாளி, பெட்டி
Question 66
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • பிழைப்பு, மன்னுயிர்
A
வேலை, நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
B
வாழ்தல், உலகம்
C
வாழ்தல், நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
D
உலகம், நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி
Question 67
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • நிரையம், ஒரீஇய
A
நிறைவு, நோய்
B
நரகம், நோய் நீங்கிய
C
நிறைவு, நரகம்
D
நரகம், நோய் உண்டாதல்
Question 68
இலக்கணக் குறிப்புத் தருக – புகழ்பண்பு, நன்னாடு
A
பண்புத்தொகை, வினைத்தொகை
B
வினைத் தொகை, பண்புத்தொகை
C
இரண்டாம் வேற்றுத் தொகை, பண்புத்தொகை
D
இரண்டாம் வேற்றுத் தொகை, வினைத்தொகை
Question 69
இலக்கணக் குறிப்புத் தருக – துய்த்தல், மருண்டனென்
A
தொழிற்பெயர், தன்மை பன்மை வினைமுற்று
B
அல் ஈற்று வியங்கோல் வினை முற்று, தன்மை பன்மை வினைமுற்று
C
தொழிற்பெயர், தன்மை ஒருமை வினைமுற்று
D
அல் ஈற்று வியங்கோல் வினை முற்று, தன்மை ஒருமை வினைமுற்று
Question 70
இலக்கணக் குறிப்புத் தருக – ஒரீஇய , ஒடியா
A
இன்னிசை அளபெடை , எதிர்மறை வினைமுற்று
B
செய்யுளிசை அளபெடை, ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C
சொல்லிசை அளபெடை, ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
D
எதிர்மறை வினைமுற்று, ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்
Question 71
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக -மருண்டனென்
A
மருண்டு + அன்+ என்
B
மருள்(ண்) + ட் + அன்+ என்
C
மருள்(ண்) + ட் + என்
D
மருள்(ண்) + ட் + என் + என்
Question 72
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக -துய்த்தல்
A
துய்+த்+த்+அல்
B
துய்த்து + அல்
C
துய்+த் + தல்
D
துய் + த் + அல்
Question 73
"துய்த்தல் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் வரும் "தல்” என்பது _____.
A
தொழிற்பெயர் விகுதி
B
தொழிற்பெயர் விகுதி
C
பண்புப் பெயர் விகுதி
D
தன்மை பன்மை வினை முற்று விகுதி
Question 74
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – மண்ணுடை
Question 75
கீழ்காண்பனவற்றுள் " மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிப்படி புணரும் சொல்
A
மண்ணுடை
B
புறந்தருதல்
C
நன்னாடு
D
துய்த்தல்
Question 76
கீழ்காண்பனவற்றுள் எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல் எது?
A
நற்றிணை
B
பதிற்றுப்பத்து
C
அகநானூறு
D
குறுந்தொகை
Question 77
பாடாண் திணையில் அமைந்த பதிற்றுப்பத்து எந்த மன்னர்களுடைய சிறப்புகளை எடுத்தியம்புகிறது ?
A
சோழர்கள்
B
பாண்டியர்கள்
C
சேரர்கள்
D
நாயக்கர்கள்
Question 78
பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள பாடல்களில் எத்தனை பத்துப் பாடல்கள் கிடைத்துள்ளன?
A
2
B
7
C
6
D
8
Question 79
கீழ்காண்பனவற்றுள் பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் பின்னும் இடம்பெறுபவை எவை?
  1. துறை              2. வண்ணம்                   3 . தூக்கு               4. பாடலின் பெயர்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
1, 2, 3
D
2 , 3
Question 80
பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாட்டுடைத் தலைவனாக கொண்ட பத்து எது?
A
1
B
2
C
3
D
4
Question 81
பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாடிய குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசில் யாது?
A
உம்பர்காட்டில் 500 ஊர், தென்னாட்டு வருவாய் முழுவதும்
B
உம்பர்காட்டில் 50 ஊர், தென்னாட்டு வருவாயில் பாதி
C
உம்பர்காட்டில் 500 ஊர், தென்னாட்டு வருவாயில் பாதி
D
உம்பர்காட்டில் 5 ஊர், தென்னாட்டு வருவாய் முழுவதும்
Question 82
  • "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
  • அணியென்ப நாட்டிற்கிவ் வைத்து " என்பது எந்நூலில் இடம்பெற்றுள்ளது.
A
ஐங்குறுநூறு
B
திருக்குறள்
C
பதிற்றுப்பத்து
D
அகநானூறு
Question 83
  • " வீட்டுக்கு உயிர்வேலி!
  • வீதிக்கு விளக்குத் தூண்!
  • நாட்டுக்குக் கோட்டை மதில்!
  • நடமாடும் கொடிமரம் நீ"
  • என்று பாடியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 84
"கவிஞாயிறு " என்று போற்றப்படுபவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 85
  • ''எத்தனை உயரம் இமயமலை – அதில்
  • இன்னொரு சிகரம் உனது தலை
  • எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
  • இவர்களை விஞ்சிட என்ன தடை?"
  • என்று முழங்கிய கவிஞர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 86
  • எட்டயபுரத்து இளம்புயல் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 87
  • "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்று மழையில் நனைந்து கொண்டே பாடிய கவிஞர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 88
  • “ நல்லதோர் வீணை செய்தே அதை
  • நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!
  • சொல்லடி சிவசக்தி " என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
சுரதா
Question 89
  • "தமிழா! பயப்படாதே. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்" என்று நமக்குக் கட்டளையிட்டவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 90
  • " பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடினம் தீர்ந்து வருவதால் முயற்கொம்பே" என்று முழங்கியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
சுரதா
Question 91
  • " தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் " என்று கல்விக் கூடங்களின் இன்றியமையாமையைச் சினத்துடன் எடுத்துக் காட்டியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
சுரதா
Question 92
  • "பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்று முழங்கியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
சுரதா
Question 93
  • "வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும் " என்று கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
அண்ணா
Question 94
  • " நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் " என்று கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
அண்ணா
Question 95
  • "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மேன்மையான பார்வையைத் தந்தவர் யார்?
A
பாரதிதாசன்
B
முண்டாசுக் கவி
C
தாராபாரதி
D
கணியன் பூங்குன்றன்
Question 96
  • ''விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று உலகத்தையே வீடாக காட்டியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
தாராபாரதி
D
அண்ணா
Question 97
  • "செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
மகாகவி
C
தாராபாரதி
D
அண்ணா
Question 98
பின்வரும் பட்டிமன்றம் குறித்த கூற்றுகளில் எது தவறானது.?
A
பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதத்தளம் .
B
அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம்.
C
வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம்.
D
) " பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏதுமின் " என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.
Question 98 Explanation: 
(Note: " பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏதுமின் " என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.)
Question 99
பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ___ எனப்படும்
A
காரணப்பெயர்கள்
B
இடுகுறிப்பெயர்கள்
C
ஆக்கப்பெயர்கள்
D
பொதுப் பெயர்கள்
Question 100
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  • பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ஆக்கப் பெயர் விகுதிகள் என்பர்
  • ஆக்கப் பெயர்களில் விகுதிகளே தனிச்சிறப்பு உடையன.
  • தமிழ் மொழியில் ஆக்கப் பெயர்கள் பேச்சு வழக்கிலேயே மிகுதியாக உள்ளன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 101
கீழ்காண்பணவற்றுள் ஆக்கப் பெயர்ச்சொற்கள் எவை?
  • 1. அறிவியல்                2. திறமைசாலி
  • 3 . சத்துவம்                        4 . பெண்ணியம்             5 . ஏற்றுமதி
A
அனைத்தும் சரி
B
1, 2 3, 4 சரி சரி
C
2 , 3 ,4 தவறு
D
1 , 3, 5 சரி
Question 102
ஆக்கப் பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
A
2
B
3
C
4
D
5
Question 103
ஆக்கப் பெயர்ச்சொற்களின் வகைகளில் எது தவறானது ?
A
பெயருடன் சேரும் விகுதிகள்
B
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்.
C
பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
D
வினையுடன் மட்டும் சேரும் விகுதிகள்.
Question 104
கீழ்காண்பணவற்றுள் பெயருடன் சேரும் விகுதிகள் எவை?
  1. ஆளி      2. மானம்    3. அகம்       4 .தாரர்       5. காரர்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 4, 5
D
1 , 3, 4, 5
Question 105
"பணியாள், குற்றவாளி, ஆணையாளர் " இச்சொறகளில் வரும் ஆக்கப் பெயர்கள் எவ்வகையை சேர்ந்தவை
A
பெயருடன் சேரும் விகுதிகள்
B
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள்
C
பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள்
D
வினையுடன் மட்டும் சேரும் விகுதிகள்.
Question 106
உடைமை ,உரிமை, உறவு, தொழில் என்னும் நான்கு பொருள்களில் வரும் ஆக்கப் பெயர்கள் எவை?
  1. காரன்     2. ஆளி       3 . ஆளர்     4 . மானம்   5 . காரி
A
அனைத்தும்
B
2 , 3
C
1 , 3, 4
D
1,5
Question 107
பொருத்துக.
  • வீட்டுக்காரன்            i) தொழில்
  • தமிழ்நாட்டுக்காரி               ii) உறவு
  • உறவுக்காரர்              iii) உரிமை
  • தோட்டக்காரர்           iv) உடைமை
A
i ii iii iv
B
ii iii iv i
C
iv iii ii I
D
i iii iv ii
Question 108
"ஆளர் " என்னும் ஆக்கப் பெயர் விகுதி ____ விகுதிகளுடன் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.
A
பண்புப் பெயர்
B
தொழிற்பெயர்
C
காலப் பெயர்
D
சினைப் பெயர்
Question 109
" செய்தியாளர் ,இறக்குமதியாளர் " என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
A
தி, தி
B
ஆளர், ஆளர்
C
தி, மதி
D
இ, மதி
Question 110
" தேர்வாளர், அழைப்பாளர் " என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
A
ஆளர், ஆளர்
B
வு, பு
C
வா, பா
D
வ், ப்
Question 111
" ஆட்சியாளர், செயலாளர்” என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
A
ஆளர், ஆளர்
B
சி, ல்
C
சி, அல்
D
ஆட்சி, செயல்
Question 112
இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துணை நிற்கும் விகுதிகள் எவை?
  1. காரன்     2. ஆளி       3 . ஆளர்     4 . மானம்   5 . காரி
A
அனைத்தும்
B
2 , 3
C
1 , 3, 4
D
1,5
Question 113
கீழ்காண்பணவற்றுள் வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் எவை?
  1. ஆளி                2. மானம்    3. அகம்       4 .தாரர்       5. காரர்
A
அனைத்தும்
B
2 மட்டும்
C
1, 4, 5
D
1 , 3, 4, 5
Question 114
கீழ்காண்பணவற்றுள் பெயருடனும் வினையுடனும்  சேரும் விகுதிகள் எவை?
  1. ஆளி                2. மானம்    3. அகம்       4 .தாரர்       5. காரர்
A
அனைத்தும்
B
2 மட்டும்
C
1, 4, 5
D
3 மட்டும்
Question 115
“ஜனப்பிரளயம் “ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச் சொல் எது?
A
மக்கள் அலை
B
உயிர் அலை
C
மக்கள் வெள்ளம்
D
மக்கள் அவை
Question 116
  • கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல்.
  • காரணம்: சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
A
கூற்று சரி; காரணம் தவறு
B
இரண்டும் சரி
C
இரண்டிற்கும் தொடர்பில்லை
D
கூற்று தவறு; காரணம் சரி
Question 117
அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன் – யார் யாரிடம் கூறியது ?
A
அமைச்சர் கவிஞரிடம்
B
மன்னர் அமைச்சரிடம்
C
அமைச்சர் மன்னரிடம்
D
மன்னர் அமுதவல்லியிடம்
Question 118
அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் – இவ்வரியில் உள்ள சொற் பிழைகளின் திருத்தம்
A
அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
B
அடையாறுப் பாலத்தின் சுவரில்
C
அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
D
அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
Question 119
இலக்கணக் குறிப்புத் தருக - அலைகடல், புதுக்கியவர்
A
பண்புத்தொகை , தொழிற்பெயர்
B
வினைத்தொகை, தொழிற்பெயர்
C
வினைத்தொகை, வினையாலணையும்பெயர்
D
பண்புத்தொகை, வினையாலணையும் பெயர்
Question 120
தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் யார்?
A
உ.வே.சா
B
ஆறுமுக நாவலர்
C
மயிலை சீனி.வேங்கடசாமி
D
கால்டுவெல்
Question 121
கீழ்க்காண்பனவற்றுள் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள் யாவை?
  1. கொங்கு நாட்டு வரலாறு
  2. இரமேசுவரத்தீவு
  3. உறையூர் அழிந்த வரலாறு
  4. மறைந்து போன மருங்காப்பட்டினம்
A
அனைத்தும் சரி
B
2, 3, 4 சரி
C
1 , 3, 4 சரி
D
1,2,3 சரி
Question 122
கீழ்க்காண்பனவற்றுள் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூல்கள் யாவை?
  1. கொங்கு நாட்டு வரலாறு
  2.  சேரன் செங்குட்டுவன்
  3.  மகேந்திரவர்மன்
  4.  நரசிம்மவர்மன்
  5. 3ம் நந்திவர்மன்
A
அனைத்தும் சரி
B
1,2,3 சரி
C
2, 3, 4 சரி
D
2, 3,5 சரி
Question 123
களப்பிரர் காலத்திற்கு  ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தை செப்பனிட்ட மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வு நூல் எது?
A
இருண்ட காலம்
B
களப்பிரர் காலத் தமிழகம்
C
இருண்டகால தமிழகம்
D
களப்பிரர்கள்
Question 124
மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்கள் கற்றுத் தேர்ந்த மொழிகள் யாவை?
  1. மலையாளம்   2. கன்னடம்                   3 . ஆங்கிலம்                 4. தெலுங்கு
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1,2,3
D
1, 3, 4
Question 125
மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்களின் பன்முக சிறப்புகள் எவை?
  • 1.வரலாற்றாசிரியர்                         2 . நடுநிலை பிறழாத ஆய்வாளர்
  1. மொழியியல் அறிஞர் 4 . இலக்கியத் திறனாய்வாளர்
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
1,2,3 சரி
D
1, 3, 4 சரி
Question 126
மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டமளித்து பாராட்டிய பல்கலைக்கழகம் எது ?
A
பாரதியார் பல்ககலைக்கழகம்
B
பாரதிதாசன் பல்ககலைக்கழகம்
C
அண்ணாமலை பல்ககலைக்கழகம்
D
மதுரைப் பல்ககலைக்கழகம்
Question 127
மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு
A
1890
B
1980
C
1981
D
1891
Question 128
தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்  அழியாச் சிறப்பிடம் பெற காரணமாக இருந்த  நூல்கள் யாவை?
  1. சமணமும் தமிழும்
  2. பௌத்தமும் தமிழும்
  3. மறைந்து போன தமிழ் நூல்கள்
  4. கிறித்துவமும் தமிழும்
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
1,2,3 சரி
D
1, 3, 4 சரி
Question 129
மயிலை  சீனி.வேங்கடசாமி அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
A
1900 – 1990
B
1900-1980
C
1800-1890
D
1800-1880
Question 130
அழியாச் சிறப்பிடம் - இலக்கணக் குறிப்புத் தருக .
A
வினையெச்சம்
B
பெயரெச்சம்
C
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
D
தொழிற்பெயர்
Question 131
  • "நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
  • நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்"
  • என்று பாடியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
ஜீவானந்தம்
D
நாமக்கல் கவிஞர்
Question 132
  • “ பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
  • முத்தமிட்டுச் சொன்னது பூமி
  • ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!"
  • என்று பாடியவர் யார்?
A
மீரா
B
ஈரோடு தமிழன்பன்
C
கழனியூரன்
D
நாமக்கல் கவிஞர்
Question 133
பொருத்துக
  • Strategies                   i) பட்டி மன்றம்
  • Debate                       ii) உத்திகள்
  • Multiple personality    iii) புனைபெயர்
  • Pseudonym                 iv)பன்முக ஆளுமை
A
i ii iii iv
B
ii i iv iii
C
iv iii ii i
D
i iii iv ii
Question 134
கீழ்க்கண்டவற்றுள் " துளிப்பா " என்ற பொருளுடைய சொல் எது?
A
கவிதை
B
செய்யுள்
C
ஹைக்கூ
D
குறுங்கவிதை
Question 135
  • " எப்போதும் மத்தாப்பு
  • கொளுத்தி விளையாடுகிறது
  • மலையருவி "
  • என்று பாடியவர் யார்?
A
மீரா
B
ஈரோடு தமிழன்பன்
C
கழனியூரன்
D
நாமக்கல் கவிஞர்
Question 136
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  • Equality – சமத்துவம்
  • Trade Union – தொழிற்சங்கம்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 137
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. ஜீவா வாழ்க்கை வரலாறு - சுந்தர ராமசுவாமி
  2. செல்லாக்கம் - இ. மறை மலை
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 137 Explanation: 
(Note: ஜீவா வாழ்க்கை வரலாறு - கே. பாலதண்டாயுதம்)
Question 138
"நின்றார் >>>>>  நில்(ன்) + ற் + ஆர் " இதில் ' ஆர்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஆண்பால் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
வினையாலணையும் பெயர்
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 139
"வேண்டுகின்றேன்  >>>> வேண்டு + கின்று + ஏன் " இதில் ‘கின்று ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சாரியை
B
இறந்தகால இடைநிலை
C
நிகழ்கால இடைநிலை
D
எதிர்கால இடைநிலை
Question 140
  • '' அழைத்தான் >>>>அழை + த் + த் + ஆன் "
  • இதில் ‘ த் + த்’ என்பதன்  பகுபத உறுப்பிலக்கணம்
  •  முறையே
A
இறந்தகால இடைநிலை, சந்தி
B
சந்தி, இறந்தகால இடைநிலை
C
சாரியை, இறந்தகால இடைநிலை
D
இறந்தகால இடைநிலை, சாரியை
Question 141
" ஆழ்க >>>>ஆழ் + க" இதில் 'க' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்  
A
வியங்கோள் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
பெண்பால் வினைமுற்று விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 142
" செய்வான்>>>>>>>>>செய்+ வ்+ஆன் " இதில் ‘ஆன்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஆண்பால் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
வினையாலணையும் பெயர்
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 142 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!