Online TestTamil

10th Std Tamil Notes Part 8 Online Test

10 ஆம் வகுப்பு - எட்டாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)

Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - எட்டாம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக்; கடந்து கான்பல கடந்தரு நெறிசெலுங் காலை; கொடுந்த டக்கரித் திரளெனும் குழுவினுள் ஒருவன்; அடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 2
நிகழுந் தாரையில் காவதத் துள்ளுறை நெடுநீர்; அகழி போன்றவோர் ஓடையுண் டதனினுக் கணித்தாய்; புகலு தற்கரி தடவியுண் டவ்வழிப் பொருந்தி; உகளு மாங்கொரு பாதகக் கொடுவரி உழுவை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 3
நீண்ட வால்நிலம் புடைத்திடக் கிடந்துடல் நிமிர்ந்து; கூண்ட கால்மடித் திருவிழி கனல்கள் கொப்பளிப்பப்; பூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ; வீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும்  - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 4
நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் இனங்களில் நிணமுன்; டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட; டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா; தரும்பெ ருங்கரி பிதிர்ந்திட வுருமினும் அலறும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 5
அதிர்ந்தி டுத்தொனி செவியுற அடவியல் அடைந்த; முதிரிந்த மேதியும் கவையடிக் கேழலும் முழுதும்; பொதிந்த மெய்மயி ரெண்கினங் களுமரைப் போத்தும்; பதிந்த கால்தடு மாறிட வீழ்ந்துடல் பதைக்கும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 6
என்ற வாசகம் செவிபுக எழிலிரு புயமும்; குன்று போலுற வீங்கின முறுவல்கொண் டிடராய்; நின்ற வேங்கையெவ் வுழியென நிகழ்த்தினர் அவனும்; வென்றி வாளர சேயணித் தெனவிளம் பினனே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 7
மாதி ரத்துறை கேசரி நிகர்முகம் மதுதம்; பூத ரப்புயம் அசைதரப் புளகிதத் தோடும்; காது செங்கதிர் வேல்வலக் கரத்திடை கவின; வீதி வாய்வரக் கண்டது பெருவரி வேங்கை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 8
கண்ட போதினில் வால்குழைத் தரியமெய் கலங்கிக்; கொண்டு மென்மெல நடந்துதன் பெருஞ்சிரங் குனித்துத்; தண்ட ளிர்ப்பதத் தெரிசனைக் கெனச்சலாம் உரைத்துத்; தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 9
வந்து தெண்டனிட் டெழுந்துவாய் புதைத்துற வணங்கிப்; புந்தி கூர்தரப் போற்றிய வள்ளுகிர்ப் புலியை; மந்த ராசல முகம்மது நனிமனம் மகிழ்ந்து; சந்த மென்மணிக் கரத்தினால் சிரமுகம் தடவி; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 10
இன்று தொட்டிவண் நெறியினில் உயிர்செகுத் திடுவ; தன்று வேறொரு காட்டினிற் புகுகவென் றறைந்த; மன்றல் உன்றிய முகம்மதின் மலரடி வணங்கி; நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை;- இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 11
படுகொ லைப்புலி மெய்யுறப் பணிந்திவர் பாதத்து; அடிவ ணங்கிய காரண வதிசயம் அதனால்; உடைய வன்திருத் தூதரே உண்மையென் றுன்னித்; தினமு டைத்தநெஞ் சாயினார் அறிவினில் தெளிந்தோர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 
B
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார் 
C
கம்பராமாயணம், கம்பர்
D
சீறாப்புராணம், உமறுப்புலவர்
Question 12
நபிமுகம்மது அவர்களின் திருப்பெயர் -------------?
A
மரைக்காயர்
B
நாயகம் பிள்ளை 
C
அகமது
D
இவற்றில் ஏதுமில்லை 
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
தெண்டிரை – தெளிந்த அலைகள்
B
கான் – மலை
C
தடக்கரி – பெரிய யானை
D
திரள் – கூட்டம்
Question 13 Explanation: 
குறிப்பு :- கான் – காடு
Question 14
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
அறைகுவன் – சொல்லுவான்
B
தாரை – வழி
C
அணித்தாய் – அண்மையில்
D
அடவி – விலங்கு
Question 14 Explanation: 
குறிப்பு :- அடவி – காடு
Question 15
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
உழுவை – சிங்கம்
B
கூண்ட – சேர்ந்த
C
கனல் – நெருப்பு
D
வெள்ளெயிறு – வெண்ணிறப் பற்கள்
Question 15 Explanation: 
குறிப்பு :- உழுவை – புலி
Question 16
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
புலால் – இறைச்சி
B
வனம் – காடு
C
வள்ளுகிர் – கூர்மையான நகம்
D
மடங்கல் – புலி
Question 16 Explanation: 
குறிப்பு :- மடங்கல் – சிங்கம்
Question 17
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
நிணம் – கொழுப்பு (இறைச்சி)
B
மதகரி – மதம் பொருந்திய யானை
C
கோடு – மலை
D
கிரி – மலை
Question 17 Explanation: 
குறிப்பு :- கோடு – தந்தம்
Question 18
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
இரும்பனை – பெரிய பனை
B
உரும் – இடி
C
அலறும் – முழங்கும்
D
தொனி - படகு
Question 18 Explanation: 
குறிப்பு :- தொனி - ஓசை
Question 19
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
மேதி – எருமை
B
கவை – பிளந்த
C
கேழல் – பன்றி
D
எண்கு – புலி
Question 19 Explanation: 
குறிப்பு :- எண்கு – கரடி
Question 20
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
மரை – புலி
B
எழில் – அழகு
C
புயம் – தோள்
D
முறுவல் – புன்சிரிப்பு
Question 20 Explanation: 
குறிப்பு :- மரை – மான்
Question 21
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
இடர் – இன்பம்
B
வேங்கை – புலி
C
வென்றி – வெற்றி
D
அணித்து – அருகில்
Question 21 Explanation: 
குறிப்பு :- இடர் – துன்பம்
Question 22
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
விளம்பினான் – சொன்னான்
B
மாதிரம் – மலை
C
கேசரி – சிங்கம்
D
புளகிதம் – கோபம்
Question 22 Explanation: 
குறிப்பு :- புளகிதம் – மகிழ்ச்சி
Question 23
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
காது – கொல்லுதல்
B
கவின் – அழகு
C
பூதரம் – விலங்கு
D
வீதிவாய்வர – பாதையில் வர
Question 23 Explanation: 
குறிப்பு :- புளகிதம் – மகிழ்ச்சி
Question 24
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
பெருஞ்சிரம் – பெரியதலை
B
தெண்டனிட்டது – வணங்கியது
C
வள்ளுகிர் – விளம்பியது
D
தெரிசனம் – காட்சி
Question 24 Explanation: 
குறிப்பு :- வள்ளுகிர் – கூர்மையான நகம்
Question 25
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
சலாம் – வணக்கம்
B
திண்திறல் – உறுதியான வலிமை
C
புந்தி – அறிவின்மை
D
மந்தராசலம் – மந்தரமலை
Question 25 Explanation: 
குறிப்பு :- புந்தி – அறிவு
Question 26
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
சந்தம் – அழகிய
B
சிரம் – கால்
C
இவண்நெறியில் – இவ்வழியில் 
D
செகுத்திடுவது – உயிர்வதை செய்வது
Question 26 Explanation: 
குறிப்பு :- சிரம் – தலை
Question 27
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
அறைந்த – சொன்ன
B
அதிசியம் – வியப்பு
C
உன்னி – விளம்பியது
D
தெளிந்தார் – தெளிவு பெற்றார்
Question 27 Explanation: 
குறிப்பு :- உன்னி – நினைத்து 
Question 28
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
கொலைப்புலி (கொலையை விரும்பும் புலி) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
B
உயிர்செகுத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
C
புகுக – வியங்கோள் வினைமுற்று
D
மலரடி – உருவகம்
Question 28 Explanation: 
குறிப்பு :- மலரடி – உவமைத்தொகை
Question 29
எழுந்து, புதைத்து, வணங்கி - இலக்கணக்குறிப்பு தருக :-
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 30
பெருஞ்சிரம், தண்டளி, திண்டிறல் - இலக்கணக்குறிப்பு தருக :-
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 31
புடைத்து, நிமிர்ந்து, கிடந்தது, மடித்து – இலக்கணக்குறிப்பு தருக :-
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 32
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
வால்குழைத்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
செங்கதிர், பெருவரி – பண்புத்தொகை
C
பூதரப்புயம் – உவமைத்தொகை
D
நின்ற வேங்கை – வினையெச்சம்
Question 32 Explanation: 
குறிப்பு :- நின்ற வேங்கை – பெயரெச்சம்
Question 33
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
செவிபுக – ஆறாம் வேற்றுமைத்தொகை
B
முதிர்ந்தமேதி, பொதிந்தமெய் – பெயரெச்சம் 
C
கவையடிக்கேழல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
D
பெருங்கிரி – பண்புத்தொகை
Question 33 Explanation: 
குறிப்பு :- செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை
Question 34
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
கால் மடித்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
வெள்ளெயிறு – பண்புத்தொகை
C
நெடுநீர் – வினைத்தொகை
D
பொருந்தி – வினையெச்சம்
Question 34 Explanation: 
குறிப்பு :- நெடுநீர் – பண்புத்தொகை
Question 35
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
செவிபுக – ஆறாம் வேற்றுமைத்தொக
B
முதிர்ந்தமேதி, பொதிந்தமெய் – பெயரெச்சம் 
C
கவையடிக்கேழல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
D
பெருங்கிரி – பண்புத்தொகை
Question 35 Explanation: 
குறிப்பு :- செவிபுக – ஏழாம் வேற்றுமைத்தொகை
Question 36
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு :-
A
வரி உழுவை (வரிகளைக்கொண்ட புலி) – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
B
படர்ந்த தெண்டிரை – வினையெச்சம்
C
நதிப்பரப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
D
தொழுது அறைகுவன் – வினையெச்சம்
Question 37
பொருந்தாதது எது? சொற்பொருள் :-
A
அறைந்த – சொன்ன
B
அதிசியம் – வியப்பு
C
உன்னி – விளம்பியது
D
தெளிந்தார் – தெளிவு பெற்றார்
Question 37 Explanation: 
குறிப்பு :- உன்னி – நினைத்து 
Question 38
பொருந்தாதது எது? பிரித்தறிதல் :
A
தெண்டிரை = தென்மை + திரை
B
பெருக்கெடுத்து = பெருக்கு + எடுத்து
C
உள்ளுறை = உள் + ளுறை
D
நெடுநீர் = நெடுமை + நீர்
Question 38 Explanation: 
குறிப்பு :- உள்ளுறை = உள் + உறை
Question 39
பொருந்தாதது எது? பிரித்தறிதல் :
A
அவ்வழி = அ + வழி
B
இருவிழி = இரண்டு + விழி
C
வெள்ளெயிறு = வெண்மை + எயிறு
D
கரிக்கோடு = கரிக் + கோடு
Question 39 Explanation: 
குறிப்பு :- கரிக்கோடு = கரி + கோடு
Question 40
பொருந்தாதது எது? பிரித்தறிதல் :
A
பெருங்கிரி = பெருமை + கிரி
B
எண்கினங்கள் = எண் + கினங்கள்
C
வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
D
மாதிரத்துறை = மாதிரத்து + உறை
Question 40 Explanation: 
குறிப்பு :- எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
Question 41
பொருந்தாதது எது? பிரித்தறிதல் :
A
செங்கதிர் = செம்மை + கதிர்
B
பெருவரி = பெருமை + வரி
C
பெருஞ்சிரம் = பெருமை + சிரம
D
தண்டளிர்ப்பதம் = தண்டளிர் + பதம்
Question 41 Explanation: 
குறிப்பு :- தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்  
Question 42
பொருந்தாதது எது? பிரித்தறிதல் :
A
திண்டிறல் = திண்மை + திறல்
B
சிரமுகம் - சிர + முகம்
C
பணிந்திவர் = பணிந்து + இவர்
D
பெருவரி = பெருமை + வரி
Question 42 Explanation: 
குறிப்பு :- சிரமுகம் - சிரம் + முகம்
Question 43
சீறாப்புராணத்தினை இயற்றியவர் ----------------------
A
கடிகை முத்துப் புலவர்
B
சீதக்காதி
C
உமறுப்புலவர்
D
இவர்களில் யாருமில்லை
Question 44
----------------------- என்பவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
மீனாட்சி சுந்தரனார்
D
உமறுப்புலவர்
Question 45
------------------- என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர்  சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்.
A
சடையப்ப வள்ளல்
B
அடியார்க்கு நல்லார்
C
அப்துல்காதிர் மரைக்காயர்
D
இவர்களில் யாருமில்லை
Question 46
நூல் முற்றும் முன்னமே சீதக்காதி மறைந்தார். அவருக்குப்பின், --------------- என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றுது.
A
அபுல்காசிம்
B
கலீல் ரகுமான்
C
அபுதாகீர்
D
இவர்களில் யாருமில்லை
Question 47
உமறுப்புலவர் ------------- பாக்களால் ஆகிய முதுமொழிமாலை என்னும் நூலையும் படைத்தளித்துள்ளார்.
A
அறுபது
B
எழுபது
C
எண்பது
D
தொண்ணூறு
Question 48
உமறுப்புலவர் அவர்களின் காலம்?
A
பதினைந்தாம் நூற்றாண்டு
B
பதினாறாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
பதினெட்டாம் நூற்றாண்டு
Question 49
இறைவனின் திருத்தூதர் ------------------ என்பவரின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் சீறாப்புராணம். சீறா – வாழ்க்கை. புராணம் – வரலாறு எனப் பொருள்படும். 
A
அக்பர்
B
பாபர்
C
நபிகள் நாயகம்
D
இவர்களில் யாருமில்லை
Question 50
சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம். ஹிஜ்ரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. ------------------- விருத்தப்பாக்களால் ஆனது. நம் பாடப்பகுதி விலாதத்துக் காண்டத்தில் உள்ளது
A
3055
B
5027
C
4053
D
4035
Question 51
இசுரேல் – எகிப்து நாடுகளுக்கிடையே கடும்போர் நடந்த நேரம். அமெரிக்க இதழ் இபான் ஆசிரியர் இசுரேலுக்குச் சென்றார். விடியற்காலை மணி இரண்டு. கட்டடங்களின்மேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. தாம் தங்கியிருந்த இல்லத்தில் அந்நிலையிலும் ஓர் இளம்பெண் ஒரு நூலை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார். அந்த நூலின் பெயர் சத்திய சோதனை. இந்த நூலின் ஆசிரியர் பெயர்?
A
நேரு
B
காந்தி
C
அண்ணா
D
ராஜாஜி
Question 52
காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது, ----------------- பாடல் ஒன்றனைக் கேட்டார். தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை, தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு என்ற அப்பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தினை அவருள் விதைத்தது.
A
மலையாள
B
வங்க மொழி
C
குஜராத்தி
D
தமிழ்
Question 53
காந்தியடிகள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ------------------- என்ற ஒரு நாடக நூலைப் படித்தார். அந்நூலில் சிரவணன் என்ற இளைஞன் பார்வையற்ற தன் தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிச் செல்லும் ஒரு காட்சிப்படம் இருந்தது. அதனைப் பார்த்தது முதல், தாமும் பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்.
A
சிரவண பிதுர்பத்தி
B
அரிச்சந்திரா
C
கந்தன் கருணை
D
திருவிளையாடல்
Question 54
அரிச்சந்திரன் நாடகத்தை காந்தி ஒரு முறை பார்த்தார். அதில் உண்மையை மட்டுமே பேசும் அரசன் அரிச்சந்திரனை பல்வேறு முறைகளில் சோதித்தவர் யார்? ---------------------.
A
அடியார்க்கு நல்லார்
B
அகத்தியர்
C
விசுவாமித்திரர்
D
கொங்கணர்
Question 55
ஒருமுறை காந்தியடிகள், ----------------- என்பவரின் மலைச்சொற்பொழிவைப் பற்றிய நூலைப் படித்தார். தீயவனை எதிர்க்காதே, அவனிடமுள்ள தீமையை எதிர்த்து நில், பகைவனிடமும் அன்பு பாராட்டு என்னும் கருத்துகள் அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
A
கௌதம புத்தர்
B
அகத்தியர்
C
இயேசுநாதர்
D
நபிகள் நாயகம்
Question 56
காந்தியடிகள் ----------------- படித்ததன் மூலம் மனஉறுதியைப் பெற்றார்.
A
பகவத் கீதை
B
பைபிள்
C
குரான்
D
திருக்குறள்
Question 57
உருசிய அறிஞர் ------------------- என்பவர் எழுதிய, உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூல் அவருள் (காந்தியடிகள்) தாக்கத்தினை  ஏற்படுத்தியது. ---------------- என்பவர் தம் நூலில் "இன்னா செய்தார்க்கும்" என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக் கொண்டார்.
A
சேக்சுபியர்
B
தால்சுதாய்
C
வால்ட் விட்மன்
D
அமீர் குஸ்ரூ
Question 58
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும் - என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
ராஜாஜி
C
மு.வரதராசனார்
D
காந்தி
Question 59
ஆங்கிலேயரைத் துன்புறுத்தி விடுதலை பெறுவதனை விட, அமைதியான முறையில் அவர்களை எதிர்த்து, மனம் மாறச் செய்து விடுதலை பெறுவதே சிறந்தது - என்று கூறியவர் யார்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தி
Question 60
வன்முறையை வன்முறையால் வெல்ல நினைப்பது, தீயைத் தீயால் அணைக்க முற்படுவது போன்றது - என்று கூறியவர் யார்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தி
Question 61
நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும். வன்முறையை அன்பு, அருள் ஆகிய அறவழிகளில் தான் தடுக்க முடியும். அறவழியைப் பின்பற்றிப் பெறுகிற விடுதலையே நிலைக்கும் - என்று கூறியவர் யார்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தி
Question 62
வலிய போரில் சாகின்றவர்களின் எண்ணிக்கையை விட, அறவழிப்போரில், இறப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், மற்ற உலக நாடுகள் இதனை ஏற்காவிடினும் இந்தியா அதனை ஏற்று நடத்தி ஏனைய நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழவேண்டும் என்றும் விரும்பியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தி
Question 63
கழிப்பறை கழுவுதல் ஒரு கலை என்றார். தம் கழிவுகளை வேறு ஒருவர் அகற்ற விடாமல் தாமே அகற்றினார். எழுதித் தேய்ந்த பென்சிலாக இருந்தாலும் அதனை இழக்க மனம் வராமல் தேடுவார். சிறு காகிதத்தையும் வீணாக்காமல் அதில் கடிதங்களுக்கு மறுமடல் எழுதுவார். பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார். - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தி
Question 64
காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, ஏழை உழவர்கள் வறுமையால் அரையாடை உடுத்தியதைக் கண்டார். அன்றுமுதல் மேலாடை அணிவதனை  நிறுத்திக்கொண்டார். இங்கிலாந்தில் நடந்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, அப்போதைய இங்கிலாந்து முதன்மையமைச்சர் ----------------, அரை நிருவாணப் பக்கிரி என்று ஏளனம் செய்த போதும், காந்தியடிகளின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
A
வில்லியம் ஹெரால்டு
B
முதலாம் சார்லசு
C
சர்ச்சில்
D
இவர்களில் யாருமில்லை
Question 65
மனிதரோடு மனிதராக வாழ்ந்து, மனிதருக்காக வாழ்ந்து 'மகாத்மா' வாக உயர முடியும் என்பதனை மெய்ப்பித்தவர் உலக உத்தமர் -----------------.
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 66
மனிதனின், பெருமையை மனிதனுக்கு உணர்த்தி, எளியவர்களிடம் மறைந்திருக்கும் அருமையை உணர்த்தி அவர்களை வரலாற்று நாயகர்களாக மாற்றியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 67
என்னைப் பொருத்தவரை தேசாபிமானமும், மனிதாபிமானமும் ஒன்று தான். நான் ஒரு தேச பக்தன். அதற்கு அடிப்படைக் காரணம் நான் மனிதனாக இருப்பதும், அதற்கு மேல் மனிதாபிமானியாக இருப்பதும் தான் - என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 68
உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல சமுதாயமாக உருவாகும் என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 69
---------------------- நாட்டில், இந்தியருக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கபட்டார்.
A
தென் ஆப்பிரிக்கா
B
இங்கிலாந்து
C
இலங்கை
D
கனடா
Question 70
காந்தியடிகள் சிறையில் செருப்புத் தைத்தார். முதல் இணைச் செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினார். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ----------------. அவர் காந்தியடிகளைச் சிறையில் அடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலை ஆனதும் அவரை சந்தித்து தாம் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்க்கு ஈடாக ---------------, காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார்.
A
ஸ்மட்ஸ்
B
ஸ்டாலின்
C
டொனால்ட்
D
கிளைவ் லாயிட்
Question 71
காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்?
A
30.1.1948
B
13.1.1947
C
03.1.1948
D
23.1.1947
Question 72
காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன். என் கால்கள் நடுங்கின, நிற்க முடியவில்லை. உடனே அதனை எடுத்துச் சென்று என் பூசை  அறையில் வைத்து வணங்கி வருகிறேன் - என்று கூறியவர்?
A
ஸ்மட்ஸ்
B
ஸ்டாலின்
C
டொனால்ட்
D
கிளைவ் லாயிட்
Question 73
நாட்டில் வளர்ந்து வரும் அனைத்து வறுமை நிலைகளையும் ஆராய்தல் வேண்டும். இளைஞர்களின் உள்ளத்தில் நாட்டுப்பற்று, தெய்வப்பற்று, மொழிப்பற்று வளரும் வகையில் கல்வி அமைய வேண்டும் - என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 74
நமது நாட்டிற்கே உரிய கிராமத் தொழில்களையும் நாட்டுப்புறக் கலைகளையும் வளர்க்க இளைஞர்கள் முன்வருதல் வேண்டும். இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான். அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கையில் தான் உள்ளது - என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 75
தன்னாட்டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது என்று கூறினார். வளர்ந்து வரும் வெளிநாட்டவர் பொருள் வரவேற்கத் தக்கதன்று என்று கண்டித்தார். - என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 76
ஆங்கிலேயரது மேலாண்மை மூலம் நாம் அடைந்த அடிமைத்தனம் மிக மிக இழிவானது. இதனை நம் நாட்டு இளைஞர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுதல் வேண்டும். தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்குமாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 77
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயமில்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை - என்று கூறியவர்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 78
ஈகத்தின் (தியாகம்) உச்சியில் நின்றவர் --------------. அவருடைய வாழ்வு முழுவதும் ஈகந்தான் மிகவும் நிறைந்திருந்தது. உப்புக்காக, உரிமைக்காக, ஒற்றுமைக்காக, சமத்துவத்திற்காக, வன்முறைக்கும் தீண்டாமைக்கும் எதிராகத் தொடர்ந்து போராடியவர் -------------------.
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 79
வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும், சமுக நீதிக்கான போராளிகளாக ஆக்கியவர் அவர். இறுதியில் தம்முயிரையே நாட்டுக்காக ஈந்து அமர வாழ்வு பெற்றுவிட்டார். உலக உத்தமர் இவர். உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கின்றார். - இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 80
சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் - என்று கூறியவர் யார்?
A
நேதாஜி
B
ராஜாஜி
C
நேரு
D
காந்தியடிகள்
Question 81
பகைவனிடமும் அன்பு காட்டு - எனக் கூறிய நூல்?
A
பகவத்கீதை
B
குரான்
C
நன்னூல்
D
பைபிள்
Question 82
அறநெறியாய்ப் போற்றப்பட வேண்டியவை?
A
ஆடம்பரம், வீண்செலவு
B
எளிமை, சிக்கனம்
C
அன்பு, அருள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 83
ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக?
A
ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தாள்
B
ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தது
C
ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள்
D
ஓர் இளம் பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தனர்
Question 84
ஒருமை பன்மைப் பிழைகளை நீக்குக
A
மனிதனின் நோக்கம் உயர்வானதாகவும் தூய்மை யானதாகவும் இருந்தால் மட்டும் போதா
B
மனிதனின் நோக்கம் உயர்வானதாகவும் தூய்மை யானதாகவும் இருந்தால் மட்டும் போதுமா?
C
மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது
D
மனிதனின் நோக்கம் உயர்வானதாகவும் தூய்மை யானதாகவும் இருந்தால் மட்டும் போதுமே
Question 85
பகவத் கீதை - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது ?
A
சைவ சமய நூல்
B
இந்து சமய நூல்
C
கிறித்துவ சமய நூல்
D
புத்த சமய நூல்
Question 86
பைபிள் - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது ?
A
சைவ சமய நூல்
B
இந்து சமய நூல்
C
கிறித்துவ சமய நூல்
D
புத்த சமய நூல்
Question 87
திருக்குறள் - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது ?
A
திருமூலர்
B
கம்பர்
C
திருவள்ளுவர்
D
மாணிக்கவாசகர்
Question 88
"அடித்தளம்" - என்ற துணைப்பாட கதை நூலின் ஆசிரியர் யார்?
A
பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைகள் - தமிழில் (ஜி.குப்புசாமி)
B
பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைகள் - தமிழில் (சுஜாதா)
C
பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைகள் - தமிழில் (கல்கி)
D
பேர் லாகர்க்விஸ்ட் சிறுகதைகள் - தமிழில் (ராஜம் கிருஷ்ணன்
Question 89
புறத்திணைகள் வெட்சி முதலாகப் ---------------- வகைப்படும்
A
பன்னிரண்டு
B
பதின்மூன்று
C
பதினான்கு
D
பதினைந்து
Question 90
பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது -------------------. அவ்வீரர்கள் ----------------------- பூவைச் சூடிச் செல்வார்கள்
A
வெட்சித்திணை
B
கரந்தைத் திணை
C
வஞ்சித்திணை
D
காஞ்சித்திணை
Question 91
வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் -------------- பூவைச் சூடிச்சென்று மீட்பது, ---------------------.
A
வெட்சித்திணை
B
கரந்தைத் திணை
C
வஞ்சித்திணை
D
காஞ்சித்திணை
Question 92
மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி -------------பூவை சூடிப் போருக்குச் செல்வது -----------------?
A
வெட்சித்திணை
B
கரந்தைத் திணை
C
வஞ்சித்திணை
D
காஞ்சித்திணை
Question 93
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு --------------- பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் ---------------------?
A
வெட்சித்திணை
B
கரந்தைத் திணை
C
வஞ்சித்திணை
D
காஞ்சித்திணை
Question 94
பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகையரசனோடு -------------- பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலைக் காப்பது ---------------------
A
நொச்சித்திணை
B
உழிஞைத்திணை
C
தும்பைத் திணை
D
வாகைத்திணை
Question 95
---------------- பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் --------------------.
A
நொச்சித்திணை
B
உழிஞைத்திணை
C
தும்பைத் திணை
D
வாகைத்திணை
Question 96
பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது --------------------. இவ்வீரர்கள் ------------------ பூவைச்சூடிப் போரிடுவர்
A
நொச்சித்திணை
B
உழிஞைத்திணை
C
தும்பைத் திணை
D
வாகைத்திணை
Question 97
வெற்றிபெற்ற மன்னன் ---------------- பூவைச் சூடி மகிழ்வது, -------------------------?
A
நொச்சித்திணை
B
உழிஞைத்திணை
C
தும்பைத் திணை
D
வாகைத்திணை
Question 98
பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, ----------------------?
A
பாடாண்திணை
B
பொதுவியல் திணை
C
கைக்கிளைத் திணை
D
பெருந்திணை
Question 98 Explanation: 
குறிப்பு :- (பாடு+ ஆண் + திணை = பாடாண்திணை)
Question 99
வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது -------------------?
A
பாடாண்திணை
B
பொதுவியல் திணை
C
கைக்கிளைத் திணை
D
பெருந்திணை
Question 100
------------------ என்பது ஒருதலைக் காமம். இஃது ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என இருவகைப்படும்.
A
பாடாண்திணை
B
பொதுவியல் திணை
C
கைக்கிளைத் திணை
D
பெருந்திணை
Question 101
---------------- என்பது பொருந்தாக் காமம், இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.
A
பாடாண்திணை
B
பொதுவியல் திணை
C
கைக்கிளைத் திணை
D
பெருந்திணை
Question 102
பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிகளுக்கு முன், ஆதலால்,ஆகவே முதலிய சொற்களின் பின், முகவரியில் இறுதி வரி தவிர்த்த பிற இடங்களில் ---------------- இடுதல் வேண்டும்
A
காற்புள்ளி (,)
B
அரைப்புள்ளி (;)
C
முக்காற்புள்ளி (:)
D
முற்றுப்புள்ளி(.)
Question 102 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) நிலம், நீர், காற்று, தீ, வான் என்பன ஐம்பூதங்கள். (2) மகனே, நான் சொல்வதைக் கேள்
Question 103
ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் ------------------ இடுதல் வேண்டும்.
A
காற்புள்ளி (,)
B
அரைப்புள்ளி (;)
C
முக்காற்புள்ளி (:)
D
முற்றுப்புள்ளி(.)
Question 103 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) சிலப்பதிகாரம், செந்தமிழ்க் காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தரையும் பாடும் காப்பியம். (2) இளமுருகு என்பானிடம் நிறைய அறிவுண்டு; பொறுமை இல்லை.
Question 104
ஒருவர் கூற்றை விளக்குதல், சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களை பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தரும்போது ------------------- இடுதல் வேண்டும்.
A
காற்புள்ளி (,)
B
அரைப்புள்ளி (;)
C
முக்காற்புள்ளி (:)
D
முற்றுப்புள்ளி(.)
Question 104 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) முப்பால் என்பன பின்வருமாறு : அறம், பொருள், இன்பம். (2) மத்தேயு, 8:6 (3) பெயர் : மணிமேகலை
Question 105
சொற்றொடர் இறுதி, முகவரி இறுதி, நாள் இறுதி, சொற்குறுக்கம், பெயர் தலைப்பெழுத்து முதலிய இடங்களில் --------------- இட வேண்டும்.
A
காற்புள்ளி (,)
B
அரைப்புள்ளி (;)
C
முக்காற்புள்ளி (:)
D
முற்றுப்புள்ளி(.)
Question 105 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
Question 106
ஒருவினாத்தொடர் முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத்தொடராகவும் இருப்பின், இறுதியில் ------------------- இடுதல் வேண்டும்
A
வினாக்குறி(?)
B
உணர்ச்சிக் குறி(!)
C
ஒற்றை மேற்கோள்குறி (')
D
இரட்டை மேற்கோள் குறி (“)
Question 106 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) அங்கே படிப்பவர் யார்? (2) நீ வருவாயா?
Question 107
வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின் பின் -------------------- இடுதல் வேண்டும்.
A
வினாக்குறி(?)
B
உணர்ச்சிக் குறி(!)
C
ஒற்றை மேற்கோள்குறி (')
D
இரட்டை மேற்கோள் குறி (“)
Question 107 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) என்னே, இதன் அருமை! (2) வாழ்க வாழ்க! (3) பாம்பு பாம்பு ! (4) வருக வருக! [ !!, !!! இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குறிகளை இடுதல் கூடாது ]
Question 108
இக்குறி, தற்சுட்டின் கண்ணும் ( ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறித்தல் ), பிறர் கூற்றாக வரும் இடத்தும், கட்டுரைப் பெயரும், நூற்பெயர் வருமிடத்தும் ----------------- வரும்
A
வினாக்குறி(?)
B
உணர்ச்சிக் குறி(!)
C
ஒற்றை மேற்கோள்குறி (')
D
இரட்டை மேற்கோள் குறி (“)
Question 108 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) ‘ஏ’ என்று சொன்னான் (2) ‘செய்யும்’ என்பது பெயரெச்ச வாய்ப்பாடுகளுல் ஒன்று
Question 109
நேர்க் கூற்றுத் தொடர்களிலும் மேற்கோள் தொடர்களிலும் --------------------------- இடப்படும்.
A
வினாக்குறி(?)
B
உணர்ச்சிக் குறி(!)
C
ஒற்றை மேற்கோள்குறி (')
D
இரட்டை மேற்கோள் குறி (“)
Question 109 Explanation: 
குறிப்பு :- (எ.கா) (1) இராமன், “நாளை வருகிறேன்” என்றான் (2) “ஒழுக்கமுடைமை குடிமை” என்றார் திருவள்ளுவர்
Question 110
பண்டைக் காலத்தில் புறா, கிளி, நாய் முதலியவற்றின் மூலமாகக் கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இதனைத் 'தூது' என்பர். பாடல்கள் மூலமாகக் கடிதம் எழுதியதும் உண்டு. இதனை ------------------ என்பர்.
A
ஓலைத்தூக்கு
B
பாசுரம்
C
சீட்டுக்கவி
D
இவற்றில் ஏதுமில்லை
Question 111
அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு - என கடிதங்கள் எழுதியவர் யார்?
A
அண்ணா
B
காந்தி
C
நேரு
D
மு. வரதராசனார்
Question 112
சில காலம் எட்டையபுரம் அரசவைக் கவிஞராக விளங்கினார். பின்னர், மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். சென்னையில் இதழாசிரியராகவும் பணிபுரிந்தார். - இவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 113
"ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி" என வீர முழக்கமிட்டவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 114
"பாருக்குள்ளே நல்ல நாடு" "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்" - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 115
'தேசியக் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 116
'எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்' எனத் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை ஊட்டியவர்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 117
"முப்பது கோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 118
விடுதலை அடைதற்கு முன்பாகவே, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகளைத் தாம் வாழும் காலத்திலேயே பாடி மகிழ்ந்த முன்னறி புலவர் -------------------?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 119
"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று " - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 120
"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 121
"காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 122
'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' எனக் குழந்தை மனத்தில் ஆழப் பதித்தவர் ----------------?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 123
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்பதன் மூலம் பெண்கள் நலன் பேண விரும்பியவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 124
"தனியொருவனுக் குணவிலை யெனில் சகத்தினை அழித்திடுவோம்" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 125
"வாழிய செந்தமிழ்; வாழ்கநற் றமிழர்" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 126
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 127
'பாரதநாடு பார்க்கெலாம் திலகம்' எனப் பாடிய பைந்தமிழ் பாவலன் -------------------?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
இராமலிங்கனார்
Question 128
பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வைகையைப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி என்றும் பொய்யாக் குலக்கொடி என்றும் --------------- புகழ்ந்துரைத்துள்ளார்.
A
இளங்கோவடிகள்
B
சீத்தலைச்சாத்தனார்
C
கம்பர்
D
ஒளவையார்
Question 129
மகாத்மா காந்தியின் நினைவாக, காந்தி என்னும் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது, காந்தியாக நடிக்க -------------------- என்னும் நடிகர் தேர்வு செய்யப்பட்டார்.
A
சான் மைக்கேல்
B
வின்சென்ட்
C
பென் கிங்ஸ்லி
D
லால் பென்னட்
Question 130
A friend in need is a friend indeed - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
உயிர் கொடுப்பான் தோழன்
B
தன் கையே தனக்கு உதவி
C
முயற்சி திருவினையாக்கும்
D
வாழு, வாழவிடு
Question 131
Self help is the best help - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
உயிர் கொடுப்பான் தோழன்
B
தன் கையே தனக்கு உதவி
C
முயற்சி திருவினையாக்கும்
D
வாழு, வாழவிடு
Question 132
Efforts never fail - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
உயிர் கொடுப்பான் தோழன்
B
தன் கையே தனக்கு உதவி
C
முயற்சி திருவினையாக்கும்
D
வாழு, வாழவிடு
Question 133
Live and let live - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
உயிர் கொடுப்பான் தோழன்
B
தன் கையே தனக்கு உதவி
C
முயற்சி திருவினையாக்கும்
D
வாழு, வாழவிடு
Question 134
Think everybody alike - இணையான தமிழ்ப் பழமொழிகளை அறிக.
A
உன்னைப்போல் பிறரையும் நேசி
B
தன் கையே தனக்கு உதவி
C
முயற்சி திருவினையாக்கும்
D
வாழு, வாழவிடு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 134 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button