Online TestTamil

10th Std Tamil Notes Part 4 Online Test

10 ஆம் வகுப்பு - நான்காம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்)

Congratulations - you have completed 10 ஆம் வகுப்பு - நான்காம் பாடம் - பொதுத்தமிழ் (சமச்சீர்). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்; மறுகால் உழுத ஈரச் செறுவின்; வித்தொடு சென்ற வட்டி பற்பல - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
ஒளவையார், புறநானூறு 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 2
மீனொடு பெயரும் யாணர் ஊர; நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்; செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
ஒளவையார், புறநானூறு 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 3
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தார்; புன்கண் அஞ்சும் பண்பின்; மென்கண் செல்வம் செல்வமென் பதுவே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
ஒளவையார், புறநானூறு 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 4
உழவர், நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர், அகன்ற அழகிய; வயலை மறுபடியும் பயிர் செய்ய உழுதனர். பனையோலைப்; பெட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீர்நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புதுவருவாயினை உடைய மருத நிலத் தலைவனே - இது எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள கருத்து?
A
ஒளவையார், புறநானூறு 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 5
அரசால் சிறப்புச் செய்யப் பெறுதலும், யானை, தேர், குதிரை; முதலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து; செல்லுதலும் செல்வச் சிறப்பன்று. அஃது அவரவர்தம் முன்வினைப்; பயனே. தன்பால் புகலிடம் தேடிவந்த எளியோரைக் கைவிடாமல்; காக்கும் மென்மையான பண்பே செல்வமெனச் சான்றோர் கூறுவர் - இது எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள கருத்து?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள்.
A
அரி – நெற்கதிர
B
செறு – மலை
C
யாணர் – புதுவருவாய
D
வட்டி – பனையோலைப்பெட்டி
Question 7
சென்ற வட்டி - இலக்கணக்குறிப்பு தருக.
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
விளித்தொடர்
Question 8
செய்வினை - இலக்கணக்குறிப்பு தருக.
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
விளித்தொடர்
Question 9
புன்கண், மென்கண் - இலக்கணக்குறிப்பு தருக.
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
விளித்தொடர்
Question 10
ஊர (ஊரனே) - இலக்கணக்குறிப்பு தருக.
A
பெயரெச்சம்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
விளித்தொடர்
Question 11
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
அங்கண் – அம் + கண்
B
பற்பல – பற் + பல
C
புன்கண் – புன்மை + கண்
D
மென்கண்  – மென்மை + கண்
Question 11 Explanation: 
குறிப்பு :- பற்பல என்பதன் சரியான பிரித்தறிதல்  பல + பல.
Question 12
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது? மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், -------------------------- என்னும் பெயர் பெற்றார். இவர் ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன. இவர் சங்ககாலத்தவர்.
A
மிளை செல்வனார்
B
ஒளவையார்
C
கண்ணகனார்
D
மிளைகிழான் நல்வேட்டனார்
Question 13
கீழ்க்கண்ட கூற்று எந்த நூலைப் பற்றியது? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க நூல்கள் எனப் போற்றப்படுவன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும், “நல்” என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் இந்நூலே. இஃது அகத்திணை நூலாகும்.
A
நன்னூல்
B
சிலப்பதிகாரம்
C
நான்மணிக்கடிகை
D
நற்றிணை
Question 14
கீழ்க்கண்ட கூற்று எந்த நூலைப் பற்றியது? ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பும் நூலிது. இதில் ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.
A
நன்னூல்
B
சிலப்பதிகாரம்
C
நான்மணிக்கடிகை
D
நற்றிணை
Question 15
ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்?
A
நன்னூல்
B
சிலப்பதிகாரம்
C
நான்மணிக்கடிகை
D
நற்றிணை
Question 16
நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் யார்?
A
பூரிக்கோ
B
சேரல் இரும்பொறை 
C
பன்னாடு தந்த மாறன் வழுதி
D
இவர்களில் யாருமில்லை 
Question 17
நற்றிணையில் --------------- பாடல்கள் உள்ளன.
A
100
B
200
C
300
D
400
Question 18
நற்றிணை பாடல்களை பாடினோர் எத்தனை பேர்?
A
225
B
250    
C
275
D
300
Question 19
நற்றிணை ------------------ நூல்களைச் சார்ந்தது?
A
பத்துப்பாட்டு
B
எட்டுத்தொகை
C
பதினெண்கீழ்க்கணக்கு
D
பதினெண்மேல்கணக்கு
Question 20
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய; மாமலை பயந்த காமரு மணியும்; இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார் 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 21
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை; ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்; சான்றோர் பாலர் ஆப                                                                                                         சாலார் சாலார் பாலர் ஆகுபவே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
புறநானூறு, கண்ணகனார் 
B
மதுரைக்காஞ்சி, மாங்குடி மருதனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நற்றிணை, மிளைகிழான் நல்வேட்டனார் 
Question 22
பொருந்தாதது எது? சொற்பொருள்.
A
துகிர் – பவளம்
B
மன்னிய – நிலைபெற்ற
C
சேய – அருகாமையில்
D
தொடை – மாலை
Question 22 Explanation: 
குறிப்பு:- சேய என்பதன் சரியான சொற்பொருள்  தொலைவு
Question 23
கலம் என்பதன் சொற்பொருள்?
A
பவளம்
B
நிலைபெற்ற
C
மாலை
D
அணி
Question 24
பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் - இலக்கணக்குறிப்பு தருக.
A
முற்றும்மை
B
உயர்வு சிறப்பும்மை 
C
எண்ணும்மை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 25
மாமலை - இலக்கணக்குறிப்பு தருக.
A
பண்புத்தொகை
B
ஆகுபெயர்
C
உரிச்சொல் தொடர்
D
எண்ணும்மை
Question 26
அருவிலை, நன்கலம் - இலக்கணக்குறிப்பு தருக.
A
பண்புத்தொகை
B
ஆகுபெயர்
C
உரிச்சொல் தொடர்
D
எண்ணும்மை
Question 27
---------------------- என்பவர், கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
A
கம்பர்
B
ஒளவையார்
C
கண்ணகனார்
D
புகழேந்திப் புலவர்
Question 28
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது, ------------------ வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது, அவருடன் இருந்தவர் கண்ணகனார்
A
பிசிராந்தையார்
B
சடையப்ப வள்ளல்
C
அபுல் காசிம் மரைக்காயர்
D
இவர்களில் யாருமில்லை
Question 29
புறநானூறு ------------ நூல்களுள் ஒன்று.
A
ஐம்பெரும் காப்பியங்கள்
B
ஐஞ்சிறும் காப்பியங்கள்
C
பத்துப்பாட்டு
D
எட்டுத்தொகை
Question 30
புறநானூறு ------------ பாடல்களைக் கொண்டுள்ளது.
A
355
B
400
C
450
D
500
Question 31
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய; மாமலை பயந்த காமரு மணியும்; இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து; அருவிலை நன்கலம் அமைக்கும் காலை; ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்; சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே - இந்த பாடல் புறநானூற்றின் எத்தனையாவது பாடல்?
A
200
B
218
C
300
D
318
Question 32
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய; மாமலை பயந்த காமரு மணியும்; இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து; அருவிலை நன்கலம் அமைக்கும் காலை; ஒருவழித் தோன்றி யாங்கு என்றும் சான்றோர்; சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே - -------------------- என்பவர் உயிர் துறந்த பொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இந்த பாடலை பாடினார்.
A
சேரல் இரும்பொறை
B
கோப்பெருஞ்சோழன்
C
பிசிராந்தையார்
D
இவர்களில் யாருமில்லை
Question 33
ஆய கலைகள் ------------------ ஆகும்.
A
86
B
73
C
64
D
55
Question 34
மேடைப்பேச்சுக்குக் ------------ உயிர்நாடி.
A
மொழி
B
சொல்
C
கருத்துகள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 35
மின்சாரம் பாயக் கம்பி கருவியாக இருப்பதுபோலக், கருத்தை விளக்க ---------- கருவியாக உள்ளது
A
மொழி
B
சொல்
C
கருத்துகள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 36
பேசும்பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவதனையே பேச்சுமுறை என்கிறோம். இதனை -------------, ---------------, ----------------- எனவும் கூறலாம்.
A
முதல் , இடை, கடை
B
ஆரம்பம், நடுநிலை, இறுதிநிலை
C
எடுத்தல், தொடுத்தல், முடித்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 37
பேச்சைத் தொடங்குவது --------------?
A
ஆரம்ப நிலை
B
எடுப்பு
C
தொடுத்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 38
தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விவரித்துப் பேசும்முறை ------------- எனப்படும்.
A
ஆரம்ப நிலை
B
எடுப்பு
C
தொடுத்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 39
இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே ---------------- எனப்படும்.
A
ஆரம்ப நிலை
B
எடுப்பு
C
தொடுத்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 40
இலக்கியக் கூறுகள் என்பவை மருந்தின் மேலிட்ட ------------- போன்றவை.
A
காரம்
B
இனிப்பு
C
துவர்ப்பு
D
கசப்பு
Question 41
எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகுபடுத்துவதே ------------- எனப்படும்.
A
இலக்கணம்
B
அணி
C
வழு
D
ஆகுபெயர்
Question 42
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை -------------?
A
ஓவியக்கலை
B
இசைக்கலை
C
பேச்சுக்கலை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 43
மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் ------------?
A
அண்ணா
B
ஈ.வே.ரா
C
வரதராசனார்
D
திரு.வி.க
Question 44
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக.
A
புலவர்கள் பொங்கற்புதுநாளின் மாண்பினை உணர்ந்து கொண்டாடினர்
B
புலவர்கள் பொங்கற்புதுநாளின் மாண்பினை உணர்ந்து கொண்டாடுவர்
C
புலவர்கள் பொங்கற்புதுநாளின் மாண்பினை உணர்ந்து கொண்டாடினார்கள்
D
புலவர்கள் பொங்கற்புதுநாளின் மாண்பினை உணர்ந்து கொண்டாடுவார்கள்
Question 45
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக.
A
ஒருமை பன்மைப் பிழை நீக்கி எழுதுக.
B
மேடைப் பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றவை
C
மேடைப் பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றன
D
மேடைப் பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி போன்றது
Question 46
சந்திப்பிழை நீக்கி எழுதுக
A
மேடைப் பேச்சு மிகுந்தப் பயனைத் தரவல்லது
B
மேடை பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
C
மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது
D
மேடைப் பேச்சு மிகுந்தப் பயனை தரவல்லது
Question 47
சந்திப்பிழை நீக்கி எழுதுக.
A
மக்களை இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையதே மேடைப் பேச்சு
B
மக்களை இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையதே மேடை பேச்சு
C
மக்களை இலட்சிய பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையதே மேடைப் பேச்சு
D
மக்களை இலட்சியப் பாதையிலே அழைத்து செல்லும் வன்மையுடையதே மேடைப் பேச்சு
Question 48
ஒன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே. தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புதுநாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு,. நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறது - என்று கூறியவர்?
A
மு.வரதராசனார்
B
எம்.ஜி.ஆர்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 49
நலிந்தோரும் கூட இந்நாளில் புதுத்தெம்பு வரக் காண்கின்றனர். இந்நாளில் மட்டுமே உழைப்பின் பெருமையை உணர்ந்து உரையாடி மகிழ்ந்திட வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்நாளே அந்நாளில் தமிழர் வாழ்ந்த நேர்த்தி பற்றிய நினைவு எழுகிறது - என்று கூறியவர்?
A
மு.வரதராசனார்
B
எம்.ஜி.ஆர்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 50
நமக்கெல்லாம் எழுச்சி தரத்தக்க முறையிலும் அளவிலும் நம்மைச் சுற்றிக் காணும் பொருள் யாவும் நிலமடந்தை தந்தனள் பரிவுடன். ஆயின், பாலூட்டும் தாயும் சேயுடன் விளையாட்டுக்காட்டி, முடியாது - பிறகு - விடு - அடிப்பேன் என்று கொஞ்சுவதில்லையா, அதுபோல,நிலமடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கும் முன்பு, விளையாட்டுக் காட்டுவான்வேண்டி, “உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு!” என்று அன்பு ஆணையிடுகிறாள். - என்று கூறியவர்?
A
மு.வரதராசனார்
B
எம்.ஜி.ஆர்
C
அண்ணா
D
திரு.வி.க
Question 51
"தமிழர் திருநாள் தை முதல் நாளாம் அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்" - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
முடியரசன்
Question 52
உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் சளைப்பிலா முயற்சிதரு பயன்பெற்றுப் புதுமை இன்பம் பூணும் நன்னாள்” - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
முடியரசன்
Question 53
பொங்கல் திருநாளன்று --------------- இதழ் மூலம் பேரறிஞர் அண்ணா கருத்து விருந்து அளித்துள்ளார்.
A
மதராஸ்
B
இந்திய ஒப்பீனியன்
C
காஞ்சி
D
தினமலர்
Question 54
என்ன? எப்படி? எங்கு? ஏன்? என வினாமேல் வினா கேட்டு விடையறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆகமுடியும் என்று சாக்கரடிசும், ----------------------- கூறுவர்.
A
அண்ணா
B
பெரியார்
C
திரு.வி.க
D
ராஜாஜி
Question 55
வினா ---------- வகைப்படும்.
A
4
B
5
C
6
D
7
Question 55 Explanation: 
விளக்கம் :- அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா.
Question 56
தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா -------------- எனப்படும்
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 56 Explanation: 
விளக்கம் :- (எ-டு) திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.
Question 57
தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது -------------?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 58
தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா --------------?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 58 Explanation: 
விளக்கம் :- ஜயவினா:- (எ-டு) அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?
Question 59
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா ---------------?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 59 Explanation: 
விளக்கம் :- கொளல்வினா:- (எ-டு) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.
Question 60
தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது ------------------?
A
கொடை வினா
B
ஏவல் வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 60 Explanation: 
விளக்கம் :- கொடைவினா:- (எ-டு) மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ?
Question 61
ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா -----------------?
A
கொடை வினா 
B
ஏவல் வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 61 Explanation: 
விளக்கம் :- ஏவல் வினா:- (எ-டு) மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா? முருகா சாப்பிட்டாயா? ( இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.)
Question 62
அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,ஏவல் தரும் வினா, ஆறும் இழுக்கார். - என்று கூறும் நூல் ?
A
திருக்குறள்
B
நன்னூல்
C
நாலடியார்
D
ஆத்திச்சூடி
Question 63
திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது. - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 64
எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது. - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 65
அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 66
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா. - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது?
A
அறி வினா
B
அறியா வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 67
மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது?
A
கொடை வினா 
B
ஏவல் வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 68
மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா? முருகா சாப்பிட்டாயா? - இந்த எடுத்துக்காட்டு எந்த வினாவுடன் தொடர்புடையது
A
கொடை வினா 
B
ஏவல் வினா
C
ஐய வினா
D
கொளல் வினா
Question 69
இறை, செப்பு, பதில் என்பன ---------------- இன் வேறுபெயர்கள்.
A
வினா
B
விடை
C
கடவுள்
D
சொல்
Question 70
விடை ----------- வகைப்படும்?
A
2
B
6
C
7
D
8
Question 70 Explanation: 
விளக்கம் :- சுட்டு, மறை, நேர், ஏவல், வினா எதிர் வினாதல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என்பன.
Question 71
“சென்னைக்கு வழி யாது?’ என்று வினவினால், இது என்பது போலச் சுட்டிக் கூறும் விடை -------------------?
A
சுட்டு விடை
B
மறை விடை
C
நேர் விடை
D
ஏவல் விடை
Question 72
“இது செய்வாயா?” என்று வினவிய போது, செய்யேன் என்பது போல எதிர் மறுத்துக் கூறும் விடை ---------------?
A
சுட்டு விடை
B
மறை விடை (எதிர்மறுத்துக் கூறல் விடை)
C
நேர் விடை
D
ஏவல் விடை
Question 73
" இது செய்வாயா?” என்று வினவிய போது, செய்வேன் என்று உடன் பட்டுக் கூறும் விடை -----------------? 1] சுட்டு" இது செய்வாயா?” என்று வினவிய போது, செய்வேன் என்று உடன் பட்டுக் கூறும் விடை -----------------?
A
சுட்டு விடை
B
மறை விடை
C
நேர் விடை (உடன்பட்டுக் கூறுதல்)
D
ஏவல் விடை
Question 74
" இது செய்வாயா?” என்று வினவிய போது நீயே செய் என்று ஏவிக் கூறுவது ------------------?
A
சுட்டு விடை
B
மறை விடை
C
நேர் விடை
D
ஏவல் விடை
Question 75
" இது செய்வாயா?” என்று வினவிய போது, செய்யாமலிருப்பேனோ? என்று வினாவையே விடையாகக் கூறுவது -----------------?
A
வினாஎதிர் வினாதல் விடை
B
உற்றதுரைத்தல் விடை
C
உறுவது கூறல் விடை
D
இனமொழி விடை
Question 76
“இது செய்வாயா?” என்று வினவிய போது, உடம்பு நொந்தது என்று தனக்கு உற்றதை விடையாகக் கூறுவது --------------?
A
வினாஎதிர் வினாதல் விடை
B
உற்றதுரைத்தல் விடை
C
உறுவது கூறல் விடை
D
இனமொழி விடை
Question 77
"செய்வாயா?” என்னும் வினாவிற்குக் கை வலிக்கும் எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது --------------?
A
வினாஎதிர் வினாதல் விடை
B
உற்றதுரைத்தல் விடை
C
உறுவது கூறல் விடை
D
இனமொழி விடை
Question 78
“ஆடுவாயா?” என்று வினவிய போது, பாடுவேன் என ஆடுவதற்கு இனமான பாடுவதை விடையாகக் கூறுவது ---------------?
A
வினாஎதிர் வினாதல் விடை
B
உற்றதுரைத்தல் விடை
C
உறுவது கூறல் விடை
D
இனமொழி விடை
Question 79
சுட்டு, மறை, நேர், ஏவல் வினாதல்,உற்றது உரைத்தல், உறுவதுகூறல்,இனமொழி, எனும்எண் இறையுள் இறுதிநிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்பு.- என்று கூறும் நூல் எது?
A
நன்னூல்
B
நற்றிணை
C
இனியவை நாற்பது
D
திரிகடுகம்
Question 79 Explanation: 
சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை ஏவல், வினாஎதிர் வினாதல், உற்றது, உரைத்தல், உறுவதுகூறல், இனமொழி ஆகிய ஐந்தும் வினாக்களுக்கு உரிய விடையைக் குறிப்பால் உணர்த்துவன.
Question 80
உயர்ந்தோங்கி - இந்த சொல் கீழ்க்கண்ட எவற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு?
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
ஒருபொருட் பன்மொழி
D
உரிச்சொல் தொடர்
Question 81
குழிந்தாழ்ந்து - இந்த சொல் கீழ்க்கண்ட எவற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு?
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
ஒருபொருட் பன்மொழி
D
உரிச்சொல் தொடர்
Question 82
ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது, ----------------------?
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
ஒருபொருட் பன்மொழி
D
உரிச்சொல் தொடர்
Question 83
நடுமையம், மீமிசை ஞாயிறு ஆகியவை கீழ்க்கண்ட எவற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு?
A
அடுக்குத்தொடர்
B
இரட்டைக்கிளவி
C
ஒருபொருட் பன்மொழி
D
உரிச்சொல் தொடர்
Question 83 Explanation: 
ஒருபொருட் பன்மொழி:- 1. திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது. 2. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன. இவ்விரு தொடர்களிலும் ஒரு பொருள் குறித்துத் தொடர்ந்து வரும் இரு சொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கிய, குழிந்தாழ்ந்து என்பவை. உயர்ந்து, ஓங்கிய ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன. ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒருபொருட் பன்மொழியாகும். (எ-டு) 1.நடுமையம், 2.மீமிசை ஞாயிறு. எனும் தொடர்களில் நடுப்பகுதி எனும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் எனும் இருசொற்களும், மேற்பகுதி எனும் பொருளைத் தரும் மீ, மிசை எனும்இருசொற்களும் இணைந்து வந்து ஒரே பொருளை உணர்த்தியுள்ளன.
Question 84
ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா - என்று கூறும் நூல்?
A
நன்னூல்
B
திரிகடுகம்
C
ஆத்திச்சூடி
D
திருக்குறள்
Question 85
First deserve, then desire - இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
A
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
B
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
C
யானைக்கும் பானைக்கும் சரி
D
செய்யும் தொழிலே தெய்வம்
Question 86
Little strokes fell great oaks - இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
A
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
B
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
C
யானைக்கும் பானைக்கும் சரி
D
செய்யும் தொழிலே தெய்வம்
Question 87
Tit for tat - இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
A
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
B
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
C
யானைக்கும் பானைக்கும் சரி
D
செய்யும் தொழிலே தெய்வம்
Question 88
Work is worship - இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
A
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
B
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
C
யானைக்கும் பானைக்கும் சரி
D
செய்யும் தொழிலே தெய்வம்
Question 89
Time is Gold - இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
A
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
B
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
C
யானைக்கும் பானைக்கும் சரி
D
காலம் பொன் போன்றது
Question 90
151 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
க அ க
Question 91
161 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
க அ க
Question 92
171 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
க அ க
Question 93
181 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
க அ க
Question 94
191 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
க ௯ க
Question 95
200 - என்பதன் தமிழ் எண்?
A
க ரு க
B
க ௬ க
C
க எ க
D
உ 00
Question 96
வாட் ஹேப்பண்ட் - என்பதன் தூய தமிழ்ச்சொல் ?
A
இது சரிதானா
B
யார் கூறியது
C
என்ன நிகழ்ந்தது
D
இவற்றில் ஏதுமில்லை
Question 97
டிராபிக் ஜாம் - என்பதன் தூய தமிழ்ச்சொல் ?
A
பேருந்தில் கூட்டம்
B
போக்குவரத்து நெரிசல்
C
சாலை மறியல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 98
கேழல் என்பதன் பொருள்?
A
மான்
B
சிங்கம்
C
யானை
D
பன்றி
Question 99
நவ்வி என்பதன் பொருள்?
A
மான்
B
சிங்கம்
C
யானை
D
பன்றி
Question 100
கேண்மை என்பதன் எதிர்சொல் தருக.
A
நட்பு
B
உறவு
C
பகைவர்
D
இவற்றில் ஏதுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply to Ragunath Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!