Online TestTamil

10th Std Tamil Notes Part 2

10th Std Tamil Notes Part 2

Congratulations - you have completed 10th Std Tamil Notes Part 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் -------------- ?
A
கவுந்தியடிகள்
B
இளங்கோவடிகள்
C
ராஜசிம்மன்
D
கோவலன்
Question 1 Explanation: 
குறிப்பு :- காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன், கலையுணவும் வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன்.
Question 2
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் ------------ என்பவரின் மகள் கண்ணகி.
A
குகன்
B
கவுந்தியடிகள்
C
மாநாய்கன்
D
சேரன் செங்குட்டுவன்
Question 2 Explanation: 
குறிப்பு :- கண்ணகி, திருமகள் போன்ற அழகும் பெண்கள் போற்றும் பெருங்குணச் சிறப்பும் கற்புத்திறமும் மிக்கவள்
Question 3
கோவலன், ஆடலரசி ------------------ என்பவரை விரும்பிக் கண்ணகியை விட்டு பிரிந்தான்.
A
மணிமேகலை
B
ஆதிரை
C
மாதவி
D
இவர்களில் யாருமில்லை
Question 4
மாதவி, ------------ விழாவில் கானல்வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்துகொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான்.
A
காவிரி விழா 
B
மூதூர் விழா 
C
இந்திர விழா
D
இவற்றில் ஏதுமில்லை 
Question 5
கோவலன், வாணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் -------------- க்குச் சென்றான்.
A
கருநாடகா
B
ஒடிசா
C
மதுரை
D
கேரளா
Question 6
வாணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் ------------------- துறவி சென்றார்.
A
புத்த
B
சமண
C
ஜொராஸ்டிரியம்
D
சீக்கியம்
Question 7
கவுந்தியடிகள், மதுரை நகர்ப்புறத்தில் --------------- என்னும் இடைக்குல மூதாட்டியிடம், அவ்விருவரையும் (கோவலன், கண்ணகி) அடைக்கலப்படுத்தினார்.
A
ஆதிரை
B
குந்தவை
C
மாதரி
D
செம்பா
Question 8
கோவலன் -------------- விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான்.
A
ஒட்டியானம்
B
சதங்கை
C
கடுக்கன்
D
சிலம்பு
Question 9
விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனைக்  கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் ----------------- அறிந்தான்.
A
பாதுகாவலன்
B
அவைக்கலப்புலவர்
C
பொற்கொல்லன்
D
ஒற்றன்
Question 10
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் -------------- என்பவரின் மேல் சுமத்தினான்.
A
மாதரி
B
கோவலன்
C
கவுந்தியடிகள்
D
கண்ணகி
Question 11
கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை --------------- மூலம் அறிந்த கண்ணகி, பெருந்துயருற்றாள்.
A
கவுந்தியடிகள்
B
அப்பூதியடிகள்
C
மாதரி
D
பாண்டிய மன்னனின் பொற்கொல்லன
Question 12
தன் கணவன் கள்வன் அல்லன்' - இது யாருடைய கூற்று?
A
கோப்பெருந்தேவி
B
மாதரி
C
மணிமேகலை
D
கண்ணகி
Question 13
வாழியெம் கொற்கை வேந்தே வாழி; தென்னம் பொருப்பின் தலைவ வாழி; செழிய வாழி தென்னவ வாழி; பழியொடு படராப் பஞ்சவ வாழி; அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 14
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி; வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்; அறுவர்க் கிளைய நங்கை இறைவனை; ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்; கானகம் உகந்த காளி தாருகன் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 15
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்; செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்; பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்; கணவனை இழந்தாள் கடையகத் தாளே, என; வருக மற்றவள் தருக ஈங்கென - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 16
வாயில் வந்து கோயில் காட்டக்; கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி; நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்; யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்; தேரா மன்னா செப்புவ துடையேன்; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 17
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்; புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்; வாயிற் கடைமணி நடுநா நடுங்க; ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்; அரும்பெறல்  புதல்வனை ஆழியின் மடித்தோன்; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 18
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்; ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி; மாசத்து வாணிகன் மகனை யாகி; வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்; சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 19
கென்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்; கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி யென்பதன் பெயரேயெனப், பெண்ணணங்கே; கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று; வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 20
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே; என்காற் சிலம்பு மணியுடை அரியே, எனத்; தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி; யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே; தருகெனத் தந்து தான்முன் வைப்பக்; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 21
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப; மன்னவன், வாய்முதல் தெறித்தது மணியே, மணிகண்டு; தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்; பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட; யானோ அரசன் யானே கள்வன்; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 22
மன்பதை காக்குந் தென்புலங் காவல்; என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென; மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்; கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்; கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று; இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி; - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர் 
B
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார்
C
பாஞ்சாலி சபதம், பாரதியார் 
D
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்  
Question 23
கொற்கை என்னும் துறைமுகத்தை உடைய மன்னன்?
A
சேரன்
B
சோழன்
C
பாண்டியன்
D
பல்லவன்
Question 24
தெற்குப் பகுதியில் உள்ள பொதியமலைக்குத் தலைவன்?
A
சேரன்
B
சோழன்
C
பாண்டியன்
D
பல்லவன்
Question 25
வெற்றிதரும் வேலினைத் தன்பெரிய கையில் ஏந்தி, “பீறிட்டு எழும் குருதி ஒழுகும் பிடர்த்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடி யார்?
A
கொற்றவை
B
பிடாரி
C
பத்ரகாளி
D
காளி
Question 26
கன்னியர் எழுவருள் இளையவள் யார்?
A
கொற்றவை
B
பிடாரி
C
பத்ரகாளி
D
காளி
Question 27
இறைவனை நடனமாடச் செய்தவர் யார்?
A
கொற்றவை
B
பிடாரி
C
பத்ரகாளி
D
காளி
Question 28
அச்சம் தரும் காட்டைத் தான் விரும்பு இடமாகக் கொண்டவர் யார்?
A
கொற்றவை
B
பிடாரி
C
பத்ரகாளி
D
காளி
Question 29
தாருகன் என்ற அசுரனின் பரந்த மார்பைப் பிளந்தவர் யார்?
A
கொற்றவை
B
பிடாரி
C
பத்ரகாளி
D
துர்க்கை
Question 30
இளமையான கொடி போன்றவளே! நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்? என வினவியவர் யார்?
A
கவுந்தியடிகள்
B
அரண்மனை வாயிற் காவலன் 
C
கோப்பெருந்தேவி
D
மன்னன்
Question 31
ஆராய்ந்து அறிந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றுண்டு " - இவ்வாறு கூறியவர் யார்?
A
கோவலன்
B
கண்ணகி
C
கவுந்தியடிகள்
D
மாதரி
Question 32
புறாவின் துன்பத்தைப் போக்கிய மன்னன்?
A
பேகன்
B
ஓரி 
C
சிபி
D
செங்குட்டுவன்
Question 33
தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயரை அறிந்து, தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மன்னன்?
A
கரிகாலன்
B
ராஜராஜன்
C
மனுநீதிச்சோழன்
D
முதலாம் ராஜேந்திரன் 
Question 34
கண்ணகி பிறந்த ஊர்?
A
காஞ்சி
B
புகார்
C
மதுரை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 35
கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று, அதுவே அரசு நீதி” என்று கூறியவர்?
A
கோப்பெருந்தேவி
B
அரண்மனை வாயிற் காவலன் 
C
அவைக்கலப் புலவர்
D
பாண்டிய மன்னன் 
Question 36
கண்ணகி “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு ------------------ பரல்களைக் கொண்டது” என்றாள்.
A
வைரம்
B
வைடூரியம்
C
முத்து
D
மாணிக்கம்
Question 37
அரசன், “நீ கூறியது நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் ---------------” என்றான்.
A
வைரம்
B
வைடூரியம்
C
முத்து
D
மாணிக்கம்
Question 38
சிலம்பினைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட ----------------- ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது.
A
வைரப் பரல்
B
முத்துப் பரல் 
C
மாணிக்கப்பரல்
D
கோமேதகப் பரல்
Question 39
கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்?
A
கோப்பெருந்தேவி
B
கண்ணகி
C
மாதரி
D
இவர்களில் யாருமில்லை 
Question 40
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கொற்கை – சோழ நாட்டின் துறைமுகம்
B
தென்னம் பொருப்பு – தென் பகுதியில் உள்ள பொதிகைமலை
C
பழியொடு படரா – மறநெறியில் செல்லாத
D
பசுந்துணி – பசிய துண்டம்
Question 40 Explanation: 
குறிப்பு :- கொற்கை என்பதன் சரியான சொற்பொருள் பாண்டிய நாட்டின் துறைமுகம்.
Question 41
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
தடக்கை – நீண்ட கைகள
B
அறுவர்க்கு இளைய நங்கை - ஆறு கன்னியருள் இளையவளாகிய பிடார
C
இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாடச் செய்த காளி
D
சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
Question 41 Explanation: 
குறிப்பு :- அறுவர்க்கு இளைய நங்கை என்பதன் சரியான சொற்பொருள் ஏழு கன்னியருள் இளையவளாகிய பிடாரி.
Question 42
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
உகந்த - விரும்பிய 
B
தாருகன் – தெய்வம்
C
செற்றம் – கறுவு
D
செயிர்த்தனள் – சினமுற்றவள்
Question 42 Explanation: 
குறிப்பு :- தாருகன் என்பதன் சரியான சொற்பொருள் அரக்கன்.
Question 43
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
பேர்உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினைப் பிளந்த துர்க்கை
B
பொற்றொழில் சிலம்பு – வேலைப்பாடுமிக்க பொற்சிலம்பு
C
நீர்வார்கண் – நீரொழுகும் கண்கள்
D
தேரா – அறிவில் சிறந்த
Question 43 Explanation: 
குறிப்பு :- தேரா என்பதன் சரியான சொற்பொருள் ஆராயாத
Question 44
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள் 
B
எள்ளறு – சிறப்பு மிக்க.
C
இமையவர் – தேவர்
D
புள் – பறவை (புறா)
Question 44 Explanation: 
குறிப்பு :- எள்ளறு என்பதன் சரியான சொற்பொருள் இகழ்ச்சி இல்லாத.
Question 45
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
புன்கண் – இன்பம்
B
கடைமணி – அரண்மனை வாயில்மணி
C
ஆழி – தேர்ச்சக்கரம்
D
ஏசா – பழியில்லா
Question 45 Explanation: 
குறிப்பு :- புன்கண் என்பதன் சரியான சொற்பொருள் துன்பம்.
Question 46
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
A
கோறல் – சொல்லுதல்
B
கொற்றம் – அரச நீதி
C
நற்றியம் – அறநெறி
D
 படரா – செல்லாத
Question 46 Explanation: 
குறிப்பு :- கோறல் என்பதன் சரியான சொற்பொருள் கொல்லுதல்.  
Question 47
மடக்கொடி - இலக்கணக்குறிப்பு தருக?
A
அன்மொழித்தொகை
B
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
C
உரிச்சொற்றொடர்
D
பண்புத்தொகை
Question 48
படராப் பஞ்சவ, அடங்காப் பசுந்துணி, தேரா மன்னா, ஏசாச் சிறப்பின்  - இலக்கணக்குறிப்பு தருக?
A
அன்மொழித்தொகை
B
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
C
உரிச்சொற்றொடர்
D
பண்புத்தொகை
Question 49
தடக்கை - இலக்கணக்குறிப்பு தருக?
A
அன்மொழித்தொகை
B
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
C
உரிச்சொற்றொடர்
D
பண்புத்தொகை
Question 50
புன்கண், பெரும்பெயர், அரும்பெறல், பெருங்குடி, கடுங்கோல், செங்கோலன், நன்மொழி - இலக்கணக்குறிப்பு தருக
A
உரிச்சொற்றொடர்
B
பண்புத்தொகை
C
அன்மொழித்தொகை
D
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 
Question 51
உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
ஆறாம் வேற்றுமைத்தொகை
C
வினையெச்சம்
D
வினைத்தொகை
Question 52
அவ்வூர் - இலக்கணக்குறிப்பு தருக?
A
பண்புத்தொகை
B
சேய்மைச்சுட்டு
C
வினையெச்சம்
D
வினைத்தொகை
Question 53
வாழ்தல் - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வியங்கோள் வினைமுற்று 
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 54
என்கால், என்பெயர், நின்னகர், என்பதி  - இலக்கணக்குறிப்பு தருக?
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
வியங்கோள் வினைமுற்று 
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 55
புகுந்து  - இலக்கணக்குறிப்பு தருக?
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
வியங்கோள் வினைமுற்று 
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 56
தாழ்ந்த, தளர்ந்த - இலக்கணக்குறிப்பு தருக?
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
பெயரெச்சம்
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 57
வருக, தருக, கெடுக - இலக்கணக்குறிப்பு தருக?
A
வியங்கோள் வினைமுற்று 
B
பெயரெச்சம்
C
வினையெச்சம்
D
பண்புத்தொகை
Question 58
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
எள்ளறு = எள்ள + று
B
புள்ளறு = புள் + உறு
C
அரும்பெறல் = அருமை + பெறல்
D
பெரும்பெயர் = பெரும் + பெயர்
Question 58 Explanation: 
குறிப்பு :- எள்ளறு என்பதன் சரியான பிரித்தறிதல் எள் + அறு.
Question 59
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
அவ்வூர் = அவ் + ஊர்
B
பெருங்குடி = பெருமை + குடி
C
புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
D
பெண்ணங்கு = பெண் + அணங்கு
Question 59 Explanation: 
குறிப்பு :- அவ்வூர் என்பதன் சரியான பிரித்தறிதல் அ + ஊர்.
Question 60
பொருந்தாதது எது? பிரித்தறிதல்.
A
நற்றிறம் = நற் + திறம்
B
காற்சிலம்பு = கால் + சிலம்பு
C
செங்கோல் = செம்மை + கோல்
D
பைந்தமிழ் = பசுமை + தமிழ் 
Question 61
இளங்கோவடிகள் ------------ மரபினர
A
சேர
B
சோழ
C
பாண்டிய
D
பல்லவ
Question 62
இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோணை. இவர்தம் தமையன் ------------------------.  
A
பெருஞ்சேரலாதன்
B
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
C
கணைக்கால் இரும்பொறை
D
சேரன் செங்குட்டுவன்
Question 63
இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று ---------------- கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும்பொருட்டு, இளங்கோ இளமையிலேயே துறவுபூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
A
மணியன்
B
செழியன்
C
விழியன்
D
கணியன்
Question 64
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது? இவர், அரசியல் வேறுபாடு கருதாதவர். சமய வேறுபாடற்ற துறவி, இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு. இவரின்,  சிறப்புணர்ந்த பாரதியார், “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” எனப் புகழ்கிறார்.
A
திருவள்ளுவர்
B
கம்பன்
C
இளங்கோவடிகள்
D
இவர்களில் யாருமில்லை 
Question 65
இளங்கோவடிகள் அவர்களின் காலம் ?
A
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு
B
கி.பி இரண்டாம் நூற்றாண்டு
C
கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு
D
கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டு
Question 66
சிலப்பதிகாரம் = ?
A
சிலப்பதி + காரம்
B
சில + அதிகாரம்
C
சிலம்பு + அதிகாரம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 67
------------------ என்பவரின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின், சிலப்பதிகாரமயிற்று.
A
கோவலன்
B
கண்ணகி
C
மாதவி
D
மாதரி
Question 68
சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெருங் காண்டங்களையும் --------------- காதைகளையும் உடையது.
A
இருபது
B
முப்பது
C
நாற்பது
D
ஐம்பது
Question 69
சிலப்பதிகாரத்தில் ----------- காண்டங்களும், ------------------ காதைகளும் உள்ளன.
A
2, 20
B
3, 30
C
4, 40
D
5, 50
Question 70
புகார்க்காண்டம் -------------- காதைகளையும், மதுரைக்காண்டம் ------------ காதைகளையும், வஞ்சிக்காண்டம் ------------ காதைகளையும் கொண்டுள்ளது.
A
7, 13, 10
B
7, 10, 13
C
10, 7, 13
D
10, 13, 7
Question 71
இந்நூல் "உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்” எனவும் வழங்கப்பெறும்.
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
வளையாபதி
Question 72
முதற் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என --------------- நூலைப் போற்றிப் புகழ்வர்.
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
வளையாபதி
Question 73
” நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என -------------- என்னும் கவிஞர் சிலப்பதிகாரம் நூலைப் பாராட்டியுள்ளார்.
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
திரு.வி.க
Question 74
மதுரைக்காண்டத்தின் பத்தாவது காதை --------------.
A
நாடுகாண் காதை
B
வழக்குரை காதை
C
கட்டுரைக் காதை
D
வரந்தருகாதை
Question 75
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் முதன்மையானது சிலப்பதிகாரம். காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்ட ---------------------------, ---------------------- நூல்களை இரட்டைக்காப்பியம் என வழங்குவர்.
A
சிலப்பதிகாரம், குண்டலகேசி
B
சிலப்பதிகாரம், வளையாபதி
C
சிலப்பதிகாரம், மணிமேகலை
D
சிலப்பதிகாரம், சீவசிந்தாமணி
Question 76
சேரன் செங்குட்டுவன், -------------------- மற்றும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
A
ஒளவையார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
கம்பர்
D
புகழேந்திப் புலவர்
Question 77
மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண்தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் --------------------------, “அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
A
ஒளவையார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
கம்பர்
D
புகழேந்திப் புலவர்
Question 78
இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று கூறியவர் யார்?
A
ஒளவையார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
கம்பர்
D
இளங்கோவடிகள்
Question 79
“இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” என்று இளங்கோவடிகள் கூறினார். அதற்கு ----------------- என்ற புலவரும், “அடிகள் நீரே அருளுக”என்றார். இவ்வாறே சிலப்பதிகாரம் உருவாயிற்று.
A
ஒளவையார்
B
சீத்தலைச்சாத்தனார்
C
கம்பர்
D
இளங்கோவடிகள்
Question 80
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்னும் முப்பெரும் உண்மைகளைச் -------------- நூல் உணர்த்துகிறது.
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
வளையாபதி
Question 81
எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதி தாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 82
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும் எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். - - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 83
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலவென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 84
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள் தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம் ; குறைகளைந்தோமில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 85
தமிழ் நூல்களை எளிய நடையில் எழுதுதல்வேண்டும். இலக்கண நூல்களைப் புதிதாகப் படைத்தல் வேண்டும். உலகின் புதிய ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்ப்படுத்தி விளக்க படங்களுடன் நூல்களாக்கிச் செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்தல் வேண்டும். - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 86
வறுமையினால் தமிழன் ஒருவன் கல்லாத நிலை ஏற்படுமானால், இங்குள்ளோர் நாணம் அடைதல் வேண்டும். பல்வேறு துறை நூல்களைப் பிறர் துணையின்றி எல்லாரும் படித்தறிந்து கொள்ளும் வகையில், தமிழில் வெளியிடல் வேண்டும். - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 87
தமிழறிவை மதங்களுக்குள் அடக்காமை வேண்டும். இலவச நூல்நிலையங்கள் ஊர்தோறும் ஏற்படுத்தல் வேண்டும். - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 88
தமிழின் பெருமைகளைக் கூறுவதிலேயே காலம் கழித்தோம். குறைகளை நீக்கிப் புதுமைகளைப் படைத்தோமில்லை. உலகின் ஒளிமிக்க மொழியாகத் தமிழை வளர்ப்போம், வாரீர் - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 89
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
தெளிவுறுத்தும் – விளக்கமாய் காட்டும்
B
சுவடி – நூல்
C
எளிமை – செல்வம் மிகுந்த
D
நாணிடவும் – வெட்கப்படவும்
Question 89 Explanation: 
குறிப்பு :- எளிமை என்பதன் சரியான சொற்பொருள் வறுமை.
Question 90
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
உலகியலின் அடங்கலுக்கும் – வாழ்வியல் முழுமைக்கும்
B
தகத்தகாய – ஒளிமிகுந்த (சிறப்பு மிகுந்த)
C
சாய்க்காமை – புரியாதிருத்தல்
D
நூற்கழகங்கள் – நூலகங்கள்
Question 90 Explanation: 
குறிப்பு :- சாய்க்காமை என்பதன் சரியான சொற்பொருள் அழிக்காமை.
Question 91
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
களைந்தோம் – சேர்த்தோம்
B
தாபிப்போம் – நிலைநிறுத்துவோம்
C
கேழல் - பன்றி
D
நவ்வி - மான்
Question 91 Explanation: 
குறிப்பு :- களைந்தோம் என்பதன் சரியான சொற்பொருள் நீக்கினோம்.
Question 92
புதிது புதிது, சொல்லிச் சொல்லி - இலக்கணக்குறிப்பு தருக.
A
இரட்டைக்கிளவி
B
ஒரு பொருட்பன்மொழி
C
அடுக்குத்தொடர்
D
வியங்கோள் வினைமுற்று
Question 93
செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு தருக.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வினையெச்சம்
D
வியங்கோள் வினைமுற்று
Question 94
சலசல - இலக்கணக்குறிப்பு தருக.
A
இரட்டைக்கிளவி
B
ஒரு பொருட்பன்மொழி
C
அடுக்குத்தொடர்
D
வியங்கோள் வினைமுற்று
Question 95
விடுபட்டதை நிரப்புக. பகுபத உறுப்பிலக்கணம் :- கழித்தோம் = கழி + த் + த் + ஓம். கழி – பகுதி; த் – சந்தி; த் – இறந்தகால இடைநிலை; ஓம் –------------------?.
A
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
B
பெண்பால் வினைமுற்று விகுதி
C
ஆண்பால் வினைமுற்று விகுதி
D
தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
Question 96
விடுபட்டதை நிரப்புக. பகுபத உறுப்பிலக்கணம் :- களைந்தோம் = களை + த்(ந்) + த் + ஓம். களை – பகுதி; த் – சந்தி; த் – ந் ஆனது விகாரம்; த் –------------------; ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.
A
நிகழ்கால இடைநிலை
B
இறந்தகால இடைநிலை
C
எதிர்கால இடைநிலை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 97
பொருந்தாதது எது? பிரித்தறிதல்
A
வெளியுலகில் = வெளி + உலகில்
B
செந்தமிழ் = செந் + தமிழ்
C
ஊரறியும் = ஊர் + அறியும்
D
எவ்விடம் = எ + இடம்
Question 97 Explanation: 
குறிப்பு :- செந்தமிழ் என்பதன் சரியான பிரித்தறிதல் செம்மை + தமிழ்.
Question 98
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் -----------------?
A
துரை மாணிக்கம்
B
உ.வே.சா
C
அய்யாக்கண்ணு
D
சுப்புரத்தினம்
Question 99
பாவேந்தர் பாரதிதாசன் ------------- ஆம் ஆண்டு ஏப்பிரல் 29 ஆம் நாள் புதுவையில் பிறந்தார்.
A
1851
B
1871
C
1891
D
1911
Question 100
பாவேந்தர் பாரதிதாசனின் பெற்றோர் பெயர்?
A
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
B
சாத்தப்பன் - விசாலட்சுமி
C
ஆண்டித்துரை - செல்லம்மாள்
D
கனகசபை - இலக்குமி
Question 101
-------------- என்பவரின் மேல் கொண்ட பற்றால் தம்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
A
சுத்தானந்த பாரதி
B
மறைமலையடிகள்
C
பாரதியார்
D
ந.மு.வேங்கடசாமி
Question 102
கீழ்க்கண்ட கூற்று யாரைப் பற்றியது? இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் ஆகிய சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறார். குடும்பவிளக்கு, இருண்டவீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகளாம். -------------------- பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் உருவானது. தமிழக அரசு, பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது. ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கி வருகிறது
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
வாணிதாசன்
Question 103
----------------- என்ற இடத்தில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்புச் சேர்த்துள்ளது அரசு.
A
மதுரை
B
தூத்துக்குடி
C
திருச்சி
D
சென்னை
Question 104
பாரதிதாசனார் -------------- என அழைக்கப்படுகிறார்?
A
புரட்சிக்கவிஞர்
B
தேசியக்கவிஞர்
C
உவமைக்கவிஞர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 105
குடும்ப விளக்கு ------------ படைப்புகளுள் ஒன்று.
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 106
தொண்டு செய்து பழுத்த பழம், தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும். மனக்குகையில் சிறுத்தை எழும் - இந்த பாடல் வரிகள் பெரியாரைப் பற்றியது. இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 107
நாட்டு விடுதலைக்குப் போராடிய ---------------- என்பவர், பெண்களின் சமூக விடுதலைக்கும் போராடினார்.
A
அண்ணா
B
மபொ சிவஞானம்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 108
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? பெண் விடுதலைச் சிந்தனை இரண்டு வகை ஆகும். ஒன்று அடிப்படைத் தேவைகள், பிறிதொன்று அகற்றப்பட வேண்டியவை. அடிப்படைத் தேவைகள் :- பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி அகற்றப்பட வேண்டியவை :- குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு.
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 109
பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை, வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே. இது நாட்டு நடப்பை அறியவிடாமல் அவர்களின் அறிவை மறைக்கச் செய்வதாகும். `நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் அதனால் பயனொன்றும் விளையாது. - இது யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 110
பெண்கள் மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால், முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ - இது யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 111
"ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இவ்விழிநிலை ஒழிக்கப்பட வேண்டும்" - இது யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 112
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் இவர். அதற்காக இவர், அவர்களை ஆயத்தப்படுத்தும் முறையே தனியானது. ` ஆணுக்குப் பெண் இளைப்பில்லை’ என்று சிந்தித்தவர் இவர். ` பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனிதசமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியவர் இவர். - இது யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 113
-------------- என்பவர், பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தார். பெண்களுக்கு வழிவழிவரும் சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது என்று உணர்ந்தார். அதற்காக, அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 114
"பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லா வகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும். பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே முதன்மையான காரணம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்குக் கிளர்ச்சி செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடிச் செயலாகும்’’ - இது யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 115
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப்போலவே பெண்களும் அரசுப்பணியைப் பெறவேண்டும். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றம்போது, நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும். - என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 116
விடுதலைக்கு முன்னிருந்த பெருங்கொடுமைகளுள் குழந்தை மணமும் ஒன்று. ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கைப் பயணமா ? இது, சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர் யார்?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 117
தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு. அதுவே மணக்கொடை. பெற்றோர் பலர், தம் மகனின் கல்விக்காகப் பணம், செலவழிப்பதனைத் தங்கள் கடமையைச் சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகவே கருதுகின்றனர். அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்தே, அவனுக்கு வரப்போகின்ற மனைவிமூலம் மணக்கொடையாய்ப் பெற்றுவிட வேண்டுமென்று துடிக்கின்றனர். - என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 118
சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும் அன்புமும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும். தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாறவேண்டும். என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 119
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும்" என்றும், கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றும் கூறியவர் யார்?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 120
ஒரு நாடு வளத்துடன் இருக்கவேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்கவேண்டும். ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்பது - யாருடைய கூற்று?
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 121
---------------- என்பவர், சமூக முரண்களை எதிர்த்தவர்; மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்; தொலைநோக்குப் பார்வையுடையவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறுத்து எறிந்தவர்; சமூகமாற்றத்தை விரும்பியவர்.
A
அண்ணா
B
காந்தியடிகள்
C
மு.வரதராசனார்
D
பெரியார்
Question 122
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ----------------- இல்லாமை.
A
வாக்குரிமை
B
பேச்சுரிமை
C
எழுத்துரிமை
D
சொத்துரிமை
Question 123
மெல்ல மெல்ல மற - என்ற கதையின் ஆசிரியர் யார்?
A
சோபனா
B
கல்கி
C
இலட்சுமி
D
ராஜம் கிருஷ்ணன்
Question 124
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ, பொருள் தருவது -------------- எனப்படும்.
A
மொழி
B
சொல்
C
வழு
D
இலக்கணம்
Question 124 Explanation: 
குறிப்பு :- பதம், மொழி, கிளவி என்பன ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
Question 125
பதம் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 126
மொழி எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 126 Explanation: 
குறிப்பு :- மொழி – தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி. மூவகை மொழிகள் :- மொழி தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும். 1 . தனிமொழி : ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது, தனிமொழி. (எ.கா.) : வா, கண், செய்தான். 2 . தொடர்மொழி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி. (எ.கா.) : 1. படம் பார்த்தாள். 2. பசுவும் கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. 3 . பொதுமொழி :- ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச் சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்து நின்று வேறு பொருளையும் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது, பொதுமொழி. (எ.கா.) : அந்தமான். - 'அந்தமான்' என்பது ஒரு தீவையும், அச்சொல்லே அந்த + மான் எனப் பிரிந்து நின்று, அந்த மான் (விலங்கு) என வேறுபொருளையும் தருகின்றது. இதேபோல், பலகை, வைகை, தாமரை, வேங்கை முதலியன தனிமொழியாகவும் பொதுமொழியாகவும் வருவதை அறிக. ஒருமொழி ஒருபொருள னவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன – நன்னூல்.
Question 127
எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் ----------------?
A
வினைமுற்று
B
வினைச்சொற்கள்
C
தொழிற்பெயர்
D
வினையெச்சம்
Question 127 Explanation: 
விளக்கம் :- வினைச்சொல் :- இராமன் வந்தான். கண்ணன் நடந்தான். இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள். அவையே எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களைக் குறிப்பதால், இவை வினைச்சொற்கள். இவையே பயனிலைகளாகவும் (முடிக்கும் சொற்களாகவும்) உள்ளன. இவ்வாறு, எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.
Question 128
தன்பொருளில், முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை -------------- என்பர்.
A
வினைமுற்று
B
வினைச்சொற்கள்
C
தொழிற்பெயர்
D
வினையெச்சம்
Question 128 Explanation: 
குறிப்பு :- வினைமுற்று :- அருளரசு வந்தான். வளவன் நடந்தான். இத்தொடர்களில் வந்தான், நடந்தான் என்னும் வினைச்சொற்களின் பொருள் முற்றுப்பெற்று வந்துள்ளன. இவ்வாறு தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும். “வந்தான், நடந்தான்” என்னும் வினைமுற்றுகள் “ஆன்” என்னும் விகுதி பெற்றுள்ளதால், உயர்திணையையும், ஆண்பாலையும், ஒருமை என்ற எண்ணையும், படர்க்கை இடத்தையும், உணர்த்துகின்றன. 'த்' என்ற இடைநிலை வந்துள்ளதால் (நட + த் (ந்) + த் + ஆன்). (வா (வ) + த் (ந்) + த் + ஆன்) இஃது இறந்த காலத்தையும் உணர்த்துகிறது. வினைமுற்று எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும். முக்காலங்களில் ஒன்றை உணர்த்தும். திணை, பால், எண், இடங்களைக் காட்டும். இவ்வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
Question 129
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது ----------------------------?
A
குறிப்பு வினைமுற்று
B
தெரிநிலை வினைமுற்று
C
வினையெச்சம்
D
வினைத்தொகை
Question 129 Explanation: 
விளக்கம் :- தெரிநிலைவினைமுற்று :- செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று. (எ.கா.) : உழுதான். செய்பவன் – உழவன். கருவி – கலப்பை. நிலம் – வயல். செயல் – உழுதல். காலம் – இறந்தகாலம். செயப்பொருள் – நெல். செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே – நன்னூல்
Question 130
பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக் கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, ---------------------- எனப்படும்.
A
குறிப்பு வினைமுற்று
B
தெரிநிலை வினைமுற்று
C
வினையெச்சம்
D
வினைத்தொகை
Question 130 Explanation: 
விளக்கம் :- குறிப்பு வினைமுற்று :- பொருள்முதல் ஆறனையும் அடிப்படையாகக் கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றனை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும். அவன் பொன்னன் – பொன்னை உடையவன் – பொருள். அவன் விழுப்புரத்தான் – விழுப்புரத்தில் வாழ்பவன் – இடம். அவன் சித்திரையான் – சித்திரையில் பிறந்தவன் – காலம். அவன் கண்ணன் – கண்களை உடையவன் – சினை. அவன் நல்லன் – நல்ல இயல்புகளை உடையவன் – குணம். அவன் உழவன் – உழுதலைச் செய்பவன் – தொழில். அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த “பொன்னன்”. என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய் இருந்தான், இருக்கின்றான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.
Question 131
வினைமுற்றின், விகுதி குறைந்து நிற்கும் சொல்லே --------- எனப்படும்.
A
எச்சம்
B
வினைமுற்று
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 131 Explanation: 
விளக்கம் :- கயல்விழி படித்தாள். கோதை சென்றாள். இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள். இவ்வினைமுற்றுகள் சில இடங்களில் ஆள், என்னும் விகுதி, குறைந்து படித்த, சென்ற எனவும், படித்து, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றுப்பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள். ஆதலால், எச்சம் எனப்படும். அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
Question 132
ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது ------------------ எனப்படும்.
A
பெயரெச்சம்
B
வினைமுற்று
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 132 Explanation: 
விளக்கம்:- பெயரெச்சம்:- படித்த கயல்விழி. சென்ற கோதை, படித்த, சென்ற என்னும் முற்றுப்பெறாத எச்சவினைகள் கயல்விழி, கோதை எனப் பெயரைக்கொண்டு முடிந்ததால் அவை பெயரெச்சங்கள் எனப்படும். அதாவது, ஓர் எச்சவினை ( வந்த, நடந்த ) பெயரைக்கொண்டு முடிந்தால், அது பெயரெச்சம் எனப்படும். இப்பெயரெச்சம் காலவகையால் மூவகைப்படும். இறந்தகாலப் பெயரெச்சம் - படித்த கயல்விழி, சென்ற கோதை நிகழ்காலப் பெயரெச்சம் - படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை எதிர்காலப் பெயரெச்சம் - படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை இது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
Question 133
பெயரெச்சம் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 133 Explanation: 
விளக்கம் :- [1] தெரிநிலைப் பெயரெச்சம் வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான். இத்தொடரில் வந்த என்பது பையன் என்னும் பெயரைக்கொண்டு முடிவதால், பெயரெச்சம் எனப்படும். செய்த, செய்கின்ற, செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரெச்ச வாய்பாடுகள். இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிச் செய்பவன் முதலான ஆறும் எஞ்சி நிற்கும். இவை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும். (எ-டு) உண்ட இளங்கோவன். செய்பவன் - இளங்கோவன் கருவி - கலம் நிலம் - வீடு செயல் - உண்ணுதல் காலம் - இறந்த காலம் செய்பொருள் - சோறு உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறே பொருத்திக் காணலாம். [2] குறிப்புப் பெயரெச்சம்:- காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். (எ-டு) நல்ல பையன் இத்தொடரில் நல்ல என்னும் சொல் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக்கொண்டு முடிந்துள்ளது. இது காலத்தைக் (இன்று நல்ல பையன், நேற்று நல்ல பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும். உடன்பாடு - எதிர்மறை (எ-டு) நல்ல மாணவன் - தீய மாணவன்
Question 134
முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது ------------------ எனப்படும்.
A
வினையெச்சம்
B
வினைமுற்று
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 134 Explanation: 
விளக்கம் :- வினையெச்சம்:- முற்றுப்பெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். (எ-டு) படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான். -அதாவது, ஓர் எச்சவினை, வினையக்கொண்டு முடிந்தால், அது வினையெச்சம் எனப்படும். இவ்வினையெச்சம் காலவகையால் மூவகைப்படும். இறந்தகால வினையெச்சம் - படித்து வந்தான், ஓடிச் சென்றான். நிகழ்கால வினையெச்சம் - படித்து வருகின்றான் ஓடிச்செல்கின்றான் எதிர்கால வினையெச்சம் - படித்து வருவான், ஓடிச் செல்வான். இவ்வினையெச்சமும் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த, செய்கின்ற, செய்யும் எனக் காலத்துக்கேற்ப மாறும்; பெயர்கள் மாறா. வினையெச்சத்தில் எச்சங்கள் மாறா. அவை முக்கால வினைமுற்றுகளையும் பெற்றுவரும். தெரிநிலை வினையெச்சம்:- படித்துத் தேறினான். படிக்கச் செல்கின்றான் இத்தொடர்களில் படித்து, படிக்க என்னும் சொற்கள் எச்ச வினையாய் நின்று காலத்தைக் காட்டித் தேறினான், செல்கின்றான்; ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. இவ்வாறு காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும். (2) குறிப்பு வினையெச்சம் மெல்லப் பேசினான். கண்ணன் நோயின்றி வாழ்ந்தான். இவ்விரு தொடர்களிலும் உள்ள மெல்ல, இன்றி என்னும் எச்ச வினைச்சொற்கள் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளன. ஆகையால், இவை குறிப்பு வினையெச்சம் எனப்படும். (3) முற்றெச்சம்:- மைதிலி வந்தனள் பாடினள். முருகன் படித்தனன் தேறினன். இத்தொடர்களில், வந்தனள், படித்தனன் என்னும் வினைமுற்றுகள் வந்து, படித்து என்னும் வினையெச்சப் பொருள்களில் நின்று, வேறு வினைமுற்றுகளைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப்பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொணடு முடிவதே முற்றெச்சம் எனப்படும்.
Question 135
நான்மாடக்கூடலில் நிற்கின்றேன்; நானிலம் போற்றிடும் தனிச் சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழ்ந்தது இம் மதுரையம்பதி என்ற எண்ணம் தந்திடும் எழுச்சி பொங்கிடும் நிலையில் நிற்கின்றேன். பட்டம் பெற்றிடுகின்றீர்! - இது யாருடைய கூற்று?
A
ஈ.வே.ரா
B
அண்ணா
C
அண்ணா
D
பெரியார்
Question 136
பல்கலையில் வல்லுநர் ஆகிடுகின்றீர்! பல்கலைக்கழகம் ஈன்றெடுத்த நன்மணிகளாகின்றீர்! ஆம்! ஆயின் இஃது முடிவா, தொடக்கமா? அஃதே கேள்வி ! பட்டம் பெற்றுள்ளீர்! பாராட்டுக்குரியீர், ஐயமில்லை. - இது யாருடைய கூற்று?
A
ஈ.வே.ரா
B
அண்ணா
C
திரு.வி.க
D
பெரியார்
Question 137
ஆயின் பட்டம் எதற்கு ? காட்டிக் களித்திடவா? அன்றிப் பணி செய்திடக் கிடைத்திட்ட ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா ? நாட்டுக்கா? பொருள் ஈட்டிடவா? நாட்டுப் பெருமையினைக் காத்திடவா? எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது? அஃதே கேள்வி! விழாத் தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து நம் செவி வீழ்ந்திடும் கேள்வி! - இது யாருடைய கூற்று?
A
ஈ.வே.ரா
B
அண்ணா
C
திரு.வி.க
D
பெரியார்
Question 138
தான் உண்ட நீரதனைப் பன்மடங்கு பெருக்கிப் பார் மகிழத் தருவதற்கே, சூல்கொண்டு உலவுவது மேகம்; அறிகிறோம். தன் தோகைதனை விரித்துக் கலாப மயில் ஆடுவது, தானே கண்டுகளித்திடவா? பிறர் காண்; பிறர் மகிழ! ஒளிதனை உமிழ்ந்திடும் திருவிளக்கு எதற்காக? இருளிலுள்ளோர் இடர் நீக்க! பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர்! நீவிர் திருவிளக்கு - புள்ளிக் கலாப மயில் - கார்மேகம். - இது யாருடைய கூற்று?
A
ஈ.வே.ரா
B
அண்ணா
C
திரு.வி.க
D
பெரியார்
Question 139
மோசிகீரனார் என்னும் புலவரின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அவருக்குக் கவரி வீசிக்கொண்டு நின்ற மன்னன் ?
A
சேரன் செங்குட்டுவன்
B
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
C
சேரமான் இரும்பொறை
D
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
Question 140
Charity begins at home - இணையான தமிழ்ப் பழமொழி ?
A
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
B
பேராசை பெருநட்டம்
C
முள்ளை முள்ளால் எடு
D
எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
Question 141
Covet all lose all - இணையான தமிழ்ப் பழமொழி ?
A
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
B
பேராசை பெருநட்டம்
C
முள்ளை முள்ளால் எடு
D
எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
Question 142
Diamonds Cut diamonds - இணையான தமிழ்ப் பழமொழி ?
A
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்ம் தருமமும்
B
பேராசை பெருநட்டம்
C
முள்ளை முள்ளால் எடு
D
எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
Question 143
East or west, home is the best - இணையான தமிழ்ப் பழமொழி ?
A
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
B
பேராசை பெருநட்டம்
C
முள்ளை முள்ளால் எடு
D
எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது
Question 144
Empty vessels make the greatest sound - இணையான தமிழ்ப் பழமொழி ?
A
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
B
பேராசை பெருநட்டம்
C
முள்ளை முள்ளால் எடு
D
குறை குடம் கூத்தாடும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 144 questions to complete.

One Comment

  1. The tamil one word ques….are repaeateddd……..
    U pls change thizzzz…and i am not see your result answer…i don’t know…what and is corrrecttt……..replyyy itty..

Leave a Reply to Priya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!