Online TestTnpsc Exam

வரலாறு என்றால் என்ன? – 6th Social Science Lesson 1 Questions in Tamil

வரலாறு என்றால் என்ன? - 6th Social Science Lesson 1 Questions in Tamil

Congratulations - you have completed வரலாறு என்றால் என்ன? - 6th Social Science Lesson 1 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.
A
இலத்தீன்
B
பிரெஞ்சு
C
சீன மொழி
D
கிரேக்கம்
Question 1 Explanation: 
(குறிப்பு: இஸ்டோரியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் 'விசாரிப்பதன் மூலம் கற்றல்’ என்பதாகும்.)
Question 2
  • கூற்று 1: வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.
  • கூற்று 2: வரலாற்றின் காலம் ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 3
கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
  1. மெஹர்கர்
  2. மாகரா
  3. அத்திரம்பாக்கம்
  4. அதிச்சநல்லூர்
  5. டவோஜலி ஹேடிங்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 2, 5
D
2, 3, 5
Question 3 Explanation: 
(குறிப்பு: புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் புர்ஜஹோம், மெஹர்கர், கோல்டிவா, மாகரா, சிரண்ட், டவோஜலி ஹேடிங், பிரம்மகிரி, பையம்பள்ளி)
Question 4
இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.
A
லோத்தல்
B
கோல்டிவா
C
ஹல்லூர்
D
மெஹர்கர்
Question 4 Explanation: 
(குறிப்பு: வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு அவர்கள் வாழ்ந்த காலத்தையும், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம்.)
Question 5
கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
  1. லோத்தல்
  2. பிம்பேட்கா
  3. பையம்பள்ளி
  4. ஆதிச்சநல்லூர்
A
1, 4
B
1, 2, 3
C
3, 4
D
1, 3, 4
Question 6
கீழ்க்கண்டவற்றுள் பழைய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?
  1. கோல்டிவா
  2. பிம்பேட்கா
  3. அத்திரம்பாக்கம்
  4. ஆதிச்சநல்லூர்
  5. ஹன்சாகி பள்ளத்தாக்கு
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 3, 5
D
2, 3, 5
Question 7
கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்
A
வரலாற்றுத் தொடக்க காலம்
B
வரலாற்றுக்கு முந்தைய காலம்
C
இருண்டகாலம்
D
கற்காலம்
Question 7 Explanation: 
(குறிப்பு: தொல்லியல் அடையாளங்களான கற்கருவிகள், புதைபடிவங்கள், பாறை ஓவியங்கள் போன்ற பலவற்றிலிருந்தும் வரலாற்றுத் தரவுகளைப் நாம் பெறுகிறோம்.)
Question 8
  • கூற்று 1: வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றுத் தொடக்க காலம் ஆகும்.
  • கூற்று 2: வரலாற்றுத் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளன. தற்போது அவற்றின் பொருளை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 8 Explanation: 
(குறிப்பு: வரலாற்றுத் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளன. ஆனால், அவற்றின் பொருளை இன்னும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.)
Question 9
  • கூற்று 1: நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை நாணவியல் ஆகும்.
  • கூற்று 2: கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை கல்வெட்டியல் ஆகும்.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 10
  • கூற்று 1: தம்மா என்பது சமஸ்கிருத மொழிச் சொல்.
  • கூற்று 2: இது பிராகிருதத்தில் தர்மா எனப்படுகிறது.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 10 Explanation: 
(குறிப்பு: தம்மா என்பது பிராகிருத மொழிச் சொல். இது சமஸ்கிருதத்தில் தர்மா எனப்படுகிறது. இதன் பொருள் ‘அறநெறி’ ஆகும்.)
Question 11
யாருடைய ஆட்சியில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது?
A
அக்பர்
B
கனிஷ்கர்
C
அசோகர்
D
பாபர்
Question 11 Explanation: 
(குறிப்பு: பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகர் ஆவார்.)
Question 12
__________ போருக்கு பின் அசோகர் புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
A
இரண்டாம் பானிபட் போர்
B
இலங்கை போர்
C
செளசா போர்
D
கலிங்கப் போர்
Question 12 Explanation: 
(குறிப்பு: வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் அசோகர்.)
Question 13
தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய __________ தூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது.
A
அமர்நாத்
B
சாரநாத்
C
கேதார்நாத்
D
பத்ரிநாத்
Question 13 Explanation: 
(குறிப்பு: உலகிலேயே முதன்முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்துத் தந்தவர் அசோகர்)
Question 14
கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன?
  1. வில்லியம் ஜோன்ஸ்
  2. ஜேம்ஸ் பிரின்செப்
  3. அலெக்சாண்டர் கன்னிங்காம்
  4. சார்லஸ் ஆலன்
A
1, 2, 3
B
2, 3
C
1, 2, 4
D
1, 3, 4
Question 14 Explanation: 
(குறிப்பு: அசோகர் குறித்த தகவல்கள், வரலாற்றின் பக்கங்களில் 20ஆம் நூற்றாண்டு வரை இடம்பெறவில்லை.)
Question 15
“The Search for the India's Lost Emperor" என்ற நூலை வெளியிட்டவர்?
A
ஜேம்ஸ் பிரின்செப்
B
அலெக்சாண்டர் கன்னிங்காம்
C
சார்லஸ் ஆலன்
D
வில்லியம் ஜோன்ஸ்
Question 15 Explanation: 
(குறிப்பு: சார்லஸ் ஆலன் எனும் ஆங்கிலேய எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து “The Search for the India's Lost Emperor" நூலாக வெளியிட்டார்.)
Question 16
அசோகரின் பெருமையை எடுத்துச் சொல்லும் சான்றுகள் எவை?
  1. சாரநாத் தூண்
  2. அமர்நாத் குகை
  3. டெல்லி செங்கோட்டை
  4. சாஞ்சி ஸ்தூபி
A
1, 2
B
2, 3
C
1, 4
D
2, 4
Question 17
பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
A
வணிகம்
B
வேட்டையாடுதல்
C
ஓவியம் வரைதல்
D
விலங்குகளை வளர்த்தல்
Question 17 Explanation: 
(குறிப்பு: பழங்கற்கால மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை மலைப்பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்)
Question 18
  • கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும் போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
  • காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று தவறு, காரணமும் தவறு
Question 19
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் __________.
A
ஆற்றங்கரை
B
குகை
C
மரங்கள்
D
படகு
Question 20
பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
A
அருங்காட்சியகங்கள்
B
புதைபொருள் படிமங்கள்
C
கற்கருவிகள்
D
எலும்புகள்
Question 21
தவறான இணையைக் கண்டுபிடி
A
பழைய கற்காலம் – கற்கருவிகள்
B
பாறை ஓவியங்கள் - குகைச் சுவர்கள்
C
செப்புத் தகடுகள் - ஒரு வரலாற்று ஆதாரம்
D
பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
Question 22
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
A
பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
B
வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
C
பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
D
பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
Question 22 Explanation: 
(குறிப்பு: பண்டைய மனிதர்கள், குகைகளில் வாழ்ந்தபோது, பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர். இவை பாறை ஓவியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம்.)
Question 23
பொருத்துக.
  1. பாறை ஓவியங்கள்                     i) செப்புத் தகடுகள்
  2. எழுதப்பட்ட பதிவுகள்               ii) மிகவும் புகழ்பெற்ற அரசர்
  3. அசோகர்                                      iii) தேவாரம்
  4. மத சார்புள்ள இலக்கியம்       iv) வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.
 
A
ii i iii iv
B
iii i ii iv
C
iv i ii iii
D
ii i iii iv
Question 24
  • கூற்று 1: பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.
  • கூற்று 2: பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
A
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 25
_______ என்பவர் பதிவு செய்திருக்காவிட்டால், அசோகரின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்திருக்கும்.
A
ஜேம்ஸ் பிரின்செப்
B
அலெக்சாண்டர் கன்னிங்காம்
C
சார்லஸ் ஆலன்
D
வில்லியம் ஜோன்ஸ்
Question 25 Explanation: 
(குறிப்பு: கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், செப்புப்பட்டயங்கள், வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டு பயணக்குறிப்புகள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்கவும் மறுசீரமைக்கவும் பெரிதும் உதவுகின்றன.)
Question 26
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
கோட்டை - வேலூர்
B
கோயில்கள் – தஞ்சாவூர்
C
ஸ்தூபி – சாஞ்சி
D
மடங்கள் - திருமலை நாயக்கர் மஹால்
Question 26 Explanation: 
(குறிப்பு: மடங்கள் - டபாங், அரண்மனைகள் - திருமலை நாயக்கர் மஹால்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

10 Comments

  1. கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்
    Check the answer for this once please..

Leave a Reply to Jayamohan M Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!