Online TestTnpsc Exam

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Online Test 8th Social Science Lesson 3 Questions in Tamil

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Online Test 8th Social Science Lesson 3 Questions in Tamil

Congratulations - you have completed கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Online Test 8th Social Science Lesson 3 Questions in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • கூற்று 1: காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது.
  • கூற்று 2: நிலையான நிலவருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரி திட்டம் என்னும் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 1 Explanation: 
(குறிப்பு: ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.)
Question 2
இராபர்ட் கிளைவ் ___________ ஆண்டு வங்காளம், பிகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றார்.
A
1754
B
1762
C
1765
D
1767
Question 2 Explanation: 
(குறிப்பு: இராபர்ட் கிளைவ் இப்பகுதிகளில் ஓராண்டு நில வருவாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.)
Question 3
இராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றியவர்
A
காரன்வாலிஸ்
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
டல்ஹௌசி
D
தாமஸ் மன்றோ
Question 3 Explanation: 
(குறிப்பு: வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நில வருவாய் திட்டத்தை பின்பு ஓராண்டு நிலவருவாய் திட்டமாகவே மாற்றினார்.)
Question 4
காரன் வாலிஸ் பிரபு ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை பத்தாண்டு நிலவருவாய் திட்டமாக மாற்றிய ஆண்டு
A
1768
B
1772
C
1785
D
1793
Question 4 Explanation: 
(குறிப்பு: காரன்வாலிஸ் அறிமுகப்படுத்திய இத்திட்டம் நிலையான நிலவருவாய் திட்டம் என்றழைக்கப்படுகிறது.)
Question 5
சரியான இணையைத் தேர்ந்தெடு.(ஆங்கில ஆட்சியின் கீழ் நிலவருவாய் திட்டங்கள் - அறிமுகப்படுத்தியவர்)
  1. நிலையான நிலவருவாய் திட்டம் - காரன்வாலிஸ் பிரபு
  2. இரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ
  3. மகல்வாரி முறை - வில்லியம் பெண்டிங் பிரபு
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 6
ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் __________ சதவீத நிலப்பரப்பில் நிலையான நிலவரித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
A
50%
B
45%
C
30%
D
19%
Question 6 Explanation: 
(குறிப்பு: இத்திட்டம் ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.)
Question 7
காரன்வாலிஸ் பிரபு காலத்தில் நிலையான நிலவரித்திட்டம் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
  1. வங்காளம்
  2. பீகார்
  3. ஒரிசா
  4. வாரணாசி
  5. வடக்கு கர்நாடகம்
A
1, 2, 4
B
2, 3, 4
C
1, 2, 5
D
அனைத்தும்
Question 8
நிலையான நிலவரித்திட்டத்தில், விவசாயிகளிடமிருந்து வசூலித்த ___________ பங்கு வரியினை ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு செலுத்தினர்.
A
8/10
B
9/11
C
10/11
D
9/10
Question 8 Explanation: 
(குறிப்பு: நிலையான நிலவரித்திட்டத்தில், விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.)
Question 9
நிலையான நிலவரி திட்டம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
A
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
B
ஜமீன்தார்கள் வணிக குழுவிற்கு செலுத்தி வந்த வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டு, எந்த சூழ்நிலையிலும் உயர்த்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.
C
ஜமீன்தார்கள், விவசாயிகளுக்கு பட்டா (எழுதப்பட்ட ஒப்பந்தம்) வழங்கினர். இதன் மூலம் விவசாயிகள் அந்நிலத்தை உழும் காலம் வரை குத்தகைதாரர்களாக கருதப்பட்டனர்.
D
அனைத்து நீதித்துறை அதிகாரங்களும் ஜமீன்தாரர்களிடம் தரப்பட்டது.
Question 9 Explanation: 
(குறிப்பு: அனைத்து நீதித்துறை அதிகாரங்களும் ஜமீன்தாரர்களிடமிருந்து திரும்ப பெறப்பட்டது.)
Question 10
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. தரிசு நிலங்கள் மற்றும் காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன.
  2. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளராயினர்.
  3. ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்தது.
  4. ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
A
அனைத்தும் சரி
B
1, 2, 4 சரி
C
2, 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 10 Explanation: 
(குறிப்பு: நிலையான நிலவரித்திட்டத்தின் மூலம் ஜமீன்தார்கள் ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாறினர்.)
Question 11
நிலையான நிலவரி திட்டத்தின் குறைகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.
  2. விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டதோடு, ஜமீன்தார்களின் பொறுப்பில் விடுபட்டனர்.
  3. விவசாயிகள் பெரும்பாலும் நடத்தப்பட்டனர்.
  4. இந்த திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும் மாறினர்.
  5. வங்காளத்தின் பல கிராமப்புறங்களில் ஜமீன்தார்களுக்கும், விவசாயிகளுக்குமிடையே பல மோதல்கள் ஏற்பட்டன.
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 4, 5 சரி
D
1, 4, 5 சரி
Question 12
தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் இரயத்துவாரி முறை __________ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A
1782
B
1802
C
1820
D
1830
Question 12 Explanation: 
(குறிப்பு: இம்முறையின் மூலம் நிலத்தின் உரிமையானது விவசாயிகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிலத்தின் உரிமையாளராயினர். ஆங்கிலேய அரசு நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து வரிவசூலைப் பெற்றது.)
Question 13
இரயத்துவாரி முறை கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் கொண்டுவரப்பட்டது?
  1. மதராஸ்
  2. பம்பாய்
  3. அசாம்
  4. பஞ்சாப்
  5. கூர்க்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 2, 3, 5
Question 13 Explanation: 
(குறிப்பு: இம்முறையில் நில வருவாயானது மண் மற்றும் பயிரின் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.)
Question 14
இரயத்துவாரி முறையில் நிலவருவாயானது விளைச்சலில் ___________ என நிர்ணயிக்கப்பட்டது.
A
மூன்றில் ஒரு பங்கு
B
இரண்டில் ஒரு பங்கு
C
நான்கில் மூன்று பங்கு
D
பாதி
Question 14 Explanation: 
(குறிப்பு: இது தாமஸ் மன்றோ அவர்களால் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது.)
Question 15
இரயத்துவாரி முறையில் __________ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தின் மீதான குத்தகை மாற்றியமைக்கப்பட்டது.
A
10 அல்லது 15
B
12 அல்லது 20
C
20 அல்லது 30
D
20 அல்லது 25
Question 15 Explanation: 
(குறிப்பு: இத்திட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது. உண்மையில், அரசு விவசாயிகளிடமிருந்து நிலவருவாயை வரியாக அல்லாமல் குத்தகையாகவே பெற்றுக் கொண்டது.)
Question 16
இரயத்துவாரி முறையின் சிறப்பு கூறுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
  2. நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  3. அரசு, விளைச்சலில் 45 லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 16 Explanation: 
(குறிப்பு: இரயத்துவாரி முறையில் அரசு, ஜமீன்தார்களுக்குப் பதிலாக விவசாயிகளை சுரண்டியது.)
Question 17
மகல்வாரி முறை என்பது __________ என்பவரது சிந்தனையில் உதித்த, ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் ஆகும்.
A
இராபர்ட் மெர்தீன்ஸ்
B
ஹோல்ட் மெகன்சி
C
வில்லியம் பெண்டிங் பிரபு
D
காரன்வாலிஸ்
Question 17 Explanation: 
(குறிப்பு: கங்கைச் சமவெளி, வடமேற்கு மாகாணங்கள், மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் 1822ல் அறிமுகப்படுத்தப்பட்டது.)
Question 18
இராபர் மெர்தீன்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி  _________ ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
A
1822
B
1825
C
1833
D
1835
Question 18 Explanation: 
(குறிப்பு: மகல் அல்லது கிராம விளைச்சலின் அடிப்படையில் இம்முறையில் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.)
Question 19
  • கூற்று 1: மகல்வாரி முறையில், தொடக்கத்தில் மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு நிலவருவாய் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
  • கூற்று 2: மகல்வாரி முறையில் வில்லியம் பெண்டிங் பிரபு மொத்த விளைச்சலில் நிலவருவாய் 50% எனக் குறைத்தார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 19 Explanation: 
(குறிப்பு: மகல்வாரி முறையில் நிலவருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த ஒரு கிராமத் தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார்.)
Question 20
கீழ்க்கண்ட எந்த இடங்களில் மகல்வாரி முறை முதலில் அமல்படுத்தப்பட்டது?
  1. ஆக்ரா   2. குஜராத்               3. புனே         4. அயோத்தி
A
1, 2
B
2, 4
C
1, 4
D
3, 4
Question 20 Explanation: 
(குறிப்பு: பிற்காலங்களில் ஐக்கிய மாகாணங்களின் பிற பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது.)
Question 21
மகல்வாரி முறையின் சிறப்பு கூறுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. கிராமத் தலைவர் அரசுக்கும், கிராம மக்களுக்குமிடையே இடைத்தரகராக செயல்பட்டார்.
  2. இத்திட்டம் கிராமவாரியான மதிப்பீடாக இருந்தது. ஒரே நபர் பல கிராமங்களை தன்வசம் வைத்திருந்தார்.
  3. கிராம நிலங்களுக்கு, கிராமத்தை சேர்ந்த சமுதாயத்தினரே உரிமையாளராக இருந்தனர்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 22
மகல்வாரி முறையால் ஏற்பட்ட விளைவுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
  1. கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினார்.
  2. இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
  3. இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.
A
1 மட்டும் தவறு
B
1, 2 தவறு
C
3 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 22 Explanation: 
(குறிப்பு: அனைத்து நிலவரி முறைகளும் பொதுவாக, நிலத்திலிருந்து அதிகபட்ச வருமானம் பெறுவதாகவே இருந்தது. இதனால் நில விற்பனை அதிகரிப்பு மற்றும் விவசாயத் தொழில் அழிவிற்கு வழிவகுத்தது.)
Question 23
1855 - 56ல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம்
A
இண்டிகோ கலகம்
B
சந்தால் கலகம்
C
பாப்னா கலகம்
D
தக்காண கலகம்
Question 23 Explanation: 
(குறிப்பு: பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.)
Question 24
  • கூற்று: சந்தால் கலகத்தின் போது சித்து மற்றும் கங்கு என்ற இரண்டு சந்தால் சகோதரர்களின் தலைமையின் கீழ் 10,000 வீரர்கள் ஒன்று கூடினர்.
  • காரணம்: சந்தால்களின் அறியாமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட, நகர்ப்புற நிலக்கிழார்கள் மற்றும் வட்டிக்கு பணம் தருவோர் சந்தால்களின் நிலங்களை அபகரித்துக்கொள்ள ஆரம்பித்ததனர்.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 24 Explanation: 
(குறிப்பு: ஐரோப்பிய பண்ணையாளர்கள், ஆங்கிலேய அலுவலர்கள், இரயில்வே பொறியாளர்கள், ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்போர் ஆகிய அனைவரும் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.)
Question 25
சந்தால் கலக புரட்சியானது _________ ஆண்டு வரை தொடர்ந்தது.
A
ஜனவரி 1856
B
பிப்ரவரி 1856
C
மார்ச் 1856
D
ஏப்ரல் 1856
Question 25 Explanation: 
(குறிப்பு: புரட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கலகமானது கடுமையாக அடக்கப்பட்டது.)
Question 26
  • கூற்று 1: சந்தால் கலகம் அடக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தால்கள் வசித்த பகுதிகளை சந்தால் பர்கானா என அரசு அறிவித்தது.
  • கூற்று 2: அதன்படி சந்தால்களின் நிலங்களும், அடையாளமும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 27
_________ ல் திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ் ஆகியோரால் நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற இண்டிகோ கலகங்கள் ஐரோப்பிய பண்ணையாளர்களின் கடுமையான அடுக்குமுறைகளால் கைவிடப்பட்டன.
A
1857
B
1858
C
1859
D
1860
Question 27 Explanation: 
(குறிப்பு: வங்காள அவுரி சாகுபடியாளர்களின் வேலைநிறுத்தம் அதிகளவில் பரவி தீவிர விவசாய புரட்சியாக மாறியது.)
Question 28
இண்டிகோ கலகத்தினை கட்டுக்குள் கொண்டு வர ஐரோப்பிய அரசு ____________ ஆண்டு ஒரு அவுரி ஆணையத்தை அமைத்தது.
A
1859
B
1860
C
1861
D
1862
Question 28 Explanation: 
(குறிப்பு: இந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி 1862 சட்டம் பாகம் ஆறினை உருவாக்கியது.)
Question 29
ஐரோப்பிய பண்ணையாளர்களின் அடக்கு முறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் ____________பகுதிகளில் குடியேறினர்.
A
குஜராத், ராஜஸ்தான்
B
ஒடிசா, பீகார்
C
பீகார், உத்திரப் பிரதேசம்
D
ஆந்திரா, கர்நாடகா
Question 29 Explanation: 
(குறிப்பு: இந்து தேசபக்தன் என்ற செய்தித்தாள் சாகுபடியாளர்களின் துயரங்களை பலமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.)
Question 30
________ என்பவர் நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதினார்.
A
திகம்பர் பிஸ்வாஸ்
B
பிஸ்னு சரண் பிஸ்வாஸ்
C
சித்து
D
தீனபந்து மித்ரா
Question 30 Explanation: 
(குறிப்பு: வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர நீர் தர்பன் என்ற நாடகம் எழுதப்பட்டது.)
Question 31
பாப்னா விவசாய எழுச்சி _________ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
A
தீனபந்து மித்ரா
B
பிஸ்னு சரண் பிஸ்வாஸ்
C
கேசப் சந்திர ராய்
D
திகம்பர் பிஸ்வாஸ்
Question 31 Explanation: 
(குறிப்பு: பாப்னா கலகம் வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பிக்கப்பட்டது.)
Question 32
  • கூற்று 1: பாப்னா விவசாய எழுச்சி என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட, ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கமாகும்.
  • கூற்று 2: பாப்னா போராட்டத்தின் முதன்மை நோக்கம் சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 32 Explanation: 
(குறிப்பு: போராட்டத்தின் வாயிலாக விவசாயிகள் சட்ட விழிப்புணர்வு மற்றும் அவர்களது சட்ட உரிமைகளை மேம்படுத்தினர்.)
Question 33
தக்காண கலகம் என்பது __________ மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கலகம் ஆகும்.
A
அகமதாபாத்
B
மைசூர்
C
பூனா
D
அலகாபாத்
Question 33 Explanation: 
(குறிப்பு: தக்காண கலகம் 1875 ஆம் ஆண்டு ஏற்பட்டது.)
Question 34
  • கூற்று 1: பூனா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் தோன்றிய தக்காண கலகம் படிப்படியாக 33 கிராமங்களுக்குப் பரவியது.
  • கூற்று 2: தக்காணப் புரட்சியின் விளைவாக "தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்" நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் விவசாயிகளின் குறைகள் களையப்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 35
பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக _________ ஆண்டு “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்" நிறைவேற்றப்பட்டு சோதனை முறையில் செயற்படுத்தப்பட்டது.
A
1898
B
1899
C
1900
D
1901
Question 35 Explanation: 
(குறிப்பு: பஞ்சாபில் இச்சட்டம் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.)
Question 36
பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டத்தின்படி, பஞ்சாப் மக்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டனர்?
A
2
B
3
C
4
D
5
Question 36 Explanation: 
(குறிப்பு: பஞ்சாப் மக்கள் விவசாயிகள், வட்டிக் கடைக்காரர்கள் உட்பட இதர மக்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். முதல் பிரிவு மக்களிடமிருந்து மற்ற இரண்டு பிரிவு மக்களுக்கும் நிலத்தை விற்பது மற்றும் அடமானம் வைப்பது மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.)
Question 37
_________ மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்கள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் மனிதத் தன்மையற்ற முறைகளில், மிகவும் நியாயமற்ற விலைக்கு அவுரி சாகுபடியை செய்தனர்.
A
வங்காளம்
B
பீகார்
C
ஒடிசா
D
உத்திரப் பிரதேசம்
Question 37 Explanation: 
(குறிப்பு: சம்பிரான் விவசாயிகள் ஐரோப்பிய பண்ணையாளர்களால் சட்டவிரோத பணம் பறிப்பு, மற்றும் அடக்குமுறை போன்ற நிகழ்வுகளுக்கு ஆளாகினர்.)
Question 38
சம்பரான் இந்திய விவசாயிகள் தங்களது மொத்த நிலத்தில் ___________ அளவு அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தப்பட்டனர்.
A
3 ல் 1 பங்கு
B
30ல் 4 பங்கு
C
20ல் 3 பங்கு
D
20ல் 4 பங்கு
Question 38 Explanation: 
(குறிப்பு: அவுரிச் செடியை சாகுபடி செய்து, அதனை ஐரோப்பிய தோட்டக்காரர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தார்கள்.)
Question 39
"சம்பரான் விவசாயச் சட்டம்" எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A
1917, மே
B
1918, மே
C
1919, ஏப்ரல்
D
1919, மே
Question 39 Explanation: 
(குறிப்பு: சம்பரான் விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார். அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்து கொண்டது.)
Question 40
  • கூற்று: 1928ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர்.
  • காரணம்: கேடா மாவட்டத்தில், இடையராத பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்தது. ஆனால் நிலவரி முழுவதையும் செலுத்த விவசாயிகளை அரசு அறிவுறுத்தியது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 40 Explanation: 
(குறிப்பு: 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகள் வரிகொடா இயக்கத்தை தொடங்கினர். அவ்வியக்கத்திற்கு காந்தியடிகள் தலைமை ஏற்றார்.)
Question 41
  • கூற்று 1: கேடா சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் அழைப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளின் ஆதரவு இருந்தது.
  • கூற்று 2:  கேடா சத்தியாகிரகம் நடைபெற்ற காலக்கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியமான தலைவராக உருவானார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 41 Explanation: 
(குறிப்பு: பஞ்சத்தின் நிலைகளை அரசுக்கு எடுத்துக் கூறி முழு பலத்துடன் சத்தியாகிரக முறையில் போராடும்படி காந்திஜி விவசாயிகளை ஆயத்தப்படுத்தினார்.)
Question 42
__________ ஆண்டு நடைபெற்ற மலபார் மாவட்ட மாநாட்டின் மூலம் மாப்ளா விவசாயிகள் உத்வேகம் அடைந்தனர்.
A
1920
B
1921
C
1922
D
1923
Question 42 Explanation: 
(குறிப்பு: அம்மாநாடு குத்தகைதாரர்களுக்கு ஆதரவளித்து, நிலக்கிழார்-குத்தகைதாரர் இடையில் உள்ள உறவினை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்ற கோரியது.)
Question 43
____________ ஆண்டு மாப்ளா விவசாயிகள், ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
A
1920 ஆகஸ்ட்
B
1920 அக்டோபர்
C
1921 ஆகஸ்ட்
D
1921 அக்டோபர்
Question 43 Explanation: 
(குறிப்பு: மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் (கேரளா), இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) மற்றும் ஆங்கில அரசால் அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். இதுவே இப்புரட்சிக்கு முதன்மை காரணமாக இருந்தது.)
Question 44
________ ஆண்டு வாக்கில் அரசு இரக்கமின்றி மாப்ளா கிளர்ச்சியை அடக்கியது.
A
1921 செப்டம்பர்
B
1921 நவம்பர்
C
1921 டிசம்பர்
D
1922 ஜனவரி
Question 44 Explanation: 
(குறிப்பு: மாப்ளா கிளர்ச்சியின் ஆரம்பத்தில் மாப்ளா விவசாயிகள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள், அடக்கு முறையில் ஈடுபட்ட நிலக்கிழாரின் வீடுகள், வட்டிக்கடைக்காரர்கள் உட்பட அனைவரையும் தாக்கினர்.)
Question 45
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, மாப்ளா கிளர்ச்சியில் அரசு தலையீட்டின் விளைவாக,
  2. 2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
  3. 1650 பேர் காயமடைந்தனர்.
  4. 45,000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
A
1 மட்டும் சரி
B
2, 3 சரி
C
1, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 46
பர்தெளலி சத்தியாகிரகத்தில் விவசாயிகள் __________ தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
A
மகாத்மா காந்தி
B
ராஜேந்திர பிரசாத்
C
சர்தார் வல்லபாய் பட்டேல்
D
ஜவஹர்லால் நேரு
Question 46 Explanation: 
(குறிப்பு: 1928ல் 30% அளவிற்கு அரசு நில வருவாயை உயர்த்தியது.)
Question 47
பர்தெளலி சத்தியாகிரகத்தில் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து ________ ஆண்டு வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
A
1927 பிப்ரவரி 2
B
1928 பிப்ரவரி 24
C
1928 பிப்ரவரி 12
D
1929 பிப்ரவரி 21
Question 47 Explanation: 
(குறிப்பு: இந்த இயக்கத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.)
Question 48
  • கூற்று 1: 1930ல் பர்தோலியில் வரி செலுத்த மறுப்பு தெரிவித்த விவசாயிகள் தங்கள் நிலங்களை குறைந்த ஏலத்தில் விற்று இழப்பதற்கு தயாராக இருந்தாலும், நிலத்தை அரசுக்குத் தர மறுத்துவிட்டனர்.
  • கூற்று 2: கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நிலம், 1937ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபொழுது விவசாயிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திருப்பி தரப்பட்டது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
Question 49
பொருத்துக.
  1. நிரந்தர நிலவரி திட்டம்   i) மதராஸ்
  2. மகல்வாரி முறை               ii) இண்டிகோ விவசாயிகளின் துயரம்
  3. இரயத்துவாரி முறை        iii) வடமேற்கு மாகாணம்
  4. நீல் தர்பன்                            iv) வங்காளம்
  5. சந்தால் கலகம்                    v) முதல் விவசாயிகள் கிளர்ச்சி
A
iv iii ii i v
B
v i iii iv ii
C
iv iii i ii v
D
v ii i iii iv
Question 50
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாயப் புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
A
சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
B
நீல் தர்பன் என்ற நாடகம் தீனபந்து மித்ராவால் எழுதப்பட்டது.
C
தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
D
மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
Question 50 Explanation: 
(குறிப்பு: சந்தால் கலகம் பீகாரில் நடைபெற்றது. தக்காண கலகம் 1875 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது. மாப்ளா கலகம் மலபாரில் நடைபெற்றது.)
Question 51
பொருத்துக.
  1. சந்தால் கலகம்             i) 1855-56
  2. இண்டிகோ கலகம்       ii) 1859-60
  3. பாப்னா கலகம்            iii) 1873-76
  4. தக்காண கலகம்        iv) 1875
A
ii i iii iv
B
iii ii i iv
C
i ii iii iv
D
ii i iii iv
Question 52
பொருத்துக.
  1. பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்       i) 1917 – 18
  2. சம்பரான் சத்தியாகிரகம்                  ii) 1890-1900
  3. கேடா(கைரா) சத்தியாகிரகம்          iii) 1921
  4. மாப்ளா கிளர்ச்சி                                 iv) 1918
  5. பர்தோலி சத்தியாகிரகம்                   v) 1929 – 30
A
iv iii ii i v
B
v i iii iv ii
C
iv iii i ii v
D
ii i iv iii v
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 52 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!