Online TestTamil

ஒன்பதாம் வகுப்பு – பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1

ஒன்பதாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி - 1

Congratulations - you have completed ஒன்பதாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி - 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
''உலகம் யாவையும் தாமுள வாக்கலும்'' - என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வான்மீகி
B
கம்பர்
C
இளங்கோவடிகள்
D
திருவள்ளுவர்
Question 2
யாவையும் - இலக்கணக்குறிப்பு தருக?
A
எண்ணும்மை
B
முற்றும்மை
C
உருவகம்
D
உவமேயம்
Question 3
விளையாட்டு  - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 4
உடையார் = உடை+ய்+ஆர்; - இதில் ய் - என்பது எதனைக் குறிக்கும்?
A
பகுதி
B
விகுதி
C
சந்தி
D
விகாரம்
Question 5
கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர் - எந்த மாவட்டத்தில் உள்ளது?
A
தஞ்சாவூர்
B
திருவாரூர்
C
நாகப்பட்டினம்
D
கடலூர்
Question 6
வேறுபட்டது எது?
A
ஏர் எழுபது
B
சரசுவதி அந்தாதி
C
திருவரங்கத்து அந்தாதி
D
சடகோபர் அந்தாதி
Question 6 Explanation: 
குறிப்பு:- திருவரங்கத்து அந்தாதி - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அவர்கள் எழுதியது. மீதமுள்ள மூன்றும் கம்பர் எழுதியது.
Question 7
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்றவர் யார்?
A
ஒளவையார்
B
புகழேந்திப் புலவர்
C
இளங்கோவடிகள்
D
கம்பர்
Question 8
கவிச்சக்கரவர்த்தி எனவும் கல்வியில் பெரியர் ------------ எனவும் போற்றப்படுபவர் யார்?
A
திருவள்ளுவர்
B
மாணிக்கவாசகர்
C
திருமூலர்
D
கம்பர்
Question 9
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா" - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள கம்பராமாயண (இராமாவதாரம்) காண்டம் எது?
A
ஆரணியகாண்டம்
B
கிட்கிந்தாகாண்டம்
C
யுத்தகாண்டம்
D
பாலகாண்டம்
Question 10
கம்பரின் காலம் -------------- நூற்றாண்டு எனக் கூறுவர்?
A
கி.பி. 2
B
கி.பி. 6
C
கி.பி. 10
D
கி.பி. 12
Question 11
அகழ்வார், இகழ்வார் - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
வினையாலணையும் பெயர்
D
குறிப்பு வினைமுற்று
Question 12
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை -    - இந்த குறளில் பயின்று வரும் அணி ?
A
வேற்றுமையணி
B
உயர்வுநவிற்சி அணி
C
உவமையணி
D
பிறிதுமொழிதல் அணி
Question 13
பொறுத்தல், மறத்தல், ஒரால், பொறை  - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
வினையாலணையும் பெயர்
D
குறிப்பு வினைமுற்று
Question 14
 [அ] இன்மை - வறுமை; [ஆ] ஒரால் - தண்டித்தவரை; [இ] மடவார் - அறிவிலிகள்; [ஈ] நிறை - சால்பு; - இவற்றில் பொருந்தாதது எது?
A
B
C
D
Question 15
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை   - இந்த குறளில் பயின்று வரும் அணி ?
A
வேற்றுமையணி
B
எடுத்துக்காட்டு உவமையணி
C
உவமையணி
D
பிறிதுமொழிதல் அணி
Question 16
செய்யினும் - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
இழிவுச்சிறப்பும்மை
D
குறிப்பு வினைமுற்று
Question 17
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் - விடுபட்டதை நிரப்பவும்?
A
இன்னாச்சொல் நோற்கிற்பவர்
B
பொன்றும் துணையும் புகழ்
C
தகுதியான் வென்று விடல்
D
அறனல்ல செய்யாமை நன்று
Question 18
ஒறுத்தார் - ஒறு+த்+த்+ஆர். ஒறு - பகுதி; த் - சந்தி; த் - இறந்தகால இடைநிலை; ஆர் - என்பது என்ன?
A
பலர்பால் வினைமுற்று விகுதி
B
தொழிற்பெயர் விகுதி
C
பெயரெச்ச விகுதி
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 19
விக்டோரியா மகாராணியார், கண்விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
A
இராமாயணம்
B
திருக்குறள்
C
குரான்
D
பைபிள்
Question 20
இறந்தார், துறந்தார், நோற்கிற்பவர், ஒறுத்தார், செய்தாரை - இலக்கணக்குறிப்பு தருக?
A
தொழிற்பெயர்
B
வினைத்தொகை
C
வினையாலணையும் பெயர்
D
குறிப்பு வினைமுற்று
Question 21
அனைத்து நாட்டினரும் இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துகளைப் படைத்தவர் ?
A
கம்பர்
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
திருவள்ளுவர்
Question 22
நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாகவிமாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் - இவற்றில் பொருந்தாதது எது?
A
தேவர்
B
மாகவி
C
மாதானுபங்கி
D
முதற்பாவலர்
Question 22 Explanation: 
குறிப்பு :- மாகவி - பாரதியாரின் சிறப்பு பெயர்.
Question 23
ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆன  நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மதுரைக்காஞ்சி
C
திருக்குறள்
D
நாலடியார்
Question 24
திருக்குறளுக்கு அந்நாளிலேயே எத்தனை பேர் உரை எழுதியுள்ளனர்?
A
பன்னிரண்டு
B
பதின்மர்
C
இருபத்து மூவர்
D
ஏழு
Question 24 Explanation: 
குறிப்பு :- திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர். திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் : 1.தருமர், 2.மணக்குடவர், 3.தாமத்தர், 4.நச்சர், 5.பரிதி, 6.பரிமேலழகர், 7.திருமலையர், 8.மல்லர், 9.பரிப்பெருமாள், 10.காளிங்கர்
Question 25
தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பிறருக்கு அறிவிக்கும் கருவியாக விளங்குவது எது?
A
எண்ணம்
B
செயல்
C
மொழி
D
அறிவு
Question 26
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் எத்தனை  மொழிக்குடும்பங்களுள் அடக்குவர் மொழியியல் அறிஞர்?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 26 Explanation: 
குறிப்பு :- இந்தோ - ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ - ஆசிய மொழிகள், சீன - திபெத்திய மொழிகள்.
Question 27
நம் நாட்டில் ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்படுகின்றன. ஆதலால், இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச்சாலை' (Museum of Languages) எனக் குறிப்பிட்டவர் யார்?
A
கால்டுவெல்
B
மொழியியல் பேராசிரியர் ச.அகத்தியலிங்கம்
C
குமாரிலபட்டர்
D
முஸ்தபா
Question 28
இருபத்து மூன்றனுக்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. இம்மொழிகளை எத்தனை வகைகளாக பிரிப்பர்?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 28 Explanation: 
குறிப்பு :- தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூவகையாகப் பிரிப்பர்.
Question 29
திராவிட மொழிகள், திராவிடஇனம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல், தமது எந்த  நூலில் குறிப்பிட்டு உள்ளார் ?
A
திராவிட மொழியியல் இனவியல் நாட்டுப்புறக் கதைகள்
B
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
C
திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதி
D
திராவிட மொழியியல் இனவியல் நாட்டுப்புறக் கதைகள்
Question 30
திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
A
மாக்சுமுல்லர்
B
ஜியுபோப்
C
குமரிலபட்டர்
D
அகத்தியலிங்கம்
Question 30 Explanation: 
குறிப்பு :- குமரிலபட்டர் திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கினார். கால்டுவெல் அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.
Question 31
திராவிட என்னும் சொல்லே தமிழ் என்னும் சொல்லிலிருந்து உருவானது. தமிழ் > திரமிள > திரவிட > திராவிட என உருவாயிற்று என்று கூறியவர் யார்?  
A
ஜியுபோப்
B
ஈராஸ் பாதிரியார்
C
பாரதியார்
D
அகத்தியலிங்கம்
Question 32
இவற்றை முறைப்படி வரிசைப்படுத்துக?
A
தமிழ் > திராவிட > திரவிட > திரமிள
B
தமிழ் > திரவிட > திரமிள > திராவிட
C
தமிழ் > திரவிட > திராவிட > திரமிள
D
தமிழ் > திரமிள > திரவிட > திராவிட
Question 32 Explanation: 
குறிப்பு :- இந்த வினா TNPSC தேர்வுகளில் இரண்டு முறை கேட்கப்பட்டுள்ளது. கவனத்துடன் படிக்கவும்
Question 33
எந்த நிறுவனம், அழிந்து வரும் பண்டைய தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது?
A
கன்னிமேரா நூலக நிறுவனம்
B
இந்திய கலாச்சார நிறுவனம்
C
யுனெஸ்கோ
D
இவற்றில் ஏதுமில்லை
Question 34
கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எது?
A
டெரா ஆஸ்திராலிசு
B
கேர்கைலன்
C
மூ கண்டம்
D
இலெமூரியாக் கண்டம்
Question 35
தமிழ்மொழியில் இன்று நமக்குக்கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழைமையான நூல் எது?
A
திருக்குறள்
B
கலிங்கத்துப்பரணி
C
தொல்காப்பியம்
D
சிலப்பதிகாரம்
Question 35 Explanation: 
குறிப்பு :- தொல்காப்பியம். இந்நூல் ஓர் இலக்கண நூல்
Question 36
எண்பது விழுக்காடு அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி எது?
A
தெலுங்கு
B
மலையாளம்
C
தமிழ்
D
கன்னடம்
Question 37
தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?
A
4
B
5
C
6
D
7
Question 38
செய்யுளில் ஓசை குறையும்போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் தமக்குரிய --------------------- மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும். அவ்வாறு நீண்டு ஒலிப்பதை ----------------------- என்கிறோம்.
A
இரண்டு; ஆகுபெயர்
B
மூன்று; புணர்ச்சி
C
இரண்டு; அளபெடை
D
மூன்று; அணி
Question 38 Explanation: 
குறிப்பு :- அளபு = மாத்திரை; எடை = எடுத்தல் என்பது பொருள்; அதாவது எழுத்தினது மாத்திரை அளவில் நீட்டி ஒலித்தல்
Question 39
அளபெடை எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 39 Explanation: 
குறிப்பு :- அளபெடை இரண்டு வகைப்படும். உயிரளபெடை, ஒற்றளபெடை. [ (குறில் - அ, இ, உ, எ, ஒ); (நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ) ]
Question 40
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 40 Explanation: 
குறிப்பு :- உயிரளபெடை மூன்று வகைப்படும். அவையாவன:- (1)செய்யுளிசை (இசைநிறை) அளபெடை (2)இன்னிசை அளபெடை (3)சொல்லிசை அளபெடை.
Question 41
செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் அந்த ஓசையை நிறைவுசெய்ய சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும், தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளைப் பெற்று உரிய மாத்திரையிலிருந்து மிகுந்தொலிக்கும். இதனை --------------- அளபெடை எனக் கூறுவர்?
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 41 Explanation: 
விளக்கம் :- செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் அந்த ஓசையை நிறைவுசெய்ய சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர்நெடில் எழுத்துகள் ஏழும், தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளைப் பெற்று உரிய மாத்திரையிலிருந்து மிகுந்தொலிக்கும். இதனை செய்யுளிசை (இசைநிறை) அளபெடை எனக் கூறுவர். சான்று: கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. கெடா என்பது கெடா அ என இறுதியிலும், விடார் என்பது விடா அர் என இடையிலும் அளபெடுத்து வந்துள்ளது. செய்யுளிசை (இசைநிறை) அளபெடை :- செய்யுளின் ஓசையை நிறைவு செய்ய ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (எ-டு) உழா அர், படா அர். செய்யுளிசை அளபெடைக்கு - இசைநிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
Question 42
கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூ உம் எல்லாம் மழை. - இந்த குறள் எந்த அளபெடைக்கான எடுத்துக்காட்டு?  
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 42 Explanation: 
விளக்கம் :- கெடுப்பதும் , எடுப்பதும் என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக து என்னும் குறில் தூ என நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை.
Question 43
இனிய ஓசைக்காக மூவசை கொண்ட சீர்களாக மட்டும் வருவது எது?
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 43 Explanation: 
விளக்கம் :- இன்னிசை அளபெடை இனிய ஓசைக்காக மூவசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (எ-டு) கெடுப்பதூஉம், எடுப்பதூஉம்.
Question 44
] குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு - இந்த குறள் எந்த அளபெடைக்கான எடுத்துக்காட்டு?
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 44 Explanation: 
விளக்கம்:- இக்குறட்பாவில் தழீஇ என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. தழீ - தழுவுதல் என்னும் தொழிற்பெயர்ச்சொல். தழீஇ (தழுவி) என வினையெச்ச சொல்லாக அளபெடுத்ததால் இது சொல்லிசை அளபெடை ஆயிற்று.
Question 45
பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வருவது எந்த அளபெடை?
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 45 Explanation: 
விளக்கம்:- பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வருவது சொல்லிசை அளபெடை. இது இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். (எ-டு) நசைஇ, நிறீஇ.
Question 46
செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும். இஃது ---------------- அளபெடை எனப்படும்.
A
செய்யுளிசை (இசைநிறை) அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
ஒற்றளபெடை
Question 46 Explanation: 
விளக்கம் :- செய்யுளில் ஓசை குறைந்தால் மெய்யெழுத்துகளும் அளபெடுக்கும். இஃது ஒற்றளபெடை எனப்படும். எங்ங்கி றைவனுள் னென்பாய் வெஃஃகுவார்க் கில்லை வீடு இத்தொடர்களில் உள்ள ங் மற்றும் ஃ ஆகிய எழுத்துகள் இருமுறை வந்துள்ளன. இவ்வாறு ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல்,ள் ஆகிய பத்து மெய்யும், ஃ ஒன்றும் ஆகப் பதினோரு எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இரு குறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை என்பது பெயர். ஒற்றளபெடை - வல்லினத்து க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும், இடையினத்தில் ர், ழ் என்னும் இரண்டும் ஆக இந்த எட்டு மெய்யெழுத்துகள் தவிரப் பிற மெய்யெழுத்துகள் அளபெடுக்கும்.
Question 47
உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில் ஆகிய எழுத்து வகைகளின் மாத்திரை அளவு எத்தனை?
A
ஒன்று
B
அரை
C
மூன்று
D
இரண்டு
Question 48
உயிர்நெடில், உயிர்மெய்நெடில் -  ஆகிய எழுத்து வகைகளின் மாத்திரை அளவு எத்தனை?
A
ஒன்று
B
அரை
C
மூன்று
D
இரண்டு
Question 49
மெய், ஆய்தம் - ஆகிய எழுத்து வகைகளின் மாத்திரை அளவு எத்தனை?
A
ஒன்று
B
அரை
C
மூன்று
D
இரண்டு
Question 50
உயிரளபெடை - எழுத்து வகைகளின் மாத்திரை அளவு எத்தனை?
A
ஒன்று
B
அரை
C
மூன்று
D
இரண்டு
Question 51
ஒற்றளபெடை  ஆகிய எழுத்து வகைகளின் மாத்திரை அளவு எத்தனை?
A
ஒன்று
B
அரை
C
மூன்று
D
இரண்டு
Question 52
உறா அர்க் குறுநோய் உரைப்பாய் இத்தொடரில் ____________ அளபெடை வந்துள்ளது
A
செய்யுளிசை
B
இன்னிசை
C
சொல்லிசை
D
ஒற்றளபெடை
Question 53
உடுப்பதூஉம் துய்யப்பதூஉம் இல்லார்க்கு - இக்குறட்பாத் தொடரில் ----------------------- அளபெடை வந்துள்ளது.
A
செய்யுளிசை
B
இன்னிசை
C
சொல்லிசை
D
ஒற்றளபெடை
Question 54
சொல்லிசை அளபெடையைத் தேர்வு செய்க.
A
எச்சம் பெறாஅ விடின்
B
வரனசைஇ இன்னும் உள்ளேன்
C
உண்பதூஉம், உடுப்பதூஉம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 55
எழுத்துகளின் பிறப்பை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
A
5
B
4
C
3
D
2
Question 55 Explanation: 
விளக்கம் :- எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இருவகையாகப் பிரிக்கலாம். எழுத்துகள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும் [ இடப்பிறப்பு ( காற்றறைகள் - மார்பு, கழுத்து, தலை, மூக்கு ) ], உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் [ முயற்சிப் பிறப்பு ( ஒலிப்பு முனைகள் - இதழ், நா, பல், அண்ணம் ] கூறுவர்
Question 56
மெய்யெழுத்துகளை ஒலிக்கும்போது வேறுபட்ட எத்தனை ஒலிகளை கேட்கலாம்?
A
5
B
4
C
3
D
2
Question 56 Explanation: 
விளக்கம் :- மெய்யெழுத்துகளை ஒலிக்கும்போது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி. இவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம், அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவே
Question 57
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின ( ய, ர, ழ, வ, ல, ள ) எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
A
மூக்கு
B
மார்பு
C
கழுத்து
D
நா
Question 58
மெல்லின எழுத்துகள் (ங,ஞ,ண,ந,ம,ன) ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
A
மூக்கு
B
மார்பு
C
கழுத்து
D
நா
Question 59
வல்லின எழுத்துகள் (க,,,,,ற) ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
A
மூக்கு
B
மார்பு
C
கழுத்து
D
நா
Question 59 Explanation: 
விளக்கம் :- ஆவி இடைமை இடமிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை -- நன்னூல். ( ஆவி - உயிரெழுத்து; இடைமை - இடையினம்; மிடறு - கழுத்து; மென்மை - மெல்லினம்; உரம் - மார்பு. )
Question 60
------------ ஆகிய இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
A
இ, ஈ
B
அ, ஆ
C
ஏ, ஐ
D
ஒ, ஓ
Question 60 Explanation: 
விளக்கம் :- அவற்றுள், முயற்சியுள் அஆ அங்காப்புடைய (நன்னூல்-76). (அங்காப்பு - வாயைத் திறத்தல்)
Question 61
-------------- இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
A
க், ங்
B
ச், ஞ்
C
ட், ண்
D
த், ந்
Question 62
------------- இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
A
க், ங்
B
ச், ஞ்
C
ட், ண்
D
த், ந்
Question 63
--------------- இவை, நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.
A
க், ங்
B
ச், ஞ்
C
ட், ண்
D
த், ந்
Question 64
---------------- மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.
A
க், ங்
B
ச், ஞ்
C
ட், ண்
D
த், ந்
Question 65
-------------- மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, இவ்வெழுத்துகள் பிறக்கும்
A
ப், ம்
B
ய்
C
ர், ழ்
D
ட், ண்
Question 66
------------ இது, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.
A
ப், ம்
B
ய்
C
ர், ழ்
D
ட், ண்
Question 67
-------------- இது, மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.    
A
ல்
B
வ்
C
ள்
D
ற், ன்
Question 68
------------ இது, மேல்வாயை, நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.
A
ல்
B
வ்
C
ள்
D
ற், ன்
Question 69
------------- இது, மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.
A
ல்
B
வ்
C
ள்
D
ற், ன்
Question 70
------------------ இவை, மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.
A
ல்
B
வ்
C
ள்
D
ற், ன்
Question 71
ஆய்தமாகிய சார்பெழுத்து, --------------யை இடமாகக்கொண்டு பிறக்கிறது
A
தலை
B
மார்பு
C
நா
D
மூக்கு
Question 71 Explanation: 
விளக்கம் :- ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது. அதன் முயற்சிப் பிறப்பு வாயைத் திறந்து ஒலித்தலே ஆகும்.
Question 72
உன்னையே நீ அறிவாய் - இது யாருடைய கூற்று?
A
காந்தி
B
சேக்சுபியர்
C
சாக்ரடீசு
D
நேரு
Question 73
"தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்சா" - என்று கல்கி அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
மு.வரதராசனார்
D
வாணிதாசன்
Question 73 Explanation: 
குறிப்பு :- பெர்னாட்சா - எழுத்தாளர் , சிறந்த நாடக ஆசிரியர். இவரின் ஊர் அயர்லாந்து.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 73 questions to complete.

13 Comments

Leave a Reply to kaviya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!