Online TestTnpsc Exam

இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Online Test 10th Social Science Lesson 2

இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Online Test 10th Social Science Lesson 2

Congratulations - you have completed இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Online Test 10th Social Science Lesson 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பரப்பளவை பொறுத்து இந்தியா உலகளவில் எத்தனையாவது பெரிய நாடு?
A
2
B
4
C
5
D
7
Question 1 Explanation: 
(குறிப்பு: ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.)
Question 2
இந்திய நிலப்பரப்பு புவியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்
A
1.2%
B
1.4%
C
2.3%
D
2.4%
Question 2 Explanation: 
(குறிப்பு: உலகிலுள்ள பல நாடுகளைவிடவும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பரப்பளவில் பெரியவைகளாக உள்ளன.)
Question 3
இந்தியாவின் நிலப்பரப்பு _________ ச.கி.மீ ஆகும்.
A
23, 87,263
B
32,87,263
C
32,26,873
D
23,26,873
Question 3 Explanation: 
(குறிப்பு: இந்தியா தெற்காசியாவின் ஒரு பகுதியாகவும் ஏனைய ஆசிய பகுதிகளிலிருந்து இமயமலையால் பிரிக்கப்பட்டும் உள்ளது.)
Question 4
இந்திய நில எல்லையின் அளவு
A
12500 கி.மீ
B
12500 ச.கி.மீ
C
15200 கி.மீ
D
15200 ச.கி.மீ
Question 4 Explanation: 
(குறிப்பு: இந்தியா மேற்கில் பாகிஸ்தானுடனும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானும், கிழக்கில் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.)
Question 5
இந்தியா அதிகபட்சமான நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு
A
சீனா
B
பாகிஸ்தான்
C
ஆப்கானிஸ்தான்
D
வங்காள தேசம்
Question 5 Explanation: 
(குறிப்பு: இந்தியா 4156 கி.மீ நீளமுள்ள நில எல்லையை வங்காள தேசத்துடன் பகிர்ந்து கொள்கிறது.
Question 6
இந்தியா குறுகிய நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு
A
பூடான்
B
நேபாளம்
C
ஆப்கானிஸ்தான்
D
மியான்மர்
Question 6 Explanation: 
(குறிப்பு: 106 கி.மீ நில எல்லையை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது.)
Question 7
இந்தியா __________ கி.மீ நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது.
A
5200
B
5800
C
6100
D
6300
Question 7 Explanation: 
(குறிப்பு: இந்தியா, தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக் கடலாலும் சூழப்பட்டுள்ளது.)
Question 8
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து __________ கி.மீ ஆகும்.
A
5710.6
B
7516.6
C
6756.6
D
7656.6
Question 8 Explanation: 
(குறிப்பு: இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக்நீர்சந்தி ஆகும்.)
Question 9
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. இந்தியாவின் அமைவிடம் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியிலும், ஆசியாவின் தென் பகுதியிலும் அமைந்துள்ளது.
  2. இந்தியப் பெருங்கடல் வழிப்பாதை, மேற்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இணைத்து இந்தியாவிற்கு அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது.
  3. இந்தியாவின் மேற்கு கடற்கரை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பாலமாகவும், கிழக்கு கடற்கரை தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும் உதவி புரிகிறது.
A
1, 3 சரி
B
அனைத்தும் சரி
C
1, 2 சரி
D
2, 3 சரி
Question 10
  • கூற்று: பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
  • காரணம்: இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
A
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
Question 10 Explanation: 
(குறிப்பு: வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு மலைத்தொடர்களாலும் சூழப்பட்டு, இந்திய துணைக்கண்டம் ஆசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்துள்ளது.)
Question 11
அட்ச தீர்க்கப் பரவல்படி இந்தியா முழுமையும் __________ அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
A
தென்கிழக்கு
B
தென்மேற்கு
C
வடமேற்கு
D
வடகிழக்கு
Question 11 Explanation: 
(குறிப்பு: இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6' வட அட்சம் வரையிலும் 68°7' கிழக்கு தீர்க்கம் முதல் 97°25' கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.)
Question 12
மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா ஏறத்தாழ ________ தீர்க்கக் கோடுகளைக் கொண்டுள்ளது.
A
28
B
29
C
30
D
31
Question 13
புவியானது தன் அச்சில் சுழன்று, 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்
A
2 நிமிடம்
B
3 நிமிடம்
C
4 நிமிடம்
D
5 நிமிடம்
Question 13 Explanation: 
குறிப்பு: புவியானது 24 மணி நேரத்தில் 360 தீர்க்க கோடுகளைக் கடக்கிறது.)
Question 14
இந்தியாவின் மேற்கே உள்ள குஜராத் மாநிலத்திற்கும் கிழக்கே உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கும் இடையே உள்ள தீர்க்ககோடு ___________ ஆகும்.
A
28°16'
B
28°18'
C
29°14'
D
29°18’
Question 14 Explanation: 
(குறிப்பு: குஜராத் மாநிலம் – 68°7’, அருணாச்சலபிரதேசம் – 97°25'.)
Question 15
குஜராத் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் உள்ள தல நேர வேறுபாடு
A
1 மணி 64 நிமிடம் 6 வினாடிகள்
B
1 மணி 57 நிமிடம் 12 வினாடிகள்
C
1 மணி 47 நிமிடம் 24 வினாடிகள்
D
1 மணி 26 வினாடிகள்
Question 15 Explanation: 
(குறிப்பு: 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 4 நிமிடங்கள். குஜராத் அருணாச்சல பிரதேசங்களுக்கு இடையே உள்ள தீர்க்க கோடுகளின் எண்ணிக்கை. 29°18'. 29.18 x 4 நிமிடங்கள் = 1 மணி 57 நிமிடம் 12 வினாடிகள்.)
Question 16
  • கூற்று: இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • காராணம்: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.
A
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
Question 16 Explanation: 
(குறிப்பு: குஜராத் அருணாச்சல பிரதேசங்களுக்கு இடையே உள்ள நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
Question 17
இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகை __________ வழியாக செல்கிறது.
A
ஆக்ரா
B
அலிகார்
C
மிர்சாபூர்
D
அமேதி
Question 17 Explanation: 
(குறிப்பு: மிர்சாபூர் உத்திரபிரதேசத்தின் அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.)
Question 18
இந்திய திட்ட நேரமானது கிரீன்வீச் சராசரி நேரத்தை விட எவ்வளவு நேரம் முன்னதாக உள்ளது?
A
4 மணி 50 நிமிடம்
B
5 மணி 30 நிமிடம்
C
5 மணி 40 நிமிடம்
D
4 மணி 30 நிமிடம்
Question 19
இந்தியாவின் தென்கோடி பகுதியான முன்பு பிக்மெலியன் என்று அழைக்கப்பட்ட இந்திரா முனை ___________ அட்சத்தில் அந்தமான் நிகோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது.
A
5°65' தெற்கு
B
5°45' வடக்கு
C
6°45' வடக்கு
D
7°35' தெற்கு
Question 19 Explanation: 
(குறிப்பு: இந்திய நிலப்பகுதியின் தென்கோடி குமரி முனையாகும்.)
Question 20
  1. கூற்று 1: இந்தியாவின் வடமுனை இந்திரா கோல் எனவும் அழைக்கப்படுகிறது.
  2. கூற்று 2: இந்திரா கோல் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 21
வடக்கே காஷ்மீரிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள நீளம்
A
2314 கி.மீ
B
3214 கி.மீ
C
4213 கி.மீ
D
2413 கி.மீ
Question 21 Explanation: 
(குறிப்பு: 23°30' வட அட்சமான கடகரேகை இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும்பகுதிகளாக பிரிக்கிறது.)
Question 22
இந்தியா, மேற்கே குஜராத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை ________ கி.மீ நீளத்தை கொண்டுள்ளது.
A
2623 கி.மீ
B
2393 கி.மீ
C
2933 கி.மீ
D
2339 கி.மீ
Question 22 Explanation: 
(குறிப்பு: இந்தியா 28 மாநிலங்களாகவும் 7 யூனியன் பிரதேசங்களாகவும் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது.)
Question 23
  • கூற்று 1 ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும்.
  • கூற்று 2: ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 2021 வரை ஐதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 23 Explanation: 
(குறிப்பு: ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 2024 வரை ஐதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்.)
Question 24
இந்தியாவின் இயற்கை அமைப்பை __________ பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
A
4
B
5
C
6
D
7
Question 24 Explanation: 
(குறிப்பு: ஆறு வகை இயற்கை அமைப்புகள் இமயமலைகள் பெரிய இந்திய வட சமவெளிகள் தீபகற்ப பீடபூமிகள் இந்தியப் பாலைவனம் கடற்கரைச் சமவெளிகள் தீவுகள்)
Question 25
  • கூற்று: இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத்தொடர்கள் ஆகும்.
  • காரணம்: இமயமலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாகியவை.
A
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
B
கூற்று சரி, காரணம் தவறு
C
கூற்று தவறு, காரணம் சரி
D
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
Question 25 Explanation: 
(குறிப்பு: இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு, மடிப்பு மலைகளாக உருவாகின.)
Question 26
இமயமலைகள் மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை __________ கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது.
A
1600 கி.மீ
B
1800 கி.மீ
C
2100 கி.மீ
D
2500 கி.மீ
Question 26 Explanation: 
(குறிப்பு: இமயமலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கி.மீ அகலத்துடனும் வேறுபடுகிறது.)
Question 27
__________ மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.
A
சீனா
B
பாமீர் முடிச்சி
C
நேபாளம்
D
தார் பாலைவனம்
Question 27 Explanation: 
(குறிப்பு: பிரபலமான பாமீர் முடிச்சு “உலகின் கூரை" என அழைக்கப்படுகிறது.)
Question 28
இமாலயா என்ற சொல் __________மொழியில் "பனி உறைவிடம்” என அழைக்கப்படுகிறது.
A
கிரேக்க
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
ஆங்கிலம்
Question 28 Explanation: 
(குறிப்பு: இமயமலை பாமீர் முடிச்சிலிருந்து கீழ்நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது.)
Question 29
இந்தியாவின் பெரு அரணாக உள்ள இமயமலையை _________ பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
A
2
B
3
C
4
D
5
Question 29 Explanation: 
(குறிப்பு: ட்ரான்ஸ் இமயமலைகள் இமயமலைகள் கிழக்கு இமயமலை/பூர்வாஞ்சல் குன்றுகள்)
Question 30
இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்
A
இமயமலை
B
விந்திய சாத்பூரா மலைகள்
C
ஆரவல்லி மலைத்தொடர்
D
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
Question 31
ட்ரான்ஸ் இமயமலைகள் கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் அமைந்துள்ளது?
A
நேபாளம், சிக்கிம்
B
ஜம்மு காஷ்மீர், நேபாளம்
C
நேபாளம், திபெத்
D
ஜம்மு காஷ்மீர், திபெத்
Question 31 Explanation: 
(குறிப்பு: ட்ரான்ஸ் இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 32
திபெத்தியன் இமயமலை' என அழைக்கப்படுபவை
A
ட்ரான்ஸ் இமயமலை
B
இமயமலை
C
கிழக்கு இமயமலை
D
பூர்வாஞ்சல் குன்றுகள்
Question 32 Explanation: 
(குறிப்பு: ட்ரான்ஸ் இமயமலை திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.)
Question 33
ட்ரான்ஸ் இமயமலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் ___________கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் ___________ கி.மீ அகலத்துடனும் காணப்படுகிறது.
A
20, 150
B
20, 225
C
40, 150
D
40, 225
Question 33 Explanation: 
(குறிப்பு: ட்ரான்ஸ் இமயமலை பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும். இப்பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக, இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது.)
Question 34
கீழ்க்கண்டவற்றுள் மேற்கு இமயமலைகளில் காணப்படும் மலைத்தொடர்கள் எவை?
  1. சாஸ்கர்
  2. லடாக்
  3. கைலாஸ்
  4. கங்கோத்திரி
  5. காரகோரம்
A
அனைத்தும்
B
1, 2, 3, 5
C
2, 3, 5
D
1, 2, 4, 5
Question 35
இமயமலை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  2. இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  3. வடக்கே இருந்த அங்காரா நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
2, 3 சரி
D
1, 2 சரி
Question 36
இமாத்ரி, இமாச்சல், சிவாலிக் ஆகியவை எந்த மலைத்தொடரின் மூன்று பிரிவுகள் ஆகும்.
A
ட்ரான்ஸ் இமயமலை
B
இமயமலை
C
கிழக்கு இமயமலை
D
பூர்வாஞ்சல் குன்றுகள்
Question 36 Explanation: 
(குறிப்பு: இமாத்ரி / பெரிய இமயமலைகள் சிறிய இமயமலை / இமாச்சல் சிவாலிக் / வெளி இமயமலை)
Question 37
பெரிய இமயமலை / இமாத்ரி மலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் முறையே
A
15 கி.மீ, 5000 மீ
B
25 கி.மீ, 2000 மீ
C
25 கி.மீ, 6000 மீ
D
25 கி.மீ, 5000 மீ
Question 37 Explanation: 
(குறிப்பு: பெரிய இமயமலை, சிறிய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.)
Question 38
பெரிய இமயமலை / இமாத்ரி மலை குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
  2. மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது இப்பகுதியில் பெளதீக சிதைவாகவே உள்ளது.
  3. இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 39
எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா ஆகியவை எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன?
A
இமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
ட்ரான்ஸ் இமயமலை
Question 39 Explanation: 
(குறிப்பு: எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும், கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையேயும் அமைந்துள்ளது.)
Question 40
தவறான இணையைத் தேர்ந்தெடு.
  1. எவரெஸ்ட் – 8848 மீ
  2. கஞ்சன் ஜங்கா - 8568 மீ
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 40 Explanation: 
(குறிப்பு: கஞ்சன் ஜங்கா - 8586 மீ, கஞ்சன் ஜங்கா சிகரம் இரண்டும் மற்ற மலைத்தொடர்களை விட தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.)
Question 41
கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் எம்மலையில் காணப்படுகின்றன?
A
இமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
ட்ரான்ஸ் இமயமலை
Question 41 Explanation: 
(குறிப்பு: இமாத்ரியில் எப்போதும் நிரந்தரமாக பனி சூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.)
Question 42
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
காட்வின் ஆஸ்டின் அல்லது K2 – 8611 மீ
B
மக்காலு – 8481 மீ
C
தெளலகிரி - 8172 மீ
D
நங்க பர்வதம் - 8026 மீ
Question 42 Explanation: 
(குறிப்பு: நங்க பர்வதம் - 8126 மீ.)
Question 43
பொருத்துக.
  1. அன்ன பூர்ணா          i) 7817 மீ
  2. நந்தா தேவி                ii) 8078 மீ
  3. காமெட்                       iii) 7756 மீ
  4. நம்ச பர்வதம்            iv) 7756 மீ
  5. குருலா மருதாத்தா   v) 7728 மீ
A
ii iii iv v i
B
ii i iii iv v
C
iii i ii v iv
D
v iv iii ii i
Question 44
உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் இமயமலை __________ சிகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
A
5
B
7
C
8
D
9
Question 44 Explanation: 
(குறிப்பு: இமயமலை பல சிகரங்களின் இருப்பிடமாக உள்ளது. உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ளது.)
Question 45
சிறிய இமயமலைகள் அல்லது இமாச்சலின் சராசரி அகலம்
A
50 கி.மீ
B
60 கி.மீ
C
70 கி.மீ
D
80 கி.மீ
Question 45 Explanation: 
(குறிப்பு: இதன் சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 மீ வரை வேறுபடுகிறது.)
Question 46
இமாச்சல் குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. இது இமயமலையின் மத்திய மலைத்தொடராகும்.
  2. வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
  3. டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர் போன்ற குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இம்மலைத் தொடரை உருவாக்குகின்றன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 47
புகழ்பெற்ற கோடை வாழிடங்கலான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்ற கோடை வாழிடங்கள் ___________ மலைத்தொடரில் அமைந்துள்ளன.
A
இமாத்ரி
B
இமாச்சல்
C
சிவாலிக்
D
ட்ரான்ஸ் இமயமலை
Question 47 Explanation: 
(குறிப்பு: இம்மலைத்தொடரில் பீர்பாஞ்சல், தவ்லதார், மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.)
Question 48
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
காரகோகம் கணவாய் - ஜம்மு காஷ்மீர்
B
ஜொஷிலா கணவாய் – நேபாளம்
C
பொமிடிலா கணவாய் – அருணாச்சல பிரதேசம்
D
நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய் – சிக்கிம்
Question 48 Explanation: 
(குறிப்பு: ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய் ஆகியவை இம்மாச்சல் பிரதேசத்தில் காணப்படுகின்றன.)
Question 49
பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய்
A
கைபர் கணவாய்
B
போலன் கணவாய்
C
ஜொஷிலா கணவாய்
D
நாதுலா கணவாய்
Question 49 Explanation: 
(குறிப்பு: கைபர் கணவாய் மற்றும் பாகிஸ்தானிலுள்ள போலன் கணவாய் ஆகியவை இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள முக்கியக் கணவாய்களாகும்.)
Question 50
சிவாலிக் மலைத் தொடரின் சராசரி உயரம்
A
900 மீ
B
1000 மீ
C
1100 மீ
D
1200 மீ
Question 50 Explanation: 
(குறிப்பு: சிவாலிக் மலைத் தொடரின் உயரம் 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.)
Question 51
சிவாலிக் மலைத் தொடர் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
இம்மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ளது.
B
இத்தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.
C
இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கி.மீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.
D
இது தொடர்ச்சியான மலைத் தொடர்களாகும்.
Question 51 Explanation: 
(குறிப்பு: சிவாலிக் மலைத் தொடர் மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.)
Question 52
சிவாலிக் மலைத்தொடரின் கிழக்குப் பகுதி __________ என அழைக்கப்படுகிறது.
A
டூன்கள்
B
டூயர்ஸ்
C
பொமிடிலா
D
ஜெலிப்லா
Question 52 Explanation: 
(குறிப்பு: குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன.)
Question 53

சிவாலிக் மலைத்தொடரின் மேற்குப் பகுதி __________ என அழைக்கப்படுகிறது.

A
டூன்கள்
B
டூயர்ஸ்
C
பொமிடிலா
D
ஜெலிப்லா
Question 53 Explanation: 
(குறிப்பு: டூயர்ஸ் மற்றும் டூன்கள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.)
Question 54
பூர்வாஞ்சல் குன்றுகள் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  1. இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  2. இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  3. பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
  4. மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 55
டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ___________ என்று அழைக்கப்படுகின்றன.
A
ட்ரான்ஸ் இமயமலை
B
இமயமலை
C
கிழக்கு இமயமலை
D
பூர்வாஞ்சல் குன்றுகள்
Question 56
இமயமலையின் முக்கியத்துவத்தில் சரியானதைத் தேர்ந்தெடு.
  1. தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  2. வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.
  3. இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  4. வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  5. மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
A
அனைத்தும் சரி
B
1, 3, 4 சரி
C
2, 3, 5 சரி
D
1, 3, 5 சரி
Question 56 Explanation: 
(குறிப்பு: இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை ஆகும்.)
Question 57
சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கிடைய அமைந்துள்ள இமயமலைகள்
A
காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் இமயமலைகள்
B
குமாயூன் இமயமலைகள்
C
மத்திய நேபாள இமயமலைகள்
D
அசாம் கிழக்கு இமயமலைகள்
Question 57 Explanation: 
(குறிப்பு: காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் இமயமலைகள், சிந்து மற்றும் சட்லெஜ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ளன.)
Question 58
  • கூற்று 1: மத்திய நேபாள இமயமலைகள், காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.
  • கூற்று 2: அசாம் கிழக்கு இமயமலைகள், திஸ்தா மற்றும் திகாங் ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 59
வடபெரும் சமவெளியின் நீளம் சுமார் _________ கி.மீ ஆகும்.
A
1400
B
1800
C
2100
D
2400
Question 59 Explanation: 
(குறிப்பு: வடபெரும் சமவெளியின் அகலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 240 கி.மீ முதல் 320 கி.மீ வரை காணப்படுகிறது.)
Question 60
வடபெரும் சமவெளி ____________ சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது.
A
5 லட்சம்
B
6 லட்சம்
C
7 லட்சம்
D
8 லட்சம்
Question 60 Explanation: 
(குறிப்பு: வட இந்திய பெரும் சமவெளி மேடு பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது.)
Question 61
  • கூற்று 1: வளமான சமவெளிகள், வட இந்திய ஏழு மாநிலங்களில், வடக்கு மலைகளின் தென்புறம் பரந்து காணப்படுகிறது.
  • கூற்று 2: சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளியாக வடபெரும் சமவெளிகள் உள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 61 Explanation: 
(குறிப்பு: வடபெரும் சமவெளிகள் இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன.)
Question 62
பாபர் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A
இச்சமவெளி இயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆனது.
B
படிவுகளில் நுண் துளைகள் அதிகமாக உள்ளதால், இதன் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விடுகின்றன.
C
இச்சமவெளி சிவாலிக் குன்றுகளின் தென்புறம் மேற்கிலிருந்து கிழக்காக (ஜம்மு முதல் அஸ்ஸாம் வரை) அமைந்துள்ளது.
D
பாபர் சமவெளியின் அகலம் கிழக்கில் அகன்றும் மேற்கில் குறுகியும் 8 கி.மீ. முதல் 15 கி.மீ வரை உள்ளது.
Question 62 Explanation: 
(குறிப்பு: பாபர் சமவெளியின் அகலம் மேற்கில் அகன்றும் கிழக்கில் குறுகியும் 8 கி.மீ. முதல் 15 கி.மீ வரை உள்ளது.)
Question 63
தராய் மண்டலம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வன விலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
  2. இம்மண்டலம் பாபர் பகுதிக்கு வடக்கில் உள்ளது.
  3. பெரும்பாலான மாநிலங்களில் தராய் காடுகள் வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
1, 3 தவறு
D
2, 3 தவறு
Question 63 Explanation: 
(குறிப்பு: தராய் மண்டலம் பாபர் பகுதிக்கு தெற்கில் அமைந்துள்ளது.)
Question 64
  • கூற்று: தராய் மண்டலம் சுமார் 15 கி.மீ முதல் 30 கி.மீ வரை அகலம் கொண்டது.
  • காரணம்: கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் மிக அதிக மழை காரணமாக இம்மண்டலம் அகலமாக காணப்படுகிறது.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 65
பாங்கர் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது மேட்டு நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ஆகும்.
B
பாங்கர் சமவெளியில் உள்ள படிவுகள் யாவும் பழைய வண்டல் மண்ணால் ஆனவை.
C
இவை வெள்ளப்பெருக்கு ஏற்படா உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ளன.
D
இம்மண் வேளாண்மைக்கு உகந்ததாக இல்லை.
Question 65 Explanation: 
(குறிப்பு: பாங்கர் சமவெளி மண்ணானது கருமை நிறத்துடன், வளமான இலை மக்குகளைக் கொண்டும், நல்ல வடிகாலமைப்பையும் கொண்டுள்ளதால் இது வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.)
Question 66
ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படிய வைக்கப்படும் புதிய வண்டல் மண் __________ என்று அழைக்கப்படுகிறது.
A
பாபர் சமவெளி
B
காதர் சமவெளி
C
தராய் மண்டலம்
D
பாங்கர் சமவெளி
Question 66 Explanation: 
(குறிப்பு: காதர் சமவெளியில், மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்டல் படிவுகள் படிய வைக்கப்படுகின்றன. காதர் மணல், களிமண், சேறு மற்றும் வண்டலைக் கொண்ட வளமிக்கச் சமவெளியாகும்.)
Question 67
காதர் சமவெளியைத் தொடர்ந்து காணப்படும் டெல்டா சமவெளி கங்கை ஆற்றின் கடைப்பகுதியாக சுமார் ___________ சதுர கி.மீ பரப்பை உள்ளடக்கியதாகும்.
A
1.2 லட்சம்
B
1.5 லட்சம்
C
1.9 லட்சம்
D
2.3 லட்சம்
Question 67 Explanation: 
(குறிப்பு: டெல்டா சமவெளி பகுதியில் ஆறுகளின் வேகம் குறைவாக இருப்பதால், படிவுகள் படிய வைக்கப்படுகின்றன.)
Question 68
  • கூற்று 1: டெல்டா சமவெளி புதிய வண்டல் படிவுகள், பழைய வண்டல் படிவுகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது.
  • கூற்று 2: வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி “சார்ஸ்" எனவும் சதுப்புநிலப்பகுதி “பில்ஸ்" எனவும் அழைக்கப்படுகின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 69
இந்தியாவின் வடஇந்திய பெரும் சமவெளியைக் காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு __________வகையாக பிரிக்கலாம்.
A
2
B
3
C
4
D
5
Question 69 Explanation: 
(குறிப்பு: ராஜஸ்தான் சமவெளி பஞ்சாப் - ஹரியானா சமவெளி கங்கைச் சமவெளி பிரம்மபுத்திரா சமவெளி)
Question 70
இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் ஏறத்தாழ __________ சதுர கி.மீ பரப்பளவில் பரவியுள்ளது.
A
1,00,000
B
1,50,000
C
1,75,000
D
2,00,000
Question 70 Explanation: 
(குறிப்பு: இச்சமவெளி லூனி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ளது.)
Question 71
சாம்பார் ஏரி (அ) புஷ்கர் ஏரி __________சமவெளியில் அமைந்துள்ளது.
A
ராஜஸ்தான் சமவெளி
B
பஞ்சாப் - ஹரியானா சமவெளி
C
கங்கைச் சமவெளி
D
பிரம்மபுத்திரா சமவெளி
Question 71 Explanation: 
(குறிப்பு: பல உப்பு ஏரிகள் ராஜஸ்தான் சமவெளியில் காணப்படுகின்றன.)
Question 72
  • கூற்று 1: பஞ்சாப் - ஹரியானா சமவெளி சட்லெஜ் பியாஸ் மற்றும் ராவி ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் உருவானது.
  • கூற்று 2: இச்சமவெளி நீர் பிரி மேடாகவும், கங்கை-யமுனை, யமுனை-சட்லெஜ் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 73
பஞ்சாப் - ஹரியானா சமவெளி ஏறத்தாழ __________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டது.
A
1.25 லட்சம்
B
1.50 லட்சம்
C
1.75 லட்சம்
D
2.70 லட்சம்
Question 73 Explanation: 
(குறிப்பு: பஞ்சாப் - ஹரியானா சமவெளி இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.)
Question 74
கங்கைச் சமவெளி __________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டது.
A
2.75 லட்சம்
B
3.75 லட்சம்
C
4.25 லட்சம்
D
4.50 லட்சம்
Question 74 Explanation: 
(குறிப்பு: கங்கைச் சமவெளி மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்காளதேசம் வரை பரவியுள்ளது.)
Question 75
கங்கைச் சமவெளி ____________ நோக்கி மென் சரிவாக அமைந்துள்ளது.
A
கிழக்கு மற்றும் தென்மேற்கு
B
கிழக்கு மற்றும் வடகிழக்கு
C
கிழக்கு மற்றும் வடமேற்கு
D
கிழக்கு மற்றும் தென்கிழக்கு
Question 75 Explanation: 
(குறிப்பு: கங்கையும் அதன் துணை ஆறுகளான காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா போன்றவைகளும் அதிக அளவில் வண்டல் படிவுகளைப் படிய வைத்து இந்தியாவின் மிகப்பெரிய சமவெளியை உருவாக்கியுள்ளன.)
Question 76
பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி __________ல் அமைந்துள்ளது.
A
மேற்கு வங்கம்
B
அஸ்ஸாம்
C
வங்காளம்
D
ஒடிசா
Question 76 Explanation: 
(குறிப்பு: இச்சமவெளி பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வட பெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.)
Question 77
பிரம்மபுத்திரா சமவெளி __________ சதுர கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது.
A
25.275
B
52.75
C
56.275
D
53.724
Question 77 Explanation: 
(குறிப்பு: இச்சமவெளி வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்புநிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.)
Question 78
வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ள தீபகற்ப பீடபூமியின் பரப்பளவு
A
12 லட்சம் சதுர கி.மீ
B
14 லட்சம் சதுர கி.மீ
C
16 லட்சம் சதுர கி.மீ
D
18 லட்சம் சதுர கி.மீ
Question 78 Explanation: 
(குறிப்பு: இதன் பரப்பளவு நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் பாதியாகும்.)
Question 79
தீபகற்ப பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் __________ உயரத்தைக் கொண்டது.
A
400 மீ
B
500 மீ
C
600 மீ
D
700 மீ
Question 79 Explanation: 
(குறிப்பு: தீபகற்ப பீடபூமி வடமேற்கே ஆரவல்லி மலைத்தொடர், வடக்கு மற்றும் வடகிழக்கே பண்டல் கண்ட் உயர்நிலப்பகுதி, கைமூர், ராஜ்மகால் குன்றுகள், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியன எல்லையாக அமைந்துள்ளன.)
Question 80
தீபகற்ப பீடபூமியின் உயர்ந்த சிகரமான ஆனைமுடிச்சிகரத்தின் உயரம்
A
2506 மீ
B
3695 மீ
C
2095 மீ
D
2695 மீ
Question 80 Explanation: 
(குறிப்பு: ஆனைமுடிச்சிகரம், ஆனைமலையில் அமைந்துள்ளது.)
Question 81
  • கூற்று 1: தீபகற்ப பீடபூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
  • கூற்று 2: தீபகற்ப பீடபூமியில், ஆற்றின் மூப்பு நிலைக்காரணமாக ஆறுகள், அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 81 Explanation: 
(குறிப்பு: தீபகற்ப பீடபூமி கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்.)
Question 82
__________ ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது.
A
கோதாவரி
B
தபதி
C
நர்மதை
D
மகாநதி
Question 82 Explanation: 
(குறிப்பு: தீபகற்ப பீடபூமியின் வடபகுதியை மத்திய உயர்நிலங்கள் என்றும், தென் பகுதியை தக்காண பீடபூமி என்றும் அழைப்பர்.)
Question 83
  • கூற்று 1: விந்திய மலைக்கு தென்பகுதியில் பாயும் ஆறுகளான கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா போன்றவை கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
  • கூற்று 2: விந்தியமலையின் தென்பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளினால் நர்மதை மற்றும் தபதி ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கின்றன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 83 Explanation: 
(குறிப்பு: விந்தியமலையின் தென்பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளினால் நர்மதை மற்றும் தபதி ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.)
Question 84
  • கூற்று 1: மத்திய உயர் நிலங்கள் நர்மதை ஆற்றிற்கும் வடபெரும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளன.
  • கூற்று 2: மத்திய உயர் நில பகுதியின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 85
ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்காக குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சுமார்  __________ கி.மீ வரை நீண்டுள்ளது.
A
500
B
600
C
700
D
800
Question 85 Explanation: 
(குறிப்பு: ஆரவல்லி மலைத்தொடர் வடக்கில் டெல்லிக்கு அருகில் சராசரியாக சுமார் 400 மீ உயரத்தையும் தென் மேற்கில் 1500 மீ உயரத்தையும் கொண்டுள்ளது.)
Question 86
ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரமான குருசிகாரின் உயரம்
A
1533 மீ
B
1722 மீ
C
1799 மீ
D
1822 மீ
Question 87
மேற்கு பகுதியிலுள்ள மத்திய உயர்நிலங்கள் __________ எனப்படுகிறது.
A
தக்காண பீடபூமி
B
ஆரவல்லி பீடபூமி
C
மாளவ பீடபூமி
D
சோட்டா நாக்பூர் பீடபூமி
Question 87 Explanation: 
(குறிப்பு: மாளவ பீடபூமி ஆரவல்லி மலைத்தொடருக்கு தென்கிழக்கிலும் விந்திய மலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.)
Question 88
கீழ்க்கண்ட எந்த ஆறுகள் மாளவப் பீடபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கின்றன?
  1. சம்பல்
  2. மகாநதி
  3. கென்
  4. பீட்வா
A
அனைத்தும்
B
1, 2, 3
C
1, 3, 4
D
1, 2, 4
Question 88 Explanation: 
(குறிப்பு: மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதியை பண்டல்கண்ட் என்றும் இதன் தொடர்ச்சியை பாகல்கண்ட் என்றும் அழைப்பர்.)
Question 89
சோட்டாநாக்பூரி பீடபூமி மத்திய உயர் நிலங்களின் _________ பகுதியில் அமைந்துள்ளது.
A
தென்மேற்கு
B
தென்கிழக்கு
C
வடமேற்கு
D
வடகிழக்கு
Question 89 Explanation: 
(குறிப்பு: இப் பீடபூமி ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதி, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.)
Question 90
தக்காணப் பீடபூமி தோராயமாக ________ வடிவம் கொண்டது.
A
சதுரம்
B
செவ்வகம்
C
முக்கோணம்
D
நாற்கரம்
Question 90 Explanation: 
(குறிப்பு: தக்காணப் பீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.)
Question 91
சரியான இணையைத் தேர்ந்தெடு. (தக்காண பீடபூமியின் எல்லைகள்)
  1. வடமேற்கு திசை - விந்திய, சாத்பூரா மலை தொடர்கள்
  2. வடக்கு - மகாதேவ், மைக்கலா குன்றுகள்
  3. வடகிழக்கு - இராஜ்மகால் குன்றுகள்
  4. மேற்கு - மேற்கு தொடர்ச்சி மலைகள்
  5. கிழக்கு - கிழக்கு தொடர்ச்சி மலைகள்
A
அனைத்தும் சரி
B
1, 4, 5 சரி
C
1, 2, 4, 5 சரி
D
1, 3, 4, 5 சரி
Question 92
தக்காண பீடபூமி ________ சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.
A
5 லட்சம்
B
6 லட்சம்
C
7 லட்சம்
D
8 லட்சம்
Question 92 Explanation: 
(குறிப்பு: தக்காண பீடபூமி கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.)
Question 93
மேற்கு தொடர்ச்சி மலைகள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
B
இவை மேற்கு கடற்கரைக்கு இணையாக செல்கிறது.
C
இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
D
இதன் உயரமானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச் செல்ல குறைகிறது.
Question 93 Explanation: 
(குறிப்பு: ஆனைமலை, ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் ஆனைமுடிச்சிகரம் அமைந்துள்ளது. மலைவாழிடமான கொடைக்கானல் பழனிமலையில் அமைந்துள்ளது.)
Question 94
கிழக்கு தொடர்ச்சி மலை _______ என்றும் அழைக்கப்படுகிறது.
A
சயாத்ரி
B
பூர்வாதிரி
C
பூர்வாஞ்சல்
D
காரகோரம்
Question 94 Explanation: 
(குறிப்பு: கிழக்கு தொடர்ச்சி மலை தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.)
Question 95
  • கூற்று: மேற்கு தொடர்ச்சி மலைகளைப் போன்று கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியான மலைகள் அல்ல.
  • காரணம்: மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு மற்றும் காவிரி போன்ற ஆறுகளால் அரிக்கப்பட்டு பிளவுப்பட்ட குன்றுகளாக காட்சியளிக்கின்றன.
A
கூற்று சரி, காரணம் தவறு
B
கூற்று தவறு, காரணம் சரி
C
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
D
கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல
Question 95 Explanation: 
(குறிப்பு: கிழக்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் கர்நாடக, தமிழ்நாடு எல்லையிலுள்ள நீலகிரி மலையில் ஒன்றினைகின்றன.)
Question 96
பெரிய இந்திய பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனத்தின் பரப்பளவு
A
2 இலட்சம் ச.கி.மீ
B
2.5 இலட்சம் ச.கி.மீ
C
3 இலட்சம் ச.கி.மீ
D
4 இலட்சம் ச.கி.மீ
Question 96 Explanation: 
(குறிப்பு: இது இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதியாக உள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது.)
Question 97
தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது பெரிய பாலைவனமாகும்?
A
9
B
12
C
17
D
19
Question 97 Explanation: 
(குறிப்பு: தார் பாலைவனம் உப அயன மண்டல பாலைவனங்களில் உலக அளவில் 9ஆவது பெரிய பாலைவனமாக அமைந்துள்ளது.)
Question 98
தார்ப் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் _________ பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
A
1/2
B
2/3
C
3/4
D
1/3
Question 98 Explanation: 
(குறிப்பு: இந்த பாலைவனப் பகுதி மருஸ்தலி என்றும், அரை பாலைவனப்பகுதி பாங்கர் என்றும் இரு பகுதிகளாக அழைக்கப்படுகின்றன. இப்பாலைவனப் பகுதியில் பல உப்பு ஏரிகளும், மணல் திட்டுகளும் உள்ளன.)
Question 99
இந்திய கடற்கரைச் சமவெளிகளை எத்தனைப் பிரிவுகளாக பிரிக்கலாம்?
A
2
B
3
C
4
D
5
Question 99 Explanation: 
(குறிப்பு: இரு பெரும் பிரிவுகள் மேற்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு கடற்கரைச் சமவெளி)
Question 100
வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் நிகோபர் தீவு _________ தீவுகளை கொண்டுள்ளது.
A
372
B
482
C
572
D
623
Question 100 Explanation: 
(குறிப்பு: அந்தமான் நிகோபர் தீவுகள் புவி உள் இயக்கவிசைகள் மற்றும் எரிமலைகளால் உருவானதாகும்.)
Question 101
அரபிக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் _________ தீவுக் கூட்டங்களைக் கொண்டுள்ளன.
A
17
B
20
C
25
D
27
Question 101 Explanation: 
(குறிப்பு: இலட்சத்தீவுகள் முருகைப் பாறைகளால் உருவானவை.)
Question 102
மேற்கு கடற்கரைச் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக்கடலுக்கும் இடையே அமைந்துள்ளது.
B
இது வடக்கில் உள்ள ரானா கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு 5 கி.மீ முதல் 10 கி.மீ. வரை அகலம் கொண்டதாகவுள்ளது.
C
இச்சமவெளி, மணற்கடற்கரை, கடற்கரை மணல் குன்றுகள், கழிமுகங்கள், காயல்கள், எஞ்சிய குன்றுகள் மற்றும் சரளை மணல்மேடுகள் போன்ற நிலத்தோற்றங்களைக் கொண்டுள்ளது.
D
வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்.
Question 102 Explanation: 
(குறிப்பு: இது வடக்கில் உள்ள ரானா கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு 10 கி.மீ முதல் 80 கி.மீ. வரை அகலம் கொண்டதாகவுள்ளது.)
Question 103
  • கூற்று 1: மேற்கு கடற்கரையின் வட பகுதி கொங்கணக் கடற்கரை எனவும், மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
  • கூற்று 2: 20-100 கி.மீ வரை அகலமும், 550 கி.மீ நீளமும் கொண்ட மேற்கு கடற்கரையின் தென்பகுதி மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 103 Explanation: 
(குறிப்பு: ஆழமில்லாத பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ் போன்றவை மேற்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன.)
Question 104
கிழக்கு கடற்கரைச் சமவெளி குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
B
இச்சமவெளியானது கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் படிய வைக்கப்பட்ட வண்டல் படிவுகளால் உருவானது.
C
மகாநதிக்கும் கோதாவரிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கோதாவரி மற்றும் காவேரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழ மண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
D
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மிக பிரபலமான உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாகும்.
Question 104 Explanation: 
(குறிப்பு: மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், கிருஷ்ணா மற்றும் காவேரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழ மண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 105
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
  1. மகாநதி டெல்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ள சிலிகா ஏரி இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரியாகும்.
  2. கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.
  3. தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச எல்லையில் பழவேற்காடு (புலிகாட்) ஏரி அமைந்துள்ளது.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 105 Explanation: 
(குறிப்பு: மேற்கண்ட ஏரிகள் கிழக்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கியமான ஏரிகளாகும்.)
Question 106
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பரப்பளவு
A
5,259 ச.கி.மீ
B
4,249 ச.கி.மீ
C
8,249 ச.கி.மீ
D
6,249 ச.கி.மீ
Question 106 Explanation: 
(குறிப்பு: அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல்பகுதியாக அமைந்துள்ளன.)
Question 107
அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தை __________ பிரிவுகளாக பிரிக்கலாம்.
A
2
B
3
C
4
D
5
Question 107 Explanation: 
(குறிப்பு: இரண்டு பிரிவுகள் வட பகுதி தீவுகள், அந்தமான் என்றும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.)
Question 108
அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து _________ கால்வாய் பிரிக்கிறது.
A
B
10°
C
12°
D
15°
Question 108 Explanation: 
(குறிப்பு: அந்தமான் நிக்கோபர் தீவுகளின் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.)
Question 109
  • கூற்று 1: நிகோபரின் தென்கோடி முனை “இந்திரா முனை" என்று அழைக்கப்படுகிறது.
  • கூற்று 2: இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை அந்தமான் நிகோபர் தீவுக்கூட்டத்தில் உள்ள பாரன் தீவாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 110
இலட்சத்தீவுகள் _________ ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.
A
15
B
17
C
28
D
32
Question 110 Explanation: 
(குறிப்பு: இலட்சத்தீவின் நிர்வாகத் தலைநகரம் காவராத்தி ஆகும்.)
Question 111
இலட்சத்தீவுக் கூட்டங்களை _________ கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.
A
B
C
D
Question 111 Explanation: 
(குறிப்பு: இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.)
Question 112
இலட்சத்தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் ____________ ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகின்றன.
A
1963
B
1968
C
1970
D
1973
Question 113
முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
A
காயல்
B
வடிகால் பரப்பு
C
வடிகால் கொப்பரை
D
விவசாய வடிகால்
Question 113 Explanation: 
(குறிப்பு: வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.)
Question 114
இந்தியாவின் அமைவிட அடிப்படையில் வடிகாலமைப்பை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
A
2
B
3
C
4
D
5
Question 114 Explanation: 
(குறிப்பு: இரு பிரிவுகள் இமயமலையில் தோன்றும் ஆறுகள் தீபகற்ப இந்திய ஆறுகள்)
Question 115
சிந்து நதி _________ நீளத்துடன் உலகில் உள்ள நீளமான நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
A
2350 கி.மீ
B
2480 கி.மீ
C
2850 கி.மீ
D
2920 கி.மீ
Question 115 Explanation: 
(குறிப்பு: சிந்து நதி, இந்தியப் பகுதியில் 709 கி.மீ. நீளம் மட்டுமே பாய்கிறது.)
Question 116
சிந்து நதி திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலைத்தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் ____________ உயரத்தில் உற்பத்தியாகிறது.
A
2850 மீ
B
4550 மீ
C
4925 மீ
D
5150 மீ
Question 116 Explanation: 
(குறிப்பு: சிந்து நதி லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய மலை இடுக்குகளை உருவாக்குகிறது. ஜம்மு-காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து, பின் அரபிக்கடலில் கலக்கிறது.)
Question 117
சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு
A
ஜூலம்
B
சினாப்
C
ராவி
D
சட்லெஜ்
Question 117 Explanation: 
(குறிப்பு: சிந்து நதியின் துணையாறுகள் ஜீலம், சினாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியனவாகும்.)
Question 118
சிந்து நதி பாயும் மொத்த வடிகாலமைப்பு பரப்பில் __________ இந்தியாவிலுள்ளது.
A
11,65,500
B
6,55,891
C
3,21,289
D
2,31,829
Question 118 Explanation: 
(குறிப்பு: சிந்து நதி பாயும் மொத்த வடிகாலமைப்பு பரப்பு 11,65,500 ச.கி.மீட்டர் ஆகும்.)
Question 119
கங்கையாற்றின் தொகுப்பு ____________ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பை கொண்டதாகும்.
A
6,81,204 ச.கி.மீ
B
8,61,404 ச.கி.மீ
C
7,81,304 ச.கி.மீ
D
9,81,204 ச.கி.மீ
Question 119 Explanation: 
குறிப்பு: கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும் உள்ளன.)
Question 120
கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் _________ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து உற்பத்தியாகிறது.
A
5010 மீ
B
2525 மீ
C
7010 மீ
D
6010 மீ
Question 120 Explanation: 
குறிப்பு: கங்கை நதி, கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.)
Question 121
கங்கை நதியின் நீளம் ________ கி.மீ ஆகும்.
A
1515
B
2525
C
3535
D
4545
Question 121 Explanation: 
(குறிப்பு: வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.)
Question 122
வங்கதேசத்தில், கங்கை _________ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
A
பவானி
B
யமுனா
C
பத்மா
D
கோமதி
Question 122 Explanation: 
(குறிப்பு: கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.)
Question 123
திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகும் ஆறு
A
யமுனை
B
கங்கை
C
சோன்
D
பிரம்மபுத்ரா
Question 123 Explanation: 
(குறிப்பு: பிரம்மபுத்ரா ஆற்றுத் தொகுப்பு கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது.)
Question 124
பிரம்மபுத்ரா ஆற்றுத் தொகுப்பின் மொத்த வடிகாலமைப்பில் இந்தியாவில் பாயும் பரப்பு
A
5,80,000 ச.கி.மீ
B
1,94,413 ச.கி.மீ
C
3,84,213 ச.கி.மீ
D
2, 23,213 ச.கி.மீ
Question 124 Explanation: 
(குறிப்பு: பிரம்மபுத்ரா ஆற்றுத் தொகுப்பின் மொத்த வடிகாலமைப்பு 5,80,000 ச.கி.மீ ஆகும்.)
Question 125
பிரம்மபுத்ரா ஆறு திபெத் பகுதியில் _________ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
A
திகாங்
B
சாங்போ
C
திஸ்டா
D
மனாஸ்
Question 125 Explanation: 
(குறிப்பு: பிரம்மபுத்ரா ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.)
Question 126
பிரம்மபுத்ரா ஆற்றின் நீளம் ________ கி.மீ ஆகும்.
A
2200 கி.மீ
B
2500 கி.மீ
C
2900 கி.மீ
D
3100 கி.மீ
Question 126 Explanation: 
(குறிப்பு: இதில் 900 கி.மீ மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.)
Question 127
பிரம்மபுத்ரா ஆறு வங்காளதேசத்தில் ஜமுனா எனவும் கங்கை ஆற்றுடன் இணைந்த போது _________ எனவும் அழைக்கப்படுகிறது.
A
மேக்னா
B
மாக்மா
C
திஸ்டா
D
மனாஸ்
Question 127 Explanation: 
(குறிப்பு: திஸ்டா, மனாஸ், பராக், சுபன் ஸ்ரீ ஆகியவை பிரம்மபுத்ரா ஆற்றின் முக்கிய துணையாறுகளாகும்.)
Question 128
கீழ்க்கண்டவற்றுள் இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் எவை?
  1. நீளமானவை மற்றும் அகலமானவை
  2. வற்றாத நதிகள்
  3. நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
  4. ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப் பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
A
அனைத்தும்
B
2, 3, 4
C
1, 3, 4
D
1, 2, 4
Question 129
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (தீபகற்ப இந்திய ஆறுகள்)
A
தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
B
பெரும்பாலான ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
C
இவை வற்றாக ஆறுகள் எனப்படும்.
D
நீரின் அளவு மழை பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.
Question 129 Explanation: 
(குறிப்பு: தீபகற்ப இந்திய ஆறுகள் வற்றும் ஆறுகள் அல்லது பருவகால ஆறுகள் எனப்படும்.)
Question 130
மகாநதி சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் __________ கி.மீ நீளத்திற்குப் பாய்கிறது.
A
581
B
624
C
751
D
851
Question 130 Explanation: 
(குறிப்பு: சீநாத், டெலன், சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி மற்றும் நன் ஆகியவை மகாநதியின் முக்கிய துணையாறுகளாகும்.)
Question 131
தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான கோதாவரியின் நீளம்
A
965 கி.மீ
B
1025 கி.மீ
C
1465 கி.மீ
D
1528 கி.மீ
Question 131 Explanation: 
(குறிப்பு: கோதாவரி மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.)
Question 132
கோதாவரி ___________ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டது.
A
2.13 இலட்சம் சதுர.கி.மீ
B
3.13 இலட்சம் சதுர.கி.மீ
C
3.52 இலட்சம் சதுர.கி.மீ
D
2.53 இலட்சம் சதுர.கி.மீ
Question 132 Explanation: 
(குறிப்பு: கோதாவரி ஆறு விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.)
Question 133
கீழ்க்கண்டவற்றுள் கோதாவரி ஆற்றின் துணை ஆறுகள் எவை?
  1. பிரனிதா
  2. பென்கங்கா
  3. இந்திராவதி
  4. தால்
  5. சாலாமி
  6. பூர்ணா
A
அனைத்தும்
B
1, 2, 4
C
2, 3, 5, 6
D
1, 3, 4, 5, 6
Question 133 Explanation: 
(குறிப்பு: கோதாவரி ஆறு ஆந்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.)
Question 134
நன்னீர் ஏரியான கொல்லேரு ஏரி _________ ஆற்றில் அமைந்துள்ளது.
A
கிருஷ்ணா
B
கோதாவரி
C
பிரம்மபுத்ரா
D
கங்கை
Question 134 Explanation: 
(குறிப்பு: கோதாவரி ஆறு ராஜமுந்திரிக்கு அருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து மிகப் பெரிய டெல்டாவை உருவாக்குகிறது.)
Question 135
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகும் ஆறு
A
கிருஷ்ணா
B
கோதாவரி
C
தபதி
D
காவேரி
Question 135 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணா ஆறு தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதியாகும்.)
Question 136
கிருஷ்ணா ஆறு ___________ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டிருக்கிறது.
A
1.12 இலட்சம் ச.கி.மீ
B
2.58 இலட்சம் ச.கி.மீ
C
2.64 இலட்சம் ச.கி.மீ
D
2.82 இலட்சம் ச.கி.மீ
Question 136 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணா நதியின் நீளம் சுமார் 1400 கி.மீ ஆகும்.)
Question 137
கீழ்க்கண்டவற்றுள் கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறுகள் எவை?
  1. கொய்னா
  2. பீமா
  3. முசி
  4. துங்கபத்ரா
  5. பெடவாறு
A
அனைத்தும்
B
1, 2, 5
C
2, 3, 5
D
1, 3, 5
Question 137 Explanation: 
(குறிப்பு: கிருஷ்ணா ஆறு ஆந்திரப்பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.)
Question 138
காவேரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவேரியில் உற்பத்தியாகி சுமார் _________ நீளத்துக்கு பாய்கிறது.
A
500 கி.மீ
B
600 கி.மீ
C
700 கி.மீ
D
800 கி.மீ
Question 138 Explanation: 
(குறிப்பு: காவேரி தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.)
Question 139
கீழ்க்கண்டவற்றுள் காவேரி ஆற்றின் துணை ஆறுகள் எவை?
  1. ஹரங்கி
  2. ஹேமாவதி
  3. கபினி
  4. பவானி
  5. அர்காவதி
  6. நொய்யல்
  7. அமராவதி
A
அனைத்தும்
B
2, 3, 5, 7
C
1, 3, 4, 6
D
2, 4, 5, 6, 7
Question 139 Explanation: 
(குறிப்பு: காவேரி ஆறு கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறது.)
Question 140
  • கூற்று 1: காவேரி ஆறு தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாக பாய்கிறது.
  • கூற்று 2: பின்பு திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவேரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இறுதியில் பூம்புகார் என்ற இடத்திற்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 141
நர்மதை ஆறு மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் __________ உயரத்தில் உற்பத்தியாகிறது.
A
897 மீ
B
928 மீ
C
1028 மீ
D
1057 மீ
Question 141 Explanation: 
(குறிப்பு: நர்மதை நதி மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.)
Question 142
நர்மதை ஆறு ________ ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
A
87969
B
98796
C
87975
D
78659
Question 142 Explanation: 
(குறிப்பு: நர்மதை ஆற்றின் நீளம் 1312 கி.மீ ஆகும்.)
Question 143
நர்மதை நதி _______ கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
A
17
B
24
C
27
D
29
Question 143 Explanation: 
(குறிப்பு: பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலர் ஆகியவை நர்மதை ஆற்றின் முதன்மையான துணையாறுகள் ஆகும்.)
Question 144
தபதி நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் கடல் ட்டத்திலிருந்து ___________ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
A
724 மீ
B
724 மீ
C
765 மீ
D
784 மீ
Question 144 Explanation: 
(குறிப்பு: தபதி ஆறு காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.)
Question 145
தபதி ஆறு _________ கி.மீ நீளமுடையது.
A
711
B
721
C
724
D
735
Question 145 Explanation: 
(குறிப்பு: தபதி ஆறு 65145 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.)
Question 146
  • கூற்று 1: தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.
  • கூற்று 2: வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 147
கீழ்க்கண்டவற்றுள் தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் எவை?
  1. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
  2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
  3. வற்றும் ஆறுகள்
  4. நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
  5. நீர்வழி போக்குவரத்திற்குப் பயன்படாதவை.
A
அனைத்தும்
B
2, 3, 5
C
1, 2, 4, 5
D
1, 3, 4, 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 147 questions to complete.

6 Comments

Leave a Reply to Kavi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!