Online TestTnpsc Exam
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil
மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil
Congratulations - you have completed மனிதர்களின் பரிணாம வளர்ச்சி- 6th Social Science Lesson 2 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றி படிப்பது __________ ஆகும்.
கல்வெட்டியல் | |
மானுடவியல் | |
தொல்லியல் | |
அகழ்வாராய்ச்சியியல் |
Question 1 Explanation:
(குறிப்பு: தொல்லியல் ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் உதவுகின்றன.)
Question 2 |
மானுடவியலாளர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?
2.5 மில்லியன் | |
2.5 பில்லியன் | |
3.5 மில்லியன் | |
3.5 பில்லியன் |
Question 2 Explanation:
(குறிப்பு: கல்படுகைகளில் பதிந்திருந்த அந்தத் தடங்கள் அதுவரை மண்ணில புதைந்து கிடந்தன. அவற்றை கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அவை 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மானுடவியலாளர்கள் கண்டறிந்தனர்.)
Question 3 |
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் படிப்பது
அகழ்வாராய்ச்சியியல் | |
கல்வெட்டியல் | |
மானுடவியல் | |
தொல்லியல் |
Question 3 Explanation:
(குறிப்பு: மானுடவியல் ஆய்வாளர்கள், மனித குலத்தின் வளர்ச்சியையும், நடத்தையையும் ஆராய்ந்து மனிதனின் கலாச்சார மற்றும் சமூக நிகழ்வுகள் பற்றிய முழு விளக்கத்தையும் அடைவதற்கு முயல்கின்றனர்.)
Question 4 |
மானுடவியல் (anthropology) என்னும் சொல் ______மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
ஆங்கிலம் | |
இலத்தின் | |
கிரேக்கம் | |
பிரெஞ்சு |
Question 4 Explanation:
(குறிப்பு: மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Anthropos என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.)
Question 5 |
பிரான்சில் உள்ள லாஸ்காஸ் என்னுமிடத்தில் உள்ள குகைகனில் ________ மனிதர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
நியாண்டர்தால் | |
ஆஸ்ட்ரலோபிதிகஸ் | |
ஹோமோ எரக்டஸ் | |
குரோமேக்னான்ஸ் |
Question 5 Explanation:
(குறிப்பு: குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமேக்னான்ஸ் மனிதர்களிடம் இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் இருந்தது.)
Question 6 |
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியை கீழ்க்கண்ட எவற்றின் மூலம் அறிவியல் நோக்கில் பயில முடியும்?
- கல்வெட்டியல்
- தொல்லியல்
- மானுடவியல்
- நாணயவியல்
1, 2 | |
1, 4 | |
2, 3 | |
2, 4 |
Question 7 |
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே__________ ஆகும்.
இடப்பெயர்ச்சி | |
மானுடம் | |
பரிணாமம் | |
மனித வளர்ச்சி |
Question 7 Explanation:
(குறிப்பு: தற்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி
நிமிர்ந்த நிலை மற்றும் இரு கால்களைப் பயன்படுத்தி நடப்பது.
பொருள்களை இறுகப் பற்றுவதற்கு வசதியாக கட்டை விரலில் ஏற்பட்ட மாற்றங்கள்
மூளையின் வளர்ச்சி )
Question 8 |
- கூற்று: மனிதர்கள் காலத்துக்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாக தங்களைத் தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர்.
- காரணம்: இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் நிகழும்போது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் பிழைக்கின்றன.
கூற்று, காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. |
Question 8 Explanation:
(குறிப்பு: கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெப்பியன்ஸ் உலகின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறினார்கள். அவர்கள் வாழ்ந்த சூழலுக்கு தக்கபடி அவர்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது. வானிலை, காலநிலை மற்றும் இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் உடலமைப்பும் தோல் நிறமும் வேறுபட்டன.)
Question 9 |
தவறான இணையைத் தேர்ந்தெடு (மனிதர்களும் அவர்களது வாழ்விடங்களும்)
ஆஸ்ட்ரலோபிதிகஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா | |
ஹோமோ ஹெபிலிஸ் – தென்ஆப்பிரிக்கா | |
நியாண்டர்தால் – பிரான்ஸ் | |
ஹோமோ ஏரக்டஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா |
Question 9 Explanation:
(குறிப்பு: நியாண்டர்தால் - யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா))
Question 10 |
பொருத்துக.
- மனிதர்கள் வாழ்விடங்கள்
- குரோ-மக்னான்ஸ் i) சீனா
- பீகிங் மனிதன் ii) பிரான்ஸ்
- ஹோமோ சேப்பியன்ஸ் iii) லண்டன்
- ஹைடல்பர்க் மனிதன் v) ஆப்பிரிக்கா
i iii iv ii | |
ii iii i iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 11 |
ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் __________.
விவசாயம் | |
மீன்பிடித்தல் | |
வேட்டையாடுதல் | |
கிழங்கு அகழ்தல், பழம் பறிப்பது |
Question 11 Explanation:
(குறிப்பு: ஆயுதங்கள் செய்ய சிக்கி முக்கிக் கல் மிகவும் ஏற்றதாக இருந்தது. அதன் வலிமையும் தாங்கும் திறனுமே இதற்குக் காரணம்.)
Question 12 |
கற்கருவிகளை உருவாக்கியதற்கு அடுத்த கட்டமாக நம் முன்னோர்கள் _________ ஐ கண்டறிந்தார்கள்.
சக்கரம் | |
இரும்பு | |
நெருப்பு | |
தாமிரம் |
Question 12 Explanation:
(குறிப்பு: மனிதர்கள் நெருப்பை உருவாக்க சிக்கி முக்கிக் கல்லைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் சமைக்கவும் இரவில் ஒளியை உருவாக்கவும் நெருப்பு பயன்பட்டது.)
Question 13 |
தீப்பெட்டியைப் பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் __________ மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது.
விழுப்புரம் | |
கோயம்புத்தூர் | |
நீலகிரி | |
கன்னியாகுமரி |
Question 14 |
________ உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
சக்கரம் | |
இரும்பு | |
இரும்பு | |
ஆயுதங்கள் |
Question 14 Explanation:
(குறிப்பு: மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்த போது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பெற்றனர். மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம்.)
Question 15 |
மனித சமூகத்தின் முதல் கலை_______.
ஆயுதங்கள் செய்தல் | |
பானை செய்தல் | |
விவசாயம் | |
பாறை ஓவியம் |
Question 15 Explanation:
(குறிப்பு: வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். அவர்கள் அன்றாட நிகழ்வுகளை ஒவியங்களில் சித்தரித்தார்கள். பெரும்பாலும் விலங்குகளின் ஓவியங்ளே வரையப்பட்டன.)
Question 16 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.(தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்கள்)
கீழ்வலை – விழுப்புரம் | |
மாவடைப்பு – கோவை | |
குமுதிபதி – மதுரை | |
பொறிவரை – நீலகிரி |
Question 16 Explanation:
(குறிப்பு: குமுதிபதி - கோவை, உசிலம்பட்டி - மதுரை பொறிவரை -கரிக்கையூர், நீலகீரி ஆகிய இடங்களில் தொல் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.)
Question 17 |
- கூற்று 1: இந்தியாவில் 750 குகைகளில் ஏறத்தாழ 500 குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
- கூற்று 2: ஆண்களும் பெண்களும் வேட்டையாடுவதையும் நடனமாடுவதையும் குழந்தைகள் விளையாடுவதையும் இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 17 Explanation:
(குறிப்பு: மொழி தோன்றுவதற்கு முன்னால், மனிதர்கள் ஒலியாகவும் அசைவுகளாகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். பாறை ஓவியங்களில் அவற்றை வெளிப்படுத்தினார்கள்.)
Question 18 |
கீழ்க்கண்ட எந்த கண்டுபிடிப்பால் விவசாயம் எளிதாக மாறியது ?
விதைகள் | |
சக்கரம் | |
நெருப்பு | |
கலப்பை |
Question 18 Explanation:
(குறிப்பு: எருதுகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை விவசாய வேலைகளை மேலும் எளிதாக்கின.)
Question 19 |
பரிணாமத்தின் வழிமுறை _________.
நேரடியானது | |
மறைமுகமானது | |
படிப்படியானது | |
விரைவானது |
Question 20 |
- கூற்று 1: நம் முன்னோர்கள் குழுக்களாக மரம், குகை அல்லது மலையடிவாரத்தில் தங்கினார்கள்.
- கூற்று 2: ஒவ்வொரு குழுவிலும் 30 முதல் 40 பேர் இருந்தார்கள்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 20 Explanation:
(குறிப்பு: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அலைந்து திரிபவர்களாகவே இருந்தனர்.)
Question 21 |
இறுகப்பற்றுவதற்கு வசதியாகப் பெரிய கால் விரல்களையும், முன்பக்கம் நீட்டிக்கொண்டிருந்த தாடை நீட்சி சற்று குறைந்தும் காணப்பட்ட மனிதன்
ஹோமோ எரக்டஸ் | |
ஹோமோ ஹெபிலிஸ் | |
ஹோமோ சேப்பியன்ஸ் | |
குரோமேக்னான்ஸ் |
Question 21 Explanation:
(குறிப்பு: ஹோமோஹெபிலிஸ் தொடக்க கால மனிதன். கருவிகளை உருவாக்கினான்.)
Question 22 |
மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்கக் கற்றுக் கொண்ட மனிதன்________.
நியாண்டர்தால் | |
குரோமேக்னான்ஸ் | |
ஆஸ்ட்ரலோபிதிகஸ் | |
ஹோமோ எரக்டஸ் |
Question 22 Explanation:
(குறிப்பு: ஆஸ்ட்ரலோபிதிகஸ் தொடக்க கால மனிதன். கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றினான்.)
Question 23 |
தற்கால மனிதர்களை விட சிறிய மூளை உடைய மனிதர்கள்_________.
ஹோமோ எரக்டஸ் | |
ஹோமோ ஹெபிலிஸ் | |
ஹோமோ சேப்பியன்ஸ் | |
குரோமேக்னான்ஸ் |
Question 23 Explanation:
(குறிப்பு: ஹோமோ எரக்டஸ் - ஜாவா மனிதன் முழுமையான மனிதர்கள் அல்ல. நேராக நிமிர்ந்த மனிதன் நெருப்பின் பயனை அறிந்திருந்தான்.)
Question 24 |
ஆப்பிரிக்கர்களிடம் இருந்து வேறுபட்டு கரடு முரடான கருவிகளை கொண்டிருந்த வேட்டையாடும் திறனில் பின்தங்கியிருந்த மனிதன்
ஹோமோசேப்பியன்ஸ் | |
நியாண்டர்தால் | |
குரோமேக்னான்ஸ் | |
ஆஸ்ட்ரலோபிதிகஸ் |
Question 24 Explanation:
(குறிப்பு: நியாண்டர்தால் - இறந்தவர்களை புதைத்தனர். சான்றுகள் ஜெர்மனியில் கிடைக்கப்பெற்றுள்ளன. முழுமையான மனிதர்கள் அல்ல.)
Question 25 |
சுயமாக சிந்திக்கும் திறனுடைய, வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமுகமாக வாழ்ந்த மனிதன்
ஹோமோ எரக்டஸ் | |
ஹோமோ ஹெபிலிஸ் | |
ஹோமோ சேப்பியன்ஸ் | |
குரோமேக்னான்ஸ் |
Question 25 Explanation:
(குறிப்பு: ஹோமோசேப்பியன்ஸ் - ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறினான்.)
Question 26 |
கற்கருவிகளுடன், எலும்பாலான கருவிகளையும், குத்தீட்டியும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன்
ஹோமோசேப்பியன்ஸ் | |
நியாண்டர்தால் | |
குரோமேக்னான்ஸ் | |
ஆஸ்ட்ரலோபிதிகஸ் |
Question 26 Explanation:
(குறிப்பு: குரோமேக்னான்ஸ் - மனித வாழ்வின் தொடக்கம். நவீன மனிதன்.)
Question 27 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
ஆஸ்ட்ரலோபிதிகஸ் – 4 ல் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்குள் | |
ஹோமோ எரக்டஸ் - 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் | |
ஹோமோ ஹெபிலிஸ் – 3.2 ல் இருந்து 2.5 மில்லியன் ஆண்டுகளுக்குள் | |
நியாண்டர்தால் – 130000 முதல் 40000 ஆண்டுகளுக்குள் |
Question 27 Explanation:
(குறிப்பு : ஹோமோ ஹேபிலிஸ் – 2.3 ல் இருந்து 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஹோமோசேப்பியன்ஸ் – 300000 ஆண்டுகளுக்கு முன்)
Question 28 |
கிழக்கு ஆப்பிரிக்காவில் 50000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்
ஹோமோசேப்பியன்ஸ் | |
நியாண்டர்தால் | |
குரோமேக்னான்ஸ் | |
ஆஸ்ட்ரலோபிதிகஸ் |
Question 29 |
_________ ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் தோற்றம் ஏற்பட்டது.
3000 | |
5000 | |
8000 | |
8500 |
Question 30 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
460 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோற்றம் | |
10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான். | |
3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் புவி எங்கும் பரவினர். | |
8000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை தொடங்கியது. |
Question 30 Explanation:
(குறிப்பு: 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் நடந்தான்.)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.